Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தியாகதீபம் திலீபனின் அகிம்சைப் போராட்டம் வித்தியாசமானது! - சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தியாகதீபம் திலீபனின் அகிம்சைப் போராட்டம் வித்தியாசமானது! - சம்பந்தன் Top News 
[Sunday 2017-09-24 18:00]
தியாக தீபம் திலீபனின் அகிம்சைப் போராட்டம் வித்தியாசமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம்  கல்முனையில் இன்று இடம்பெற்றது. இதில் தியாக தீபம் திலீபனுக்கு இரா.சம்பந்தன் சுடரேற்றி அஞ்சலி தெசலுத்தினார். இதனையடுத்து கருத்து தெரிவித்த அவர், “தமிழ் மக்களின் விடுதலைக்காக பல்வேறு அஹிம்சை போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் தியாகி திலீபனின் விடுதலைப் போராட்டம் வித்தியாசமானது.

இந்திய ஏகாதியபத்தியத்திற்கு எதிராக போராடி தியாகி திலீபன் தனது உயிரை மாய்த்துக்கொண்டவர் என்று இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

sampanthan-thileepan-240917-seithy%20(1).jpg

sampanthan-thileepan-240917-seithy%20(2).jpg

தியாகதீபம் திலீபனின் தியாகத்துக்கு பரிகாரம் தேட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அயராது உழைக்கின்றது – சம்பந்தன்!

sampanthan3000.jpg

தமிழ் மக்களின் மனதில் விடுதலைத் தீயை உருவாக்கிய தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் தியாகத்துக்கு இன்னும் பரிகாரம் கிடைக்கவில்லையெனவும், திலீபனின் தியாகத்துக்கான பரிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அயராது உழைக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று அம்பாறையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும்அவர் தெரிவிக்கையில், ‘தியாகங்கள் அளப்பரியன. அந்த வகையில், திலீபனின் தியாகம் உன்னதமானது.

தமிழர் தாயகத்தில் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கெதிராக 12 நாட்கள் உணவு, நீர் எதுவுமின்றி உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வீரச்சாவடைந்தவர் தியாகி லெப்.கேணல் திலீபன்.

30 வருடங்களின் பின்னர் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தியாகதீபம் திலீபனை நினைவுகூர்வதில் பெருமையடைகின்றோம். தியாகங்கள் மதிக்கப்படவேண்டும். அதேபோல் தியாக தீபம் திலீபனின் தியாகமும் மதிக்கப்படவேண்டுமெனத் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=79652

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஏகாதியபத்தியத்திற்கு எதிராக போராடி தியாகி திலீபன் தனது உயிரை மாய்த்துக்கொண்டவர் என்று இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
சம்பந்தர் இப்படி சொன்னால் அவரின் எஜமானர்கள் போபிக்கமாட்டார்களா ?

10 hours ago, vanangaamudi said:

இந்திய ஏகாதியபத்தியத்திற்கு எதிராக போராடி தியாகி திலீபன் தனது உயிரை மாய்த்துக்கொண்டவர் என்று இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
சம்பந்தர் இப்படி சொன்னால் அவரின் எஜமானர்கள் போபிக்கமாட்டார்களா ?

அவரும் ஒரு சாதாரண மனிதன் தானே, மனிதர்கள் பிழை விடுவது சகஜம் தானே.

தேர்தல் வருவதால் திருட்டுக் கும்பல்களுக்கு வேறு வழியில்லை!

ஹிந்திய கொலைகாரர்களின் அடிவருடிகளுக்கு திலீபனைப் பற்றி கதைக்கும் அருகதை துளியும் இல்லை.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திலீபனின் கனவை புதைத்து விட்டு அவன் படத்திற்கு பூ மாலையா?

000-1-300x199.pngஇலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் 24 ஆம் திகதி அதாவது தியாகி லெப்.கேணல் திலீபனின் 30 ஆவது வருடத்தின் 10 வது நினைவு நாள் அன்று அம்பாறை மாவட்டம் கல்முனையில் நடைபெற்றது.

அன்றைய தினம் தியாகதீபம் லெப்.கேணல் திலீபனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் பூ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

21 ஆம்திகதி ஒற்றையாட்சி, பௌத்தத்திற்கே முன்னுரிமை என இடைக்கால அறிக்கை அரசியலமைப்பு பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் இலங்கை பிரிக்கப்படாது மற்றும் பிரிக்கப்பட முடியாத ஒரே நாடாக இருத்தல் வேண்டும். பிரிந்து செல்லுதலை (நாட்டை துண்டாடுதல்) தடுக்கும் பொருட்டு அரசியலமைப்பில் விசேட திருத்தங்கள்
உள்ளடக்கப்படுதல் வேண்டும். என்ற பிரேரணையை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஏற்றுக்கொண்டதுடன் முன்மொழியவும் செய்தார்.

மேலும், ”புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படுகின்றது. அதில் ஒற்றையாட்சி என்ற சொற்பதம் நீக்கப்பட்டு ஒன்றுபட்ட இலங்கை என்ற சொற்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே மிகப் பெரிய விடயம் ” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பான அரசின் இடைக்கால அறிக்கை சிங்கள, பௌத்த மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துகின்றது.

