Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோல் கம்பம் விழுந்து மாணவன் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்

Featured Replies

கோல் கம்பம் விழுந்து மாணவன் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்

மைதானத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

student.jpg

தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற பின்னர், கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் மைதானத்தில் விளையாடச் சென்றபோது உதைபந்து கோல் கம்பம் விழுந்ததில் இவர் காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து 1990 இந்திய அம்புலன்ஸ்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அம்புலன்ஸ் உரிய நேரத்தில் வரவில்லை எனவும் அவர்களால் சம்பவம் நிகழ்ந்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

பின்னர் முச்சக்கரவண்டி ஒன்றில் மாணவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது வழியில் மாணவனின் உயிர் பிரிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

உயிரிழந்தவர் கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தை சேர்ந்த கிளிநொச்சி மத்திய கல்லூரியில் 2020 உயர்தரப் பிரிவில் கல்வி கற்று வந்த மதியகழன், என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/38032

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த் அனுதாபங்கள் இறந்த மாணவனுக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அம்புலன்ஸ் வண்டிகளில் உள்ளுருக்கு பரிட்சயமற்ற சாரதிகளை வைத்திருப்பதால் எதுவித பயனுமில்லை என்பதற்கு இந்த பரிதாப மரணம் ஒரு   சிறந்த உதாரணம். குறைந்த பட்சம் ஜி.பி.எஸ் (GPS) கருவிகளையாவது அம்புலன்ஸ் வண்டிகளில் பொருத்தியிருத்தல் அவசியம். உடனுதவிக்கு வேண்டிய மருத்துவ உபகரணங்களுடன் அவற்றை பயன்படுத்த தெரிந்த மருத்துவர் அல்லது தாதியோ முதலுதவி சிகிச்சை வழங்கக்கூடிய ஒரு ஊழியர் அம்புலன்ஸ் வண்டிகளில் இல்லையென்றால் இந்த அம்புலன்ஸ் வண்டிகளிலும் பார்க்க வாடகைக்கார் அல்லது முச்சக்கரவண்டியில் நோயாளியை ஏற்றி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதுதான் சிறந்த வழி. 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்
வாழ்ந்து சாதிக்க வேண்டிய பிள்ளை
சில கவனக்குறைவினால் உயிரிழந்துள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு மைதான அமைப்புக்கள் சரியாக கவனிக்கப்படாமையால்.. விளையாட்டு மைதானம் வினையாகி விட்டது.. இந்த அப்பாவி மாணவனுக்கு.

ஆழ்ந்த இரங்கல்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

விளையாட்டு மைதான அமைப்புக்கள் சரியாக கவனிக்கப்படாமையால்.. விளையாட்டு மைதானம் வினையாகி விட்டது.. இந்த அப்பாவி மாணவனுக்கு.

நீங்கள் இன்னும் ஏதோ வளர்ச்சியடைந்து இருக்கிறதென்று நினைக்கிறியள் போல 

அதே மின்சார தூணாக நின்ற  மரங்களினால் ஆன கம்பங்கள் , தண்டவாள கம்பிகளில் இன்னும் உதைபந்தாட்ட போஸ்ட்கள் இப்பவும் அதே நிலைமையில் தான்  இருக்கின்றது  எவனாவது விளையாட்டு அமைச்சரையோ அல்லது பிரதி அமைச்சரயோ அணுகி உதவி கேட்டுருக்கானா இல்லையே பிறகெப்படி அப்படி வந்தாலும் தங்களின் பங்கு எவ்வளவு என்று கேட்டு சண்டைபிடிப்பாங்கள். 

அம்பாறையில் ஒரு முஸ்லீல் எம்பி ஹரிஸ் ஒரு கழகத்துக்கு (தமிழ்) கேட்டதற்கு இருபது லட்சம் இதர கழகங்களுக்கு ஒரு லட்சம் பெறுமதியான விளையாட்டு பொருட்களும் வழங்கினார் இதுதான் நிலமை ஐயா

ஆழ்ந்த அனுதாபங்கள் நாழுக்கு நாள் கண்ணீர் அஞ்சலி மட்டும் செலுத்த வேண்டியுள்ளது ஈழத்தில் நடக்கும் இறப்புக்களால் 

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் மாணவன். அநியாய சாவு.
ஆழ்ந்த இரங்கல்கள்.
 
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் இன்னும் ஏதோ வளர்ச்சியடைந்து இருக்கிறதென்று நினைக்கிறியள் போல 

அதே மின்சார தூணாக நின்ற  மரங்களினால் ஆன கம்பங்கள் , தண்டவாள கம்பிகளில் இன்னும் உதைபந்தாட்ட போஸ்ட்கள் இப்பவும் அதே நிலைமையில் தான்  இருக்கின்றது  எவனாவது விளையாட்டு அமைச்சரையோ அல்லது பிரதி அமைச்சரயோ அணுகி உதவி கேட்டுருக்கானா இல்லையே பிறகெப்படி அப்படி வந்தாலும் தங்களின் பங்கு எவ்வளவு என்று கேட்டு சண்டைபிடிப்பாங்கள். 

அம்பாறையில் ஒரு முஸ்லீல் எம்பி ஹரிஸ் ஒரு கழகத்துக்கு (தமிழ்) கேட்டதற்கு இருபது லட்சம் இதர கழகங்களுக்கு ஒரு லட்சம் பெறுமதியான விளையாட்டு பொருட்களும் வழங்கினார் இதுதான் நிலமை ஐயா.

ஆழ்ந்த அனுதாபங்கள் நாழுக்கு நாள் கண்ணீர் அஞ்சலி மட்டும் செலுத்த வேண்டியுள்ளது ஈழத்தில் நடக்கும் இறப்புக்களால் 

 எம்மவர்கள்.. மண்ணை மட்டுமல்ல.. தங்கள் நிதியையும் விரயம் செய்கிறார்கள்.

வெளிநாடுகளிலும் வெறும் ஆடம்பரத்தில் நிதி அழிகிறது.. உள்நாட்டிலும்.. சரியான திட்டங்கள்.. செய்ற்படுத்தல்கள் இன்றி நிதி அழிகிறது.

நிதியை மொழியை மண்ணை சரியாகக் கையாளத் தெரியாத இனம்.. சிறப்புற வாழ முடியாது. 

எம்மவர்கள் பல்வேறு தேசங்களில் வாழ்ந்தாலும்.. பெறப்படும் அறிவை.. அனுபவத்தை.. முறையாகப் பாவிக்கத் தெரியாத முட்டாள்களாக இருப்பதையே காண்கிறோம். செயற்படுத்த முற்படுபவர்களையும் தடுப்பவர்களாகவே உள்ளனர். 

மற்றைய சமூகங்கள் மாறிவிட்டன. எம்மவர்கள் இன்னும் இன்னும்... குழிபறிப்பதில்.. குறியாக உள்ளனர். ?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

:101_point_up::101_point_up::101_point_up:என்னைக்கேட்டால் இதே தான் பதில் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.