Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிப்பு

Featured Replies

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிப்பு

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89

தி.மு.க. தலைவர் மு. கருணாநிதிக்கு சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றின் காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு. கருணாநிதி கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து உடல் நலக் குறைவின் காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்துவருகிறார். அவர் மூச்சு விடுவதை எளிதாக்க அவருக்கு ட்ராக்யோஸ்டமி குழாயும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரம், ட்ராக்யோஸ்டமி குழாய் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாற்றப்பட்டது. இதற்குப் பிறகு அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக செய்திகள் பரவின.

புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் பயப்படும்வகையில் ஏதும் இல்லையென்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், கருணாநிதிக்கு சிகிச்சையளித்துவரும் காவிரி மருத்துவமனை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தச் செய்திக் குறிப்பில் அவருக்கு சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதைக் குணப்படுத்த தேவையான மருந்துகள் தரப்பட்டுவருவதாகவும் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திலேயே மருத்துவமனைக்கான வசதிகள் செய்யப்பட்டு, 24 மணி நேரமும் மருத்துவர்கள் அடங்கிய குழு அவரைக் கண்காணித்துவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கருணாநிதியைப் பார்க்க பார்வையாளர்கள் யாரும் வரவேண்டாமென்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-44972312

வயதின் காரணமாக நலிவு! - கருணாநிதி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை விளக்கம்

 
 

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நிலையில் வயதின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது எனக் காவேரி மருத்துவமனை விளக்கமளித்துள்ளது.

கருணாநிதி

தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த 18-ம் தேதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரின் தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள ட்ரக்கியோஸ்டமி கருவி மாற்றப்பட்டது. அதையடுத்து, அவர் அன்று இரவே கோபாலபுரம் திரும்பினார். இந்தச் சம்பவம் நிகழ்ந்து ஒருவாரம் கடந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

 

 

மருத்துவமனையின் அறிக்கை

இதுகுறித்து காவேரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ``கருணாநிதியின் உடல் நலத்தில் வயதின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போது சிறுநீரகப் பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாகக் காய்ச்சல் வந்துள்ளது. அதற்குத் தேவையான மருந்துகள் செலுத்தப்படுகின்றன. அவரை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கவனித்துக் கொள்கிறது. இதற்காக, அவரது வீட்டிலேயே அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அவரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரை யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம் என மருத்துவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/132162-kauvery-hospital-releases-medical-bulletin-of-karunanidhis-health.html

  • தொடங்கியவர்

`கருணாநிதி நலமுடன் இருக்கிறார்!’ - கோபாலபுரத்தில் ஓ.பி.எஸ், அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

 

தி.மு.க தலைவர் கருணாநிதி நலமுடன் இருப்பதாகவும், விரைவில் அவர் முழு குணமடைந்து வருவார் என்றும் கோபாலபுரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தெரிவித்தனர். 

கருணாநிதி இல்லம்

தி.மு.க தலைவர் கருணாநிதி, கடந்த 18-ம் தேதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவரின் தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள ட்ரக்கியோஸ்டமி கருவி மாற்றப்பட்டது. அதையடுத்து, அவர் அன்று இரவே கோபாலபுரம் திரும்பினார்.  அதன்பிறகு ஒருவாரம் கடந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால், ` சிகிச்சைக்குப் பிறகு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அச்சப்படும் வகையில் ஏதுமில்லை. அவரது உடல்நிலைகுறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்' என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். 

 

 

இந்நிலையில் இன்று, இதுகுறித்து காவேரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ``கருணாநிதியின் உடல் நலத்தில் வயதின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போது சிறுநீரகப் பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாகக் காய்ச்சல் வந்துள்ளது. அதற்குத் தேவையான மருந்துகள் செலுத்தப்படுகின்றன. அவரை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கவனித்துக்கொள்கிறது. இதற்காக, அவரது வீட்டிலேயே அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அவரின் உடல்நிலையை கருத்தில்கொண்டு, அவரை யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம் என மருத்துவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

 

ஸ்டாலினுடன் ஓ.பி.எஸ், அமைச்சர்கள்

இந்த நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் சென்றனர். கருணாநிதியின் உடல்நிலைகுறித்து விசாரிப்பதற்காக, அவர்கள் கோபாலபுரம் இல்லம் வந்ததாகக் கூறப்படுகிறது. 

கருணாநிதி இல்லத்தில் அ.தி.மு.க அமைச்சர்கள்

கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் பேசினர். கருணாநிதி நலமுடன் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ``கருணாநிதி நலமுடன் இருக்கிறார். அவர் விரைவில் முழு குணமடைந்து திரும்புவார்’’என்று தெரிவித்தார். தி.மு.க தலைவரை அ.தி.மு.க அமைச்சர்கள் வந்து பார்க்க வேண்டிய அவசியம் என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்குப் பதிலளித்த ஜெயக்குமார், ``முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலைக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தபோது தி.மு.கவினர் வந்து பார்த்தார்கள். அந்த அடிப்படையில் நாங்கள் வந்து கருணாநிதியின் உடல்நிலை விசாரித்தோம். இது அரசியல் பண்பாடு’’என்றார்.  இந்த சந்திப்பின்போது, தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், ஆ.ராசா, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

https://www.vikatan.com/news/tamilnadu/132174-ops-ministers-visits-karunanidhi-in-gopalapuram-house.html

