Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாப்பு வைத்த ஆப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு வைத்த ஆப்பு

அண்மை காலமாக பரபரப்பாக பேசபட்டும் பலராலும் எதிர் பார்க்கபட்டு வருவதுமான செல்வன் மெகா சீரியல் தொடரின் இயக்குனர் மாப்பு என்றழைக்கப்படும் மாப்பிள்ளை பலகோடிகளுடன் மாயம்...........

கதா நாயக கனவில் மிதந்த ஆதி அதிர்ச்சி...............................

இந்த தொடரிற்காய் பலகோடி முதலீடுசெய்த பிரபல குதிரைமார்க் ஜட்டிகம்பெனி தொழிலதிபர் தலைக்கு நெற்றியில் பட்டை நாமம்............

இன்னும் வெளிவராத பல மர்மங்களின் முடிச்சுகளை அவிழ்க்கிறார் பிரபல முடிச்சவுக்கி மற்றும் இராணுவ அரசியல் புலனாய்வாளர் உங்கள் ஆட்டுப்பால் அப்பாஸ்

வணக்கம் இரசிகபெருமக்களே அடியார்களே அண்மை காலமாக பரபரப்பாக பேசபட்டுவந்த செல்வன் மெகாசீரியல் நாடகதொடரின் இயக்குனர் திரு மாப்பிள்ளை அவர்கள் பலகோடிகளுடன் கம்பிநீட்டிவிட்டார்.அவரை கம்பிஎண்ணவைப்பதற்காக காவல் துறையினர் இதற்காக பல வலைகளை கடற்தொழிலாளர்களிடம் கடன்பெற்று வலைவீசி தேடிவருகின்றனர். இந்த தொடரில் கதா நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த பிரபல காலிவீடு ( Hoollywood )நடிகர் ஆதி அவர்கள் hoollywood ல் டாம் குரூசுடன் நடித்து கொண்டிருந்த சமயம் இந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் மயங்கி வீழ்து உடனடியாக சிக்காக்கோவின் பெக்கோ மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருக்கிறார்.இது பற்றி வெள்ளை மாளிகையின் பேச்சாளரான PULUNGAL RICE அம்மையார் கருத்து தெரிவிக்கையில் பல சவால்களை தாவி தாண்டி மக்கள் மனங்களை கவர்ந்த சிறந்த நடிகர் ஆதி என்றும் அவர் மயங்கிய செய்தி கேட்டு தான் கவலையடைந்ததாகவும் அதுமட்டுமல்ல அந்த செய்தி கேட்டு இந்த உலகமே அதிர்ந்து போனதாகவும் அந்த அதிர்வின் அளவு நாசா ஆராச்சி கூடத்தில் 4.1 புள்ளியளவில் பதிவாகியுள்ளது என்றும். ஆனால் இந்த பூமியதிர்வு எற்பட்டது ஆதியின் மயக்க செய்தியாலா அல்லது வேறு காரணங்களாலா?? என்று 50 பேர் கொண்ட நாசா விஞ்ஞானிகள் குழு ஆரய்ந்து வருவதாகவும் அவர்களின் முடிவுகள் இறுதியில் தன்னால் குலுக்கல் முறையில் தெரிவுசெய்யபட்டு இறுதி முடிவு வெளியிடப்படும் என்றார்.

