Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் வந்தார் நடிகர் ஆர்யா!!

Featured Replies

யாழ்ப்பாணம் வந்தார் நடிகர் ஆர்யா!!

இந்திய முன்னனி நடிகரான ஆர்யா இன்று யாழ்ப்பாணம் வருகை தந்தார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய முஹிதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டார்.

வானொலி ஒன்றின் அனுசரணையில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றுக்கு இலங்கை வந்துள்ள அவர் தொழுகைக்காக வந்திருந்ததுடன் அங்கிருந்த இளைஞர்கள் நடிகருடன் செல்பி எடுக்க முயற்சித்தனர்.

எனினும் நடிகர் அவ்விடத்தில் இருந்து இளைஞர்களை நோக்கி கை அசைத்து விரைவாக நகர்ந்து சென்றதைக் காண முடிந்தது.
29250575_1188022301334107_1006801325_o-129404724_1188022941334043_69964730_o-300

http://newuthayan.com/story/78079.html

  • கருத்துக்கள உறவுகள்

ஆள் கல்யாணத்துக்கு பெண் தேடி களைத்து யாழ் முஸ்லீம் பெண் பார்க்க வந்துள்ளார் போல் இருக்கு .

எதிர்ப்புகள் காரணமாக ஆர்யா மணப்பெண்ணை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மார்ச் 22, 2018, 05:00 AM
நடிகர் ஆர்யாவுக்கு 37 வயது ஆகிறது. சக நடிகர்களுக்கெல்லாம் திருமணம் முடிந்தும் இவருக்கு மட்டும் இன்னும் மணப்பெண் அமையவில்லை. பெற்றோர்கள், நண்பர்கள் மூலம் தேடியும் பொருத்தமான பெண் கிடைக்கவில்லை. இதனால் டெலிவிஷனுக்கு வந்து பெண் தேர்வில் ஈடுபட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு தன்னை மணக்க விரும்பும் பெண்கள், பெயர், பதவி, குடும்ப விவரங்களை பதிவு செய்யும்படி ஆடியோவில் பேசி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். ஏராளமான பெண்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் இருந்து 16 பேரை தேர்வு செய்து டெலிவிஷன் நிகழ்ச்சிக்கு கொண்டு வந்துள்ளார்.

அவர்களிடம் பழகி தன்னை கவரும் பெண்ணை இறுதியாக மணப்பெண்ணாக தேர்வு செய்யப்போவதாக அறிவித்து உள்ளார். ஆர்யாவின் முயற்சியை சிலர் பாராட்டுகிறார்கள். இன்னும் சிலர் கடுமையாக எதிர்க்கிறார்கள். மணப்பெண் தேர்வில் கலந்து கொண்டுள்ள சில பெண்கள் தங்களை பற்றிய ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துகின்றனர்.

ஒரு பெண் தனக்கு விவாகரத்து ஆகியிருக்கிறது. ஒரு குழந்தையும் இருக்கிறது என்று கூறினார். இன்னொரு பெண் தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இது ஆர்யா ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. ஆர்யாவின் பெண் தேடும் அணுகுமுறை கலாசாரத்துக்கு எதிராக உள்ளது என்று பெண் அமைப்புகளும் எதிர்க்கின்றன.

இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கும்படி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நீதிபதிகள் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டு உள்ளனர். இதனால் ஆர்யாவின் பெண் தேடலுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மணப்பெண்ணை அவர் தேர்வு செய்வாரா? மாட்டாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிடுகிறார்
  • தொடங்கியவர்
 
யாழ்ப்பாணம் இளைஞர்களை அவமதித்த நடிகர் ஆர்யா!

யாழ்ப்பாணம் இளைஞர்களை அவமதித்த நடிகர் ஆர்யா!

https://news.ibctamil.com/

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

பாறுக் ஷிஹான்-

தமிழ் பட உலகில் கதாநாயகனாக இருக்கும் ஆர்யா  ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார்.

இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் உள்ள பெரிய முஹிதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு சென்று ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார்.

இவர் தொழுகைக்காக வந்திருந்ததுடன் அங்கிருந்த இளைஞர்கள் நடிகருடன் செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்தனர்.

எனினும் நடிகர் அவ்விடத்தில் இருந்து இளைஞர்களை நோக்கி கைஅசைத்து விரைவாக நகர்ந்து சென்றதை காண முடிந்தது.

http://www.jaffnamuslim.com/

Edited by colomban
Edited

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணத்தில் மணப்பெண் தேடி.... அத்துமீறினாரா ஆர்யா? நூலகத்தில் பரபரப்பு!

