Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவிலிருந்து பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்

Featured Replies

முல்லைத்தீவிலிருந்து பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்

முல்லைத்தீவு நாயாறு பகுதியிலிருந்து வாடிகள் எரிப்பு தொடர்பில் கைதான தென்னிலங்கை மீனவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று வெளியேறினர்.

39408868_1790237611073019_68018101704615

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடந்த 13 ஆம் திகதியன்று  தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான 8 மீன் வாடிகள் மற்றும் உடைமைகள் விஷமிகளால் எரித்து  அழிக்கப்படட சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வந்தது.

39406741_1790236664406447_87709613603778

இதனையடுத்து அந்த பகுதியில் அத்துமீறி குடியேறி கடற்தொழில் நடவடிக்கையினை மேற்கொண்டுவந்த தென்பகுதி மீனவர்கள் ஒரு பகுதியினர்  இன்றையதினம் மாலை முதல் தாமாக வெளியேறிவருகின்றனர் .

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழ் மீனவர்களின் உடமைகளை  எரித்தார்கள் என்ற சந்தேகத்தில் மூன்று  தென்னிலங்கை மீனவர்கள் பொலிஸாரால்  கைதுசெய்யப்பட்டனர்.

39313152_1790237047739742_87731346095346

இந்நிலையில் இன்றையதினம்  படகுகள் வலைகள் என்பனவற்றை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு புறப்பட ஆயத்தமான வேளை தமது எரிக்கப்பட்ட சொத்துக்களுக்கு பதில் கூருமாறு   நாயாறு மக்களால் அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாதபடி மக்கள் தடுத்ததையடுத்து ஏராளமான பொலிஸார்  குவிக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பான முறையில் தென்பகுதி மீனவர்கள்  அனுப்பி வைக்கப்பட்டனர்.

39301919_1790236564406457_83188881609562

இதனால் அந்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டதோடு  பொலிஸார் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாதவண்ணம் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் .

http://www.virakesari.lk/article/38603

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நவீனன் said:

தமது எரிக்கப்பட்ட சொத்துக்களுக்கு பதில் கூருமாறு   நாயாறு மக்களால் அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாதபடி மக்கள் தடுத்ததையடுத்து ஏராளமான பொலிஸார்  குவிக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பான முறையில் தென்பகுதி மீனவர்கள்  அனுப்பி வைக்கப்பட்டனர்.

இங்கு ஓட்டு பிச்சை எடுக்க தமிழ் அரசியவாதிகள் வருவினம்தானே ?

  • கருத்துக்கள உறவுகள்

phase 1   (50 லட்சம் பெறுமதியான சொத்துக்களை அழித்தல்) முடிவுற்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அனுமான் வைச்ச நெருப்பு, தங்கள் தொழிலுக்கே நாசம் வரும் என்று தெரிந்தும் வைக்கிறாங்களே.

இதால தான் மோட்டுச் சிங்களவன் எண்டு சொல்லுறவயளோ?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

அனுமான் வைச்ச நெருப்பு, தங்கள் தொழிலுக்கே நாசம் வரும் என்று தெரிந்தும் வைக்கிறாங்களே.

இதால தான் மோட்டுச் சிங்களவன் எண்டு சொல்லுறவயளோ?

இல்லை நாதமுனி அவர்கள் திரும்பி செல்வது போல் சென்று எங்கடை வலசு அரசியல்வாதிகளை வைத்து ஒரு சட்டம் இயற்றி அந்த சட்ட மூலம் அதிகாரத்தை தக்கவைத்து வடகிழக்கு கடலில் பாரிய சுரண்டல் நடைபெறும் தமிழனை சுரண்டி அடிமையாக்குவது ஒன்றே சிங்கள இனவாதிகளின் பிறப்பு முதல் கொண்டு இறப்பு உள்ளவரைக்கும் குறிக்கோள் அதுக்காக எதை இழக்கவும் தயாராக உள்ளனர் நாம அப்படியா ....

1 hour ago, பெருமாள் said:

சிங்களவன் சரி, அரேபிய வந்தேறிகளை பற்றி ஒருத்தரும் ஏன் வாய் திறக்கவில்லை???????

அங்கே தொடங்குகிறது அரெபியனின் வெற்றி.

  • தொடங்கியவர்

நன்றி கூறி, மன்னிப்புக்கோரி நாயாற்றில் இருந்து சிங்கள மீனவர்கள் வெளியேறினார்கள்….

