Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தவறை ஏற்று முதல்வரும் பதவி விலகியிருந்தால் நிலைமை சுமுகம்

Featured Replies

தவறை ஏற்று முதல்வரும் பதவி விலகியிருந்தால் நிலைமை சுமுகம்

po2.jpg?itok=JLfHTTK4

வாசுகி சிவகுமார்

நான்கு அமைச்சர்களும் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று வடக்கு முதல்வர் தீர்ப்புச்சொன்னது தன்னுடைய அமைச்சரவை சரியாக இயங்கவில்லை என்கிற நிலைப்பாட்டுக்கு அவர் வந்திருப்பதனையே காட்டுவதாகக் கூறும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், மக்களது உணர்ச்சிகளைக் கொண்டு தவறுகளை மூடி மறைக்கும் தருணம் இதுவல்ல என்கின்றார். அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட செவ்வி...

வட மாகாண சபையின் முதலமைச்சர் பதவி விலக்கப்படவேண்டு மெனக் கோரி வட மாகாண சபையின் உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கைச்சாத்திட்டவர்களில் பலர் தங்கள் நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளனவே?

அவ்வாறு யாரும் தங்கள் நிலைப்பாட்டினை மாற்றியதாக நான் அறியவில்லை. கைச்சாத்திட்டவர்களில் ஒருவர் பின்வாங்கியதாக செய்தி சற்று முன்னர் கிடைத்தது. ஆனால் அச்செய்தியை சரிபார்த்தபோது அது முகநூலில் வெளியிடப்பட்ட பொய்த்தகவல் என்கிற விபரம் கிடைத்தது. முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பது வட மாகாண சபையின் ஆளும் கட்சியினைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள் எடுத்த தீமானம். அதில் தமிழரசுக்கட்சியின் நிர்ப்பந்தம் எதுவுமில்லை. அதேபோல தங்கள் நிலைப்பாட்டினை எவரேனும் மாற்றினாலும் அதில் தமிழரசுக் கட்சியின் நிர்ப்பந்தம் எதுவும் இருக்கப்போவதில்லை. வட மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் 15 பேர், முதலமைச்சர் தவறாகச் செயற்படுகின்றார், எனக் கூறி மாகாண சபையில் இருந்து வெளிநடப்புச் செய்தார்கள். முதலமைச்சர் மீது தாம் நம்பிக்கையிழந்திருப்பதாக்க் கூறி அவர்கள், ஆளுனரிடம் கடிதத்தினைச் சமர்ப்பித்திருக்கின்றார்கள். அதில் என்ன மாற்றம் நிகழ்ந்தாலும் அது அவர்களையே சார்ந்தது. அதில் கட்சியின் தலையீடு, அழுத்தம் எதுவுமில்லை. ஆனாலும் ஆளும் கட்சியின் 15 உறுப்பினர்களும் எதிர்க்கட்சியினருமாக 21 பேர் முதலமைச்சருக்கெதிரான தங்களது எதிர்ப்பினை ஆளுநரிடம் சமர்ப்பித்திருக்கின்றார்கள். எதிர்க் கட்சித்தலைவரின் நிலைப்பாடு இன்னமும் தெரியவரவில்லை. முதலமைசருக்கு எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கும் 21 பேரினதும் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை.

வட மாகாண முதலமைச்சருக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றினைக் கொண்டு வந்து அவரை பதவி விலக்குவதற் கெதிராக வட மாகாணமெங்கும் முழு அளவிலான ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. வெள்ளியன்று முழு வட மாகாணமுமே வெறிச்சோடிப்போயிருந்ததைக், காணக்கிடைத்தது. இது வட மாகாண மக்கள் முதமைச்சருடன் இருக்கின்றார்கள் என்பதைத்தானே உணர்த்துகின்றது?

இதனைக்கொண்டு மக்கள் அவருக்குச் சார்பாக இருக்கின்றார்கள் என்று சொல்ல முடியாது. சில இடங்களில் கடையடைப்பு இடம்பெற்றிருக்கின்றது. சில இடங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் ஹர்த்தால் மூலமாகவும், கடையடைப்பு மூலமாகவும் தான் சரி. பிழை பார்ப்பதாக இருந்தால் இந்த நாட்டில் எந்தவிதமானதொரு ஆட்சியையும் எவரும் கொண்டு நடத்தமுடியாது. இது சரியானது எது தவறானது எது என்பதனை நிலைநாட்டுவதற்கான தருணமே அன்றி. மக்களது உணர்ச்சிகளைக் கொண்டு தவறுகளை மூடி மறைக்கும் தருணம் அல்ல.

முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை பதவி விலக்க வேண்டும் எனக் கோருவதன் மூலம் தமிழரசுக்கட்சி ஒரு வரலாற்றுத் தவறினைச் செய்கின்றது என்பது பலரது அபிப்பிராயமாக உள்ளதே?

விக்னேஸ்வரனை பதவியில் அமர்த்தியதே தமிழரசுக் கட்சி செய்த வரலாற்றுத் தவறு என்பதாகத்தான் எங்களைப் பலர் விமர்சித்திருக்கின்றார்கள்.

முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு விட்டால், தமிழர்கள் தாமே நிர்வாகம் செய்யக் கிடைத்த ஒரேயொரு சந்தர்ப்பத்தினையும் ஒழுங்காக செய்யத் தவறிவிட்டார்கள் என்கிற தோற்றப்பாடு ஏற்பட்டு விடாதா?

