Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

வெளிநாடுகளில் இருந்து விடுமுறைக்கு வரும் நடுத்தர அகவையுடைய பெண்கள் பெரும்பாலும் அன்னை திரேசா சீன் போடுவார்கள். வரும் வழியில் யாராவது பிச்சை கேட்டால் கூடப் போகும் நாம் அவர்களின் அன்னை திரேசா சீனில் விழுந்துவிடும் வண்ணம் பிச்சை போடுவார்கள்.

சூழ இருக்கும் எல்லாரினதும் ஏழ்மைத் துன்பங்களைப் பார்த்து தாம் பதைபதைப்பது போல காட்டிக்கொள்வர் (அவ்வளவு அன்பானவர்கள்). இந்த அன்னை திரேசா சீனெல்லாம் அவர்களின் மேட்டுமையின் இன்னொரு வடிவமே.

உண்மையில் அன்பும் இரக்கமும் கொண்டவர்களெனில் எம்மக்களின் இன்னல்களைப் பார்த்தால் அவர்களுக்கு வரும் உணர்வின் அதன் வழிப்பட்ட அவர்களின் தொடர்ச்சியான செயற்பாடுகளும் அவர்கள் நேசிக்கும் இலக்கும் தொலைநோக்குச் செயற்பாடும் வாழ்வின் பண்புநிலை மாற்றமும் வேறுபட்டதாக இருக்கும். மொசப்பத்தேமியா அக்கா இதனைப் புரிந்துகொள்வாரா?

Edited by தம்பியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தம்பியன் said:

உணர்ச்சிவசப்பட்டு வீர வசனம் பேசுபவர்களும் மக்களின் இன்பம் துன்பம் என்றெல்லாம் பதிவு போடுபவர்களும் எதையும் செய்வதில்லை என்பது இங்கு பலர் கண்கூடாகக் கண்ட உண்மை தம்பி. 

7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உணர்ச்சிவசப்பட்டு வீர வசனம் பேசுபவர்களும் மக்களின் இன்பம் துன்பம் என்றெல்லாம் பதிவு போடுபவர்களும் எதையும் செய்வதில்லை என்பது இங்கு பலர் கண்கூடாகக் கண்ட உண்மை தம்பி. 

உண்மை. வாய் கிழியப் பேசுபவர்கள் பலர் ஏதாவது செய்வோம் என்று கேட்டால் காணாமல் போய் விடுவார்கள்.

ஆனால் மேட்டிமையிலிருந்து தமது மேம்பட்ட தன்மையினால் தாங்கள் உதவுவது போலவும் உதவி பெறுபவர்கள் நன்றியுணர்வும் பழக்கவழக்கங்களும் இல்லாதவர்கள் போன்று ஒரு வித கரு படைப்புகளில் கூட உருவாகிவிடக் கூடாது என்பதனாலே அவ்வாறு கருத்திட்டேன்.

வாயால் வடை சுடுபவர்களிலும் இப்படி உதவுவோர் ஒரு படி நிலை மேலே இருக்கலாம். அதையும் தாண்டி நலிவுற்று இருக்கும் ஒருவரின் செயற்பாடுகளின் பின்னாலான சமூகக் காரணிகளைப் பார்க்க வேண்டும்.

அவர்கள் கடந்து வந்த உலகின் எந்த உயிரினமும் கடக்காத கொடுந்துன்பச் சூழலைப் பார்க்க வேண்டும். செயற்கைக் காலையும் ஊன்று கோலையும் இழந்து வயிற்றுக் காயத்துடன் அவதிப்பட்ட நண்பன் தன்னை எம்முடன் அழைத்துச் செல்லுமாறு இரைஞ்சிய போது காது கேட்காதது போல வந்தவர்கள் நாங்கள். இறந்த தந்தையை கூட கிடங்கு வெட்டி தாக்காமல் தெருப்பிணமாக விட்டு விட்டிட்டு வந்தவர்கள் நாம். கொடுமையாகக் காயம்பட்டு மருத்துவமனையில் நினைவின்றி இருந்த சிறிய தந்தை இறந்தால் நல்லது என எம் மனம் சிந்தித்தது. பசியுடன் அருகில் வந்த குழந்தை கண்டுவிடாமல் கொஞ்சமாய் மீதமிருந்த முட்டை மாவினை வாயில் அள்ளிப் போட்டவர்கள் நாம்.

