Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளைஞன் சுட்டுக்கொலை; ரயரை நோக்கிச் சுடுமாறு கூறினேன்: பொலிஸ் வாக்குமூலம்!

Featured Replies

இளைஞன் சுட்டுக்கொலை; ரயரை நோக்கிச் சுடுமாறு கூறினேன்: பொலிஸ் வாக்குமூலம்!

இளைஞன் சுட்டுக்கொலை; ரயரை நோக்கிச் சுடுமாறு கூறினேன்: பொலிஸ் வாக்குமூலம்!

யாழ்ப்பாணம் வடமராட்சியில் கடந்த மாதம் மணல் ஏற்றினார் என்று இளைஞர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸார் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். இதன்போது இளைஞனைச் சுட்டுக்கொன்றதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவரான சஞ்சீவன் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

தனது வாக்குமூலத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,

"வாக­ன­மொன்­றில் மண­லுக்­குள் புதைத்து கஞ்சா கடத்­தப்­ப­டு­கின்­றது என்ற இர­க­சி­ய தக­வல் கிடைத்­ததையடுத்து பொலிஸ் நிலை­யத்­து­டன் தொடர்பு கொண்டு விட­யத்­தை தெரி­வித்­தேன். பொலிஸ் சீரு­டை­யு­டன் ஒரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரை வரு­மாறு கூறி­னேன். பொலிஸ் சீரு­டை­யு­டன் வந்த முபா­ரக் என்ற கான்ஸ்டபிளை அழைத்துக்கொண்டு வல்­லி­பு­ர கோயில் பிரதான வீதி­யூ­டாக நாகர்கோயில்வரை சென்­றோம். முபா­ரக்­கின் கையில் ரி-56 ரக துப்­பாக்கி இருந்தது. அங்கு சென்ற நாம் தக­வல் தொடர்­பி­லான சில கட­மை செயற்­பா­டு­களை மேற்­கொண்­டோம். பின்­னர் நாகர்­கோ­யில் குடத்­தனை முதன்­மை வீதி­யூ­டா­க சென்று வீதி­யோ­ர­மாக மோ.சைக்­கிளை நிறுத்தி நானும் முபா­ரக்­கும் இறங்கி நின்­றோம்.

அப்­போது நீல நிறத்­தி­லான ஹன்­ரர் ஒன்று வந்­தது. அதன் முன்­பக்­கத்­தில் 3 பேரும் பின்­பக்­கத்­தில் 4 பேரும் இருந்­த­னர். வீதி­யின் மத்­திக்கு வந்து கையைக் காட்டி வாக­னத்தை நிறுத்­து­மாறு சைகை காட்­டி­னேன். ஹன்­ரர் என்னை இடிப்­பது போல் வந்­ததால் நான் வீதி­யோ­ர­மா­க பாய்ந்­தேன். ஏன் நிறுத்­தா­மல் செல்­கி­றார்­கள் என்று கேட்­டுக்கொண்டு மோட்டார் சைக்­கிளை ஸ்ராட் செய்து ஹன்­ர­ரை துரத்­தி­னோம்.

ஹன்­ரரை நிறுத்­து­வ­தற்கு முயன்­றோம், பின்­னுக்கு இருந்த­வர்­களை நோக்கி ஹன்­ரரை நிறுத்­து­மாறு கத்­தி­னேன். ஆனால் ஹன்­ரரை நிறுத்­த­வில்லை மோ.சைக்­கி­ளின் வேகத்­தை கூட்டி ஹன்­ர­ருக்கு அரு­கில் சென்று ஹன்­ரரை நிறுத்­து­மாறு கூறி­னேன். நான் நெருங்­கிய சம­யம் ஹன்­ரர் மண் பாதை ஒன்­றுக்­குள் சடு­தி­யா­கத் திரும்­பி­யது. உடனே முபா­ரக்கை நோக்கி ஹன்­ரரை வடி­வா­க பார்த்து ரயரை நோக்கி கீழ் நோக்­கிச் சுடு­மாறு கூறி­னேன். அவர் ஒருமுறை ஹன்­ரரை நோக்­கி சுட்­டார்.