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

Mullai-Nayaru2.jpg?resize=800%2C533

முல்லைத்தீவு நாயாறு இறங்குதுறை பகுதியில் தங்கியிருந்த தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் இன்று மாலை அதியுச்ச காவற்துறைப் பாதுகாப்புடன் நாயாறு பகுதியிலிருந்து வெளியேறி சென்றுள்ளார்கள். நாயாறு இறங்குதுறையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 8 வாடிகள் மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் கடந்த 13ம் திகதி திட்டமிட்டு தீக்கிரையாக்கப்பட்டது.

இதனையடுத்து தென்னிலங்கை மீனவர்கள் நாயாற்றிலிருந்து வெளியேற்றப்படவேண்டும். என கோரிக்கை விடுத்த நிலையில் இன்று வியாழக்கிழமை மாலை நூற்றுக்கணக்கான காவற்துறையினரின்  பாதுகாப்புடன், சிங்கள மீனவர்கள் நாயாற்றிலிருந்து வெளியேறியுள்ளனர்.

சிங்கள மீனவர்கள் வெளியேறும் போது, தமிழ் மீனவர்களுக்கு நன்றி தெரிவித்தனர் எனவும், வாடிகள் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு தமது வருத்ததைத் தெரிவித்து மன்னிப்புக்கோரியதாகவும். தமிழ் மீனவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக சம்பவ இடத்தில் நின்றிருந்த மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,

கடந்த 13ம் திகதி தமிழ் மக்களுக்கு சொந்தமான வாடிகள் அநியாயமாக தீக்கிரையாக்கப்பட்டு இன்று அந்த மக்கள் தொழிலுக்கும் செல்ல முடியாமல் கையறு நிலையில் நிற்கிறார்கள். இந்நிலையில் மக்களும் அதனுடன் இணைந்து பல்வேறு தரப்புக்கள் ஊடாகவும் தாங்கள்கோரிக்கையை முன்வைத்ததாகவும் தெரிவித்தார்.

Mullai-Nayaru2-1.jpg?resize=800%2C533

அதாவது, நாயாற்றிலிருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றப்படவேண்டும், கொழுத்தப்பட்ட நாசமக்கப்பட்ட சொத்துக்களுக்கு இழப்பீடு கொடுக்கப்படவேண்டும். இது நிறைவேற்றப்படும்வரை பட்டினிசாவை எதிர்கொண்டாலும் பரவாயில்லை.  மீனவர்கள் தொழிலுக்கு செல்லமாட்டார்கள். என இந்நிலையில் இன்று மாலை மக்கள் தன்னை அழைத்த மக்கள் அதிகளவான காவற்துறையினர் வந்து நிற்பதாக சொன்னார்கள்.

அதனையடுத்து தான் நாயாறு பகுதிக்கு சென்றபோது அங்கே தென்னிலங்கை மீனவர்கள் தங்களுடைய பொருட்களை வானங்களில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பல நூற்றுக்கணக்கான காவற்துறையினருடைய பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையை யார் எடுத்திருந்தாலும் அதனை தாம் வரவேற்பதாகவும், காரணம் மிக மோசமான போரை சந்தித்த மக்கள் மீள்குடியேற்றத்தின்போது எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாமலேயே வந்தார்கள் எனவும் குறிப்பிட்டார்.

குறிப்பாக அந்த மக்களுடைய பொருளாதாரத்தை அல்லது வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் திட்டமிட்டு தென்னிலங்கை மீனவர்கள் முல்லைத்தீவுக்கு வரவழைக்கப்பட்டார்கள். அதற்கு மேலாக சட்டவிரோத தொழில்கள் அத்தனையையும் செய்வதற்கு அவர்களுக்கு பூரணமான அனுமதி கொடுக்கப்பட்டது.

இதனால் போருக்கு பின்னரான காலத்தில் தமிழ்  மக்கள் இழந்தவைகள் ஏராளம். அந்தவகையில் எவருடைய தலையீடும் இல்லாமல், எந்த இடையூறும் இல்லாமல் தமிழ்  மீனவர்கள் தங்கள் சுய பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதற்கதன சந்தர்ப்பமாக தென்னிலங்கை மீனவர்களின் வெளியேற்றம் அமையும் என தாம் நம்புவதாகவும் காவற்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

Mullai-Nayaru1.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/91693/

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

இல்லை நாதமுனி அவர்கள் திரும்பி செல்வது போல் சென்று எங்கடை வலசு அரசியல்வாதிகளை வைத்து ஒரு சட்டம் இயற்றி அந்த சட்ட மூலம் அதிகாரத்தை தக்கவைத்து வடகிழக்கு கடலில் பாரிய சுரண்டல் நடைபெறும் தமிழனை சுரண்டி அடிமையாக்குவது ஒன்றே சிங்கள இனவாதிகளின் பிறப்பு முதல் கொண்டு இறப்பு உள்ளவரைக்கும் குறிக்கோள் அதுக்காக எதை இழக்கவும் தயாராக உள்ளனர் நாம அப்படியா ....

