Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரி ஏமாற்றுவார் போல இருக்கிறது - தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

Featured Replies

sampanthar

பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச ஈடுபாடு இருக்கும் என்ற இரண்டு பிரேரணைகளுக்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியுள்ள நிலையில் தற்போது சர்வதேச தலையீடுகள் இல்லாத செயற்பாடுகளே கையாளப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளமை தீர்வு விடயத்தில் எமக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.  
அரசியலமைப்பு உருவாக்கத்திலும் சரியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்காது ஜனாதிபதி செயற்படும் விதம் தமிழ் மக்களை ஏமாற்றுவதை போன்றே அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
 

ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபை கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் இதில் இலங்கையின் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்த்திய உரை குறித்து பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை தெரிவிக்கையிலேயே சுமந்திரன் எம்.பி இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றும்போது இராணுவத்தை காப்பாற்றும் புதிய யோசனையொன்றை முன்வைப்பதாக கூறியிருந்தார். இராணுவ வீர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தவிர்க்கவும் அவர்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அப்போதே நாம் எமது தரப்பு எதிர்ப்பினை வெளிப்படுத்தினோம். இராணுவத்தை மன்னிக்கும் எந்த ஒரு நகர்வுக்கும் ஒரு அங்குலமேனும் இடமளிக்க முடியாது என்பதை நாம் தெளிவாக கூறியிருந்தோம்.
அதேபோன்று அண்மையில் பாதுகாப்பு படைகளின் பிரதானி மீதான குற்றச்சாட்டில் ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு அவரை காப்பாற்ற நடவடிக்கை எடுத்தமைக்கும் நாம் எமது கண்டனத்தை வெளிப்படுத்தினோம். இலங்கையின் உள்ளக நீதிப்பொறிமுறை மீது எந்தவித நம்பிக்கையும் இல்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் நேரடித் தலையீடுகள் இருந்தமை வெளிப்பட்டன. தற்போது சர்வதேச சக்திகளின் தலையீடு வேண்டாம் என ஜனாதிபதி கூறினாலும் கடந்த 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டு அமெரிக்கா இரண்டு தீர்மானங்களை கொண்டுவந்த போது இலங்கை அரசாங்கம் அதற்கு இணை அனுசரணை வழங்கியது. இதில் நீதிமன்ற பொறிமுறையில் சர்வதேச ஈடுபாடு இருக்கும் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது.

அவ்வாறு இருக்கையில் ஜனாதிபதி தற்போது சர்வதேச தலையீடுகள் அவசியம் இல்லை, எமது பிரச்சினைகளை நாமே பார்த்துக்கொள்கிறோம் என்ற கூறியுள்ளமை தீர்வு விடயத்தில் எமக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. தீர்வுகள் குறித்து அன்று அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து ஜனாதிபதி பின்வாங்குகின்றார் என்பதாக நாம் உணர்கின்றோம்.

கடந்தகால குற்றங்கள் மேலும் நிகழாமை குறித்த நகர்வுகளில் புதிய அரசியலமைப்பே ஒரே தீர்வு என ஆரம்பத்தில் அரசாங்கம் சர்வதேசத்திற்கு வாக்குறுதி வழங்கியது. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் மூலமாக சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுத்தர தயாராக உள்ளதாக அரசாங்கம் வாக்குறுதி வழங்கியது. அதற்கமைய 2016 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்க நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள் 2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் நிலைமைகள் காணப்பட்டன. எனினும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மிகவும் மெதுவான போக்கில் செயற்பட ஆரம்பிக்கவும், அரசியல் அமைப்பு விடயங்களை தடுக்கும் பல தடைகள் ஏற்படவும் ஜனாதிபதியே காரணமாக இருந்தார். அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் சரியான அரசியல் தலைமைத்துவம் ஒன்றினை ஜனாதிபதி கொடுக்கவில்லை. அதுவே பிரதான தடையாக காணப்படுகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கினார். அதில் அரசியல் அமைப்பின் மூலமாக தீர்வுகளை பெற்றுத்தருவேன் என்ற வாக்குறுதி பிரதானமானது. அந்த வாக்குறுதிகளை நம்பியே தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கினர். ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதிகளை மீறும் வகையில் இன்று அவரது செயற்பாடுகள் அமைந்துள்ளன.