எம்மக்களின் துன்பங்களுக்கு முடிவு கட்ட வேண்டுமென்று சின்ன வயதிலேயே ஈர மனம் கொண்டு புறப்பட்டதால் இந்த விலங்கிலும் மோசமான வாழ்நிலைச் சிந்தனை மாற்றத்திற்கு ஆளானோம். அப்பவே வெளிநாட்டுக்கு வெளிக்கிட்டு ஓடியிருந்தால் நாம் எல்லோரும் அன்னை திரேசா சீனில் வாழ்ந்திருப்போம். எனவே நலிவுற்று ஏழ்மையில் துடிப்பவர்களின் வினையாற்றலின் பின்னால் எத்தகைய சூழ்நிலைக் காரணங்களிருக்கும் என உணராமல் இருப்பதற்கு வர்க்கப் பண்புகளும் ஒரு காரணம் என்பது இந்தத் தம்பியின் புரிதல்

On 2/19/2018 at 4:15 PM, valavan said:

அந்த காசில் குடும்பத்துடன் யாழ்நகர குளிரூட்டப்பட்ட குளிர்பான கடையொன்றில் ஐஸ்கிறீமும், ரோல்ஸ்சும் சாப்பிட்டு போயிருந்தால், எவர்தான்  என்ன கேள்வி கேட்டிருக்க முடியும்?

இரண்டிற்கும் வித்தியாசம் இல்லை. 850 கொடுத்து ஜஸ்கிறீம் வாங்கினால் கடைக்காரனிற்கு வியாபாரம் கொடுத்தவரிற்கு ஜஸ்கிறீம். 850 கொடுத்து செருப்பு வாங்கினால் பயனர்க்குச் செருப்பு, கடைக்காரனிற்கு வியாபாரம், கொடுத்தவரிற்கு நன்றி தரும் கணநேர குளிர்ச்சி. ஜஸ்கிறீம் உண்டு குளிர்வதா நன்றி பெற்றுக் குளிர்வதா என்பது நுகர்வோரின் தெரிவு. இரண்டும் பரிமாற்றம். ஆதில் நாம் பேச ஏதுமில்லை என்பதே நான் சொல்லவந்தது. 

On 2/21/2018 at 4:41 PM, நிழலி said:

நான் சுமேயின் இடத்தில் இருந்திருந்தாலும் ஒரு சிறு புன்னகையையோ அல்லது ஒரு நன்றியுணர்வுடன் கூடிய ஒரு பார்வையையோ எதிர்பார்த்து இருப்பேன். நன்றியை எதிர்பார்க்காமல் இருப்பது மகான்களின் உணர்வாக இருக்கலாம், ஆனால் நன்றியை எதிர்பார்ப்பது சாதாரண மனிதர்களுக்குண்டான இயல்பு. 

நன்றி எதிர்பாராமை மகான் நிலையல்ல. அது சுதந்திரவேட்கை. அதாவது, சக உயிரின் வாடல் இதயசுத்தியாய் என்னை ஏதேனும் செய்ய உந்துகிறது என்றால் அந்த உந்துதலிற்கான ஒரே வடிகால் செயல். அந்தச் செயலாற்றும் சுதந்திரம் எனக்கிருக்குமாயின் அது சுதந்திரம். மாறாக, எனது செயலிற்கு நன்றி என்று ஒரு எதிர்வினை மற்றையவரின் தயவில் கிடைப்பதை ஒரு மேலதிக தேவையாக நான் வைத்திருப்பின், இப்போ என் உந்துதல் பிரகாரம் நான் செயலாற்றும் சுதந்திரத்தை நான் இழந்துபோகிறேன். நன்றி கிடைப்பின் மட்டுமே என் செயல் முற்றுப் பெறும் என்ற மனவமைப்பிற்குள் நான் சிறைப்பட்டுப்போகிறேன். இதனால் தான் 'வலது கை கொடுப்பபது இடது கையிற்குத் தெரியக்கூடாது' என எம்மக்கள் சொல்லிவைத்தார்கள். இந்தச் சுதந்திரம் கொடுப்பவரிற்கு மட்டுமல்ல, பெறுபவரிற்கும் இதனால் சாத்தியப்படுகிறது. அதாவது, உதவி பெற்றவர், கடமை உணர்வில் சிறைப்படாது, பெற்ற உதவி கொண்டு வாழ எத்தணிப்பதற்குப் பதில் இரஞ்சினோமே என நினைத்துக் குறுகிப்போகாது வாழமுடிகிறது. எமது உந்துதலின் அடிப்படையே அதுதானே. முடிந்தால் பயனர் பிறர் சார்ந்து இரக்கத்துடன் வாழ்ந்துகொள்வார். உலகு இனித்திருக்கும்.