இது வெளியே தெரியாமல் கொள்ளை, கொலை... அட்டுழியம் செய்யும் முந்தின காலம் இல்லை என்பதை சிங்களவர்கள் உணர்கிறார்கள். காலம் எப்போதும் ஒரே வகையாக இருப்பதில்லை.

சும்மா எரித்துப் பயமுறுத்தி, அடித்து திரத்தி...சிங்கள போலீஸ், ராணுவ துணையுடன் தாமே தொழில் செய்ய முடியும் என்று நினைத்திருக்கலாம். 

ஆயினும், சமூக வலைத்தளங்கள் மூலமாக எரியும் போதே.... நேரடியாக உலகம் முழுவதும் பரவிய நிலையில்... அரசுக்கு வந்த அழுத்தமே, இவர்களை வெளியேற வைத்ததுக்கும்.... மூவர் கைதானத்துக்கும் காரணம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நடந்தது நன்மைக்கே என எடுத்துக்கொண்டு நாயாறு இனி முற்றிலும் தமிழ் பிரதேசமாக இருக்க என்ன ஆகவேணுமோ அதை பாருங்கப்பா !

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vanangaamudi said:

நடந்தது நன்மைக்கே என எடுத்துக்கொண்டு நாயாறு இனி முற்றிலும் தமிழ் பிரதேசமாக இருக்க என்ன ஆகவேணுமோ அதை பாருங்கப்பா !

இதற்கு சரியான வேலை, புலம் பெயர் தமிழர்களிடம் உருவாகக் கூடிய ஒரு சட்டபூர்வமான லிமிட்டட் கம்பனி, பங்குகள் மூலம் நிதி திரட்டி, மேல்நாட்டு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, உள்ளுர் மீனவருக்கு பயிற்சி கொடுதது, வேலை கொடுத்து, மீன்களை இங்கு அனுப்பி வருமானம் பார்ப்பது, தான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இதற்கு சரியான வேலை, புலம் பெயர் தமிழர்களிடம் உருவாகக் கூடிய ஒரு சட்டபூர்வமான லிமிட்டட் கம்பனி, பங்குகள் மூலம் நிதி திரட்டி, மேல்நாட்டு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, உள்ளுர் மீனவருக்கு பயிற்சி கொடுதது, வேலை கொடுத்து, மீன்களை இங்கு அனுப்பி வருமானம் பார்ப்பது, தான்.

அது வேறை கொடுமை அங்கு வளம் வாய்ப்பு எல்லாம் இருந்தும் கன பொடி மோட்டார் சைக்கிளில் சுத்துவதுக்கு தான் முன்னுக்கு நிக்கினம் நண்டு பதனிட்டு நல்ல விலைக்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகிறது அந்த விலை கொடுத்து இங்கு லண்டன்க்கு கூட வாங்கமுடியாத உயர் விலை பிரச்சனை ஆள் வள பற்றாகுறை இந்த கதை பழசாறு அடைத்து விற்க்கும் இடத்திலும் தொடர்கிறது ஊள்ளூர் ஆட்கள் எடுக்க முடியாமல் மலையக பக்கம் உள்ளவர்கள் வந்து வேலை செய்து இப்ப ஒன்று இரண்டு சிங்களமும் வேலைக்கு சேர்ந்து விட்டது யாரை முன்னுக்கு விடனும் என்று தொழிலை தொடங்க அதுகள் கொஞ்சம் காசு வந்தவுடன் லண்டன் கனடாவில் குளிருக்குள் வந்து கஷ்டபட போறம் என்று ஒற்றைக்காலில் நிக்குதுகள் இதுகளை என்ன செய்வது ?

