Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்புச் செயலாளராக மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷ!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

gotabaya-rajapaksha.jpg

பாதுகாப்புச் செயலாளராக மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷ!

இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்கவுள்ளதாக சண்டே ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றும் கபில வைத்தியரத்னவின் இடத்திற்கு கோட்டா நியமிக்கப்படவுள்ளதோடு, அடுத்த வாரம் அவர் தமது கடமையை பொறுப்பேற்பாரென குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை கோட்டா நேற்று சந்தித்துள்ளார். இதன்போது பிரதமர் மஹிந்தவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லாட்சி பிளவுற்று புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ள நிலையில், நாட்டின் முக்கிய பதவிநிலைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கடந்த ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக பதவிவகித்த கோட்டாவிற்கு மீண்டும் அதே பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த பாதுகாப்புச் செயலாளராக கோட்டா நியமிக்கப்படுவாரென சனல் 4 தொலைக்காட்சியின் சிரேஷ்ட ஊடகவியலாளரும் பிரபல ஆவணப்பட தயாரிப்பாளருமான கலம் மக்ரேயும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தது.

http://athavannews.com/பாதுகாப்புச்-செயலாளராக-2/

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவின் தோட்டா முதலில் பாதுகாக்கப்போவது சரத்பொன்சேகாவைத்தான். Hambantota-shoot-newsfirst.jpg

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

கோத்தாவின் தோட்டா முதலில் பாதுகாக்கப்போவது சரத்பொன்சேகாவைத்தான். Hambantota-shoot-newsfirst.jpg

இல்லை, மைத்திரிக்கு...

நடந்தது, நடக்கப்போவது எல்லாம் நம்ம நன்மைக்கே..

  • கருத்துக்கள உறவுகள்

AD217665-5234-4-C61-A178-C77-C70399948.j

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

????????

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களை மீண்டும் ஒரு இருண்ட கொலைக் காலத்திற்குள் கொண்டுவந்து விட்டிருக்கிறது மகிந்தவின் மீள்வருகை.

திட்டமிட்ட இனவழிப்புடன் ஆரம்பித்து, கடத்துதல்கள், காணாமல்ப் போகப்பண்ணுதல்கள், ராணுவ ஆக்கிரமிப்புடனான கெடுபிடிகள், சுதந்திரமான நடமாட்டத்திற்கான தடைகள், பயங்காரவாத தடைச் சட்டங்கள், அவசரகாலச் சட்டம் என்று மிகவும் கொடுமையான காலத்திற்குள் தமிழர்களை அழைத்து வந்திருக்கிறார்கள்.

ரணிலின் இயலாமையும், மைத்திரியின் குள்ளநரித்தனமும், தொடர்ச்சியான சிங்களப் பேரினவாதிகளின் அழுத்தமும் சேர்ந்து மகிந்தவை மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியிருக்கின்றன. இருமுறை ஏற்கனவே சனாதிபதியாகவிருந்துவிட்டு, இப்போது பிரதமராக வந்திருக்கும் மகிந்த, அரசியல் அமைப்பினை மாற்றுவதன்மூலம் சர்வ வல்லமை பொருந்திய சனாதிபதி முறையை இல்லாதொழித்து பிரதமருக்கும் பாராளுமன்றத்திற்கும் அதிகாரங்களைக் குவிப்பதுதான் அவரது தந்திரமாக இருக்கலாம்.

கடந்த சனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் மற்றும் முஸ்லீம்களின் வாக்குகளால் மட்டுமே தோற்கடிக்கப்பட்ட மகிந்தவுக்கு இவ்விரு இனங்களின்மீதும் ஆத்திரமும், பழிவாங்கும் எண்ணமும் இருக்கலாம். இயல்பாகவே சிங்களப் பெளத்த பேரினவாதியான அவரின் சிறுபான்மையினர் மீதான அணுகுமுறை என்பது எமக்குச் சாதகமானதாக இருக்கப்போவதில்லை.

போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைகள் இனி எடுபடாமல் போகும். போர்க்குற்றங்களைப் புரிந்தவர்கள், அதற்குத் துணைபோனவர்கள், உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் அவற்றை மூடி மறைத்து நியாயப்படுத்தியவர்கள் என்று ஒரு பெரிய பட்டாளமே மீண்டும் களமிறங்கியிருக்கிறது.

