Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவ்வருடத்திற்குள் தீர்வை பெற்றுக்கொடுப்பதில் அமெரிக்கா உறுதி! – சம்பந்தன்

Featured Replies

இவ்வருடத்திற்குள் தீர்வை பெற்றுக்கொடுப்பதில் அமெரிக்கா உறுதி! – சம்பந்தன்

 

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஐ.நா.வுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இவ்வருடத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளதென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எமது ஆதவன் செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகராக கடமையாற்றி வந்த அதுல் கெஷாப், தனது பதவிக்காலம் நிறைவடைந்து செல்லவுள்ளார். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரை இன்று (வியாழக்கிழமை) அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியதோடு, புதிய உயர்ஸ்தானிகரையும் அறிமுகப்படுத்தினார்.

குறித்த சந்திப்பைத் தொடர்ந்து எமது ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்த போதே சம்பந்தன் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான அமெரிக்கா மிகுந்த கரிசனையுடன் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்ட சம்பந்தன், சகல விடயங்களையும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றதெனவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை தமிழர் பிரச்சினைகளை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றதில் அமெரிக்க உயர்ஸ்தானிகரின் பங்கு அளப்பரியதென்றும் சம்பந்தன் குறிப்பிட்டார். அதேபோன்று புதிய உயர்ஸ்தானிகரும் தமது கடமையைச் செய்வதற்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

http://athavannews.com/?p=698975-இவ்வருடத்திற்குள்-தீர்வை-பெற்றுக்கொடுப்பதில்-அமெரிக்கா-உறுதி!-–-சம்பந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த.. மைத்திரி முடிஞ்சுது எனி அமெரிக்கா. 

அமெரிக்கா.. தனது நலனுக்கு அப்பால்.. தமிழருக்கு செய்தது.. என்ன என்றால்.. தமிழரின் நியாயமான அரசியல் புரட்சியை.. பயங்கரவாதமாகக் காட்டியது தான்.

அதனிடம் போய் முற்றாகச் சரணடைவது என்பதும் நல்லதல்ல. அதன் தேவைகளுக்குள் எங்கள் தேவைகளை புகுத்தி எம் தேவைகளை வெற்றி கொள்வது தான் திறமை.

அது சம் சும் மாவை கும்பலிடம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இம்மளவு காலம் இருந்தாள், போகேக்க, சும்மா ஏதோ சொல்லி வைப்பார்.

அட விடுங்கப்பு, இதெல்லாம் ஒரு கதை, அதை நம்பிக்கொண்டு...

  • தொடங்கியவர்

விடைபெற்றுச் செல்லும் அமெரிக்கத் தூதுவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்த முக்கிய விடயங்கள்

 

இலங்கை மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்ட சர்வதேசத்தின் எதிர்பார்ப்புக்களை இலங்கை அரசு பூரணமாக நிறைவேற்றாமல் இருப்பதாக பிரியாவிடைபெற்றுச்செல்லவுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப்பிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் எடுத்துக் கூறினார்.

DSC_0046.JPG

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக கடமையாற்றி விடை பெற்றுச் செல்லும் தூதுவர் அதுல் கேஷாப், எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

DSC_0050.JPG

நாட்டில் நிலவும் தற்போதைய சூழல் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன், சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அதேவேளை, இலங்கை மக்களின் நலனை அடிப்படையாக கொண்ட சர்வதேசத்தின் எதிர்பார்ப்புக்களை இலங்கை அரசு பூரணமாக நிறைவேற்றாமல் இருப்பதாகவும் எடுத்துக் கூறினார்.

DSC_0054.JPG

ஐ.நா. மனித உரிமை பேரவையில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் மிக தாமதமாக ஸ்தாபிக்கப்பட்டதனையும், நஷ்டஈடு தொடர்பான சட்டமூலம் இன்னமும் நிறைவேற்றப்படாமல் உள்ளமையையும், பொறுப்புக்கூறல் தொடர்பில் எவ்வித நடைமுறைகளும், அதாவது உண்மையைக் கண்டறிதல் ,நீதி,நல்லிணக்கம், மற்றும் மீள்நிகழாமையை உறுதி செய்வதற்கான ஆணைக்குழு இன்னமும் ஸ்தாபிக்கப்படாமல் உள்ளமையையும் எடுத்துக்காட்டிய அதேவேளை புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் ஒரு நல்ல ஆரம்பத்தினை காட்டியபோதும் தற்போது அதனை முன்னெடுத்து செல்வதில் தேவையற்ற தடைகள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

DSC_0057.JPG

புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக அநேக கருமங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதனை எடுத்துக்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தற்போது நிலவும் இந்த தாமதங்களுக்கான நியாயபூர்வமான எந்தவொரு காரணத்தினையும் என்னால் இனங்காண முடியாது என்றும் வலியுறுத்தினார். 

DSC_0059.JPG

மேலும் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் , எமது மிகப்பிரதானமான நோக்கம் நாட்டு நலன் பற்றியதேயாகும், ஒரு புதிய யாப்பு உருவாக்கப்படுகின்ற போது இந்த நாட்டில் உள்ள அனைவரும் நன்மையடைவார்கள் எனவும் தெரிவித்தார். 