  • தொடங்கியவர்

கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார் கமல்ஹாசன்

 
அ-அ+

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் விசாரிக்க திருமாவளவன், ஜிகே வாசன், பாலகிருஷ்ணன் ஆகியோர் கோபாலபுரம் இல்லம் வந்து ஸ்டாலினை சந்தித்தனர். #Karunanidhi #DMK #KamalHaasan

 
 
 
 
கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார் கமல்ஹாசன்
 
சென்னை:
 
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார்.
வயோதிகம் காரணமாக அவர் நலிந்து உள்ளதாகவும், சிறுநீரக தொற்று காரணத்தால் காய்ச்சல் உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டு இருந்தது.
 
இந்நிலையில், கருணாநிதியை சந்திக்க துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தனர். ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர்.
 
அவர்களை தொடர்ந்து, ஜிகே வாசன், திருமாவளவன், கே.பாலகிருஷ்னன் ஆகியோரும் கோபாலபுரம் வந்தனர். சிறிது நேரத்தில் கமல்ஹாசனும் அங்கு வந்து, ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்து புறப்பட்டுச் சென்றார்.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/26232429/1179421/kamal-haasan-met-stalin-for-enquire-karunanidhi-health.vpf

 

 

''கருணாநிதிக்கு காய்ச்சல்; அச்சப்படும் வகையில் ஏதும் இல்லை''- ஸ்டாலின் கூறியதாக திருமாவளவன் பேட்டி

 

 

thirumajpg

கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்த திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன்.

கருணாநிதிக்கு காய்ச்சல் உள்ளது, அச்சப்படும்வகையில் ஏதும் இல்லையென்று ஸ்டாலின் தன்னிடம் கூறியதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.

ஒன்றரை ஆண்டுகளாக பேச முடியாமல் ஓய்வில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு, கடந்த 24-ம் தேதி மாலை காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, கருணாநிதியின் உடல்நிலை மோசமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘‘சிறிது காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதிர்ச்சி அடையக்கூடிய அளவுக்கு கருணாநிதியின் உடல்நிலை மோசமாக இல்லை. அவரது உடல் நிலை குறித்து வரும் செய்திகள் அனைத்தும் வதந்தியே. அதை யாரும் நம்ப வேண்டாம்’’ என்றார்.

 
 
 

கருணாநிதி உடல்நிலை குறித்து இன்று மாலை காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்று வெளியானது. காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் இன்று வெளியிட்ட டாக்டர்கள் குழுவின் அறிக்கையில், ''திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடல் நலத்தில் வயோதிகம் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுநீரகப் பாதையில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளது.

அதற்குத் தேவையான மருந்துகள் செலுத்தப்படுகின்றன. அவரை 24 மணி நேரமும் மருத்துவரகள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழு கவனித்துக்கொள்கிறது.வீட்டிலேயே மருத்துவமனைகள் அடங்கிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவரது உடல்நிலையை கவனத்தில் கொண்டு, அவரை யாரும் நேரில் பார்க்க வரவேண்டாம் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி ஆகியோர் வருகை புரிந்தனர். அப்போது மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் கோபாலபுரம் இல்லத்தில் இருந்தனர். சுமார் 20 நிமிடங்களில் இந்த சந்திப்பு நிறைவடைந்தது. அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ் கருணாநிதி நலமுடன் இருக்கிறார் என்று தெரிவித்தார்.

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாதபோது திமுகவினர் வந்து பார்த்தார்கள். அந்த அரசியல் பண்பாட்டின் அடிப்படையில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தோம். அவர் நலமுடன் இருக்கிறார். கருணாநிதி விரைவில் குணம்பெற்று வருவார்'' என்றார்.

இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்தனர்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ''திமுக தலைவர் கருணாநிதி உடல்நலிவு காரணமாக ஓய்வில் இருக்கிறார். அதனால் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினேன். காய்ச்சல் இருப்பதாகவும், அச்சப்படும் வகையில் ஏதும் இல்லையென்றும் ஸ்டாலின் என்னிடம் கூறினார்'' என்றார்.

திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம்பெற வேண்டும் என்று இறைவனை வேண்டுவதாக ஜி.கே.வாசன் கூறினார்.

தமிழக மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article24523625.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • கருத்துக்கள உறவுகள்

திரு கருணாநிதி அவர்கள்  நலம்பெற்று வாழ்ந்தாலும் மகிழ்ச்சி...

நலம் பெறாது இறந்தாலும் மகிழ்ச்சி..

கீழ்தரமான கருத்து ஒன்றும் சொல்ல வரவில்லை,  எந்த ஒரு மனிதனும் தனது சராசரி ஆயுட்காலத்தை தாண்டி வாழகூடாது...வாழ்ந்தால் வெறும் பொம்மையாக வாழ்ந்து, எமக்கும் இடைஞ்சல் பிறருக்கும் உபத்திரவம்...

