Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் அதிகரிக்கும் வன்முறைக் கலாச்சாரத்தை கட்டுப்படுத்துவது பெரிய விடயமல்ல: முதலமைச்சர்

Featured Replies

வடக்கில் அதிகரிக்கும் வன்முறைக் கலாச்சாரத்தை கட்டுப்படுத்துவது பெரிய விடயமல்ல: முதலமைச்சர்

வடபகுதியில் வாழுகின்ற மக்கள் ஏனைய பகுதிகளில் வாழுகின்ற மக்களின் தேவைகளை விட அதிக அளவு தேவைகளையுடையவர்கள். போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் பல தேவைகளை அவர்கள் கொண்டவர்களாக காணப்படுகின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

'உத்தியோகபூர்வப் பணி' ஜனாதிபதி மக்கள் சேவையின் 8வது வேலைத்திட்டம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

எமது மக்களில் பலர் போரின் விளைவாக உயிர் இழப்புக்களையு சந்தித்தது ஒருபுறமிருக்க, பொருள் பண்டங்கள், வீடு வளவுகள் என அத்தனையையும் தொலைத்துவிட்டு நடைப்பிணங்களாக யுத்த வடுக்களை உடல்களிலும் உள்ளங்களிலும் சுமந்தவர்களாக சுற்றித்திரிவது எமக்கு மிகுந்த மனவருத்தத்தை தருகின்றது.

இம் மக்களுக்கான இருப்பிட வசதிகள் அவர்களுக்கு ஏற்றவாறு செய்து தரப்பட வேண்டும். அவர்கள் வாழ்ந்த நிலங்கள் அவர்கள் தொழில் செய்கின்ற பூமிகள்,கடல் வளங்கள், விவசாய நிலங்கள் அவர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும்.

ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு இராணுவம் அவசியமானது. தமது சொந்த நாட்டை ஏனைய நாடுகளின் ஆக்கிரமிப்புக்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பதற்கும் உள்நாட்டில் அமைதியான சூழ்நிலையை உருவாக்குவதற்கும் இராணுவத்தின் பணி அவசியமானது. ஆனால் எமது பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும்,உணவகங்களை நடத்துவதற்கும், காணிகளைத் தம் வசப்படுத்தி வைத்திருப்பதற்கும்,குளங்களைப் புனரமைப்புச் செய்வதற்கும் இராணுவ வீரர்களின் சேவைகள் தேவைப்படமாட்டாது.

போர் முடிந்து அடுத்த மே மாதம் 10 வருடங்கள் ஆகப் போகின்றது. இன்னமும் எம்மைப் போர்க்கால மக்களாகப் பார்த்து இராணுவ கண்காணிப்பை முடுக்கி வைத்து வருவது எம் மேல் நம்பிக்கை இன்மையைக் காட்டுகின்றது.

படிப்படியாக இராணுவ பிரசன்னத்தைக் குறைப்பதாக அரசாங்கம் உத்தரவாதம் தந்திருப்பினும் அது நடைபெறாமலே இருக்கின்றது. மாறாக குற்றச் செயல்கள் இங்கு கூடியுள்ளன. அவற்றைத் தடுக்க எமக்கு அதிகாரங்கள் தரப்படவில்லை.

பொலிசார் எமது கட்டுப்பாட்டுக்குள் இல்லை. இராணுவம் வெளியேறி பொலிஸ் அதிகாரம் எமக்குக் கையளிக்கப்பட்டால் இன்றைய வன்முறைக் கலாச்சாரத்தை வடக்கில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது ஒரு பெரிய காரியமன்று. உள்ளூர் வாசிகளை ஆட்கொண்டு வெளியூர்வாசிகள் தமது காரியங்களைச் சாதித்துக் கொள்ள எமது மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள்.

இராணுவ அதிகாரிகள் மீதோ, போர் வீரர்கள் மீதோ எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியும் எனக்கு இல்லை. இராணுவ உயர் அதிகாரிகளுடன் நான் சிறந்த உறவை வெளிப்படையாகக் கொண்டிருக்கின்றேன். ஆனால் கொள்கை அடிப்படையில் படையினர் முன்னெடுக்குஞ் செயற்பாடுகள் கபட நோக்கங்கள் கொண்டிருக்கக் கூடாது.

எமது எதிர்பார்ப்புக்களை நன்கறிந்து எமது மனோ நிலைகளை நன்கு புரிந்து, நீங்கள் இப் பகுதி மக்கள் தொடர்பாக, அவர்களின் பிரச்சனைகள் தொடர்பாக இப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பாக உயர் அதிகாரிகளுடனும் மக்கள் பிரதிநிதிகளுடனும் தொடர்ந்து வெளிப்படையாக பேச்சுக்களை முன்னெடுங்கள்.

அவற்றின் அடிப்படையில் எமது பிராந்தியத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கள் சிதைவுறா வகையில்,பாரம்பரியங்கள் பழுதுறா வகையில், கலாசார சீரழிவுகள் நடைபெறா வகையில் உயரிய திட்டங்களைத் தீட்டி எம் மக்களுக்கு உதவ முன்வாருங்கள் என வினயமாக வேண்டி எனது உரையை இந்த அளவில் நிறைவு செய்கின்றேன் என முதலமைச்சா கூறியுள்ளார்.

http://www.tamilwin.com/community/01/186982?ref=home-feed

  • Replies 78
  • Views 7.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மாகாணசபை ஆட்சிக்கு வந்தவுடன் பொலிஸ் அதிகாரத்தை கேட்க அழுத்தம் கொடுத்திருக்கவேண்டும். ஆட்சி முடிவடையும் நேரம், அதிலும் பொலிஸ் அதிகாரம் கிடைக்கவே கிடைக்காது என்று தெரிந்தும், அதிகாரம் கிடைத்தால் வன்முறையைக் கட்டுப்படுதுவது பெரிய காரியமில்லை என்று சொல்லுவது வெட்கக்கேடானது.

  • தொடங்கியவர்

இரா­ணுவம் வெளி­யேறி பொலிஸ் அதி­காரம் வழங்­கப்­பட்டால் வன்­மு­றைகளுக்கு முடிவு 

இரா­ணுவம் வெளி­யேறி பொலிஸ் அதி­காரம் எமக்குக் கைய­ளிக்­கப்­பட்டால் இன்­றைய வன்­முறைக் கலாச்­சா­ரத்தை வடக்கில் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரு­வது ஒரு பெரிய காரி­ய­மன்று என்று  வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன்  தெரி­வித்­துள்ளார். 

viky.jpg

ஜனா­தி­பதி மக்கள் சேவையின்   தேசிய  நிகழ்ச்­சித்­ திட்டம்   நேற்று யாழ்ப்­பாணம் வீர­சிங்க மண்­ட­பத்தில்  நடை­பெற்­றது.  அமைச்சர்­க­ளான  வஜிர அபே­வர்­தன, திலக்­மா­ரப்­பன,   இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­ கலா மகேஸ்­வரன் உட்­பட பலரும் கலந்­து­கொண்ட இந்த நிகழ்வில்  உரை­யாற்­றும்­போதே   முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் இவ்­வாறு சுட்­டிக்­காட்­டி­யுள்ளனர். 

