Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் விதவைகள் அடிமைகளாக மத்திய கிழக்கிற்கு கடத்தப்படுகின்றனர்

Featured Replies

போர் விதவைகள் அடிமைகளாக மத்திய கிழக்கிற்கு கடத்தப்படுகின்றனர்

இலங்கையின் மூன்று தசாப்தகால போர் காரணமாக கணவரை இழந்த  பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடிமைகளாக கடத்தப்படுவதாக தொம்சன் ராய்டர் செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. 

2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் சுமார் 1000 த்திற்கும் மேற்பட்ட போர் விதவைகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ள போதிலும் 2011 ஆம் ஆண்டில் 300 பேர் வரையில் மாத்திரமே பதிவாகியுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

போர் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்துள்ளது. நீண்ட போரினால் ஒரு இலட்சத்திற்கு அதிகமானோர் உயிரிழந்தும் சுமார் 65 ஆயிரம் பேர் வரையில் காணால் போயும் உள்ளனர். மேலும் பல இலட்சமட போர் வீடுவாசல்களை இழந்துள்ளனர். 

எனவே தான் அரசாங்கம் கூடிய முதலீடுகளை வடக்கிற்கு கொண்டு செல்கின்றது. சுமார் 90 ஆயிரம் பேர் வரையில் கணவர்களை இழந்த விதவை பெண்களாக வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்கின்றனர். 

இந்நிலையில் மத்திய கிழக்கிற்கு தொழில் நிமித்தம் செல்லும் ஆசிய மற்றும் ஆபிரிக்க பெண்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளவதாக வெளியாகின்றது. இலங்கை போரில் பாதிக்கப்பட்டு பெண் தலைமைத்துவங்களை கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தற்போது அடிமைகளாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளனர்.  

2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் வடக்கைச் சேர்ந்த பெண் குடும்பத் தலைவிகள் பலர் இவ்வாறு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளனர் . கடந்த காலங்களில் வீட்டுப் பணிப் பெண்களாக வடக்கிலிருந்து குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வது மிகவும் அரிதாகவே காணப்பட்டது.

எனினும் தற்போது நிலைமை மாறியுள்ளதாகவும், குடும்ப சுமையை ஈடு செய்ய முடியாத பெண் குடும்பத் தலைவிகள் இவ்வாறு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

http://www.virakesari.lk/article/22947

  • தொடங்கியவர்

2 hours ago, நவீனன் said:

2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் வடக்கைச் சேர்ந்த பெண் குடும்பத் தலைவிகள் பலர் இவ்வாறு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளனர் . கடந்த காலங்களில் வீட்டுப் பணிப் பெண்களாக வடக்கிலிருந்து குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வது மிகவும் அரிதாகவே காணப்பட்டது.

ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து செயற்படும் சத்தியலிங்கம், டெனீஸ்வரன், தவராசா போன்றவர்கள் தான் இதற்க்கு பொறுப்பு சொல்ல கடமைப்பட்டுள்ளனர்.

10 hours ago, Rajesh said:

ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து செயற்படும் சத்தியலிங்கம், டெனீஸ்வரன், தவராசா போன்றவர்கள் தான் இதற்க்கு பொறுப்பு சொல்ல கடமைப்பட்டுள்ளனர்.

ரிஷாடுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ? 

டெனீஸ்வரன், தவராசா இதுக்கு ஏன் பொறுப்பு சொல்ல வேண்டும்??

கிட்டதட்ட 10 லட்சம் தமிழ் மக்கள் இருக்கிறார்கள்  புலம் பெயர் நாடுகளில் இதற்கு அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும், ஊரில் கோவில் கட்டவும், மகளுக்கு சாமர்த்திய வீடு செய்யவும் தெரிந்த இவர்களுக்கு மக்களின் வறுமையை போக்க தெரியவில்லை 

லண்டனில் மாவீரருக்கு கல்லறை கட்ட காசு கொடுத்த முட்டாள்களுக்கு அதே மாவீரன் பிச்சை எடுப்பது கூட தெரியாத கேடு கெட்ட சமூகம் நம்முடையது

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்

 வடக்கு கிழக்கில் கணவ்னை இழந்த பெண்கள் அதிகம் அதில் கிழக்கிலே மிக அதிகம் இன்று வெளிநாட்டுக்கு போனால் அவர்கள்  இன்று கேவலமாக பார்க்கிறார்கள் ஊரில் தொழில் செய்ய முடியாது என்ற  அவர்களின்மன நிலை  தற்போது பல பெண்கள் சில முஸ்லீம் வர்த்தக நிலயங்களில் வேலை செய்கிறார்கள்  என்ன செய்வது முன்னாள் போராளிகளுக்கும் அதே நிலமை தான் 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Rajesh said:

ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து செயற்படும் சத்தியலிங்கம், டெனீஸ்வரன், தவராசா போன்றவர்கள் தான் இதற்க்கு பொறுப்பு சொல்ல கடமைப்பட்டுள்ளனர்.