 பிறர் தயவை எதிர்பார்க்கும் ஒரு நிலமை வந்து..தனது கை கால் ஊன்றி நடக்கும் ஆரோக்கியம்  இல்லாதபோதே ஒரு மனிதன் செத்துபோயிடணும் நான் உட்பட...

அது தமிழின தலைவர் ஐயா கருணாநிதிக்கும் பொருந்தும் ..நலம் பெறுங்கள் ஐயா...இயற்கை அனுமதித்தால்...

 

  • தொடங்கியவர்

நேற்றைய இரவு கோபாலபுரம் எப்படி இருந்தது? நேரடி ரிப்போர்ட்!

 
 
நேற்றைய இரவு கோபாலபுரம் எப்படி இருந்தது? நேரடி ரிப்போர்ட்!
 

தி.மு.க., தலைவர் கருணாநிதி பற்றிய வதந்தியால் நேற்றைய இரவு தமிழ்நாடே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தது. கருணாநிதிக்கு என்ன ஆச்சு? யாரைப்பார்த்தாலும் இந்தக் கேள்விகளால் துளைத்துக்கொண்டிருந்தார்கள். இந்த வதந்தி தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு புதிதல்ல... ஆனால், மற்ற தினங்களில் உருவான வதந்தியின் அதிர்ச்சியைவிட நேற்றைய தினம் உருவான வதந்தியின் அதிர்ச்சிக்கு சென்னை மாநகரமே ஸ்தம்பித்து நின்றது. ``வயதுமூப்பின் காரணமாக உடல் நலிவு ஏற்பட்டுள்ளது. மேலும், சிறுநீரகத் தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது" என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தி காட்டுத்தீ போல தமிழகம் முழுவதும் பரவியது.

துணை முதல்வர் பன்னீர் செல்வம்

இதனால் பல்வேறு கட்சித் தலைவர்கள் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு படையெடுக்கத் தொடங்கினர். இதனால்தான் தி.மு.க-வின் தொண்டர்கள் பயம் கொள்ள ஆரம்பித்தனர். நேற்றைய இரவு தி.மு.க நிர்வாகிகள், தி.மு.க தொண்டர்கள் மட்டுமல்லாது, மொத்த தமிழ்நாடும் தூங்கா இரவாகதான் இருந்தது. இதில் கோபாலபுரம் அதிர்ச்சியின் உச்சம்!

 

 

கோபாலபுரம்

வதந்திகள் வரத்தொடங்கியதும் தி.மு.க தொண்டர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோபாலபுரத்தை தஞ்சம் அடைந்தனர். தமிழகத்தின் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன், அகில இந்திய சமத்துவ கட்சித் தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கோபாலபுரம் வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து தெரிந்துகொண்டனர். ஆனால், எந்த அரசியல்கட்சித் தலைவர்களும் கருணாநிதியின் உடல்நலம் கருதி அவரை, சந்திக்கவில்லை. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டுத் தெரிந்துகொண்டனர். 

 
 

 

கோபாலபுரம்

தொண்டர்கள் அனைவரும் ``உண்மையைச் சொல்லுங்கள்... கலைஞர் எப்படி இருக்கிறார்" என கோபாலபுரம் வீட்டின் முன்பு கதறி அழ ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் கோபாலபுரத்தில் மேலும் பதற்றமான சூழ்நிலை உருவானது. இந்தச் சூழ்நிலை தமிழகத்தையே பதற்றமான சூழ்நிலையில் தள்ளிவிடும் என்பதால் தி.மு.க உயர்மட்ட நிர்வாகிகள் தொண்டர்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், தொண்டர்களின் வருகை அதிகரித்ததே தவிர குறையவில்லை. இதனால், காவலர்களும் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டனர். இரவு 11 மணிக்கு மேல் வீட்டினுள் இருந்த தி.மு.க உயர்மட்ட நிர்வாகிகள் கிளம்பத் தொடங்கினார்கள். 

 

 

கோபாலபுரம்

அதன்பிறகு 11.30 மணியளவில் ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு கிளம்பிவிட்டார். ஆனாலும் கருணாநிதியின் உடல்நிலையை பற்றிய உண்மை நிலை தெரிந்தாக வேண்டும் எனத் தொண்டர்கள் வீட்டுக்கு முன்பே காத்திருந்தார்கள். எவ்வளவோ சொல்லியும் தொண்டர்கள் கலைந்து செல்லாததால், வீட்டின் லைட்கள் அணைக்கப்பட்டு, கேட்கள் மூடப்பட்டன. இதனிடையே பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோபாலபுரம் வந்தார். ஆனால், ஸ்டாலின் கோபாலபுரத்திலிருந்து சென்றுவிட்டதால் அவரும் பாதியிலேயே திரும்பிவிட்டார். தொண்டர்களின் வருகையை குறைப்பதற்காக இரவு 1 மணியளவில் கோபாலபுரத்துக்கு செல்லும் வழிகள் அனைத்தும் மூடப்பட்டன. பல காவலர்களும் கோபாலபுரத்துக்கு வரவழைக்கப்பட்டனர். பேரிகார்டுகள் நிறைந்த காவல்துறை வாகனங்கள் கோபாலபுரம் சுற்றிய பகுதிகளில் நிறைய இடங்களில் காண முடிந்தது. தி.மு.க தொண்டர்கள் பலர் இரவு முழுவதும் வீட்டுக்கு முன் கண் விழித்துக்கொண்டும், சிலர் அங்கேயே சாலையில் படுத்தும் அந்த இரவை கழித்தனர்.

