Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் விரும்பி வாங்கும் பொருட்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, MEERA said:

Mild, Hot என்றால் காரத்தில் குறைய கூடவாகவும் நிறத்தில் ஒரே மாதிரியாகவும் இருக்க வேண்டும்.

நாதம்ஸ் கூறிய மாதிரி சாதாரண தூளை, 4 கரண்டி கூட்டி போடும் போது இருக்கும் நிறத்திற்கும் 1 கரண்டி தூள் போட்டு சமைத்த உணவின் நிறத்திற்கும் வித்தியாசம் இருக்கும்.

எனவே எங்கட ஆட்கள் தயாரிக்கும் தூளில் mild hot என்று காரம் குறையுமே தவிர நிறம் மாறாது.

இல்லை மீரா.

விகிதாசாரத்தில் எப்போதும் மாறுதல் இல்லை.

மிளகாயின் உறைப்புத்தண்மையில் தான் மாறுதல். என்ன வகை மிளகாய் பாவிக்கப் படுகின்றது என்பதே உறைப்பு எப்படி என்பதை தீர்மானிக்கும்.

scoville heat units என்ற அளவீட்டில் தான் மிளகாயின் உறைப்புத்தண்மை அளவிடப் படுகின்றது.

ஸ்வீட் பெப்பர் 0 SHU
கரோலினா ரீப்பர் 2,200,000 SHU 

இந்த லிங்கில் உள்ள லிஸ்டினைப் பார்த்தீர்களானால், இவ்வளவு வகையா என்று நினைப்பீர்கள். மேலே உள்ள கரோலினா, ஒரு மிளகாய் போதும் ஒரு முழு ஆட்டினை கறியாக்க.

http://chilipeppermadness.com/chili-pepper-types.html#.WVH9G2jyuUl

https://www.pepperscale.com/hot-pepper-list/

இது தான் இலங்கை, இந்தியாவில் பாவிக்கப் படும் வகைகள்.

Related image

Edited by Nathamuni

  • Replies 134
  • Views 14.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Nathamuni said:

நான் மிக மிக கடுமையாக எதிர்க்கும் பிராண்ட் இது தான்.

காரணங்கள் பல. இங்கே நேரடியாக சொல்ல விரும்பவில்லை.

கவனமாக இருங்கோ சிறியர். 

நாதமுனி, நீங்கள் இப்படி சொன்ன பின்.... பயமாக உள்ளது.:rolleyes:
குறிப்பிட்ட மிளகாய்த் தூளை, கடந்த 6, 7 வருடமாக பாவித்து வந்துள்ளோம்.
இதுவரை அதன் நேரடியான தாக்கம், உடலில் ஏற்படவில்லை. 
பிற்காலத்துக்கு என்ன காத்திருக்குதோ... என்று நினைக்க  அச்சம்  ஏற்படுகின்றது. :shocked:

மேலே குறிப்பிட்ட மிளகாய்த் தூளை, அதன் பெயரை நேரடியாக  குறிப்பிடாமல், "x" என்று வைத்துக் கொண்டு,
அதன் பாதிப்புகளை விளக்கினால்,  பிரயோசனமாக இருக்கும்.
நாளைக்கு ஏதாவது வருத்தம் வந்தாலும், டாக்டரிடம் சொல்லி மருந்து எடுக்க உதவும். :)
இனி,  நான்... ரபீனாவுக்கு,  மாறப்  போகின்றேன். :grin:

  • தொடங்கியவர்
On 27.6.2017 at 8:10 AM, Nathamuni said:

நான் மிக மிக கடுமையாக எதிர்க்கும் பிராண்ட் இது தான்.

காரணங்கள் பல. இங்கே நேரடியாக சொல்ல விரும்பவில்லை.

கவனமாக இருங்கோ சிறியர். 

நாற்சந்தியில் ஒரு திரியைத் திறந்து வெளியே சொல்ல முடியாத  விடயங்களை....., உறுப்பினர்களுக்கு மட்டும் அறியத்தராலாம் நாதம்ஸ்!

