Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய கடற்படை தளபதியின் நியமனம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.!

Featured Replies

புதிய கடற்­படை தள­ப­தியின் நிய­மனம் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்த­ல்.!

 

 

ஐக்­கிய அமெ­ரிக்­கா­விற்கு திரு­கோ­ண­ம­லையில் கடற்­படை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் என்­பது நீண்­டநாள் கன­வாக உள்­ளது. புதிய கடற்­படை தள­பதி டிரவிஸ் சின்­னை­யாவும் அந்­நாட்டில் பணி­யாற்­றி­யவர். 

எனவே அவர் கடற்­படை தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை இலங்கையின் தேசிய பாது­காப்­புக்கு விடுக்­கப்­பட்­டுள்ள அச்­சு­றுத்­த­லாகும் என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் பரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்­துள்ளார். தேசிய சுதந்­திர முன்­ன­ணி விடுத்­துள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­­து.

Image result for விமல் வீர­வன்ச  virakesari

அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளதாவ­து,

இலங்­கையின் புதிய கடற்­படை தள­ப­தி­யாக  டிரவிஸ் சின்­னையா நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இது நாட்டின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் என்­பதே தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் நிலைப்­பா­டாகும். 

புதிய கடற்­படை தள­ப­தியின் இனம் தொடர்பில் எமக்கு பிரச்­சி­னைகள் எதுவும் இல்லை. கடற்­படை என்று வரு­கின்ற போது அவரின் இனத்தை முக்­கி­ய­மாக பார்க்க வேண்­டிய அவ­சியம் இல்லை.

அதே­நேரம் மேற்­கு­றிப்­பிட்ட அதி­காரி யுத்­த­கா­லத்தின் பின்னர் கடற்­ப­டை­யி­லி­ருந்து சட்­ட­பூர்­வ­மா­கவே விலகிச் சென்­றவர்.  

அதன் பின்னர் ஐக்­கிய நாடு­களின் இலங்­கை­க்கான தூத­ர­கத்தில் 4 வரு­டங்கள் பாது­காப்பு ஆலோ­ச­க­ராக கட­மை­யாற்­றினார். அதனால் அவ­ருக்கு ஐக்­கிய நாடு­களின் அரச திணைக்­க­ளத்­தினால் தான் சம்­பளம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் 2015 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் இடம்­பெற்ற பின்னர் கடந்த அர­சாங்­கத்­தினால் அர­சியல் பழி­வாங்­க­லுக்கு ஆளா­ன­தாக கூறி  கடற்­ப­டை­யி­லி­ருந்து விலகிச் சென்­றி­ருந்த நிலை­யி­லேயே இவர் தற்­போது மீண்டும் கடற்­படை தள­ப­தி­யாக நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். 

அதேபோல் அவர் நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் மீண்டும் கடற்­ப­டைக்கு அழைக்­கப்­பட்ட போது கிழக்கு மாகா­ணத்­திற்­கான கட்­டளை தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார். அதி­லி­ருந்த தற்­போது கடற்­படை தள­ப­தியாக தர­மு­யர்த்­தப்­பட்­டுள்ளார். 

அவ்­வாறு பார்­க்கின்ற போது ஐக்­கிய நாடு­களின் இலங்­கை­க்கான தூத­ர­கத்தில் பாது­காப்பு ஆலோ­ச­க­ராக கட­மை­யாற்­றி­யவர் இலங்கை கடற்­ப­டையின் சட்­டத்­திற்கு முர­ணான வகையில் கடற்­ப­டையில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ளார்.

இவ்­வா­றான நிலையில் ஐக்­கிய அமெ­ரிக்­கா­வா­னது இலங்­கையின் கடல் பாது­காப்பின் மீதும் எப்­போதும் ஒரு கண் வைத்­தி­ருக்கும்.  அதேபோல் திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை அமெ­ரிக்­காவின் இரா­ணுவச் செயற்­பாட்டு தள­மாக்­கிக்­கொள்­வ­தற்­கான நீண்­ட­கால திட்­ட­மிடல் ஒன்றும் கூட காணப்­ப­டு­கின்­றது.

