Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு முதல்வருக்கு ஆதரவு தெரிவித்து அவரது இல்லத்தின் முன் திரண்ட மக்கள்

Featured Replies

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். நல்லூர் முருகன் கோவிலுக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பின் பேரில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வடமாகாண முதலமைச்சர் அலுவலகம் வரையில் பேரணியாக செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சருக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக "தமிழர்களின் அரசியலை தலைமையேற்க விக்னேஸ்வரன் ஐயா வருக" என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/149262?ref=home-top-trending

வடக்கு முதல்வருக்கு ஆதரவு தெரிவித்து அவரது இல்லத்தின் முன் திரண்ட மக்கள்

Published by Priyatharshan on 2017-06-16 12:58:21

 

வடக்கு மாகாண முதல்வருக்கு ஆதரவுதெரிவித்து பல இலட்சக்கணக்கான மக்கள் இன்று அவரது இல்லத்தின் முன் ஒன்றுதிரண்டு அவருக்கு ஆதரவுக் குரல் எழுப்பினர்.

19198332_10207536921695882_1028926854_n.

வடக்கு முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்த முதல்வரின் ஆதரவாளர்கள் பேரணியாகவும் சென்றனர்.

19198567_10207536921575879_144997423_n.j

19198319_10207536921655881_1355081821_n.

19198466_10207536923175919_494545506_n.j

19114067_1746386252043391_80299311985625

19105912_1746386222043394_17574403784466

19105883_1746386268710056_16018881122731

http://www.virakesari.lk/article/20944

 

தமிழர்களின் தலைமையை ஏற்க வருமாறு அழைப்பு
 

image_929a67e423.jpg

எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

தமிழர்களின் தலைமையை ஏற்க வருமாறு, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக யாழ் நல்லூரில் இன்று (16) காலை ஒன்று கூடிய பொது மக்கள் பேரணியாக வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்துக்கு சென்று தமது ஆதரவை முதலமைச்சருக்கு தெரிவித்தனர்.

இதன்போது, தமிழர்களின் தலமையை ஏற்க வருமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு பொதுமக்கள், சிவில் சமூக அமைப்புக்கள், கட்சிகள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர்.

image_39dbaae133.jpg

  •  

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/தமிழர்களின்-தலைமையை-ஏற்க-வருமாறு-அழைப்பு/71-198772

’மக்களின் பலம் எனக்குள்ளது’
 

எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

"மக்களின் பலம் எனக்குள்ளது. எனவே என்னுடைய பாதை சரி என எனக்கு தோன்றுகின்றது" என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக, யாழ். நல்லூரில் இன்று (16) காலை ஒன்று கூடிய பொது மக்கள் பேரணியாக வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்துக்கு சென்று தமது ஆதரவை முதலமைச்சருக்கு தெரிவித்தனர்.

இதன்போது, முதலமைச்சர் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், " விரைவில் விக்னேஸ்வரன் தனது பதவியை பறிகொடுத்துவிடுவார் என, அண்மையில் சரத்பொன்சேகா, தெரிவித்தார். அப்போது, சரத்பொன்சேகாவுடன் எனக்கு தனிப்பிட்ட விரோதங்கள் எவையும் இல்லாத போது ஏன் இவ்வாறு தெரிவிக்கின்றார் என நான் சிந்தித்தேன். எனினும் அதற்கான காரணம் தற்போது புரிகின்றது.

எனக்கான சதி ஏற்கனவே கொழும்பில் வைத்து தீட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் சரத்பொன்சேகா அறிந்திருந்தமையாலேயே இவ்வாறு தெரிவித்தார். இவ்வாறு சதி பின்னப்பட்டமை தொடர்பில் எனக்கு எவ்வித கவலைகளும் இல்லை.

அமைச்சர்கள் மீதான விசாரணையை கொண்டு எனக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என சதி செய்தே அவ்விசாரணை இடம்பெற்றுள்ளது.