புதிய அரசியல் யாப்பொன்றினை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவது கடினமான விடயமல்ல என்பதனையும் இரா. சம்பந்தன் எடுத்துக்காட்டினார். வடக்கு, கிழக்கு உள்ளடங்கலாக நாட்டில் அனைத்து பகுதிகளிலும் வாழும் பெரும்பான்மையான தமிழ் மக்கள் பிரிபடாத பிரிக்க முடியாத இலங்கை நாட்டுக்குளேயே தீர்வொன்றினை எதிர்பார்க்கிறார்கள், எவ்வாறெனினும் எண்ணிக்கையில் பெருமளவில்லாத குரலெழுப்பும் சிலர் ஒரு தீவிரமான போக்கினை கடைப்பிடிக்கிறார்கள் அப்படியானவர்களை அமைதிப்படுத்துவதற்காகவும் அவர்கள் சமூகத்திலே கொண்டு வரக்கூடிய எதிர்மறையான விளைவுகளையும் தடுப்பதற்குமுள்ள ஒரே வழிமுறை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதேயாகும் எனவும் இரா. சம்பந்தன் தெரிவித்தார். 

DSC_0067.JPG

எமது கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை அரசாங்கம் இவற்றினை நிறைவேற்ற முடியாமல் போகும் பட்சத்தில் தமிழ் மக்கள் ஒருபோதும் இந்நாட்டில் இரண்டாந்தர குடிமக்களாக வாழ மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

 

இதன்போது கருத்து தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், ஐக்கிய அமெரிக்காவை பொறுத்தவரையில் ஐ.நா.மனித உரிமை பேரவையின் பிரேரணையானது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் இரு நாட்டினதும் பல்வேறு உறவுகளுக்கு இது அடிப்படையாதொன்று எனவும் தெரிவித்தார். 

மற்றும் நிலையான சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்துவதற்கு நாட்டின் குறிக்கோள்கள் சாதகமானவையாக காணப்படவேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் சர்வதேச அரங்கில் இலங்கை பெற்றுள்ள நன்மதிப்பினை அலட்சியமாக எடுத்துவிடக்கூடாது என்றும் ஒரு புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுகின்றபோது இலங்கை அரசாங்கமானது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கவர்வது மாத்திரமல்லாது பொருளாதார ரீதியில் பாரிய நன்மைகளை அடைய முடியும் என்றும் தெரிவித்தார். 

மேலும் ஐக்கிய அமெரிக்கா இலங்கையின் முன்னேற்றம் தொடர்பில் தொடர்ந்தும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டினை கொண்டிருக்கும் என்று தெரிவித்த அதேவேளை தனது காலப்பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் வழங்கிய அனைத்து ஒத்துழைப்பிற்காகவும் தந்து நன்றிகளை தெரிவித்தார்.

 

கடந்த காலங்களில் இலங்கை தொடர்பில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அவரது சக பணியாளர்கள் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஆகியோரின் அனைத்து பங்களிப்பிற்கும் நன்றி தெரிவித்த இரா. சம்பந்தன், இலங்கை தொடர்பில் ஐக்கிய அமெரிக்காவின் ஈடுபாடு தொடர்ந்தும் இருக்க வேண்டும் எனவும் வேண்டிக்கொண்டார்.

 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரோடு கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அதேவேளை இலங்கைக்கான அமெரிக்க தூதுவரோடு அமெரிக்க தூதரகத்தின் பிரதி பிரதானி ரொபேர்ட் ஹில்டன், அரசியல் பிரிவிற்கான உத்தியோகத்தர் ஜோயன்ன பிரிசெட் ஆகியோர்  கலந்து கொண்டிருந்தனர்.

http://www.virakesari.lk/article/36083

  • கருத்துக்கள உறவுகள்

பதவிவிலகி போகும் போது ஒரு சந்தோசத்துக்காக சொன்னால் உடனே நம்பிவிடுவதா?

சரி சொல்லும் போது தீபாவளியை என்றாலும் இலக்கு வைத்து சொல்லியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

படங்களுக்கும் குறைவில்லை. படம் காட்டலுக்கும் குறைவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா தலமையிலான மேற்குலகினை நம்பி ஏமாறும் நிலையில் தமிழினம் இன்னமும் இருப்பது கண்டு கவலைதான் வருகிறது.

2009 இல் அமெரிக்கா வரும் என்று சொன்னார்கள். இந்தியாவின் பிராந்திய நலனைக் கருத்தில் கொண்டு அமெரிக்கா ஒதுங்கிவிட்டது.