அடுத்து நன்றி எதிர்ப்பார்ப்பதில் தன்னம்பிக்கையீனம் மற்றும் தன்நிறைவின்மை ஒளிந்துகிடக்கிறது. தான் இப்போது உள்ள நிலமை போதாது என்ற ஒரு அடிப்படை எண்ணமே மற்றையவரின் நன்றி கொண்டு கணநேரம் உயர்ந்துவிடத் தலைப்படுகிறது. தன்மட்டில் திருப்த்தி உணரப்படுகையில் நன்றி அர்த்தமிழந்துபோகும். 

On 2/21/2018 at 4:41 PM, நிழலி said:

 இந்த உலகில் எத்தனையோ நல்ல விடயங்கள் இப்படியான சாதாரண மனிதர்களாலேயே நிகழ்த்தப்படுகின்றன.

இந்த மனநிலைன் பங்கு பழைய படங்களில் வரும் கணக்குப்பிள்ளைகளே ஒத்தே சமூகத்தில் இருக்கிறது. யாரோ உருவாக்கியதைப் பாதுகாப்பதில் தான் அது முடிகிறது. யாரோ போட்ட பெறுமதிகள் காப்பதில் தான் இந்த மனநிலை பங்குபெறுகிறது. உலகில் ஒரு குண்டூசி தன்னும் "இது இப்படித்தான்" என்ற மனநிலையில் கண்டறியப்படவில்லை. தேடல் வேண்டுமாயின் விழிப்பு அவசியம். 

இன்னுமொரு விதத்தில் யோசித்துப் பார்ப்போம். எமது வாழ்வு எத்தனை கொடைகளை நமக்கு வழங்கியுள்ளது. உடல் ஆரோக்கியம், காற்று முதற்கொண்டு கல்வி கடந்து செல்வம் கடந்து அன்பு கடந்து எத்தனை கொடைகள். இதையெல்லாம் நாளாந்தம் நன்றிகூர்ந்து கொண்டா அனுபவிக்கிறோம்?  எமக்கு எத்தனை கொடைகள் கிடைத்தன என்பதே எமக்கு நினைவில் வருவதில்லை. ஆனால்  ஒரு சக மனிதனிற்கு நாம் கொடுத்துவிட்டால் போதும், உடனே அவர்கள்  நம்மை பார்த்து நன்றிகூற வேண்டும் என்று நினைத்துக் கொள்வோம். இது ஒரு அடாத்து மனநிலை இல்லையா? அதாவது நமக்குக் கிடைத்த கொடைகள் எல்லாம் எமது உரிமைகள் நாம் அவற்றிற்கு உரித்தானவர்கள், ஆனால் மற்றவர்களிற்கு நாம் கொடுப்பது மட்டும் உதவி ஏனெனில் அவர்கள் நம்மட்டத்தில் இல்லாதவர்கள் என்ற ஒரு எண்ணம் கூட அங்கு இழையோடவில்லையா? 

இவற்றையெல்லாம் நாம் பிரித்து மேய்வது அவசியமே இல்லை. நன்றியினை எதிர்பார்க்கும் எண்ணம் எழுவதில் தப்பில்லை. ஆனால், இதயசுத்தியான தருணங்களில், எம்மை உந்திய உந்துதலிற்குச் சம்பந்தமில்லாது எழுகின்ற இந்த நன்றி எதிர்பார்ப்புப் பிறந்ததும், ஏன் அது பிறக்கிறது என்ற விசாரணையும் கூடவே சேர்ந்துபிறக்குமாயின், இந்த விவாதங்களிற்கு அவசியமே இல்லாது போய்விடும். 

Edited by Innumoruvan

On 22/02/2018 at 9:10 PM, தம்பியன் said:

உண்மை. வாய் கிழியப் பேசுபவர்கள் பலர் ஏதாவது செய்வோம் என்று கேட்டால் காணாமல் போய் விடுவார்கள்.

ஆனால் மேட்டிமையிலிருந்து தமது மேம்பட்ட தன்மையினால் தாங்கள் உதவுவது போலவும் உதவி பெறுபவர்கள் நன்றியுணர்வும் பழக்கவழக்கங்களும் இல்லாதவர்கள் போன்று ஒரு வித கரு படைப்புகளில் கூட உருவாகிவிடக் கூடாது என்பதனாலே அவ்வாறு கருத்திட்டேன்.

வாயால் வடை சுடுபவர்களிலும் இப்படி உதவுவோர் ஒரு படி நிலை மேலே இருக்கலாம். அதையும் தாண்டி நலிவுற்று இருக்கும் ஒருவரின் செயற்பாடுகளின் பின்னாலான சமூகக் காரணிகளைப் பார்க்க வேண்டும்.