இதன்மூலம் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு அவர்களை நான் காப்பாற்ற முயன்றால் பக்கச்சார்பாக முதலமைச்சர் செயற்படுகின்றார் என தெரிவித்து என்மீது நடவடிக்கை எடுக்கலாம். இல்லையேல் தற்போது போன்று, அமைச்சர்களை பதவி விலக்கினாலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரலாம் என சிந்தித்தே இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். எனினும் அவர்களின் எண்ணத்துக்கு மக்களே பதில் கூறிவிட்டனர்.

எமக்கு எத்தனையோ வேலைகள் உள்ளன. தேவைகள் உள்ளன. எனினும் வடமாகாண சபையில் தேவையற்ற விடயங்களை பேசி பேசியே நேரத்தை வீணாக்கியபடி உள்ளனர். அப்படியான நிகழ்வே இந்நிகழ்வும். நான் என்னுடைய கடமையை சரிவரச்செய்கின்றேன். கடமையை செய்வது ஒருவருக்கு தோல்வியோ வெற்றியோ இல்லை.

அமைச்சர்கள் மீது விசாரணை செய்ய வேண்டும் என்று தனிப்பட்டரீதியில் என்னிடம் தெரிவித்தாலே நான் விசாரணை மேற்கொண்டு இருப்பேன். எனினும் உறுப்பினர்கள் சிலர் தமது பெயர்கள் பத்திரிகையில் வரவேண்டும் என்பதற்காக தனிப்பட்ட ரீதியில் என்னிடம் தெரிவிக்க வேண்டியவற்றை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்தனர். எனவே தான் நான் விசாரணைக்குழுவை நியமித்தேன்.

அதனூடாக இரு அமைச்சர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் பதவிநீக்கப்பட்டனர். எனினும் மற்றைய இரு அமைச்சர்கள் மீது விசாரணைகள் முழுமையடையவில்லை. ஆனால் அவர்கள் தாங்கள் குற்றவாளிகள் அல்லர் என தெரிவித்து வருகின்றனர். எனினும் அவர்கள் மீதான விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். குற்றங்கள் நிரூபணமால் பதவி நீக்கப்படுவார்கள்.

இது முதலாவது வடமாகாண சபை. ஊழல்கள் குற்றங்கள் இதன்போதே களையப்பட வேண்டும். வளர விடக்கூடாது. மக்கள் பலம் எனக்குள்ளது. எனவே நான் செல்கின்ற பாதை சரியானது என எண்ணுகின்றேன்" என்றார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மக்களின்-பலம்-எனக்குள்ளது/71-198774

  • கருத்துக்கள உறவுகள்

குள்ள  நரி  ரணிலுக்கு  நன்றிகள்.

  • தொடங்கியவர்

தமிழர்கள் தமிழரசுக் கட்சியை நீக்கி மாற்று அரசியல் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும்!

இனிவரும் தேர்தல்களில் தமிழரசுக் கட்சியை வீழ்த்தி புதைகுழிக்குள் அனுப்புவதில் தமிழரின் நல்லெதிர்காலம் தங்கியுள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நவீனன் said:

அவர் மேலும் தெரிவிக்கையில், " விரைவில் விக்னேஸ்வரன் தனது பதவியை பறிகொடுத்துவிடுவார் என, அண்மையில் சரத்பொன்சேகா, தெரிவித்தார். அப்போது, சரத்பொன்சேகாவுடன் எனக்கு தனிப்பிட்ட விரோதங்கள் எவையும் இல்லாத போது ஏன் இவ்வாறு தெரிவிக்கின்றார் என நான் சிந்தித்தேன். எனினும் அதற்கான காரணம் தற்போது புரிகின்றது.

எனக்கான சதி ஏற்கனவே கொழும்பில் வைத்து தீட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் சரத்பொன்சேகா அறிந்திருந்தமையாலேயே இவ்வாறு தெரிவித்தார். இவ்வாறு சதி பின்னப்பட்டமை தொடர்பில் எனக்கு எவ்வித கவலைகளும் இல்லை.

நடப்பதெல்லாம் நன்மைக்கே அப்படியொரு சதி யால் இன்று மக்கள் யாரின் பக்கம் என்பது ஆணித்தரமாக சதியாளர்களுக்கு உணர்த்தியாயிற்று .