தம்பி  என்னப்பா சம்பந்தம்  :rolleyes::rolleyes::rolleyes:

8 hours ago, Dash said:

ரிஷாடுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ? 

டெனீஸ்வரன், தவராசா இதுக்கு ஏன் பொறுப்பு சொல்ல வேண்டும்??

இவர்கள் முஸ்லிம்களுக்கு கள்ளக்காணிகளையும் ஏனைய வசதிகளையும் செய்து கொடுத்தபடி, தமிழ் பெண்களை மூளைச் சலவை மத்திய கிழக்குநாடுகளுக்கு ரவுடி ரிஷாட் அனுப்புவது ஏன்? இதை ரவுடி ரிஷாட் தான் செய்கிறானென்றால் தமிழ் பிரதிநிதிகளுக்கு புத்தி எங்கே போனது?

8 hours ago, Dash said:

கிட்டதட்ட 10 லட்சம் தமிழ் மக்கள் இருக்கிறார்கள்  புலம் பெயர் நாடுகளில் இதற்கு அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும், ஊரில் கோவில் கட்டவும், மகளுக்கு சாமர்த்திய வீடு செய்யவும் தெரிந்த இவர்களுக்கு மக்களின் வறுமையை போக்க தெரியவில்லை 

லண்டனில் மாவீரருக்கு கல்லறை கட்ட காசு கொடுத்த முட்டாள்களுக்கு அதே மாவீரன் பிச்சை எடுப்பது கூட தெரியாத கேடு கெட்ட சமூகம் நம்முடையது

மாவீரருக்கு கல்லறை கட்டுவது அவசியம் தான்! அதையும் மக்களுக்கு செய்யவேண்டிய உதவிகளையும் போட்டு குழப்பபுவது தேவையற்றது.

அதைப் போலவே தான்  ஊரில் கோவில் கட்டவும், மகளுக்கு சாமர்த்திய வீடு செய்யவதையும் போட்டு குழப்பி அரசியல் செய்யவது பொருத்தமற்றது.

குறிப்பாக கோவில்கள் (ஐயர்கள் இல்லை) பாதிக்கப்பட்ட மக்களின் மனவேதனைகளை குறைக்கும் மிகச்சிறந்த நம்பிக்கை மையமாக இருப்பதை உணர்ந்துகொள்வது நல்லது.

மற்றவர்களை சுரண்டாமல் தமது முயற்சியால் உழைப்பவர்கள் தமது விருப்பத்துக்கு செலவுசெய்வதை குறைசொல்லும் உரிமை யாருக்கும் இல்லை! அதேநேரம் தாயக நிலையை உணர்ந்த நல்ல மனிதர்கள் வீண்செலவுகளை சுருக்கி அதை தாயகத்தை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

15 hours ago, தனி ஒருவன் said:

தம்பி  என்னப்பா சம்பந்தம்  :rolleyes::rolleyes::rolleyes:

தனியொருவனாக வலம் வரும் அண்ணருக்கு தெரியாத சம்பந்தமா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தொம்சன் ராய்டர் செய்தி எந்த அளவிற்கு நம்பிக்கை வாய்ந்தது என்பதை அறிவிப்பதற்கு தகவல் தெரிந்தவர்கள் களத்தில் உள்ளனரா???

அல்லது

இலங்கையில் இருந்து நம்பி நம்பி செத்துப் போவதை விட, அடிமைகள் தான் என்று முற்றிலும் அறிந்த படியே அரபு நாட்டில் செத்துப் போவது மேலானதா???

5 minutes ago, மியாவ் said:

இலங்கையில் இருந்து நம்பி நம்பி செத்துப் போவதை விட, அடிமைகள் தான் என்று முற்றிலும் அறிந்த படியே அரபு நாட்டில் செத்துப் போவது மேலானதா???

மாதக்கணக்கில் குளிக்காமல் நாற்றமெடுக்கும் அரபுநாடுகள் நரகத்திலும் மோசமான இடம்! எனவே அவர்கள் தாய் மண்ணில் இருப்பது அவர்களுக்கு கோடி புண்ணியம்.

10 hours ago, போல் said:

இவர்கள் முஸ்லிம்களுக்கு கள்ளக்காணிகளையும் ஏனைய வசதிகளையும் செய்து கொடுத்தபடி, தமிழ் பெண்களை மூளைச் சலவை மத்திய கிழக்குநாடுகளுக்கு ரவுடி ரிஷாட் அனுப்புவது ஏன்? இதை ரவுடி ரிஷாட் தான் செய்கிறானென்றால் தமிழ் பிரதிநிதிகளுக்கு புத்தி எங்கே போனது?

