Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் சில பகுதிகளை சீனாவிற்கு குத்தகைக்கு வழங்க தீர்மானம்?

Featured Replies

வடக்கின் சில பகுதிகளை சீனாவிற்கு குத்தகைக்கு வழங்க தீர்மானம்?

 

Sri_Lanka_northern_province-720x450.jpg

நாட்டின் வடபகுதி கரையோர பகுதிகளை சீனாவுக்கு குறிப்பிட்ட கால ஆண்டுகளுக்கு இலங்கை அரசாங்கம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வரலாற்று கால தொல்லியல் ஆய்வு நடவடிக்கைகளுக்காகவே சீனாவிற்கு இவ்வாறு வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கின் பல்வேறு பகுதிகளில் வரலாற்றுக் கால தொல்லியல் ஆய்வுகளை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணத்திலும் இவ் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை வந்த சீன கப்பல் தொடர்பாக அதன் எச்சங்களையும் சான்றுகளையும் மீட்கும் பணிகளானது யாழ்.அல்லைப்பிட்டி பகுதியில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

இதனை இலங்கை மத்திய கலாச்சார நிதியமும் சீன அரசாங்கமும் இணைந்து முன்னெடுத்து வருவதாக தெரியவருகின்றது.

இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணத்தின் கரையோர பகுதிகளான ஊர்காவற்றுறை, நெடுந்தீவு உள்ளிட்ட கரையோர பகுதிகளிலும் சீனாவின் பண்டைய கால எச்சங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு அதனை மீட்பதற்காகவே இவ்வாறு சீனாவிற்கு அப் பகுதிகளை வழங்கவுள்ளதாக தெரியவருகின்றது.

சுமார் ஜந்து வருடங்களுக்கு இவ்வாறு தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும், இதற்காக இலங்கை அரசுடன் சீன அரசு ஒப்பந்தமொன்றை செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருந்த போதிலும் அவ்வாறு தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்வதாயின் சீனப் பல்கலைகழகமோ அல்லது சீன தொல்லியல் திணைக்களமோ நேரடியாக இலங்கை தொல்லியல் திணைக்களத்துடன் அல்லது பல்கலைகழகத்துடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.

இந்நிலையில் இவ்வாறு வடக்கின் கரையோர பகுதிகளை, குறிப்பிட்ட கால ஆண்டிற்கு தொல்லியல் ஆய்விகளை மேற்கொள்வதற்கு வழங்குவதானது இந்தியாவிற்கு எதிரான பாதுகாப்பு சார்ந்த விடயங்களுக்கான சீனாவின் செயற்பாடக அமையலாம் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/வடக்கின்-சில-பகுதிகளை-சீ/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நவீனன் said:

நாட்டின் வடபகுதி கரையோர பகுதிகளை சீனாவுக்கு குறிப்பிட்ட கால ஆண்டுகளுக்கு இலங்கை அரசாங்கம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உள்ள வடலியள் பனங்கந்துகள் எல்லாம் துலைஞ்சுது.....பனங்கிழங்குக்கு பாத்தி கிண்டுறமாதிரி உள்ள இடமெல்லாம் கிண்டி கிளறப்போறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வடிவா கிண்டுங்கோ,

அடியில கிடந்து  நாலு மிதிவெடி ,மூஞ்சைக்கு நேர  வெடிச்சுதெண்டால் அடுத்த ஐம்பது வருஷத்துக்கு சப்பட்டையள் யாழ்ப்பாணத்த நினைச்சும் பார்க்கமாட்டாங்கள்.

இலங்கையில் யார் ஆதிக்கம் அதிகம் என்ற இந்திய சீன சண்டையில் ஏறக்குறைய சீனா ஜெயித்துவிட்டதென்றே சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

 

அடியில கிடந்து  நாலு மிதிவெடி ,மூஞ்சைக்கு நேர  வெடிச்சுதெண்டால் அடுத்த ஐம்பது வருஷத்துக்கு சப்பட்டையள் யாழ்ப்பாணத்த நினைச்சும் பார்க்கமாட்டாங்கள்.