யாழ்ப்பாணத்தில் மணப்பெண் தேடி.... அத்துமீறினாரா ஆர்யா? நூலகத்தில் பரபரப்பு!

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திற்கு படப்பிடிப்பிற்காகச் சென்ற ஆர்யா, யாழ். பொது நூலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் நூலகத்தின் வாசகர்கள் உள்ளிட்ட பலரும் குழப்பம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துத் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் நடிகர் ஆர்யாவின் தொலைக்காட்சித் தொடருக்கான படப்பிடிப்பு நடந்துவருவதாகக் கூறப்படும் நிலையில், யாழ் பொது நூலகத்தின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் அதன் வெளிப்புறத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனாலும் அதனையும் மீறி நூலகக் கட்டடத்தின் உள்ளே படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக யாழ். மாநகர சபை ஆணையாளர் க.ஜெயசீலன் தெரிவித்தார்.

படப்பிடிப்புக் குழுவினர் அத்துமீறி நடந்து கொண்டனர் என்று ஆணையாளர் தெரிவித்தபோதும், அங்கு பணியாற்றுவோர் படப்பிடிப்புக் குழுவினருக்கு ஆதரவாகச் செயற்பட்டுள்ளனர்.

இதன்போது வாசகர்கள் உள்ளே நுழைவதையும் சுற்றுலாத்துறையினர் நூலகத்தைப் பார்வையிடுவதையும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் அரை மணி நேரம் இந்தக் குழப்பம் நீடித்தது.

இதேவேளை, நடிகர் ஆர்யாவின் படப்பிடிப்பு பொது நூலகத்தில் நடைபெறுகிறது என்று கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் சிலர் நூலகத்திற்கு வந்து அவருடன் ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர்.

நடிகர் ஆர்யாவுக்கு மணப்பெண் தேடும் எங்கவீட்டு மாப்பிள்ளை என்கிற தொலைக்காட்சித் தொடருக்கான படிப்பிடிப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் மணப்பெண் தேடி.... அத்துமீறினாரா ஆர்யா? நூலகத்தில் பரபரப்பு!

https://news.ibctamil.com/ta/internal-affairs/arya-in-jaffna-shooting

On 3/23/2018 at 12:53 PM, colomban said:

பாறுக் ஷிஹான்-

தமிழ் பட உலகில் கதாநாயகனாக இருக்கும் ஆர்யா  ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார்.

இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் உள்ள பெரிய முஹிதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு சென்று ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார்.

இவர் தொழுகைக்காக வந்திருந்ததுடன் அங்கிருந்த இளைஞர்கள் நடிகருடன் செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்தனர்.

எனினும் நடிகர் அவ்விடத்தில் இருந்து இளைஞர்களை நோக்கி கைஅசைத்து விரைவாக நகர்ந்து சென்றதை காண முடிந்தது.

http://www.jaffnamuslim.com/

காணொலியை பார்த்தால் ஆரியா சஞ்சலத்துடன் காணப்படுவது போல் தோன்றுகின்றது. ஒரு காட்சிப்பொருளாக அவரை அணுகியது பிடிக்கவில்லை போல; பழத்தை ஈ மொய்ப்பது போல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 23.3.2018 at 5:53 PM, colomban said:

தமிழ் பட உலகில் கதாநாயகனாக இருக்கும் ஆர்யா  ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார்.

என்னது தமிழ்ப்பட உலகின் கதாநாயகனா!!!!!!!!
அடி ஆத்தி எப்ப தொடக்கம்?????

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணம் அனலைதீவில் உள்ள சுசானா வீட்டிற்கு சென்ற எங்க வீட்டு மாப்பிள!

யாழ்ப்பாணம் அனலைதீவில் உள்ள சுசானா வீட்டிற்கு சென்ற எங்க வீட்டு மாப்பிள!

நடிகர் ஆர்யாவை மையமாக வைத்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் சூட்டிங், இலங்கையில் தற்போது நடைபெற்றுவருகின்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆா்யாவை திருமணம் செய்யும் போட்டியாளா்களின் வரிசையில், ஒருவராக இலங்கையைச் சேர்ந்த சுசானா இருக்கும் நிலையில் யாழ்ப்பாணம் அனைலைதீவு பகுதியில் உள்ள சுசானாவின் வீட்டிற்கு ஆா்யா இன்றையதினம் சென்றுள்ளாா்.

சுசானா கனடாவில் வசித்து வந்த்தாலும், அவரின் குடும்பம் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அனைலைதீவிற்கு ஆர்யா சென்றுள்ளாா். நடிகர் ஆர்யா, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் தனக்கு ஜோடி தேடி வருகிறார்.

