Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரன் -கஜேந்திரகுமார் இன்று நேருக்கு நேர் கருத்து மோதல்

Featured Replies

சுமந்திரன் -கஜேந்திரகுமார் இன்று நேருக்கு நேர் கருத்து மோதல்

சுமந்திரன் -கஜேந்திரகுமார் நாளை நேருக்கு நேர் கருத்து மோதல்

"புதிய அரசியல் யாப்பு எந்த தீர்வையும் தரப்போவதில்லை" என தெரிவிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் "புதிய அரசியல் யாப்பு தமிழ் மக்களுக்கு தீர்வாக அமையும்" என கூறும் பாராளுமன்ற உறுப்பினர் M. A. சுமந்திரன் பங்குபெறும் "அதிர்வு" நேரடி அரசியல் கலந்துரையாடலை, நமது வசந்தம் TVல் நாளை(27.12.2017) இரவு 10.00 மணிக்கு

http://www.samakalam.com/செய்திகள்/சுமந்திரன்-கஜேந்திரகும/

இன்று இரவு முழுமையாக இணைக்கபடும்

  • தொடங்கியவர்

http://lakfreedom.info/local-tv-channels/147-vasantham-tv-live

சுமந்திரன் -கஜேந்திரகுமார்  நேருக்கு நேர்

இந்த லிங்க் இல் பார்க்கலாம் இன்னும் 8 நிமிடத்தில்

  • தொடங்கியவர்

சுமந்திரன் -கஜேந்திரகுமார்  நேருக்கு நேர்

  • கருத்துக்கள உறவுகள்

ரெண்டு போரையும் பக்கத்திலை பக்கத்திலை இருக்க விட்டு இருக்காங்க அடிபாடு வந்தால் ?

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பெருமாள் said:

ரெண்டு போரையும் பக்கத்திலை பக்கத்திலை இருக்க விட்டு இருக்காங்க அடிபாடு வந்தால் ?

அதுக்குத்தானே  போட்டிருக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கு ரயில் விடுகிறோம் என்று சொன்னால் ...
தென் பகுதி சிங்கள மக்கள் குளம்புவார்கள் 

ஆதலால் ........... பஸ் என்ற பெயரில் நாங்கள் ரயில் விடுகிறோம்.

ஏனென்றால் சிங்களமக்களுக்கு பஸ்சுக்கும் ரயிலுக்கு வித்தியாசம் தெரியாது. 

-சுமந்திரன் ஐயாவின் புது விளக்கம் -

சிங்கள மக்களின் தமிழ் தூதுவருக்கும் 
தமிழ் மக்கள் சார்ந்த ஒருவருக்கும் 
நடக்கும் விவாதம் மாதிரியே இது வெளிப்படையாக இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களுக்கு பஸ்சுக்கும் ரயிலுக்கு 
வித்தியாசம் தெரியாது என்றால் 
ஏன் ரயில் விடுகிறோம் எனும்போது குழம்புகிறார்கள் ?? 
பஸ் என்றால் ஓகே என்கிறார்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மிகத்தெளிவாக  குறிப்பிடுகிறார்

சுயநிர்ணயம்  என்ற பேச்சே இல்லை

சமஸ்டி ஆட்சி இல்லை

வடகிழக்கு இணைப்பு இல்லை

பிரிக்கப்படமுடியாத தேசம் என்பது மட்டும் மிக மிக உரத்து

இறுக்கமாக சொல்லப்பட்டு சிங்கள மக்களின் சந்தேகங்கள் மட்டுமே காப்பாற்றப்பட்டிருக்கு

எதற்காக தீர்வு?

தமிழரது கோரிக்கைகள்

அவர்களது தியாகங்கள்

மறைக்கப்பட்டு

அதற்காக தீர்வை தருவதைவிடுத்து

மீண்டும் மீண்டும்

சிங்கள  மக்களின் சந்தேகங்களுக்கு உறுதிமொழி வழங்குவதற்கு எதற்கு தீர்வு????

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை அதன் தலைவர்களைக் கொண்டே ரொம்பவும் முட்டாள்கள் ஆக்குவதில் சிங்களம் வெற்றியடைந்து வருகிறது.