ஹன்­ரர் நிறுத்­தப்­பட்டு அதில் இருந்தவர்கள் குதித்­து பற்­றைக்­குள் ஓடி­னார்கள். மோட்டார் சைக்­கிளை நிறுத்­தி­னோம், முபா­ரக் அவர்­க­ளை துரத்­தி சென்­றார். நான் ஹன்­ர­ரில் திறப்பு இருக்­கின்­றதா என்று பார்ப்­ப­தற்­காக ஆச­ன பக்­கம் சென்­றேன். அப்­போ­து­தான் ஹன்ரருக்கு கீழ் ஒரு­வர் காயத்­து­டன் விழுந்து கிடந்­தார்.

முபா­ரக்கை கூட்­பி­ட்ட நான் காயப்­பட்டு விழுந்து கிடந்த அவ­ரைத் தூக்கி எமது மோட்டார் சைக்­கி­ளில் ஏற்றி நான் மோட்டார் சைக்­கி­ளை செலுத்த அவரை எனக்­கும் முபா­ரக்­குக்­கும் இடை­யில் வைத்து அம்­பன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்­றோம். அங்கு அம்­பு­லன்­ஸில் ஏற்­றி­னார்­கள், எங்­க­ளில் ஒரு­வரை வரு­மாறு கேட்­ட­னர். முபா­ரக்கை அம்­பு­லன்­ஸில் செல்­லு­மாறு கூறி­ய­து­டன் அவ­ரி­டம் இருந்து ரி-56 ரகதுப்­பாக்­கியை நான் வாங்­கிக்கொண்­டேன். பின்­னர் பொலிஸ் நிலையத் தொலை­பேசி இலக்­கத்­து­டன் தொடர்பு கொண்டு தக­வல் வழங்கினேன். அதி­காரி என்னைப் பொலிஸ் நிலை­யம் வரு­மா­றும் பொலிஸ் குழுவை அனுப்­பு­கின்­றேன் என்றும் கூறினார்." என்று சஞ்சீவன் வாக்கும்மூலம் வழங்கினார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/vadamaradsi-jaffna-police-shooting

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப முபாரக் வேண்டும் என்று தான் சுட்டுள்ளான். முபாரக்.. தன்ர இனவெறியை காட்ட.. சொறீலங்கா பொலிஸ் சீருடையை பாவிச்சிருக்கான். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

அப்ப முபாரக் வேண்டும் என்று தான் சுட்டுள்ளான். முபாரக்.. தன்ர இனவெறியை காட்ட.. சொறீலங்கா பொலிஸ் சீருடையை பாவிச்சிருக்கான். :rolleyes:

 காமாளைக்   கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்று தமிழ் பழமொழி இருக்கிறது. இனவெறி உள்ளவருக்கு மற்ற  இனத்தவர் எல்லாம் இனவெறி உள்ளவராக தெரிவர். இந்த சஞ்சீவன் உண்மை சொல்கிறார் என்று உங்களுக்கு எப்படி தெரியும்? இவரே சுட்டுவிட்டு முபராக் சுட்டதாக சொல்ல கூடும். இவரிடம் தான் துப்பாக்கி இறுதியாக இருந்திருக்கிறது. அல்லது இவர் முபராக்கை சுடுமாறு சொன்னபோது டயருக்கு சுடுமாறு சொல்லாமல் இப்போது பொய் சொல்வதாக இருக்கலாம்.  