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்;

வட­ப­கு­தியில் வாழு­கின்ற மக்கள் ஏனைய பகு­தி­களில் வாழு­கின்ற மக்­களின் தேவை­களை விட அதிக அளவு தேவை­க­ளை­யு­டை­ய­வர்கள். போரினால் மிகவும் பாதிக்­கப்­பட்ட நிலையில் பல தேவை­களை அவர்கள் கொண்­ட­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றார்கள். 

இவை பற்றி விரி­வாக இந்த மக்கள் சேவை நிகழ்ச்சித் திட்­டத்தில் ஆரா­யப்­பட வேண்டும். நீண்­ட­கால ஏக்­கத்தில் தமக்கு விடிவு கிட்­டாதா என எமது மக்கள் ஏங்கித் தவித்துக் கொண்­டி­ருக்­கின்ற நிலை­மையை அனை­வரும் புரிந்து கொண்­டி­ருப்­பார்கள் என்று நினைக்­கின்றேன். இம் மக்­களின் அத்­தி­யா­வ­சிய சேவைகள், அடிப்­படைத் தேவைகள் பற்றி அறிந்­தி­ருந்தால் தான் அவர்­க­ளுக்கு உரிய நிவா­ர­ணங்­களைப் பெற்றுக் கொடுக்க முடியும். அர­சியல் ரீதி­யாகத் தீர்க்­கப்­பட வேண்­டிய பிரச்­சி­னைகள் ஒரு புறம், நிர்­வாக ரீதி­யாக தீர்க்­கப்­பட வேண்­டிய பிரச்­சி­னைகள் மறு­புறம், முத­லீட்­டுடன் சேர்ந்த பொரு­ளா­தார மேம்­பாடு சம்­பந்­த­மான பிரச்­சி­னைகள் இன்­னொரு புறம், மனி­தா­பி­மான முறையில் தீர்க்­கப்­பட வேண்­டிய வேறு சில பிரச்­சி­னைகள் பிறி­தொ­ரு­புறம் என்று எமது பிரச்­சி­னை­களை அடை­யாளங் கண்டு அவற்றுக்கு நிவா­ர­ணங்­களைப் பெற்றுக் கொடுக்க அர­சாங்கம் முன்­வர வேண்டும். வெறு­மனே அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் ஜெனி­வாவில் அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்­காக நட­வ­டிக்­கை­களில் இறங்­கினால் எமது மக்­களின் பிரச்­சி­னைகள் உண்­மை­யாகத் தீர்க்­கப்­படாது.

எமது பெரு­ம­திப்­பிற்­கு­ரிய உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்சர் வஜிர அபே­வர்­தனவை தனிப்­பட்ட முறையில் நான் மிகவும் நேசிக்­கின்றேன். மக்கள் பணி­யாற்ற வேண்டும் என்­பதில் மிகவும் துடிப்­பாக இருப்­பவர் அவர். மனி­த­நேயம் மிக்­கவர். அவரின் வருகை எம்மை மகிழ்­விக்­கின்­றது. எமது மக்­களின் நீண்­ட­காலத் தேவை­களை கண்­ட­றிந்து உரிய நிவா­ர­ணங்­களை அவர் பெற்றுக் கொடுப்பார் என்ற நம்­பிக்கை எமக்­குண்டு.  

எமது மக்­களில் பலர் போரின் விளை­வாக உயிர் இழப்­புக்­க­ளை சந்­தித்­தது ஒரு­பு­ற­மி­ருக்க, பொருள் பண்­டங்கள், வீடு வள­வுகள் என அத்­த­னை­யையும் தொலைத்­து­விட்டு நடைப்­பி­ணங்­க­ளாக யுத்த வடுக்­களை உடல்­க­ளிலும் உள்­ளங்­க­ளிலும் சுமந்­த­வர்­க­ளாக சுற்­றித்­தி­ரி­வது எமக்கு மிகுந்த மன­வ­ருத்­தத்தை தரு­கின்­றது. இம் மக்­க­ளுக்­கான இருப்­பிட வச­திகள் அவர்­க­ளுக்கு ஏற்­ற­வாறு செய்து தரப்­பட வேண்டும். அவர்கள் வாழ்ந்த நிலங்கள் அவர்கள் தொழில் செய்­கின்ற பூமிகள், கடல் வளங்கள், விவ­சாய நிலங்கள் அவர்­க­ளிடம் மீள ஒப்­ப­டைக்­கப்­பட வேண்டும். 

ஒரு நாட்டின் பாது­காப்­புக்கு இரா­ணுவம் அவ­சி­ய­மா­னது. தமது சொந்த நாட்டை ஏனைய நாடு­களின் ஆக்­கி­ர­மிப்­புக்கள் மற்றும் இரா­ணுவ நட­வ­டிக்­கை­களில் இருந்து பாது­காப்­ப­தற்கும் உள்­நாட்டில் அமை­தி­யான சூழ்­நி­லையை உரு­வாக்­கு­வ­தற்கும் இரா­ணு­வத்தின் பணி அவ­சி­ய­மா­னது. ஆனால் எமது பகு­தி­களில் விவ­சாய நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தற்கும், உண­வ­கங்­களை நடத்­து­வ­தற்கும், காணி­களைத் தம் வசப்­ப­டுத்தி வைத்­தி­ருப்­ப­தற்கும், குளங்­களைப் புன­ர­மைப்புச் செய்­வ­தற்கும் இரா­ணுவ வீரர்­களின் சேவைகள் தேவைப்­ப­ட­மாட்­டாது. 

போர் முடிந்து அடுத்த மே மாதம் 10 வரு­டங்கள் ஆகப் போகின்­றது. இன்­னமும் எம்மைப் போர்க்­கால மக்­க­ளாகப் பார்த்து இரா­ணுவ கண்­கா­ணிப்பை முடுக்கி வைத்து வரு­வது எம் மேல் நம்­பிக்கை இன்­மையைக் காட்­டு­கின்­றது. படிப்­ப­டி­யாக இரா­ணுவ பிர­சன்­னத்தைக் குறைப்­ப­தாக அர­சாங்கம் உத்­த­ர­வாதம் தந்­தி­ருப்­பினும் அது நடை­பெ­றா­மலே இருக்­கின்­றது. மாறாக குற்றச் செயல்கள் இங்கு கூடி­யுள்­ளன. அவற்றைத் தடுக்க எமக்கு அதி­கா­ரங்கள் தரப்­ப­ட­வில்லை. பொலிஸார் எமது கட்­டுப்­பாட்­டுக்குள் இல்லை. இரா­ணுவம் வெளியேறி பொலிஸ் அதி­காரம் எமக்குக் கைய­ளிக்­கப்­பட்டால் இன்­றைய வன்­முறைக் கலா­சா­ரத்தை வடக்கில் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரு­வது ஒரு பெரிய காரி­ய­மன்று. உள்ளூர் வாசி­களை ஆட்­கொண்டு வெளியூர்­வா­சிகள் தமது காரி­யங்­களைச் சாதித்துக் கொள்ள எமது மக்கள் இடம் கொடுக்க மாட்­டார்கள்.  