மிக்ச்சிறந்த கருத்தாடல்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/27/2017 at 1:49 PM, விசுகு said:

சிங்கள  மக்களின் சந்தேகங்களுக்கு உறுதிமொழி வழங்குவதற்கு எதற்கு தீர்வு????

தீர்வு வேண்டாமா? சரி, விட்டு விடலாமே? போர் முடிந்து விட்டது தானே? 

இன்று பெரும்பாலான கொலைகளை  வடக்கு கிழக்கில் தமிழ் வாள்வெட்டு குழுக்கள் தானே செய்கின்றன?

அதற்க்கு தீர்வு காணுவதில் கவனத்தை செலுத்துவது பயனுள்ளதாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 100 தலைமுறைகள் போனாலும் சிங்களவன் எதுவும் தரபோவதில்லை, அப்படி தந்தாலும் அதே வருஷமே அவர்களின் ஆட்சியை சிங்களவர்களும், முஸ்லீம்களும் சேர்ந்து கவுக்காமலும் விடபோவதில்லை!

பேரம்பேசும் சக்திகளை தொலைத்தபின்னர் வெறும் சோரம்போகும் கட்சிகளுடன் வாழும் தமிழினம், இன்னும் பெரும்பான்மை சிங்களவர்களும், தமிழர்களுக்கு எதாவது தீர்வு கொடுக்கபோகிறார்கள் என்றால் மட்டும் சிங்களவனுடன் உடனடியாக நல்லுறவை அதிகமாக வளர்த்துக்கொள்ளும் முஸ்லீம்களும்  எமது வாழ்வில் ஒளி பிறக்க வழிவிடுவார்கள் என்று நம்புவது கண்களை கட்டிக்கொண்டு கருநாகங்களுடன் வாழ்வதுபோன்றது!

இனி ஆகபோவது ஒன்றுமில்லை, இருக்கும் ஒரேவழி

தமிழர்களிடம் கைவசம் இருக்கும் காணிகளை எந்தகாலமும் வேறு இனத்தவர்களுக்கு விற்காதீர்கள்,குடும்பகட்டுபாடு உலகம் முழுவதும் கடுமையாக கடைபிடிக்கப்படும் காலம் இதுதான் ஆனாலும் எமக்குரிய காலமே அஸ்தமனமாகிகொண்டு வரும் சூழ்நிலையில் எமதுமக்கள் குறைந்தது 4 பிள்ளைகளை பெற்றுக்கொள்ளவேண்டும், தமிழர்களை அவர்கள் வாழும் நிலங்களிலேயே குறுக்குவழியில் சென்று சிறுபான்மையினம் ஆக்குவதற்கு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே ஆயுதமாக வேறு இனம் கையில் எடுக்கும்போது, அதை வெட்டியாள நாமும் கையில் எடுப்பதில் தப்பில்லை!

இன்னும் இரு தசாப்தங்களின்பின்  தலைமுறை மாற்றங்கள் ஏற்படும்போது புலம்பெயர் தமிழர்கள் ,இப்போ இருக்கும் நடுத்தர வயதை தாண்டிய தலைமுறை அகன்றுபோக ,பலநாட்டு மொழிகளை பேசி பலநாட்டு சமூகங்களுடன் வாழ்வை பகிர்ந்து பல் கலாச்சாரங்களில் ஊறிபோன புதிய புலம்பெயர் தலைமுறை தாயக தமிழர்களை நினைத்துகூட பார்க்கபோவதில்லை,

இப்போது இருக்கும் சந்ததிகூட கருத்து என்ற ஒன்றைதவிர தாயக மக்களுடன் முழு அளவில் அரசியலோ , நிதி  பங்களிப்போ பரிந்துகொள்ள மிதமீதியாய் கையிருப்பில் எதுவும் வைத்திருக்கவில்லை ,ஒரு சில பணமுதலைகளை தவிர்த்து பெரும்பான்மை, நம் மக்கள் ஒரு மாதம் வேலைக்கு போகாதுவிட்டாலே தண்ணீர்,மின்சாரம்,வீடு,கார் என்று அனைத்தையும் இழந்து நடுதெருவுக்கு வந்துவிடும் நிலையில் இருக்கும் கெளரவ அகதிகள்! 

