Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓஹோ எந்தன் பேபி, நீ வாராய் எந்தன் பேபி.......!  

  • Replies 2.9k
  • Views 246.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிலாமதி
    நிலாமதி

    கண்ணனும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணம்போல் வந்து நின்றாடுதே

  • பால்வண்ணம் பருவம் கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்....!  💞 (எங்களது வெற்றிகரமான 35 வது திருமணநாள் இன்று).......!  🌹

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    படம்: அமுதா(1975) இசை: MSV  வரிகள் : கண்ணதாசன்  பாடியோர் : TMS 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்றலே நீ செல்வாய் நில்லாமல் செல்வாய்,என்னை தேடும் கண்களை கண்டு காதலை நீ சொல்வாய்.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

தென்றலே நீ செல்வாய் நில்லாமல் செல்வாய்,என்னை தேடும் கண்களை கண்டு காதலை நீ சொல்வாய்....

என்னாயிற்று? திடீரென 64 வருடங்கள் பின்னோக்கி?

நீண்ட நாட்களுக்குப் பின் கேட்கிறேன். நன்றி Suvy

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலைச்சாரலில் இளம் பூங்குயில் ---அதன் 

மார்பினில் ஒரு ஆண்குயில் ......!   😁

  • கருத்துக்கள உறவுகள்
On 1/3/2020 at 10:13 AM, suvy said:

ஓஹோ எந்தன் பேபி, நீ வாராய் எந்தன் பேபி.......!  

மென்மையான குரல் மட்டுமல்ல மெலடியான பாடல்களுக்கும் பொருத்தமானது .எம்.ராஜாவின் குரல்.

தனது அமைதியான குரலால்  பல உள்ளங்களில் புகுந்து இசையால் ஒரு ராஜ்ஜியம் அமைத்த .எம்.ராஜா திடீரெனஓகோ என்தன் பேபிஎன்று ஒரு துள்ளல் பாட்டைப் பாட அது  அன்றைய இளைஞர்களை ஆட்டிப் படைத்து. இன்று எழுபது வயதுக்கு மேல் இருக்கும் அன்றைய இளைஞர்கள் இப்பொழுது இந்தப் பாடலைக் கேட்டால் போதும் அன்றைய காதல் நினைவுகளுக்குள் மூழ்கிப் போவார்கள்.

வீதியில் தங்களுக்கு விருப்பமான பெண்கள் போனால் சைக்கிளில் வரும் அன்றைய இளைஞர்களுக்கு பாட வருகின்றதோ இல்லையோ  வாயில் இந்தப் பாடல் கண்டிப்பாக விசில் வடிவமாக (எங்கள் ஊரில் அதைசீக்காய் அடிப்பதுஎன்பர்கள்) வரும்.

மாசிலா உன்மைக் காதலே”, “மயக்கும் மாலை பொழுதே”, “பிருந்தாவனமும் ந்தகுமாரனும்என்று .எம்.ராஜா அன்று பாடிய பல மெலடிப் பாடல்கள் காலம் கடந்தும் வாழ்கின்றன.

பிருந்தாவனமும் ந்தகுமாரனும் பாடலுக்கு நடிகை ஜமுனா பிடிக்கும் அபிநயம் சிரிக்கவைக்கும்.

 

 

ஆனால் பாடல் எவ்வளவு ரசிக்கப்பட்டது என்பதற்கு சீனா பெண்கள் பங்கு கொள்ளும் இந்த வீடியோ ஒரு சாட்சி

 

 

A

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னோடு என்னென்னவோ ரகசியம் 

உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்.....!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விழியிலே மலர்ந்தது  உயிரிலே கலந்தது.......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறைதான் வரும் கதை பல கூறும் உல்லாச புதுமைகள் காட்டும்  இளமை ஒய்யார வண்ணங்கள் பாடும்....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

ஒருமுறைதான் வரும் கதை பல கூறும் உல்லாச புதுமைகள் காட்டும்  இளமை

கண்ணதாசனின் இந்த வரிகளை பின்னாளில் ஆலங்குடி சோமு பயன்படுத்தியதாக ஒரு சர்ச்சை அப்போது வந்தது.

ஜிக்கியின் குரலில் பாடல் கேட்க இனிமை.