  • கருத்துக்கள உறவுகள்
On ‎27‎/‎06‎/‎2017 at 7:27 AM, Nathamuni said:

உங்களை நம்பி அங்கேயிருந்து காவிச் சுமக்க ஏலாது. :10_wink:

நீங்கள்,வாய்ச் சொல்லில் மட்டும் தான் வீரர் என்பது எனக்கு எப்பவோ தெரியும்<_<

13 hours ago, தமிழ் சிறி said:

நாதமுனி, நீங்கள் இப்படி சொன்ன பின்.... பயமாக உள்ளது.:rolleyes:
குறிப்பிட்ட மிளகாய்த் தூளை, கடந்த 6, 7 வருடமாக பாவித்து வந்துள்ளோம்.
இதுவரை அதன் நேரடியான தாக்கம், உடலில் ஏற்படவில்லை. 
பிற்காலத்துக்கு என்ன காத்திருக்குதோ... என்று நினைக்க  அச்சம்  ஏற்படுகின்றது. :shocked:

மேலே குறிப்பிட்ட மிளகாய்த் தூளை, அதன் பெயரை நேரடியாக  குறிப்பிடாமல், "x" என்று வைத்துக் கொண்டு,
அதன் பாதிப்புகளை விளக்கினால்,  பிரயோசனமாக இருக்கும்.
நாளைக்கு ஏதாவது வருத்தம் வந்தாலும், டாக்டரிடம் சொல்லி மருந்து எடுக்க உதவும். :)
இனி,  நான்... ரபீனாவுக்கு,  மாறப்  போகின்றேன். :grin:

தமிழ்சிறி,சில காலத்திற்கு முன்பு சூர்யா,நிரு கறித் தூள்கள்[ஒரே கொம்பனி:unsure:] கலருக்காக[சிவப்பு நிறத்திற்காக] எதையோ கலந்து விற்கிறார்கள் என்டு அதைக் கொஞ்சக் காலம் இங்கு தடை செய்த ஞாபகம்...அந்த வேதிப் பொருள் கான்சரை வரவழைக்க கூடியது...இதுப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் மெளனம் காப்பது சரியில்லை.:mellow:

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ரதி said:

நீங்கள்,வாய்ச் சொல்லில் மட்டும் தான் வீரர் என்பது எனக்கு எப்பவோ தெரியும்<_<

தமிழ்சிறி,சில காலத்திற்கு முன்பு சூர்யா,நிரு கறித் தூள்கள்[ஒரே கொம்பனி:unsure:] கலருக்காக[சிவப்பு நிறத்திற்காக] எதையோ கலந்து விற்கிறார்கள் என்டு அதைக் கொஞ்சக் காலம் இங்கு தடை செய்த ஞாபகம்...அந்த வேதிப் பொருள் கான்சரை வரவழைக்க கூடியது...இதுப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் மெளனம் காப்பது சரியில்லை.:mellow:

பார்ப்போம். A/C கூலர் கேட்கிறா அக்கா என்று பார்த்தால்..... நீங்கள் தான் பின்னடித்தீர்கள்.

******

சிறியர்,

நிரு பிராண்ட் முதலில் கனடாவில் தயாராகி வந்தது. இங்கு சந்தைப்படுத்தியவர், கனடாகாரரின் உறவினர். பின்னர் தனது இலாபத்தை கூட்ட, இந்தியா பக்கம் சைற்றாக ஓடர் அனுப்பினார். இரு தடவைகள், கொள்கலன்கள் தடுக்கப்பட்டது. இரு முறையும் பெரும் விளம்பரங்கள் மூலம் செய்தி மீடியாவில் வராமல் பார்க்கப்பட்டது.

பிராண்ட் ஓனர், கனடாக்காரர் புறுபுறக்க, அவருக்கான, பிராண்ட் உபயோகத்துக்கான பணத்தைக் குறைக்க, சூரியா ஆரம்பிக்கப்பட்டது.