யாழ்ப்பாணம் அனலைதீவில் உள்ள சுசானா வீட்டிற்கு சென்ற எங்க வீட்டு மாப்பிள!

ஆர்யாவை கரம்பிடிக்கும் ஆசையில், 16 பெண்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அதில் தனக்கு சரியான வாழ்க்கைத் துணையாக இருக்க மாட்டார் என்று தோன்றும் பெண்களை, ஆர்யா ஒவ்வொரு வாரமும் வெளியேற்றி வருகிறார்.இப்போது வரை ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் 7 பெண்கள் வரை வெளியேறி உள்ளார்.

மீதமுள்ள 11 பெண்கள் ஆர்யாவை கரம்பிடிக்கும் ஆசையில் தினமும் பல்வேறு போட்டிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தற்போது வெறும் 4 போட்டியாளர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் உள்ளனர்.

அந்த 4 பெண்களின் வீடுகளுக்கும் சென்று நடிகர் ஆர்யா அவர்கள் குடும்பத்துடன் பழகி வருகிறார். அந்த வரிசையில், அந்த நான்கு போட்டியாளர்களில் ஒருவரான இலங்கையைச் சேர்ந்த சுசானாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

https://news.ibctamil.com/ta/cinema/ariya-visit-annalaitheevu-susanaa-house

  • தொடங்கியவர்

யாழில் நடிகர் ஆர்யா…

இந்திய தனியார் தொலைக்காட்சி நிகழ்வொன்றின் படப்பிடிப்புக்காக தென்னிந்திய நடிகர் ஆர்யா யாழ்ப்பாணம் வந்துள்ளார். யாழ். பொது நூலகம் அனலைதீவு உள்ளிட்ட பல்வேறு  இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

Ar1.jpg?resize=800%2C601Ar2.jpg?resize=800%2C601Ar3.jpg?resize=800%2C601Ar4.jpg?resize=800%2C601Ar5.jpg?resize=748%2C800

http://globaltamilnews.net/2018/72272/

  • கருத்துக்கள உறவுகள்
On ‎23‎.‎03‎.‎2018 at 1:03 PM, பெருமாள் said:

ஆள் கல்யாணத்துக்கு பெண் தேடி களைத்து யாழ் முஸ்லீம் பெண் பார்க்க வந்துள்ளார் போல் இருக்கு .

Bildergebnis für muslim girls

இவர் எப்படிப் பெண் பார்த்திருப்பார்...! ஒருவேளை நெற்றிக்கண் படத்தில் சரிதாவைப் பார்க்க ரயனி பாவித்த கண்ணாடியை, ஆள் கொண்டு வந்திருப்பாரோ.... !! :unsure::grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதாகப்பட்டது அனலைதீவு ஈச்சம் பத்தைக்குள்ளை ஆர்யா டூயட்....:grin:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நவீனன் said:

போனது இந்தியாவிலிருந்து, ஆனால் மின்விசிறியையும் தூக்கிக் கொண்டு திரியுறார்.

  • தொடங்கியவர்

யாழில் ஆர்யாவுக்கு குடை பிடித்து சர்ச்சையில் சிக்கிக்கொண்ட நபர்!

யாழில் ஆர்யாவுக்கு குடை பிடித்து சர்ச்சையில் சிக்கிக்கொண்ட நபர்!

நடிகர் ஆர்யாவை மையமாக வைத்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் படப்பிடிப்பு இலங்கையில் தற்போது நடைபெற்றுவருகின்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆா்யாவை திருமணம் செய்யும் போட்டியாளா்களின் வரிசையில், ஒருவராக இலங்கையைச் சேர்ந்த சுசானா இருக்கும் நிலையில் யாழ்ப்பாணம் அனைலைதீவு பகுதியில் உள்ள சுசானாவின் வீட்டிற்கு ஆா்யா நேற்றைய தினம் சென்றுள்ளாா்.

யாழில் ஆர்யாவுக்கு குடை பிடித்து சர்ச்சையில் சிக்கிக்கொண்ட நபர்!

அங்கு அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து ஆர்யாவை வரவேற்ற நிலையில் ஆர்யாவுக்கு அருகாமையில் ஒரு கையில் மின் விசிறியும், மறு கையில் குடையும் பிடித்துக் கொண்டு நபர் ஒருவர் வந்துகொண்டிருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருவதோடு அவரையும், ஆர்யாவையும் விமர்சித்தும், கேலி செய்தும் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர் தமிழ் இளைஞர்கள்..

https://news.ibctamil.com/ta/cinema/Arya-was-caught-by-a-umbrella-in-the-scandal

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

நன்றாக உற்றுப் பாருங்கள் அவர் தனக்கும் மின் விசிறிக்கும் அதிக வெயில் படாது குடை பிடிப்பது தெரியும். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

குடை பிடிப்பவர் தான் நடிகர் ஆரியாவின் பரம விசிறி என்று காட்டுகின்றார்.