முபராகின் சாட்சியம் வரும் வரையும், அம்புலன்ஸ் பணியாளர் கண்ட சாட்சியம் வரும் வரையும் பொறுத்து இருக்காமல் அதற்குள் முபாரக்கை இனவெறி கொண்ட குற்றவாளியாக  பார்க்க இனவெறி கொண்ட இன்னொருவராலேயே முடியும்.
  • கருத்துக்கள உறவுகள்

நல்லா குறிபாக்கிறாங்க

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Jude said:

உதுக்கேன் நீங்கள் இவ்வளவு கஸ்டப்பட்டு யோசிக்கனும்..?! சஞ்சீவனுக்கு தெரியாதோ.. தன்னைப் போல முபாரக்கையும் விசாரிப்பினம்.. தான் சொல்லும் பொய்களுக்கு என்னாகும் என்று...??!

முபாரக் மட்டுமல்ல.. இராணுவ ஆக்கிரமிப்புக்குள் எமது பூமி வந்ததன் பின் இஸ்லாமிய தீவிர மத அடிப்படைவாதப் பயங்கரவாதம் சொறீலங்கா சிங்களப் படைத்துறையினூடு இணைந்து பல கொடுமைகளைச் செய்துள்ளது. அதற்கு வெளியிலும் செய்துள்ளது.

கிருசாந்தி குமாரசாமி படுகொலையில் இருந்து கொழும்பில் தமிழ் இளைஞர்களை புலி என்று சகட்டு மேனிக்கு பிடித்து நாலாம் மாடிக்கு அனுப்பி சித்திரவதை செய்தது முதல்.. இஸ்லாமிய தீவிர மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகளின் கரம் சிங்கள பெளத்த பேரினவாதப் படைகளின் கையோடு பின்னிப் பிணைந்தே செயற்பட்டு வந்துள்ளது. இது நிதர்சனமான உண்மையும் கூட.

அதையேன் நீங்க கஸ்டப்பட்டு யோசிச்சு மறைக்கனும். :rolleyes:tw_angry:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:
 காமாளைக்   கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்று தமிழ் பழமொழி இருக்கிறது. இனவெறி உள்ளவருக்கு மற்ற  இனத்தவர் எல்லாம் இனவெறி உள்ளவராக தெரிவர். இந்த சஞ்சீவன் உண்மை சொல்கிறார் என்று உங்களுக்கு எப்படி தெரியும்? இவரே சுட்டுவிட்டு முபராக் சுட்டதாக சொல்ல கூடும். இவரிடம் தான் துப்பாக்கி இறுதியாக இருந்திருக்கிறது. அல்லது இவர் முபராக்கை சுடுமாறு சொன்னபோது டயருக்கு சுடுமாறு சொல்லாமல் இப்போது பொய் சொல்வதாக இருக்கலாம்.  

முபராகின் சாட்சியம் வரும் வரையும், அம்புலன்ஸ் பணியாளர் கண்ட சாட்சியம் வரும் வரையும் பொறுத்து இருக்காமல் அதற்குள் முபாரக்கை இனவெறி கொண்ட குற்றவாளியாக  பார்க்க இனவெறி கொண்ட இன்னொருவராலேயே முடியும்.

எனது  அனுபவத்தில சொல்கின்றேன்

அவர்கள்  செய்து தான் இருப்பார்கள்

செய்யாமல்  இருந்தால் தான்  அதிசயம்

அனுபவங்களே  ஒரு  முடிவுக்கு  இட்டுச்செல்லும்  நல்லாசிரியன்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

எனது  ஆனபவத்தில சொல்கின்றேன்

அவர்கள்  செய்து தான் இருப்பார்கள்

செய்யாமல்  இருந்தால் தான்  அதிசயம்

அனுபவங்களே  ஒரு  முடிவுக்கு  இட்டுச்செல்லும்  நல்லாசிரியன்

உண்மை.. 1983 இனக் கலவரம் இன்றும் பலர் எண்ணுவது போல சிங்களவர்களால்  தன்னிச்சையாக.. ஆரம்பிக்கப்படவில்லை. தொட்டிலங்க எனப்படும்.. கிராண்பாஸூக்கு அண்மையில் உள்ள இடத்தில்.. இஸ்லாமிய தீவிர மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகளின் தூண்டுதலாலும் ஆத்திரமூட்டும் செயலாலும் தான் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்போதும்.. கிராண்பாஸ் வாழ் தமிழ் மக்களை கேட்டால் தெரியும்.

