Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“பாலியல் வன்புணர்வு அல்ல – பெண்ணின் சம்மதத்துடன் ஆன்மீகப் பேரின்பத்தை கொடுத்தார்” நித்தியானந்தாவின் வழக்கறிஞர்

Featured Replies

“பாலியல் வன்புணர்வு அல்ல – பெண்ணின் சம்மதத்துடன் ஆன்மீகப் பேரின்பத்தை கொடுத்தார்” நித்தியானந்தாவின் வழக்கறிஞர்

nithyananda.jpg?resize=620%2C413
அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண், ஆன்மீக பேரின்பத்துக்காக, விருப்பப்பத்துடனேயே நித்யானந்தாவுடன் ‘செக்ஸ்’ உறவு வைத்து இருந்தார். அது பாலியல் வன்புணர்வு அல்ல. பெண்ணின் சம்மதத்துடன் உறவு கொள்வது வன்புணர்வு ஆகாது என பிரபல சுவாமியார் நித்தியானந்தாவின் வழக்கறிஞர் நாகேஷ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

பெங்களூர் அருகே ராமநகரம் பகுதியில் ஆசிரமம் நடத்தி வரும் சுவாமியார் நித்யானந்தா மீது அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண் பாலியல் வன்புணர்வு முறைப்பாட்டை செய்திருந்தார்.

 

இவர் சில வருடங்கள் பிடதி ஆசிரமத்தில் தங்கி இருந்தார். அப்போது “ஆன்மீக பேரின்பம்” என்ற பெயரில் தன்னை நித்யானந்தா பாலியல் வன்புணர்வு புரிந்ததாக காவற்துறையில் முறையிட்டு இருந்தார்.

அதன் அடிப்படையில் ராமநகரம் காவற்துறையினர், நித்யானந்தா மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்று அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து கடந்த 2012-ம் ஆண்டு நித்யானந்தா உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார். 2014-ல் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி அவருக்கு பரிசோதனை நடந்தது. இதில் அவர் ஆண்மையற்றவர் அல்ல என முடிவு வெளியானது. பரிசோதனை முடிவை கர்நாடக சி.ஐ.டி. காவற்துறையினர் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு ராமநகரம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது நித்யானந்தா சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் நாகேஷ், நித்யானந்தாவின் பெயரையும், புகழையும் கெடுப்பதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. புகார் கூறியிருக்கும் பெண் ஆசிரமத்தில் பல வருடங்கள் தங்கி இருந்தார். அந்த வகையில், ஆன்மீக பேரின்பத்துக்காக, விருப்பப்பத்துடனேயே நித்யானந்தாவுடன் ‘செக்ஸ்’ உறவு வைத்து இருந்தார். அது பாலியல் வன்புணர்வு அல்ல என வாதிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/2018/71356/

  • கருத்துக்கள உறவுகள்

அடி....செருப்பால...!

பிறகு எதற்கு அந்தப் பெண்... வழக்குப் பதிவு செய்திருக்கு...?

எனக்கு மட்டும் விளங்குதே இல்லை!

ஆன்மீகப் பேரின்பத்துக்கும்....பாலியல் உறவுக்கும் உள்ள தொடர்பு...என்ன?

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

ஒன்று சிற்றின்பம்....மற்றது பேரின்பம்..!

சிற்றின்பத்தின் தொடர்ச்சி தான்....பேரின்பம் போல உள்ளது!

பெண்ணின் சம்மதத்துடன் என்றால் வலுவான வாதம்தான்..

6 hours ago, புங்கையூரன் said:

அடி....செருப்பால...!

பிறகு எதற்கு அந்தப் பெண்... வழக்குப் பதிவு செய்திருக்கு...?

எனக்கு மட்டும் விளங்குதே இல்லை!

ஆன்மீகப் பேரின்பத்துக்கும்....பாலியல் உறவுக்கும் உள்ள தொடர்பு...என்ன?

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

ஒன்று சிற்றின்பம்....மற்றது பேரின்பம்..!