https://www.vikatan.com/news/tamilnadu/132184-how-was-the-situation-whole-night-in-gopalapuram.html

  • தொடங்கியவர்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி: உதவிகள் செய்ய தயாராக இருப்பதாக உறுதி

 

 

 
dmk%20-%20modijpg

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து, மு.க. ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம், பிரதமர் மோடி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். கருணாநிதிக்கு மருத்துவ சிகிச்சையளிப்பதற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் அப்போது பிரதமர் கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி, ஒன்றரை ஆண்டுகளாக பேச முடியாமல் ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த 24-ம் தேதி மாலை அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, கருணாநிதியின் உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘‘சிறிது காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதிர்ச்சி அடையக்கூடிய அளவுக்கு கருணாநிதியின் உடல்நிலை மோசமாக இல்லை. அவரது உடல் நிலை குறித்து வரும் செய்திகள் அனைத்தும் வதந்தியே. அதை யாரும் நம்ப வேண்டாம்’’ என்றார்.

 
 

இதனிடையே ‘‘கருணாநிதியின் உடல்நலத்தில் சிறிது நலிவு ஏற்பட்டுள்ளது. சிறுநீரகப் பாதையில் ஏற்பட்டுள்ள நோய்த் தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளது. அதற்குத் தேவையான மருந்துகள் செலுத்தப்படுகின்றன. அவரை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழு கவனித்துக்கொள்கிறது. வீட்டிலேயே மருத்துவமனைகள் அடங்கிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன’’ என காவேரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கருணாநிதியின் வீட்டிற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் வந்து, அவரது உடல் நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர். ஏராளமான திமுக தொண்டர்களும் அங்கு குவிந்துள்ளனர்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்தபடியே, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி கூறுகையில் ஸ்டாலின் மற்றும் கனிமொழியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். உதவிகள் தேவைப்பட்டால் செய்யத் தயாராக இருப்பதாக கூறினேன். கருணாநிதி முழுமையாக குணமடைந்து நல்ல உடல்நலத்துடன் திகழ கடவுளை பிராத்திக்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article24528967.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

  • தொடங்கியவர்

கருணாநிதி உடல்நிலை; விஷமிகள் பரப்பும் வதந்தியை நம்ப வேண்டாம்: ஸ்டாலின் வேண்டுகோள்

 

 

 
101852058b7be3790-69ab-43fa-8cc9-5f533d5

 திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

திமுக தலைவர் மு.கருணாநிதி கடந்த 2016-ம் ஆண்டு முதல் வயோதிகம் காரணமாக தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி ஓய்வில் இருந்து வருகிறார். இடையில் மூச்சுத்திணறல் காரணமாக அவரது தொண்டையில் துளையிட்டு ட்ரக்யோஸ்டமி குழாய் பதிக்கப்பட்டது. அதன் பின்னர் உடல நலம் பாதிக்கப்பட்ட அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

 

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக கருணாநிதியின் உடல்நிலை பாதிப்படைந்தது. அவருக்கு காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் குழு வீட்டிலேயே சிகிச்சை அளித்து வருகிறது. கருணாநிதியின் உடல் நிலை குறித்து பல்வேறு விரும்பத்தகாத செய்திகள் வெளிவரத் தொடங்கியதை அடுத்து கட்சித்தொண்டர்கள் குழப்பமடைந்து வருகின்றனர்.

நேற்றிரவு துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் நேரில் வந்து பார்த்துவிட்டுச் சென்றனர். இதையடுத்து திருமாவளவன், வைகோ, நல்லக்கண்ணு, கே.பாலகிருஷ்ணன், ஜி.கே.வாசன், பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை, கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் நேரில் வந்து நலம் விசாரித்துச் சென்றனர்.

கருணாநிதியின் உடல் நிலை சரியாகி வருவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் அவரது உடல் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாவதால் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

“தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்திகளுக்கும் செவிமடுக்கவும் வேண்டாம், அந்த வதந்திகளை நம்பவும் வேண்டாம்.

நம் அனைவரின் உயிருக்கும் உயிரான கட்சித் தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி விஷமிகள் பரப்பும் வதந்திகள் எதையும் அவர்தம் அன்பு உடன்பிறப்புகளான கட்சித் தொண்டர்களும், கட்சி சார்பற்ற முறையில் தலைவரின் உடல்நிலை பற்றி அக்கறையுடன் விசாரித்து வரும் அனைத்து தரப்பு மக்களும் நம்ப வேண்டாம் என்று திமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

கருணாநிதிக்கு அளிக்கப்பட்டு வரும் தொடர் சிகிச்சையின் விளைவாக உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் மருத்துவர்கள் அவரை நன்கு கவனித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மருத்துவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கட்சித் தோழர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

விஷமிகள் திட்டமிட்டுப் பரப்பும் எந்த வதந்திகளுக்கும் செவி மடுக்கவும் வேண்டாம் - அந்த வதந்திகளை நம்பவும் வேண்டாம் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் மீண்டும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article24533238.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • கருத்துக்கள உறவுகள்

அனுதாபம் தோன்றினாலும், பல அருமையான வாய்ப்புகள் இருந்தும், தமிழரின் நலனைக்காட்டிலும் தம் சொந்த நலன், குடும்ப நலனை மட்டுமே முன்னிறுத்தி தமிழரின் அழிவிற்கு வித்திட்டவர்.

