Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈ.பி.ஆர்.எல்.எவ் – புளொட் கட்சிகள் வெளியேற்றப்பட வேண்டும் - கஜேந்திரகுமார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈ.பி.ஆர்.எல்.எவ் – புளொட் கட்சிகள் வெளியேற்றப்பட வேண்டும் - கஜேந்திரகுமார்

October 30, 2018
jajenthirakumar-1.jpg?zoom=3&resize=335%

இலங்கையை மையப்படுத்தி சமகாலத்தில் உருவாகியிருக்கும் பூகோள அரசியல் நலன்சார்ந்த போட்டி தன்மை தமிழ் மக்களுக்கு சாதகமானதும், பாதகமானதுமான விளைவுகளை உண்டாக்கியிருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தை தமிழ் மக்களுடைய நலன்களுக்காக பயன்படுத்தவேண்டும். மாறாக எங்களை எவரும் பாவித்துவிடக்கூடாது. மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என  தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழில் உள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

இலங்கையை மையப்படுத்தி நடந்து கொண்டிருப்பது பூகோள அரசியல் நலன்சார்ந்த போட்டி என நாங்கள் படித்துப்படித்து கூறிக்கொண்டிருந்தோம். 2009ம் ஆண்டு தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய காலம் தொடக்கம் நாங்கள் அதனை கூறிவந்தோம்.

ஆனால் நாங்கள் கூறும்போதெல்லாம் சிரித்தார்கள். எங்களை பார்த்து நகைத்தார்கள்.  ஆனால் நாங்கள் கூறியது அப்பட்டமான உண்மை என்பதை இன்று நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் காட்டியிருக்கின்றன.

குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷவை சீனா சந்திக்கின்றது. மறுபக்கம் ரணில் விக்கிரமசிங்கவை மேற்கு நாடுகள் சந்திக்கின்றன. இவ்வாறு சமகாலத்தில் பூகோள அரசியல் நலன்சார் போட்டி உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில் எங்களுடைய நலன்களை பெற்றுக் கொள்வதற்கான அல்லது எங்களுடைய நலன்களை வென்றெடுப்பதற்கான சாத்தியங்களும் அதிகளவில் காணப்படுகின்றது.

அதற்காக தமிழ்தேசம் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவேண்டும். இன்றுள்ள பூகோள நலன்சார் போட்டியை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டுமே தவிர எங்களை எவரும் பாவிக்கும் வகையில் நடந்து கொள்ளகூடாது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பை நம்பி பயனில்லை.  தமிழ்தேசிய கூட்டமைப்பு ஏற்கனவே தமிழ் மக்களை நடுத்தெருவில் கொண்டுவந்து விட்டிருக்கின்றது. தமிழ் மக்கள் இன் று சம்மந்தன், சுமந்திரனை தேடி செல்வதற்கு தயாராக இல்லை. காரணம் அவர்கள் இந்த பூ கோள அரசியல் போட்டியாளர்களின் கை பொம்மையாக மாறியிருக்கின்றார்கள்.

அவர்கள் மேற்கு நாடுகளின் நலன்களுக்காக இந்த அரசாங்கத்தை  பாதுகாத்திருக்கின்றார்கள்.  ஆகவே இன்றுள்ள பூகோள அரசியல் போட்டி தன்மையை தமிழ் மக்களுடைய நலன்களுக்காக பயன்படுத்த கூடிய தரப்புக்களின் இடம் காலியாகவே உள்ளது.

அந்த இடத்தை நிரப்பி தமிழ் மக்களுடைய நலன்சார்ந்த விடயத்தில் மிக இறுக்கமான நிலைப்பாட்டினை கொண்டு இயங்க கூடிய தரப்புக்களாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் மட்டுமே இருக்கின்றோம்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு இப்போதும் கூட பொறுப்புகூறலை நடைமுறைப்படுத்தினால், புதிய அரசியலமைப்பை உருவாக்கினால் யாருக்கும் ஆதரவு கொடுப்போம் என கூறுகிறது. பொறுப்புகூறல் விடயத்தில் உள்ளக விசாரணை வலியுறுத்தப்படுகின்றது. புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி வலியுறுத்தப்படுகின்றது. பின்னர்இதனை நிறைவேற்றுவதால் என்ன பயன்? ஆகவே மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். தமிழ் மக்களுடைய நிலைப்பாடுகளில் மிகவும் இறுக்கமாக இருப்பதுடன், விலைபோகாதவர்களை தமிழ் மக்கள் ஆதரிக்கவேண்டும்.

தமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் புளெட் வெளியேற்றப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் பேரவையில் இருந்தும், பேரவையின் அனுரசணையுடன் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலமையில் உருவாக்கப்பட்ட கட்சியிலிருந்தும் ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் ஆகிய கட்சிகள் வெளியேற்றப்பட வேண்டும். இந்த இரு கட்சிகளும் வெளியேற்றப்படாவிட்டால் தமிழ் மக்கள் நலன்சார்ந்த நிலைப்பாடுகளில் இறுக்கமாக இருக்க முடியாது.

இதனை நாங்கள் பேரவையின் இணைதலைவர்களுக்கு கடிதம் ஊடாக தெரியப்படுத்தியிருக்கின்றோம். அதற்கு பதில் கிடைக்கவில்லை. ஆனால் பேரவையின் இணை தலைவர் வைத்தியர் லக்ஸ்மன் கூட்டு என்பது கொள்கைரீதியான கூட்டாக இருக்கவேண்டும் என கூறியிருக்கின்றார். அது உண்மையாக இருந்தால் எங்கள் கோரிக்கையை பேரவை நிராகரிக்க இயலாது.

தமிழ் மக்கள் பேரவை இன்று தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையானதும், சக்தி மிக்கதுமான மக்கள் இயக்கமாக மாற்றம் கண்டிருக்கின்றது. மேலும் அது தமிழ் மக்களுடைய நலன்சார் கொள்கைகளில் எந்த சந்தர்ப்பத்திலும், எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமளிக்காத மிக இறுக்கமான நிலைப்பாட்டினை கொண்ட இயக்கமாகவும் காணப்படுகின்றது.

அதேபோல் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் அவ்வாறூன நிலைப்பாட்டை கொண்ட ஒருவர். அதனை நாம் இதற்கு முன்னரும் பல தடவைகள் கூறியுள்ளதுடன், சீ.வி.விக்னேஸ்வரனை பகிரங்கமாக ஆதரித்தும் வந்தோம். ஆனால் துரதிஸ்டவசமாக ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் ஆகிய இருகட்சிகள் தமிழ் மக்கள் பேரவைக்குள் இருந்து கொண்டிருக்கின்றன.

மறுபக்கம் முதலமைச்சருடைய கட்சியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி இருக்கின்றது. இந்த நிலையில் நாங்கள் கூறுவது தமிழ் மக்கள் பேரவையும், முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் தமிழ் மக்கள் நலன்சார்ந்த கொள்கையில் மிக இறுக்கமானவர்கள், விட்டுக்கொடுப்புக்கு இடமளிக்காதவர்கள் என மக்கள் நம்பும் ஒரு நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் ஆகிய இரு கட்சிகளும் அவ்வாறன நிலைப்பாட்டில் தொடர்ந்து நீடிப்பதற்கு இடமளிக்கமாட்டார்கள்.

முக்கியமான சந்தர்ப்பங்களில் இவர்கள் குழப்பங்களை உருவாக்குவார்கள். தமிழ் மக்கள் பேரவை உருவாக்கிய தீர்வு திட்டத்தில் பெரும் பங்கை ஆற்றியதும், அந்த தீர்வு திட்டத்திற்காக மக்கள் ஆணையை பெற்றதும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி. அதேசமயம் புளொட் அமைப்பு தமிழ்தேசிய கூட்டமைப்பில் பங்காளிகளாக இருந்து கொண்டு அவர்களும் சேர்ந்து உருவாக்கிய ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கைக்கு மக்கள் ஆணை கேட்டார்கள். ஈ.பி.ஆர்.எல்.எவ் ஒற்றையாட்சியை அப்பட்டமாக ஏற்றுக் கொள்ளும் ஆனந்த சங்கரியுடன் இணைந்து மக்கள் ஆணை கேட்டார்.