M.N..ராஜம், M.N.நம்பியார் இருவரது முதல் எழுத்துக்களை வைத்தும் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்ததால்  இருவரும் அண்ணன் தங்கை என்று நான் சிறுவனாக இருந்தபோது நினைத்திருந்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் விளையாட கட்டிலிடு கண்ணே.........!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா......!   😁

  • கருத்துக்கள உறவுகள்

ஜேசுதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொல்லத்தான் நினைக்கிறேன்  முடியவில்லை ......!   😁

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவுகள் ... இன்று தான் பார்க்க நேர்ந்தது 
தொடரட்டும் இந்த கருப்பு வெள்ளை பாட்டு வேட்டை 👌

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதிலே........!  😄

20 hours ago, Sasi_varnam said:

அருமையான பதிவுகள் ... இன்று தான் பார்க்க நேர்ந்தது 
தொடரட்டும் இந்த கருப்பு வெள்ளை பாட்டு வேட்டை 👌

தொடருகின்றோம், வருகைக்கு நன்றி சசிவர்ணம்........!   🌹

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கள்ளமலர் சிரிப்பிலே  கண்களின் அழைப்பிலே.....!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருள் என்ன ......!   😄

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, suvy said:

ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருள் என்ன

ஜீவனாம்சம் படத்தில் தொடங்கிய சிவகுமார் - லட்சுமி ஜோடிப் பொருத்தம்  பல படங்களில் தொடர்ந்தது.  அது கண்மணி ராஜாவிலும் தெரிகிறது

பொதுவாக வெளிநாட்டவர்கள் கடற்கரையில் கோர்ட் சூட்டோடு உலாவருவதில்லை. ஆனால் தமிழ்ப்பட ஹீரோக்களுக்கு அது ஏனோ பிடிப்பதில்லை.

நீண,ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பாடலைக் கேட்கிறேன்.

பதிவுக்கு நன்றி Suvy

  • கருத்துக்கள உறவுகள்

படம் : அனார்கலி (1955)

பாடியோர்: ஜிக்கி & கண்டசாலா

வரிகள்: தஞ்சை .ராமையா தாஸ்

இசை : ஆதித்ய நாராயண ராவ்

கனிந்த அல்லியோடு நிலவின் ஒளி நீ
காதல் யுவராஜன் அனார்கலி நீ.......(கனிந்த)

காதல் மலரின் மது மேலே
மயங்கும் வண்டு போலே
மகிழும் நாள் ஒன்றே
மதுவின் சுவையாலே இந்நாளே
மலர்ந்தது உன்னாலே......

வலையில் விழும் மானே உன்னால்தானே
நிலையுணர்ந்ததாலே உன்னால் நானே....(கனிந்த)
வெண்ணிலவே உன் வானில் தவழும் பாராய்
கண்ணொளியாக வானில் வளர் தாரா
மனக்கண்ணில் வாழும் எழில் தீரா
கனிவானதே அதன் சுவை காணுதே
இரு மனம் ஒரு மலர் அன்பானதே........(கனிந்த)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கானா இன்பம் கனிந்ததேனோ  காதல் திருமண ஊர்வலம்தானோ......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரை போட்டு நாமே மறைத்தாலும் காதலே, தெளிவாக நாளை தெரியாமல் போகுமோ ......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
On 1/18/2020 at 9:59 AM, suvy said:

கானா இன்பம் கனிந்ததேனோ  காதல் திருமண ஊர்வலம்தானோ......!   😁

 எனக்குப் பிடித்த பாடல்களில் இந்ததப் பாடல் முதன்மையானது. 2014இல்  இந்தப் பாடலைப் பற்றி நான் எழுதியதை கீழே பதிகிறேன் 

பி. ஆர் பந்துலு தயாரித்து இயக்கிய திரைப் படம் சபாஸ் மீனா. 1958இல் வெளிவந்தது. சிவாஜி கணேசன், மாலினி, சந்திரபாபு, சரோஜாதேவி நடித்த ஒரு வெற்றிப் படம். சந்திரபாபுவுக்கு இரட்டை வேடம். இந்தப் படம் நகைச்சுவைப் படமானதால், சிவாஜி கணேசனை விட சந்திரபாபுவுக்குத்தான் படத்தில் அதிக வாய்ப்பு. இதனால் பி.ஆர் பந்துலுவுக்கு சிவாஜி கணேசனை திருப்திப் படுத்த வேண்டிய நிலை. எனவே சபாஸ் மீனா படத்துக்காக அவருக்கான ஒரு மெலடி நிறைந்த பாடல் உருவாகிறது.