ஆனால் ரிஷாட் செய்வதை தடுக்க  நாம் என்ன செய்தோம் ?

வறிய மக்களுக்கு உதவ எம்மிடம் ஏதாவது பொறிமுறை உண்டா?

புலத்தி இருக்கும் நாம் மக்களுக்கு உதவி செய்தால்  அவர்கள் ஏன் மத்திய கிழக்குக்கு செல்ல போகிறார்கள் ?

9 hours ago, போல் said:

மாவீரருக்கு கல்லறை கட்டுவது அவசியம் தான்! அதையும் மக்களுக்கு செய்யவேண்டிய உதவிகளையும் போட்டு குழப்பபுவது தேவையற்றது.

அதைப் போலவே தான்  ஊரில் கோவில் கட்டவும், மகளுக்கு சாமர்த்திய வீடு செய்யவதையும் போட்டு குழப்பி அரசியல் செய்யவது பொருத்தமற்றது.

குறிப்பாக கோவில்கள் (ஐயர்கள் இல்லை) பாதிக்கப்பட்ட மக்களின் மனவேதனைகளை குறைக்கும் மிகச்சிறந்த நம்பிக்கை மையமாக இருப்பதை உணர்ந்துகொள்வது நல்லது.

மற்றவர்களை சுரண்டாமல் தமது முயற்சியால் உழைப்பவர்கள் தமது விருப்பத்துக்கு செலவுசெய்வதை குறைசொல்லும் உரிமை யாருக்கும் இல்லை! அதேநேரம் தாயக நிலையை உணர்ந்த நல்ல மனிதர்கள் வீண்செலவுகளை சுருக்கி அதை தாயகத்தை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

மாவீரருக்கு கல்லறை கட்டுபவர்கள் ஏன் உயிருடன் இருக்கும் போராளிகளை கவனிப்பதில்லை??

ஒருவர் குடுமத்துடன் மதம் மாறி விட்டார் !!

இன்னுமொருவர் கிளிநொச்சியில் பிச்சை எடுக்கிறார் !!

இன்னுமொருவர் நைனாதீவில் பிச்சை எடுக்கிறார் !! 

இங்கே கல்லறை கட்ட காசு!!!!!

அதைவிட சாதாரண மக்களை கூட காபாற்ற எம்மிடம் பொறிமுறை இல்லையே!!!

ரிஷாடை வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியது கூட தமிழ் மக்களே !!!

ஏன் எந்த தமிழ் அமைப்பும் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Rajesh said:

தனியொருவனாக வலம் வரும் அண்ணருக்கு தெரியாத சம்பந்தமா?

உங்களுக்கு தெரிந்ததை சொன்னால் நான் இன்னும் அறிந்து கொள்வேன் என்ற  நினைப்புத்தான் பாருங்க:unsure:

6 hours ago, மியாவ் said:

இலங்கையில் இருந்து நம்பி நம்பி செத்துப் போவதை விட, அடிமைகள் தான் என்று முற்றிலும் அறிந்த படியே அரபு நாட்டில் செத்துப் போவது மேலானதா???

என்ன செய்வது பல நாள் பட்டினி கிடந்தவர்களுக்கே வயிறின்  வலியையையும் அது கொடுக்கும்  பிச்சைகேட்கும் தன்மையையும்  பிழைக்க செல்கிறார்கள்  என்ன செய்வது  இங்கே இருந்தும் கஸ்ரம் அங்கே இருந்தும் கஸ்ரம் :rolleyes:

6 hours ago, Rajesh said:

மாதக்கணக்கில் குளிக்காமல் நாற்றமெடுக்கும் அரபுநாடுகள் நரகத்திலும் மோசமான இடம்! எனவே அவர்கள் தாய் மண்ணில் இருப்பது அவர்களுக்கு கோடி புண்ணியம்.

நீங்கள் எந்த நாட்டை சொல்கிறீர்கள்  என தெரியவில்லை அந்த நாற்றமெடுக்கும் அரபு நாட்டிலிருந்து  இலங்கைக்கு வரும் அந்நிய நாட்டு பணம் எவ்வளவு என்று சொல்ல , முடியுமா மத்திய கிழக்கிலிருந்து அதிகளவு  பணம் வரும் மாவட்டம் இலங்கையில் எது என்று சொல்லுங்கள் பார்போம்  

இன்று மத்திய கிழக்கின் வளர்ச்சிய தாங்கி கொள்ள முடியாத நாடுகள்  அதன் மீது தடையும் யுத்தமும் கொண்டு வர எத்தனித்தாலும் அவனிடம் இருக்கும் எண்ணெய் வளத்திற்கு அடிமையான நாடுகளே அதிகள்  ஒருக்கா கட்டார், அல்லது துபாய்  போய் வந்தால் நரகமா அல்லது நகரமா  என்று தெரியும் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 8/10/2017 at 10:52 PM, போல் said:

மாவீரருக்கு கல்லறை கட்டுவது அவசியம் தான்! அதையும் மக்களுக்கு செய்யவேண்டிய உதவிகளையும் போட்டு குழப்பபுவது தேவையற்றது.