இலங்கைக்குள் தமிழர்களின்தேசியத்தை குழிதோண்டிபுதைத்துவிட்ட சம்பந்தன் தியாகி திலீபனுக்கு மலர் மாலை அணிவித்தது காலத்தின் கொடுமை!

இன்று(26) தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் இடம்பெற்றது. அங்கு சம்பந்தரின் பரிவாரங்கள் தமது வாக்கு வங்கியை பாதுகாக்க அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

70 வருடங்களுக்கு மேலாக தமது உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் எமது இனத்தின் கோரிக்கைகளை வெறும் ஒன்றே கால் பக்கத்துக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடக்கியுள்ளது என குற்றஞ்சாட்டியுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் தொடர்ந்தும் போராட வேண்டிய நிர்ப்பந்தத்தை இந்த இடைக்கால அறிக்கை ஏற்படுத்தியுள்ளதால் இதனை ஒருபோதும் ஏற்கமுடியாது எனத் தெரிவித்துள்ளார். என்பதே நிதர்சனம்.

தியாகி திலீபன் உண்ணாவிரத மேடையில் இருந்து “நான் மனரீதியாக, ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடன் உங்களிடம் இருந்து இறுதி விடைபெறுகின்றேன்.” என்றான். ஆனால் 30 வருடமாகியும் அவனது கனவு மெய்ப்படவில்லலை.

துரோத்தனங்களும் காட்டிக் கொடுப்புக்களும் மற்றும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும் தான் இதற்கு காரணம்.

தியாகி திலீபன் ‘களத்தில்’ எனும் பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றினார். சம வேளை அவர் ஆசிரியர் தலையங்கத்தில் . “சுதந்திர தமிழீழம் தவிர்ந்த வேறெந்த தீர்வும் இனி எங்கள் அரசியல் அகராதியில் கிடையாது.” என எழுதியிருந்தார். அதுவே எம் இனத்தின் ஆத்ம தாகம் . இதன் வலி, வலிமை உயிர் கொடை வெள்ளை வேட்டி அரசியல் வாதிகளுக்கு புரியாது. புரிய வைக்கவும் முடியாது.

தியாகி லெப். கேணல் திலீபனுக்கு வீர வணக்கம்

https://www.kuriyeedu.com/?p=95670

6 hours ago, nochchi said:

தியாகி திலீபன் ‘களத்தில்’ எனும் பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றினார். சம வேளை அவர் ஆசிரியர் தலையங்கத்தில் . “சுதந்திர தமிழீழம் தவிர்ந்த வேறெந்த தீர்வும் இனி எங்கள் அரசியல் அகராதியில் கிடையாது.” என எழுதியிருந்தார். அதுவே எம் இனத்தின் ஆத்ம தாகம் . இதன் வலி, வலிமை உயிர் கொடை வெள்ளை வேட்டி அரசியல் வாதிகளுக்கு புரியாது. புரிய வைக்கவும் முடியாது.

6 hours ago, nochchi said:

இலங்கைக்குள் தமிழர்களின்தேசியத்தை குழிதோண்டிபுதைத்துவிட்ட சம்பந்தன் தியாகி திலீபனுக்கு மலர் மாலை அணிவித்தது காலத்தின் கொடுமை!

On 9/25/2017 at 2:37 PM, Athavan CH said:

தியாகதீபம் திலீபனின் தியாகத்துக்கு பரிகாரம் தேட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அயராது உழைக்கின்றது – சம்பந்தன்!

50+ வருடங்களாக அரைவேக்காட்டு அரசியல் செய்துவரும் சம்பந்தனும் சுதந்திர தமிழீழம் தான் வேண்டும் என்ற முடிவுக்கு வந்திட்டார் என்று நம்ப முடியாது.

On 9/25/2017 at 2:37 PM, Athavan CH said:

திலீபனின் தியாகத்துக்கான பரிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அயராது உழைக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அதென்ன பரிகாரம்? அதென்ன உழைப்பு? என்று கொஞ்சம் தெளிவாத்தான் சொல்றது.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Rajesh said:

அதென்ன பரிகாரம்? அதென்ன உழைப்பு? என்று கொஞ்சம் தெளிவாத்தான் சொல்றது.

அந்த மனுசனும் என்ன செய்யிறது வைச்சுகொண்டே இல்லை என்று சொல்லுறார்....முடிந்தவரை குரல் கொடுக்கிறார்.தேசிய இனங்கள் எழுச்சி பெறக்கூடாது என்பது பிரித்தானியா எகாதிபத்தியத்திய வாதிகளிடம் 200 வருடங்களுக்கு முன்பே உருவான கொள்கை .....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

அதென்ன பரிகாரம்? அதென்ன உழைப்பு? என்று கொஞ்சம் தெளிவாத்தான் சொல்றது.

இது பரிகாரம்.

Bildergebnis für சம்பந்தர்

இது உழைப்பு .

Bildergebnis für உழைப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.