இந் நிலையில் வேலைத்­திட்­டங்­க­ளுக்­கான ஒதுக்­கீ­டு­களை இரா­ணு­வத்­திற்கு வழங்கி அதன் மூலம் எமது வேலைத்­திட்­டங்­களை நிறைவு செய்­வ­தென்­பது இந் நாட்டின் அடிப்­படைக் கொள்­கை­க­ளுக்கு முர­ணான ஒரு செயற்­பா­டா­கவே அமையும். இதனால் தான் இப் பகு­தியில் நிலை கொண்­டி­ருக்கும் இரா­ணு­வத்தின் செறிவை குறைக்­கு­மாறு நான் பல இடங்­க­ளிலும் எடுத்­து­ரைத்து வரு­கின்றேன். நீதி­ப­திகள் போல் இரா­ணு­வத்­தி­னரும் ஒதுக்குப் புற­மாக இருந்து தமது கட­மை­களை ஆற்ற வேண்டும், மக்கள் மனதைத் தம் வசப்­ப­டுத்த வேண்டும் என்ற கருத்தில் மக்­க­ளுடன் இரா­ணு­வத்­தி­னரைச் சேர்ந்து வாழ­வி­டு­வது எதிர் காலத்தில் பல சங்­க­டங்­களை ஏற்­ப­டுத்தும். 

இரா­ணுவ அதி­கா­ரிகள் மீதோ, போர் வீரர்கள் மீதோ எந்­த­வி­த­மான காழ்ப்­பு­ணர்ச்­சியும் எனக்கு இல்லை. இரா­ணுவ உயர் அதி­கா­ரி­க­ளுடன் நான் சிறந்த உறவை வெளிப்ப­டை­யாகக் கொண்­டி­ருக்­கின்றேன். ஆனால் கொள்கை அடிப்­ப­டையில் படை­யினர் முன்­னெ­டுக்கும் செயற்­பா­டுகள் கபட நோக்­கங்கள் கொண்­டி­ருக்கக் கூடாது. எம்மை வாழ வைப்­ப­தாகக் கூறிக் கொண்டு எம்மை எஞ்­ஞான்றும் கட்­டுப்­பா­டு­க­ளுக்குள் வைக்­கப்­பட வேண்­டிய மக்­க­ளாக கணித்து வாழக் கூடாது. 

நாம் வாழ்­வது எமது பாரம்­ப­ரிய நிலங்­களில். இங்கு இருக்கும் இயற்கை வளங்கள் யாவும் இங்­குள்ள மக்­க­ளுக்கே சொந்தம். அவற்றை சூறை­யாடி செல்­வ­தையோ தொடர்ந்து ஆக்­கி­ர­மிப்பில் வைத்து வரு­வ­தையோ எமது மக்கள் தொடர்ந்து ஏற்றுக் கொள்­வார்கள் என்று எண்ணக் கூடாது. ஏதா­வது எச்சில் துண்­டு­களை எறிந்தால் அவர்கள் எம்­வசம் இருப்­பார்கள் என்றும் எண்ணக் கூடாது. எமது காணிகள் எமக்கு எந்­த­ள­வுக்கு முக்­கி­யமோ எமது சுதந்­தி­ரமும் எமக்கு மிக முக்­கியம். எம்­முடன் கலந்­தா­லோ­சித்தே எமக்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும். 

எம்மைப் பங்­கு­தா­ரர்­க­ளாக ஏற்றே எமக்­கான நன்­மைகள் செய்து தரப்­பட வேண்டும். எமக்­கான அபி­வி­ருத்­தி­களை எமக்­கூ­டாகச் செய்ய முன் வாருங்கள். எமக்­கூ­டாக எனும் போது நான் மாகாண நிர்­வா­கத்­தையே சுட்­டு­கின்றேன். எம்மை உங்­க­ளுக்குச் சரி­ச­ம­மா­ன­வர்கள் என்று நீங்கள் ஏற்றுக் கொண்­டால்த்தான் பங்­கு­தார வாழ்க்கை பயன் அளிக்கும். அந்­நி­லையில் மத்­தியும் மாகா­ணமும் சேர்ந்து வேலை செய்­யலாம். திட்­டங்­க­ளையும் நிதி­யையும் உங்கள் கைவசம் வைத்துக் கொண்டு மாகாண அலு­வ­லர்­களை கொண்டு உங்கள் திட்­டங்­களை நிறை­வேற்­று­வதை நாங்கள் கண்­டிக்­கின்றோம்.

இவற்றை எல்லாம் எமது அமைச்சர் நன்கு புரிந்து கொண்டவர் என எண்ணுகின்றேன். எனவே எமது எதிர்பார்ப்புக்களை நன்கறிந்து எமது மனோ நிலைகளை நன்கு புரிந்து, நீங்கள் இப் பகுதி மக்கள் தொடர்பாக, அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக இப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பாக உயர் அதிகாரிகளுடனும் மக்கள் பிரதிநிதிகளுடனும் தொடர்ந்து வெளிப்படையாகப் பேச்சுக்களை முன்னெடுங்கள். அவற்றின் அடிப்படையில் எமது பிராந்தியத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கள் சிதைவுறா வகையில், பாரம்பரியங்கள் பழுதுறா வகையில், கலாசார சீரழிவுகள் நடைபெறா வகையில் உயரிய திட்டங்களைத் தீட்டி எம் மக்களுக்கு உதவ முன்வாருங்கள் என வினயமாக வேண்டி எனது உரையை நிறைவு செய்கின்றேன் என்றார். 

http://www.virakesari.lk/article/35896

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

மாகாணசபை ஆட்சிக்கு வந்தவுடன் பொலிஸ் அதிகாரத்தை கேட்க அழுத்தம் கொடுத்திருக்கவேண்டும். ஆட்சி முடிவடையும் நேரம், அதிலும் பொலிஸ் அதிகாரம் கிடைக்கவே கிடைக்காது என்று தெரிந்தும், அதிகாரம் கிடைத்தால் வன்முறையைக் கட்டுப்படுதுவது பெரிய காரியமில்லை என்று சொல்லுவது வெட்கக்கேடானது.

என் கண்ணுக்குப் பட்டவரை.. விக்கி ஐயா ஆட்சிக்கு வந்ததில் இருந்து இராணுவ பிரசன்ன அகற்றம்.. பொலிஸ் அதிகாரம் பற்றி பல தடவைகள் குறிப்பிட்டது செய்திகளில் வந்திருக்குது.

குறிப்பாக.. 13.. 13+ என்றும்.. நல்லாட்சி அரசு என்றும் சம் சும் கும்பல்.. குடுகுடுப்பை அடிச்சுத் திரிந்த காலங்களில்.. விக்கி ஐயா.. பொலிஸ்.. காணி.. நிதி அதிகாரங்கள் அற்ற தீர்வுகள் தமிழ் மக்களை சுயநிர்ணய உரிமையும் சம உரிமையும் கொண்ட மக்களாக வாழ இலங்கை தீவில் அனுமதிக்காது என்பதை பல தடவைகள் சுட்டிக்காட்டி விட்டிருக்கிறார். 