அடுத்ததாக இந்த தொடரிற்கு பல நிறுவனங்கள் அனுசரணை வழங்கியிருந்தாலும் இதில் பெரியளவு முதலீட்டினை குதிரை மார்க் ஜட்டிகள் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் பிரபல தொழிலதிபர் தலை என்பவரே பல மில்லியன் ரூபாய்களை முதலீடு செய்திருந்தார்.அவர் பீ. பீ .பீ. செய்தி ஸ்தாபனத்திற்கு வழங்கிய செவ்வியில் ஜட்டிவித்து கோடீஸ்வன் ஆனவன் இன்று கோவணத்திற்கு வழியின்றி நிற்கிறேன் என்று இரண்டே வரியில் தனது சோகத்தை சொன்னார்.இதைவிட பல திடுக்கிடும் தகவல்களும் மாப்பிள்ளையை பற்றி வெளிவர தொடங்கியுள்ளது. செல்வன் தொடரின் கதையை சர்வதேச புலநாய் நிறுவனமான டண் நிறுவனம் அதன் கதையை அதன் படபிடிப்புகள் தொடங்கு முன்னரே தொடராக வெளியிட தொடங்கியிருந்தார்.இதன் கதையையும் திரு மாப்பு அவர்களே பல மில்லியன் ரூபாய்களிற்கு இரகசியமாக வெளிநாடொன்றில் வைத்து டண்ணிற்கு விற்றுள்ளார்.அந்த பணத்தைசுவிசில் வசிக்கின்ற டண்ணின் மைத்துனர் சின்னா என்பவர் முலமாக சுவிஸ் வங்கியில் வைப்பில் இட்டுள்ளதாகவும்.தெரிய வந்துள்ளது. இவரை சர்வதேச போலீசார் தேடிவருகின்ற வேளை இவர் சந்திரனில் ஒரு பெரிய பங்களா கட்டியுள்ளதாகவும் அங்கு தப்பி செல்லலாம் என எதிர் பார்ப்பதாலும் விண்வெளியில் பறக்கும் அனைத்து விமானங்களும் கண்காணிக்கபடுவதுடன்.சந்திர கிரகணத்தை எற்படுத்தி விட்டால் சந்திரனை பாம்பு விழுங்கி விடும் எனவே அதன் பின்னர் மாப்பிள்ளையால் அங்கு தப்பி செல்லமுடியாது எனவே பல மலையாள மந்திரவாதிகளும் இணைந்து சந்திர கிரகணத்தை வரவழைக்க பெரிய யாகம் ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளனர். இது தொடர் நாடக இயக்குனர் பற்றிய புலனாய்வு என்பதால் இதுவும் தொடரும்

அதுவரை மீண்டும் சந்திப்போம் உங்கள் ஆட்டுப்பால் அப்பாஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது ஆதி நலப்பெற கூட்டுபிரார்தனை செய்ய அழைக்கிறோம். :P :P :P

மாப்பிள்ளை இப்படி பண்ணிடியேடா பாவி.....

என்ட வில்லன் கனவில அசிட்டை ஊத்திட்டியே......

நான் வயிறெரிஞ்சு சொல்லுறன்.......

நீ நல்லாவே............இரு!!!!

:rolleyes:

காவல் துறை வீசிய வலையில், செல்வன் தொடரை 1000 எபிசோட் வரை இழுப்பதற்குப் பாவிக்க தயாராக வைத்திருந்த றப்பர் மாட்டியுள்ளது. ஆகவே டண் நிறுவனத்தினால் வெளியிடப்படும் தொடரை தொடர்ந்து இழுக்க முடியாது என்று தெரிய வருகிறது. மேலும் இந்த றப்பரை காவல்துறையினர் சன் ரீவிக்கு இனாமாக வழங்கவிருக்கின்றனர். இதனால் சன் ரீவியில் ஏற்கனவே இழுபட்டுக்கொண்டிருக்கும் தொடர்கள் முடிவின்றி தொய்ந்துபோக அதிக வாய்ப்புகள் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இதுல ஏதோ பயங்கர மர்மம் இருக்கு.தீர விசாரித்து உத்தியோக பூர்வ அறிக்கை வரும் வரை சம்மபந்தப்பட்ட

அனைவரும் பொறுமை காக்கவும். :angry: :rolleyes::lol:

அன்பான, எம் உயிரிலும் மேலான செல்வன்மெகா சீரியல் இரசிகப் பெருமக்களுக்கு வணக்கம்!

சில விசமிகள் செல்வன் சீரியலைப் பற்றியும் யாழ் சினிஆர்ட்ஸ் பற்றியும் பல விசமத்தனமான பொய்ப்பிரச்சாரங்களை சர்வதேச அளவில் கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். சீரியலில் யார் கதாநாயகன், யார் கதாநாயகி என்பதில் சில தனிப்பட்ட நபர்களிற்கிடையே ஏற்பட்ட கருத்து மோதலே தற்பொழுது விசமத்தனமான பொய்ப்பிரச்சாரங்களாக உருவெடுத்துள்ளது. இப்பிரச்சாரங்களில் எதுவித உண்மையும் இல்லை என்பதை எம் இரசிகர்களிற்கு இத்தருணத்தில் தாழ்மையுடன் அறியத்தருகின்றோம். இரசிகர்களை அமைதியுடன் பொறுமை காக்கும்படியும் கேட்டுக்கொள்கின்றோம்.

செல்வன் சீரியலின் எபிசோடுகள் ஒன்றன் பின் ஒன்றாக மிகவிரைவில் யாழ்சினி ஆர்ட்ஸ்சினால் வெளிவிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

நன்றி!

அன்புடன்,

தங்கள் உண்மையுள்ள,

வைத்தியர் மாப்பிளை

அன்பான, எம் உயிரிலும் மேலான செல்வன்மெகா சீரியல் இரசிகப் பெருமக்களுக்கு வணக்கம்!

