Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரயர் கயிறு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ரயர் கயிறைப் பற்றி தெரிந்திருக்க வேண்டுமென்றால் நீங்கள் நிச்சயம் ஊர்ப் பக்கம் போயிருக்க வேண்டும்.ஏனென்றால் நானும் ரயர் கயிறை முதன்முதல் பார்த்தது ஊரில் தான்.

ஊருக்கு போனபோது ஆடுமாடு கட்டும் கொட்டிலில் ரயர் கயிறு தொங்கிக் கொண்டிருந்தது.அப்போது அதைப் பார்த்தேனே தவிர என்ன ஏது என்று ஆராயவில்லை.பின்னர் வீட்டு வேலி அடைக்கும் போது தான் தேவையான சாமான்களில் ரயர் கயிறும் சொன்னார்கள்.அப்போது கூட ரயர் கயிறைப் பற்றி ஆராயும் எண்ணம் எழவில்லை.அவர்கள் சொன்ன சாமான் எல்லாம் வாங்கி வேலி அடைக்க ஆட்களும் வந்தார்கள்.

வந்தவர்களுடன் அறிமுகமாகி வேலை தொடங்கும் போது நானும் கூடவே நின்று வேலை செய்தேன்.அப்போது தான் ஒருவர் பெரிது பெரிதாக இருக்கும் ரயர் கயிறை தனித்தனி ஆக்குமாறு கூறினார்.எப்படி இதைக் கண்டுபிடித்தார்கள் முதல் பார்த்த போது ஏதோதானோ என்று விட்டுவிட்டேன் இப்போது இதுவே வேலி அடைக்க பாவிக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறதென்றேன்.

உண்மை தான் முந்தைய காலங்களில் பழைய ரயர் வகைகளை மதவுகள் குப்பைகளுக்குள் எறிந்துவிடுவார்கள். மேற்படியானின் (போராளிகள்) மூளையால் இப்போது பணம் கொடுத்து வாங்கும் அத்தியாவசிய சாமான் ஆகிவிட்டது.அது மட்டுமல்ல தும்புக் கயிறு கொஞ்சநாளில் அறுந்துவிடும் இது அறவேஅறாது.வேலிக்கு மட்டுமல்ல ஒன்றுடன் ஒன்று முடிச்சு போட்டு நீட்டாக்கினால் புல்லு வைக்கோல் விறகு என்று எதுவும் கட்டலாம் என்று விளங்கப்படுத்தினார்கள்.

முன்னர் ஒரு காலத்தில் உருட்டி விளையாடுவதைத் தவிர பழைய ரயரை எவரும் கணக்கெடுப்பததில்லை.போராளிகளில் யாருக்கோ உதித்த மூளையில் வந்தது தான் ரயர் கயிறு.பழைய ரயரை எடுத்து இரண்டடி இரண்டடியாக வெட்டி அதனுள் இருக்கும் நூலை தனித்தனியாக பிரித்து வைத்திருப்பதே ரயர் கயிறு.

கொழும்புக்கு போகும் போது அங்கே உள்ள இரும்புக்கடைகளில் பார்க்க வேண்டும் என நினைத்திருந்தேன்.ஏனோ பின்னர் மறந்தேவிட்டேன்.சிங்களப் பகுதியிலோ மற்றைய பகுதியிலோ இதைப் பாவிக்கிறார்களோ தெரியவில்லை.

தமிழ்நாட்டிலும் எமது இடம் மாதிரி கயிறு பாவிப்பார்கள் என எண்ணுகிறேன்.இந்த ரயர்கயிறை அறிமுகப்படுத்தினால் பழைய ரயருகளும் வீதிவழியே கிடக்காது.தும்புக் கயிறை விட நீண்ட பாவனையுமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப் பிரியன்.... ரயர்  கயிறைப்  பற்றி, இப்போ தான் கேள்விப் படுகின்றேன்.
பழைய ரயர்கள்  சுற்றுச் சூழலுக்கு பங்கம் விளைவிப்பதால்....
இதனை.. ஏதோ  ஒரு வகையில்... மீளவும்  பயன் படுத்துவது  நல்ல யோசனை. ?