அவ்வாறான தோற்றப்பாடு ஏற்படத்தான் செய்யும். அதற்கு பலர் பொறுப்பேற்க வேண்டும். நாங்களும் பொறுப்பேற்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அதற்கு முதலமைச்சர் பொறுப்புச் சொல்ல வேண்டும். நான்கு அமைச்சர்களும் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தீர்ப்புச் சொல்கின்ற போதே, தன்னுடைய அமைச்சரவை சரியாக இயங்கவில்லை என்கிற நிலைப்பாட்டுக்கு அவரே வந்திருக்கின்றார். அப்படியானால் அவ்வறிவித்தலை விடுத்தபோதே முதலமைச்சர் அதற்கான தார்மீகப் பொறுப்ப்பினை தான் ஏற்று தானும் அன்றைய தினம் பதவி விலகியிருக்க வேண்டும். அதுதான் சரியான செயற்பாடாக இருந்திருக்கும். எவரது தலையீடுகளும் இன்றி தானே நியமித்த, நான்கு அமைச்சர்களும் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று அவர் சொன்னபோது, தன்னுடைய அமைச்சரவை தோற்று விட்டது என்பதனை அவர் ஏற்றுக்கொண்டிருக்கின்றார். அவ்வாறெனின் அவரும் பதவிவிலகியிருக்க வேண்டும். ஆனால் இதுவொரு துரதிர்ஷ்டவசமான விடயம் என்பதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன. வடக்கு மாகாண சபை தேர்தலில் நாங்கள் போட்டியிட்டதே, அதுவொரு அதிகாரங்கள் இல்லாத சபையாக இருந்தாலும், போருக்குப் பின்னரான சூழ்நிலையில் எங்கள் மக்களுக்கு செய்யப்பட வேண்டிய சேவைகள் நிறையவே இருந்தன, அவற்றை ஓரளவுக்கேனும் மாகாண சபையின் ஊடாக நிறைவேற்றலாம் என்ற எதிர்பார்ப்பே. ஆனால் வட மாகாண சபை அதில் கிஞ்சித்தேனும் அக்கறை கொள்ளாமல், 300க்கும் மேற்பட்ட அரசியல் தீர்மானங்களை நிறைவேற்றுவதிலேயே கவனத்தினைச் செலுத்தியிருக்கின்றது. அதுவொரு பாரிய தவறு.

தமிழரசுக் கட்சி சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலுக்கமையச் செயற்படுகின்றதென்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றதே? மாகாண சபை நிர்வாகத்தினைக் கூட தமிழர்களால் சரிவர ஆற்ற முடியாதென்ற சிங்கள அரசின் பிரசாரங்களுக்கு தமிழரசுக்கட்சி முண்டு கொடுக்கின்றதா?

அவ்வாறு இல்லை. வடக்கு மாகாண சபை அப்படியானதொரு குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கின்றது. அது வடமாகாண சபையின் தோல்வி. அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் பிரதான கட்சியென்ற வகையில் தமிழரசுக் கட்சியும் பொறுப்பேற்க வேண்டும் என்றுதான் நான் சொல்வேன். ஆனால் அந்த மாகாண சபையினை நாங்கள் யாரிடத்தில் பொறுப்புக் கொடுத்தோமோ, குறிப்பாக வட மாகாண சபையின் முதலமைச்சர் அந்தத் தோல்விக்குப் பொறுப்புக் கூறவேண்டியவராக இருக்கின்றார்.

வட மாகாண சபை தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்டு ஏறத்தாழ மூன்று வருடங்களுக்கும் அதிகமான காலம் கடந்து விட்டநிலையில், வடமாகாண சபையின் வினைத்திறன் பற்றி அதன் தோல்வி பற்றி பல்வகையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்போ பெரும்பான்மை வகிக்கும் தமிழரசுக் கட்சியோ அதனை ஒழுங்காக இயங்கச்செய்வதில் எந்தவிதமான தலையீடுளையும் மேற்கொள்ளவில்லை?

அது கட்சி சார்ந்த ஒரு நிர்வாகம் இல்லை. அரசியல் தலையீடு என்பது ஒரு நிர்வாக அலகினுள் இருக்கக்கூடாது. அவ்வாறிருந்தால் அது ஒரு நல்லாட்சியின் பண்பாக அமையாது. எங்களது கட்சியைச் சேர்ந்தவர்களது ஆட்சியாக இருந்தாலும், அதிகாரம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்குத்தான் அந்தப் பொறுப்பு உள்ளதே தவிர, கட்சியின் தலையீடென்பது வேண்டத் தகாததாகவே அமையும். பொறுப்பான ஒருரைத் தெரிவுசெய்து., அவரது தலைமையிலும் அவரது தலைமையிலான அமைச்சரவையிடமும் ஒப்படைத்ததன் பின்னர் அவ்வாறான தலையீடுகள் எவற்றையும் கட்சிசெய்யவே இல்லை. அமைச்சரவை நியமனத்திலும் கூடுதலான சுயாதீனம் முதலமைச்சருக்கே கொடுக்கப்பட்டது. அவ்வுரிமை சட்ட ரீதியாகவும் முதலமைச்சருக்கே உள்ளது.

வட மாகாண முதமைச்சரை பதவி விலக்கவேண்டும் என தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் மேற்கொண்ட முடிவானது, தமிழரசுக் கட்சியின் மீதும், அதன் தலைமையிலான ஆட்சியின் மீதும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தி விடாதா?

ஏற்படத்தான் செய்யும். ஏனென்றால் நாங்கள் ஊழலை மறைக்கச் செயற்படுகின்றோம் என்றவாறான பிரசாரங்களே முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் அதற்கு நேரெதிரான நிலைப்பாடே உண்மையானதாகும். ஆரம்பம் முதல் ஊழலை மறைக்க செயற்பட்டவர் வட மாகாண முதலமைச்சர்தான். ஒரு அமைச்சருக்கு எதிராக அனேக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில், அதனை விசாரிக்கவென விசாரணைக் குழுவொன்றினை நியமித்து, சகலருக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பதென்பது, உண்மையை திசை திருப்பச் செய்யப்பட்ட காரியம்தான். விசாரணை அறிக்கையிலும் ஐங்கரநேசன் மட்டும்தான் ஊழல், இலஞ்சம், பணமோசடி, என்பவற்றில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். குருகுலராஜா மீது சுமத்தப்பட்டிருப்பது, அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு. ஆனாலும் குருகுலராஜா எமது உறுப்பினர் என்பதால் அவரை பதவி விலகுமாறு நாங்கள் கோரியிருந்தோம். அவர் தான் ஒரு குற்றவாளி அல்லவென்றார். 'நீங்கள் ஒரு குற்றவாளி அல்லாவிட்டாலும். விசாரணை அறிக்கையில் உங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பதால், பதவியை இராஜினாமா செய்யுங்கள் என்றோம்’ அவர் செய்யவில்லை. தவறோ சரியோ, விசாணைக்குழுவைத் தெரிவுசெய்தவர் முதமைச்சர்தான். விசாணைக்குழுவின் அறிக்கையை இரண்டு கிழமைகள் அவர் மறைத்து வைத்திருந்தார். அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரும், தனக்குச் சார்பானோர் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைச்சர்கள் எல்லோரையும் விலக்கியுள்ளார். நான்கு பேரையும் நீக்குவது பற்றி எல்லா உறுப்பினர்களுடனும் கலந்துரையாடியுள்ளார். கட்சித் தலைவர்களுடனும் கலந்துரையாடியுள்ளார். ஆனால் இலங்கைத் தமிழரசுக்கட்சித் தலைவருடன் மட்டும் கதைக்கவில்லை. அப்போதுதான் சம்பந்தன் ஐயா முதமைச்சருடன் தொடர்புகொண்டு ஏன் இவ்வாறானதொரு நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேட்டார். விசாரணைக்குழுவின் அறிக்கையில் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மீதும் நடவடிக்க எடுத்திருக்கின்றீர்களே என்று கேட்டுள்ளார். அப்போது முன்னர் நான்கு அமைச்சர்ளையும் நீக்குமாறு 16 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு தன்னிடம் அறிக்கை சமர்ப்பித்ததை முதலமைச்சர் நினைவுபடுத்தியுள்ளார். ஆனால் அதனடிப்படையில் நடவடிக்கை எடுப்பதானால் அப்போதேயல்லவா எடுத்திருக்க வேண்டும்? குற்றச்சாட்டுக்களை விசாரிக்க விசாணைக்குழு நியமிக்கப்பட்டு, அவ்விசாரணைக்குழு இருவரை அவர்களது குற்றச்சாட்டுக்களில் இருந்தும், விடுவித்த பின்னர், எல்லோர் மீதும் நடவடிக்கை எடுப்பது எவ்வாறு பொருத்தமானதாய் அமையும்?