சில விசமிகள் செல்வன் சீரியலைப் பற்றியும் யாழ் சினிஆர்ட்ஸ் பற்றியும் பல விசமத்தனமான பொய்ப்பிரச்சாரங்களை சர்வதேச அளவில் கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். சீரியலில் யார் கதாநாயகன், யார் கதாநாயகி என்பதில் சில தனிப்பட்ட நபர்களிற்கிடையே ஏற்பட்ட கருத்து மோதலே தற்பொழுது விசமத்தனமான பொய்ப்பிரச்சாரங்களாக உருவெடுத்துள்ளது. இப்பிரச்சாரங்களில் எதுவித உண்மையும் இல்லை என்பதை எம் இரசிகர்களிற்கு இத்தருணத்தில் தாழ்மையுடன் அறியத்தருகின்றோம். இரசிகர்களை அமைதியுடன் பொறுமை காக்கும்படியும் கேட்டுக்கொள்கின்றோம்.

செல்வன் சீரியலின் எபிசோடுகள் ஒன்றன் பின் ஒன்றாக மிகவிரைவில் யாழ்சினி ஆர்ட்ஸ்சினால் வெளிவிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

நன்றி!

அன்புடன்,

தங்கள் உண்மையுள்ள,

வைத்தியர் மாப்பிளை

நீங்க மருத்துவரா கலாநிதியா அதைசொல்லுங்கப்பா முதலில்

நீங்க மருத்துவரா கலாநிதியா அதைசொல்லுங்கப்பா முதலில்

எனக்கு டாக்டர் என்ற கெளரவப் பட்டம் இரசிகர்களால் தரப்பட்டுள்ளது. டாக்டரை தமிழில் வைத்தியர் என்றுதானே கூறமுடியும்? எனவேதான் வைத்தியர் மாப்பிளை என எழுதினேன்! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வெளினாடுகளில் படம்பிடிக்கப்போவதாகக் கேள்விப்பட்டு நானும் சிறுவேடமாவது நடிக்க வாய்ப்புக் கேட்டு இலவசமாக வெளினாடுகளைப் பார்க்கலாம் என்றால் அதற்கும் ஆப்புவா

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டுப்பாலின் கட்டுரையைப் படிக்கின்றபோது தினமலரில் ஏதோ, தாக்குதல் திட்டம் பற்றி வர்ணிப்பதைப் படிப்பது போல இருக்குப்பா :rolleyes:

மாப்புக்கு ஆப்பா இல்லை மாப்பு கொடுத்த ஆப்பா.........?

எனக்கு டாக்டர் என்ற கெளரவப் பட்டம் இரசிகர்களால் தரப்பட்டுள்ளது. டாக்டரை தமிழில் வைத்தியர் என்றுதானே கூறமுடியும்? எனவேதான் வைத்தியர் மாப்பிளை என எழுதினேன்! :lol:

கெளரவ பட்டங்கள் தமிழில் கலாநிதி என்றே அழைக்கப்படும் உ+ம் கலாநிதி அன்டன் பாலசிங்கம்.

ஆனால் வசூல்ராசா போல MBBS பட்டங்கள் விலை கொடுத்தும் / கொடுக்காமலும் வாங்கலாம். அப்படியானால் வைத்தியர் என்று போடுங்கள். ஆனால் ஜாக்கிரதை யாரேனும் மாத்துருபூதம் என்றெண்ணி தென்னாலியை கூட்டி வந்துவிடப் போகிறார்கள்!

ஒரு டாக்டர் பட்டத்தினுள் இவ்வளவு பிரச்சனைகளா? அப்படியானால் இனி வெறும் மாப்பிளை என்றே எனது பெயரை எழுதிக் கொள்கிறேன்! :lol::lol::lol:

இப்போ டாக்டர் மார்தான் பிரச்சினயே...........

கெளரவ பட்டங்கள் தமிழில் கலாநிதி என்றே அழைக்கப்படும் உ+ம் கலாநிதி அன்டன் பாலசிங்கம்.

ஆனால் வசூல்ராசா போல MBBS பட்டங்கள் விலை கொடுத்தும் / கொடுக்காமலும் வாங்கலாம். அப்படியானால் வைத்தியர் என்று போடுங்கள். ஆனால் ஜாக்கிரதை யாரேனும் மாத்துருபூதம் என்றெண்ணி தென்னாலியை கூட்டி வந்துவிடப் போகிறார்கள்!