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

...தமிழ்நாட்டிலும் எமது இடம் மாதிரி கயிறு பாவிப்பார்கள் என எண்ணுகிறேன்.இந்த ரயர்கயிறை அறிமுகப்படுத்தினால் பழைய ரயருகளும் வீதிவழியே கிடக்காது.தும்புக் கயிறை விட நீண்ட பாவனையுமாகும்.

டயர் கயிறு தமிழ்நாட்டின் கிராமங்களில் உபயோகிக்கும் வழக்கம் உள்ளது.

எங்கள் கிராமத்தில் கமலைக்கு பயன்படுத்தியுள்ளதை பார்த்திருக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

ஈழப் பிரியன்.... ரயர்  கயிறைப்  பற்றி, இப்போ தான் கேள்விப் படுகின்றேன்.
பழைய ரயர்கள்  சுற்றுச் சூழலுக்கு பங்கம் விளைவிப்பதால்....
இதனை.. ஏதோ  ஒரு வகையில்... மீளவும்  பயன் படுத்துவது  நல்ல யோசனை. ?

சிறி நானும் ஊர்ப்பக்கம் போனபடியால்த் தான் இதைப்பற்றி அறிய முடிந்தது.

அத்தோடு வெளிநாடுகளில் இருந்துவந்து நகரங்களில் இருந்துட்டுப் போறவர்கள் ஏன் கிராமங்களுக்குப் போனாலும் வெளிநாடு மாதிரி இருந்திட்டு வாறவர்களுக்கு இவைகளைப் பற்றி அறிய வாய்ப்பில்லை.

அண்மையில் சுவியர் போய்வந்திருந்தார் அவரிடம் கேட்டால் தெரியும்.
நீங்களும் ஊருக்கு கனகாலம் போகவில்லைப் போல.

10 hours ago, ராசவன்னியன் said:

டயர் கயிறு தமிழ்நாட்டின் கிராமங்களில் உபயோகிக்கும் வழக்கம் உள்ளது.

எங்கள் கிராமத்தில் கமலைக்கு பயன்படுத்தியுள்ளதை பார்த்திருக்கிறேன்.

வன்னியன் கமலை என்றால் என்ன?

நானும் நீண்டகாலத்தின் பின் 2015 இல் ஊருக்குப் போனபோது தான் இந்த அனுபவம் கிடைத்தது.
உங்கள் இடங்களிலும் இது பாவிக்கிறபடியால் நீண்டகாலமாகவே பாவனையில் இருக்கிறது என எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பழைய டயரிலிருந்து இன்னொரு பயனும் பெறமுடியும். யாழ்ப்பாணத்திலிருந்தவர்களுக்கு இது நன்கு பரிச்சயமானது. நாங்கள் கிணறுகளில் கப்பிகள் கொண்டு நீர் அள்ளும்பொழுது தும்புக் கயிற்றுக்குப் பதிலாக பழைய டயர்களை நீளத்திற்கு வெட்டிக் கயிறு போலப் பாவிப்போம். 

கயிற்றை விடவும் டயர்க் கயிறு மிகவும் உறுதியானது. கைய்யையும் கிழிக்காது. சிறிது காலத்தின் பின்னர், கூர்மையான விளிம்புகள் மழுங்கிப்போய், ரப்பர்க் கயிறாக மறிவிடும். பிறகென்ன, ஒரே தண்ணியள்ளுதல் போட்டிதான்.

கோண்டாவிலில், டிப்போவருகில் எங்கள் வீட்டில் ஒரு ஆழமான கிணறு இருக்கிறது. கிட்டத்தட்ட 32 - 33 அடி ஆழமிருக்கும்.  நல்ல மழை காலத்தில் கழுத்தளவிற்குத் தண்ணி நிற்கும். மேலிருந்து கிணற்றின் அடியைப் பார்ப்பதே ஒரு பயம்தான். ஒடுங்கிய, இருண்ட கிணற்றுக்குள் தண்ணிக்குள் இருப்பது எதுவும் தெரியாது. பழைய கிணற்றுச் சுவர் வெடிப்புகளிலிருந்து வேம்பும், ஆலமரமும் முளைத்து வருவதைக் கண்டிருக்கிறேன். 