ஏன் தமிழரசுக் கட்சித் தலைவருடன் இது குறித்துப் பேசவில்லையென சம்பந்தன் ஐயா முதமைச்சரிடம் கேட்டபோது தன்னிடம் அவரது தொலைபேசி இலக்கம் இல்லையென்றிருக்கின்றார் முதலமைச்சர். ஆனால் பின்னர் மாவை சேனாதிராஜாவுடன் இது பற்றிப் பேசியிருக்கின்றார். அப்போது, நீங்கள் நியமித்த நான்கு அமைச்சர்களையும் பதவி விலக்கினால் நீங்களும் சேர்ந்தே பதவி விலகவேண்டும் என்று மாவைசேனாதிராஜா பதிலளித்திருக்கின்றார். ஆனால் இறுதி முடிவெடுக்கும் முன்னர் மீண்டும்தொடர்புகொள்வதாக மாவைசேனாதிராஜாவுக்கு உறுதியளித்தும் அது எதனையும் செய்யாது, ஏன் மாகாண சபை உறுப்பினர்களின் கருத்துக்களையும் கூடப்பெறாமல் மறுநாள் மாகாண சபையில், ஐங்கரநேசனின் தன்னிலை விளக்கத்தின் பின்னர் தன் தீர்ப்பினை அறிவித்திருக்கின்றார். அதனால்தான் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். தனே விசாணைக்குழுவினையும் நியமித்து அக்குழுவின் அறிக்கையை மதிக்காமல் தானே தன்னிச்சையாக முடிவெடுத்தமை உறுப்பினர்கள் அவர் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது. மோசடி, லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவருக்கெதிராக தனியாக நடவடிக்கை எடுத்துக் காட்டியிருக்கவேண்டும். எல்லோருக்கும் ஒரே மாதிரியாக நடவடிக்கை எடுத்து குற்றத்தின் வலுவினைக் குறைக்கக் கூடாது. அதுதான் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு. அதனாலேயே நம்பிகையில்லாத் தீர்மானம்கொண்டு வருவதற்காக ஆளும் கட்சியில் இருந்து 15பேர் கையொப்பமிட்டிருக்கின்றார்கள். எதிர்க்கட்சியைச் சேர்ந்த 6 பேர் தமக்கும் முதமைச்சரில் நம்பிக்கை இல்லையென ஆளுனரிடம் கடிதத்தினைக் கையளித்திருக்கின்றார்கள். ஆளும் கட்சியின் ஏனைய 15 உறுப்பினர்கள் தமக்கு முதலமைச்சரில் நம்பிக்கையிருப்பதாக கடந்த வியாழனன்று ஆளுநரிடம் கடிதத்தினை கையளித்திருக்கின்றார்கள். முதலமைச்சர் மீதான நம்பிக்கை தொடர்பில் ஆளும் கட்சி இரண்டாக பிளவு பட்டிருக்கின்றது. முதலமைச்சர் தொடர்ந்தும் பதவி வகிப்பாரா அல்லது விலகவேண்டுமா என்பதனை எதிர்க்கட்சியே தீர்மானிக்கும்.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினைக் கொண்டுவந்திருக்கும் மாகாண சபை உறுப்பினர்களின் கோரிக்கைக்கு முதமைச்சர் செவிசாய்ப்பாராக இருந்தால்?

உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தமை, அதனைத் தொடர்ந்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தமை என்பனவற்றுக்கு காரணம், குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட அமைச்சர்ளையும் குற்றவாளிகளுடன் சேர்த்து நடவடிக்க எடுத்தமைதான். அதனை முதலமைச்சர் மாற்றியமைப்பாராக இருந்தால், நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீள்பரிசீலனை செய்யத் தயார் என எமது உறுப்பினர்கள் கூறியிருக்கின்றார்கள். தனது தீர்ப்பினை முதலமைச்சர் மாற்றுவாராயின் நம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ்பெறுமாறு தமது உறுப்பினர்களுக்கு அறிவுரை கொடுப்பேன் என்று சம்பந்தன் ஐயா தெரிவித்திருக்கின்றார். முதலமைச்சரின் தீர்ப்பானது சாதாரண நீதி, நியாயங்களுக்கு அப்பாற்பட்டது என்பதற்கப்பால், அரசியலமைப்புச் சட்டத்துக்கும் முரணானது. அமைச்சர் ஒருவரை இடைநிறுத்தும் அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் அவருக்கில்லை. அதிகார வரம்பு மீறல் என்று மற்றவர்ளை நோக்கி அவர் கைகாட்டுகையில் தானும் அதனை தற்போது மீறியிருக்கின்றார். ஐந்து அமைச்சுக்களையும் தானே பார்த்துக்கொள்வதாக அறிவித்திருக்கின்றார்.