சிற்றின்பத்தின் தொடர்ச்சி தான்....பேரின்பம் போல உள்ளது!

 

நித்தி மடம் கார்பரேட் மடம். அங்கு நடப்பது ஆன்மீகம் என்ற போர்வையில் பெரும் வியாபாரம் மற்றும் அரசியல்.  இந்த வழக்கும் வியாபாரமாக இருக்கலாம். பெண் நஷ்ட ஈட்டை எதிர்பாரக்கலாம். இல்லை நியாயத்தை எதிர்பாரக்கலாம் இல்லை பெண்பின்னால் வேறு சிலர் இருக்கலாம். உண்மையை நாம் அறியப்போவதில்லை

ஆன்மீகம் அரசியல் வியாபாரம்  எல்லாம் ஓன்றுடன் ஒன்று தொடர்புடையது. ஒவ்வொருவருக்கும் இந்த ஆன்மீகம் என்ற வார்த்தையின் பொருள் வேறுபடுகின்றது. ஒருவருக்கு விரதமிருப்பது வழிபடுவது ஆன்மிகம். என்னுமொருவருக்கு பஜனை பாடுவது ஆன்மிகம். மதக்கொள்கைகளை பரப்புவது ஆன்மீகம். மத அரசியலை செய்வது ஆன்மீகம். நித்திபோல ஆட்கள் ஆசிரமங்கள் பள்ளிகள் கல்லூரிகள் வைத்து நடத்துவது ஆன்மீகம். அமைதியாய் இருப்பதும் அடுத்தவரை துன்புறுத்தாமல் இருப்பதும் ஆன்மீகம். இப்படியாக இந்த ஆன்மீகம் என்பதற்கு ஒரு வரைவிலக்கணம் இருப்பதாக தெரியவில்லை. சிற்றின்பம் பேரின்பம் என்று பிரிப்பதற்கு ஒன்றும் இல்லை என்றே நினைக்கின்றறேன். . கலவி படைப்புடன் தொடர்புடையதால் அதை கடவுள் என்னும் அர்த்ததுடன் அணுகமுடியும். காமத்தில் இன்பம் என்பதற்கு இடமில்லை. இன்பம் போல் உணரப்படும் ஒன்று அதன் நீட்சியில் பல துன்பம் உண்டு. அதனால் காமத்தின் ஊடாக பேரின்பம் என்பது சாத்தியமாகப் படவில்லை. 

எனினும் எண்ணங்கள் சிந்தனைகள் ஒருவருக்கொருவர் வேறுபடும். 

 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, சண்டமாருதன் said:

... ஒவ்வொருவருக்கும் இந்த ஆன்மீகம் என்ற வார்த்தையின் பொருள் வேறுபடுகின்றது. ஒருவருக்கு விரதமிருப்பது வழிபடுவது ஆன்மிகம். என்னுமொருவருக்கு பஜனை பாடுவது ஆன்மிகம். மதக்கொள்கைகளை பரப்புவது ஆன்மீகம். மத அரசியலை செய்வது ஆன்மீகம். நித்திபோல ஆட்கள் ஆசிரமங்கள் பள்ளிகள் கல்லூரிகள் வைத்து நடத்துவது ஆன்மீகம். அமைதியாய் இருப்பதும் அடுத்தவரை துன்புறுத்தாமல் இருப்பதும் ஆன்மீகம். இப்படியாக இந்த ஆன்மீகம் என்பதற்கு ஒரு வரைவிலக்கணம் இருப்பதாக தெரியவில்லை...

...எனினும் எண்ணங்கள் சிந்தனைகள் ஒருவருக்கொருவர் வேறுபடும்.

சாமிகளே,

'கடவுளை மனப்பூர்வமாக வணங்கி, நீயே அனைத்துமாக இருக்கிறாய் எனக்கு உன்னை தவிற வேறு யாரும் தெரியாது, உன்னை தவிற வேறு யாரும் கிடையாது, எம்மை  நீயே வழிநடத்தி செல் என இறைவனிடம் சரணடைந்து, நித்தம் தம் கடமைகளை செய்வதுதான் ஆன்மீக வாழ்க்கை' என அறிந்துள்ளேன்..