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பெருமாள் said:

நான் யாழ் US கோட்டலில் தங்கியிருந்த போது, ரெஸ்ரோரன்ற்ல, வெயிற்றர் வேலை செய்பவர், நீஙகள் லண்டன் எவ்விடம் என்றார். சொன்னதும், இங்கு வாழ்ந்தவர் போல, இவ்விடத்தில, இந்த ரோட்டில இருக்கிற கடைக்கு போறனியளோ என்றார். தமையனின் கடையாம். 35 இலட்சம் கட்டிப் போட்டு வெயிற்றிங்கு.

அந்தக் காசை வைச்சு இங்க நல்ல முயற்சி செய்திருக்கலாமே என்ற போது, அசட்டு சிரிப்பு வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இங்கு வாழ்ந்தவர் போல, இவ்விடத்தில, இந்த ரோட்டில இருக்கிற கடைக்கு போறனியளோ என்றார்.

கூகிள் மப்பை பார்த்து அடித்து விட்டுருக்கிறார் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, vanangaamudi said:

நடந்தது நன்மைக்கே என எடுத்துக்கொண்டு நாயாறு இனி முற்றிலும் தமிழ் பிரதேசமாக இருக்க என்ன ஆகவேணுமோ அதை பாருங்கப்பா !

நடந்தது நன்மைக்கு அல்ல......இனித்தான் அரசியல் சித்து விளையாட்டுகள் இருக்கு......

14 hours ago, Nathamuni said:

இதற்கு சரியான வேலை, புலம் பெயர் தமிழர்களிடம் உருவாகக் கூடிய ஒரு சட்டபூர்வமான லிமிட்டட் கம்பனி, பங்குகள் மூலம் நிதி திரட்டி, மேல்நாட்டு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, உள்ளுர் மீனவருக்கு பயிற்சி கொடுதது, வேலை கொடுத்து, மீன்களை இங்கு அனுப்பி வருமானம் பார்ப்பது, தான்.

 அங்கு எதுவுமே நடமுறைப்படுத்த மாட்டீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/17/2018 at 1:50 PM, பெருமாள் said:

அது வேறை கொடுமை அங்கு வளம் வாய்ப்பு எல்லாம் இருந்தும் கன பொடி மோட்டார் சைக்கிளில் சுத்துவதுக்கு தான் முன்னுக்கு நிக்கினம் நண்டு பதனிட்டு நல்ல விலைக்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகிறது அந்த விலை கொடுத்து இங்கு லண்டன்க்கு கூட வாங்கமுடியாத உயர் விலை பிரச்சனை ஆள் வள பற்றாகுறை இந்த கதை பழசாறு அடைத்து விற்க்கும் இடத்திலும் தொடர்கிறது ஊள்ளூர் ஆட்கள் எடுக்க முடியாமல் மலையக பக்கம் உள்ளவர்கள் வந்து வேலை செய்து இப்ப ஒன்று இரண்டு சிங்களமும் வேலைக்கு சேர்ந்து விட்டது யாரை முன்னுக்கு விடனும் என்று தொழிலை தொடங்க அதுகள் கொஞ்சம் காசு வந்தவுடன் லண்டன் கனடாவில் குளிருக்குள் வந்து கஷ்டபட போறம் என்று ஒற்றைக்காலில் நிக்குதுகள் இதுகளை என்ன செய்வது ?

நான் உங்கள் கருத்துக்கள் முலம் அறிந்த வரையில் உங்களுக்கு ஊரில் இருந்து யாவாரம் செய்யும் அல்லது செய்ய நினைக்கும் நபர்களுக்கு பெரிதாக உதவ முடியும் என்று நினைக்கிறேன்.அதை ஒரு திரி திறந்து விரிவாக பகிரலாமே.உங்களுக்கு இடையுறு இல்லை என்றால்.பலருக்கு உதவலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, சுவைப்பிரியன் said:

நான் உங்கள் கருத்துக்கள் முலம் அறிந்த வரையில் உங்களுக்கு ஊரில் இருந்து யாவாரம் செய்யும் அல்லது செய்ய நினைக்கும் நபர்களுக்கு பெரிதாக உதவ முடியும் என்று நினைக்கிறேன்.அதை ஒரு திரி திறந்து விரிவாக பகிரலாமே.உங்களுக்கு இடையுறு இல்லை என்றால்.பலருக்கு உதவலாம்.

ஆம் நீங்கள் கூறுவது நல்ல விடயமே ஏற்கனவே கையை சுட்டுக்கொண்ட அனுபவமும் இருக்கு எதுவென்றாலும் யாழ் குடா நாட்டு மறை நீர் இழப்பு அற்ற தொழில்கள் நல்லது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.