வடக்கு கிழக்கு தமிழர்கள் அரசியல்வாதிகள்,பிரதேச வாதங்களை ஓரமாய் தூக்கிபோட்டுவிட்டு கல்வி,பொருளாதாரத்தில் கடினமாகவும் வெறித்தனமாகவும் முன்னேறி இரு மாகாண மக்களும் அங்கீகரிகப்படாத ஒரு மாகாணங்களின் இணைப்பு உறவாக ஒற்றுமையுடன் வாழ்வதேதான் இனிமேல் தமிழருக்கு இருக்கபோகும் ஒரேதீர்வு, அது தனக்கு தாமே உருவாக்கிகொள்ளக்கூடிய தீர்வு!

இது எவ்வளவுதூரம் சாத்தியமாகும் என்ற கேள்வியைவிட, இனி என்னதான் செய்ய இருக்கு என்பது அதைவிட பெரிய கேள்வியாய் நிற்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விவாதத்தை முகப்புத்தகத்தில் மட்டும் தானா பார்க்கலாம்.

வேறு ஏதாவது இணைப்பிருந்தால் இணைத்துவிடவும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, valavan said:

குடும்பகட்டுபாடு உலகம் முழுவதும் கடுமையாக கடைபிடிக்கப்படும் காலம் இதுதான் ஆனாலும் எமக்குரிய காலமே அஸ்தமனமாகிகொண்டு வரும் சூழ்நிலையில் எமதுமக்கள் குறைந்தது 4 பிள்ளைகளை பெற்றுக்கொள்ளவேண்டும், தமிழர்களை அவர்கள் வாழும் நிலங்களிலேயே குறுக்குவழியில் சென்று சிறுபான்மையினம் ஆக்குவதற்கு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே ஆயுதமாக வேறு இனம் கையில் எடுக்கும்போது, அதை வெட்டியாள நாமும் கையில் எடுப்பதில் தப்பில்லை!

போரினால் பெருமளவு பெண்கள் விதவைகள் ஆகி விட்டார்கள். ஆண்கள் பற்றாக்குறை போருக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே ஆரம்பித்து இப்போது பெரிய பிரச்சனை ஆகி விட்டது. வறுமையும் பாதுகாப்பு இல்லாமையும் பெண்களில் பலரை விபச்சாரத்துக்கு  கொண்டு சென்றுள்ளது. இவ்வாறான நிலையில் ஏன் பல தார குடும்பங்களை தமிழ் கலாச்சாரத்தில் சட்ட ரீதியாகவும் சமுக ரீதியாகவும் ஏற்று கொள்ள கூடாது? முஸ்லிம்கள் பல தார விவாகம் மூலம் பலுகி பெருகுகிறார்கள். அவர்கள் பெண்களும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.  சைவ சமயத்தில் பல தார விவாகம் தவறானதா?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Jude said:

ஏன் தமிழ் கிறீஸ்தவர்கள் பல தார விவாகத்திற்கு முன்னோடிகளாக இருக்கக்கூடாது?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Jude said:

விதவைகள் மறுமணம் கட்டாயம் செய்து கொள்ளவேண்டும் அதில் ஒன்றும் தப்பில்லை, ஆனால் பல தார திருமணங்கள் என்றது உலகில் பெரும்பாலும் எந்த இனத்திலும் சட்டரீதியானதல்ல முஸ்லீம்கள் பலதார திருமணம் செய்கிறார்கள் என்பது சரி, ஆனால் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பது மட்டும் சரியில்லை, பயமுறுத்தப்பட்டு வைத்திருக்கபட்டிருக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லுங்க, அவர்களை மீறி போனால் கழுத்தை அறுப்பார்கள் என்ற பயம்!

அதுபோக முஸ்லீம்களின் சதி வலைகளிலிருந்து தப்பிக்க வழி கேட்டால் அவர்களைபோலவே வாழ சொல்லும் உங்கள் ஆலோசனையை நீங்கள் வேண்டுமென்றால் கடைபிடியுங்கள், அவர்கள் வாழ்க்கை முறைமையை எங்களுடன் சேர்க்காதீர்கள்! 

