Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விபத்தில் வைத்தியர் பலி!!!

Featured Replies

விபத்தில் வைத்தியர் பலி!!!

 

 

கிளிநொச்சி - பூநகரி பகுதியில் பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் அரச வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A32 யாழ் - மன்னார் பிரதான வீதி, மண்டக்கல்லாறை அண்மித்த பகுதியில் அதிக வேகமாக சென்ற வாகனம் கட்டுப்பாட்டை மீறி மரமொன்றுடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவத்தில் மன்னார் வைத்தியசாலையில் கடமையாற்றும் யாழ் கரவெட்டி பகுதியை சேர்ந்த 41 வயதான அரவிந்தன் எனும் வைத்தியரே  உயிரிழந்துள்ளார். 

சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

http://www.virakesari.lk/article/31370

  • தொடங்கியவர்

கிளிநொச்சி பூநகரி பகுதியில் விபத்து – வைத்தியர் பலி

Kili-accident-166.jpg?resize=800%2C450
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி பூநகரி பகுதியில் பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் அரச வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முழங்காவில் காவல்துறை பிரிவுக்குட்பட்ட A32 யாழ் மன்னார் பிரதான வீதி மண்டக்கல்லாறை அண்மித்த பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 

அதிக வேகமாக சென்ற வாகனம் கட்டுப்பாட்டை மீறி மரமொன்றுடன் மோதியதன் காரணமாக ஏற்பட்ட விபத்தில். மன்னார் வைத்தியசாலையில் கடமையாற்றும் யாழ் கரவெட்டி பகுதியை சேர்ந்த 41 வயதான வைத்தியர் ஒருவரே உயிரிழந்துள்ளார். எனத் தெரிய வருகிறது. சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை முழங்காவில் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

http://globaltamilnews.net/2018/69797/

 

அநியாய உயிர்ப்பலி!

வடக்கு-கிழக்கில் பணிசெய்ய முன்வரும் ஒருசில தமிழ் வைத்தியர்களில் ஒருவரது மரணம் கவலையானது. இவர்கள் கூடிய பொறுப்புடன் நடக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person

 

இவர் கந்தசாமி அரவிந்தன், 48 வயது. மன்னார் மாவட்ட வைத்திய அதிகாரி. ஹார்ட்லி கல்லூரி, பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை பழைய மாணவர் ஆவார். இவரை சிறு வயதில் இருந்தே நான் அறிவேன். இவரது  தாயார் ஆங்கில ஆசிரியர். இவரது தம்பியும், தங்கையும் மந்திகை வைத்தியசாலையில் வைத்தியர்களாக பணி புரிகிறார்கள். பல படித்த வைத்தியர்கள் வெளி நாடுகளுக்கு போக குடும்பமே சொந்த மண்ணில் சேவை செய்கின்றனர். இவரை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திப்போமா.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆழ்ந்த அனுதாபங்கள்!

ஆழ்ந்த அனுதாபங்கள்!

 

அந்த படத்தில் உள்ள வீதியில் இன்னுமொரு வாகனம் வந்தால் வழிவிட இருவாகனமும் வீதியின்  கரைப்பக்க்த்தால் ஓடினால்தான் விபத்து நடக்காமல் வாகன ஓட்டம் நடைபெறும் போல் உள்ளது  அல்லது எதிர் வாகனம் வழிவிடாமல் வந்தால் இப்படி மரத்தில் குத்துவதை தவிர வேறு வழியில்லை போல் தெரிகிறது காசை மிச்சபடுத்த வீதியை குறுக்கி விட்டார்களோ ?

  • கருத்துக்கள உறவுகள்

அரவிந்தன் எனது நெருங்கிய நண்பரின் அண்ணா. அவரையும் ஒரே பாடசாலை, ரியூசன் என்பதால் சிறு வயதில் இருந்தே தெரியும்.

அரவிந்தன் குடும்பத்தினருக்கும், சகோதரங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

 

10 hours ago, spyder12uk said:

அந்த படத்தில் உள்ள வீதியில் இன்னுமொரு வாகனம் வந்தால் வழிவிட இருவாகனமும் வீதியின்  கரைப்பக்க்த்தால் ஓடினால்தான் விபத்து நடக்காமல் வாகன ஓட்டம் நடைபெறும் போல் உள்ளது  அல்லது எதிர் வாகனம் வழிவிடாமல் வந்தால் இப்படி மரத்தில் குத்துவதை தவிர வேறு வழியில்லை போல் தெரிகிறது

எதிர் எதிராக வரும் இரண்டு பாரிய கொள்கல வாகனம் கூட சுலபமாக செல்லும் வகையில் அகலமுடைய வீதி அது.

அடிப்படைப் பக்குவம் உள்ளவர்கள் படத்தைப் பார்த்தால் வாகனம் எதிர்த்திசையில் சென்று மரத்துடன் மோதியிருப்பதை அறிந்துகொண்டிருப்பர்.

நித்திரை அல்லது அதீத வேகம் அல்லது இரண்டும் இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம்.

10 hours ago, spyder12uk said:

காசை மிச்சபடுத்த வீதியை குறுக்கி விட்டார்களோ ?

சண்டை முடிந்தவுடன் அபிவிருத்தி என்று பலநாடுகள் பெரும்தொகை பணத்தை அள்ளி வழங்கின. இந்த வீதி 2+2 என நாலு வழித்தடங்கள் கொண்ட அதிவேக வீதி என பஷில் ராஜபக்ச கும்பலினால் திட்டமிடப்பட்டு காசை ஒதுக்கி, அதை  1+1 என இரண்டு வழித்தடங்கள் கொண்ட சாதாரண வீதியாக அமைத்து 70% பணத்தை பஷில் ராஜபக்ச கும்பல் கொள்ளையடித்தது வேறுகதை! 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.