அவர்கள் கடந்து வந்த உலகின் எந்த உயிரினமும் கடக்காத கொடுந்துன்பச் சூழலைப் பார்க்க வேண்டும். செயற்கைக் காலையும் ஊன்று கோலையும் இழந்து வயிற்றுக் காயத்துடன் அவதிப்பட்ட நண்பன் தன்னை எம்முடன் அழைத்துச் செல்லுமாறு இரைஞ்சிய போது காது கேட்காதது போல வந்தவர்கள் நாங்கள். இறந்த தந்தையை கூட கிடங்கு வெட்டி தாக்காமல் தெருப்பிணமாக விட்டு விட்டிட்டு வந்தவர்கள் நாம். கொடுமையாகக் காயம்பட்டு மருத்துவமனையில் நினைவின்றி இருந்த சிறிய தந்தை இறந்தால் நல்லது என எம் மனம் சிந்தித்தது. பசியுடன் அருகில் வந்த குழந்தை கண்டுவிடாமல் கொஞ்சமாய் மீதமிருந்த முட்டை மாவினை வாயில் அள்ளிப் போட்டவர்கள் நாம்.

எம்மக்களின் துன்பங்களுக்கு முடிவு கட்ட வேண்டுமென்று சின்ன வயதிலேயே ஈர மனம் கொண்டு புறப்பட்டதால் இந்த விலங்கிலும் மோசமான வாழ்நிலைச் சிந்தனை மாற்றத்திற்கு ஆளானோம். அப்பவே வெளிநாட்டுக்கு வெளிக்கிட்டு ஓடியிருந்தால் நாம் எல்லோரும் அன்னை திரேசா சீனில் வாழ்ந்திருப்போம். எனவே நலிவுற்று ஏழ்மையில் துடிப்பவர்களின் வினையாற்றலின் பின்னால் எத்தகைய சூழ்நிலைக் காரணங்களிருக்கும் என உணராமல் இருப்பதற்கு வர்க்கப் பண்புகளும் ஒரு காரணம் என்பது இந்தத் தம்பியின் புரிதல்

Super, தனித்துவமான சிந்தனைகள். 

நிறைய எழுதுங்கள் அண்ணா 

21 hours ago, Innumoruvan said:

இரண்டிற்கும் வித்தியாசம் இல்லை. 850 கொடுத்து ஜஸ்கிறீம் வாங்கினால் கடைக்காரனிற்கு வியாபாரம் கொடுத்தவரிற்கு ஜஸ்கிறீம். 850 கொடுத்து செருப்பு வாங்கினால் பயனர்க்குச் செருப்பு, கடைக்காரனிற்கு வியாபாரம், கொடுத்தவரிற்கு நன்றி தரும் கணநேர குளிர்ச்சி. ஜஸ்கிறீம் உண்டு குளிர்வதா நன்றி பெற்றுக் குளிர்வதா என்பது நுகர்வோரின் தெரிவு. இரண்டும் பரிமாற்றம். ஆதில் நாம் பேச ஏதுமில்லை என்பதே நான் சொல்லவந்தது. 

நன்றி எதிர்பாராமை மகான் நிலையல்ல. அது சுதந்திரவேட்கை. அதாவது, சக உயிரின் வாடல் இதயசுத்தியாய் என்னை ஏதேனும் செய்ய உந்துகிறது என்றால் அந்த உந்துதலிற்கான ஒரே வடிகால் செயல். அந்தச் செயலாற்றும் சுதந்திரம் எனக்கிருக்குமாயின் அது சுதந்திரம். மாறாக, எனது செயலிற்கு நன்றி என்று ஒரு எதிர்வினை மற்றையவரின் தயவில் கிடைப்பதை ஒரு மேலதிக தேவையாக நான் வைத்திருப்பின், இப்போ என் உந்துதல் பிரகாரம் நான் செயலாற்றும் சுதந்திரத்தை நான் இழந்துபோகிறேன். நன்றி கிடைப்பின் மட்டுமே என் செயல் முற்றுப் பெறும் என்ற மனவமைப்பிற்குள் நான் சிறைப்பட்டுப்போகிறேன். இதனால் தான் 'வலது கை கொடுப்பபது இடது கையிற்குத் தெரியக்கூடாது' என எம்மக்கள் சொல்லிவைத்தார்கள். இந்தச் சுதந்திரம் கொடுப்பவரிற்கு மட்டுமல்ல, பெறுபவரிற்கும் இதனால் சாத்தியப்படுகிறது. அதாவது, உதவி பெற்றவர், கடமை உணர்வில் சிறைப்படாது, பெற்ற உதவி கொண்டு வாழ எத்தணிப்பதற்குப் பதில் இரஞ்சினோமே என நினைத்துக் குறுகிப்போகாது வாழமுடிகிறது. எமது உந்துதலின் அடிப்படையே அதுதானே. முடிந்தால் பயனர் பிறர் சார்ந்து இரக்கத்துடன் வாழ்ந்துகொள்வார். உலகு இனித்திருக்கும்.