எம்மைப்போலவே சிரியாவில் ஆசாத்தின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடிவந்த சிரிய ஆயுத அமைப்புகளுக்கு பயிற்சி, ஆயுதம், பணம் என்று கொடுத்துவந்த அமெரிக்கா, படிப்படியாக எல்லாவற்றையும் குறைத்து, நட்டாற்றில் கைவிட்டு விட, இன்று சிரியாவில் கிளர்ச்சியாளர்களிடம் கடைசியாக  இருந்துவந்த பகுதியையும் சிரிய ராணுவம் ஆக்கிரமித்துக்கொள்ளும் தறுவாயில், "போரில் கிளர்ச்சியாளர்களினால் வெல்ல முடியாது, ஆகவே யுத்தம் முடிவிற்கு வருவதை காத்திருக்கிறோம்" என்று அமெரிக்கா சப்பைக் கட்டுக் கட்டுகிறது.

அமெரிக்க மேற்குலக உதவிகளினூடு போராடிவந்த கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சிரிய ராணுவத்திற்கு ஆதரவாக ரஷ்ஷியா தொடர்ச்சியாகச் செய்துவரும் உதவியை இன்னும் நிறுத்தவில்லை. தான் கொண்ட கொள்கையில் உறுதியாகவிருக்கும் ரஷ்ஷியாவும், ஆசாத்தும் லட்சக்கணக்கில் சிரியர்களைக் கொன்று நாட்டினைக் கைப்பற்றி வருகிறார்கள். மேற்குலகு சுற்றினின்று வேடிக்கைதான் பார்க்கிறது.

இந்த லட்சணத்தில் அமெரிக்கா இந்த வருட இறுதிக்குள் பிரச்சினைக்குத் தீர்வு தருமென்றால் என்ன சொல்வது. 

"நம்மளை இன்னுமாடா இந்த சனம் நம்பீட்டு இருக்கு ?"

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ragunathan said:

சிரியாவில் ஆசாத்தின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடிவந்த சிரிய ஆயுத அமைப்புகளுக்கு பயிற்சி

சிரியாவில் பிரச்னை வேறு.

அசாத் ஷியா (அதாவது பாரசீகம், தற்போதைய ஈரான்) வம்சமாயினும், ஆடசியில் மக்கள் அதிருப்தி இருப்பினும், அவ்வவ்போது ஆங்காங்கே அடக்கு முறை உபயோகிக்கபட்டாலும், அசாத்தும் அவரது தந்தையும் ஆளும் இனம் ஆளப்படுபவரை துவேசமாகவோ இனத்தால் ஒதுக்கியோ அடக்கியோ வைக்கவில்லை.

ஆட்ச்சிக்கு பங்கம் விளைவிப்போர் எவராயினும் தணடனையும், வெட்டுக்களும், கொத்துக்களும், அடக்கு முறையும் ஒன்றே.

சிரியாவின் படைகளில் எல்லா இனமும் உண்டு.

சிரியாவில் அசாத்தை நீக்கபடவேண்டும் என்று திட்டமிட்டது, cia, சவூதி, துருக்கி மற்றும் அமெரிக்காவிடிற்கு வாழ் பிடிக்கும் சுனி அரபு கூட்டங்கள்.

காரணம், அசாத் மீது cia க்கு தனிப்பட்ட காரல், ஏனெனில் CIA எதோ ஓர் வழியில் 9 biilion us டாலர் ஆசாத்தி ற்கு சட்ட விரோதமாக வந்தாய் கண்டுபிடித்தும், அதை cia கண்ணில் படாமலும், கைக்கு விடாமலும் அசாத் லாகவமாக சிரியாவை விட்டு வேறு ஓர் இரகசிய வங்கிக்கு அனுப்பிவிட்டார். இனொன்று, அசாத் ரஷியன் மசகு என்னை வழங்கும் நிலக்கீழ் குகை மற்றும்  குழாய் வலையமைப்பையும், சீனாவின் ஒரே மண்டலம் ஒரே பாதை (இது தற்போது விண்வெளிக்கும் விரிவாக்கப்பட்டுளது) யில் சிரியவிற்கும்  freight train வலையமைப்பை  வலையமைப்பை நீடிப்பதற்கு இணங்கி விட்டார். இதை, எப்படியாவது தடுக்க வேண்டிய தேவை அமெரிக்காவிடிற்கு இருக்கிறது.

இதுவே சிறிய யுத்தத்தின் மிகப் பிரதானமான காரணம்.     

 இதை உற்று பார்த்தீர்கள் என்றால், அமெரிக்கா ஆசாத்தின் எதிரிக்கு வழங்கிய ஆயுத, (நேரடி) ராணுவ, அரசியல், ராஜதந்திர உதவியும் ஆதரவும், அசாத்தையும் சிறிய ராணுவத்தையும் எப்போதோ ஓட்டம் எடுக்க  வைத்திருக்க வேண்டும்.


அசாத்தும், சிரியா ராணுவமும் தாமாகவே தாக்கு பிடித்து நின்றனர். அமெரிக்கா ரிதியாக வான் தாக்குதலில் இறங்கிய போதே, ரஷ்யாவிற்கு உத்தியோக பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டது.

அமெரிக்காவும், cia  உம், அசாத்தை துரத்தும் முயட்ஸியில், ஈரானை கூடி வந்து இஸ்ரேல் பக்கம், குரங்கு ஆப்பிழுத்த கதையாக, இருத்திவிட்டது தான் மிச்சம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.