Jump to content

பெண் பார்க்கப் போறேன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பெண் பார்க்கப் போறேன்

அவர் ஒரு அங்கீகாரம் பெற்ற சீட்டுப்பிடிப்பாளர். சொந்தமாக கார், அதை ஓட்டுவதற்கு ஒரு ஆள், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர எடுபிடிகள் என எல்லாமே அவரிடம் இருந்தன. அத்தோடு முக்கியமாகப் பல பெண்களும் அவருக்கு நெருக்கமாக இருந்தார்கள். ஒருநாள், தனது குடும்பத்தார், நெருக்கமானவர்கள், எடுபிடிகள், பழகிய பெண்கள், சேர்த்து வைத்த சொத்துக்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு மாரடைப்பு வந்து தனியாளாகச் செத்துப்போனார்.

தந்தையின் இறப்புக்குப் பின் அவரது மூத்தமகன் கோபாலகிருஸ்ணன் அரியணை ஏறினான். தகப்பனைப் போலவே எடுபிடிகளுடன் மகனும் தொழிலை நடத்தத் தொடங்கினான். மிக விரைவிலேயே தந்தையை விட அதிதீவிரமாகப் பல பெண்களோடு நெருக்கமானான். தொழிலை விரிவாக்க, நகரத்தில் அடைவுக் கடை ஒன்றையும் பகவான் கிருஷ்ணர் பெயரில் தொடங்கினான்

சீட்டுக்காசை நேரத்துக்கு கட்ட முடியாத பெண்கள், அவனை நேரில் சந்தித்து  கண்ணீர் கசிந்தால் போதும் நெஞ்சுருகி, மனம் வருந்தி, “ஒரு பிரச்சினையும் இல்லை. அடுத்த மாசம் சேர்த்துக் கட்டுங்கோஎன்று ஆறுதல் சொல்வான். சீட்டுக் கட்டுவதில்தான் இந்த நிலை என்றில்லை. அடகுக்கடையிலும் ஒரு விளையாட்டு நடந்து கொண்டிருந்தது. நகை அடகு வைத்து பணம் எடுக்கும் பெண்கள், “அண்ணா, ஒரு அவசரம். ஒரு கலியாண வீடொண்டுக்குப் போகோணும். இண்டைக்கு ஒருநாள் அடகு வைச்ச நகையைத் தந்தால், கலியாண வீட்டுக்குப் போட்டிட்டு காலமை முதல் வேலையா கொணர்ந்து தந்திடுவன்என்று விண்ணப்பம் வைத்தால், மனது இளகி விடுவான். அதற்கான காரணம், பெண்கள் அவனைஅண்ணா.. அண்ணா..’ என்று அழைக்கும் போது அவனுக்கு மட்டும் அதுகண்ணா..கண்ணா..’ என்று கேட்கும். அதனால்தான்  மறு பேச்சு இல்லாமல் கருணை மிகுந்து நகைகளை அவர்களிடம் கொடுத்து விடுவான்.

கோபாலகிருஷ்ணனின் தாய்க்கு கவலை பிடிக்க ஆரம்பித்து விட்டது. தந்தை குடும்பமாக இருந்து கொண்டுதான் அவ்வப்போது வெளியே சாப்பிடப் போய்க் கொண்டிருந்தார். மகனோ வெளிச்சாப்பாட்டிலேயே விழுந்து கிடந்தான். அதற்கான தீர்வுகல்யாணம் கட்டிவைஎன்று நெருங்கியவர்கள் ஆலோசனை சொல்ல, கோபாலகிருஸ்ணனுக்கு வசதியான குடும்பத்தில் அவனது தாய் திருமணம் செய்து வைத்தார். புதுப்பெண்டாட்டியோடுகோபாலகிருஸ்ணனுக்கு வாழ்க்கை இனிக்க ஆரம்பித்து விட்டது. தனது எடுபிடிகளிடம் வேலைகளை எல்லாம் பகிர்ந்து கொடுத்து விட்டு மனைவியோடு அந்தப்புரத்தில் உல்லாசமாக இருக்க ஆரம்பித்தான்.