அதற்கும் எந்தவிதமான சட்ட ஏற்பாடுகளும் அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை. முதலமைச்சர் ஓர் எதேச்சாதிகாரியாக நடப்பதற்கான சட்ட அதிகாரம் சிறிதும் இல்லை. எனவே ஏனையவர்களைவிட முதமைச்சராலேயே அதிகளவிலான அதிகார வரம்பு மீறல்கள் இடம்பெற்றுள்ளன.

http://www.vaaramanjari.lk/2017/06/18/அரசியல்/தவறை-ஏற்று-முதல்வரும்-பதவி-விலகியிருந்தால்-நிலைமை-சுமுகம்

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. இவர் தான் சிங்கள எஜமானர்களுக்காக.. சதி பின்னினவரோ.. மக்களின் உணர்ச்சி சகிக்க முடியல்ல.. ஆனால்.. மக்களின் வாக்கு மட்டும் தேவைப்படுகுதோ..?!

இவரை.. மிக விரைவில் அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டியது.. ஈழத்தமிழ் மக்களின் பொறுப்பு. 

இல்லை.. மொத்த இனத்தையும்.. சிங்களவனோடு சேர்ந்து கூட்டழிப்புச் செய்ய உந்தச் சின்னக்கதிர்காமருடன்.. சம்.. மாவை கூட்டணி பின்னிற்காது.

இவரின் குணமறிஞ்சு தான் தேசிய தலைவர் இவரை அப்பவே... காடாசிக் குப்பையில் போட்டிருக்கிறார். :rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

தமிழரசுக்கட்சி திருட்டுக் கும்பலின் கைக்கூலிகளில் ஒருவரான சுமந்திரனின் பித்தலாட்டம் இப்படியும் சிந்திக்கிறதோ?

வேரோடு அறுக்கப்பட்ட வேண்டிய களைகள்! 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சரியான 

நேர்மையான பேட்டி

இப்படி இன்றைய நிலையில்

பேட்டி கொடுத்தால் மக்களின் 

ஒரு பகுதியின் வெறுப்பை 

சம்பாதிக்க நேரும் என அறிந்தும்

சொல்ல வேண்டியதை சொல்லும்

துணிவும் நேர்மையும் இருக்கு 

சுமாவுக்கு

5 hours ago, நவீனன் said:

தவறை ஏற்று முதல்வரும் பதவி விலகியிருந்தால் நிலைமை சுமுகம்

வட மாகாண முதலமைச்சருக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றினைக் கொண்டு வந்து அவரை பதவி விலக்குவதற் கெதிராக வட மாகாணமெங்கும் முழு அளவிலான ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. வெள்ளியன்று முழு வட மாகாணமுமே வெறிச்சோடிப்போயிருந்ததைக், காணக்கிடைத்தது. இது வட மாகாண மக்கள் முதமைச்சருடன் இருக்கின்றார்கள் என்பதைத்தானே உணர்த்துகின்றது?

இதனைக்கொண்டு மக்கள் அவருக்குச் சார்பாக இருக்கின்றார்கள் என்று சொல்ல முடியாது. சில இடங்களில் கடையடைப்பு இடம்பெற்றிருக்கின்றது. சில இடங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் ஹர்த்தால் மூலமாகவும், கடையடைப்பு மூலமாகவும் தான் சரி. பிழை பார்ப்பதாக இருந்தால் இந்த நாட்டில் எந்தவிதமானதொரு ஆட்சியையும் எவரும் கொண்டு நடத்தமுடியாது. இது சரியானது எது தவறானது எது என்பதனை நிலைநாட்டுவதற்கான தருணமே அன்றி. மக்களது உணர்ச்சிகளைக் கொண்டு தவறுகளை மூடி மறைக்கும் தருணம் அல்ல.

http://www.vaaramanjari.lk/2017/06/18/அரசியல்/தவறை-ஏற்று-முதல்வரும்-பதவி-விலகியிருந்தால்-நிலைமை-சுமுகம்

மிகச் சரியான பதில்!

ஒருவர் முற்றிலும் நேர்மை

தவறி நடக்கும் போது அதற்காக

நடக்கும் ஹர்த்தால் வெற்றி 

அளித்தது என்பதற்காக 

தவறிழைத்தவரு சார்பாக

காவடி எடுக்க முடியாது

5 hours ago, நவீனன் said:

முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு விட்டால், தமிழர்கள் தாமே நிர்வாகம் செய்யக் கிடைத்த ஒரேயொரு சந்தர்ப்பத்தினையும் ஒழுங்காக செய்யத் தவறிவிட்டார்கள் என்கிற தோற்றப்பாடு ஏற்பட்டு விடாதா?

அவ்வாறான தோற்றப்பாடு ஏற்படத்தான் செய்யும். அதற்கு பலர் பொறுப்பேற்க வேண்டும். நாங்களும் பொறுப்பேற்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அதற்கு முதலமைச்சர் பொறுப்புச் சொல்ல வேண்டும். நான்கு அமைச்சர்களும் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தீர்ப்புச் சொல்கின்ற போதே, தன்னுடைய அமைச்சரவை சரியாக இயங்கவில்லை என்கிற நிலைப்பாட்டுக்கு அவரே வந்திருக்கின்றார். அப்படியானால் அவ்வறிவித்தலை விடுத்தபோதே முதலமைச்சர் அதற்கான தார்மீகப் பொறுப்ப்பினை தான் ஏற்று தானும் அன்றைய தினம் பதவி விலகியிருக்க வேண்டும். அதுதான் சரியான செயற்பாடாக இருந்திருக்கும். எவரது தலையீடுகளும் இன்றி தானே நியமித்த, நான்கு அமைச்சர்களும் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று அவர் சொன்னபோது, தன்னுடைய அமைச்சரவை தோற்று விட்டது என்பதனை அவர் ஏற்றுக்கொண்டிருக்கின்றார். அவ்வாறெனின் அவரும் பதவிவிலகியிருக்க வேண்டும். ஆனால் இதுவொரு துரதிர்ஷ்டவசமான விடயம் என்பதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன. வடக்கு மாகாண சபை தேர்தலில் நாங்கள் போட்டியிட்டதே, அதுவொரு அதிகாரங்கள் இல்லாத சபையாக இருந்தாலும், போருக்குப் பின்னரான சூழ்நிலையில் எங்கள் மக்களுக்கு செய்யப்பட வேண்டிய சேவைகள் நிறையவே இருந்தன, அவற்றை ஓரளவுக்கேனும் மாகாண சபையின் ஊடாக நிறைவேற்றலாம் என்ற எதிர்பார்ப்பே. ஆனால் வட மாகாண சபை அதில் கிஞ்சித்தேனும் அக்கறை கொள்ளாமல், 300க்கும் மேற்பட்ட அரசியல் தீர்மானங்களை நிறைவேற்றுவதிலேயே கவனத்தினைச் செலுத்தியிருக்கின்றது. அதுவொரு பாரிய தவறு.