அவ்­வா­றி­ருக்­கின்ற போது  ஐக்கிய அமெரிக்காவின் இலங்கைக்கான தூதரகத்தில் பணியாற்றிய ஒருவர் இலங்கையின் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது என்று கூற முடியாது. அதனால் நாட்டுப்பற்றுள்ள மக்கள் இது குறித்து அவதானம் செலுத்த வேண்டியது அவசியமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/23428

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடா.....இவங்கள் என்னும் நித்திரையால எழும்பேல்லையா எண்டு யோசிச்சுக் கொண்டிருக்க....எழும்பிட்டாங்கள்!:10_wink:

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புங்கையூரன் said:

எங்கடா.....இவங்கள் என்னும் நித்திரையால எழும்பேல்லையா எண்டு யோசிச்சுக் கொண்டிருக்க....எழும்பிட்டாங்கள்!:10_wink:

நானும்.... இவங்கள் திருந்தி விட் டார்கள் என நினைத்தேன். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

நானும்.... இவங்கள் திருந்தி விட் டார்கள் என நினைத்தேன். :cool:

சூரியன் மேற்கில் உதித்தாலும் உதிக்கும் ஆனால்  உவங்கள் திருந்தமாட்டாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆலோசகராக கடமையாற்றியவர் தளபதியானால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாம். இந்தளவுக்கும் நாட்டில் போர்நடந்த சமயம் இவரின் (தளபதியின்) பங்களிப்பு இருந்தும் குமுறுகிறார் விமல் . அமெரிக்காவின் குடியுரிமை பெற்ற கோத்தா பாதுகாப்பு அமைச்சராகவும், பசில் முக்கிய பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும்போது வாயே திறக்கவில்லை, பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் இல்லை.  அவர்கள்  எப்படி   குதித்தாலும் நம்மவர் அவர்களுக்குத்தான் பாதுகாப்பு வழங்குவோம் என்று அடம் பிடிக்கினம். 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் எத்தனை வேடம் போட்டாலும் எதோ ஒரு வழியால் அது தெரிந்துவிடும்

6 hours ago, நவீனன் said:

ஐக்­கிய நாடு­களின் இலங்­கை­க்கான தூத­ர­கத்தில் 4 வரு­டங்கள் பாது­காப்பு ஆலோ­ச­க­ராக கட­மை­யாற்­றினார்.

 

7 hours ago, நவீனன் said:

ஐக்கிய அமெரிக்காவின் இலங்கைக்கான தூதரகத்தில் பணியாற்றிய ஒருவர்

வீரகேசரி அதன் தரத்தை இழந்து பலவருடங்களாகிவிட்டது.
இப்போது வீரகேசரி ஒரு மூன்றாம் தர பத்திரிகை என்று சொல்வார்கள்.
அதற்கு இதுதானோ காரணம்?

11 hours ago, Rajesh said:

வீரகேசரி அதன் தரத்தை இழந்து பலவருடங்களாகிவிட்டது.
இப்போது வீரகேசரி ஒரு மூன்றாம் தர பத்திரிகை என்று சொல்வார்கள்.
அதற்கு இதுதானோ காரணம்?

இலங்கையில் தரமான தமிழ் செய்தித்தாள் என்று எதுவுமே இல்லை.

வீரகேசரியின் தரம் மிகவும் மோசமாக உள்ள அதே நேரத்தில் உதயன், வலம்புரி, தமிழ்மிரர் பத்திரிகைகளின் தரம் அதைவிட மோசமாக உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, புங்கையூரன் said:

எங்கடா.....இவங்கள் என்னும் நித்திரையால எழும்பேல்லையா எண்டு யோசிச்சுக் கொண்டிருக்க....எழும்பிட்டாங்கள்!:10_wink:

 

20 hours ago, தமிழ் சிறி said:

நானும்.... இவங்கள் திருந்தி விட் டார்கள் என நினைத்தேன். :cool:

19 hours ago, putthan said:

சூரியன் மேற்கில் உதித்தாலும் உதிக்கும் ஆனால்  உவங்கள் திருந்தமாட்டாங்கள்

 

 இல்லை..... தெரியாமல் கேக்கிறன்......அவங்கள் இனி என்னத்தை வைச்சு திருந்துறது? அவங்கடை சுய குணமே அது எண்டேக்கை!!!!!!!

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

 

 இல்லை..... தெரியாமல் கேக்கிறன்......அவங்கள் இனி என்னத்தை வைச்சு திருந்துறது? அவங்கடை சுய குணமே அது எண்டேக்கை!!!!!!!

 

ஒரு நப்பாசை தான் திருந்திடுவாங்களோ என்று.....சில எங்கன்ட சனம் சொல்லினம் அவங்கள் நல்லம் எங்கன்டையள் தான் மோசம் என்று

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.