Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கில் முஸ்லீம்களை கட்டுப்படுத்த வேண்டும் : சுமனரத்ன தேரர்

Featured Replies

கிழக்கில் முஸ்லீம்களை கட்டுப்படுத்த வேண்டும் : சுமனரத்ன தேரர்

 

கிழக்கில் முஸ்லீம்களை கட்டுப்படுத்த வேண்டும் : சுமனரத்ன தேரர்

தமிழ் மக்களின் உறுதிப்பத்திரமுள்ள காணிகளுக்குள் அத்துமீறி முஸ்லீம் குடியேற்றங்களை அமைக்கும் முயற்சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் துணை போவதாக மங்களராமய அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் காணி அபகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் தலையிடும் போது அதனை இனவாதமாகவும் மதவாதமாகவும் சித்திரிக்க முயற்சி செய்யப்படுவதாக அவர் சாடியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அம்பிட்டிய சுமனரத்ன தேரர்

 

இதுவரை கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டால் தமிழ் மக்களை போன்று சிங்கள மக்களின் காணிகளும் பாரிய அளவில் கொள்ளை அடிக்கப்படுகின்றன.1980 ஆம் ஆண்டு வரை இருந்த சொத்துக்கள் மற்றும் காணிகள் என அனைத்தும் கொள்ளை அடிக்கப்படுகின்றன.இதனை தடுப்பதற்கான தேவை எழுந்துள்ளது.

வாழைச் சேனை மீராவோடை பகுதியிலுள்ள தமிழ் மக்களின் கிராமத்தில் விசேடமாக மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டு வீடுகளைப் போன்று அந்த கிராமமக்களின் சுவர்ணபூமி உறுதிப்பத்திரமுள்ள காணிகளுக்குள் அநாவசியமாக சில முஸ்லீம் அமைப்புக்கள் உள்நுழைந்து அந்த கிராம மக்களுக்கு விளைவிக்கும் இடையூறுகள் தொடர்பில் கடந்த மாதம் தெரியப்படுத்துவதற்கு முயற்சித்தேன்.

அன்று தொடக்கம் இன்று வரை மாவட்ட செயலாளர் அதேபோன்று கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், வாழைச் சேனை பிரதேச செயலாளர் திருகோணமலை காணி ஆணையாளர் என அனைத்து அதிகாரிகளையும் இந்த மாதத்திற்குள் நான்கு தடவைகள் நான் சந்தித்துள்ளேன்.எனினும் சாதாரண பதில் கூட அந்த பகுதி மக்களுக்கு வழங்கப்படவில்லை.

அரசியல் தலைவர்களின் விரும்பங்களை நிறைவேற்றுவது மாத்திரமே இங்கு நடைபெறுகின்றது.இது கீழ்மட்டத்திலுள்ள அப்பாவி மக்கள் உருவாக்கும் பிரச்சினை அல்ல.இது அரசியல் தலைவர்களால் உருவாக்கப்படும் பிரச்சினை என்பது மிகத் தெளிவாக எமக்கு தெரிகின்றது.

கல்லடியில் நீர்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான பாரிய இடம் கடந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் வீடுகளை நிர்மாணிப்பதற்கென குறிப்பிட்ட ஏக்கரை ஒதுக்குவதென அமைச்சர் ஹிஸ்புல்லாவினால் உறுதிப்படுத்தப்படுகின்றது.அங்கு இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அனுமதியை கொடுக்கின்றனர்.

ஏனைய அரச அதிகாரிகளும் அனுமதியை கொடுக்கின்றனர்.இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படும் பகுதி தமிழர்கள் வசிக்கும் பிரதேசம்.அந்த பகுதியில் முஸ்லீம் மக்களுக்கான கிராமமொன்றை அமைக்கும் இந்த பிரச்சினை குறித்து அரசியல் தரப்பிற்கும் அரச நிர்வாக தரப்பிற்கும் கூறுவதற்கும் முடியாதபட்சத்தில் பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுத்தருமாறு எம்மிடமே வருகின்றனர்.