போர்க்குற்றங்களை திட்டமிட்டு அரங்கேற்றிய மகிந்த ராஜபக்ஷ, கொலைகளுக்கான உத்தரவுகளைப் பிறப்பித்த கோட்டாபய ராஜபக்ஷ, இந்தியர்களுடன் சேர்ந்து கொலைகளைத் திட்டமிட்டு நெறிப்படுத்திய லலித் வீரதுங்க, கட்டளைப்படியும், மனவிருப்பத்துடனும் கொலைகளை அரங்கேற்றிய ராணுவத்தளபதிகள், பொலீஸ் மற்றும் விசேட அதிரடிப்படைப் பிரதானிகள், உள்நாட்டில் இனவழிப்பை மூடிமறைத்து நியாயப்படுத்திய கெஹெலியே ரம்புக்வெல்ல, ஐ. நாவில் இனவழிப்பை  மூடி மறைத்து நியாயப்படுத்திய பாலித்த கோஹொன்ன, இனவழிப்பிற்கு அணுசரணை வழங்கிய பாட்டாலி சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில என்று நீளும் சிங்களப் பேரினவாதிகள், அவர்களுடன் தோளுக்கு தோள் நின்று உதவிய விநாயகமூர்த்தி முரளீதரன், டக்கிளஸ் தேவானந்தா போன்ற தமிழ்ப் பெயர் கொண்டவர்கள் என்று மிக நீண்ட குழுவொன்று மீண்டும் களத்தில் இறங்கியிருக்கிறது.

பிரபாகரனைச் சர்வாதிகாரியென்றும், கொலைஞன் என்றும் குறிப்பிட்டு, அவரில்லாத எந்தவொரு சர்வாதிகாரக் , கொலைக்குற்றத் தலைவரும் பரவாயில்லை என்று எண்ணும் மனோபாவத்துடன் எம்மில் சிலர் ஒருபுறம், மகிந்தவின் மீள்வருகையை மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்து வெடிகொழுத்தி மகிழும் இன்னும்சிலர் மறுபுறம், இவர்களுக்கு நடுவே என்ன நடக்கப்போகிறதோ என்கிற தவிப்பிலும் சர்வதேசத்தால் முற்றாகக் கைவிடப்பட்ட நிலையிலும்  தமிழர்கள் மற்றொருபுறமும் இருக்க, மீண்டும் அதே கொடிய கொலைக் கலாசாரமும், சர்வாதிகாரத்தனமும் மெல்ல மெல்ல அரங்கேறுகிறது..

  • கருத்துக்கள உறவுகள்

எந்த சந்தர்ப்பத்திலும் எந்தவொரு பதவிகளையும் ஏற்கப்போவதில்லை

gotta-new.png?resize=600%2C400
தற்போதைய அரசாங்கத்தில் தான் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தில் சில பதவிகளை ஏற்றுகொள்ளப் போவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்தியை தான் முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்ஸ புதிய பாதுகாப்பு செயலாளராக பதவியேற்றப்போவதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த செய்திகளை நிராகரிப்பதாகவும் எந்த சந்தர்ப்பத்திலும் தற்போதைய அரசாங்கத்தில் எந்தவொரு பதவிகளையும் ஏற்கப்போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://globaltamilnews.net/2018/101041/

தற்போது எந்த பதவிகளையும் ஏற்றுக்கொள்ளவதாக அறிவித்தால் அதுவே மகிந்த கும்பலுக்கு பாரிய பின்னடைவைத் தரும் என்பதையும் அமெரிக்க குடியுரிமை பிரச்சினையும் இடையில் தலை தூக்கும் என்பதையும் கடத்தல்-கப்பம்-கொலைகளில் மும்மரமாக ஈடுபட்ட போர்க்குற்றவாளி கோத்தபாயா அறிந்து வைத்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ragunathan said:

தமிழ் மக்களை மீண்டும் ஒரு இருண்ட கொலைக் காலத்திற்குள் கொண்டுவந்து விட்டிருக்கிறது மகிந்தவின் மீள்வருகை.