அது சாத்தியப்பாடு என்ற ஒரு நிலையிலும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி பலவீனமாக நிலையில் உள்ள மக்களிடம்... குறைந்தது.. ஆக்கிரமிப்பாளனின் பொலிஸ் படையில் தமிழ் மக்கள் விசுவாசமுள்ள இளைஞர்களை உள்வாங்கியாவது.. நிலமையை தமிழ் மக்களுக்கு ஏதாவது சிறிய வகையில் ஆவது சாத்தியம் ஆக்குவோம் என்றும் அவர் சிந்தித்துக் கருத்துச் சொல்லி இருக்கிறார்.

நடைமுறை காலத்தின் கோலத்தின் அடிப்படையில்.. மக்கள் இசைவடைய வேண்டி இருக்கிறது. அது தமிழ் மக்களுக்கு கடினம் அல்ல. காரணம்.. ஹிந்திய படை ஆக்கிரமிப்பின் போதும்.. இதே வாள் வெட்டு.. மண்டையன் குழுக்கள்... கள்வர் குழுக்கள்.. போதைவஸ்துக் குழுக்கள்.. திட்டமிட்டு இயக்கப்பட்டன என்பதை நீங்கள் மறந்திருக்கக் கூடாது. ?

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது இவ்வளவு வன்முறைக்கும் மறைமுகமாகவும் நேரடியாகவும் பின்னணியில் இயங்குபவர்கள் இராணுவமும் பொலிசும் என்பதில் எந்த வித ஐயமுமில்லை. விக்கி ஐயா அப்பொழுதும் இப்பொழுதும் இந்த அதிகாரங்கள் பற்றி பல முறை பேசியு|ள்ளார். யாரும் கண்டு கொள்ளவில்லை. கூட்டமைப்பு அவருக்கு ஆதரவு  கொடுக்கும் சக்தியை அவரின் காலை வாருவதிலேயே  செலவளித்து கொண்டிருக்கிறார்கள்.  தேர்த்தல் காலம் கிட்டும் போது சம்பந்தரும்  சுமந்திரனும் சில கருத்துக்களை விழுந்தடித்து கூறுவதை அனைவரும் அவதானித்து இருக்கலாம்.விக்கி அவர்கள் தன்னால் இயன்ற அளவு அழுத்தம் கொடுத்துள்ளார் எனது பார்வையில். பாராமுகமாக இருப்பது சிங்கள அரசு தான். அவர்களின் வேலைத்திட்டம் தமிழ் மக்களை தலையெடுக்காமல் பண்ணுவது என்பது வெல்ளிடைலையாக தெரிகிறது. முதலில் யாரைப் பார்த்து யார் வெட்கப்பட வேண்டும் என்பதில் நாம் தெளிவாக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

சிறுமி ரெஜீனாவின் கொலையை யார் செய்தார்கள்? சிறிய தகப்பன் உட்படஉறவினர்கள் செய்தார்கள்.

ஏன் செய்தார்கள்? கள்ளு களவு எடுத்ததற்காக கள்ளுக்கு சொந்தக்காரர் ஏசினார், ஆகவே பழிவாங்க செய்தார்கள்.

இராணுவம் இங்கே என்ன மாதிரி சம்பந்த பட்டது?

வித்தியா கொலைக்கு பின்னணி என்ன? அழகான பெண். வெளிநாட்டில் இருந்த ஈழத் தமிழன் இவ்வாறான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து பணம் சம்பாத்திக்கிறான். அவன் ஏற்பாடு செய்து ஊர் தமிழ் இளைஞர்கள் செய்த கொலை இது. பணம் படைத்த அவன் பணம் கொடுத்து சில போலிஸ் காரரையும் அமைச்சரையும் வாங்கினான்.

 இராணுவம் இங்கே என்ன மாதிரி சம்பந்த பட்டது?

இந்த வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் சிங்களவர்களா? இல்லையே? இவர்களின் குடும்பங்கள் சிங்கள குடும்பங்களா?  இல்லையே?  தமது பிரச்சினைகளுக்கு மற்றவர்களை குற்றம் சாட்டிக்கொண்டு தாம் செய்யக்கூடியவற்றை செய்யாமல் இருப்பதே ஈழத் தமிழ்   மக்களின் அழிவுக்கு முக்கியமான காரணம்.

உண்மைகள் எவை?

  1. வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் தமிழ் மக்கள் - இருபதுகள் மற்றும் முப்பது வயதுகளை உடையவர்கள்.
  2. இவர்களுக்கு வெளிநாட்டுகளில் உள்ள  ஈழத் தமிழர்கள் பணம் அனுப்புகிறார்கள்.
  3. இவர்கள் இராணுவத்தின் பின்னணியுடன் இயங்குவதாக வெளிநாடுகளில் உள்ள தமிழ் தேசிய அமைப்புகள் ஆயினும் ஆதாரங்களை காட்டவில்லை.
  4.  இந்த வன்முறையாளருக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்று இன்றுவரை எந்த தமிழ் அமைப்பு வெளிநாட்டு தமிழரை  கேட்டு இருக்கிறது? எதுவும் இல்லை.
  5. எந்த மாகாண அல்லது பாராளுமன்ற அரசியல்வாதி இந்த வன்முறையாளர் குடும்பங்களை சந்தித்து அவர்களின் பிள்ளைகள் பற்றி கலந்துரையாடி இருக்கிறார்கள்? எவரும் இல்லை.
  6. எந்த ஈழத் தமிழ் அமைப்பு இந்த இளம் வன்முறையாளர்களை சந்தித்து இவர்களின் எதிர்காலம் பற்றி பேசி இருக்கிறார்கள்? யாரும் இல்லை.

ஸ்ரீ லங்கா அரசு இந்த வன்முறைகளை இரும்பு  கரம் கொண்டு கட்டுப்படுத்தும். அதற்கு இராணுவ ஆட்சி தேவை.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Jude said:

இராணுவம் இங்கே என்ன மாதிரி சம்பந்த பட்டது?

இராணுவம் 95இல் இருந்து விதைத்ததை நாம் இப்போது அறுவடை செய்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

கல்வி கலா­சார பண்­பா­டு­க­ளுக்கு யாழ்ப்­பா­ணம் ஒரு காலத்­தில் பெயர்­போ­யி­ருந்­தது. ஆனால் இன்று தலை­கீ­ழாக நிலமை மாறிப்­போய் விட்­டது. வாள்­வெட்­டுக்­கு­ழுக்­க­ளின் அட்­ட­கா­சம் ஒரு­பு­றம். போதைப் பொருள் பாவ­னை­யின் உச்­சம் மறு­பு­றம். கொள்­ளை­யர்­க­ளின் அட்­டூ­ழி­யங்­கள் இன்­னொ­ரு­பு­றம். காமு­கர்­க­ளின் கொலை­வெ­றித்­த­னங்­கள் மற்­றொ­ரு­பு­றம் என்று வார்த்­தை­க­ளால் சொல்ல முடி­யாத அள­வுக்கு யாழ்ப்­பா­ணத்­தின் நிலமை வந்­துள்­ளது. இது திட்­ட­மிட்டு கொண்­டு­வ­ரப்­பட்­டது. இது யாவ­ரும் அறிந்த உண்மை.

1 hour ago, Jude said:

ராணுவம் இங்கே என்ன மாதிரி சம்பந்த பட்டது?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இராணுவம் 95இல் இருந்து விதைத்ததை நாம் இப்போது அறுவடை செய்கிறோம்.