சிவாஜி கணேசனுக்கு குரல் கொடுப்பவர் டி. ஏ. மோதி. இவர் ஐம்பதுகளில் ஒரு சில பாடல்களைப் பாடி இருந்தாலும் கண்டசாலா, சிதம்பரம் ஜெயராமன் ஆகியோருடன் போட்டி போட்டு முன்னுக்கு வருவது முடியாமல் இருந்தது. அதிகமாகப் பேசப்படாத அவரால் பாடப் பட்ட இந்தப் பாடலுக்கு இணைந்து குரல் தருபவர் பி.சுசிலா.

மழையில் நனைந்து கொண்டு காதலனும் காதலியும் பாடும் பாடல் காட்சியில் குதூகலத்தைக் காட்ட வேண்டும் என்று இயக்குனர் சொன்னாரோ என்னவோ தேவைக்கு அதிகமாகவே சிவாஜி கணேசன் குதூகலத்தைக் காட்டி பாடல் காட்சியில் நடித்திருப்பார். இதில் நடித்த மாலினி பின்னர் சபாஸ் மாப்பிள்ளை திரைப் படத்தில் எம்ஜிஆருடன் நடித்திருந்தார். பிறகு திரையில் அவரைப் பார்க்கவே முடியவில்லை. 

வானம் சிந்தும் மாமழை எல்லாம்
வானோர் தூவும் தேன்மலரோ?
மேகம் யாவும் பேரொலியோடு
மேளம் போலே முழங்குவதாலே
கன்னல் மொழியே மின்னல் எல்லாம்
விண்ணில் வாண வேடிக்கையோ?
மண்ணில் பெருகும் வெள்ளம் போலே
மனதில் பொங்கும் ப்ரேமையினாலே
காணா இன்பம் கனிந்ததேனோ 
காதல் திருமண ஊர்வலந்தானோ...


என்று கு.ம. பாலசுப்பிரமணியம் அவர்களது பாடல் வரிகள் மழை போல் அழகாக இருக்கும்.

இவ்வளவு பெரும் மழையில் நனைந்து காதலர்கள் இப்படி மகிழ்ந்திருப்பது போன்ற காட்சிகள் பின்னாளில் திரைப் படங்களில் வந்ததா தெரியவில்லை. அப்படி வந்திருப்பின் இதுவே முன்னோடி.

இதே மெட்டில் அதே ஆண்டு வெளிவந்த எங்கள் குடும்பம் பெரிது என்ற திரைப்படத்துக்கும் 'ராதா மாதவ வினோத ராஜா எந்தன் மனதின் ப்ரேம விலாசா..' பாடலை  டி.ஜி. லிங்கப்பா இசை அமைத்திருப்பார். ஆனாலும் காணா இன்பம் கனிந்ததேனோ.. பாடலில் டி.ஏ.மோதியின் குரல் இனிமையும் பி.சுசிலாவின் கம்மிங்கும் சிவாஜி கணேசன் மாலினியின் நடிப்பும் பாடலுக்கான வரிகளும் அதற்கேற்ற இசையும் குறிப்பாக அந்த பெரு மழையும் அற்புதம்.

மழை பிடிப்பதால் குடை பிடிக்காதவர்களுக்கு இந்தப் பாடல் பிடித்துப் போகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆடாத மனமும் ஆடுதே .......!   😄

  • கருத்துக்கள உறவுகள்

பி.பீ. சிறீனிவாஸை விட ஏ.எம். ராஜவின் குரல் ஜெமினிக்குப் பொருத்தமானது என்பது என் கருத்து.

இந்தப் பாடலைக் கேட்கும் போது “வானோரும் காணாத பேரின்பமே” என்று சொல்லிக் கொள்ளலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்காணும் மின்னல்தானோ காதல் கலைதானோ......!   😄

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.