ஆனால் மேலேயுள்ள எல்லாவற்றையும் (கபடங்களையும்) ஒரே பெயரில் இணைத்து பொத்தம் பொதுவாக சொன்னால், எப்படி ஐயா..? :)

இப்படி பொதுமைபடுத்தினால், இந்து மதத்தையே ஒரு வரையரைக்குள் அடக்க முடியாது..!

16 minutes ago, ராசவன்னியன் said:

சாமிகளே,

'கடவுளை மனப்பூர்வமாக வணங்கி, நீயே அனைத்துமாக இருக்கிறாய் எனக்கு உன்னை தவிற வேறு யாரும் தெரியாது, உன்னை தவிற வேறு யாரும் கிடையாது, எம்மை  நீயே வழிநடத்தி செல் என இறைவனிடம் சரணடைந்து, நித்தம் தம் கடமைகளை செய்வதுதான் ஆன்மீக வாழ்க்கை' என அறிந்துள்ளேன்..

ஆனால் மேலேயுள்ள எல்லாவற்றையும் (கபடங்களையும்) ஒரே பெயரில் இணைத்து பொத்தம் பொதுவாக சொன்னால், எப்படி ஐயா..? :)

இப்படி பொதுமைபடுத்தினால், இந்து மதத்தையே ஒரு வரையரைக்குள் அடக்க முடியாது..!

பொத்தம் பொதுவாக நான் சொல்லவில்லை நடமுறையில் உள்ளதை கூறினேன். நித்தி ஆன்மீகப்பணிசெய்கின்றரார் அப் பணிக்குள் பாலியல் பேரின்பம் உட்பட பல செயல்கள் அடங்கியுள்ளது. ரஜனிகாந் ஆன்மீக அரசியல் செய்கின்றார். இந்து பரிவாரங்கள் பாபர் மசூதியை இடித்ததும் இதற்குள் வரும். ஆன்மீகம் என்பதை நீங்கள் என்னவாக புரிந்துகொள்ள விருப்பப் படுகின்றீர்களோ அவ்வாறே செய்யலாம். மேலே நீங்கள் நீல எழுத்தில் குறிப்பிட்டுள்ளது உங்களது ஆன்மீக வழி. 

இந்து மதம் என்பதும் அப்படித்தான். நாம் பெரும்பாலும் சைவர்களாக இருந்தோம்,  வைணவவர்களாகவும் இருந்தோம். இப்போது இந்து என்கின்றோம். ஐயனர் கருப்பசாமி ஆயிரக்கணக்கான அம்மன்கள் சிறு தெய்வங்கள் குல தெய்வங்கள் எல்லாம் தனித்தனியானது அவற்றை இந்து என்பதற்குள் அடக்க முற்படுவது சாத்தியமில்லை இருந்தாலுபொதுவாக இந்து என்கின்றறோம். இந்த இந்து என்பதற்குள் சாயிபாபாவும் சீரடிபாபாவும் நித்திபோன்ற ஆட்களும் என எல்லமும் அடங்குகின்றது. 

ஆன்மீகம் இந்து மதம் என்ற இந்த இரண்டு புரிதல்களில் இருந்தும் ஏதோ ஒருவகையில் சித்தர்கள் வழி மற்றும் வள்ளலார் வழி சற்று தனித்துவமாக நிற்கின்றது என்பது எனது தனிப்பட்ட உணர்வு. 

 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, சண்டமாருதன் said:

... இந்த இந்து என்பதற்குள் சாயிபாபாவும் சீரடிபாபாவும் நித்திபோன்ற ஆட்களும் என எல்லமும் அடங்குகின்றது. 

ஆன்மீகம் இந்து மதம் என்ற இந்த இரண்டு புரிதல்களில் இருந்தும் ஏதோ ஒருவகையில் சித்தர்கள் வழி மற்றும் வள்ளலார் வழி சற்று தனித்துவமாக நிற்கின்றது என்பது எனது தனிப்பட்ட உணர்வு.

