Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பல்கலை மாணவர்களின், அனுராதபுர சிறைச்சாலையை நோக்கிய நடைபவணி ஆரம்பம்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலை மாணவர்களின், அனுராதபுர சிறைச்சாலையை நோக்கிய நடைபவணி ஆரம்பம்…

October 9, 2018

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

2985-6.jpg?resize=800%2C600

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி நடைபவணியை ஆரம்பித்து உள்ளனர். யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் உள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் குறித்த நடைபயணத்தை ஆரம்பித்து உள்ளனர்.

அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய், அரசியல் கைதிகளின் விவகாரம் ஓர் சட்ட விவகாரம் அல்ல அது ஓர் அரசியல் விவகாரம். எனவே அரசியல் கைதிகளின் அரசியலை பயங்கரவாதமாக பார்க்குமோர் சட்டக்கட்டமைப்புக்குள் நின்று அதை சட்ட விவகாரமாக அணுக கூடாது. மாறாக அதனை அரசியல் விவகாரமாகவே அணுக வேண்டும். இது தொடர்பில் அரசாங்கம் ஓர் அரசியல் தீர்மானத்தை எடுத்து கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும். என கோரியே நடைபவணியை மேற்கொண்டு உள்ளனர்.

2985-1.jpg?resize=800%2C6002985-2.jpg?resize=800%2C6002985-3.jpg?resize=800%2C6002985-4.jpg?resize=800%2C6002985-5.jpg?resize=800%2C600

 

http://globaltamilnews.net/2018/98774/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனுராதபுர நோக்கிய நடைபவனி – இன்று மூன்றாவது நாளில்

by in செய்திகள்

walk-to-anuradhapura-1-300x196.jpgஅனுராதபுர சிறைச்சாலையை நோக்கி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் நடை பவனி இன்று மூன்றாவது நாளாகத் தொடரவுள்ளது.

அனுராதபுர சிறைச்சாலை மற்றும் கொழும்பு – மகசின் சிறைச்சாலை என்பனவற்றில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும்,  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் நடைபவனி ஒன்றை ஆரம்பித்தனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த இந்த நடைபவனி அனுராதபுர சிறைச்சாலை நோக்கி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்றுமுன்தினம் காலை ஆரம்பித்த நடைபவனியில் பங்கேற்ற மாணவர்கள், நேற்று முன்தினம் இரவு இயக்கச்சியை வந்தடைந்தனர்.

அங்கு தங்கி விட்டு, நேற்றுக்காலை மீண்டும் நடைபவனியை ஆரம்பித்த மாணவர்கள் கிளிநொச்சியை நேற்று நண்பகல் கடந்து சென்றனர்.

இன்று மூன்றாவது நாளாக இடம்பெறவுள்ள இந்த நடைபவனிக்கு, பொது அமைப்புகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் ஆதரவளித்து வருகின்றனர்.

walk-to-anuradhapura-2.jpgwalk-to-anuradhapura-1.jpg

 

http://www.puthinappalakai.net/2018/10/11/news/33363

  • கருத்துக்கள உறவுகள்

அவசியமான செய்திகளை அடியில் போய் மறையாது ஆவன செய்யுமாறு நிர்வாகத்தினரை கேட்டுக் கொள்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

DpCjislUUAAv8yW.jpg

DpCjl9zVsAE5mwJ.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கவனயீர்ப்பு நடைபயணம் வவுனியாவை சென்றடைந்தது

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கவனயீர்ப்பு நடைபயணம் வவுனியாவை சென்றடைந்தது

அரசியல் கைதிகளது விடுதலைக்கான கோரிக்கையினை முன்வைத்து மக்கள்,மாணவர்களின் ஆதரவுடன் பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணம் நேற்றிரவு வவுனியா ஒமந்தை பகுதியினை சென்றடைந்துள்ளது.அவர்களின் தொடர் நடைபயணத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள்,தென்னிலங்கை பல்கலைக்கழக மாணவ அமைப்புக்கள் இணையவுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் நடைபவணி மூன்றாவது நாளான நேற்றிரவு வவுனியா ஒமந்தை பகுதியினை அடைந்தது.அதன் பின்னர் ஒமந்தை பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தீர்வு காண தவறினால் அது துரதிஷ்டமாக அமையுமென யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கிருஸ்ணமீனன் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வவுனியா நகரைச் சென்றடையவுள்ளதாக குறிப்பிட்ட கிருஷ்ணமீனன், நாளை முழுவதும் சிங்கள மக்கள் வாழ்கின்ற பிரதேசத்திற்கு பயணம் செய்யவுள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.