இன்று அந்த ஆனந்த சங்கரி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கைலாகு கொடுத்து சிலிர்த்துக் கொள்கிறார். இதற்கும் மேலதிகமாக ஈ.பி.ஆர்.எல்.எவ் தமிழ்தேசிய கூட்டமைப்பை விமர்சித்துக் கொண்டு நெடுங்கேணி பிரதேச சபையில் என்ன செய்தது? மஹிந்த ராஜபக்ஸ தரப்புக்கு ஆதரவாக செயற்பட்டது. அவ்வாறான ஒரு செயலை தமிழ்தேசிய கூட்டமைப்பு கூட இதுவரையில் செய்ததில்லை.

ஆகவே இந்த விடயங்களையும் வலியுறுத்தி தமிழ் மக்கள் பேரவையின் இணை தலைவர்களுக்கு கடிதங்களை எழுதியிருக்கின்றோம். எங்களுடைய நிலைப்பாடு ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் ஆகிய கட்சிகள் வெளியேற்றப்பட வேண்டும். அதில் நாங்கள் தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றோம்.

முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கட்சி தொடங்கும் நிகழ்வில் தமிழ் மக்கள் பேரவையின் இணை தலைவர் வைத்தியர் லக்மன் உரையாற்றும்போது கூட்டு என்பது கொள்கைரீதியான கூட்டாக இருக்கவேண்டும் என கூறியுள்ளார். அது உண்மையாக இருந்தால் எங்களுடைய கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரிக்க இயலாது. நிரகரிப்பதில் நியாயமும் இல்லை என தெரிவித்தார்.

2 minutes ago, கிருபன் said:

இலங்கையை மையப்படுத்தி சமகாலத்தில் உருவாகியிருக்கும் பூகோள அரசியல் நலன்சார்ந்த போட்டி தன்மை தமிழ் மக்களுக்கு சாதகமானதும், பாதகமானதுமான விளைவுகளை உண்டாக்கியிருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தை தமிழ் மக்களுடைய நலன்களுக்காக பயன்படுத்தவேண்டும். மாறாக எங்களை எவரும் பாவித்துவிடக்கூடாது. மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என  தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

முதலில் கஜேந்திரகுமார் கிணற்றுக்குள் விழிப்பாக இருப்பதையும், குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதையும், எதிர்மறை அரசியல் செய்வதையும், சுயநல அரசியல் செய்வதையும் நிறுத்தி அரசியலில் பரந்துபட்ட அறிவையும், தமிழ் மக்களுக்கு பயனுள்ள எதார்த்தமான அரசியல் செய்யும் அறிவையும் பெறவேண்டும்.

9 minutes ago, கிருபன் said:

தமிழ் மக்கள் பேரவையும், முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் தமிழ் மக்கள் நலன்சார்ந்த கொள்கையில் மிக இறுக்கமானவர்கள், விட்டுக்கொடுப்புக்கு இடமளிக்காதவர்கள் என மக்கள் நம்பும் ஒரு நிலையில்

பிறகேன் சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்ற பச்சோந்திகளைப் பார்த்து நீங்கள் பயப்படுகிறீர்கள்? அவர்களை உரிய இடத்தில் வைத்தால் சரி! சுரேஷ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், அடைக்கலம் செல்வநாதன், சிறீகாந்தா போன்றவர்களின் சுயரூபம் மக்கள் அறிந்தது தான். அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள நினைக்கிறார்கள், ஆனால் காலம் காலமாக செய்துவந்த கைக்கூலி அரசியலில் இருந்து விடுபட/மாற முடியாமல் தவிக்கிறார்கள்.  அவர்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கை யாரிடமும் இல்லை. தமது மாற்றத்தை நிரூபிப்பது அவர்கள் கடமை. அதற்கு நீண்ட காலம் தேவைப்படும்.  

உங்களைப் (கஜேந்திரகுமார்) பற்றிய உண்மைக்கு வருவோம்.

நீங்கள் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் மக்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி உங்கள் கட்சியை வளர்க்க நினைத்தீர்கள். அதனால் விக்னேஸ்வரன் அவர்கள் உங்கள் குடும்பக் கட்சியில் இணைய வேண்டும் என்றும் நினைத்தீர்கள். தமிழரசுக் கட்சி அவரை கைப்பொம்மையாக நடத்த முற்பட்டது போல நீங்களும் அவரை கைப்பொம்மையாக நடத்த முற்பட்டீர்கள். உங்களின் பல செயற்பாடுகள் இதற்கு ஆதாரம்.