ஆனால்.. பலருக்கு இந்த உண்மை தெரியாது. விட்டால்.. எல்லாரும் 1990.. வெளியேற்றத்துக்கு நீலிக்கண்ணீர் வடிப்பினம்.. கட்டுரை எழுதித் தள்ளுவினம்.tw_blush: 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

கிராண்பாஸ் க்கு நேரே  முன்னே  ஆமர் வீதியில் தான் 1983  ஆடி 23இல்  நானிருந்தேன்.

நானே  சாட்சி  தான்.

போலீஸ் பயங்கரவாதிகளின் திட்டமிட்ட நாடகம், போலி வாக்குமூலங்கள் மூலம் அரங்கேற்றப்படுகிறது!

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் கறைகள் படிந்த நீதித்துறை இதை எப்படி கையாளப் போகிறது என்பதை தமிழர்கள் அறிந்திருந்தாலும், பொறுத்திருந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

On 8/5/2017 at 1:39 PM, nedukkalapoovan said:

அப்ப முபாரக் வேண்டும் என்று தான் சுட்டுள்ளான். முபாரக்.. தன்ர இனவெறியை காட்ட.. சொறீலங்கா பொலிஸ் சீருடையை பாவிச்சிருக்கான். :rolleyes:

இங்கு முபாரக்கோ, முத்தையாவோ, முனசிங்கவோ யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் கருவிகள்.

பயங்கரவாத தடைச்சட்டம் போன்று தமிழினப் படுகொலைகளை அரங்கேற்றவும், சிங்கள-பௌத்த கொலைகாரர்களை பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டங்களின் அடிப்படையில் இயங்கும் சகலருமே, நீதித்துறை உட்பட, சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் கருவிகள் தான். இவர்களால் தமிழினத்துக்கு கிடைக்கவேண்டிய, நியாயமான நீதி, நியாயம், நிவாரணம், நட்டஈடுகள் ஒருபோதும் கிடைக்காது.

இது 60+ வருட வரலாறு!

தமிழர் தமது அடிப்படை உரிமைகளை போராடியே பெறவேண்டும்.
வேறு வழிகள் இல்லையென்பது 60+ வருடங்களாக நிரூபிக்கப்பட்ட எதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, போல் said:

தமிழர் தமது அடிப்படை உரிமைகளை போராடியே பெறவேண்டும்.
வேறு வழிகள் இல்லையென்பது 60+ வருடங்களாக நிரூபிக்கப்பட்ட எதார்த்தம்.

தமிழர் தமது அடிப்படை உரிமைகளை போராடி பெற முடியாதென்பது அடுத்த முப்பது வருடங்களாக நிருபிக்கப்பட்ட யதார்த்தம். 

முப்பது வருடங்களாக பிரபாகரன் தலைமையில் சாத்தியமற்று போனதை நீங்கள் எப்படி சாத்தியமாக்க போகிறீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
50 minutes ago, Jude said:

தமிழர் தமது அடிப்படை உரிமைகளை போராடி பெற முடியாதென்பது அடுத்த முப்பது வருடங்களாக நிருபிக்கப்பட்ட யதார்த்தம். 

முப்பது வருடங்களாக பிரபாகரன் தலைமையில் சாத்தியமற்று போனதை நீங்கள் எப்படி சாத்தியமாக்க போகிறீர்கள்?

போராட்டம் என்றால் இவருக்கு வெடிச்சத்தம் தான் ஞாபகத்துக்கு வரும்போலை கிடக்கு...
 