இவ்வாறான விடயங்களில் இவ்வாறான பிரச்சினைகளில் தலையிடும் போது நாங்கள் முன்னிலையாகும் போது இது இனவாதமாகவும் மதவாதமாகவும் சித்திரிக்க முயற்சிக்கின்றனர்.இதில் இனவாதம் இல்லை மதவாதம் இல்லை என்பதை கிழக்கில் உள்ளிட்ட நாடு பூராகவும் உலகத்திலும் உள்ள தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்கு கூறவிரும்புகின்றேன்.

அரச தலைவர்களும் அரச அதிகாரிகளும் ஒன்றிணைந்து 24 மணித்தியாலத்திற்கு தீர்வு காணக் கூடிய பிரச்சினை.இதற்கு அப்பாவித் தமிழர்கள் வந்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் சத்தமிடுவதற்கும் கோரிக்கை விடுப்பதற்குமான பிரச்சினை அல்ல.அவர்களுக்கு சுவர்ணபூமி உறுதிப்பத்திரம் கைகளில் உள்ளது.

அத்துடன் இந்த உறுதிப்பத்திரத்தை அடிப்படையாக கொண்டு பிரதேச செயலாளர் வாழைச் சேனை பொலிஸ்சில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.எனினும் எந்தவொரு முறைப்பாடும் விசாரணை செய்யப்படவில்லை.அப்பாவி மக்களும் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.எந்தவொரு முறைப்பாடும் விசாரணை செய்யப்படவில்லை.

அவ்வாறாயினும் இதற்கு யார் பொறுப்பு கூற வேண்டும்.?பொறுப்புகூற வேண்டியவர்கள் முன்னிலையாகி, ஏனைய அரச அதிகாரிகளும் முன்னிலையாகி இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்காவிடின், எதிர்வரும் வாரத்திற்குள் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ளவர்கள் மாத்திரமல்ல நாடுபூராவும் பரந்துவாழும் தமிழ் மக்களுடன் கலந்துரையாட திட்டமிட்டுள்ளோம்.

இந்த மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து எந்தவொரு தலைவர்களும் இல்லாத காரணத்தால் தமிழ் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.தலைவர்கள் இல்லாத காரணத்தால் எங்களிடம் வந்து அவர்கள் கூறுகின்ற போது தமிழ் மக்களுடன் இணைந்து செயற்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது.தமிழ் மக்கள் 30 வருடகால யுத்தத்தின் பிடியில் இருந்த மக்கள்.

வடக்கு கிழக்கில் உலகில் எந்தபகுதியில் வாழும் யார் வேண்டுமானாலும் இதனை ஆராய்ந்து பார்க்க முடியும்.வடக்கு கிழக்கில் சுயாட்சி ஈழம் கோரி போராடியவர்களே தமிழ் மக்கள்.எனினும் தற்போது தமிழ் மக்களுக்கு என்ன நடந்துள்ளது? அவர்களின் பிரச்சினை தெய்வத்திற்கு கூட கேட்காத ஒன்றாாக மாறியுள்ளது.அறுகம்பை தொடக்கம் பொத்துவில் தொடக்கம் மறுபுறம் மூதூர் தோப்பூர் வரை தொடர்ச்சியாக ஒரே நகரமாக மாற்றுவதற்கு முஸ்லீம் அமைப்புக்களுக்கு மாற்ற முடிந்துள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Muslims-should-be-restricted-in-the-East

  • கருத்துக்கள உறவுகள்

பிக்கருக்கு தெரிஞ்ச விசயம் கூட நம்ம டமிள் எம் பி களுக்கு  தெரியல  

இவர்கள் கை கட்டி வே(வெ) டிக்கை மட்டும் பார்த்து மேடைகளில் மட்டிம் வெடித்துப்பேசுவார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் முகப்பைத் திறந்தவுடன் "கிழக்கில் முஸ்லீம்களை கட்டுப்படுத்த வேண்டும் : சும..." என்று இருந்தது. அட நம்ம சுமந்திரன் தம்பியா என்று அதிசயித்துப் போனேன். உள்ளே போனதும் அந்தத் தங்கக் கம்பியைக் காணாமல் ஏமாந்தேன். Bildergebnis für ஏமாற்றம்