அடுத்து நன்றி எதிர்ப்பார்ப்பதில் தன்னம்பிக்கையீனம் மற்றும் தன்நிறைவின்மை ஒளிந்துகிடக்கிறது. தான் இப்போது உள்ள நிலமை போதாது என்ற ஒரு அடிப்படை எண்ணமே மற்றையவரின் நன்றி கொண்டு கணநேரம் உயர்ந்துவிடத் தலைப்படுகிறது. தன்மட்டில் திருப்த்தி உணரப்படுகையில் நன்றி அர்த்தமிழந்துபோகும். 

இந்த மனநிலைன் பங்கு பழைய படங்களில் வரும் கணக்குப்பிள்ளைகளே ஒத்தே சமூகத்தில் இருக்கிறது. யாரோ உருவாக்கியதைப் பாதுகாப்பதில் தான் அது முடிகிறது. யாரோ போட்ட பெறுமதிகள் காப்பதில் தான் இந்த மனநிலை பங்குபெறுகிறது. உலகில் ஒரு குண்டூசி தன்னும் "இது இப்படித்தான்" என்ற மனநிலையில் கண்டறியப்படவில்லை. தேடல் வேண்டுமாயின் விழிப்பு அவசியம். 

இன்னுமொரு விதத்தில் யோசித்துப் பார்ப்போம். எமது வாழ்வு எத்தனை கொடைகளை நமக்கு வழங்கியுள்ளது. உடல் ஆரோக்கியம், காற்று முதற்கொண்டு கல்வி கடந்து செல்வம் கடந்து அன்பு கடந்து எத்தனை கொடைகள். இதையெல்லாம் நாளாந்தம் நன்றிகூர்ந்து கொண்டா அனுபவிக்கிறோம்?  எமக்கு எத்தனை கொடைகள் கிடைத்தன என்பதே எமக்கு நினைவில் வருவதில்லை. ஆனால்  ஒரு சக மனிதனிற்கு நாம் கொடுத்துவிட்டால் போதும், உடனே அவர்கள்  நம்மை பார்த்து நன்றிகூற வேண்டும் என்று நினைத்துக் கொள்வோம். இது ஒரு அடாத்து மனநிலை இல்லையா? அதாவது நமக்குக் கிடைத்த கொடைகள் எல்லாம் எமது உரிமைகள் நாம் அவற்றிற்கு உரித்தானவர்கள், ஆனால் மற்றவர்களிற்கு நாம் கொடுப்பது மட்டும் உதவி ஏனெனில் அவர்கள் நம்மட்டத்தில் இல்லாதவர்கள் என்ற ஒரு எண்ணம் கூட அங்கு இழையோடவில்லையா? 

இவற்றையெல்லாம் நாம் பிரித்து மேய்வது அவசியமே இல்லை. நன்றியினை எதிர்பார்க்கும் எண்ணம் எழுவதில் தப்பில்லை. ஆனால், இதயசுத்தியான தருணங்களில், எம்மை உந்திய உந்துதலிற்குச் சம்பந்தமில்லாது எழுகின்ற இந்த நன்றி எதிர்பார்ப்புப் பிறந்ததும், ஏன் அது பிறக்கிறது என்ற விசாரணையும் கூடவே சேர்ந்துபிறக்குமாயின், இந்த விவாதங்களிற்கு அவசியமே இல்லாது போய்விடும். 

அருமை, தனித்துவமான சிந்தனைகள் 

நிறைய எழுதுங்கள் அண்ணா

Edited by Knowthyself

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கரு

ஆனால்  சொன்னவிதம்

கருவைவிட எழுத்தாளரை  அதிகம் முன்  நகர்த்துவதால்  தான்

விமர்சனங்களும்  அவ்வாறே  வருகிறது என்று தோன்றுகிறது..