2 hours ago, Jude said:

தமிழர் தமது அடிப்படை உரிமைகளை போராடி பெற முடியாதென்பது அடுத்த முப்பது வருடங்களாக நிருபிக்கப்பட்ட யதார்த்தம். 

முப்பது வருடங்களாக பிரபாகரன் தலைமையில் சாத்தியமற்று போனதை நீங்கள் எப்படி சாத்தியமாக்க போகிறீர்கள்?

கோழைகளால் ஓடி ஒழியவும், பாதுகாப்பான இடத்தில் இருந்துகொண்டு விசர்க்கேள்விகள் கேட்கவும் தான் முடியும்!
பரமசிவன் கழுத்தில் இருந்துகொண்டு பாம்பு கேட்டதாம் கருடா சவுக்கியமா? என்று.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/8/2017 at 8:39 PM, குமாரசாமி said:

போராட்டம் என்றால் இவருக்கு வெடிச்சத்தம் தான் ஞாபகத்துக்கு வரும்போலை கிடக்கு...
 
தேசியத் தலைவர் வெடிச்சத்தம் இல்லாமல் போராடி இருந்தால் எங்களுக்கு ஏன் வெடிச்சத்தம் நினைவுக்கு வரப்போகிறது? முள்ளிவாய்க்காலில் கேட்ட வெடிச்சத்தத்தை எப்படி மக்கள் மறப்பார்கள்?

On 8/8/2017 at 10:36 PM, போல் said:

கோழைகளால் ஓடி ஒழியவும், பாதுகாப்பான இடத்தில் இருந்துகொண்டு விசர்க்கேள்விகள் கேட்கவும் தான் முடியும்!
பரமசிவன் கழுத்தில் இருந்துகொண்டு பாம்பு கேட்டதாம் கருடா சவுக்கியமா? என்று.

உங்கள் வீரம் முப்பது வருடங்களாக  சாதித்ததை நாங்கள் முள்ளிவாய்க்காலில் கண்டோம். இனி அது வேண்டாம்.

12 minutes ago, Jude said:

உங்கள் வீரம் முப்பது வருடங்களாக  சாதித்ததை நாங்கள் முள்ளிவாய்க்காலில் கண்டோம். இனி அது வேண்டாம்.

ஈழத்தில் வாழ்ந்துகொண்டு தமிழர் உரிமைகளை வெல்லப் போராடும் தமிழர்களும் புலம்பெயர்ந்தும் தாய்மண் மீதான பற்றால் பல்வேறுவடிவங்களில் தமிழர் உரிமைகளை வெல்லப் போராடும் தமிழர்களும்  தப்பியோடி விசர்க் கேள்விகள் கேட்கும் கோழைகள், எட்டப்பர்கள், சகுனிகள், கைக்கூலிகள் போன்ற குணமுடையவர்களுக்காக போராடுபவர்கள் இல்லை, போராட்டங்களையும் கைவிடப்போவதில்லை.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Jude said:

தேசியத் தலைவர் வெடிச்சத்தம் இல்லாமல் போராடி இருந்தால் எங்களுக்கு ஏன் வெடிச்சத்தம் நினைவுக்கு வரப்போகிறது? முள்ளிவாய்க்காலில் கேட்ட வெடிச்சத்தத்தை எப்படி மக்கள் மறப்பார்கள்?

உங்கள் வீரம் முப்பது வருடங்களாக  சாதித்ததை நாங்கள் முள்ளிவாய்க்காலில் கண்டோம். இனி அது வேண்டாம்.

இந்தியா ஒரு போதும் தனித்தமிழீழத்திற்கு ஆதரவுவழங்காது என்று மாற்றுக்கருத்து மாணிக்கங்கள்/வைரங்கள் இப்போது கதை கட்டுரை கவிதையாக எழுதித்தள்ளிக்கொண்டேயிருக்கின்றன.