“உடையவன் இல்லாவிட்டால் ஒரு முழம் கட்டைஎன்பார்கள். சீட்டுக்களுக்கான காசுகள் சரியாக வந்து சேரவில்லை. அடகு கடையிலும் திருப்பித் தருகிறோம் என்று வாங்கிய நகைகள் பல வராமலேயே போயின. எடுபிடிகள் மெதுமெதுவாக குட்டி முதலாளிகளாக உருவெடுக்க ஆரம்பித்தார்கள். அதில் ஒரு எடுபிடி தானும் ஒரு சீட்டுப் பிடிப்பாளனாகவே மாறிப்போனான். அநேகமாக முழுவதுமாக எல்லாம் சுரண்டப்பட்டதுக்குப் பின்னரே கோபாலகிருஸ்ணனுக்கு  நிலமை புரிந்தது. முதலாளிக்கு விபரம் போய் விட்டது என்பது தெரிந்த போது, இனி இருப்பது பயனில்லை என்பதை புரிந்து கொண்ட எடுபிடிகள் சுருட்டியதோடு காணாமல் போனார்கள். அவர்கள் எல்லாம் எங்கே போய் ஒளிந்தார்கள் என்று தேடிப்பார்க்கக் கூட கோபாலகிருஸ்ணனிடம் இப்பொழுது காரும் இல்லை அதை ஓட்டுபவரும் இல்லை.

கோபாலகிருஸ்ணனின் வீட்டில் சீட்டுக்கு பணம் கொடுத்தவர்களின் முற்றுகை ஆரம்பமாயிற்று. ஆளாளுக்கு ஏதாவது ஒரு பதிலை சொல்லிச் சமாளித்துக் கொண்டிருந்தான். ஒருநாள் இரவு, மனைவியை மட்டும் விட்டு விட்டு எடுபிடிகள் போல் அவனும் காணாமல் போய்விட்டான்

ஒவ்வொருநாளும் வீட்டுக்கு முன்னால் திரளும் கூட்டம் தரும் அரச்சனைகளைத் தாங்கமுடியாமல் கோபாலகிருஸ்ணனது மனைவி தன் தாய் வீட்டுக்குப் போய்விட்டாள்.

சீட்டுக் கட்டி பணத்தை இழந்தவர்கள் மட்டுமல்ல சீட்டுத் தவணைக்கு பணம் கட்டாமல் ஏய்த்தவர்களும் கோபால்கிருஷ்ணனைப் பற்றி ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

“கொழும்புக்கு ஓடிட்டான்என்றொரு கதை வந்தது.

“இல்லை இல்லை அவன் கொழும்புக்கு ஓடியிருக்க மாட்டான். இந்தியாவுக்குப் போயிருப்பான்ஒரு சிலர் மறுதலித்தனர்.

“அவன் கொழும்புக்கும் போகேல்லை. இந்தியாவுக்கும் போகேல்லை. அவன்ரை மனுசி வீட்டிலைதான் பதுங்கியிருப்பான்பலரின் கருத்து இப்படி இருந்தது.

“அதுதான் சரியா இருக்கும். அவனாலை பெண்சாதியை விட்டுட்டு ஐஞ்சு நிமிசம் கூட இருக்கேலாது. எல்லாருக்கும் போக்கு காட்டுற போலை, மனுசியை தன்ரை வீட்டிலை இருக்க விட்டுட்டு அவன் போய் மனுசி வீட்டிலை ஒழிச்சிருப்பான். பேந்து மனுசியும் அவனோடை போய்ச்சேர்ந்திட்டாள்

“அவன்ரை மனுசி வீட்டை சரியா நோட்டம் விட்டால். அவனை கோழிக்குஞ்சு பிடிக்கிற மாதிரி அமத்திப் போடலாம்

பலர் இப்படி ஆளாளுக்குப் புலம்பித் திரியும் போதுதான் இந்தப் பத்திக்குள் ஒரு அப்பாவியாக நான் உள்ளே நுளைகிறேன்.

கோபாலகிருஷ்ணனின் மனைவியின் தம்பி என்னைச் சந்திக்க வந்ததில் இருந்து என் பங்கு இங்கே ஆரம்பமாகிறது.

“தன்னை வந்து ஒருக்கால் சந்திக்கச் சொல்லி உங்களிட்டை அக்கா சொல்லச் சொன்னவ” 

கோபாலகிருஷ்ணனுடன் எனக்கு நல்ல பழக்கம் இருந்திருக்கிறது. அவனது வீட்டுக்குப் போயிருந்த பொழுதுகளில் அவனது மனைவியைப் பார்த்திருக்கிறேன். அமைதியான, அடக்கமான, வெள்ளையான அழகான பெண் அவள்

கணவன் எங்கே இருக்கிறான் என்று  தெரியாத நிலையில் எதற்காக என்னை வந்து சந்திக்கச் சொல்லி ஆள் அனுப்பியிருக்கிறாள்?