சரி, விடயத்திற்கு வரலாம், இந்தக் கிணறு எமக்கும் அயல் வீட்டுக்காரருக்கும் பொதுவானது. அவர்கள் ஒருபக்கத்தில் நீர் அள்ள, நாங்கள் இந்தப் பக்கத்தில் அள்ளுவோம். இருவரும் கப்பிதான். சிலவேளை போட்டி நடக்கும். வாளியைக் கிணற்றுக்குள் எறியும்போது இரு வாளிகளும் மோதுப்படும், ஒரே கும்மாளம்தான்.......

அந்த நாட்கள் திருப்பி வராது.

ம்ம்....டயர்க் கயிறில் தொடங்கி, பழைய நினைவுகளில் வந்து நிற்குது !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ragunathan said:

பழைய டயரிலிருந்து இன்னொரு பயனும் பெறமுடியும். யாழ்ப்பாணத்திலிருந்தவர்களுக்கு இது நன்கு பரிச்சயமானது. நாங்கள் கிணறுகளில் கப்பிகள் கொண்டு நீர் அள்ளும்பொழுது தும்புக் கயிற்றுக்குப் பதிலாக பழைய டயர்களை நீளத்திற்கு வெட்டிக் கயிறு போலப் பாவிப்போம். 

ரகு எமது வீட்டில் இல்லை என்றாலும் வேறு வீடுகளில் ரயரில் வாளி கட்டி தண்ணீர் அள்ள பார்த்திருக்கிறேன்.
இப்போது தான் ரயர் கயிறு பாவனை விற்பனை என்று பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்ல நினைத்ததை ரகுநாதன் சொல்லிவிட்டார்.கப்பிகளில் வாளிக்கு கட்டி தண்ணி அள்ளத்தான் அதிகளவில் பாவிப்பது.பின் கடினமான வேலைகள் வாகனங்கள் கட்டி இழுப்பது போன்றவற்றிற்கு பாவிக்கலாம். நீங்கள் சொல்வது மோட்டார் சைக்கிள், கார் ரயர்களில்  வெட்டி சணல் கயிறு அளவுக்கு அதை பிரித்தெடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.அது மிகவும் சிரமமான வேலையாய் இருந்திருக்கும்.......!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ragunathan said:

பழைய டயரிலிருந்து இன்னொரு பயனும் பெறமுடியும். யாழ்ப்பாணத்திலிருந்தவர்களுக்கு இது நன்கு பரிச்சயமானது. நாங்கள் கிணறுகளில் கப்பிகள் கொண்டு நீர் அள்ளும்பொழுது தும்புக் கயிற்றுக்குப் பதிலாக பழைய டயர்களை நீளத்திற்கு வெட்டிக் கயிறு போலப் பாவிப்போம். 

கயிற்றை விடவும் டயர்க் கயிறு மிகவும் உறுதியானது. கைய்யையும் கிழிக்காது. சிறிது காலத்தின் பின்னர், கூர்மையான விளிம்புகள் மழுங்கிப்போய், ரப்பர்க் கயிறாக மறிவிடும். பிறகென்ன, ஒரே தண்ணியள்ளுதல் போட்டிதான்.

கோண்டாவிலில், டிப்போவருகில் எங்கள் வீட்டில் ஒரு ஆழமான கிணறு இருக்கிறது. கிட்டத்தட்ட 32 - 33 அடி ஆழமிருக்கும்.  நல்ல மழை காலத்தில் கழுத்தளவிற்குத் தண்ணி நிற்கும். மேலிருந்து கிணற்றின் அடியைப் பார்ப்பதே ஒரு பயம்தான். ஒடுங்கிய, இருண்ட கிணற்றுக்குள் தண்ணிக்குள் இருப்பது எதுவும் தெரியாது. பழைய கிணற்றுச் சுவர் வெடிப்புகளிலிருந்து வேம்பும், ஆலமரமும் முளைத்து வருவதைக் கண்டிருக்கிறேன். 

சரி, விடயத்திற்கு வரலாம், இந்தக் கிணறு எமக்கும் அயல் வீட்டுக்காரருக்கும் பொதுவானது. அவர்கள் ஒருபக்கத்தில் நீர் அள்ள, நாங்கள் இந்தப் பக்கத்தில் அள்ளுவோம். இருவரும் கப்பிதான். சிலவேளை போட்டி நடக்கும். வாளியைக் கிணற்றுக்குள் எறியும்போது இரு வாளிகளும் மோதுப்படும், ஒரே கும்மாளம்தான்.......