இத்தனைக்கும் தனித்தமிழீழம் என்றுதான் அனைத்து விடுதலை இயக்கங்களினது ஆரம்பவரலாறுகள் சொல்லுகின்றன.

இதற்கு இந்தியாதான் ஊக்குவித்தது என்பதும் வரலாறு.

சரி விடுவோம்..

ஒருவேளை தமிழீழவிடுதலைப்புலிகளும் ஆரம்பத்திலேயே ஆயுதத்தை கைவிட்டிருந்தால்????

பேச்சுவார்த்தை மூலம் எமக்கென ஒரு நாடு கிடைத்திருக்கும் என்று சொல்ல வருகின்றீர்களா? அல்லது ஈழத்தமிழர்களுக்கான சகல உரிமைகளும் கிடைத்திருக்கும் என சொல்ல வருகின்றீகளா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

ஒருவேளை தமிழீழவிடுதலைப்புலிகளும் ஆரம்பத்திலேயே ஆயுதத்தை கைவிட்டிருந்தால்????

தமிழீழவிடுதலைப்புலிகள் ஆரம்பத்திலேயே ஆயுதத்தை கைவிட்டிருந்தால் எங்களுக்கு முள்ளிவாயிக்கால் வெடிச்சத்தம் கேட்டிருக்காது. இத்தனை ஆயிரம் மக்கள் மாண்டிருக்க மாட்டார்கள். தமிழ் இளம் விதவைகள் விபச்சாரம் செய்து வாழ  வேண்டிய நிலை வந்து இருக்காது.

On 8/8/2017 at 8:39 PM, குமாரசாமி said:

போராட்டம் என்றால் இவருக்கு வெடிச்சத்தம் தான் ஞாபகத்துக்கு வரும்போலை கிடக்கு...
 
தேசியத் தலைவர் வெடிச்சத்தம் இல்லாமல் போராடி இருந்தால் எங்களுக்கு ஏன் வெடிச்சத்தம் நினைவுக்கு வரப்போகிறது? முள்ளிவாய்க்காலில் கேட்ட வெடிச்சத்தத்தை எப்படி மக்கள் மறப்பார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Jude said:

தமிழீழவிடுதலைப்புலிகள் ஆரம்பத்திலேயே ஆயுதத்தை கைவிட்டிருந்தால் எங்களுக்கு முள்ளிவாயிக்கால் வெடிச்சத்தம் கேட்டிருக்காது. இத்தனை ஆயிரம் மக்கள் மாண்டிருக்க மாட்டார்கள். தமிழ் இளம் விதவைகள் விபச்சாரம் செய்து வாழ  வேண்டிய நிலை வந்து இருக்காது.

தேசியத் தலைவர் வெடிச்சத்தம் இல்லாமல் போராடி இருந்தால் எங்களுக்கு ஏன் வெடிச்சத்தம் நினைவுக்கு வரப்போகிறது? முள்ளிவாய்க்காலில் கேட்ட வெடிச்சத்தத்தை எப்படி மக்கள் மறப்பார்கள்?

.

Edited by colomban
error pls delete

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, Jude said:

தமிழீழவிடுதலைப்புலிகள் ஆரம்பத்திலேயே ஆயுதத்தை கைவிட்டிருந்தால் எங்களுக்கு முள்ளிவாயிக்கால் வெடிச்சத்தம் கேட்டிருக்காது. இத்தனை ஆயிரம் மக்கள் மாண்டிருக்க மாட்டார்கள். தமிழ் இளம் விதவைகள் விபச்சாரம் செய்து வாழ  வேண்டிய நிலை வந்து இருக்காது.

தேசியத் தலைவர் வெடிச்சத்தம் இல்லாமல் போராடி இருந்தால் எங்களுக்கு ஏன் வெடிச்சத்தம் நினைவுக்கு வரப்போகிறது? முள்ளிவாய்க்காலில் கேட்ட வெடிச்சத்தத்தை எப்படி மக்கள் மறப்பார்கள்?