இப்போது சுங்கட்சாவடியில் இலஞ்சம் நடனமாடுவதாக தகவல் வருகிறது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அந்த வேதிப் பொருள் கான்சரை வரவழைக்க கூடியது...இதுப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் மெளனம் காப்பது சரியில்லை.:mellow:

நீங்கள் குறிப்பிட்டது சரி, இந்த இணைப்பில் பாருங்கள்.

http://www.foodsafetywatch.org/factsheets/aflatoxins/

http://www.bifa.org/news/articles/2016/jul/importing-dried-indian-chilli-chilli-products

இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகும் Chilli சார்ந்த பொருட்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செத்தல் மிளகாயிலிருந்தே தயாரிக்கப்படுகிறது. காரணம் இந்திய செத்தல் இலங்கை செத்தலின் விலையிலும் பார்க்க குறைவு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைப்பொறுத்தவரைக்கும்....எது எப்பிடியோ? உந்த கோதாரி விழுந்த தூளுகளிலாலை நான் இரண்டு குளிசை கூடுதலாய் எடுக்க வேண்டி வந்துட்டுது எண்டதை மட்டற்ற மகிழ்ச்சியோடை தெரிவிச்சு கொள்ளுறன்.

கற்பிணிகளும்....பிள்ளைக்கு பால் கொடுக்கும் தாய்மார்களும் தயவுசெய்து தமிழ்கடைகளில் விற்கும் மிளகாய்த்தூள்களை வாங்கி உணவில் சேர்க்காதீர்கள். இது எனது தனிப்பட்ட அன்பு வேண்டுகோள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, Athavan CH said:

நாற்சந்தியில் ஒரு திரியைத் திறந்து வெளியே சொல்ல முடியாத  விடயங்களை....., உறுப்பினர்களுக்கு மட்டும் அறியத்தராலாம் நாதம்ஸ்!

எனக்கும் தனிமடலிலை சொல்லுங்கோ :grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நீங்கள்,வாய்ச் சொல்லில் மட்டும் தான் வீரர் என்பது எனக்கு எப்பவோ தெரியும்<_<

தமிழ்சிறி,சில காலத்திற்கு முன்பு சூர்யா,நிரு கறித் தூள்கள்[ஒரே கொம்பனி:unsure:] கலருக்காக[சிவப்பு நிறத்திற்காக] எதையோ கலந்து விற்கிறார்கள் என்டு அதைக் கொஞ்சக் காலம் இங்கு தடை செய்த ஞாபகம்...அந்த வேதிப் பொருள் கான்சரை வரவழைக்க கூடியது...இதுப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் மெளனம் காப்பது சரியில்லை.:mellow:

தகவலுக்கு.... நன்றி,  ரதி. :)
வியாபார  விஷயம்  விளங்காத,  ஆட்கள் தான், :innocent:
இங்கு, கடை  நடத்துகின்றார்கள். சொல்லிப் பார்க்கின்றேன்.:cool:

நமக்கு... முக்கியம்: முருங்கை காய், பயத்தம் காய், வெண்டிக்காய், பச்சை  மிளகாய் மட்டுமே....  :grin:  :D:

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

தகவலுக்கு.... நன்றி,  ரதி. :)
வியாபார  விஷயம்  விளங்காத,  ஆட்கள் தான், :innocent:
இங்கு, கடை  நடத்துகின்றார்கள். சொல்லிப் பார்க்கின்றேன்.:cool:

நமக்கு... முக்கியம்: முருங்கை காய், பயத்தம் காய், வெண்டிக்காய், பச்சை  மிளகாய் மட்டுமே....  :grin:  :D:

அப்படிஎன்றால் முருங்கை காய், பயத்தம் காய், வெண்டிக்காய், பச்சை  மிளகாய் இவைகளின் விலைகளை 

உடனே சொல்லுங்க பார்க்கலாம் இங்கு தமிழ் கடைகளுக்கு சாமான் வேண்டுபவர்களுக்கு என்பது வீதமான் பொருள்களின் விலை தெரியாது அதனாலே வியாபாரம் தெரியாதவர்களும் வந்து கோலோச்சுகின்றனர் .

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

அப்படிஎன்றால் முருங்கை காய், பயத்தம் காய், வெண்டிக்காய், பச்சை  மிளகாய் இவைகளின் விலைகளை 

உடனே சொல்லுங்க பார்க்கலாம் இங்கு தமிழ் கடைகளுக்கு சாமான் வேண்டுபவர்களுக்கு என்பது வீதமான் பொருள்களின் விலை தெரியாது அதனாலே வியாபாரம் தெரியாதவர்களும் வந்து கோலோச்சுகின்றனர் .

