Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முடிவெடுக்கும் அதிகாரத்தை முதலமைச்சரிடம் விட்டு விடுங்கள் ஜனாதிபதி

Featured Replies

முடிவெடுக்கும் அதிகாரத்தை முதலமைச்சரிடம் விட்டு விடுங்கள் ஜனாதிபதி

 

வட மாகாண சபை விவகாரத்தில் தீர்மானம் எடுக்கும் முழு அதிகாரத்தையும் முதலமைச்சரிடம் விட்டுவிடுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வட மாகாண ஆளுநர் ரெஜினோலட் குரேயிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஊழல் மோசடிக்கு எதிராக செயற்படுவது நல்லாட்சியின் கோட்பாடு என்பதால் முதலமைச்சரின் தீர்மானத்தில் மத்திய அரசு தலையிடுவது முரண்பாடாக  அமையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வடமாகாண அமைச்சர்களின் ஊழல் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவி நீக்குமாறு கோரி வடமாகாண சபையில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சிலரும், ரெலோ கட்சியிலிருந்து தமிழரசுக் கட்சிக்கு மாறிய வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் வடமாகாண ஆளுநர் ரெஜினோலட் குரேயிடம் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கையளித்திருந்தனர்.  

இது  தொடர்பாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதன்போதே, வடமாகாண சபை தொடர்பில் முடிவெடுக்கும் விவகாரத்தை முதலமைச்சரிடம் விட்டுவிடுமாறு தெரிவித்துள்ள ஜனாதிபதி, ஊழல் மோசடிக்கு எதிராக செயற்படுவது நல்லாட்சியின் கோட்பாடு என்பதால் முதலமைச்சரின் தீர்மானத்தில் மத்திய அரசு தலையிடுவது முரண்பாடாக  அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Leave-the-matter-to-the-Chief-Minister

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா ஜனாதிபதியின் இந்த கூற்று வரவேற்கப்பட வேண்டியது

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, putthan said:

சிறிலங்கா ஜனாதிபதியின் இந்த கூற்று வரவேற்கப்பட வேண்டியது

அடிக்கிற காத்திலை அம்மிக்கல்லே பறக்கிறது இனி கூடி இருந்து அடுத்த சதி நாடகம் தீட்டுவினம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

அடிக்கிற காத்திலை அம்மிக்கல்லே பறக்கிறது இனி கூடி இருந்து அடுத்த சதி நாடகம் தீட்டுவினம்.

 

38 minutes ago, நவீனன் said:

வட மாகாண சபை விவகாரத்தில் தீர்மானம் எடுக்கும் முழு அதிகாரத்தையும் முதலமைச்சரிடம் விட்டுவிடுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வட மாகாண ஆளுநர் ரெஜினோலட் குரேயிடம் வலியுறுத்தியுள்ளார்.

உண்மையிலயே மாகாணசபையினதும் முதலமைச்சரினதும்  அதிகாரத்தை ஜனாதிபதி மதிக்கின்றாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் வடமாகாண ஆளுநர்  கூறியிருந்தார் "விக்னேஸ்வரனின் அரசியல் முடிவடையப்போகுது" கூட்டிக்கழித்துப் பார்த்தால் இவர்களெல்லாம் கூடி பொறி வைத்து எப்போ முதலமைச்சர் மாட்டுவார் என்று காத்திருந்திருக்கிறார்கள். ஏதோ  முதலமைச்சர்  செய்யக்கூடாத வேலையைச் செய்தமாதிரி  நாடகம் காட்டும் மாவையைப்  பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அவ்வளவு பதவி ஆசை    போட்டாட்டுது. உதுகளை அரசியலில் இருந்து ஒதுக்காவிட்டால் முதலமைச்சரோட சொறிஞ்சு கொண்டே இருக்குங்கள். உதுகளை மக்கள் ஓரங்கட்ட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, satan said:

அண்மையில் வடமாகாண ஆளுநர்  கூறியிருந்தார் "விக்னேஸ்வரனின் அரசியல் முடிவடையப்போகுது" கூட்டிக்கழித்துப் பார்த்தால் இவர்களெல்லாம் கூடி பொறி வைத்து எப்போ முதலமைச்சர் மாட்டுவார் என்று காத்திருந்திருக்கிறார்கள். ஏதோ  முதலமைச்சர்  செய்யக்கூடாத வேலையைச் செய்தமாதிரி  நாடகம் காட்டும் மாவையைப்  பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அவ்வளவு பதவி ஆசை    போட்டாட்டுது. உதுகளை அரசியலில் இருந்து ஒதுக்காவிட்டால் முதலமைச்சரோட சொறிஞ்சு கொண்டே இருக்குங்கள். உதுகளை மக்கள் ஓரங்கட்ட வேண்டும்.