மிக மிக தெளிவான பதில்

மக்கள் இந்த மாகாணசபை மூலம்

குறைந்த பட்ச நன்மையாவது கிடைக்கும்

என

விக்கி ஐயாவை பதவியில்

அமர்த்துகின்றனர்

மக்களில் ஒரு பிரிவினர் அவரை

முள்ளிவாய்க்காலில் பதவிபிரமாணம் செய்ய

சொல்லி கேட்கின்றனர்

ஆனால் விக்கியர் மகிந்த முன்னால்

போய் பதவிப் பிரமாணம் செய்கின்றார்

தமிழ் நாட்டில் இலங்கையில் 

போர்க்குற்றம் தான் நிகழ்ந்தது

என்று தீர்மானத்தினை தமிழரசு

கட்சி உறுப்பினர்கள் 

மகிந்த இருக்கும் போது 

கொண்டு வருகின்றனர்

விக்கி ஐயா அதை

பிற்போடுகின்றார்

ரணில் வந்தவுடன் 

விக்கி ஐயா அத்

தீர்மானத்தை கொண்டு

வருகின்றார்

சம்பந்தியின் அரசியலுக்கு

சாமரம் வீசினார்

விக்கி ஐயா அமைச்சர்கள்

மேல் ஊழல் குற்றச்சாட்டு வருகின்றது

முக்கியமாக ஐங்கரநேசன் மீது

விக்கி ஐயா மீது

திறனற்ற ஆட்சி நடத்துக்கின்றார்

என குறைகள் சொல்லுவது

அதிகரிக்கின்றது

விக்கி ஐயா என்ன செய்தார்?

அதற்கான பதில் எதையும் சொல்லாமல்

காத்திரமான நடவடிக்கை எடுக்காமல்

தமிழ் மக்களிடம் போய் எதைச் சொன்னால்

உணர்ச்சி மேலிட வைக்க வேண்டுமோ

அதை சொல்கின்றார்

போலி வெற்று உணர்ச்சி

அரசியல் செய்து தன்

நிர்வாகத் திறனின்மையை

ஊழல் அமைச்சர்கள் மீதான

குற்றச்சாட்டை 

மக்களிடம் இருந்து

அன்னியப்படுத்தும் அனைத்து

முயற்சிகளிலும் ஈடுபடுகின்றார்

ஒன்றுக்கும் உதவாத தீர்மானங்களை

ஒன்றன் பின் ஒன்றாக 

நிறைவேற்றுகின்றார்

இதைச் செய்வதன் மூலம்

மக்களை மிக மோசமான 

வழிக்கு திசை 

திருப்புகின்றார்

இவர் செய்த ஒரு உருப்படியான

செயல் என்ன?

மக்கிப் போன  வீதிகளால் 

போய் குடிசை வடிவில் இருக்கும்

தொழிற்சாலை சிலவற்றை

திறந்ததுக்கும் மேலாக

என்ன செய்தார் இவர்?

Edited by வைரவன்

5 hours ago, நவீனன் said:

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினைக் கொண்டுவந்திருக்கும் மாகாண சபை உறுப்பினர்களின் கோரிக்கைக்கு முதமைச்சர் செவிசாய்ப்பாராக இருந்தால்?

உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தமை, அதனைத் தொடர்ந்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தமை என்பனவற்றுக்கு காரணம், குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட அமைச்சர்ளையும் குற்றவாளிகளுடன் சேர்த்து நடவடிக்க எடுத்தமைதான். அதனை முதலமைச்சர் மாற்றியமைப்பாராக இருந்தால், நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீள்பரிசீலனை செய்யத் தயார் என எமது உறுப்பினர்கள் கூறியிருக்கின்றார்கள். தனது தீர்ப்பினை முதலமைச்சர் மாற்றுவாராயின் நம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ்பெறுமாறு தமது உறுப்பினர்களுக்கு அறிவுரை கொடுப்பேன் என்று சம்பந்தன் ஐயா தெரிவித்திருக்கின்றார். முதலமைச்சரின் தீர்ப்பானது சாதாரண நீதி, நியாயங்களுக்கு அப்பாற்பட்டது என்பதற்கப்பால், அரசியலமைப்புச் சட்டத்துக்கும் முரணானது. அமைச்சர் ஒருவரை இடைநிறுத்தும் அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் அவருக்கில்லை. அதிகார வரம்பு மீறல் என்று மற்றவர்ளை நோக்கி அவர் கைகாட்டுகையில் தானும் அதனை தற்போது மீறியிருக்கின்றார். ஐந்து அமைச்சுக்களையும் தானே பார்த்துக்கொள்வதாக அறிவித்திருக்கின்றார்.

அதற்கும் எந்தவிதமான சட்ட ஏற்பாடுகளும் அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை. முதலமைச்சர் ஓர் எதேச்சாதிகாரியாக நடப்பதற்கான சட்ட அதிகாரம் சிறிதும் இல்லை. எனவே ஏனையவர்களைவிட முதமைச்சராலேயே அதிகளவிலான அதிகார வரம்பு மீறல்கள் இடம்பெற்றுள்ளன.

ஒரு முதலமைச்சர் தனது அதிகாரங்களை பகிர முடியாமல் திண்டாடுகிறார் என்றால் அதற்கு பதில் அவர் தலைவராக இருக்க தகுதி அற்றவர் என்பதே. ஒரு தலைவர் என்பவர் தனது அதிகாரங்களை திறம்பட பகிர்ந்து அதனை தனது கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க வேண்டும் // இல்லை என்றால் அவருக்கு தலைமைத்துவம் இல்லை என்பதே பொருள் + அதற்க்கு அவர் பொறுப்பெடுக்க வேண்டும்.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

வட மாகாண சபை தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்டு ஏறத்தாழ மூன்று வருடங்களுக்கும் அதிகமான காலம் கடந்து விட்டநிலையில், வடமாகாண சபையின் வினைத்திறன் பற்றி அதன் தோல்வி பற்றி பல்வகையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்போ பெரும்பான்மை வகிக்கும் தமிழரசுக் கட்சியோ அதனை ஒழுங்காக இயங்கச்செய்வதில் எந்தவிதமான தலையீடுளையும் மேற்கொள்ளவில்லை?