இந்த பஜனை கோஷ்டிகளையெல்லாம் இந்துவின் ஒரு பகுதியென அடையாளப்படுத்தாதீர்கள்..

இவர்களெல்லாம் பூசாரிகள், அவ்வளவே அவர்களுக்கான மதிப்பு..!

இப்படியே இன்னும் சிலநாள் போனால் அறுபத்து மூன்று நாயன்மார்கள் லிஸ்டில் இவர்களையும் சேர்த்துவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புங்கையூரன் said:

அடி....செருப்பால...!

பிறகு எதற்கு அந்தப் பெண்... வழக்குப் பதிவு செய்திருக்கு...?

எனக்கு மட்டும் விளங்குதே இல்லை!

ஆன்மீகப் பேரின்பத்துக்கும்....பாலியல் உறவுக்கும் உள்ள தொடர்பு...என்ன?

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

ஒன்று சிற்றின்பம்....மற்றது பேரின்பம்..!

சிற்றின்பத்தின் தொடர்ச்சி தான்....பேரின்பம் போல உள்ளது!

ஒன்று வெள்ளித்திரை மற்றது சின்னத்திரை அவ்வளவுதான்......!  tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப எல்லா மதத்திலையும் ஆன்மீகத்தை பாலியலோடை  கலந்துதான்   புகட்டுகின்றார்கள்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 18/03/2018 at 9:35 PM, புங்கையூரன் said:

அடி....செருப்பால...!

பிறகு எதற்கு அந்தப் பெண்... வழக்குப் பதிவு செய்திருக்கு...?

எனக்கு மட்டும் விளங்குதே இல்லை!

ஆன்மீகப் பேரின்பத்துக்கும்....பாலியல் உறவுக்கும் உள்ள தொடர்பு...என்ன?

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

ஒன்று சிற்றின்பம்....மற்றது பேரின்பம்..!

சிற்றின்பத்தின் தொடர்ச்சி தான்....பேரின்பம் போல உள்ளது!

ஆ.... அபச்சாரம், அபச்சாரம் !

ஆச்சிரமத்துள் செருப்பு கொண்டு போகேலாது.

உங்களுக்கு பொறாமை.... முடிந்தால்... ஒரு ஆச்சிரமம் ஆரம்பீங்க பாப்பம்...

லோக்கல் கெழவி முனியம்மாவே வராது... எப்படி மினியம்மாஸ் வருவினமாம்...

அதெல்லாம் ஒரு மச்சம் இருக்கோணும்.....

நித்தியர் பெண்களிடம் போகவில்லை. அவரது ஆச்சிரமத்துக்கு அவர்கள் வருகின்றனர்.

*****

சிற்றின்பம் ஊடாக பேரின்பம் என்று அமெரிக்கர்களை கிறங்க வைத்த, ரஜனீஸ் சாமீயார் பற்றி கேள்விப்படவில்லையோ.

ஆண், பெண் உடல்கள் உறவு கொண்ட நிலையை அர்த்த நாரீஸ்வர நிலைக்கு ஒப்பிட்டு, அந்த நிலையில் மனதை ஒருமுகப்படுத்தி, ஓம் எனும் பிரணவ மந்திரத்தை சொல்வதே இவர் போதனை.

கிறங்கிய பக்த கோடிகள் அள்ளிக் கொடுத்த பரிசுகளில் 72 ரோல்ஸ் ரோயிஸ் கார்களும் அடக்கம்.

பயந்து போன அமெரிக்க அரசு, அவரை இந்தியாவிற்கு deport பண்ணியது.

Osho_Drive_By.jpg

Rajneesh greeted by sannyasins on one of his daily "drive-bys" in Rajneeshpuram

Osho.jpg

 

Wild%20Wild%20Country.jpg?itok=TD5oqJne

Image result for swami nithyananda

Bhagwan Shree Rajneesh with Ma Anand Sheelaகடைஸ்ஸ்ஸ்சீ.... இரண்டு படங்களில் ஏதாவது வித்தியாசம்?

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.