 

அவங்கள் உலக வல்லரசுக்கு தண்ணி காட்டுறவங்கள் இந்த நாலு மிதிவெடி கதை  எங்களை மட்டும் குசிபடுத்தும்  .

உண்மையிலே சைனாவுக்கு வடக்கில் கால் ஊன்றுவதில்எந்த பலனும் இல்லையென்றாலும் சொரிலங்கன் அரசியல்வாதிகள் சைனா வந்துவிடும் எனும் மாயையை தோற்றுவிக்கின்றன அப்பத்தான் இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இருந்து டபுள் உதவியை பெறலாம் எனும் கபட நோக்கமே அன்றி வேறில்லை .

2 hours ago, பெருமாள் said:

அவங்கள் உலக வல்லரசுக்கு தண்ணி காட்டுறவங்கள் இந்த நாலு மிதிவெடி கதை  எங்களை மட்டும் குசிபடுத்தும்  .

உண்மையிலே சைனாவுக்கு வடக்கில் கால் ஊன்றுவதில்எந்த பலனும் இல்லையென்றாலும் சொரிலங்கன் அரசியல்வாதிகள் சைனா வந்துவிடும் எனும் மாயையை தோற்றுவிக்கின்றன அப்பத்தான் இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இருந்து டபுள் உதவியை பெறலாம் எனும் கபட நோக்கமே அன்றி வேறில்லை .

உலக வல்லரசா....???? யார் அது அமெரிக்காவா....??? யார் சொன்னது அமெரிக்கா-பிரித்தானியா வல்லரசு காலம் எல்லம் மலையேறிவிட்டது  இப்ப பழைய தாதா போய் புது தாதா வந்திட்டார் ரஸ்ஸியா-சீனா கூட்டணி தான் இபோதைய  வல்லரசு.

சிரியாவில் அமெரிக்காகாரன் ஒன்றையும் அசைக்க முடியவில்லை.

பூட்டின் ஒரு சிறந்த தலைவன் தான் வங்குரொத்தில் இருந்த ரஸ்ஸியாவை ஸ்திரமாக்கி, அமெரிக்க பிரிட்டன் கிடுக்கு பிடியை உடைத்து ஒரு புதிய அரசியல் அச்சை உருவாக்கியது அவரது சாதனை

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

 

On 8/20/2018 at 8:48 AM, Dash said:

வங்குரொத்தில் இருந்த ரஸ்ஸியாவை ஸ்திரமாக்கி, அமெரிக்க பிரிட்டன் கிடுக்கு பிடியை உடைத்து ஒரு புதிய அரசியல் அச்சை உருவாக்கியது அவரது சாதனை

உண்மை தான்!
ஆனாலும் அதனால் தமிழர்களுக்கு எள்ளளவு பயனும் கிடைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, போல் said:

உண்மை தான்!
ஆனாலும் அதனால் தமிழர்களுக்கு எள்ளளவு பயனும் கிடைக்கவில்லை.

எங்கடை உலகு டெல்லி மட்டும்தான் அவர்கள் எறியும் எலும்பு துண்டுகளுக்கு மட்டுமே நாங்கள் வால் ஆட்டுவம் அமெரிக்கனோ பிரிட்டனோ எந்த அதிகாரி போய் எங்கடை அரசியல்வாதிகளை சந்தித்தால் கடைசியில் மறக்காமல் சொல்லப்படும் வாக்கியம் எங்களிடம் சொல்லியதை டெல்லிக்கும் தெரியபடுத்துங்கள் என்பது .

தங்கடை நாட்டு தமிழ் மக்களையே அடிமையினும் கேவலமான பார்வை கொண்ட டெல்லி அரசு  மதிப்பது இல்லை இதுக்குள்ளை எங்களுக்கு விடிவு பெற்று தருவினம் என்பது பகல் கனவு .

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இனி சைனிஸ் பாசையும் பேசுவம்:unsure:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.