2009........2017 முடியப்போகுது......

சம்பந்தனுக்கும் மாறாட்டம் வந்துட்டுது....

ஏதாவது விடிவு...வெளிச்சம்?

புலிகளை அழிச்ச ஆமிக்கு பொதுசனத்தின்ரை காணியளை விட்டுகொடுக்க வக்கில்லை....

இதுக்கை சிங்களவன்ரை நடவடிக்கைகளுக்கு வக்காளத்து வேறை...

போய் உங்களுக்கு தெரிஞ்ச வேலையை பாருங்க...

அவங்கள் அழிஞ்சு எட்டு வருசமாகுது.....

இன்னும் இதுக்கை நிண்டு அவங்களையே திட்டிக்கொண்டு.....

  • கருத்துக்கள உறவுகள்
On 8/12/2017 at 9:49 AM, Jude said:

தேசியத் தலைவர் வெடிச்சத்தம் இல்லாமல் போராடி இருந்தால் எங்களுக்கு ஏன் வெடிச்சத்தம் நினைவுக்கு வரப்போகிறது? முள்ளிவாய்க்காலில் கேட்ட வெடிச்சத்தத்தை எப்படி மக்கள் மறப்பார்கள்?

உங்கள் வீரம் முப்பது வருடங்களாக  சாதித்ததை நாங்கள் முள்ளிவாய்க்காலில் கண்டோம். இனி அது வேண்டாம்.

அது வேணும் என்பதட்கும் 
வேண்டாம் என்பதட்கும் 
நீங்கள் என்ன மொத்த தமிழர்களையும் குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறீர்களா ?

சோம்பேறிகள் அடிமையாகவும் கிடப்பார்கள் 
அதன் கீழ் இறங்கியம் கிடப்பார்கள் 

மனிதனாக  வாழ ஒருவன் பிறந்தால் 
அவன் தனது வாழ்வை மனித வாழ்வாகவே வடிவமைப்பான்.

உங்களுக்கு வேணும் 
வேண்டாததை 
ஒரு இனம் சுமக்க வேண்டியதில்லை.

முள்ளிவாய்க்காலுக்கு முன்பே பல வாய்க்கால்களை கண்ட இனம் தமிழ் இனம் 
ஆண்ட இனங்கள் வீழ்வது  மீள்வதும் வரலாறு.

நீங்கள் பிறந்த திகதிக்கும் 
தமிழ் இனத்துக்கும் வெகு தூரம் 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2017 at 0:42 AM, Jude said:

முப்பது வருடங்களாக பிரபாகரன் தலைமையில் சாத்தியமற்று போனதை நீங்கள் எப்படி சாத்தியமாக்க போகிறீர்கள்?

பிரபாகரன்.. தமிழர் போராட்டம் எல்லாம் கிடக்கட்டும். வீரன் வீழ்வது இயல்பு வரலாறு. தேசங்கள் எழுவதும் வீழ்வதும்.. இயல்பு வரலாறு. அது கிடக்கட்டும்..

வியட்நாமில் வெல்ல முடியாததை.. ஈராக்கில் வெல்ல முடியாததை.. ஆப்கானிஸ்தானில் வெல்ல முடியாததை.. சிரியாவில் வெல்ல முடியாததை.. லிபியாவில் வெல்ல முடியாததை.. எப்படி வடகொரியாவில் வெல்ல முடியும் என்று.. தாங்கள்.. பயங்கரவாதத்திற்கு எதிரான போரை முன்னெடுத்து தமிழின அழிப்புக்கு பல வகையிலும் துணைபுரிந்த அமெரிக்காவை கேட்டுச் சொல்லுவியளோ.. அவையின்ட பதில் என்னென்று பார்த்திட்டு நாங்கள் சொல்லுறம்.. எது சாத்தியம் என்று. :rolleyes:tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.