சரியாண விளக்கத்தை சானக்கியன் கொடுத்திருந்தார் கலாநிதி.மாப்பிள்ளை என போட்டுக்கொள்ளுங்கள் :P

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு டாக்டர் பட்டத்தினுள் இவ்வளவு பிரச்சனைகளா? அப்படியானால் இனி வெறும் மாப்பிளை என்றே எனது பெயரை எழுதிக் கொள்கிறேன்! :lol::lol::lol:

என்ன மாப்பிள்ளைக்கு ஒன்றும் இல்லையோ வெறும் மாப்பிள்ளை என்று

போடவேண்டாம்...

:P :P

வேலைவெட்டி இல்லத மாப்பிள்ளை என்று போடலாம்

  • கருத்துக்கள உறவுகள்

வேலைவெட்டி இல்லத மாப்பிள்ளை என்று போடலாம்

அதுவும் நல்ல யோசனை தான்

:lol:

:lol:

அதுவும் நல்ல யோசனை தான்

:lol:

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

உங்கடகிண்டலை எல்லாம் நிறுத்துங்கப்பா எண்டமுதலும் போய் வட்டியும் போச்செண்டிருக்கிறன்

எதுக்கும் வடிவேலுவக் கொண்டு புலநாய்வு செய்யவேணும் மாப்பு எங்கேஎண்டு

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் நல்ல யோசனை தான்

:lol:

கவனம் யாராவது ம**ல வந்து வாசிக்க அது வேற மாதிரி விழங்கப்போகுது :lol:

அன்பான....அன்பு உலக தமிழ் நெஞ்சங்களிற்கு வணக்கம்...

இங்கே...இந்த தொடர் ஊடாக பல கோடிகளை சம்பhதிக்க முனைந்த

இந்த மோசடி விவகாரம் வெளியானதும்...பல..தொலகாட்சி நிறுவனங்கள்..இவர்களை சுத்தி வளைத்து தமது

முற்கட்டன பணத்தை தரும்படி கேட்டதை அடுத்து... அவர்..ஒரு திடிர் அறிக்கை உன்றை விட்டுள்ளார்..இது பொய்யான தகவல் எனவும்..

இதனை யாரும் நம்ப வேண்டாம்..என்று..இது திட்டமிட்ட..சில நபர்களின்..விசம பிரச்சாரம் எனவும்..

மறுப்பறிக்கை விட்டுள்ளார்...இதனை அடுத்து..மௌனம் காத்த ஒளி பரப்பு நிலயங்கள்..முதற் பேசிய படி..தமது மேலதிக கட்டணத்தை..செலுத்தியுள்ளனர்..

பகைமைய மறந்துஉடனடியாக கூட்டு சோந்து விரைந்து மந்திர அலோசனை நடத்திய மாப்புவும்..ஆதியும்...நெடுக்கா

ல போவனின் உதவியுடன்...குறுக்கால போவனின் வீட்டீல் தஞ்சம் அடந்துள்ளனர்..

இதனை உளவு தகல்வல் மூலம் அறிந்த காவல் துறை...அவர்களுடைய..மேலதிக திட்டத்தை..அறியும் நோக்கோடு...

யாழில் தமது உளவு பிரிவினரை....உரு மறைத்த..அனுப்பியுள்ளதாக அறிய முடிகிறது...

தற்பொழுது..பிறிதொரு செய்தியும்..இகாட்டத் தீ போல பரவியுள்ளது...

மாப்பிள்ளை என்றழைக்கப்படும் மாப்பு..வடிவேலுவின்..தங்கையை திருமணம்..செய்து..ஏமாற்றி..பலக

Edited by vanni mainthan

வேலைவெட்டி இல்லத மாப்பிள்ளை என்று போடலாம்

அதுவும் நல்ல யோசனை தான் :D

:D:rolleyes::rolleyes::D:D:D:):):o

அப்படியானால் கலாநிதி மாப்பிளை என்றே எனது பெயரை வைத்துக் கொள்கின்றேன்! எனது இரசிகர்கள் வேண்டுமானால் என்னை சீரியல் சிங்கன் மாப்பிளை என அழைக்கலாம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியானால் கலாநிதி மாப்பிளை என்றே எனது பெயரை வைத்துக் கொள்கின்றேன்! எனது இரசிகர்கள் வேண்டுமானால் என்னை சீரியல் சிங்கன் மாப்பிளை என அழைக்கலாம்!

மாப்பு இது கொஞ்சம் ஓவராய் இல்லை?????????????

மாப்பு இது கொஞ்சம் ஓவராய் இல்லை?????????????

உண்டியல் திருடன் ஜெயதேவனே தனது பெயருக்கு முன்னால் டாக்டர் என்று போடும் போது நான் எனது பெயருக்கு முன்னால் கலாநிதி என்று போடுவதில் என்ன தவறு உள்ளது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.