அது கட்சி சார்ந்த ஒரு நிர்வாகம் இல்லை. அரசியல் தலையீடு என்பது ஒரு நிர்வாக அலகினுள் இருக்கக்கூடாது. அவ்வாறிருந்தால் அது ஒரு நல்லாட்சியின் பண்பாக அமையாது. எங்களது கட்சியைச் சேர்ந்தவர்களது ஆட்சியாக இருந்தாலும், அதிகாரம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்குத்தான் அந்தப் பொறுப்பு உள்ளதே தவிர, கட்சியின் தலையீடென்பது வேண்டத் தகாததாகவே அமையும். பொறுப்பான ஒருரைத் தெரிவுசெய்து., அவரது தலைமையிலும் அவரது தலைமையிலான அமைச்சரவையிடமும் ஒப்படைத்ததன் பின்னர் அவ்வாறான தலையீடுகள் எவற்றையும் கட்சிசெய்யவே இல்லை. அமைச்சரவை நியமனத்திலும் கூடுதலான சுயாதீனம் முதலமைச்சருக்கே கொடுக்கப்பட்டது. அவ்வுரிமை சட்ட ரீதியாகவும் முதலமைச்சருக்கே உள்ளது.

அருமையான பதில்!

ஒரு வேளை தமிழரசு

கட்சி விக்கி ஐயாவின்

நிர்வாகத்தில் தலையீடு

செய்து காரியம் ஆற்றி இருந்தால்

அதுக்கும் ஆயிரம்

வியாக்கியானங்கள் சொல்லி

இருப்பினம் 

தமிழின அழிப்பை மேற்கொண்ட கும்பல்களின் கைக்கூலிகள் அந்தக் கும்பலுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை அகற்றி மேலும் தமிழின அழிப்பை விரைவுபடுத்த களமிறங்கியுள்ளனர்!

வடமாகாணசபை மேற்கொண்ட ஒவ்வொரு தீர்மானமும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் தமிழின அழிப்பை தோலுரித்துக் காட்டுவனவே!

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரம் தமிழின அழிப்பை முன்னெடுக்க, சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரம் சர்வதேசத்தை ஏமாற்ற வடமாகாணசபை மேற்கொண்ட ஒவ்வொரு தீர்மானமும் தடையாக இருப்பதால் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்துக்கு முட்டுக்கொடுக்கும் சம்பந்தன்-சுமந்திரன்-மாவை கும்பலுக்கும் அவர்களின் எட்டப்ப அடிவருடிகளும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை அகற்றவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது!

இந்த சதி முயற்சி ஏற்கனவே கொலைக்கள மார்ஷல் சரத் பொன்சேகாவால் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

தவறோ சரியோ, விசாணைக்குழுவைத் தெரிவுசெய்தவர் முதமைச்சர்தான். விசாணைக்குழுவின் அறிக்கையை இரண்டு கிழமைகள் அவர் மறைத்து வைத்திருந்தார். அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரும், தனக்குச் சார்பானோர் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைச்சர்கள் எல்லோரையும் விலக்கியுள்ளார்

இது தான் பிரச்சனையின்

மூல காரணமே

உதயன் பத்திரிகை

வெளிவிடாட்டி

இப்பவும் ஐயா 

தன் வேட்டிக்குள் விசாரணை

அறிக்கையை மறைச்சு வைச்சுக்

கொண்டு இருப்பார்

1 minute ago, போல் said:

தமிழின அழிப்பை மேற்கொண்ட கும்பல்களின் கைக்கூலிகள் அந்தக் கும்பலுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை அகற்றி மேலும் தமிழின அழிப்பை விரைவுபடுத்த களமிறங்கியுள்ளனர்!

வடமாகாணசபை மேற்கொண்ட ஒவ்வொரு தீர்மானமும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் தமிழின அழிப்பை தோலுரித்துக் காட்டுவனவே!

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரம் தமிழின அழிப்பை முன்னெடுக்க, சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரம் சர்வதேசத்தை ஏமாற்ற வடமாகாணசபை மேற்கொண்ட ஒவ்வொரு தீர்மானமும் தடையாக இருப்பதால் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்துக்கு முட்டுக்கொடுக்கும் சம்பந்தன்-சுமந்திரன்-மாவை கும்பலுக்கும் அவர்களின் எட்டப்ப அடிவருடிகளும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை அகற்றவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது!

இந்த சதி முயற்சி ஏற்கனவே கொலைக்கள மார்ஷல் சரத் பொன்சேகாவால் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஐயோ பாவம்!

இன்னும் இன்னும் பிதற்றுங்கள்

புலிகள் 30 வருடம் 

செய்தும் கேட்காத 

சர்வதேசம் 

விக்கி ஐயா எனும் ஒரு

மகிந்த தரகர் சொல்லித்

தான் புரிந்து கொள்ள

போகின்றது

8 minutes ago, வைரவன் said:

ஐயோ பாவம்!

இன்னும் இன்னும் பிதற்றுங்கள்

புலிகள் 30 வருடம் 

செய்தும் கேட்காத 

சர்வதேசம் 

விக்கி ஐயா எனும் ஒரு

மகிந்த தரகர் சொல்லித்

தான் புரிந்து கொள்ள

போகின்றது

கைக்கூலிகளின் பிதற்றல் விரைவில் முடியும்! 

Edited by போல்

3 minutes ago, போல் said:

கைக்கூலிகளின் பிதற்றல் விரைவில் முடியும்! 

உண்மை // முற்றிலும் உண்மை 

முதலமைச்சரின் நடவடிக்கை அவரை முழு நாட்டிற்கும் முன்மாதிரியாக திகழ செய்துள்ளது

வடமாகாணசபையின் நிலைப்பாடு தொடர்பில் முதலமைச்சர் எடுத்த தீர்மானத்தினால் முழு நாட்டிற்கும் முன்மாதிரியாக திகழ்கின்றார் என அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறினார்.