தமிழின் பெயரை சொல்லி, தன் வாழ்வை மட்டுமே முன்னேற்றிக்கொண்டவர் என்ற இவரின் கடந்த கால நினவில் வரும் அனுதாபமும் நீர்த்துபோகிறது.

நலம் பெறட்டும்!

  • தொடங்கியவர்

`கருணாநிதி நேற்றைவிட இன்று நலமாக இருக்கிறார்!’ - துரைமுருகன் உற்சாகம் #karunanidhi

 

'கருணாநிதியின் உடல்நிலை, நேற்றைக்கு இருந்ததைவிட இன்று நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது' என்று தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

துரைமுருகன்

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளது என்று காவேரி மருத்துவமனை அறிக்கைவெளியிட்டது. அதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சினிமா கலைஞர்களும் கோபாலபுரம் சென்று, மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கருணாநிதியின் உடல்நிலைகுறித்து விசாரித்துவருகின்றனர்.

 

 

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன், ''கருணாநிதியின் உடல்நிலை நன்றாக உள்ளது. அவர், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்துவருகிறார். அவரது உடல்நிலையில் நேற்றைவிட இன்று நல்ல முன்னேற்றம் இருக்கிறது. இப்போதுகூட, அவரைப் பார்த்துவிட்டுதான் வருகிறேன். நலமாக இருக்கிறார். அவரது உடல்நிலைகுறித்து பரவும் வதந்திகளைத் தொண்டர்களும் பொதுமக்களும் நம்ப வேண்டாம். எங்களது முகத்தைப் பார்த்தாலே அவருக்கு ஒன்றும் இல்லை என்பது தெரியும். அதனால், ஊடகங்கள் தைரியமாக இங்கிருந்து செல்லலாம்' என்று தெரிவித்தார். 

https://www.vikatan.com/news/tamilnadu/132271-karunanidhis-health-condition-improving-says-duraimurugan.html

  • தொடங்கியவர்

மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் கருணாநிதி: ஆம்புலன்ஸ் வருகை! #Karunanidhi

 
 

கருணாநிதிக்காக காவேரி மருத்துவமனையில் சிறப்பு ஐசியூ வார்டு(SICU) தயார் நிலையில் இருப்பதாகத் தகவல்.


திமுக தலைவர் கருணாநிதியை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படவிருக்கிறார். காவேரி மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் கோபாலபுரம் வந்துள்ளது

காவேரி மருத்துவமனை ஆம்புலன்ஸ்

 

 


முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, அன்பில் மகேஷ், கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் ஆகியோர் தற்போது கோபாலபுரம் வருகை தந்துள்ளனர். இவர்களுடன் திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் இல்லத்திற்கு தொடர்ந்து  வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

 

அன்பில் மகேஷ்


தற்போது காவேரி மருத்துவமனை மருத்துவர் குழுவும் அங்கு வந்துள்ளது. திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகனும் தற்போது கோபாலபுரம் வந்துள்ளார். 


இதனைத் தொடர்ந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சுமார் 10 மணியளவில் ஆழ்வார்பேட்டையில் இருக்கும், தனது இல்லத்துக்குப் புறப்பட்டார். அதன் பின்னர் திமுக நிர்வாகிகள் அங்குக் கூடியிருந்த திமுக தொண்டர்களை கலைந்து செல்லுமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர். ஆனால் சுமார் 100 தொண்டர்கள் அங்கு கூடியிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் மு.க ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் வந்துள்ளனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 


தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளது என்று காவேரி மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. அதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சினிமா கலைஞர்களும் கோபாலபுரம் சென்று, மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன், ''கருணாநிதியின் உடல்நிலை நன்றாக உள்ளது. அவரது உடல்நிலைகுறித்து பரவும் வதந்திகளைத் தொண்டர்களும் பொதுமக்களும் நம்ப வேண்டாம்’ என்றார். 

கருணாநிதி

https://www.vikatan.com/news/tamilnadu/132280-stalin-returns-to-gopalapuram.html

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பெருமாள் said:

DjIofqxU0AAsI7v.jpg

உண்மையாவா?

இந்த முறையும் எமதர்மனை ஏமாற்றிப் போட்டாரா?

  • தொடங்கியவர்

மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார் ஸ்டாலின்! #Karunanidhi#LiveUpdates

 

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார். 

ஸ்டாலின்

திருநாவுக்கரசர், உதயநிதி ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் காவேரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர். 

 

 

கருணாநிதியின் இரத்த அழுத்தம் தற்போது சீராகியிருப்பதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்ட பின்னர் திமுக நிர்வாகிகள், மற்றும் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மருத்துவமனையில் இருந்து கிளம்பினர். 

திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ‘கருணாநிதியின் உடல்நிலை சீராக இருக்கிறது. இன்று டெல்லியில் இருந்து மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் முகுல் வாஸ்னிக்  சென்னை வரவுள்ளனர். அதன் பின்னர் ராகுல் காந்தி வருவார்’என்றார்.

கருணாநிதியின் இரத்த அழுத்தம் தற்போது சீராகியிருப்பதாக காவேரி மருத்துவமனை அறிக்கை

காவேரி மருத்துவமனை அறிக்கை

மருத்துவமனை முன்பு

காவேரி மருத்துவமனை

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  "திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீரென ஏற்பட்ட  ரத்த அழுத்தக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சைக்கு பின்னர் இரத்த அழுத்தம் சீராகிவிட்டது. தற்போது அவர் நலமாக இருக்கிறார். விரைவில் மருத்துவக்குழு அறிக்கை வெளியிடும். எனவே தொண்டர்கள் பதற்றமடைய வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்..

ஆ.ராசா

உதயநிதி ஸ்டாலின் மற்றும் திருமாவளவன் 

உதயநிதி ஸ்டாலின் மற்றும் திருமாவளவன்

மு.க.ஸ்டாலின், ஆ.ராசா ஆகியோரும் மருத்துவமனைக்கு  வந்தனர்.

stalin

ஆம்புலன்ஸ் காவேரி மருத்துவமனையை வந்தடைந்தது. 

ambulance reached kaveri hospital

காவேரி மருத்துவமனை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

https://www.vikatan.com/news/tamilnadu/132281-dmk-leader-karunanithi-hospitalised-live-updates.html

நான்கலைஞரின் விசுவாசி அல்ல இந்த நேரம்களில் இப்படியான ட்ரோல் பண்ணுற வேலைகள் நாகரிகமானவை அல்ல

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனிதன் இறப்பதாலோ அல்லது இழுத்துகிட்டு கிடப்பதாலோ எல்லோருமே புனிதமாகிவிட முடியாது...

அல்லது விமர்சிக்கும் நேரமிதுவல்ல என்ற மனிதநேயம் வளர்ப்பதும் பொருந்தாது

வாழ்ந்தவர்களையும்,இறந்தவர்களையும் தன் வாழ்நாள்காலத்தில் இந்த மனிதன் மனிதநேயமின்றி எவ்வாறு வசைபாடினார் என்பதைமிக நீளமாக சொல்கிறது இந்த கட்டுரை...

அந்த நீளமான கட்டுரையில் இங்கே பெருமாள் குறிப்பிட்ட இந்திராகாந்திமீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது கருணாநிதிபேசிய மனிதநாகரிகத்தின் எந்த பிரிவிலும் சேர்க்கமுடியாத வசனங்களும் இருக்கிறது,அதனை இங்கே எடுகோள்காட்டமுடியாது.

  1. காந்தியை வசைப்பாடியது – கன்னிப் பெண்களின் தோள்களில் கைபோட்டு களிப்படைந்தவர் காந்தி.
  2. நேரு-பண்டாரநாயக சந்திப்பைக் கொச்சைப் படுத்தி பேசியது – நேருவோ மனைவியை இழந்தவர் சிறிமாவோ பண்டார நாயகாவோ கணவரை இழந்தவர், இவ்விருவரும் இரண்டு மணி நேரம் தனிமையில் என்ன பேசியிருப்பார்கள் உடன்பிறப்பே.
  3. இந்திரா காந்தியைத் திட்டிய வசை வார்த்தைகள்: சண்டாளி , சதிகாரி , சர்வாதிகாரி , ஹிட்லர், முசோலினி , பேய் , பிசாசு பூதகி என்று இந்திரா காந்தியைத் திட்டியது.
  4. காமராஜரைத் திட்டியது: அண்டங் காக்கா, காண்டாமிருகத் தோலர் , எருமைத் தோலர் , மரமேறி , பனை ஏறி , கட்டபீடி என காமராஜரை ஒருமையில் வசை பாடியது.

https://dravidianatheism2.wordpress.com/tag/இந்திரா/

தமிழ் நாட்டில் நாம் தமிழர்   கட்சியை சேர்ந்தவர்களும்,சங்கிகளும் தான் கழுவி ஊத்துகிறார்கள், நாம் தமிழர் எவ்வளவுக்கெவ்வளவு தலைவரையும் இயக்கத்தின் இமேஜையும் டமேஜ் பண்ணி வைச்சிருக்காங்க என பரவலாக  சமூகவலைத்தளங்களில் உலவிப்பாருங்க புரியும், தேவை எனில் கொஞ்ச சாம்பிள்கள் இணைக்கிறன்

ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள் நம் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால்  அடுத்து வரப்போவது திமுக  ஆட்சி தான் மத்தியில் அநேகமாக காங்கிரஸ் கூட்டணி அநேகமாக ராகுல் பிரதமர்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள் நம் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால்  அடுத்து வரப்போவது திமுக  ஆட்சி தான் மத்தியில் அநேகமாக காங்கிரஸ் கூட்டணி அநேகமாக ராகுல் பிரதமர்