தேர்தலில் ஒட்டு கேட்டு வரும்போது புலி புலி என்று வந்து புலியை சாட்டி ஓட்டு வேண்டுனவையல் பிறகு சிங்கள அரசை விட தீவிர புலி எதிர்பாளர்களா தம்மை விரும்பி காட்டிகொண்டவர்கள் பதவி சுகத்துக்கு .முன்னாள் புலிகள் உதவி கேட்டு போனபோது பேப்பருக்குள் தலைய கவுண்டுகொண்டு இருந்தவர் நிலைமை மாறுது எண்டவுடன் பேருக்கு கொஞ்ச முன்னாள் புலிகளை கட்சியில் இணைத்தவுடன் மக்கள் மாறிவிடுவார்கள் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டினம் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றதான் அரசியல்வாதிகள் சுமத்திரனின் கூட்டம்கல் கவனித்து பாருங்கள் அரசியல் என்பது இரண்டாவது உழைப்பு போல் ஆள் அடித்து விடுவார.

  • கருத்துக்கள உறவுகள்

 

 இலங்கையில் தமிழ் மக்கள் இவர்களை ஒதுக்க வேண்டிய சந்தர்பத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள் தமிழர்  அழிப்பு கட்சி என்றே சொல்ல வேண்டும் கிணறு வெட்ட  போய் பூதம் எழும்பிய கதை போல ஆகிவிட்டது தற்போது இவர்களுக்கு

 மக்களுக்கு என்ன கோபம் என்றால்  இவர்களை ஊழல் செய்தவர்கள் அவர்களை நீக்க முதலமைச்சருக்கு அதிகாரம் உண்டு ஆனால் ஏன் இவர்களை முதலமைச்சரை தடுத்து அவர்களை காப்பாற்ற முனைகிறார்கள் என்றும் இவர்களின்  உன்மையான முகத்தை மக்கள் அறிந்துள்ளனர் ஏற்கனவே விக்கினேஸ்வரன் ஐயா தான் சுயமாக முடிவெடுக்க முடியவில்லை அதற்கு தங்களது உறுப்பினர்களே தடையாக இருப்பதாக கூறியிருந்தார் தற்போது அந்த செய்தி எவ்வளவு உன்மையானது என்று உலகத்தில் அனைத்து தமிழர்களும் அறிந்துள்ளார்கள் 

இன்று  உள்ள அனைவரதும்  கேள்ளி  இவர்களா நமக்கு தீர்வு பெற்று தாருவார்கள் என்ற கேள்வி விக்கி ஐயா கூட தீர்வு பெற்று தராவிட்டாலும் ஊழல் இல்லாத  சபை ஒன்றுய் இயங்கி மத்திய அரசால் வழங்கப்படும   அபிவிருத்தி  பணிகள்  மக்களை சென்றடைய செய்ய வேண்டும் என்ற எண்ணமே தவிர வேறொன்றும் இருக்க முடியாது 

1 hour ago, putthan said:

சிறிலங்கா ஜனாதிபதியின் இந்த கூற்று வரவேற்கப்பட வேண்டியது

ம்  மைத்திரி பால அரசு கொஞ்சம் வேற லெவல்தான் பாருங்க

Edited by தனி ஒருவன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

சிறிலங்கா ஜனாதிபதியின் இந்த கூற்று வரவேற்கப்பட வேண்டியது

நல்லிணக்க அரசியலின் பெயரிற்கு எந்தக்கேட்ட பெயரும் வந்துவிடக்கூடாது. ஆகவே ஜனாதிபதியின் பேச்சாளர்களாகக் கூட்டமைப்பின் சம்மந்தரும் சுமந்திரனும் செயற்படுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் ஐயாவுக்கு இரண்டும் கெட்டான் நிலை.  மாவையும் சுமந்திரனும் எப்படியாவது தாங்கள் முன்னுக்கு வந்து விடவேண்டுமென்ற பேராசை அதனால் முதலமைச்சரை எப்படியாவது ஓரங்கட்டப் பார்க்கிறார்கள்.  மக்கள் இவ்விருவரினது; நோக்கங்களை இனங்கண்டு அரசியலிலிருந்தே இவர்களை அப்புறப்படுத்த வேண்டும் இல்லா விட்டால் தமிழ்நாட்டின் நிலைதான் இங்கும் உருவாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

முகங்கள்  தெரியும் காலப்பகுதி  இது...

இந்தளவுக்கு  எதிர்பார்க்கவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.