அந்த நாட்கள் திருப்பி வராது.

ம்ம்....டயர்க் கயிறில் தொடங்கி, பழைய நினைவுகளில் வந்து நிற்குது !

கிணறு பொது என்டால் பக்கத்து வீட்டு அக்கா குளிப்பதை உங்கட பக்கம் இருந்து பார்க்கலாமோ ?

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் நானும் கேள்விப்படுகிறேன். அதன் படத்தையும் போட்டிருக்கலாம் நீங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்றுதான் நானும் கேள்விப்படுகிறேன். அதன் படத்தையும் போட்டிருக்கலாம் நீங்கள்

Image associée

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, suvy said:

Image associée

ஓ இதுவா அது நன்றி சுவி அண்ணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

நான் சொல்ல நினைத்ததை ரகுநாதன் சொல்லிவிட்டார்.கப்பிகளில் வாளிக்கு கட்டி தண்ணி அள்ளத்தான் அதிகளவில் பாவிப்பது.பின் கடினமான வேலைகள் வாகனங்கள் கட்டி இழுப்பது போன்றவற்றிற்கு பாவிக்கலாம். நீங்கள் சொல்வது மோட்டார் சைக்கிள், கார் ரயர்களில்  வெட்டி சணல் கயிறு அளவுக்கு அதை பிரித்தெடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.அது மிகவும் சிரமமான வேலையாய் இருந்திருக்கும்.......!  tw_blush:

இது கயிறு மாதிரி இல்லை.சிறிய நுhல் போன்றவை.ரயரில் இருந்து ஒவ்வொரு நுhலாக பிரித்தெடுக்க வேண்டும்.

1 hour ago, ரதி said:

கிணறு பொது என்டால் பக்கத்து வீட்டு அக்கா குளிப்பதை உங்கட பக்கம் இருந்து பார்க்கலாமோ ?

அடபாவிகளா இப்படியும் வேறை இருக்கா?
வழமையில் பங்கு கிணறு என்றால் நடுவில ஒரு மறைப்பு வைத்திருப்பார்கள்.

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்றுதான் நானும் கேள்விப்படுகிறேன். அதன் படத்தையும் போட்டிருக்கலாம் நீங்கள்

படம் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை.சுவியர் அனுப்பிய படம் கிணற்றில தண்ணியள்ளுவது.ஊரில் உள்ளவர்களிடம் சொல்லி படம் எடுத்து போடத் தான் இருக்கு.

சின்ன பகுதி ஆக்கி வேலி அடைக்க பயன்படுத்துவர் ,பெரிய தை நீர் அள்ள கயிராக பயன்படுத்துவர்.. சுவி அண்ணா போட்டிருக்கிற படம் பிழையானது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அபராஜிதன் said:

சின்ன பகுதி ஆக்கி வேலி அடைக்க பயன்படுத்துவர் ,பெரிய தை நீர் அள்ள கயிராக பயன்படுத்துவர்.. சுவி அண்ணா போட்டிருக்கிற படம் பிழையானது

நானும் யோசித்தேன் என்னடா இது மெசினில் செய்த மாதிரி இருக்கிறது. வழமையாக கிணறுகளுக்கு பாவிப்பது சின்னன் பெரிதாக கையால் வெட்டியது தெரியும்.எதற்கும் தெரியாமல் எதுவும் எழுதக் கூடாதே என்று இருந்துவிட்டேன்.
தெளிவுபடுத்தியதற்கு நன்றி.
தற்போது பாவனையில் உள்ள ரயர்கயிறின் படம் எடுக்க இயலுமானால் சிரமம் பாராது இணைத்துவிடவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ADD85591-32-B1-4-D0-C-9-C56-1-D4-F771450

மேலே உள்ளது தான் ரயர்கயிறு. பலருக்கும் குழப்பமாக இருப்பதால் ஊரிலிருந்து சுடச்சுட எடுத்திருக்கிறேன்.படத்திலுள்ள ஒவ்வொரு துண்டையும் இரண்டு மூன்றாக கிழித்தெடுக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்றுதான் நானும் கேள்விப்படுகிறேன். அதன் படத்தையும் போட்டிருக்கலாம் நீங்கள்

உங்களுக்காக சுடச்சுட படம்.