ஆனால், அவர் புதிய கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்று தெரிந்ததும் உங்கள் சுயநல / கபட அரசியலில் பேரிடி விழுந்துவிட்டது. நீங்கள் நேர்மையாக மக்கள் நலன்களை முன்னிறுத்தி அரசியல் செய்திருந்தால் அவர் புதிய கட்சி ஆரம்பித்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. அதனால் நொடிச்ச்சாட்டு (சுரேஷ் பிரேமச்சந்திரன்) சொல்லி அவரது அழைப்பை நிராகரித்து கூட்டத்துக்கு செல்லவில்லை.

மாறாக விக்னேஸ்வரன் அவர்களின் அழைப்பை ஏற்று நீங்களும் கூட்டத்துக்கு சென்றிருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும். தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவது உங்கள் முதன்மையான நோக்கமல்ல என்பது உங்களின் பல செயற்பாடுகளின் மூலம் வெளிவந்துவிட்டது.

எனவே, கஜேந்திரகுமார் கிணற்றுக்குள் விழிப்பாக இருப்பதையும், குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதையும், எதிர்மறை அரசியல் செய்வதையும், சுயநல அரசியல் செய்வதையும் முதலில் நிறுத்தி, அரசியலில் பரந்துபட்ட அறிவையும், தமிழ் மக்களுக்கு பயனுள்ள எதார்த்தமான அரசியல் செய்யும் அறிவையும், சுயக்கட்சி நலனுக்கு மேலாக தமிழர் நலனை முதன்மையானதாக கருதும் பக்குவத்தையும் பெறவேண்டும்.

அனந்தி சசிதரனிடம் இருக்கும் அரசியல் முதிர்சியில் குறைந்தது ஒரு 10% முதிர்ச்சி கூட கஜேந்திரகுமாரரிடமும் கஜேந்திரனிடமும் இல்லை என்பது மிகவும் கவலையானது.

13 hours ago, கிருபன் said:

மறுபக்கம் முதலமைச்சருடைய கட்சியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி இருக்கின்றது.

கஜேந்திரகுமாருக்கு மூளை முற்றாக பிசகிவிடடதோ?

அதெப்பிடி முதலமைச்சருடைய கட்சியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி இருக்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

உவை எப்பவுமே குறுக்கால இழுக்கிற ஆக்கள் தான்.

குறிப்பாக.. சுரேஸ் பிரேமச்சந்திரன்.. வரதராஜப் பெருமாள்.. டக்கிளஸ்.. சித்தார்த்தன் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். 

அதுகள் எந்தக் காலத்திலும் திருந்தாதுகள். மக்களுக்கு என்று அர்ப்பணிப்போடு சேவை செய்யாதுகள்.

ஏதோ விடுதலைப்புலிகளுக்கு பயந்து சிலர் திருந்தினமாதிரி நடித்திருந்தாலும்.. உள்ளுக்கு அதுகள் திருந்தவே இல்லை. 

இதுதான் யதார்த்தம். 

இவர்களை நம்பி வாக்குப் போடும் முட்டாள் கூட்டத்துக்கு இது விளங்குதில்லை. தொடர்ந்து ஏமாந்து கொண்டே இருக்குதுங்க. 

  • கருத்துக்கள உறவுகள்

 

ஈபிஆர்எல்எவ் உம் புளொட்டும் இரண்டு தோணியில் பயணிக்கிறார்கள்.

தேர்தலில் கூட்டணியுடன் கூட்டு வைத்தால்த் தான் வெல்லலாம் மற்றப்படி மற்றவர்களுடன் கூட்டு.இந்திய இலங்கை புலனாய்வாளர்களின் தாளத்திற்கேற்ப ஆடுபவர்கள்.

2 hours ago, nedukkalapoovan said:

இவர்களை நம்பி வாக்குப் போடும் முட்டாள் கூட்டத்துக்கு இது விளங்குதில்லை. தொடர்ந்து ஏமாந்து கொண்டே இருக்குதுங்க.