இனி  ஒரு ஊரில்... (வேம்படி வேண்டாம்)

ஒரு Bus இல்  என்று  எழுதுங்கோ  சுமே

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் உதவி அவர் கால்களுக்கு கவசமாக உள்ளது அவருக்கு  கற்கள்  முள்ளுக்குத்தாது ஆனால் அந்த உதவியென்பது நன்றி அவர் மனதை தினம் குத்தும் குடையும் ஏனென்றால் அவரும் மனிதர்தானே 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

உங்கள் உதவி அவர் கால்களுக்கு கவசமாக உள்ளது அவருக்கு  கற்கள்  முள்ளுக்குத்தாது ஆனால் அந்த உதவியென்பது நன்றி அவர் மனதை தினம் குத்தும் குடையும் ஏனென்றால் அவரும் மனிதர்தானே 

முனிவர்,

நான் மேலே னொன்னதை பாருங்கள்.

அக்கா, தனக்கு முன்னர் நடந்த ஓர் அனுபவத்தை வைத்து உதவ முன்வந்தார்.

பெண்ணுக்கும், உதவி தேவைபபட்டதால் வாங்கிக் கொள்ள தயங்கவில்லை.

ஆனால் அந்த உதவி, சற்று அளவு கடந்த போது, எதற்காக என்ற சந்தேகம் வந்து, பெண்மைக்குரிய பாதுகாப்பு குறித்த உணர்வு உண்டாகி, அவ்விடத்தில் இருந்து நகர வைத்திருக்கும்.

கட்டாயமாக மானசீக நன்றி இருக்கும்.

இதற்குதான் சொன்னார்கள், ஆற்றில் போட்டாலும் அளந்தே போடுங்கள்... அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

உங்கள் உதவி அவர் கால்களுக்கு கவசமாக உள்ளது அவருக்கு  கற்கள்  முள்ளுக்குத்தாது ஆனால் அந்த உதவியென்பது நன்றி அவர் மனதை தினம் குத்தும் குடையும் ஏனென்றால் அவரும் மனிதர்தானே 

5 hours ago, விசுகு said:

நல்லதொரு கரு

ஆனால்  சொன்னவிதம்

கருவைவிட எழுத்தாளரை  அதிகம் முன்  நகர்த்துவதால்  தான்

விமர்சனங்களும்  அவ்வாறே  வருகிறது என்று தோன்றுகிறது..

இனி  ஒரு ஊரில்... (வேம்படி வேண்டாம்)

ஒரு Bus இல்  என்று  எழுதுங்கோ  சுமே

புது உறுப்பினர்கள் சிலர் நன்றாக எழுதுகிறார்கள். பார்க்க மகிழ்வாக உள்ளது... இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

புது உறுப்பினர்கள் சிலர் நன்றாக எழுதுகிறார்கள். பார்க்க மகிழ்வாக உள்ளது... இல்லையா?

ம்ம்  நிட்சயமாக மிக்க மகிழ்வாக இருக்கிறது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 23/02/2018 at 1:27 PM, Innumoruvan said:

இன்னுமொரு விதத்தில் யோசித்துப் பார்ப்போம். எமது வாழ்வு எத்தனை கொடைகளை நமக்கு வழங்கியுள்ளது. உடல் ஆரோக்கியம், காற்று முதற்கொண்டு கல்வி கடந்து செல்வம் கடந்து அன்பு கடந்து எத்தனை கொடைகள். இதையெல்லாம் நாளாந்தம் நன்றிகூர்ந்து கொண்டா அனுபவிக்கிறோம்?  எமக்கு எத்தனை கொடைகள் கிடைத்தன என்பதே எமக்கு நினைவில் வருவதில்லை. ஆனால்  ஒரு சக மனிதனிற்கு நாம் கொடுத்துவிட்டால் போதும், உடனே அவர்கள்  நம்மை பார்த்து நன்றிகூற வேண்டும் என்று நினைத்துக் கொள்வோம். இது ஒரு அடாத்து மனநிலை இல்லையா? அதாவது நமக்குக் கிடைத்த கொடைகள் எல்லாம் எமது உரிமைகள் நாம் அவற்றிற்கு உரித்தானவர்கள், ஆனால் மற்றவர்களிற்கு நாம் கொடுப்பது மட்டும் உதவி ஏனெனில் அவர்கள் நம்மட்டத்தில் இல்லாதவர்கள் என்ற ஒரு எண்ணம் கூட அங்கு இழையோடவில்லையா? 
 
இவை எல்லாவற்றுக்கும் ஒவ்வொருநாளும் சொல்லாவிட்டாலும் ஒருநாளாவது மனதிலாவது நன்றிகூறுகிறோமே இறைவனுக்குஅல்லது இயற்கைக்கு  இன்னுமொருவன்.

On 24/02/2018 at 2:28 PM, விசுகு said:

நல்லதொரு கரு

ஆனால்  சொன்னவிதம்

கருவைவிட எழுத்தாளரை  அதிகம் முன்  நகர்த்துவதால்  தான்

விமர்சனங்களும்  அவ்வாறே  வருகிறது என்று தோன்றுகிறது..