அவர்கள் இந்த உலகத்தில் எந்தவித கலாச்சாரம்,நாகரிகம்,மனிதநேயம் என்று எதுவுமே கருத்தில்கொள்ளாது தாங்கள் செய்வதே சரியென்று வாழும் இனம்!

ரோஜாபூ கொடுத்து வரவேற்ற  பிரான்ஸ் ஜேர்மனி பெண்கள் குழந்தைகள் அடங்கலான பொதுமக்களை அவர்கள்மண்ணிலேயே அடுத்த மாதமே கோடரியால் வெட்டியும், ஓட ஓட சுட்டுகொன்றும், பொது இடங்களில் குண்டுவைத்து பிணக்காடாக்கியும் மகிழ்பவர்கள்,  மாற்று திறனாளிகள் என்றும் பார்க்காது ட்ரக் ஏற்றி நசுக்கி கொல்பவர்கள்  அல்லது அந்த கொடூர சம்பவங்களை மனம் திறந்து கண்டிக்காதவர்கள்,மாஷா அல்லா என்று சொல்லி மனசுக்குள் ரசிப்பவர்கள்! உயிர் பிச்சை தந்த அந்தநாட்டு பெண்கள்மீது அடுத்தமாதமே புது வருஷ கொண்டாட்டத்திம்போது பாலியல் வன்முறை செய்தவர்கள்!

விபச்சாரம் அதிகரிக்கிறது அதனால் பலதார திருமணத்தை ஆதரிக்கலாம் எண்டால், விபச்சாரத்திற்கும் பலதார விவாகத்துக்குமிடையில் என்ன பெரிய வித்தியாசம் இருக்கு என்று நீங்கள்தான் ஆய்வு செய்து சொல்லவேண்டும்!

Edited by valavan

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Jude said:

1 - தீர்வு வேண்டாமா?

சரி, விட்டு விடலாமே? போர் முடிந்து விட்டது தானே? 

 2- இன்று பெரும்பாலான கொலைகளை  வடக்கு கிழக்கில் தமிழ் வாள்வெட்டு குழுக்கள் தானே செய்கின்றன?

அதற்க்கு தீர்வு காணுவதில் கவனத்தை செலுத்துவது பயனுள்ளதாக இருக்கும். 

1 - தீர்வு எதற்கு?  யாருக்கு? 

வைத்தியம்  நோய்  வாய்ப்பட்டவருக்கா?   வைத்தியருக்கா???

2 - வாள்  வெட்டுக்குழுக்களை  பிரசவித்தவர்  யார்???

அவர்களுக்குத்தான் தீர்வா???

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

1 - தீர்வு எதற்கு?  யாருக்கு? 

வைத்தியம்  நோய்  வாய்ப்பட்டவருக்கா?   வைத்தியருக்கா???

யாரை நீங்கள் வைத்தியர் என்று பார்க்கிறீர்கள்?

8 hours ago, விசுகு said:

-2 - வாள்  வெட்டுக்குழுக்களை  பிரசவித்தவர்  யார்???

அவர்களுக்குத்தான் தீர்வா???

சரி, வாள்  வெட்டுக்குழுக்களையும் வாழ விடுங்கள்  என்கிறீர்கள். நீங்கள்    இருக்கும்    இடத்துக்கு அவர்கள் வர முடியாது தானே.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, MEERA said:

ஏன் தமிழ் கிறீஸ்தவர்கள் பல தார விவாகத்திற்கு முன்னோடிகளாக இருக்கக்கூடாது?

சில கிறீஸ்தவ பிரிவுகள் பல தார விவாகத்தை அடிப்படையாக கொண்டவை. கிறீஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் யூதர்கள்    ஒரே மத்திய கிழக்கு    பல தார கலாச்சரத்தில்   இருந்து தோன்றியவையே.   தமிழ் கிறீஸ்தவர்கள் மிகவும் சிறு பான்மையானதால் அவர்களது பல தார விவாகம் தமிழ் மக்களின் தொகையை அதிகரிக்க பெருமளவில் உதவாது. மாறாக, தமிழ் சைவர்கள் முன் வந்தாலே தமிழ் மக்களின் சனத்தொகை அதிகரிக்கும்.