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Paanch said:

யாழ் முகப்பைத் திறந்தவுடன் "கிழக்கில் முஸ்லீம்களை கட்டுப்படுத்த வேண்டும் : சும..." என்று இருந்தது. அட நம்ம சுமந்திரன் தம்பியா என்று அதிசயித்துப் போனேன். உள்ளே போனதும் அந்தத் தங்கக் கம்பியைக் காணாமல் ஏமாந்தேன். Bildergebnis für ஏமாற்றம்

 

2 hours ago, தனி ஒருவன் said:

பிக்கருக்கு தெரிஞ்ச விசயம் கூட நம்ம டமிள் எம் பி களுக்கு  தெரியல  

இவர்கள் கை கட்டி வே(வெ) டிக்கை மட்டும் பார்த்து மேடைகளில் மட்டிம் வெடித்துப்பேசுவார்கள் 

பேசாம தூசனப் பிக்கர் தான் எங்கண்ட தலைவர்... அவர் தான் எங்கண்ட சார்பா, அரசாங்கத்தோட பேசி உரிமைகளை வாங்கித் தரவேண்டும் என்று சொல்ல வேண்டியது தான்.

ஆள் நாலு தூசனத்தோட அலுவலை முடிச்சு தந்திருவார். :rolleyes:

மதகுருவான  வில்லியம் வில்பெர்ரைட் என்னும் வெள்ளையர் தான், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில், கறுப்பினத்தவர்களுக்காக, அவர்களது அடிமைத்தளை நீக்க போராடினார். வென்று கொடுத்தார்.

அதேபோல ஒரு சிங்கள தலைமைதான், தமிழருக்கு தேவை போல உள்ளது.

Edited by Nathamuni

10 hours ago, Nathamuni said:

அதேபோல ஒரு சிங்கள தலைமைதான், தமிழருக்கு தேவை போல உள்ளது.

உங்களுக்கு தேவை என்று சொல்லுங்கள்.  எங்களுக்கு தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Rajesh said:

உங்களுக்கு தேவை என்று சொல்லுங்கள்.  எங்களுக்கு தேவை இல்லை.

கேட்க நல்லா இருக்கு, ராஜேஷ் ஐயா....

பின்ன எதுக்கு தமிழர்கள் அவர் பின்னே சென்றார்கள்? 

முஸ்லீம் அழுத்தமா? தமிழ் தலைமையின் புறக்கணிப்பா?

யாராயிருந்தாலும் நெல்லில் இருந்து அரசி வந்தால் சரி என்பதே நம்ம கட்சி. 

பிக்கர்.... இந்த பிரச்சனையின் தார்மீகத்தை உணர்ந்து, இனவாதி என்னும் தனது பிம்பத்தையும் உடைக்க முனைகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

அதேபோல ஒரு சிங்கள தலைமைதான், தமிழருக்கு தேவை போல உள்ளது.

இது தவறு.... !

2 hours ago, Rajesh said:

உங்களுக்கு தேவை என்று சொல்லுங்கள்.  எங்களுக்கு தேவை இல்லை.

இதுவும் தவறு.... !!

 

புதிய குறள்:-  இன்னா சொய்தாரை அவர் நாண அவரை எங்கள் பின்னால் வரச் செய்துவிடு. :grin:

3 minutes ago, Paanch said:

இது தவறு.... !

இதுவும் தவறு.... !!

 

புதிய குறள்:-  இன்னா சொய்தாரை அவர் நாண அவரை எங்கள் பின்னால் வரச் செய்துவிடு. :grin:

ஹா.. ஹா..
இன்னும் புதிய குறள்கள் இருந்தால் எடுத்துவிடலாமே! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் சி பொ பே வின் ஒரு திட்டமோ தெரியவில்லை.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் காணி பிடிப்பது.. இன சுத்திகரிப்பில் ஈடுபடுவது உண்மை. அதேபோல் பிக்கு ஐயா தான் பிடிக்கிற காணிகள் பற்றியும் கதைக்கனும். அதுதான் புத்த தர்மமாகும். அதை மறைக்கக் கூடாது. 

