Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெற்றிலை மென்றவாறு மீன் விற்பனை செய்த பெண்ணுக்கு அபராதம்!

Featured Replies

வெற்றிலை மென்றவாறு மீன் விற்பனை செய்த பெண்ணுக்கு அபராதம்!

மீன்சந்தையில் வெற்றிலை மென்றவாறு மீன் விற்பனை செய்த பெண்ணுக்கு, நீதவான் தண்டம் விதித்து தீர்ப்பளித்துள்ள சம்பவமானது, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது, யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்துறை மீன்சந்தையில் வெற்றிலை மென்றவாறு மீன் விற்பனை செய்த பெண்ணுக்கு மூவாயிரம்(3000) ரூபாய் தண்டம் விதித்து, ஊர்காவற்துறை நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.

ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் இன்றைய தினம்(21.02.2018) பொது சுகாதரப் பரிசோதகர் குறித்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதன் மீதான விசாரணையின் போது குறித்த பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதனை அடுத்து மேற்படி பெண்ணுக்கு நீதிவான் 3000 ரூபாய் தண்டம் விதித்து தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Fine-for-lady-sale-fish-with--Betel

  • கருத்துக்கள உறவுகள்

"சுவிங்கம்" சாப்பிட்டுக்கொண்டு மீன் விற்க வேணும் ....கண்டியளோ... எல்லாத்தை புலம் பெயர்ந்தவையள் வந்து சொல்லிக்கொண்டிருக்க முடியாதுtw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

"சுவிங்கம்" சாப்பிட்டுக்கொண்டு மீன் விற்க வேணும் ....கண்டியளோ... எல்லாத்தை புலம் பெயர்ந்தவையள் வந்து சொல்லிக்கொண்டிருக்க முடியாதுtw_blush:

புத்தர் பெருமானே...! வெற்றிலை புனிதப் பொருள்.!! :)
அதனை மென்றுகொண்டு மாமிசம் விக்கக்கூடாது கண்டியளோ...!! :shocked:

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கு எங்கும் கட்டாக்காலி நாய்கள் நிறைந்து வீதிகள் எங்கும்  அவற்றின் கழிவுகள் அவற்றை கட்டுப்படுத்த வழியை கானம் இருக்கிற மனுஷரில் தான் வேதாளம் ஏறுது.

3 hours ago, பெருமாள் said:

வடகிழக்கு எங்கும் கட்டாக்காலி நாய்கள் நிறைந்து வீதிகள் எங்கும்  அவற்றின் கழிவுகள் அவற்றை கட்டுப்படுத்த வழியை கானம் இருக்கிற மனுஷரில் தான் வேதாளம் ஏறுது.

இந்த கட்டைகாலி நாய் பிரச்சனை, மிகவும் ஆபத்து.

விசர் நாய் கடித்து கவனிக்கா விட்டால் மரணம் நிச்சயம்.

இந்த பிர்ச்சனை பற்றி கவனிப்பார் யாரும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Dash said:

இந்த கட்டைகாலி நாய் பிரச்சனை, மிகவும் ஆபத்து.

விசர் நாய் கடித்து கவனிக்கா விட்டால் மரணம் நிச்சயம்.

இந்த பிர்ச்சனை பற்றி கவனிப்பார் யாரும் இல்லை.

நாய் பெருகுவதுக்கும் மகிந்த சிந்தனைக்கும் எனக்கு விளக்கம் தெரியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

நாய் கடித்து செத்தால் வருத்தம் வந்து செத்தால் தமிழன் தானே எனும் கவனிப்பின்மை .

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிலை மாலை போட்டு வணங்கவேண்டியவர் அனுமார்.

ஆனால் இங்கு வெற்றிலையில் தொடங்கி நாயில் வந்து நிற்பது கண்டணத்துக்குரியது. :224_monkey:

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பெருமாள் said:

நாய் கடித்து செத்தால் வருத்தம் வந்து செத்தால் தமிழன் தானே எனும் கவனிப்பின்மை .

கட்டாக்காலி
நாய்களை பிடித்தல்
மாநகர சபையின்
அதிகாரத்துக்குள் வருவன

அதற்கும் சிங்களத்துக்கும்
எந்த சம்பந்தமும் இல்லை

சிலர்
உடலில் எங்கு பட்டாலும்
காலை தூக்கி கொண்டு
தான்
வருவர்  என்று
ஊரில
சொல்வார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
On 2/21/2018 at 4:00 AM, நவீனன் said:

வெற்றிலை மென்றவாறு மீன் விற்பனை செய்த பெண்ணுக்கு அபராதம்!

தாயகத்தில் நாம் இருந்த காலத்தில் ,

வெற்றிலை போட்டபடியும்,கிளாசுக்குள் விரலைவிட்டபடி தண்ணீர் கொண்டுவந்து வைத்தும், சட்டையணியாத  வெறும்மேலுடன்,கையினால் உடம்பை ,அக்குள்,மூக்குகளை அடிகடி தடவியபடி துளாவியபடி இருக்கும் உபசரிப்பாளர்கள் இருந்த உணவகங்கள் சிலவற்றிற்கு சென்ற நம்மில் பலர்   இப்போது வெளிநாடுகளிலிருந்து போகும்போது முகம் சுளிக்காமல் அதே உணவகத்தில் சாப்பிட எத்தனைபேர் தயாராயிருப்பார்கள்?