பீற்றூட்.... இந்தியன் கடை £0.49. தமிழ் கடை £1.49

கருவேற்பிலை இந்தியாவிலிருந்து வரத்து தடை. இலங்கையில் இருந்து கீரை என்று போலி லேபிலுடன் வருவதன் விலை 1கிலோ £30.00

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பெருமாள் said:

அப்படிஎன்றால் முருங்கை காய், பயத்தம் காய், வெண்டிக்காய், பச்சை  மிளகாய் இவைகளின் விலைகளை 

உடனே சொல்லுங்க பார்க்கலாம் இங்கு தமிழ் கடைகளுக்கு சாமான் வேண்டுபவர்களுக்கு என்பது வீதமான் பொருள்களின் விலை தெரியாது அதனாலே வியாபாரம் தெரியாதவர்களும் வந்து கோலோச்சுகின்றனர் .

முருங்கை காய், பயத்தம் காய், வெண்டிக்காய், பச்சை  மிளகாய்

இவை எல்லாம்... ஒரு கிலோ.... 4 ஐரோ. 
கருவேப்பிலை  கிராம் கணக்கில்...   கொப்பு, தடி, என்று 100 கிராம்.... ஒரு  €
மரவள்ளி கிழங்குக்கும், தேங்காய்க்கும்   வேறை விலை.
அதுக்கு..... கரண்டி (Guarantie) இல்லை.:grin:
ஆனால்.... என்ன, செய்வது... இவைகளை, சாப்பிட்டால்  தான்...
உடம்பு...... "ஜில்லென்று"...... இருக்குது.... பெருமாள்..:D:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, Nathamuni said:

பீற்றூட்.... இந்தியன் கடை £0.49. தமிழ் கடை £1.49

கருவேற்பிலை இந்தியாவிலிருந்து வரத்து தடை. இலங்கையில் இருந்து கீரை என்று போலி லேபிலுடன் வருவதன் விலை 1கிலோ £30.00

பீற்றூட் இஞ்சை குப்பை மலிவு.....உந்த பேய்க்காட்டல் ஏசியன் கடையளுக்கு நானும் என்ரை சனங்களும் போறதை குறைச்சிட்டம். ஏன் இவங்கடை சாப்பிட்டால் என்ன குறைஞ்சே போவம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கற்பிணிகளும்....பிள்ளைக்கு பால் கொடுக்கும் தாய்மார்களும் தயவுசெய்து தமிழ்கடைகளில் விற்கும் மிளகாய்த்தூள்களை வாங்கி உணவில் சேர்க்காதீர்கள். இது எனது தனிப்பட்ட அன்பு வேண்டுகோள்.

குமாரசாமி அண்ணை ....
எனக்கு... இன்னுமொருக்கா, அப்பா... ஆகிற, பிளான் இருக்கு.
நான், இதனை... தொடர்ந்து, சாப்பிடலாமா?  

  • கருத்துக்கள உறவுகள்

நான் நோமலாய் மச்சம் சாப்பிடும் நாட்களில் தமிழ் கடைக்கு போறேல்ல...ஆனால் தொடர்ந்து சைவம் என்டால் தமிழ்க் கடை மரக்கறி தான்...விலை பற்றி ஒரு மண்ணும் தெரியாதுtw_dizzy:

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரதி said:

நான் நோமலாய் மச்சம் சாப்பிடும் நாட்களில் தமிழ் கடைக்கு போறேல்ல...ஆனால் தொடர்ந்து சைவம் என்டால் தமிழ்க் கடை மரக்கறி தான்...விலை பற்றி ஒரு மண்ணும் தெரியாதுtw_dizzy:

இப்படிச்  சொல்ல, உங்களுக்கு, வெட்கமாக இல்லையா... ரதி.
"ஆற்றில், போட்டாலும்.... அளந்து, போட வேண்டும்"  :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
47 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை ....
எனக்கு... இன்னுமொருக்கா, அப்பா... ஆகிற, பிளான் இருக்கு.
நான், இதனை... தொடர்ந்து, சாப்பிடலாமா?  

வீரியம் குறையுமெண்டு கனபேர் கதைக்கிறாங்கள்.