வாக்களிக்கும் மக்களை முட்டாள் என்று கூறும் இந்த முட்டாளை என்ன செய்வது 

- ஒரு முட்டாள் தன்னை விட புத்திசாலியான மற்றோருவரை முட்டாள் என்பது புதிதில்லையே -

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள்.

இதுவும் கடந்து போகும்.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

வாக்களிக்கும் மக்களை முட்டாள் என்று கூறும் இந்த முட்டாளை என்ன செய்வது 

- ஒரு முட்டாள் தன்னை விட புத்திசாலியான மற்றோருவரை முட்டாள் என்பது புதிதில்லையே -

இதுவும் கடந்து போகும்.

வாக்களிக்கிற மக்களையும் கொன்று புதைத்தவர்கள் தான்..... நீங்கள் இன்று போற்றும் ஒட்டுக்குழு தலைவர்கள். உலக நாடெங்கும்.. அகதி என்று அலைபவர்களும்.. அங்கு வாக்களித்து விட்டுத்தான்.. அசைலக் கதை எழுதி.. இப்ப நோர்வே அதுஇதென்னு.. புளுகுத் திரியினம்.. ஊரில. 

ஆக... மக்கள் முட்டாளாக உள்ளதால் தான்.. துரோகிகள்... உருவாகவும்.. பிழைப்பு நடத்தவும் முடிகிறது. இன்றேல்... துரோகங்களை மக்களே அழித்திருக்க முடியும். ?

24 minutes ago, nedukkalapoovan said:

வாக்களிக்கிற மக்களையும் கொன்று புதைத்தவர்கள் தான்..... நீங்கள் இன்று போற்றும் ஒட்டுக்குழு தலைவர்கள். உலக நாடெங்கும்.. அகதி என்று அலைபவர்களும்.. அங்கு வாக்களித்து விட்டுத்தான்.. அசைலக் கதை எழுதி.. இப்ப நோர்வே அதுஇதென்னு.. புளுகுத் திரியினம்.. ஊரில. 

ஆக... மக்கள் முட்டாளாக உள்ளதால் தான்.. துரோகிகள்... உருவாகவும்.. பிழைப்பு நடத்தவும் முடிகிறது. இன்றேல்... துரோகங்களை மக்களே அழித்திருக்க முடியும். ?

அப்பனே வாக்களித்தவர்களையும் வாக்களிக்க போனவர்களையும் கொன்று புதைத்த நீங்கள் இதை சொல்லும்போது 

நான் ஸ்கொல் என்று சிரித்துவிட்டேன்.???

very funny lol GIF

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஜீவன் சிவா said:

வாக்களிக்கும் மக்களை முட்டாள் என்று கூறும் இந்த முட்டாளை என்ன செய்வது 

- ஒரு முட்டாள் தன்னை விட புத்திசாலியான மற்றோருவரை முட்டாள் என்பது புதிதில்லையே -

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள்.

இதுவும் கடந்து போகும்.

அப்போ மக்கள் வாக்களித்து தெரிவு செய்தவர்களை எப்படி முட்டாள் என்கிறீர்கள்?

கஜேந்திரகுமாருக்கு பிசகி விட்டது...

Just now, MEERA said:

அப்போ மக்கள் வாக்களித்து தெரிவு செய்தவர்களை எப்படி முட்டாள் என்கிறீர்கள்?

நான் என்றுமே அப்படி சொன்னதில்லை - அவர்கள் தங்கள் கடமைகளை செய்யாதபோது அவர்களை விமர்சித்திருக்கின்றேன். ஆனால் நான் மக்களையோ அவர்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களையோ முட்டாள் என்று ஒருபோதும் கூறியதில்லை.

ஏனென்றால் அதை ஒரு முட்டாளால் மட்டுமே கூற முடியும்.

ஒரு ஜனநாயக நாட்டில் இருக்கும் உங்களுக்கே வாக்களிக்கும் மக்களை ஒருவர் முட்டாள்கள் என்பதில் கேள்வி எழாமல் இருப்பது வெட்கப்படவேண்டிய விடயம்.

இதுக்குமேல என்னத்த சொல்ல.

அராஜகம் வாழ்க ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.