27 ஆண்டுகளாக ஈழத்தமிழ் மக்கள் தம்மை தாமே அழித்து கொள்கிறார்கள். அதற்கு வெளியாரை காரணம் காட்டுகிறார்கள், ஆனால் தம்மை தாமே அழிப்பதை குறைத்து கொள்ளவில்லை. 

1 hour ago, ஈழப்பிரியன் said:

கல்வி கலா­சார பண்­பா­டு­க­ளுக்கு யாழ்ப்­பா­ணம் ஒரு காலத்­தில் பெயர்­போ­யி­ருந்­தது. ஆனால் இன்று தலை­கீ­ழாக நிலமை மாறிப்­போய் விட்­டது. வாள்­வெட்­டுக்­கு­ழுக்­க­ளின் அட்­ட­கா­சம் ஒரு­பு­றம். போதைப் பொருள் பாவ­னை­யின் உச்­சம் மறு­பு­றம். கொள்­ளை­யர்­க­ளின் அட்­டூ­ழி­யங்­கள் இன்­னொ­ரு­பு­றம். காமு­கர்­க­ளின் கொலை­வெ­றித்­த­னங்­கள் மற்­றொ­ரு­பு­றம் என்று வார்த்­தை­க­ளால் சொல்ல முடி­யாத அள­வுக்கு யாழ்ப்­பா­ணத்­தின் நிலமை வந்­துள்­ளது. இது திட்­ட­மிட்டு கொண்­டு­வ­ரப்­பட்­டது. இது யாவ­ரும் அறிந்த உண்மை.

அப்படியாயின், சிங்கள இராணுவத்தின் ஆற்றலுக்கு முன்னால் தமிழ் மக்களின் அறிவு, ஆளுமை, பண்பாடு, போராற்றல் அனைத்தும் மிகப்பலவீனமானது என்று கொள்ளலாமா? ஈழத் தமிழினம் உலகின் பகைமைகள், இயற்கை அனர்த்தங்கள், அழிவுகள், போர்கள், மற்றும் எதிரிகளிடம் இருந்து தன்னை தானே காப்பாற்றிக்கொண்டு வாழத்தக்க இனம் அல்ல என்ற முடிவுக்கா நாம் வருகிறோம்? 

" இது யாவ­ரும் அறிந்த உண்மை" என்கிறீர்கள், ஒரு ஆதாரம் கூட காட்டவில்லையே? வெறுமனே வெளியரில் குற்றம் கூறிவிட்டு இப்படியே அழிவை தொடர போகிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Jude said:

அப்படியாயின், சிங்கள இராணுவத்தின் ஆற்றலுக்கு முன்னால் தமிழ் மக்களின் அறிவு, ஆளுமை, பண்பாடு, போராற்றல் அனைத்தும் மிகப்பலவீனமானது என்று கொள்ளலாமா? ஈழத் தமிழினம் உலகின் பகைமைகள், இயற்கை அனர்த்தங்கள், அழிவுகள், போர்கள், மற்றும் எதிரிகளிடம் இருந்து தன்னை தானே காப்பாற்றிக்கொண்டு வாழத்தக்க இனம் அல்ல என்ற முடிவுக்கா நாம் வருகிறோம்? 

அப்படி ஒரு முடிவுக்கு நான் வரவில்லை,அந்த முடிவை நீங்கள் எடுக்கின்றீர்கள் என்றால் அதை தடுத்து நிறுத்த எனக்கு உரிமை இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

நடப்பது ஒரு திட்டமிடப்பட்ட ஆக்கிரமிப்பு, நடந்துமுடிந்தது ஒரு திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட இனவழிப்பு என்று நன்றாகப் புரிந்துகொண்டும், தமிழராக இருக்கும் நீங்கள் இன்றுவரை சிங்களத்தின் ஆக்கிரமிப்பையும் தமிழின இனவழிப்பையும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றோ, அடங்கிப் போங்கள் என்றோ தொடர்ச்சியாகக் கேட்டுவருவது ஏனென்று விளங்கமுடியாமல்த் தவிக்கிறேன்.

ஒன்றில் நீங்கள் தமிழில் நன்கு புலமைத்துவம் உள்ள ஒரு சிங்களவர். அல்லது,  முற்றான சரணாகதியே தமிழருக்கான முடிவு என்பதை முழுமனதோடு வரிந்துகொண்டு அதை மற்றவர்களும் ஏற்கவேண்டும் என்று பகீரதப் பிரயத்தன்ம் செய்யும் ஒரு தமிழராக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு நான் வருகிறேன்.

உங்களின் எந்தக் கருத்திலுமே தமிழர்களின் உரிமைகள் கிடைக்கவேண்டும் என்பது பற்றியோ அல்லது அவர்களின் பூர்வீக தாயக இருப்பின் அவசியம் பற்றியோ அல்லது அவர்களின் மொழி, மத கலாசார தொடர்ச்சியின் அவசியம் பற்றியோ, அவர்களின் அடையாளத்தின் தனித்தன்மை காக்கப்படுவதுபற்றியோ எந்த சாதகமான கருத்துமே இடம்பெறுவதில்லை. உங்களைப் பொறுத்தவரை இவை எதுவுமே எமக்குத் தேவையற்றது என்றும், அடையாளத்தை இழந்தாவது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்பதுமே கருத்தாக இருக்கிறது.

ஒரு சமூகம் இன உணர்வுடன் விழித்திருப்பதை மழுங்கடிக்கச் செய்ய ஆக்கிரமிப்பாளர்கள் பல சமூக சீர்கேடுகளை தாம் ஆக்கிரமித்திருக்கும் மக்களின் மீது வலிந்து திணிக்க முயல்வார்கள் என்பது தெரிந்திருந்தும், அப்படி நடக்கவில்லை, ஏனென்றால் சமூக சீர்கேடுகளில் ஈடுபடுவது தமிழர்களே, ஆகவே இவற்றுக்கும் ஆக்கிரமிப்பு ராணுவத்திற்கும் தொடர்பில்லை என்று நீங்கள் நிறுவ முயல்வதும் உங்களுக்கே வேடிக்கையாகத் தெரிந்திருந்தாலும் நீங்கள் அதை தொடர்ந்தும் செய்கிறீர்கள்.

இறுதியாக, 2009 வரைக்கும் உங்களின் கருத்துக்கள் எப்படியிருந்தன என்பது பற்றியும், இப்போது எப்படியிருக்கின்றன என்பது பற்றியும் சிந்திக்கிறேன்.

எப்போது ஒருவன் மனதளவில் தான் தோற்றுவிட்டதாக நினைக்கிறானோ அன்றே அவன் உடலளவிலும் தோற்றுவிட்டான் என்பதற்கு நீங்களே சாட்சி. 