கொழும்பில் மாற்று திறனாளிகளுக்கு பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் தொர்ந்தும் தெரிவிக்கையில்,

வடமாகாண முதலமைச்சரை பார்த்து முழு நாடும் இன்று பிரம்மித்து போயிருக்கின்றது. கடந்த காலத்தில் அவரை பார்த்து கேலி செய்தவர்கள் எல்லாம் இப்பொழுது வாயடைத்து போயுள்ளனர்.

காரணம் விக்னேஸ்வரன் தனது மாகாண சபையில் நான்கு அமைச்சர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட போது தயக்கமின்றி விசாரணை குழுவை அமைத்து அறிக்கை பெற்று அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார் என மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.

http://www.tamilwin.com/politics/01/149255?ref=home-imp-parsely

15 minutes ago, போல் said:

தமிழின அழிப்பை மேற்கொண்ட கும்பல்களின் கைக்கூலிகள் அந்தக் கும்பலுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை அகற்றி மேலும் தமிழின அழிப்பை விரைவுபடுத்த களமிறங்கியுள்ளனர்!

ஆமா இந்த கைகூலிகள் யார் என்று உங்களால் சொல்ல முடியுமா - இப்படியே காலத்தை கடத்துங்கோ :grin:

4 minutes ago, போல் said:

முதலமைச்சரின் நடவடிக்கை அவரை முழு நாட்டிற்கும் முன்மாதிரியாக திகழ செய்துள்ளது

http://www.tamilwin.com/politics/01/149255?ref=home-imp-parsely

5:30 நிமிட கானொளியில் 1:20 நிமிடங்களுக்கு பிறகு என்ன பேசுகிறார் என்பது எனக்கு புரியவேயில்லை. புரிந்தவர்கள் புரிய வைக்கலாமே.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, போல் said:

முதலமைச்சரின் நடவடிக்கை அவரை முழு நாட்டிற்கும் முன்மாதிரியாக திகழ செய்துள்ளது

எது?

திருடர்களை/ ஊழல் பேர்வழிகளை பாதுகாக்கும் விடயத்திலா?

முதல்வர் சாம்மிற்கு எழுதிய

கடிதத்திலும் ஊழல் பேரரசன் நிமலனின் 

தலையீடு இருந்ததாக சொல்லிகினமே

அது பற்றி

விக்கி ஐயாவின் வால் உங்களின்

பதில் என்ன?

1 minute ago, ஜீவன் சிவா said:

ஆமா இந்த கைகூலிகள் யார் என்று உங்களால் சொல்ல முடியுமா - இப்படியே காலத்தை கடத்துங்கோ

தமிழின அழிப்பை மேற்கொண்ட கும்பல்களின் கைக்கூலிகள் அந்தக் கும்பலுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை அகற்றி மேலும் தமிழின அழிப்பை விரைவுபடுத்த களமிறங்கியுள்ளனர்!

வடமாகாணசபை மேற்கொண்ட ஒவ்வொரு தீர்மானமும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் தமிழின அழிப்பை தோலுரித்துக் காட்டுவனவே!

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரம் தமிழின அழிப்பை முன்னெடுக்க, சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரம் சர்வதேசத்தை ஏமாற்ற வடமாகாணசபை மேற்கொண்ட ஒவ்வொரு தீர்மானமும் தடையாக இருப்பதால் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்துக்கு முட்டுக்கொடுக்கும் சம்பந்தன்-சுமந்திரன்-மாவை கும்பலுக்கும் அவர்களின் எட்டப்ப அடிவருடிகளும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை அகற்றவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது!

இந்த சதி முயற்சி ஏற்கனவே கொலைக்கள மார்ஷல் சரத் பொன்சேகாவால் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்தப் பதிவிலேயே பதில் உள்ளது!
பொருத்தமானவர்கள் தொப்பியை போட்டுக்கொள்ளலாம்!

2 minutes ago, வைரவன் said:

எது?

திருடர்களை/ ஊழல் பேர்வழிகளை பாதுகாக்கும் விடயத்திலா?

முதல்வர் சாம்மிற்கு எழுதிய

கடிதத்திலும் ஊழல் பேரரசன் நிமலனின் 

தலையீடு இருந்ததாக சொல்லிகினமே

அது பற்றி

விக்கி ஐயாவின் வால் உங்களின்

பதில் என்ன?

வைரவனின் பிதற்றல்!

6 minutes ago, போல் said:

இந்தப் பதிவிலேயே பதில் உள்ளது!
பொருத்தமானவர்கள் தொப்பியை போட்டுக்கொள்ளலாம்!

மறுபடியும் பிதற்றல்

தெரிந்தால் சொல்லலாமே // அதுக்கு எதுக்கு தொப்பி

தெரியாவிட்டால் தெரியாது என்று சொல்லுங்கள் இல்லை நேர சொல்லுங்கள் // சும்மா பிதற்ற வேண்டாம்.

நீங்கள் தொப்பியை வைத்து தலையை தேடுகிறீர்கள் 

நான் தலைக்கு தொப்பி தேடுகின்றேன்/

1 minute ago, ஜீவன் சிவா said:

மறுபடியும் பிதற்றல்

தெரிந்தால் சொல்லலாமே // அதுக்கு எதுக்கு தொப்பி

தெரியாவிட்டால் தெரியாது என்று சொல்லுங்கள் இல்லை நேர சொல்லுங்கள் // சும்மா பிதற்ற வேண்டாம்.

இங்கே பிதற்றுவது நீங்கள் தான்! 

Just now, போல் said:

இங்கே பிதற்றுவது நீங்கள் தான்! 

நீங்கள் தொப்பியை வைத்து தலையை தேடுகிறீர்கள் 

நான் தலைக்கு தொப்பி தேடுகின்றேன்

1 minute ago, ஜீவன் சிவா said:

நீங்கள் தொப்பியை வைத்து தலையை தேடுகிறீர்கள் 

நான் தலைக்கு தொப்பி தேடுகின்றேன்

தேடிக்கொண்டே இருங்கள்!

போல்

தேடிக்கொண்டே இருங்கள்!

நீங்களும் உங்கள் தொப்பிக்கு ஏற்ற தலையை தேடிக்கொண்டே இருங்கள்.