அரசியல் கைதிகள் தமது வாழ்வின் பெரும்பகுதியை சிறையிலேயே கழித்துவிட்டார்கள். அவர்களுக்கு தண்டனை வழங்கியிருந்தால், இதுவரை சிறையில் கழித்த காலமே தண்டனைக் காலமாக அமைந்திருக்கும். இந்நிலையில், கட்சி பேதமின்றி செயற்பட்டு அவர்களின் விடுதலைக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் இதன்போது வலியுறுத்தினார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-பல்கலைக்கழக-மாணவர்-23/

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

தர்ம யுத்தம் நடத்தும் யாழ் பல்கலை மாணவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சொல்ல வார்த்தை இல்லை.பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னம் கொஞ்சகாலத்தில மீட்க போனவர்களுக்காகவும் போராட வேண்டி வருகுதே தெரியலை.

புலனாய்வுப் பிரிவு இப்பவே யார்யார் தலைமை தாங்குகிறார்கள் என்ற புள்ளி விபரங்களை எடுத்து அலுப்பு கொடுக்கலாம்.காலகாலமும் இதுதானே நடக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரது அபிலாசைகளும்  நிறைவேற வேண்டும்......! 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கவனயீர்ப்பு நடைபயணம் வவுனியாவை சென்றடைந்தது

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கவனயீர்ப்பு நடைபயணம் வவுனியாவை சென்றடைந்தது

மேலும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வவுனியா நகரைச் சென்றடையவுள்ளதாக குறிப்பிட்ட கிருஷ்ணமீனன், நாளை முழுவதும் சிங்கள மக்கள் வாழ்கின்ற பிரதேசத்திற்கு பயணம் செய்யவுள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.

மாணவச்  செல்வங்களின், கடந்த மூன்று நாள் நடை பயணம்... 
தமிழர் பகுதியூடாக, இடையூறு  இல்லாமல்   வந்தமை   ஏற்றுக் கொள்ளக் கூடியது.
அப்படியே.... சிங்களவர் பகுதியிலும்,  நடை பெற வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றேன். 

எமது  போராட்டம், எத்தனையோ... பல வடிவங்களை,  களங்களை  கண்டது.
ஆனால்... நடை பவனி  என்ற  புதிய கோணத்தில் அணுகிய,
மாணவச்  செல்வங்களின், கோரிக்கை வெற்றி பெற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இன்னம் கொஞ்சகாலத்தில மீட்க போனவர்களுக்காகவும் போராட வேண்டி வருகுதே தெரியலை.

புலனாய்வுப் பிரிவு இப்பவே யார்யார் தலைமை தாங்குகிறார்கள் என்ற புள்ளி விபரங்களை எடுத்து அலுப்பு கொடுக்கலாம்.காலகாலமும் இதுதானே நடக்கிறது.

ஈழப்பிரியன்... உங்களது சந்தேகம் நியாயமானதே.
பல்கலைக் கழகத்தில், படிக்கப் போன மாணவர்கள்... தமது உயிரை வெறுத்து,  
தமிழ்  அரசியல் வாதிகள் செய்ய வேண்டிய வேலையை செய்கிறார்கள்  எனும் போது....   
இப்போதுள்ள... சம்பந்தன், சுமந்திரன் உட்பட அனைத்து.... தமிழ் அரசியல் வியாதிகள் எல்லாம்...  
பதவிகளை  ராஜினாமா செய்து விட்டு,  வீட்டிற்கு போய்... ஓய்வெடுக்க வேண்டும்.  