அரசியலமைப்பு உருவாக்கத்தில் தெற்கின் அடிப்படைவாத அரசியலுக்கு அஞ்சியும் தனது இருப்பினை தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் அவர் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறுகின்றார். ஆனால் இவை ஒரு காரணமாக கூற முடியாதது, இந்த நாட்டின் பெரும்பான்மை ஆதரவில் ஆட்சிக்கு வந்தவர் என்ற வகையில் கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்ற வேண்டும். இன்று ஜனாதிபதி செயற்படும் விதம் தமிழ் மக்களை ஏமாற்றுவதை போலவே அமைந்துள்ளது என்றார்.

https://www.tamilnaatham.org/2018/09/suma-tna.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகளைக் கொடுத்தார்களா மீறுவதற்கு??

சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் தனியக்கூப்பிட்டு ஏதாவது சொல்லியிருப்பார்கள். அதனையும் செய்யமாட்டார்கள் என்பது கேட்டபோதே தெரியாதா இவர்களுக்கு?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Athavan CH said:

sampanthar

பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச ஈடுபாடு இருக்கும் என்ற இரண்டு பிரேரணைகளுக்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியுள்ள நிலையில் தற்போது சர்வதேச தலையீடுகள் இல்லாத செயற்பாடுகளே கையாளப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளமை தீர்வு விடயத்தில் எமக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.  
அரசியலமைப்பு உருவாக்கத்திலும் சரியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்காது ஜனாதிபதி செயற்படும் விதம் தமிழ் மக்களை ஏமாற்றுவதை போன்றே அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களை ஏமாற்ற சனாதிபதி செயற்படும் விதத்தைவிட நீங்கள் செயற்படும் விதம்தான் தமிழ்மக்களை வதைக்கிறது. தலைவர் பிரபாகரனைத் தூற்றினீர்கள், இப்போ முதல்வர் விக்கினேசுவரனைத் தூற்றுகிறீர்கள். உங்களுக்கு ஏன் அரசியல்.....?? அதனைவிடவும் அரிசியில் கல் பொறுக்கினாலே அது மக்களுக்குச் செய்யும் சேவையல்லவா.!!

  • கருத்துக்கள உறவுகள்

66505_BC3-5789-4_C0_F-8_C7_F-553_CFB9385

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகளைக் கொடுத்தார்களா மீறுவதற்கு??

சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் தனியக்கூப்பிட்டு ஏதாவது சொல்லியிருப்பார்கள். அதனையும் செய்யமாட்டார்கள் என்பது கேட்டபோதே தெரியாதா இவர்களுக்கு?

ஜனாதிபதி ஏமாற்றி விட்டார் நாங்கள் தமிழ் மக்களை ஏமாற்றவில்லை எனவே வரும் தேர்தலில் எம்மை மறுபடியும் ஆதரியுங்கள் நாங்கள் மீண்டும் கதைத்து மென்வலுவை உபயோகித்து உங்களுக்கு தீர்வை பெற்றுதருவம்.

(சப்பா.....................மண்டை காயுது  இவையளின் செம்புபோல் யோசிச்சு கருத்து போடவேண்டி இருக்கு. )

  • கருத்துக்கள உறவுகள்

ஏய் அரசியல்வாதிங்களா ! ஆதங்கம், அங்கலாய்பு, பழைய கதையை திருப்பி திருப்பி சொல்லுதல், சீன்போடுதல் அனைத்தையும் விட்டு ஏதாவது உருப்படியா செய்யுங்கப்பா. 