 

இப்பொழுது உங்களிடம் எழும் கேள்விகளைப் போலவே என்னுள்ளும் அன்று பல கேள்விகள் பிறந்தன.

அன்று மாலையே கோபாலகிருஷ்ணனின் மனைவியை அவளது வீட்டில் தனியாகப் போய்ச்  சந்தித்தேன்

என்னிடம் கேட்பதில் ஒரு கூச்சம் இருப்பது அவளது வார்த்தைகளின் தடுமாற்றத்தில் தெரிந்தது. தயக்கத்துடன் நிலத்தைப் பார்த்தபடியே என்னுடன் கதைத்தாள். அவள் என்னிடம் அப்படிக் கேட்டபோது எனக்கு கொஞ்சம் திகைப்பாகத்தான் இருந்தது. ஊருக்குத் தெரிந்தால், என்னை எல்லோரும் பிடித்து உதைப்பார்களே என்ற பயமும் சேர்ந்து கொண்டது. ஆனாலும் அவளது நிலையை  நான் உணர்ந்திருந்ததால், அவள் அப்படிக் கேட்ட பொழுது என்னால் மறுக்க முடியவில்லை.

EB5_C9_A0_E-1_B5_F-4_B7_A-8_D60-_A7872_A

ன்னைத் தெரிந்தவர் ஒருவர் ஒருநாள் வீதியில் என்னை மறித்தார். அவருக்கு எனது தந்தை வயதிருக்கும்.

கவி, நீ பயங்கரமான ஆளடா. பாத்தால் அப்பாவி மாதிரி இருக்கிறாய். வேலையை காட்டிட்டாய்” 

எனக்கு அவர் சொன்னதன் அர்த்தம் விளங்கவில்லை.

“என்ன முழிக்கிறாய்? அறைக்குள்ளை நடந்தாலும் அம்பலத்துக்கு வராமல் போகுமே?” அவரது பேச்சில் ஏளனம் தெரிந்தது.

“நீங்கள் என்ன சொல்ல வாறீங்கள் என்று சத்தியமா எனக்கு விளங்கவேயில்லை

“டேய்..டேய் சும்மா சுத்தாதை. கோபாலகிருஷ்ணனின்ரை பெண்சாதி நேற்று, வயித்தை தள்ளிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்துட்டுப் போறாளாம். கோபாலகிருஷ்ணனும் ஊரிலை இல்லை. நீதானே இராப் பகலா அவளை காரிலை ஏத்திக் கொண்டு திரியிறியாம்சொல்லும் போதே அவரது இடது கண் சிமிட்டியது.

இப்படி நடந்து விடும் என்று முன்னரே நான் கணித்திருந்தால், அன்று அவள் என்னிடம் கேட்டபோது நான் உடன்பட்டிருக்க மாட்டேன். அவள்தான் கவனமாக இருந்திருக்க வேண்டும். யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காகவே  இரவில் ஒன்பது மணிக்குப் பிறகும் அதிகாலை நான்கு மணிக்கு முன்னதாகவும் அவள் வீட்டுக்கு என் போக்கு வரத்து இருந்தது. யாருமே காணமாட்டார்கள் என்று  நான் இருட்டிலே போய் வந்தது இப்பொழுது சந்தியில் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

எண்ணையை ஊற்றிக் கொண்டு எத்தனை கண்கள், முதலை போல் வாய் பிளந்து எவ்வளவு பெரிய பெரிய வாய்கள் எங்களுடைய ஊருக்குள் இருக்கின்றன என்பது அபோதுதான் எனக்கு நன்றாகத் தெரிய ஆரம்பித்தது.

என் வீட்டுக்குப் போனால், அம்மாவின் பார்வையில் குளிர்ச்சி குறைந்திருந்தது.

இராத்திரி லேற்றா வாறாய். விடிய வெள்ளணை எழும்பிய ஓடுறாய். ஏன் வீட்டிலை பேசாமல் இருக்கேலாதோ? கொப்பர் சொல்லச் சொன்னவர். சபாபதிப்பிள்ளையாரின்ரை பேத்தியின்ரை சாதகம் பொருந்தி வந்திருக்காம்

ஆக வீட்டில் எனக்குப் பெண்பார்த்து விட்டார்கள்.