ஆமா அந்த கைகூலிகள் யாரெண்டு சொல்லவேயில்லை // அடிச்சும் கேட்பாங்கள் சொல்லிப் போடாதீங்க :grin:

Edited by ஜீவன் சிவா

1 minute ago, ஜீவன் சிவா said:

நீங்களும் உங்கள் தொப்பிக்கு ஏற்ற தலையை தேடிக்கொண்டே இருங்கள்.

உங்களை எனது உதவியாளராகவோ எடுபிடியாகவோ சேர்க்கவில்லை! எனவே உங்கள் கற்பனை ஆலோசனைகளை யாராவது ஏமாந்தவரிடம் முன்வையுங்கள்!

இன்னொரு நாட்டுக்கு இடம்பெயர்ந்து தாய்நாட்டுக்கு வந்து வலிந்து ஆலோசனைகள் சொல்லும் நிமலன் கார்த்திகேயன் போன்ற பேர்வழிகளால் பல பிரச்சினைகள் தான் மிஞ்சுவது கண்கூடு!

நிமலன் கார்த்திகேயன் முதலமைச்சர் விக்னேஸ்வரனை வலிந்து தொற்றியுள்ள சனியன்!

44 minutes ago, போல் said:

கைக்கூலிகளின் பிதற்றல் விரைவில் முடியும்! 

8 minutes ago, ஜீவன் சிவா said:

ஆமா அந்த கைகூலிகள் யாரெண்டு சொல்லவேயில்லை // அடிச்சும் கேட்பாங்கள் சொல்லிப் போடாதீங்க :grin:

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். 

4 minutes ago, போல் said:

இன்னொரு நாட்டுக்கு இடம்பெயர்ந்து தாய்நாட்டுக்கு வந்து வலிந்து ஆலோசனைகள் சொல்லும் நிமலன் கார்த்திகேயன் போன்ற பேர்வழிகளால் பல பிரச்சினைகள் தான் மிஞ்சுவது கண்கூடு!

ஆமா இந்த நிமலனை நாட்டுக்கு கொண்டுவந்ததே மாண்பிமிகு முதலமைச்சர்தானே. ஐநா கூட இவரின் நியமனத்துக்கு முதல்வர் பரிந்துரைத்தபோது மறுத்ததாம். 

எனக்கு ஒண்டும் தெரியாது அடிச்சு கேட்டாலும் சொல்ல மாட்டன்.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஜீவன் சிவா said:

ஆமா இந்த நிமலனை நாட்டுக்கு கொண்டுவந்ததே மாண்பிமிகு முதலமைச்சர்தானே. ஐநா கூட இவரின் நியமனத்துக்கு முதல்வர் பரிந்துரைத்தபோது மறுத்ததாம். 

அது மட்டுமல்ல இன்றும்

இந்த வினாடி வரைக்கும்

நிமலன் விக்கி ஐயாவுடன் தான்

சாமிற்கு கடிதம் எழுதும் 

போதும் இந்த ஊழல் பேர்வழி

பக்கத்தில் இருந்ததை

மாவை தொடக்கம் அநேகமான

மாகாணசபை உறுப்பினர்கள்

பார்த்துக் கொண்டு தான்

இருந்தனர்

விக்கி ஐயா 

ஊழல் நிரூபிக்கப்படாத

ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களை

விடுப்பில் போகச் சொன்னவர்

அப்படி என்றால்

என்ன மயி*** க்கு அதிகமாக குற்றம்

சாட்டப்பட்டு வரும் நிமலனை 

இன்னும் தன் அருகில் வைத்து 

ஒவ்வொரு விடயத்தில் அவரது

மூக்கை நுழைக்க அனுமதி

அளிக்கின்றார்?

24 minutes ago, வைரவன் said:

என்ன மயி*** க்கு அதிகமாக குற்றம்

சுயரூபம் மெல்ல மெல்ல வெளிவருகிறது!

  • கருத்துக்கள உறவுகள்

இதே விக்கி ஐயா தான் மகிந்தருக்கு முன்னாள் சத்தியப்பிரமாணம் செய்த போது இதே யாழிலே கழுவிக் கழுவி ஊத்தினார்களே!!!  மருமக்கள் இருவரும் சிங்களவர்களாக இருப்பதாலும் வாசுதேவ  இவரின் சம்பந்தி என்பதாலும் விக்கி ஐயா ஒரு நிகழ்ச்சி  நிரலுடனேயே முதலமைச்சராகிறார் என்று கூறியவர்கள் பலர்.

உண்ணான குறை நினைக்கப்படாது, மாகாண சபையால் நடந்த ஏதாவது ஒரு  விடயத்தை யாராவது கூற முடியுமா?  மூன்று வருடங்களில் என்ன செய்திருக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Thumpalayan said:

இதே விக்கி ஐயா தான் மகிந்தருக்கு முன்னாள் சத்தியப்பிரமாணம் செய்த போது இதே யாழிலே கழுவிக் கழுவி ஊத்தினார்களே!!!  மருமக்கள் இருவரும் சிங்களவர்களாக இருப்பதாலும் வாசுதேவ  இவரின் சம்பந்தி என்பதாலும் விக்கி ஐயா ஒரு நிகழ்ச்சி  நிரலுடனேயே முதலமைச்சராகிறார் என்று கூறியவர்கள் பலர்.

உண்ணான குறை நினைக்கப்படாது, மாகாண சபையால் நடந்த ஏதாவது ஒரு  விடயத்தை யாராவது கூற முடியுமா?  மூன்று வருடங்களில் என்ன செய்திருக்கிறார்கள்?

ஒரு சிம்மாசனம் செய்திருக்கிறார்கள் போல உள்ளது!

அவர்கள் சண்டைகளில்...செங்கோலைத் தூக்கிக்கொண்டு ஓடியதாக வாசித்த நினைவு!

எனவே நிச்சயம் ஒரு செங்கோலும் செய்திருக்கிறார்கள் போல உள்ளது!

குடை, கொடி ஆலவட்டத்தைப் பற்றி எதுவும் தெரியாது!

அறிய முயற்சிக்கவும் இல்லை!

ஏனெனில் உங்களைப் போல நானும் ஒரு புலன் பெயர் தமிழனே!

மாதமும் மாரி பெய்கின்றதா என்றும் எனக்குத் தெரியாது!

Edited by புங்கையூரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.