எதுவோ.. ஆளையாள்.. தமிழ் மக்களின் காணியை பிடிக்கிறதை ஒப்புக் கொள்ளுறாங்கள். இதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்த சர்வதேச நாடுகள் தான் தமிழ் மக்களுக்குப் பதில் சொல்லனும். கேள்விகளை அவர்களை நோக்கித்தான் தொடுக்கனும். 

தமிழ் எம் பிக்கள்.. வெறும் டப்பாக்கள்.. அது பொக்கட் நிரப்பத்தான் சரி. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
On 8/13/2017 at 11:28 AM, தனி ஒருவன் said:

பிக்கருக்கு தெரிஞ்ச விசயம் கூட நம்ம டமிள் எம் பி களுக்கு  தெரியல  

இவர்கள் கை கட்டி வே(வெ) டிக்கை மட்டும் பார்த்து மேடைகளில் மட்டிம் வெடித்துப்பேசுவார்கள் 

ஆமியை வைத்து ஆக்கிரமிக்கும்போது பிக்கருக்கும் அது தெரியவில்லை 
இனி ஆமி ஆக்கிரமிப்பு முடியாது எனும்போது அவருக்கு ...
முஸ்லீம் ஆக்கிரமிப்பு புரிகிறது .

இப்போதும் எமது தலைவர்களுக்கு அது புரியவில்லை.
காரணம் கொழும்பில் மாடி வீடு போலீஸ் பாதுகாப்பு.

உள்ளூரில் எல்லாம் முடிய ....

கொழும்பில சிங்களவன் கை  வைக்கும்போதுதான் 
ஐயோ வடை போச்சே என்பது தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Maruthankerny said:

ஆமியை வைத்து ஆக்கிரமிக்கும்போது பிக்கருக்கும் அது தெரியவில்லை 
இனி ஆமி ஆக்கிரமிப்பு முடியாது எனும்போது அவருக்கு ...
முஸ்லீம் ஆக்கிரமிப்பு புரிகிறது .

இப்போதும் எமது தலைவர்களுக்கு அது புரியவில்லை.
காரணம் கொழும்பில் மாடி வீடு போலீஸ் பாதுகாப்பு.

உள்ளூரில் எல்லாம் முடிய ....

கொழும்பில சிங்களவன் கை  வைக்கும்போதுதான் 
ஐயோ வடை போச்சே என்பது தெரியும். 

20768228_260200287829782_331937704291849

23 hours ago, Nathamuni said:

கேட்க நல்லா இருக்கு, ராஜேஷ் ஐயா....

பின்ன எதுக்கு தமிழர்கள் அவர் பின்னே சென்றார்கள்? 

முஸ்லீம் அழுத்தமா? தமிழ் தலைமையின் புறக்கணிப்பா?

யாராயிருந்தாலும் நெல்லில் இருந்து அரசி வந்தால் சரி என்பதே நம்ம கட்சி. 

பிக்கர்.... இந்த பிரச்சனையின் தார்மீகத்தை உணர்ந்து, இனவாதி என்னும் தனது பிம்பத்தையும் உடைக்க முனைகிறார்.

20768160_260199857829825_199412335149369

20800248_260199544496523_672593518794729

மட்டக்களப்பு  காணி அபகரிப்புக்காக பிக்கு நடத்திய ஆர்ப்பாட்டம்  ஆனால் இதில் வாய்ச்சவடால் எந்த .......................பங்குபெற வில்லை  அவங்களுக்கே அக்கறை இல்லை ஒரு பிக்கு செய்யுது 

20768101_260200464496431_104411198233821

சிங்கள மக்களும் கலந்து கொண்டார்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.