நீங்கள் சொல்வது உண்மையாகலாம் அது கலைஜர் உயிருடன் இருக்கும் மட்டுமே சாத்தியம் இந்த நேரத்தில் ஆள் போய் சேர்ந்தால் .இருக்கிற பல்லாயிரம் கோடி உழல் பணத்தை சொத்து பிரிக்கையில குடும்பத்துக்குள் குத்துவெட்டு பலமாய் நடக்கும் அப்படி நடக்காவிட்டாலும் மத்தியில் இருக்கும் பிஜேபி விடாது ஒவ்வொரு திமுகா காரன் வீட்டிலும் வருமான வரிக்காரன் பாய்ந்து கணக்கு காட்ட முடியாதா பனத்தை கொள்ளையடித்து விடுவார்கள் சட்ட ரீதியாக dmk குழப்ப மயமாய் நிற்க்கும் இப்போதைய அதிமுகாவை விட மோசமான குழப்பத்தில் காரணம் dmkயின் சொத்துசேர்ப்பு வேறுவகை ..

ராகுல் வரலாம்  தொங்கு  பாராளுமன்றம் மூலமே சாத்தியம் அதிகம் .அதை விட அவர் பேசாமல் சும்மா இருக்கலாம் காரணம் மோடி என்ன ஆட்டம் ஆடினாலும் அவர் சுதேசி ராகுலின் வெளிநாட்டு தோற்றம் சிறு பிழை கூட பெரிய நெருப்பாய் மாறும் . 

 

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் ஒருமுறை படித்துவிடுங்கள். மறதி ஒரு பொல்லாத வியாதி!

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, இசைக்கலைஞன் said:

நிச்சயம் ஒருமுறை படித்துவிடுங்கள். மறதி ஒரு பொல்லாத வியாதி!

என்ன செய்வது புலம்பெயர் வாழ்வில் மறதி தவிர்க்க முடியாது இங்குள்ள சூழ்நிலைகள் அப்படி நன்றி இணைப்புக்கு இசை .

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது நாம் வஞ்சத்தை மறப்போமோ அன்று தான் மனிதனாகலாம் தலைவர் இருந்திருந்தால் கூட இப்படி செய்து இருக்க மாட்டார் வாழ்க தமிழர்கள் 

கைதான எதிரிக்கு கூட அடைகலம் கொடுத்த கதைகள் படித்தேன்  தலைவரின் சிந்தனைக்கும் செயலுக்கும் தமிழ் மக்கள் எப்படி உணர்வு கொடுக்கிறார்கள்  வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

போரில் காயம்பட்டவர்களுக்கான மருந்துப்பொருட்களை தமிழ் தமிழ் என்று பேசும் கலைஞர் மறிப்பது தான் வேதனை அளிக்கிறது
#தலைவர்_பிரபாகரன்

  • தொடங்கியவர்

“கருணாநிதி குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லத்தான் என்னால் முடியும்” - ரஜினிகாந்த்

 

 
mk%20rajinijpg

‘கருணாநிதி குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லத்தான் என்னால் முடியும்’ என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரான மு.கருணாநிதி, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பல்வேறு அரசியல் கட்சித்  தலைவர்களும் மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்துச் செல்கின்றனர்.

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி, இன்று மாலை மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தார். மேலும், பல தலைவர்களும் மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர். ஏராளமான திமுக தொண்டர்களும் மருத்துவமனை முன்னால் கூடியுள்ளனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து நேரடியாக இரவு 8.45 மணிக்கு காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கிருந்த கருணாநிதி குடும்பத்தினரிடம் அவருடைய உடல்நிலை பற்றிக் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்திய அரசியலில் மூத்த தலைவரான கருணாநிதியின் நலனை விசாரிக்க வந்தேன். அழகிரி, ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட அவரின் குடும்பத்தினர் அங்கு இருந்தனர். அவர்களுக்கு நான் ஆறுதல் சொன்னேன். அவ்வளவு தான் என்னால் செய்ய முடியும்.

அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவர் தூங்கிக் கொண்டிருந்ததால் என்னால் பார்க்க முடியவில்லை” என்றார்.

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article24565843.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

கருணாநிதியின் உடல்நலன் குறித்து விசாரிக்க ராகுல், ரஜினிகாந்த் மருத்துவமனை வருகை

ரஜினி சந்திப்பு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க.தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க, காவேரி மருத்துவமனைக்கு வந்தார் ரஜினிகாந்த்.

பின் "கருணாநிதியின் உடல்நலம் குறித்து அழகிரி மற்றும் கனிமொழியிடம் விசாரித்தேன். அவர்களுக்கு ஆறுதல் கூறினேன்" என கருணாநிதியை சந்தித்த ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கருணாநிதி குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் - ரஜினிகாந்த்

முன்னதாக செவ்வாய்க்கிழமை மாலையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "அவர் எந்தக் காரணத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாரோ, அந்த பிரச்சனைகள் சரியாகிவிட்டன. இருந்தபோதும் முதுமை காரணமாக அவரது உடல் நலத்தில் ஒட்டுமொத்தமாக ஏற்பட்டிருக்கும் பின்னடைவினாலும் கல்லீரலின் செயல்பாடு, ரத்த அணுக்களின் எண்ணிக்கையில் இருக்கும் மாறுபாடுகளாலும் அவர் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.