கோபால கிருஷ்ணனின் மனைவி வீட்டுக்கு நான் போயிருந்த பொழுது அன்று நடந்ததை யாருக்கும் நான் சொல்லவில்லை

அன்று நான் அவளது வீட்டுக்குப் போன போது, அவள் தயங்கியபடியேதான் என்னிடம் கேட்டாள்அவர் என்னைச் சந்திக்க விரும்புறார். ஐஞ்சு கிலோ மீற்றர் தள்ளித்தான் இருக்கிறார். அவர் இஞ்சை வரேலாது. நான்தான், அதுவும்  யாராவது கூட்டிக்கொண்டு போனால்தான்.... வேறை ஆரையும் கேக்க வேண்டாம். உங்களிட்டை மட்டும் கேக்கச் சொல்லி எனக்கு கடுதாசி குடுத்து அனுப்பியிருக்கிறார். அதுதான்....”

யாருடைய துணையுமில்லாமல் தவித்துக் கொண்டிருந்த அவளது நிலையைக் கண்டதும் என்னால் மறுக்க முடியவில்லை. அன்று மாலையே எனது காரில் அவளை ஏற்றிக் கொண்டு அவள் சொன்ன இடத்தில் இருந்த வீட்டில் கொண்டு போய் விட்டேன்.

இந்த வேலை என்னுடன் ஒட்டிக் கொண்டது. இரவில் கூட்டிக்கொண்டு போய் கோபாலகிருஷ்ணனிடம் விடுவதும் மறுநாள் காலையில் அதுவும் கோழி கூவும் நேரம் மீண்டும் போய் கூட்டிக் கொண்டு வந்து அவளது வீட்டில் விட்டுவிடுவதுமாக  அந்த விளையாட்டு பல நாட்கள் தொடர்ந்தன.

முப்பத்தைந்து வருடங்களாயிற்று, இன்றும் வீட்டில் எனது மனைவிக்கும் எனக்கும் சண்டை வரும் பொழுதெல்லாம்உன்னாலை தானடா நான் கலியாணம் கட்ட வேண்டி வந்தது” என்று  கோபாலகிருஷ்ணனைத்தான் திட்டிக் கொண்டிருக்கிறேன்.

 

கவி அருணாசலம்

19.03.2018

 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடைகளில் சிப்பந்தியாக இருந்த எத்தனையோ பேர் காலப் போக்கில் பக்கத்திலேயே புதிய கடை திறந்து பழைய முதலாளியைக் கூப்பிட்டு அவர் கையாலேயே திறப்பிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோபாலகிருஸ்னனைத் திட்டக் கூடாது கவி......."உன்னாலதானடா சண்டை பிடிக்க எனக்கு ஒரு மனைவி கிடைத்தாள் என்று வாழ்த்த வேண்டும்.......!  tw_blush:

Posted

அது சரி ... கோபாலகிருஷ்ணணும் அவரோட மனுசியும் இப்ப எங்கே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதென்னப்பு ஒரே கூத்தாக இருக்கிறது..?

கலியாணம் என்றதும் 'ஜொள்ளு' விட்டுக்கொண்டு தலையாட்டி, பேரப்பிள்ளைகள் வரை செல்ல வேண்டியது.. ஆனால் தகராறு/பிரச்சனை வந்தால், பிறர் மீது பழியை போடுவது..!  why-us.gif

நல்ல எண்ணம்..! moderateurnon.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

கடைகளில் சிப்பந்தியாக இருந்த எத்தனையோ பேர் காலப் போக்கில் பக்கத்திலேயே புதிய கடை திறந்து பழைய முதலாளியைக் கூப்பிட்டு அவர் கையாலேயே திறப்பிப்பார்கள்.

ஈழப்பிரியன், நானும் அப்படியான பல சம்பவங்களைப் பார்த்திருக்கிறேன். அநேகமானவை இரும்புக்கடைகளாகவே இருந்தன.