மக்கள் ஆதரவு ...
 

image_f062fc52ad.jpg

வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக, யாழ். நல்லூரில் இன்று (16) காலை ஒன்று கூடிய பொது மக்கள், பேரணியாக வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்துக்கு சென்று, முதலமைச்சருக்கு தமது ஆதரவை தெரிவித்தனர்.

image_f6601bf643.jpgimage_b6c8f2bce2.jpgimage_46a9d44e39.jpg

  •  

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/மக்கள்-ஆதரவு/46-198775

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய தமிழ்வின் விக்கியரை தமிழரின் முக்கிய எதிரி போல் செய்திகள் வெளியிட்டு கொண்டு இருந்தது மக்கள் எழுச்ச்சியில் எல்லாம் தலைகீல் ஆகிவிட்டுது இனி விக்கியர் தமது உடல்நலனில் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டிய நேரம் .

  • தொடங்கியவர்
3 minutes ago, பெருமாள் said:

நேற்றைய தமிழ்வின் விக்கியரை தமிழரின் முக்கிய எதிரி போல் செய்திகள் வெளியிட்டு கொண்டு இருந்தது மக்கள் எழுச்ச்சியில் எல்லாம் தலைகீல் ஆகிவிட்டுது இனி விக்கியர் தமது உடல்நலனில் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டிய நேரம் .

தமிழ்வின் ஸ்ரீதரனின் ஊதுகுழல் ஆக/போல செயற்பட்டாலும் அதனால் தமிழ்மக்களுக்கு எதிரான கருத்தை பரப்பி சிலவாரங்கள் கூட தாகுப்பிடிக்க முடியாது என்பதை அறிந்து வைத்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்வாதிகள் மக்கள்நலன்காப்பாளர்களை உருவாக்குவதைவிடக் கைத்தடிகளை உருவாக்கவே முயல்கின்றனர். ஆனால் கைத்தடியாக இருக்காது செயற்படும் முதல்வர்மீது அவர்கள் நடவடிக்கை எடுக்க முனைவது புதிதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

இந்தப் படம் ஒன்றே போதும்
அங்க எத்தனை பேர் வந்து இருக்கினம்
என்று காட்ட

ஒரு 800 பேர்
அல்லது 1000 பேர்?

இதுக்கு பெயர் பேரணி என்றால்
ஐம்பதாயிரம் பேர் ஒரு இலட்ச்சம் பேர்
வரும் ஊர்வலத்துக்கு என்ன பெயர்
சொல்லி அழைப்பது?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வைரவன் said:

இந்தப் படம் ஒன்றே போதும்
அங்க எத்தனை பேர் வந்து இருக்கினம்
என்று காட்ட

ஒரு 800 பேர்
அல்லது 1000 பேர்?

இதுக்கு பெயர் பேரணி என்றால்
ஐம்பதாயிரம் பேர் ஒரு இலட்ச்சம் பேர்
வரும் ஊர்வலத்துக்கு என்ன பெயர்
சொல்லி அழைப்பது?

24  மணித்தியாலத்தில் இவ்வாறு ஒரு போராட்டத்தை   யாழில் செய்யமுடிவதே பெரிய  விடயம்

விருப்பமில்லாப்பெண்டாட்டி கை  பட்டால் கால்பட்டால்.......?????

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விசுகு said:

24  மணித்தியாலத்தில் இவ்வாறு ஒரு போராட்டத்தை   யாழில் செய்யமுடிவதே பெரிய  விடயம்

 

இந்த 24 மணித்தியாலத்துக்குள்
இடம்புரி என்ற பத்திரிகையில்
விசேட பதிப்பு போட்டு
விக்கி ஐயா அதை வாசிக்கும் படத்தை
இணையத்தளங்களில் பிரசுரித்து
(வாசிக்கும் படத்திற்கு பின்னால் தொங்குவது
செக்ஸ் குற்றவாளி பிரேமானத்தாவின் படம்)
எவ்வளவு முயன்றார்கள் என்று தெரியுமா

மக்கள் எழுச்சி என்பது
தன்னியல்பாக நடக்க வேண்டியது
அது அங்கு விக்கி ஐயாவுக்காக நடக்கவில்லை
அப்படி ஒன்று நடப்பதாக காட்ட
சைக்கிள் கோஷ்டியும் பேரவையும்
புலம்பெயர் புண்ணாக்குகள் சிலரும்
கஷ்டப்படுகினம்

Quote

விருப்பமில்லாப்பெண்டாட்டி கை  பட்டால் கால்பட்டால்.......?????