உங்களின் சரணாகதி அரசியலை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள். தொடர்ச்சியான ஆக்கிரமிற்குள் இருந்துகொண்டே, உரிமைக்காகவும், சமமான வாழ்விற்காகவும் தம்மால் முடிந்தவழிகளில் போராடிவரும் மக்களோ, அல்லது இங்கே உங்களின் கருத்துக்களை வாசிக்கும் எவருமோ மாறப்போவதில்லை என்பது மட்டும் திண்ணம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ragunathan said:

உங்களின் எந்தக் கருத்திலுமே தமிழர்களின் உரிமைகள் கிடைக்கவேண்டும் என்பது பற்றியோ அல்லது அவர்களின் பூர்வீக தாயக இருப்பின் அவசியம் பற்றியோ அல்லது அவர்களின் மொழி, மத கலாசார தொடர்ச்சியின் அவசியம் பற்றியோ, அவர்களின் அடையாளத்தின் தனித்தன்மை காக்கப்படுவதுபற்றியோ எந்த சாதகமான கருத்துமே இடம்பெறுவதில்லை. உங்களைப் பொறுத்தவரை இவை எதுவுமே எமக்குத் தேவையற்றது என்றும், அடையாளத்தை இழந்தாவது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்பதுமே கருத்தாக இருக்கிறது.

உயிர் வாழ்வதற்கான உரிமையே முதாலாவதும் முக்கியமானதுமான மனித உரிமை. அதை நீங்கள் மற்ற உரிமைகளுக்கு கீழாக கொண்டுவந்து, இந்த அணுகுமுறையால் இதுவரை இலட்ச்சக்கணக்கில் மக்கள் மாண்டு போன பிறகும் கூட உயிர் வாழும் உரிமைக்கு உரிய இடம் கொடுக்க மறுக்கிறீர்கள்.  அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

5 hours ago, ragunathan said:

இறுதியாக, 2009 வரைக்கும் உங்களின் கருத்துக்கள் எப்படியிருந்தன என்பது பற்றியும், இப்போது எப்படியிருக்கின்றன என்பது பற்றியும் சிந்திக்கிறேன்.

2009 மே  18 க்கு முற்பட்ட காலத்துக்கும், பிற்பட்ட காலத்துக்கும் மிகப்பெரும் வேறுபாடு உள்ளது. அது உங்களுக்கு தெரியவில்லையா? 2009 மே  18 க்கு முற்பட்ட காலத்தில் மக்களுக்கு பாதுகாப்பையும் உயிர்  வாழும் உரிமையையும் விடுதலை புலிகள் உறுதி செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கும் பெரும்பாலான ஈழத்தமிழ் மக்களுக்கும் இருந்தது. இன்று விடுதலை புலிகள் இல்லை. அவர்கள் "ஒபாமாவின் கரங்களில் மக்களை ஒப்படைத்து" விட்டு காணாமல் போனார்கள். ஒபாமா மக்களை காப்பாற்றவில்லை. இன்று ஒபாமாவும் எதுவும் செய்யும் நிலையிலும் இல்லை. இலங்கையில் யதார்த்தம் தமிழ் மக்கள் சிங்களவருடன் வாழவேண்டும் என்றே அமைந்து இருக்கிறது. ஆகவே அதற்கான வழியை பார்க்க வேண்டும். 

5 hours ago, ragunathan said:

தொடர்ச்சியான ஆக்கிரமிற்குள் இருந்துகொண்டே, உரிமைக்காகவும், சமமான வாழ்விற்காகவும் தம்மால் முடிந்தவழிகளில் போராடிவரும் மக்களோ, அல்லது இங்கே உங்களின் கருத்துக்களை வாசிக்கும் எவருமோ மாறப்போவதில்லை என்பது மட்டும் திண்ணம். 

விசுவமடுவில் விழுப்புண் கண்ட முன்னாள் விடுதலை புலிகள்  தாம் மாறிவிட்டார்கள் என்பதை சிங்கள இராணுவ கேர்னல் ரத்னப்ரியவை தூக்கி அனைத்து அழுது பிரியாவிடை கொடுத்தது மூலம் உலகுக்கே காட்டிவிடார்களே? இங்கு எழுதும் தமிழ் தேசியவாதிகள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் தேசிய  அமைப்புகள் கைவிட்ட நிலையில் தான் இந்த முன்னாள் விடுதலை புலிகள் சிங்கள கெர்னலின் அன்புக்கும் அரவணைப்புக்கும்  ஏங்கினார்கள் என்பதை இங்கு நீங்கள் காணலாம். இது இன்று உலகறிந்தது. இப்படி வெளிவராமல் எத்தனையோ மக்கள் தாம் உயிர்வாழ சிங்கள தலைமையில், அதுவும் இராணுவ தலைமையிலும் கூட, நம்பிக்கை வைக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். காரணம் தமிழ் தேசியவாதிகளின் உரிமை பிரச்சனை இன்று அவர்களுக்கு முக்கியம் இல்லை - உயிர் வாழ்வதே அவர்களின் முக்கிய தேவை. அதுவே எனக்கும் முக்கியமானது. அதை சிங்கள இராணுவம் தான் வழங்கும், தமிழ் தேசியம் அதற்கு தடையானால் நான் தமிழ் தேசியத்தை ஆதரிக்க வேண்டிய தேவை இல்லை.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
On 7/3/2018 at 3:24 PM, Jude said:

சிறுமி ரெஜீனாவின் கொலையை யார் செய்தார்கள்? சிறிய தகப்பன் உட்படஉறவினர்கள் செய்தார்கள்.

ஏன் செய்தார்கள்? கள்ளு களவு எடுத்ததற்காக கள்ளுக்கு சொந்தக்காரர் ஏசினார், ஆகவே பழிவாங்க செய்தார்கள்.

இராணுவம் இங்கே என்ன மாதிரி சம்பந்த பட்டது?

வித்தியா கொலைக்கு பின்னணி என்ன? அழகான பெண். வெளிநாட்டில் இருந்த ஈழத் தமிழன் இவ்வாறான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து பணம் சம்பாத்திக்கிறான். அவன் ஏற்பாடு செய்து ஊர் தமிழ் இளைஞர்கள் செய்த கொலை இது. பணம் படைத்த அவன் பணம் கொடுத்து சில போலிஸ் காரரையும் அமைச்சரையும் வாங்கினான்.

 இராணுவம் இங்கே என்ன மாதிரி சம்பந்த பட்டது?

இந்த வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் சிங்களவர்களா? இல்லையே? இவர்களின் குடும்பங்கள் சிங்கள குடும்பங்களா?  இல்லையே?  தமது பிரச்சினைகளுக்கு மற்றவர்களை குற்றம் சாட்டிக்கொண்டு தாம் செய்யக்கூடியவற்றை செய்யாமல் இருப்பதே ஈழத் தமிழ்   மக்களின் அழிவுக்கு முக்கியமான காரணம்.

உண்மைகள் எவை?

  1. வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் தமிழ் மக்கள் - இருபதுகள் மற்றும் முப்பது வயதுகளை உடையவர்கள்.
  2. இவர்களுக்கு வெளிநாட்டுகளில் உள்ள  ஈழத் தமிழர்கள் பணம் அனுப்புகிறார்கள்.
  3. இவர்கள் இராணுவத்தின் பின்னணியுடன் இயங்குவதாக வெளிநாடுகளில் உள்ள தமிழ் தேசிய அமைப்புகள் ஆயினும் ஆதாரங்களை காட்டவில்லை.
  4.  இந்த வன்முறையாளருக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்று இன்றுவரை எந்த தமிழ் அமைப்பு வெளிநாட்டு தமிழரை  கேட்டு இருக்கிறது? எதுவும் இல்லை.
  5. எந்த மாகாண அல்லது பாராளுமன்ற அரசியல்வாதி இந்த வன்முறையாளர் குடும்பங்களை சந்தித்து அவர்களின் பிள்ளைகள் பற்றி கலந்துரையாடி இருக்கிறார்கள்? எவரும் இல்லை.
  6. எந்த ஈழத் தமிழ் அமைப்பு இந்த இளம் வன்முறையாளர்களை சந்தித்து இவர்களின் எதிர்காலம் பற்றி பேசி இருக்கிறார்கள்? யாரும் இல்லை.