இனி  ஒரு ஊரில்... (வேம்படி வேண்டாம்)

ஒரு Bus இல்  என்று  எழுதுங்கோ  சுமே

அதுவும் சரிதான் அண்ணா

22 hours ago, தனிக்காட்டு ராஜா said:

உங்கள் உதவி அவர் கால்களுக்கு கவசமாக உள்ளது அவருக்கு  கற்கள்  முள்ளுக்குத்தாது ஆனால் அந்த உதவியென்பது நன்றி அவர் மனதை தினம் குத்தும் குடையும் ஏனென்றால் அவரும் மனிதர்தானே 

அந்தக் கோணத்தில் நான் நினைத்துப் பார்க்காதது தவறுதான்.

2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இவை எல்லாவற்றுக்கும் ஒவ்வொருநாளும் சொல்லாவிட்டாலும் ஒருநாளாவது மனதிலாவது நன்றிகூறுகிறோமே இறைவனுக்குஅல்லது இயற்கைக்கு  இன்னுமொருவன்.

பயனர் மனநிலை பற்றி இங்கு அதிகம் பேசப்பபட்டபோதும் அது சற்றும் உள்வாங்கப்படவில்லை என்பது புரிகிறது. சரி அதைவிட்டுவிடுவோம். கொடுத்தவர் நிலையில் இருந்து பார்ப்போம்;.

முதலாளித்துவம் எங்களோடு ஊறிப்போய்விட்டது. இதை ismங்களிற்கு வக்காலத்து வாங்குவதற்காகக் கூறவில்லை. மாறாக, முதலாளித்துவ சிந்தனை நமது சுயமதிப்பை எமக்குள் எல்லைகடந்து வளர்த்து வைத்திருக்கிறது. ஏனெனில் நாம் சந்தையின் அங்கங்கள். எப்படி சந்தையில் விற்றுவாங்கப்படும் ஒரு நிறுவனத்தின பங்கினை செயற்கைத் தனமாக, இலாப நோக்கில், அடிப்படையின்றி சந்தை வீங்கச்செய்யுமோ, அதுபோல் நுகர்வோரையும் அடிப்படையின்றி சந்தை வீங்கி உணரச்செய்கிறது. ஏனெனினல் நுகர்வோர் வீங்கியுணர்கையில் சந்தையால் வீங்க முடிகிறது. அதனால் இன்றைய உலகில் நன்றி போன்ற மிகச்சிறிய விடயங்களிற்குக் கூட பிரசங்கங்கள் அவசியமாகின்றன.

ஒரு வரியில் கூறுவதானால், தான் தனக்குள் உள்ளார்ந்து நன்றியுணர்வுடையவன், எவரிற்கேனும் எதையும் கொடுத்த மாத்திரத்தில் அவர்கள் தனக்கு நன்றி கூறவேண்டும் என எதிர்பார்க்க மாட்டான். காரணம், நன்றியுணர்வுடையவனிற்கு எடுத்தமாத்திரத்தில் தான் கொடுத்தது தன்னால் மட்டும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றல்ல என்பது புரிந்துவிடும். தான் கொடுத்ததை அடைவதில் தனக்குக் கிடைத்த கொடைகள் மனதில் வந்துவிடும். மாறாக, நன்றியெதிர்பார்க்கும் தருணங்களில், தான் கொடுத்தது தன்னால் மட்டும் சாத்தியமாக்கப்பட்ட தனது கெட்டிக்காரத்தனத்தின் வெளிப்பாடு என்ற எண்ணமே உள்ளுர வியாபித்துநிற்கிறது. அதனால் தான் தெருவில் தேங்காய் வழியில் பிள்ளையாரிற்கு உடைக்கப்பட்டபோதும் அருள் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக, இதில் முரண்நகை என்னவெனில், நன்றியெதிர்பார்ப்பு தான் உள்ளுர நன்றியறியாத் தருணங்களில் மட்டுமே சாத்தியம். அதனால்த் தான் கூறினேன், மற்றவரிடம் நன்றியெதிர்ப்பார்க்கையில் தனது நன்றியறிதலில் கவனம் செலுத்துதல் பயன் தரும் என்று. 