உத
சம் / சும் என்ன சொன்னாலும்
தவறு என்று சாதிக்கும்
யாழில் உள்ள சிலருக்கு
போய்ச் சொல்லுங்கோ ராசா

 

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா

19093005_470747893271612_827820956719480

 

19143163_470748006604934_112636284233844

பதவியில் இருந்து நீக்க கொழும்பில் சதித்திட்டம்!! – வடக்கு முதலமைச்சர்

 
பதவியில் இருந்து நீக்க கொழும்பில் சதித்திட்டம்!! – வடக்கு முதலமைச்சர்
 

தன்னை பதவியிலிருந்து நீக்கும் சதித்திட்டம் கொழும்பிலேயே தீட்டப்பட்டது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

வடமாகாண முதலமைச்சரை பதவியிலிருந்து அகற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிக்கும் வகையிலும் இன்று யாழப்பாணத்தில் கவனயீர்ப்பு பேரணியில் ஈடுபட்டவர்கள் முதலமைச்சரைச் சந்தித்தனர். அவர்கள் முன்னிலையில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

http://uthayandaily.com/story/7030.html

பல திருடுக்கும்பல்களின் சுயரூபம் வெளிவருகின்றது!

ஊழல் பேர்வழிகளுக்கு ஆதரவான சுமந்திரன் கும்பலுக்கு வக்காலத்து வாங்குவதிலும், அந்த கும்பல்களின் கருத்துக்களை ஆமோதிக்கும் போக்கிலும் பல திருடுக்கும்பல்களின் சுயரூபம் வெளிவருகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வைரவன் said:

இந்த 24 மணித்தியாலத்துக்குள்
இடம்புரி என்ற பத்திரிகையில்
விசேட பதிப்பு போட்டு
விக்கி ஐயா அதை வாசிக்கும் படத்தை
இணையத்தளங்களில் பிரசுரித்து
(வாசிக்கும் படத்திற்கு பின்னால் தொங்குவது
செக்ஸ் குற்றவாளி பிரேமானத்தாவின் படம்)
எவ்வளவு முயன்றார்கள் என்று தெரியுமா

மக்கள் எழுச்சி என்பது
தன்னியல்பாக நடக்க வேண்டியது

அது அங்கு விக்கி ஐயாவுக்காக நடக்கவில்லை
அப்படி ஒன்று நடப்பதாக காட்ட
சைக்கிள் கோஷ்டியும் பேரவையும்
புலம்பெயர் புண்ணாக்குகள் சிலரும்
கஷ்டப்படுகினம்

உத
சம் / சும் என்ன சொன்னாலும்
தவறு என்று சாதிக்கும்
யாழில் உள்ள சிலருக்கு
போய்ச் சொல்லுங்கோ ராசா

நேற்று  நடந்தது திடீரென தன்னியல்பாக  எழுந்த  மக்கள் போராட்டம்தான்

அதனால்  தான் முடிவுகள் உடனேயே  மாற்றப்பட்டன

மற்றும்படி  யாழில்மட்டுமல்ல

எனக்கும்மரியாதையான வார்த்தைகள் சொற்கள்முக்கியம்

அவசியம்

அதை  தெரியாதவருடன்  பேசுவதில்லை

சீ.விக்கு எதிரான நடவடிக்கையின் பின்னணி!

வடமாகாணசபை முதலமைச்சரின் மீது சில மாகாணசபை உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தமிழ் மக்கள் சார்பில் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்துவதாக தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமது மக்களின் இலட்சிய அரசியல் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மீதான இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானமும் அவர் தன் ஆட்சியை செவ்வனே கொண்டு செல்லமுடியாது ஏற்படுத்தப்பட்ட இடையூறுகளும் திடீரென எழுந்த ஒன்றல்ல.