ஆகவே பிளான் இருந்தாலும் சக்ஸஸ் ஆகாது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

வீரியம் குறையுமெண்டு கனபேர் கதைக்கிறாங்கள்.

ஆகவே பிளான் இருந்தாலும் சக்ஸஸ் ஆகாது.

சும்மா...  "றை" பண்ணிப் பாப்பம்.  அண்ணை...  :grin:
"வந்தால் ... மலை, போனால்  மயிர்"  :D:

இனி.... நட்டம்  வர  வாய்ப்பில்லை. :love:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

நான் நோமலாய் மச்சம் சாப்பிடும் நாட்களில் தமிழ் கடைக்கு போறேல்ல...ஆனால் தொடர்ந்து சைவம் என்டால் தமிழ்க் கடை மரக்கறி தான்...விலை பற்றி ஒரு மண்ணும் தெரியாதுtw_dizzy:

இங்கதான் கதை. அங்க கதைச்சு, கத்தரிக்காய், வெண்டிக்காய் வெல பேசி வாங்கத் தெரியேல்ல.

இரண்டு மாதம் விரதமெண்டியல். அப்ப இனி இறைச்சிக்கடேயில பார்க்கேலாது.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

சும்மா...  "றை" பண்ணிப் பாப்பம்.  அண்ணை...  :grin:
"வந்தால் ... மலை, போனால்  மயிர்"  :D:

இனி.... நட்டம்  வர  வாய்ப்பில்லை. :love:

வந்தால் பிள்ளை... போனால் வீரியம். முட்ட, முட்ட... 'முட்டக்கோப்பி' அடிட்சால் சரி. 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை ....
எனக்கு... இன்னுமொருக்கா, அப்பா... ஆகிற, பிளான் இருக்கு.
நான், இதனை... தொடர்ந்து, சாப்பிடலாமா?  

தமிழ்சிறி சில வருடங்களுக்கு முன்பு நீங்கள் கருத்தடை செய்த்ததாய் ஓர் கட்டுரை எழுதி இருந்தீர்கள். 

இப்ப மறுபடியும் திரும்ப நோர்மலுக்கு வந்தீட்டீங்களா? 
மலை நிச்சயம் வருமா?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, colomban said:

தமிழ்சிறி சில வருடங்களுக்கு முன்பு நீங்கள் கருத்தடை செய்த்ததாய் ஓர் கட்டுரை எழுதி இருந்தீர்கள். 

இப்ப மறுபடியும் திரும்ப நோர்மலுக்கு வந்தீட்டீங்களா? 
மலை நிச்சயம் வருமா?

இதென்ன புதுக் கதையாய் இருக்கு ?

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் சூரிச்சில் நல்ல சாப்பாட்டுக்கு கடை எது ? விலாசம் வேண்டும் .

ஞாயிறு மற்றையை தமிழ்க் கடைகள் திறக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, வாத்தியார் said:

சுவிஸ் சூரிச்சில் நல்ல சாப்பாட்டுக்கு கடை எது ? விலாசம் வேண்டும் .

ஞாயிறு மற்றையை தமிழ்க் கடைகள் திறக்குமா?

வாத்தியார், கண்டு கனகாலம்.

ஓமோம்....பெடி, பெட்டயளுக்கு சோதனை நடக்குது தானே.

அங்க மினக்கட்டிருப்பியல்.

சுவிசில, சூரிச்சில எந்த இடத்தில, சாப்பாட்டுக் கடை தேடுறியள் எண்டு விளப்பமா சொல்லுங்கோவன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

வாத்தியார், கண்டு கனகாலம்.

ஓமோம்....பெடி, பெட்டயளுக்கு சோதனை நடக்குது தானே.

அங்க மினக்கட்டிருப்பியல்.

சுவிசில, சூரிச்சில எந்த இடத்தில, சாப்பாட்டுக் கடை தேடுறியள் எண்டு விளப்பமா சொல்லுங்கோவன்.

தமிழ் சாப்பாட்டுக்கடைகள் சிற்றிக்குள்ளை இருக்கா
நான் இதுவரை சுவிஸ் பக்கமே போகேல்லை
இது  தான் முதல் தடவை
அது தான் கேட்டேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.