தாயகத்தில் இருந்தபோது பொது சந்தைகளில் மீன்கள்,இறைச்சியின்மேல் இரைச்சலுடன் மொய்த்துக்கொண்டு இருக்கும் நீல கலர் பெரிய இலையான்களை  ஒரு கையால் விரட்டியபடி பையில் போட்டு தருவதை வாங்கிபோய் வீட்டில் சப்பு கொட்டி சாப்பிட்டவர்கள் இப்போது  அங்கே சுற்றுலாபோகும்போது அதை சகஜமா பார்க்க எத்தனைபேர் தயார்?

வரவேற்க்கப்படவேண்டிய தீர்ப்பு, உணவு மட்டுமல்ல, சுற்றுப்புறம் போன்றவற்றின் தரம் பேணுதல், சுகாதாரமாயிருத்தல் என்பவை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு வரவேற்க்கப்படவேண்டியவை,படிப்படியாக அனைத்து விடயங்களிலும் இந்த நடைமுறைகள் அமுல்படுத்தப்படணும், அதுவே ஒரு ஆரோக்கியமான சந்ததியை தமிழர் பகுதியில் விட்டு செல்லும்! 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, வைரவன் said:

கட்டாக்காலி
நாய்களை பிடித்தல்
மாநகர சபையின்
அதிகாரத்துக்குள் வருவன

அதற்கும் சிங்களத்துக்கும்
எந்த சம்பந்தமும் இல்லை

சிலர்
உடலில் எங்கு பட்டாலும்
காலை தூக்கி கொண்டு
தான்
வருவர்  என்று
ஊரில
சொல்வார்கள்

ஓகே உங்க வழிக்கே வருவம் வடகிழக்கில் பல்கி பெருகி வீதிக்கு வீதி நிற்க்கும் கட்டாக்காலி  நாய் கூட்டத்தை எந்த மநாகரட்சியும் ஏன் இதுவரை அழிக்க முயலவில்லை என்றாவது தெரியுமா ?

சும்மா நாங்க இன்கிருக்கிரம் எங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை என்கிற ரீதியில் கதை விட வேண்டாம் .

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, valavan said:

தாயகத்தில் நாம் இருந்த காலத்தில் ,

வெற்றிலை போட்டபடியும்,கிளாசுக்குள் விரலைவிட்டபடி தண்ணீர் கொண்டுவந்து வைத்தும், சட்டையணியாத  வெறும்மேலுடன்,கையினால் உடம்பை ,அக்குள்,மூக்குகளை அடிகடி தடவியபடி துளாவியபடி இருக்கும் உபசரிப்பாளர்கள் இருந்த உணவகங்கள் சிலவற்றிற்கு சென்ற நம்மில் பலர்   இப்போது வெளிநாடுகளிலிருந்து போகும்போது முகம் சுளிக்காமல் அதே உணவகத்தில் சாப்பிட எத்தனைபேர் தயாராயிருப்பார்கள்?

தாயகத்தில் இருந்தபோது பொது சந்தைகளில் மீன்கள்,இறைச்சியின்மேல் இரைச்சலுடன் மொய்த்துக்கொண்டு இருக்கும் நீல கலர் பெரிய இலையான்களை  ஒரு கையால் விரட்டியபடி பையில் போட்டு தருவதை வாங்கிபோய் வீட்டில் சப்பு கொட்டி சாப்பிட்டவர்கள் இப்போது  அங்கே சுற்றுலாபோகும்போது அதை சகஜமா பார்க்க எத்தனைபேர் தயார்?

வரவேற்க்கப்படவேண்டிய தீர்ப்பு, உணவு மட்டுமல்ல, சுற்றுப்புறம் போன்றவற்றின் தரம் பேணுதல், சுகாதாரமாயிருத்தல் என்பவை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு வரவேற்க்கப்படவேண்டியவை,படிப்படியாக அனைத்து விடயங்களிலும் இந்த நடைமுறைகள் அமுல்படுத்தப்படணும், அதுவே ஒரு ஆரோக்கியமான சந்ததியை தமிழர் பகுதியில் விட்டு செல்லும்! 

தீர்ப்பு சரியா பிழையா என்பதுக்கு முதல் இலையான் பெருகுவதுக்கு மாநகரட்ட்சி காரணம் எனும் அடிப்படை அறிவு விளங்கனும் எல்லாத்தையும் விட மாடு அடிக்கும் இடங்களை போய் பார்த்தால் தெரியும் அங்கு மாநகராட்ச்சி ஏன் போவதில்லை ?