ஸ்ரீ லங்கா அரசு இந்த வன்முறைகளை இரும்பு  கரம் கொண்டு கட்டுப்படுத்தும். அதற்கு இராணுவ ஆட்சி தேவை.

அப்போ இதற்கு யார் பொறுப்பு கூறுவது??

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, nunavilan said:

அப்போ இதற்கு யார் பொறுப்பு கூறுவது??

இந்த கேள்விக்கு பதில் எல்லோருக்கும் தெரியும் - ஸ்ரீ லங்கா அரசாங்கம் தான் பொறுப்பு. ஆனால் ஸ்ரீ லங்கா அரசு ஒருபோதும் இப்படி இறந்து போனவர்களை மீள கொண்டுவரப் போவதில்லை. அதற்கு காரணமானவர்களை தண்டிக்கவும் போவதில்லை. இந்த நிலையில் இப்படி சாத்தியமற்ற ஒன்றை கேட்டு கேட்டு ஒன்பது வருடங்களில் தமிழ் பகுதிளில் தமிழ் மக்களாலேயே மோசமான அழிவுகள் தொடர்வதை கண்டும் வாழா இருப்பது முட்டாள்தனமாக தெரியவில்லையா? ஈழத் தமிழ் இனம் மற்றவர்களால் தாம் அழிவதை தடுக்கவும் ஆற்றல் அற்றதாகவும், அப்படி மற்றவர்கள் தம்மை அழிப்பது குறைந்தால் தாமாகவே தம்மை அழிக்கும் குணம் கொண்டதாகவும் இருக்கிறது. ஆகவே இந்த ஈழத் தமிழ் இனம் தானாகவே அழியாமல் இருக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. மற்றவர்களின் பாதுகாப்பிலேயே இந்த இனம் தப்பி பிழைக்கும் தன்மை கொண்டதாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஸ்ரீ லங்கா அரசு இந்த வன்முறைகளை இரும்பு  கரம் கொண்டு கட்டுப்படுத்தும். அதற்கு இராணுவ ஆட்சி தேவை.

கூட்டிக்கொடுக்கவும்  மதுபானங்கள்,  போதை மருந்துகளை இளம் பிள்ளைகளிடம் விற்கவும் தான் தற்போதைய இராணுவம்  மிகுந்த உற்சாகத்துடன் செயற்படுகிறது. எப்போ இவர்கள் நீங்கள் சொல்வது போல் மக்களுக்காக செயற்படுவார்கள் என சொல்லுங்கள்  பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, nunavilan said:

கூட்டிக்கொடுக்கவும்  மதுபானங்கள்,  போதை மருந்துகளை இளம் பிள்ளைகளிடம் விற்கவும் தான் தற்போதைய இராணுவம்  மிகுந்த உற்சாகத்துடன் செயற்படுகிறது. எப்போ இவர்கள் நீங்கள் சொல்வது போல் மக்களுக்காக செயற்படுவார்கள் என சொல்லுங்கள்  பார்க்கலாம்.

"கூட்டிக்கொடுக்கவும்  மதுபானங்கள்,  போதை மருந்துகளை இளம் பிள்ளைகளிடம் விற்கவும் தான் தற்போதைய இராணுவம்" என்று நீங்கள் சொல்கிறீர்கள்.  குருபரன் போன்ற உள்ளூர் தமிழ் தேசியவாதிகளோ, புலம்பெயர்ந்த நாடு கடந்த அரசோ அல்லது சர்வதேச மன்னிப்பு சபையோ இப்படி தற்போதைய இராணுவத்தை பற்றி சொல்லவில்லை.  விஸ்வமடு மக்கள் அழுது அழுது இராணுவ அதிகாரிக்கு பிரியாவிடை கொடுத்ததை மேலே படியுங்கள். இது இன்று உலகறிந்தது. பகிரங்கமாக தெரியாமல் இப்படி எத்தனையோ மக்கள் நல திட்டங்கள் நடக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

சில பத்து விஸ்வமடு மக்களை வைத்து ஓட்டு மொத்த தமிழ் மக்களையும் எடை போட முனைகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2018 at 3:11 PM, nunavilan said:

சில பத்து விஸ்வமடு மக்களை வைத்து ஓட்டு மொத்த தமிழ் மக்களையும் எடை போட முனைகிறீர்கள்.

நீங்கள் கேட்டது :

"கூட்டிக்கொடுக்கவும்  மதுபானங்கள்,  போதை மருந்துகளை இளம் பிள்ளைகளிடம் விற்கவும் தான் தற்போதைய இராணுவம்  மிகுந்த உற்சாகத்துடன் செயற்படுகிறது. எப்போ இவர்கள் நீங்கள் சொல்வது போல் மக்களுக்காக செயற்படுவார்கள் என சொல்லுங்கள்  பார்க்கலாம்"  என்று கேட்டீர்கள்.

அதற்கான ஆதாரமாக விஸ்வமடு கெர்னலை காட்டினேன். தமிழ் தேசியவாதிகள் கைவிட்டுவிட்ட விழுப்புண் அடைந்த ஆயிரக்கணக்கான போராளிகளுக்கு சிங்கள இராணுவம் தான் இன்று உதவுகிறது.  அரசியல் எதிர்ப்பை தவிர்க்க  இதை அவர்கள் பகிரங்கப்படுத்தாமல் செய்கிறார்கள். சில  பத்து விஸ்வமடு போராளிகள் பிரியாவிடையின் போது அழுது அது பகிரங்கமாகி விட்டது. ஆனால் மறக்காதீர்கள் - இவர்கள் தமிழ் தேசியவாதிகளால் பயன்படுத்தப்பட்டு கழிவுகளாக ஒதுக்கி எறியப்பட்ட விழுப்புண் அடைந்த  தமிழீழ போராளிகள்.ந்த ஆயிரக்கணக்கான போராளிகளின் நிலையை பார்த்த பிறகும் தமிழ் தேசியத்தை உண்மையாக ஆதரித்து அதற்காக தியாகம் செய்ய முன்வரும் எவரும் முட்டாள்கள் அல்லது வாழ விருப்பாதவர்களாகவே இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Jude said:

அப்ப இது??

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2018 at 9:52 PM, Jude said:

"கூட்டிக்கொடுக்கவும்  மதுபானங்கள்,  போதை மருந்துகளை இளம் பிள்ளைகளிடம் விற்கவும் தான் தற்போதைய இராணுவம்" என்று நீங்கள் சொல்கிறீர்கள்.  குருபரன் போன்ற உள்ளூர் தமிழ் தேசியவாதிகளோ, புலம்பெயர்ந்த நாடு கடந்த அரசோ அல்லது சர்வதேச மன்னிப்பு சபையோ இப்படி தற்போதைய இராணுவத்தை பற்றி சொல்லவில்லை.  விஸ்வமடு மக்கள் அழுது அழுது இராணுவ அதிகாரிக்கு பிரியாவிடை கொடுத்ததை மேலே படியுங்கள். இது இன்று உலகறிந்தது. பகிரங்கமாக தெரியாமல் இப்படி எத்தனையோ மக்கள் நல திட்டங்கள் நடக்கின்றன.