திட்டமிட்ட இனவழிப்புடன் ஆரம்பித்து, கடத்துதல்கள், காணாமல்ப் போகப்பண்ணுதல்கள், ராணுவ ஆக்கிரமிப்புடனான கெடுபிடிகள், சுதந்திரமான நடமாட்டத்திற்கான தடைகள், பயங்காரவாத தடைச் சட்டங்கள், அவசரகாலச் சட்டம் என்று மிகவும் கொடுமையான காலத்திற்குள் தமிழர்களை அழைத்து வந்திருக்கிறார்கள்.

ரணிலின் இயலாமையும், மைத்திரியின் குள்ளநரித்தனமும், தொடர்ச்சியான சிங்களப் பேரினவாதிகளின் அழுத்தமும் சேர்ந்து மகிந்தவை மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியிருக்கின்றன. இருமுறை ஏற்கனவே சனாதிபதியாகவிருந்துவிட்டு, இப்போது பிரதமராக வந்திருக்கும் மகிந்த, அரசியல் அமைப்பினை மாற்றுவதன்மூலம் சர்வ வல்லமை பொருந்திய சனாதிபதி முறையை இல்லாதொழித்து பிரதமருக்கும் பாராளுமன்றத்திற்கும் அதிகாரங்களைக் குவிப்பதுதான் அவரது தந்திரமாக இருக்கலாம்.

கடந்த சனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் மற்றும் முஸ்லீம்களின் வாக்குகளால் மட்டுமே தோற்கடிக்கப்பட்ட மகிந்தவுக்கு இவ்விரு இனங்களின்மீதும் ஆத்திரமும், பழிவாங்கும் எண்ணமும் இருக்கலாம். இயல்பாகவே சிங்களப் பெளத்த பேரினவாதியான அவரின் சிறுபான்மையினர் மீதான அணுகுமுறை என்பது எமக்குச் சாதகமானதாக இருக்கப்போவதில்லை.

போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைகள் இனி எடுபடாமல் போகும். போர்க்குற்றங்களைப் புரிந்தவர்கள், அதற்குத் துணைபோனவர்கள், உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் அவற்றை மூடி மறைத்து நியாயப்படுத்தியவர்கள் என்று ஒரு பெரிய பட்டாளமே மீண்டும் களமிறங்கியிருக்கிறது.

போர்க்குற்றங்களை திட்டமிட்டு அரங்கேற்றிய மகிந்த ராஜபக்ஷ, கொலைகளுக்கான உத்தரவுகளைப் பிறப்பித்த கோட்டாபய ராஜபக்ஷ, இந்தியர்களுடன் சேர்ந்து கொலைகளைத் திட்டமிட்டு நெறிப்படுத்திய லலித் வீரதுங்க, கட்டளைப்படியும், மனவிருப்பத்துடனும் கொலைகளை அரங்கேற்றிய ராணுவத்தளபதிகள், பொலீஸ் மற்றும் விசேட அதிரடிப்படைப் பிரதானிகள், உள்நாட்டில் இனவழிப்பை மூடிமறைத்து நியாயப்படுத்திய கெஹெலியே ரம்புக்வெல்ல, ஐ. நாவில் இனவழிப்பை  மூடி மறைத்து நியாயப்படுத்திய பாலித்த கோஹொன்ன, இனவழிப்பிற்கு அணுசரணை வழங்கிய பாட்டாலி சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில என்று நீளும் சிங்களப் பேரினவாதிகள், அவர்களுடன் தோளுக்கு தோள் நின்று உதவிய விநாயகமூர்த்தி முரளீதரன், டக்கிளஸ் தேவானந்தா போன்ற தமிழ்ப் பெயர் கொண்டவர்கள் என்று மிக நீண்ட குழுவொன்று மீண்டும் களத்தில் இறங்கியிருக்கிறது.