ஒரு சின்ன உதாரணத்தி;ற்கு எடுத்துக்கொண்டால், இன்றைய தேதிக்கு ஒரு மில்லியன் ஈழத்தமிழர்கள் உலகுபூராய் பரவி வாழ்வது இன்றைய நிலையின் எமது செல்வத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இந்தப் புலம்பெயர்ந்த தேச உள்நுழைதலில் எத்தனை காரணிகள் பங்கு செலுத்தின. எத்தனையோ பேரின் எத்தனையோ இழப்புக்ககள் இருந்தன. ஆனால் நம்மில் பலபேர் நான் மாணவ விசாவில் வந்தேன் இங்கு பிறந்தேன் என்று கூறித்திரிகிறோம். அதாவது நான் இங்கு வந்தது என்னால் மட்டும் எனது மூழைத்திறமையால் மட்டும் சாத்தியமானது என்று அடித்துக்கூறுகிறோம். ஆனால் அடிப்படை என்னவெனில், மாணவ விசாவாகட்டும் இன்னும் என்னதான் விசாவாகட்டும் (இங்கு பிறந்த அகதியின் பிள்ளை பற்றி பேசவே தேகையில்லை), ஒருவரை உள்நுழைய விடுவதில் ஏகப்பட்ட அரசியல் இருக்கிறது. ஒரு இனக்குழுமத்தின் விம்பம் எவ்வாறு உள்வாங்கப்பட்டிருக்கிறது, இக்குழுமத்தால் எமக்கு லாபம் உண்டா என்பது இருக்கிறது. 

இலங்கை எங்கிருக்கிறது என்றே தெரியாதிருந்த நாடுகளிற்குப் பெருந்தொகையில் அகதியாக வந்து உழைத்துயர்ந்து விம்பம் கட்டிய மக்கள் கூட்டம் ஏற்படுத்திய விம்பமே ஒரு புதிய இழைய தமிழன் மாணவ விசாகேட்கும் போது ஆட்சிசெய்கிறது. பெருந்தொகையாய் வந்தவர்கள் அகதியாய் வந்தார்கள். துரதிஸ்ரவசமாக முப்பது வருடகால இன்னல் மிகு போராட்டம் விட்டுச்சென்ற ஒரே லாபம் ஒரு மில்லியன் தமிழன் இன்று உலகெங்கும் வாழ்வது மட்டுமே. இது ஒரு சிறு உதாரணம், ஆனால் நமது செல்வத்தில் இப்டி எத்தனையோ காரணிகள் பங்கு செலுத்துகின்றன—உத்தியோகத்தில் மூழை வலுமட்டும் உயர்ச்சி தருவதில்லை. இருந்து ஆராய்ந்து பார்த்தால் எமது உயர்ச்சிக்கு உதவிய எத்தனையோ காரணிகள் இலகுவில் புலப்படும்.  ஆனால் இவற்றை நாம் சற்றும் சட்டைசெய்வதில்லை—எல்லாம் எமது கெட்டிக்காரத்தனம் என வீங்கி உணர்ந்துகொள்கிறோம். இல்லையெனில் ஊரில் வெறுங்காலோடு கொளுத்தும் வெயிலில் நடக்கும் ஒரு பெண்ணிற்கு நன்றிகேட்டுச் செருப்புக்கொடுப்போமா என்ன.

ஆண்டவனிற்கு நன்றிகூறுவது கூட உள்ளார்ந்த புரிதலின்றி லஞ்சம் போன்று, அல்லது பயம் சார்ந்து பல தருணங்களில் நடக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

துரதிஸ்ரவசமாக முப்பது வருடகால இன்னல் மிகு போராட்டம் விட்டுச்சென்ற ஒரே லாபம் ஒரு மில்லியன் தமிழன் இன்று உலகெங்கும் வாழ்வது மட்டுமே. இது ஒரு சிறு உதாரணம், ஆனால் நமது செல்வத்தில் இப்டி எத்தனையோ காரணிகள் பங்கு செலுத்துகின்றன

நான் ஒரு கதை எழுதலாம் என்ற ஐடியா (முன்னரே)  வைத்திருந்தேன். அதில் சாடைமாடையாகச் சொல்லவிருந்ததை மேலே சொல்லிவிட்டீர்கள். இப்ப கதை எழுதினால் உங்கள் ஐடியாவைக் கொப்பி பண்ணியமாதிரி வரப்போகின்றது. அதுவும் நல்லதுதான் :)

33 minutes ago, கிருபன் said:

நான் ஒரு கதை எழுதலாம் என்ற ஐடியா (முன்னரே)  வைத்திருந்தேன். அதில் சாடைமாடையாகச் சொல்லவிருந்ததை மேலே சொல்லிவிட்டீர்கள். 

எத்தனையோ அடுக்குகள் நிறைந்த அற்புதமான கதைக் கரு. அவசியம் எழுதுங்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இன்னுமொருவன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.