 
1 hour ago, suvy said:

கோபாலகிருஸ்னனைத் திட்டக் கூடாது கவி......."உன்னாலதானடா சண்டை பிடிக்க எனக்கு ஒரு மனைவி கிடைத்தாள் என்று வாழ்த்த வேண்டும்.......!  tw_blush:

Suvy, சண்டை பிடிக்க பக்கத்து வீட்டுக்காரன் இருக்கிறான்தானே? வீட்டுக்குள்ளேயும் தேவையா

ஊரிலே என்றால் ஒரு கை பார்த்து விடலாம். வெளிநாடு என்றால் போலிஸுக்கு ரெலிபோன் அடிச்சால்... கோவிந்தாதான்

 
1 hour ago, நிழலி said:

அது சரி ... கோபாலகிருஷ்ணணும் அவரோட மனுசியும் இப்ப எங்கே?

நிழலி, போராடம் தீவிரமாக, பலர் நாட்டை விட்டு வெளியேற கோபாலகிருஷ்ணன் சத்தமில்லாமல் திரும்ப வந்து குடும்பமாக ஊரிலேயே இருக்கிறான். போதாதற்கு கோபாலகிருஷ்ணனின் தம்பி, பிரதான சிங்களக் கட்சி ஒன்றின் எங்கள் ஊரின் அமைப்பாளர் என்றும் கேள்விப்பட்டேன்

 
55 minutes ago, ராசவன்னியன் said:

இதென்னப்பு ஒரே கூத்தாக இருக்கிறது..?

கலியாணம் என்றதும் 'ஜொள்ளு' விட்டுக்கொண்டு தலையாட்டி, பேரப்பிள்ளைகள் வரை செல்ல வேண்டியது.. ஆனால் தகராறு/பிரச்சனை வந்தால், பிறர் மீது பழியை போடுவது..!  why-us.gif

நல்ல எண்ணம்..! moderateurnon.gif

ராசவன்னியன்,

ஊரில் அன்றைய காலத்தில் சொல்வார்கள், ஒருத்தனை அழிக்க வேண்டுமென்றால் அவனுக்கு கலியாணத்தை கட்டிக் கொடுத்து கூடவே ஒரு பழைய காரையும் வாங்கிக்கொடுத்தால் போதுமென்று.

 அதுசரி, வீட்டில் மதுரையா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Kavi arunasalam said:

ராசவன்னியன்,

ஊரில் அன்றைய காலத்தில் சொல்வார்கள், ஒருத்தனை அழிக்க வேண்டுமென்றால் அவனுக்கு கலியாணத்தை கட்டிக் கொடுத்து கூடவே ஒரு பழைய காரையும் வாங்கிக்கொடுத்தால் போதுமென்று.

தெரிந்தும் குழியில் விழுந்தீர்கள்..! So sad.. :grin:

7 hours ago, Kavi arunasalam said:

..அதுசரி, வீட்டில் மதுரையா?

 தில்லை≡மதுரை :)

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, ராசவன்னியன் said:

 தில்லை≡மதுரை :)

நாமம் என்பது நேராகச் போடுவது.|||

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சேவை செய்வதில் இப்படியும் ஒரு சேவை. கவி செய்தது  பெரிய சமூக சேவைதான். ஆவதும் பெண்ணாலே அழிவதும்?  இனி பெண்பார்க்க இருப்பவர்கள் கவனிக்கவும். கோபால கிருஸ்ணனாலயாவது கலியாணம் கட்டினதற்கு நன்றி சொல்லவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Kavi arunasalam said:

நாமம் என்பது நேராகச் போடுவது. |||

v5xsmg.jpg

 

இவர் வேறை..!

ஹலோ சார்... சோபாவே சொர்க்கமென படுத்துகொண்டே யாழ் களத்தை வாசித்தால், அந்த மூன்று கோடுகள் தங்களுக்கு நாமமாகவே தெரியும்.. vil-lol.gif

சோபாவை விட்டெழுந்து, நேராக உட்கார்ந்து வடிவா பாருங்கள்.. ஐயா..!   vil-soap.gif

எங்கோ பிறந்து, இருவரும் தில்லை ≡ மதுரையாய் இல்வாழ்வில் மூன்று முடிச்சுகளால் சரிநிகர் சமமாக  இணைந்து வாழ்வதை குறிக்கும் கோடுகள் அவை..!!  vil-cligne.gif

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நம்ம வீடுகளில தில்லை மதுரை எல்லாம் எல்லை தாண்டிப் போய் இப்போ கோகுலம்தான்.....இதைவிட மதுரை இருந்திருக்கலாம் என்று அப்பப்ப நினைப்பதுண்டு......!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, Kavallur Kanmani said:

சேவை செய்வதில் இப்படியும் ஒரு சேவை. கவி செய்தது  பெரிய சமூக சேவைதான். 