ரஜினி

முன்னதாக உடல்நலமின்றி சிகிச்சைபெற்றுவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அவரது உடல்நலம் சீராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

 

உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சைபெற்றுவந்த தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் ரத்த அழுத்தம் திடீரெனக் குறைந்ததால் கடந்த 28ஆம் தேதி அதிகாலையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையான காவிரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கருணாநிதி

தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்ட அவரது ரத்த அழுத்தப் பிரச்சனை சரிசெய்யப்பட்டது. அதற்குப் பிறகு, 29ஆம் தேதி மாலையில் திடீரென அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டது. பிறகு மருந்தின் மூலமே அவரது உடல்நலம் சரிசெய்யப்பட்டது. இதையடுத்து அவரது உடலநலக் குறியீடுகள் சாதாரண நிலைக்கு வந்தன.

இந்த நிலையில், அவரது உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று மாலை நான்கு மணியளவில் சென்னை வந்தார். தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி ஆகியோருடன் காவிரி மருத்துவமனைக்குச் சென்ற அவர், கருணாநிதியை பார்த்தார்.

அதற்குப் பிறகு மு.க. ஸ்டாலின், கனிமொழி ஆகியோரைச் சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "நான் கருணாநிதியை பார்க்க விரும்பினேன். அவருக்கு ஆதரவைத் தெரிவிக்க விரும்பினேன். எங்களுக்குக் கருணாநிதியுடன் நீண்ட கால உறவு இருக்கிறது. ஆகவே அவரை நான் பார்க்க வந்திருக்கிறேன். அவர் நன்றாக குணமடைந்து வருவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர் மிக உறுதியாக இருக்கிறார். உடல்நிலை சீராக இருக்கிறது" என்று தெரிவித்தார்.

தொண்டர்கள்

கருணாநிதியை நேரில் பார்த்தீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "ஆமாம் அவரை நேரில் பார்த்தேன். தமிழக மக்களைப் போலவே அவர் மிகவும் உறுதியானவர். சோனியா தனது ஆதரவை அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கச் சொன்னார்" என்றும் ராகுல்காந்தி கூறினார்.

 

கருணாநிதி சிகிச்சைபெற்றுவரும் மருத்துவமனை முன்பாக இன்று நான்காவது நாளாக தொண்டர்கள் கூடியிருந்து "எழுந்து வா.. எழுந்து வா" என்ற முழக்கத்தை தொடர்ந்து எழுப்பிவருகின்றனர். அங்கு வைக்கப்பட்டிருக்கும் பதாகை ஒன்றில், கருணாநிதி நலம் பெற வாழ்த்தி, கையெழுத்திட்டும் வருகின்றனர்.

29ஆம் தேதி மாலைக்குப் பிறகு, கருணாநிதியின் உடல்நலம் குறித்து எந்த அறிக்கையும் வெளியாகாத நிலையில், தற்போது வெளியாகியுள்ள அறிக்கை மருத்துவமனை முன்பாக கூடியுள்ள அவரது தொண்டர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://www.bbc.com/tamil/india-45019924

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கருணாநிதியின் உடல்நிலையை விசாரித்த விஜய்! மருத்துவமனையின் பின்வாசல் வழியாகச் சென்றார் #Karunanidhi

 
 

நடிகர் விஜய்,  தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நிலைகுறித்து நலம் விசாரிக்க, காவேரி மருத்துவமனைக்கு வருகைதந்துள்ளார். 

விஜய்
 

தி.மு.க தலைவர் கருணாநிதி, கடந்த ஐந்து நாள்களாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், கருணாநிதியின் உடல்நிலைகுறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர். கடந்த ஐந்து நாள்களாக தி.மு.க தொண்டர்கள் மருத்துவமனை வாசலில் வெயில் மழையைப் பொருட்படுத்தாமல் காத்துக்கிடக்கின்றனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று மாலை கருணாநிதியை சந்தித்த புகைப்படம் வெளியிடப்பட்டது. கருணாநிதியின் புகைப்படத்தைப் பார்த்த தொண்டர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். இதையடுத்து, நேற்றிரவு நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனைக்கு வந்து, மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நிலைகுறித்து கேட்டறிந்தார்.

 

 

விஜய்


இன்று காலை, நடிகர் விஜய் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். மு.க.ஸ்டாலின் வர சற்று தாமதமானதால், அரை மணி நேரம் காவேரி மருத்துவமனை அருகே காத்திருந்துள்ளார். காரின் கண்ணாடிகள் மூடப்பட்டிருந்ததால், அங்கிருந்த மக்களுக்கு நடிகர் விஜய் உள்ளே இருப்பது தெரியவில்லை. பின்னர், மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு வந்ததும், உள்ளே சென்று கருணாநிதியின் உடல்நிலைகுறித்து கேட்டறிந்த விஜய், பின்வாசல் வழியாகப் புறப்பட்டுச் சென்றுவிட்டார். மருத்துவமனையில் சலசலப்பு ஏற்படும் என்பதால், விஜய் சத்தமில்லாமல் வந்து, பின்வாசல் வழியாகச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின்போது, உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.

https://www.vikatan.com/news/tamilnadu/132649-vijay-visits-kauvery-hospital-to-enquire-about-karunanidhi.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தானியங்கு மாற்று உரை இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.