அதைப் போலவே தான்  ஊரில் கோவில் கட்டவும், மகளுக்கு சாமர்த்திய வீடு செய்யவதையும் போட்டு குழப்பி அரசியல் செய்யவது பொருத்தமற்றது.

குறிப்பாக கோவில்கள் (ஐயர்கள் இல்லை) பாதிக்கப்பட்ட மக்களின் மனவேதனைகளை குறைக்கும் மிகச்சிறந்த நம்பிக்கை மையமாக இருப்பதை உணர்ந்துகொள்வது நல்லது.

மற்றவர்களை சுரண்டாமல் தமது முயற்சியால் உழைப்பவர்கள் தமது விருப்பத்துக்கு செலவுசெய்வதை குறைசொல்லும் உரிமை யாருக்கும் இல்லை! அதேநேரம் தாயக நிலையை உணர்ந்த நல்ல மனிதர்கள் வீண்செலவுகளை சுருக்கி அதை தாயகத்தை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

உங்களுக்கு நம்பிக்கை இருப்பதுடன் உங்கள் அரசியலில் இந்த போர் விதவைகள் பற்றிய அக்கறை முடிவுக்கு வருகிறது. போரை மீண்டும் விரும்பும் உங்கள் அரசியலுக்கு இந்த விதவைகள் பற்றிய செய்திகளே தடையாக இருப்பது தெரிகிறது. நீங்கள் நடத்தும் கல்லறை அரசியலுக்கு முள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

12 minutes ago, Jude said:

ஈழத்தில் வாழ்ந்துகொண்டு தமிழர் உரிமைகளை வெல்லப் பல்வேறுவடிவங்களில் போராடும் தமிழர்களும் புலம்பெயர்ந்தும் தாய்மண் மீதான பற்றால் பல்வேறுவடிவங்களில் தமிழர் உரிமைகளை வெல்லப் போராடும் தமிழர்களும்  தப்பியோடி விசர்க் கேள்விகள் கேட்கும் கோழைகள், எட்டப்பர்கள், சகுனிகள், கைக்கூலிகள் போன்ற குணமுடையவர்களுக்காக போராடுபவர்கள் இல்லை, போராட்டங்களையும் கைவிடப்போவதில்லை.

தமிழர் போராட்டம் முடிந்துவிட்டது என்ற அதே கனவில் தான் ஈழத்தமிழரை அழித்த, திட்டமிட்டு அழிக்க நினைக்கும் பயங்கரவாதிகளும் உள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 10/08/2017 at 7:39 PM, Dash said:

ரிஷாடுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ? 

டெனீஸ்வரன், தவராசா இதுக்கு ஏன் பொறுப்பு சொல்ல வேண்டும்??

கிட்டதட்ட 10 லட்சம் தமிழ் மக்கள் இருக்கிறார்கள்  புலம் பெயர் நாடுகளில் இதற்கு அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும், ஊரில் கோவில் கட்டவும், மகளுக்கு சாமர்த்திய வீடு செய்யவும் தெரிந்த இவர்களுக்கு மக்களின் வறுமையை போக்க தெரியவில்லை 

லண்டனில் மாவீரருக்கு கல்லறை கட்ட காசு கொடுத்த முட்டாள்களுக்கு அதே மாவீரன் பிச்சை எடுப்பது கூட தெரியாத கேடு கெட்ட சமூகம் நம்முடையது

இதோ  கேள்வி  என்னிடமுமுண்டு

வடக்கு கிழக்கு மக்களின்  பிரதிநிதிகள்

மற்றும் அதிகாரிகள் இதுவரை  இவை  சம்பந்தமாக எடுத்த முயற்சிகள்  என்ன?

ஒரு கட்டமைப்பை

ஒரு ஒருங்கிணைப்பை ஏன்  செய்யவில்லை?

செய்யமுடியவில்லை?

எதுக்கெடுத்தாலும் மாவீரருக்கு கோயில் கட்டுகிறார்கள் என ஒரு பகுதியையே  குற்றம்   சாட்டியபடி

நாம் தூங்குவதேன்??

Edited by விசுகு

2 minutes ago, விசுகு said:

எதுக்கெடுத்தாலும் மாவீரருக்கு கோயில் கட்டுகிறார்கள் என ஒரு பகுதியையே  குற்றம்   சாட்டியபடிநாம் தூங்குவதேன்??

நல்ல கேள்வி? பதில் கிடைக்குமா தெரியவில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.