  • கருத்துக்கள உறவுகள்

ரதியக்கா, அப்ப நான் சின்னப்பிள்ளையாக்கும். பக்கத்து வீட்டு அக்காவையெல்லாம் குளிக்கேக்க பார்க்க ஏலாது. ஆனால், ஒரு வடிவான அக்கா இருந்தவ. தேவி எண்டு பெயர்.

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணி அள்ளுற கயிறு அதேபோன்றுதான் இருக்கும்.நானும் தேடிப்பார்த்தேன் இதுதான் கிடைத்தது. இதில் வெட்டிய தழும்புகள் இல்லை.ஏனெனில் நானே மிகவும் கூரான கத்தியால் ரயரில் இருந்து வெட்டி எடுத்து எங்கட கிணறுக்குப் போட்டிருக்கின்றேன். அதுவும் பங்குக் கிணறுதான்.டயரில் இருவகை உண்டு.ஒன்று கம்பி வலையால் பின்னப்பட்டிருக்கும். மற்றது நூலால் பின்னப்பட்டிருக்கும்......!tw_blush: 

2 hours ago, ஈழப்பிரியன் said:

ADD85591-32-B1-4-D0-C-9-C56-1-D4-F771450

மேலே உள்ளது தான் ரயர்கயிறு. பலருக்கும் குழப்பமாக இருப்பதால் ஊரிலிருந்து சுடச்சுட எடுத்திருக்கிறேன்.படத்திலுள்ள ஒவ்வொரு துண்டையும் இரண்டு மூன்றாக கிழித்தெடுக்கலாம்.

இந்தமாதிரி அப்ப வரவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

அதுவும்ங்குக் கிணறுதான்

அப்ப நீங்களும் பக்கத்து வீட்டு அக்கா தங்கச்சி குளிக்கும் போது பார்க்கிறநீங்களோ?

முந்தின காலத்தில முழு உடுப்போடும் தானே குளிக்கிறது பார்த்தா என்ன பார்க்காட்டி என்ன என்று முணுமுணுப்பது கேட்கிறது.

ரயர் கயிறை நானும் முதன்முதலாகவே கண்டேன் ஆச்சரியமாக இருந்துது.ஊருக்குப் போய் வேலி அடைத்தபடியால் கிடைத்த ஒரு அனுபவம்.அதனாலேயே எல்லோருடனும் பகிர்ந்து கொண்டேன்.
அடுத்த முறை ஊர் போகிறவர்கள் வேலி அடைக்கத் தேவையில்லை சந்திக்கு சந்தி இருக்கும் இரும்புக்கடைகளில் தொங்கிக் கொண்டிருக்கும் ரயர் கயிறைப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/29/2018 at 7:14 PM, ஈழப்பிரியன் said:

...

வன்னியன் கமலை என்றால் என்ன?

...

images?q=tbn:ANd9GcQglqi_1L6sexmZH_5yq9z

ஏறக்குறைய இந்த மாதிரி இருக்கும்.. கிணற்றிலிருந்து தண்ணீரை இறைக்க பயன்படுத்தும் கருவிதான் கமலை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

525-A6508-396-C-411-C-BAAE-E2-B1-FEB5-BF

A66-B9-EAB-BD32-41-AE-BAC1-98-B8-B913231

ஊருக்குப் போனவர்களும் சரி போகாதவர்களும் சரி ரயர்கயிறை முழுமையாக அறிந்திருக்காததால் உங்களுக்காக.

தனித்தனியே பிரித்து சிறிய நுhலாக காட்டியிருக்கு.
பார்க்க நுhல் மாதிரி இருக்கே தவிர அறாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ராசவன்னியன் said:

images?q=tbn:ANd9GcQglqi_1L6sexmZH_5yq9z

ஏறக்குறைய இந்த மாதிரி இருக்கும்.. கிணற்றிலிருந்து தண்ணீரை இறைக்க பயன்படுத்தும் கருவிதான் கமலை.

நன்றி வன்னியன்.
நாங்கள் வாளி என்று தான் சொல்லுவோம்.தோட்டத்துக்கு பாவிப்பது பட்டை அது ஓலையால் பின்னப்பட்டிருக்கும்.

D39-D9-DC4-409-E-40-AE-92-E7-CD94-C13-E7

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.