அதே ஈ மொய்த்த மீனே லண்டன் வந்து விலைப்படுது என்ற உண்மையையும் விளன்கிகொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, வைரவன் said:

சிலர்

உடலில் எங்கு பட்டாலும்
காலை தூக்கி கொண்டு
தான்
வருவர்  என்று
ஊரில
சொல்வார்கள்

Bildergebnis für truck with load less trailer

பாவம் இந்தப் பாரவூர்தி... எந்தப்படுபாவி கல்லைவிட்டு எறிந்தானோ காலைத் தூக்கிக்கொண்டு ஓடுது. :shocked:

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பெருமாள் said:

ஓகே உங்க வழிக்கே வருவம் வடகிழக்கில் பல்கி பெருகி வீதிக்கு வீதி நிற்க்கும் கட்டாக்காலி  நாய் கூட்டத்தை எந்த மநாகரட்சியும் ஏன் இதுவரை அழிக்க முயலவில்லை என்றாவது தெரியுமா ?

சும்மா நாங்க இன்கிருக்கிரம் எங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை என்கிற ரீதியில் கதை விட வேண்டாம் .

ஊரில் என்ன நடக்குது
என்ன சட்டம் என்றாவது
அறிந்து கொள்ளுங்கள்

வடக்கு கிழக்கில்
மட்டுமல்ல
இலங்கை முழுதுமே
இந்த கட்டாக்காலி நாய்கள்
பிரச்சனை இருக்கு
தெற்கில் எங்கு பார்த்தாலும்
இப்படியான நாய்கள்

முந்தி இப்படியான நாய்களை
பிடிச்சு வால்களை
வெட்டிய பின்
கொன்று விட்டு
வால்களின் எண்ணிக்கையை
வைச்சு கணக்கு சொல்லுவினம்

இப்ப அவ்வாறு
செய்வதில்லை
சிங்கள பெளத்த நாட்டில்
இவ்வாறு செய்வது
பௌத்தத்துக்கு எதிர்
என்று செய்வதில்லை
(ஆனால் தமிழர்களை வகை
தொகை இன்று கொல்லலாம் )

புளு குரோஸ்  பீட்டா
போன்ற அமைப்புகளும்
நாய்கள் கொல்லப்படுவதற்கு
எதிராக குரல் கொடுத்து
தடுத்திச்சினம்

இதனால் தான் இப்ப
பெருந்தொகையாக
பெருகி போய் கிடக்கு

அதே நேரம்
Rabies வந்து
சாகும் ஆட்களின்
எண்ணிக்கையையும் வருடம்
ஒன்றுக்கு 50 இலும்
குறைவாக போயிட்டு

இந்த நாய்கள்
நாட்டு நாயகள்
மனுசரோட அனுசரிச்சு
மார்கழி மாதத்தில்
சோடி தேடி
ஊழையிடும் அப்பாவி நாய்கள் 

Edited by வைரவன்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வைரவன் said:

இப்ப அவ்வாறு
செய்வதில்லை
சிங்கள பெளத்த நாட்டில்
இவ்வாறு செய்வது
பௌத்தத்துக்கு எதிர்
என்று செய்வதில்லை
(ஆனால் தமிழர்களை வகை
தொகை இன்று கொல்லலாம் )

(மடியில் கட்டியிருந்த பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டுது ):14_relaxed:

அப்படி புத்த தர்மத்துக்கு எதிர் என்றால் அரசாங்கமே கட்டாகாலி நாய்களை தத்து எடுத்து வளர்க்கட்டுமே ஏனைய்யா பொதுமக்களுக்கு சுகாதார பாதிப்புகளை உருவாக்குவான் அந்த வருடம் ஒன்றுக்கு நாய் கடித்து மண்டையை போடும் 50 பேரில் உங்கள் எங்கள் சொந்தம் போனால் பரவாயில்லையா ? உங்கடை கணக்கு படி 50தானே பெரிய இழப்பு இல்லை அப்படித்தானே ?tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

 கட்டாக்காலி    நாய்களை முன்பு மாநகர சபை வண்டி கொண்டு வந்து பிடித்துக்கொண்டு போவார்கள். இதில் வளர்ப்பு நாய்களும் பிடிபட்டு சொந்தக்காரர் சண்டைபோட்டு மீட்ட்டதுண்டு, அதன்பின் இலக்கத்தகடு முறை கொண்டுவந்தார்கள். அதாவது இலக்கத்தகடு உள்ள நாய் வளர்ப்பு நாய், மற்றயவை கட்டாக்காலி நாய் என்று பிடித்தார்கள். அதன்பின் ஆமி இந்தக் கட்டாக்காலி நாய்களை தத்தெடுத்து தங்கள் காவலுக்கு முகாமில் வைத்திருந்தார்கள். எங்கள் கிராமத்தில் நாய்ப்பிடிப்பதுவும் நின்று போனது. நாய்கள் பெருகி தொல்லையாகி   மாநகர சபையில்   முறையிட்டபோது   மஹிந்தா கொண்டு வந்த சட்டத்தில் நாய்களை கொலை செய்வது தடை செய்யப்பட்டுள்ளதால் இனி நாய் பிடிக்கப்படாது என்று அறிவித்தார்கள். விசித்திரமான சட்டங்களும் நடைமுறைகளும்  நம்நாட்டில். எல்லாம் மஹிந்தாவுக்கும் அந்த புத்தருக்குந்தான் வெளிச்சம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.