சிறிலங்கா அரசின் தமிழர் விரோதப்போக்கை எதுவித மூடிமறைத்தல் இன்றி வெளிப்படுத்தியமையும், தமிழர்களின் அரசியல் அபிலாசைகளில் எந்தவித விட்டுக்கொடுப்புகளுமின்றி இருந்தமையும், அந்தக் கோரிக்கைகளை சமரசமின்றி சர்வதேச இராஜதந்திரிகளிடம் முன்வைத்து அழிக்கப்படுகின்ற எமது மக்கள் சார்பாக குரல் கொடுத்தமையுமே தற்போது நிகழும் அரசியல் கபட நாடகங்களின் பின்புலமாகும் என்பது தற்போது வெளிப்பட்டிருக்கிறது.

தமிழ்த் தேசியம் குறித்த முதலமைச்சர் அவர்களின் புரிதலும் சமரசமற்று அதை மக்கள் மத்தியில் முன்னெடுத்தமையும் சிறிலங்கா அரசு தனது அடக்கியாளும் திட்டத்தை தன் பிரமுகர்கள் மூலம் முன்னெடுக்க பாரிய இடையூறாக இருந்தது.

குறிப்பாக, மாகாணசபைக்குள் தமிழர் அரசியலை முடக்கிவிடும் கபட நோக்கோடு, சிறிலங்கா அரசும் சில தமிழ் அரசியல்வாதிகளும் தமது முயற்சிகளை செய்து கொண்டு வருகையிலே, 13ஆம் திருத்தத்தின் வழியிலான மாகாணசபை முறைமை எமது அரசியல் வேட்கையை ஒரு போதும் பூர்த்தி செய்யாது என்பதை தன் ஆட்சி அனுபவம் மூலமாகவும் தன் சட்ட நிபுணத்துவம் ஊடாகவும் அவர் மிகத்தெளிவாக மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் வடக்கு மாகாணசபையில் இருந்து கொண்டே அறிவித்தமை சிறிலங்கா அரசின் கபட திட்டத்தை முறியடித்திருந்தது.

அதுபோலவே, தொடர்ச்சியாக எமது மக்கள் மீது நடத்தப்படுவது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பே என்பதையும் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை ஒன்றே இதற்கான பொறுப்புக்கூறலிற்கும் நீதிக்கும் வழிசமைக்கும் என்பதையும் மிக ஆணித்தரமாக, ஒரு ஜனநாயக மன்றின் தீர்மானமாக வெளிப்படுத்தப்பட்டமையும் அது சர்வதேச அரங்கில் மிகப்பெரிய கவனிப்பிற்குள்ளாகியமையும் சிறிலங்கா அரசினால் கடும் விசனத்துடனேயே பார்க்கப்பட்டது.

எமக்கு இழைக்கப்பட்டது, கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையே என்பதை தனக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் வந்த அழுத்தங்களையும் மீறி முதலமைச்சர் என்று அறிவித்தாரோ, ஒரு பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணைதான் எமக்கான நீதியை பெற்றுக்கொடுக்குமென்பதை வெளிப்படையாக எப்போது அறிவித்தாரோ, இந்த மாகாணசபை முறைமை எமக்கான தீர்வாக அமையாது என்பதை ஆணித்தரமாக என்று தெரிவித்தாரோ, அன்று முதல் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் சிறிலங்கா அரசாலும் சில தமிழ் அரசியல்வாதிகளாலும் தொடர்ச்சியான நெருக்கடிகளுக்குள்ளாக்கப்பட்டார்.

இன்று, தனது ஆட்சியின் கீழ் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட முறைகேடுகளை விசாரிக்க நேர்மையுடனும் தற்றுணிவுடனும் ஒரு விசாரணைக்குழுவை நியமித்து, எமது அரசியலில் முறைகேடுகளுக்கு இடமே இருக்க முடியாது எனும் தூய்மையான இலட்சியத்தை பேச்சில் மட்டுமல்லாது செயலிலும் காட்டி இருந்தார்.