வலது காலை எடுத்து வைத்து வாருங்கள் ஆரியா.

தமிழர் பண்பாடுபடி யாழ் மாம்பழங்கள் / பனாட்டு போன்றவை கொடுத்து பெண்பார்க்க வந்த அவரை உபசரித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். பெண்பிடித்திருந்தால் நீங்கள் யாழ் மருமகன்.

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்

குடையும் மின் விசிறியும் வைத்திருக்கிறார்  அந்த பிள்ளையின் சொந்த காரர் போல அவர் அல்லது சம்பளத்திற்கோ தெரியாது  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுயம்வரம்; பல பெண்களிடையே ஒரு மாப்பிள்ளைக்காய் போட்டி.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, கலைஞன் said:

சுயம்வரம்; பல பெண்களிடையே ஒரு மாப்பிள்ளைக்காய் போட்டி.

சுயம்வரம்: பல ஆண்களிடையே ஒரு பொம்பிளைக்காய் போட்டி (அரசர் காலம்.)

ஆரியாவரம்: பல பெண்களிடையே ஒரு விசுக்கோத்துக்கான போட்டி ( இது சினிமாக் கோலம்.)

தமிழகத்தில் தமிழன் நாடிழந்தான்.. சாதியாலும் சமயத்தாலும் சினிமாவாலும்.

ஈழத்தமிழன் தமிழீழம் இழந்தான்.. அடுத்தவனை கொப்பி பண்ணிறதாலும் காட்டிக்கொடுத்ததனாலும். 

மிக விரைவில் ஈழத்தமிழன்.. சினிமா ஈனத்தமிழனா மிளிர்வான். இதனை யாழ்ப்பாணம் குந்து.. ஹிந்திய துணை தூதரகம் கச்சிதமாக செய்து முடிக்கும்.

ஒருபக்கம்.. கேரளக் கஞ்சா.. இன்னொரு பக்கம் கேரள ஆரியா. சபாஷ்.. சரியான சப்பிளை தான் நடக்குது ஈழத்தமிழனுக்கு. :rolleyes:tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, nedukkalapoovan said:

என்ன தம்பி பகிடியே விடுறியள்????
எங்கடை சுசானாவை ஈழத்து திரிஷா எண்டு வேறை சொல்லுறாங்கள். நாங்கள் இதுக்கு சப்போட் பண்ண வேணுமெல்லோ! :27_sunglasses:

நான் இப்போ சுசானாவின் காணொலி பார்த்தேன், பொண்ணு சூப்பராய் இருக்கிறா. விஜய் போல் ஆர்யா இலங்கை பெண்ணை திருமணம் செய்வாரோ.

Edited by கலைஞன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

யாழில் ஆர்யா

  •  

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
  • பிரபாகரன் விவகாரத்தால் சர்ச்சையில் சிக்கினார் ஆர்யா!!
 
பிரபாகரன் விவகாரத்தால் சர்ச்சையில் சிக்கினார் ஆர்யா!!

எங்க வீட்டு மாப்பிள்ள நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்தே பல எதிர்விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. இதனால் நிகழ்ச்சி சர்ச்சையில் சிக்கி வருகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு ஜெய்ப்பூரில் முழுக்க முழுக்க படப்பிடிப்பு எடுக்கப்பட்டதாம். இறுதி கட்டத்தை நெருங்கும் வேளையில் இலங்கைக்கு ஆர்யா போட்டியாளர் சுஸானாவுடன் சென்றார்.

ஈழப்பிரச்சனை, பிரபாகரன், முள்ளிவாய்க்கால் தொடர்பாக பேசவே கூடாது என்ற நிபந்தனைகள் ஆர்யாவுக்கு விதிக்கப்பட்டது. அத்துடன் மாற்று உடையில் இராணுவத்தினரும் அனுப்பி வைக்கப்பட்டனர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆர்யா விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பற்றி பேசிய சில காட்சிகள், எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டன என்று கூறப்படுகிறது.

அதனால் ஆர்யா சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

http://newuthayan.com/story/83661.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, நவீனன் said:
  • பிரபாகரன் விவகாரத்தால் சர்ச்சையில் சிக்கினார் ஆர்யா!!
 
பிரபாகரன் விவகாரத்தால் சர்ச்சையில் சிக்கினார் ஆர்யா!!

கண்ட கண்ட கழுதைகளின் பெயர் பிரபல்யமாக..............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.