இப்படித்தான் ஒல்லாந்தர் ஆங்கிலேயர் காலங்களில் கூட வறிய  மக்களிடம் இலவசம் உத்தியோகம் போன்றவற்றை காட்டி மத மாற்றம் செய்தார்கள். நீங்கள் அந்தக்காலத்தில் பிறந்திருந்தால் அவர்களுக்கு கூட சிலை வைத்திருப்பீர்கள். என்னவோ இப்படி சரணாகதி அரசியலை பரப்புவதன் மூலம் உங்கள் மூதாதையர்கள் செய்தவற்றை சரி என நிரூபிக்க பெரும் பாடு படுவது புரிகிறது. என்ன செய்வது உங்களுக்கெல்லாம் தவிச்ச முயல் அடிப்பதே தொழிலாகி விட்டது. அது எங்கள் சாபக்கேடு!!

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Eppothum Thamizhan said:

இப்படி தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் தமிழரை மத அடிப்ப்லாடையில் பிரிக்க விரும்பினால் உங்கள் பாணியில் என்னாலும் எழுத முடியும். நினைவில் வைத்து கொள்ளுங்கள்: உங்கள் மதத்து அகதிகள் எல்லாம் புகலிடம் தேடி வருவது கிறிஸ்தவ நாடுகளுக்கு. - பிச்சை எடுத்துக்கொண்டு பிச்சை தருபவரை வெறுக்கும் நன்றி இல்லா கூட்டம் என்று தெரிந்து தான் உங்களுக்கு தனி நாடு கிடைக்காமல் போக உலக நாடுகள் அனைத்து ஒன்றிணைந்து உங்களை அழித்து இருக்க வேண்டும்.

உங்கள் மூதாதையர்  தாங்கள் கீழ்சாதி என்று ஏற்றுக்கொண்டு எப்படி இந்துவாக மதம் மாறி பிராமணரிடம் சரணடைந்தார்கள் என்பதையும் கொஞ்சம் விளக்கமாக எழுதினால் ஆறுமுக நாவலருக்கு பக்கத்தில் உங்களுக்கும் சிலை வைத்து கௌமியமும் (மாட்டு சாணம்) பூசி விடுவோமே? வடஇந்திய மதத்துக்கு உங்கள் மூதாதையர் மதம் மாறி தங்களை தாங்களே தீண்டத்தகாத சாதி என்று ஏற்று கொண்ட  முட்டாள்களின்  வாரிசுகளாக நீங்கள்  உருவானது தான் உங்கள் சாபக்கேடு. 

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Jude said:

நாங்கள் அன்றிலிருந்து இன்றுவரை சிவனையே முழு முதற்கடவுளாக வணங்குகிறோம்.அற்பங்களுக்காக மதம் மொழி இனஉணர்வுகளை மாற்றவில்லை  

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Eppothum Thamizhan said:

நாங்கள் அன்றிலிருந்து இன்றுவரை சிவனையே முழு முதற்கடவுளாக வணங்குகிறோம்.அற்பங்களுக்காக மதம் மொழி இனஉணர்வுகளை மாற்றவில்லை  

சிவன் என்ன தமிழனா? வடஇந்திய கடவுள். தமிழனாக இருந்து கொண்டு ஏன் சமஸ்கிரதத்தில் பூசை செய்கிறீர்கள் ? சரஸ்வதியும் பிள்ளையாரும் லட்சுமியும் என்ன தமிழ் கடவுள்களா? உங்களை நீங்களே ஏமாற்றி கொள்கிறீர்கள். உங்கள் மூதாதையர் எல்லாம் வட இந்திய மதத்துக்கு மதம் மாறியே பிள்ளையாரையும் மாட்டு சாணத்தையும் சமஸ்கிரதத்தையும் உங்களுக்கு கொண்டு வந்தார்கள். ஏன் தமிழன் கோவிலில் பூசை செய்யாமல் வட இந்திய பிராமணன் பூசை செய்ய வேண்டும்?  உங்கள் கடவுளுக்கு முன் நீங்கள் எப்படி தீண்டத்தகாத சாதி ஆனீர்கள்? உங்கள் மூதாதையர் அற்ப சலுகைகளுக்காக இந்துக்கள் ஆனார்கள். தம்மை கீழ் சாதி என்றும் ஏற்று கொண்டார்கள்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Jude said:

சிவன் என்ன தமிழனா? வடஇந்திய கடவுள். தமிழனாக இருந்து கொண்டு ஏன் சமஸ்கிரதத்தில் பூசை செய்கிறீர்கள் ? சரஸ்வதியும் பிள்ளையாரும் லட்சுமியும் என்ன தமிழ் கடவுள்களா? உங்களை நீங்களே ஏமாற்றி கொள்கிறீர்கள். உங்கள் மூதாதையர் எல்லாம் வட இந்திய மதத்துக்கு மதம் மாறியே பிள்ளையாரையும் மாட்டு சானத்தையும் உங்களுக்கு கொண்டு வந்தார்கள். 

உங்களுக்கு அடிப்படை அறிவே இல்லை போலுள்ளது.தமிழ் என்பது மொழி சிவ வழிபடு என்பது மதம் சார்ந்தது.
இரண்டையும் ஏன்  குழப்பிக்கொள்ளுகிறீர்கள்.

இதற்குள் ஏன் வடஇந்தியாவை இழுக்கிறீர்கள். இலங்கையில் பழம்குடியினரான இயக்கரும் நாகரும் சிவனையே வழிபட்டவர்களென படிக்கவில்லையா ??

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Eppothum Thamizhan said:

உங்களுக்கு அடிப்படை அறிவே இல்லை போலுள்ளது.தமிழ் என்பது மொழி சிவ வழிபடு என்பது மதம் சார்ந்தது.
இரண்டையும் ஏன்  குழப்பிக்கொள்ளுகிறீர்கள்.

நீங்கள் எழுதியது எனது மூதாதையரின் மதமாற்றம் பற்றி. இதோ நீங்கள் எழுதியது:

22 hours ago, Eppothum Thamizhan said:

இப்படித்தான் ஒல்லாந்தர் ஆங்கிலேயர் காலங்களில் கூட வறிய  மக்களிடம் இலவசம் உத்தியோகம் போன்றவற்றை காட்டி மத மாற்றம் செய்தார்கள். 

எங்கள் மூதாதையரும் தமிழ் தான் பேசினார்கள். மொழி மாறவில்லை. எங்கள் மூதாதையர் மட்டுமல்ல உங்கள் மூதாதையரும் அற்ப சலுகைகுக்காக மதம் மாறியவர்கள் என்ற அடிப்படை அறிவில்லாதவர் நீங்களே. அந்த அடிப்படை அறிவை தான் நான் இப்போது உங்களுக்கு தந்து இருக்கிறேன்.

Edited by Jude

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.