எனினும், முதல்வர் மீதான நெருக்கடிகளின் உச்சமாக, இந்த முறைகேடுகள் குறித்த விசாரணையில் குறிப்பிடப்பட்டவர்களை பாதுகாக்கும் நோக்குடன் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை சிறிலங்கா அரசின் அங்கத்தவர்களுடன் இணைந்து சில தமிழ் அரசியல்வாதிகள் கொண்டுவந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், இதை வெறும் மாகாணசபையின் நிர்வாக சிக்கலாகவோ அல்லது கட்சி உறுப்பினர்களின் பதவி மோகம் காரணமாக எழுந்த உட்கட்சி பிரச்சினையாகவோ இனியும் கருதமுடியாது.

தமிழர் இனப்பிரச்சினை தொடர்பிலான சிறிலங்கா அரசின், கபட நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு தடையாக இருந்தமைக்காக, தமிழர்களின் கோட்பாடுகளை சமரசமின்றி முன்கொண்டு சென்றமைக்காக அவர் மீது இந்த நெருக்கடியை அரசும் அரசு சார்ந்தவர்களும் கொண்டுவந்திருக்கின்ற நிலையில், இனத்தின் நலன்சார்ந்து இந்தக் கொள்கைகளை முன்கொண்டு சென்றமைக்காக அவர் இலக்கு வைக்கப்பட்டாரோ, அந்த கொள்கைகள் மக்களின் கொள்கைகளே என்பதை மீண்டும் வெளிப்படுத்தும் நோக்குடன், பொது மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ் மக்கள் பேரவை கோருகின்றது.

முதலமைச்சர் முன்கொண்டுசெல்லும் எமது அரசியலின் அடிப்படைக்கொள்கைகளுக்கு பின்னால் எமது மக்கள் எப்போதும் அணிதிரண்டு வருவார்கள் என்பதை நாம் எமது அணிதிரள்வுகள் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்தவேண்டும் எனவும் தமிழ் மக்கள் பேரவை கோருகிறது.

சகல அழுத்தங்களையும தாண்டி எமது தேசத்தின் அடிப்படை அரசியல் கோட்பாடுகளுக்கு தலைமையேற்று முன்கொண்டு செல்லுமாறு தமிழினத்தின் பெயரால் மக்களின் முதல்வருக்கு அழைப்பு விடுக்கிறோம்.

மேலும், பதவி போன்ற அற்ப பேரங்களுக்காக கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காது , எமக்காக புரியப்பட்ட தியாகங் களையும் அர்ப்பணிப்புகளையும் மனதில் கொண்டு மனச்சாட்சியுடன் செயற்பட முன்வருமாறு வடமாகாணசபை அங்கத்தவர்கள் அனைவரையும் இனத்தின் பெயரால் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.tamilwin.com/politics/01/149303

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி ஐயாவுக்கு ஒரு முறை
தமிழரசு கட்சியால் வாய்ப்பு வந்தது

முதல் வாய்ப்பில் வெட்டி தீர்மானங்கள் போட்டு
வடக்கு மாகாண சபையை ஜோக்கர்  ஆக ஆக்கியாச்சு

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்
அவர் அமைச்சர்கள் மீது
குற்றம் சாட்டப்படும் போதே
நடவடிக்கை எடுத்து இருந்தால்
வடக்கு மாகாண சபைக்கு
மரியாதையவாது
மிஞ்சி இருக்கும்

இப்ப தமிழ் மக்களில் அரசிவாசிப் பேர்
இரண்டாம் வாய்ப்பை தர முயல்கின்றனர்

இரண்டாம் வாய்ப்பை
பயன்படுத்தியாவது  
விக்கி ஐயா மக்களின்
மனதை வெல்லும்
வண்ணம் ஏதாவது செய்கின்றாரா
என பார்ப்பம்
(அதற்கு அவரின் குரு பிரேமானந்தா ஜி
அருள் புரியட்டும் )

 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வைரவன் said:

இப்ப தமிழ் மக்களில் அரசிவாசிப் பேர்
இரண்டாம் வாய்ப்பை தர முயல்கின்றனர்

உங்கடை கருத்துக்கள் சிரிப்பை வரவைப்பதாக உள்ளது இப்படித்தான் சுமத்திரனும் வெளிகிட்டு கடைசியில் தமிழரசு கட்சி அலுவலகம் எல்லாம் தமிழ் மக்களிடம் இருந்து பாதுகாக்க  சொறிலங்கா ரானுவம் பாதுகாப்பு கொடுக்கும் நிலையில் இருக்கிறது நிலைமை அப்படி இருக்க நீங்கள் இங்கு போடும் வாய்ச்சுவுடால் விடுவது சுமத்திரன் கூட்டம்களில் உளறுவதை போல் உள்ளது அன்று ஈப்பி டீப்பி களுக்கு ராணுவம் பாதுகாப்பு இன்று தமிழரசு கட்சி அலுவலகம்கள் விடியும் மட்டும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க ஆண்டவனை வேண்டிகொள்ளுங்கள் முதலில் .

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பெருமாள் said:

உங்கடை கருத்துக்கள் சிரிப்பை வரவைப்பதாக உள்ளது இப்படித்தான் சுமத்திரனும் வெளிகிட்டு கடைசியில் தமிழரசு கட்சி அலுவலகம் எல்லாம் தமிழ் மக்களிடம் இருந்து பாதுகாக்க  சொறிலங்கா ரானுவம் பாதுகாப்பு கொடுக்கும் நிலையில் இருக்கிறது நிலைமை அப்படி இருக்க நீங்கள் இங்கு போடும் வாய்ச்சுவுடால் விடுவது சுமத்திரன் கூட்டம்களில் உளறுவதை போல் உள்ளது அன்று ஈப்பி டீப்பி களுக்கு ராணுவம் பாதுகாப்பு இன்று தமிழரசு கட்சி அலுவலகம்கள் விடியும் மட்டும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க ஆண்டவனை வேண்டிகொள்ளுங்கள் முதலில் .

உங்கள் விக்கி ஐயாவுக்கும்
சிங்கள காவல் துறைதான்
காவல் வழங்கிக்
கொண்டு இருக்கு ராசா

கம்பவத்திரி ஜெயராஜின் நிகழ்ச்சிக்கு
வரும்  போது கூட
அதே பாதுகாப்புடன்
தான் அவர் வருவார்

  • கருத்துக்கள உறவுகள்

நம்பி ஏமாறுவதே தமிழர்களுக்கு வேலையாய் போயிட்டுது:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

நேற்று  நடந்தது திடீரென தன்னியல்பாக  எழுந்த  மக்கள் போராட்டம்தான்

அதனால்  தான் முடிவுகள் உடனேயே  மாற்றப்பட்டன

மற்றும்படி  யாழில்மட்டுமல்ல

எனக்கும்மரியாதையான வார்த்தைகள் சொற்கள்முக்கியம்

அவசியம்

அதை  தெரியாதவருடன்  பேசுவதில்லை

நேற்று நடந்து எழுச்சியில் 
மக்கள் இருப்பதாக தெரியவில்லை ....

அவர் சொல்வதுதான் எனக்கும் உண்மை மாதிரி தெரிகிறது 

நீங்கள் மீண்டும் ஒருமுறை அந்த படங்களை பாருங்கள். 

2 hours ago, ரதி said:

நம்பி ஏமாறுவதே தமிழர்களுக்கு வேலையாய் போயிட்டுது:unsure:

உங்களை போன்று ஏமாறாதவர்கள் ஒரு சிலர் இருக்கும்போது 
நமக்கு என்ன கவலை ?
குளமோ ... கடலோ .... கும் என்று குதிக்க வேண்டியதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வைரவன் said:

உங்கள் விக்கி ஐயாவுக்கும்
சிங்கள காவல் துறைதான்
காவல் வழங்கிக்
கொண்டு இருக்கு ராசா

கம்பவத்திரி ஜெயராஜின் நிகழ்ச்சிக்கு
வரும்  போது கூட
அதே பாதுகாப்புடன்
தான் அவர் வருவார்

ஒரு முதல்வருக்கு கொடுக்கும் பாதுகாப்பையும் மக்களுக்காக நாம் என்று அலுவலகத்தை தெறந்து விட்டு கடசியில் அந்த மக்களிடம் இருந்து அலுவலகத்தை பாதுகாக்க ராணுவத்தை கூப்பிட்ட நிகழ்வையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியாதுங்கோ .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.