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் விக்கியருக்கு நிர்வாக திறமையின்மை இருக்கலாம். ஆனால் அபிவிருத்திக்கு முன்னர், தீர்வு தேவை என்ற முக்கிய தொலை நோக்குப் பார்வை உள்ளது.

தீர்வு தாராவிடில், சுயநிர்ணய தேர்தல் நடத்துங்கள் என்று கேட்கக் கூடிய ஆளுமை உள்ளது. அவரது வாதங்கள், கூற்றுக்கள் இந்த வகையில் அமைந்துள்ள படியால், சிங்கள தலைமை அவரை அரசியலில் இருந்து அகற்ற முனைகிறது.

இந்த சூழ்ச்சியில், உதயன் பத்திரிகையும் அதன் உரிமையாளருமான சரவணபவன் பெரும் முயற்ச்சி செய்கிறார். 

சுமந்திரன் மற்றும் சம்பந்தர் அடுத்து...

இவர்களுக்கு உள்ள பிரச்சனையே, விக்கியர் அரசியலில் இருந்து முழுவதுமாக வெளியேற வேண்டும். எதிர்பக்கம் போனாலே, தமது அரசியலுக்கு ஆபத்துதான் என்பது. 

சரி விக்கியர் நகன்றால் யார்? ஆங்கிலமே சரியாக பேச வராத மாவையா?

எமக்குத் தேவை அபிவிருத்தி அல்ல. உரிமை... அதனை உரத்துக் கேட்க கூடிய ஆளுமை விக்கியரிடமே உண்டு என்பது எனது பார்வை.

அபிவிருத்தி என்பது, இரவல் சுவரில் வரையும் சித்திரம். எப்போதும் அழிக்கப்படும். உரிமை கிடைத்தவுடன் செய்யப்படும் அபிவிருத்தி, சொந்த சுவர் சித்திரம். பாதுகாப்பானது. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இதை இந்தக் குடுகுடுப்பைக் கும்பலுக்கு 5 வருசத்துக்கு முன்னாலேயே இங்கு யாழில் சொல்லிட்டம்.  சும்மா.. மைத்திரிக்கு கால அவகாசம் வழங்கிறம் என்று சொல்லிச் சொல்லி மைத்திரியின் ஆட்சிக்காலத்தை... வெற்றிகரமாக முடியச் செய்திட்டு.. இப்ப அடுத்த தேர்தலில் தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றி வாக்குப் பறிக்க.. மைத்திரி ஏமாற்றப் போறாராம்.. என்று ஏதோ புதிசா கண்டுபிடிச்ச கணக்கா கதை அளக்குதுங்க.

உந்தச் சட்டாம்பிக் கும்பல்.. அந்தக் காலத்தில் இருந்து இன்று வரை சிங்கள எஜமான விசுவாசிகளாக இருந்து தமிழ் மக்களை ஏமாற்றி வந்தததன் விளைவு தான்.. அகிம்சைப் போராட்டத் தோல்வியும்.. ஆயுதப் போராட்டத் தோல்வியும்.. இலங்கைத் தீவில் தமிழர் இருப்பு அழிப்பும் ஆகும். ?

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

மைத்திரி ஏமாற்றுவார் போல இருக்கிறது - தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

உதுகள் பக்கத்து வீட்டிலை கை நனைச்சு சம்பந்தம் வைக்கப்போகுதுகள்.....tw_yum:

அதுக்கு இப்பவே பொருத்தம் சரியில்லை....போக்கு சரியில்லை எண்டு சாத்திரம் சொல்லுதுகள்.:cool:

உவையள் மாத்தி மாத்தி சம்பந்தம் வைக்கிறது எனக்கு புதிசில்லை......உங்களுக்கு???????????????????????

சிங்களம் ஏமாற்று பேர்வளியள் எண்டு எங்களுக்கு  அப்பவே தெரியும் .:wink:

இப்ப எங்களுக்கு கூத்தமைப்பு கதை சொல்லுது...:27_sunglasses:

Edited by குமாரசாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.