பல தார விவாகத்தை ஆதரிக்கும் கிறீஸ்தவ பிரிவுகளை தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி முன்னெடுப்பதை நான் பூரணமாக வரவேற்கிறேன். இதை செய்யும் போது பெருமளவில் சைவர்கள் இந்த கிறீஸ்தவ பிரிவுகளுக்கு மதம் மாறும் நிலை உருவாகலாம். நீங்கள் அதை ஆதரிப்பீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, valavan said:

பல தார திருமணங்கள் என்றது உலகில் பெரும்பாலும் எந்த இனத்திலும் சட்டரீதியானதல்ல

மிகவும் தவறான கருத்து. இலங்கையில் கூட முஸ்லிம்களுக்கு தனியான திருமண சட்டம் பல தார விவாகத்தை சட்டரீதியாக அங்கீகரித்து உள்ளது (MUSLIM MARRIAGE AND DIVORCE ACT). இந்த இணைப்பை அழுத்தி சட்டத்தை படித்து பாருங்கள். மலேசியா, இந்தோனேசியா மற்றும் அனைத்து மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளிலும் பல தார விவாகம் சட்ட ரீதியானது. 

9 hours ago, valavan said:

அதுபோக முஸ்லீம்களின் சதி வலைகளிலிருந்து தப்பிக்க வழி கேட்டால் அவர்களைபோலவே வாழ சொல்லும் உங்கள் ஆலோசனையை நீங்கள் வேண்டுமென்றால் கடைபிடியுங்கள், அவர்கள் வாழ்க்கை முறைமையை எங்களுடன் சேர்க்காதீர்கள்! 

முஸ்லிம்களின் வாழ்க்கை முறை அவர்களை சனத்தொகையில் அதிகரித்து உலகத்தை ஒருமுறை அல்ல பலமுறை வெற்றி கொள்ள வைத்திருக்கிறது. 

உங்கள் வாழ்க்கைமுறை தந்த நிலையை பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Jude said:

சில கிறீஸ்தவ பிரிவுகள் பல தார விவாகத்தை அடிப்படையாக கொண்டவை. கிறீஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் யூதர்கள்    ஒரே மத்திய கிழக்கு    பல தார கலாச்சரத்தில்   இருந்து தோன்றியவையே.   தமிழ் கிறீஸ்தவர்கள் மிகவும் சிறு பான்மையானதால் அவர்களது பல தார விவாகம் தமிழ் மக்களின் தொகையை அதிகரிக்க பெருமளவில் உதவாது. மாறாக, தமிழ் சைவர்கள் முன் வந்தாலே தமிழ் மக்களின் சனத்தொகை அதிகரிக்கும்.

பல தார விவாகத்தை ஆதரிக்கும் கிறீஸ்தவ பிரிவுகளை தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி முன்னெடுப்பதை நான் பூரணமாக வரவேற்கிறேன். இதை செய்யும் போது பெருமளவில் சைவர்கள் இந்த கிறீஸ்தவ பிரிவுகளுக்கு மதம் மாறும் நிலை உருவாகலாம். நீங்கள் அதை ஆதரிப்பீர்களா?

நீங்கள் குறிப்பிட்டபடி தற்போது நிலவும் ஆண்கள் பற்றாக்குறையை தீர்க்க தமிழ் கிறீஸ்தவர்கள் பலதார விவாகம் செய்தாலே போதும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Jude said:

யாரை நீங்கள் வைத்தியர் என்று பார்க்கிறீர்கள்?

சரி, வாள்  வெட்டுக்குழுக்களையும் வாழ விடுங்கள்  என்கிறீர்கள். நீங்கள்    இருக்கும்    இடத்துக்கு அவர்கள் வர முடியாது தானே.

நான் வரல  இந்த விளையாட்டுக்கு...

மன்னிக்கணும்

நேரம்  பொன்னானது

இந்த நேரத்தில் நித்திரையாக கிடப்பவரை எழுப்பமுயலலாம்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சுமந்திரனும் மூக்கும் மென்வலுவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.