 

கவி அருனாசலம் அவர்கள் வடித்த கதைக்கு காவலூர் கண்மணி தொடுத்த பின்னூட்டம் என் அந்தநாள் ஞாபகத்தைக் கொண்டுவந்தது.

என் வீட்டிலும், பெரியப்பா வீட்டிலும் வளரும் ஆடு மற்றும் மாடு ஒரு வித்தியாசமான குரலில் கத்தினால்.... தம்பி இதைக் கொண்டுபோய் விட்டுவாடா என்று வேண்டுதல் வரும். அவற்றை உரிய இடத்திற்கு அழைத்துச் சென்று வருவேன். இதுபோன்றது தானே கவியின் சேவையும்...  அந்தச் சேவையை அன்று நானும் செய்திருந்தேன். :grin:

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 20/03/2018 at 5:01 AM, Kavi arunasalam said:

உன்னாலை தானடா நான் கலியாணம் கட்ட வேண்டி வந்தது” என்று  கோபாலகிருஷ்ணனைத்தான் திட்டிக் கொண்டிருக்கிறேன்.

அப்படி திட்டப்படாது பாவம் கோபால் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, suvy said:

நம்ம வீடுகளில தில்லை மதுரை எல்லாம் எல்லை தாண்டிப் போய் இப்போ கோகுலம்தான்.....இதைவிட மதுரை இருந்திருக்கலாம் என்று அப்பப்ப நினைப்பதுண்டு......!  tw_blush:

அடுத்த இன்பமான சோகக் கதை..!

வயசாக வயசாக இனி அப்படித்தான்..!!

 

பேரக்குழந்தைகளோடு துள்ளி விளையாடுங்கள் தாத்தா..!

326A0FEA00000578-3502795-_When_we_get_to

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, Paanch said:

.. என் வீட்டிலும், பெரியப்பா வீட்டிலும் வளரும் ஆடு மற்றும் மாடு ஒரு வித்தியாசமான குரலில் கத்தினால்.... தம்பி இதைக் கொண்டுபோய் விட்டுவாடா என்று வேண்டுதல் வரும். அவற்றை உரிய இடத்திற்கு அழைத்துச் சென்று வருவேன்...

mqdefault.jpg

குரலிலிருந்து வெளிப்படும் அடிமட்ட தாகத்தை கணிக்கும் திறமை, உங்களுக்கு உள்ளதென சொல்லுங்கள்..!  வல்லிய 'சேவை'..!! vil-cligne.gif&key=bd7b71353a9290c5b1fc0

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ராசவன்னியன் said:

mqdefault.jpg

குரலிலிருந்து வெளிப்படும் அடிமட்ட தாகத்தை கணிக்கும் திறமை, உங்களுக்கு உள்ளதென சொல்லுங்கள்..!  வல்லிய 'சேவை'..!! vil-cligne.gif&key=bd7b71353a9290c5b1fc0

இது இயற்கையின் கொடை ராசா. எங்கும் எதிலும் எல்லா இடத்திலும் உள்ளதுதான். 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல சேவைதான் ஐயா..!  bj3.gif

5 hours ago, Paanch said:

என் வீட்டிலும், பெரியப்பா வீட்டிலும் வளரும் ஆடு மற்றும் மாடு ஒரு வித்தியாசமான குரலில் கத்தினால்.... தம்பி இதைக் கொண்டுபோய் விட்டுவாடா என்று வேண்டுதல் வரும். அவற்றை உரிய இடத்திற்கு அழைத்துச் சென்று வருவேன். இதுபோன்றது தானே கவியின் சேவையும்...  அந்தச் சேவையை அன்று நானும் செய்திருந்தேன்...

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19.3.2018 at 7:01 PM, Kavi arunasalam said:

“டேய்..டேய் சும்மா சுத்தாதை. கோபாலகிருஷ்ணனின்ரை பெண்சாதி நேற்று, வயித்தை தள்ளிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்துட்டுப் போறாளாம். கோபாலகிருஷ்ணனும் ஊரிலை இல்லை. நீதானே இராப் பகலா அவளை காரிலை ஏத்திக் கொண்டு திரியிறியாம்சொல்லும் போதே அவரது இடது கண் சிமிட்டியது.