பிரபாகரனைச் சர்வாதிகாரியென்றும், கொலைஞன் என்றும் குறிப்பிட்டு, அவரில்லாத எந்தவொரு சர்வாதிகாரக் , கொலைக்குற்றத் தலைவரும் பரவாயில்லை என்று எண்ணும் மனோபாவத்துடன் எம்மில் சிலர் ஒருபுறம், மகிந்தவின் மீள்வருகையை மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்து வெடிகொழுத்தி மகிழும் இன்னும்சிலர் மறுபுறம், இவர்களுக்கு நடுவே என்ன நடக்கப்போகிறதோ என்கிற தவிப்பிலும் சர்வதேசத்தால் முற்றாகக் கைவிடப்பட்ட நிலையிலும்  தமிழர்கள் மற்றொருபுறமும் இருக்க, மீண்டும் அதே கொடிய கொலைக் கலாசாரமும், சர்வாதிகாரத்தனமும் மெல்ல மெல்ல அரங்கேறுகிறது..

புள்ள பூச்சி, மைத்திரிக்கு கொடுக்கு முளைக்கும் என்று யாருக்கு தெரியும்.

இப்படி கொட்டிவிட்டதே.

நடந்தது, நடக்கப்போவது எல்லாம் நம்ம நன்மைக்கே..

சும்மா, தீர்வு, யுத்த விசாரணை என்று எல்லோரையும் நீண்டகாலம் ஏமாத்த முடியாது. 

அவரை ஆதரிக்கிறோம், இவரை ஆதரிக்கிறோம் என்ற நிலைப்பாடு எடாமல் தமிழர் தரப்பு, சர்வதேச சமூகத்திடமே நாம் இப்ப என்ன செய்வது என்று  கேட்டு ஒரு தீர்கமான முடிவெடுக்க சந்தர்ப்பம் வந்துள்ளது.

Edited by Nathamuni

12 minutes ago, Nathamuni said:

அவரை ஆதரிக்கிறோம், இவரை ஆதரிக்கிறோம் என்ற நிலைப்பாடு எடாமல் தமிழர் தரப்பு, சர்வதேச சமூகத்திடமே நாம் இப்ப என்ன செய்வு என்று  கேட்டு ஒரு தீர்கமான முடிவெடுக்க சந்தர்ப்பம் வந்துள்ளது. 

சிங்கள-பௌத்த இனமதவெறி சக்திகளின் இந்த இழுபறிகளுக்குள் தொடர்ந்தும் அகப்படாமல், தொடர்ந்து இனவழிப்புக்கு முகம் கொடுக்காமல், ஈழத்து  தமிழர்கள் தமது அடிப்படை உரிமைகளையும்  சுயநிர்ணய உரிமைகளையும் பெறும், பாதுகாக்கும் ஒரு தீர்வை சர்வதேசம் வழங்க வேண்டும் என்று கேட்பதற்கான சந்தர்ப்பம் அமைந்துள்ளது.

விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்தால் இதை செய்திருப்பார். ஆனால் அடிமைத்தன அரசியல் செய்யும் தற்போதைய கூட்டமைப்பு (சம்சும் கும்பல்) இதை செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது கடினம். 

அத்துடன் கடந்த 70 வருடங்களாக சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் இயற்றும் அரசியல் யாப்புக்கள் எப்போதும் குழப்பகரமானவை, ஜனநாயக விரோதமானவை, தமிழின அழிப்புக்கு சார்பானவை என்பதையும் சர்வதேசத்துக்கு விளங்கவைக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ragunathan said:

ரணிலின் இயலாமையும், மைத்திரியின் குள்ளநரித்தனமும், தொடர்ச்சியான சிங்களப் பேரினவாதிகளின் அழுத்தமும் சேர்ந்து மகிந்தவை மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியிருக்கின்றன. 

ரணிலினுடையதும், மைத்திரியினுடையதும் குள்ளநரித்தனங்களே மகிந்தவை மீண்டும் ஆட்சிப்பொறுப்பில் ஏற்றியிருக்கின்றன என்பதாகத்தான் எண்ணத் தோன்றுகிறது. 

22 hours ago, பிழம்பு said:

தற்போதைய அரசாங்கத்தில் தான் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை

அப்பிடின்னா பிறகு ஏற்கப் போறன்னு தானே அர்த்தம். அதாவது சர்வதேசம் ஏமாந்து கொலைகாரர்களை அரசமைக்க அனுமதித்த பிறகு என்டு அர்த்தம். இல்லையோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.