அவர்கள்  ராஜினாமா,  செய்யா விட்டால்....  
வரும் தேர்தலில், மக்களிடம்.... செருப்படி வாங்கி, சட்டை  கிழிஞ்சு, 
வேட்டி  அவிண்டு,  சின்னா  பின்னமாகி, தெருத்தெருவாய்... பிச்சை  எடுக்க வேண்டி வரும். 
(
பிற்குறிப்பு:  இதை மட்டும்.... வடிவேலு  பாணியில் வாசிக்கவும்., மற்றதை... சீரியஸாக  வாசிக்கவும். 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபயணம் -மதகுருமாரும் இணைவு!!

பதிவேற்றிய காலம்: Oct 12, 2018

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடைபயணம் இன்று காலை வவுனியாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாளகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் பளை, கிளிநொச்சி, வவுனியா ஊடாக அநுராதபுரம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இன்றைய நடைபயணம் வவுனியாவில் இருந்து மதவாச்சி நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

நடைபயணத்தில் மாணவர்களுடன், மத குருமார், அரசியல் கட்சிகள், மற்றும் வர்த்தகர்கள், பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

DpSkEvoU0AACU-V.jpgDpSkF1MUUAEi_S3.jpg

 

https://newuthayan.com/story/13/அரசியல்-கைதிகளின்-விடுதலைக்கான-நடைபயணம்-மதகுருமாரும்-இணைவு.html

  • கருத்துக்கள உறவுகள்

ஐயர், அருட் தந்தை, பிக்கு, மௌலவி... ஒருவரையும்.... படத்தில்  காணவில்லையே.....
(சும்மா... என்றாலே... படத்திற்கு,  முன்னுக்கு நிற்கிற... ஆட்கள்  இவர்கள் என்பதால் கேட்டேன்.)  
 

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அவர்கள்  ராஜினாமா,  செய்யா விட்டால்....  
வரும் தேர்தலில், மக்களிடம்.... செருப்படி வாங்கி, சட்டை  கிழிஞ்சு, 
வேட்டி  அவிண்டு,  சின்னா  பின்னமாகி, தெருத்தெருவாய்... பிச்சை  எடுக்க வேண்டி வரும். 

என்ன தான் கூத்தடித்தாலும் எருமைமாட்டை விட்டாலும் தேர்தலில் வாக்கு போடுவார்கள்.அதனால்த் தான் செருப்பு மாதிரி வெளியே வைத்தாலும் புளட் ரெலோ இவர்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

49 minutes ago, தமிழ் சிறி said:

ஐயர், அருட் தந்தை, பிக்கு, மௌலவி... ஒருவரையும்.... படத்தில்  காணவில்லையே.....
(சும்மா... என்றாலே... படத்திற்கு,  முன்னுக்கு நிற்கிற... ஆட்கள்  இவர்கள் என்பதால் கேட்டேன்.)  
 

 

எங்காவது உட்கார்ந்து இருப்பதென்றால் அவர்களும் இருப்பார்கள்.

இது நடைபவனியல்லோ அவர்களால் முடியுமா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

எங்காவது உட்கார்ந்து இருப்பதென்றால் அவர்களும் இருப்பார்கள்.

இது நடைபவனியல்லோ அவர்களால் முடியுமா என்ன?

நிதர்சனமான... உண்மை. ஈழப் பிரியன்.
பகட்டுக்கு... முன்னுக்கு நிற்பதில்... எல்லா   மதத் தலைவர்களும்,  ஒரே  கொள்கை உடையவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அமைதி வழியில் மக்களுக்கான போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DpSkDeIV4AAeIN7.jpg

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

DpSkDeIV4AAeIN7.jpg

இந்து மத குருக்கள் இவ்வாறு முன்னடப்பது மிகவும் பாராட்டுக்கு உரியது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

DpSkDeIV4AAeIN7.jpg

சைவ  குருமார்களின்,  ஒத்துழைப்புக்கு  மிக நன்றி.
நீங்கள்,  நடந்து வரும் நடை.... அண்டைய தேசத்தை,  சிந்திக்க வைக்கும்.
படத்திற்கு, மிக்க நன்றி.. குமாரசாமி அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான... வினோத சம்பவங்கள்....  தமிழ் ஈழத்தில்,  தான் நடக்கும். ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.