நானாயிருந்தாலும் அப்பிடித்தான் கேட்டிருப்பன்? சமூகசேவையெண்டு நம்பியிருக்க மாட்டன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, ராசவன்னியன் said:

எங்கோ பிறந்து, இருவரும் தில்லை ≡ மதுரையாய் இல்வாழ்வில் மூன்று முடிச்சுகளால் சரிநிகர் சமமாக  இணைந்து வாழ்வதை குறிக்கும் கோடுகள் அவை..!! 

ராசவன்னியன்,

ஒருவன் மூன்று முடிச்சு போடுகிறான் என்றால், அவன் தனக்கான தூக்குக் கயிற்றை தானே தயார்படுத்துகிறான் என்று அர்த்தம்

A7_ABDD53-_A134-45_B2-_A788-32488_A5379_
10 hours ago, Paanch said:

என் வீட்டிலும், பெரியப்பா வீட்டிலும் வளரும் ஆடு மற்றும் மாடு ஒரு வித்தியாசமான குரலில் கத்தினால்.... தம்பி இதைக் கொண்டுபோய் விட்டுவாடா என்று வேண்டுதல் வரும்.

Panch, ராசவன்னியன்,

நீங்கள் ஆடு ,மாடு  எல்லாம் உதாரணத்திற்கு  கொண்டு வந்தது என்னைக் கிண்டல் அடிபதற்கில்லை என்று நம்புகிறேன்.

ஆனால் கோபாலகிருஷ்ணனின் மனைவி சவுண்ட் ஒண்டும் விடவில்லை. சாதாரண குரலில்தான் என்னிடம் கேட்டாள்.?

 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, Kavallur Kanmani said:

கோபால கிருஸ்ணனாலயாவது கலியாணம் கட்டினதற்கு நன்றி சொல்லவும்.

காவலூர் கண்மணி,

குடை ராட்டினத்தில், “சில சமயங்களில் ஒட்டியும் பல சமயங்களில் ஒட்டாமலும் ஏனோ தானோ என்று வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி விளையாட்டாக.....” இப்படிச் சொல்கிறீர்கள். ‘பெண் பார்க்கப் போறேன்’இல் வந்து , “கோபால கிருஸ்ணனாலயாவது கலியாணம் கட்டினதற்கு நன்றி சொல்லவும்என்கிறீர்கள்.?

 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, Kavi arunasalam said:

ராசவன்னியன்,

ஒருவன் மூன்று முடிச்சு போடுகிறான் என்றால், அவன் தனக்கான தூக்குக் கயிற்றை தானே தயார்படுத்துகிறான் என்று அர்த்தம்

கயிற்றை ஊஞ்சலாக்கி மனைவியோடு விளையாடுவதும், கழுத்தில் இறுக்கி தானே மரிப்பதும் அதை கட்டும் தலைவனின் கைகளில் உள்ளது.. நான் முதல் வகை..

தாங்களும் அப்படித்தான் என உங்கள் அனுபவம் சொல்கிறது..(பொதுவெளியில் நீங்கள் எதிர்மறையாய் சொல்வதை தவிர..!) vil-mariage.gif

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, ராசவன்னியன் said:

கயிற்றை ஊஞ்சலாக்கி மனைவியோடு விளையாடுவதும், கழுத்தில் இறுக்கி தானே மரிப்பதும் அதை கட்டிக்கொள்ளும் தலைவனின் கைகளில் உள்ளது..

அதை கட்டிக்கொள்ளும் தலைவியின் கைகளில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, Kavi arunasalam said:

அதை கட்டிக்கொள்ளும் தலைவியின் கைகளில் உள்ளது.

Vs

17 minutes ago, ராசவன்னியன் said:

 அதை கட்டும் தலைவனின் கைகளில் உள்ளது..

 

எங்க ஊரு 'சாலமன் பாப்பையா' பட்டிமன்றம் போட்டுத்தான் இனி தீர்மானிக்கனும்! :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோபால கிருஷ்ணன் குஷியாக இருக்க கவி கார் சேவை செய்திருக்கின்றார். ?

சம்பளமில்லாத உத்தியோகம் என்றால் இதுதான் சிறந்த உதாரணம். 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.