Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொட்டர் உயிருடன் - கருணா பரபரப்பு தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டர் உயிருடன் - கருணா பரபரப்பு தகவல்

விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான்  இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை அவர் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.

 ரிவிரவிற்கு  அவர் இதனை தெரிவித்துள்ளார்

மட்டக்களப்பில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் காரணமாகயிருக்கலாம் என கருணா தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு மீண்டும் புத்துயுர் ஊட்டும் நடவடிக்கையிது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொட்டு அம்மான் நோர்வேயில் மறைந்து வாழ்கின்றார் என கருணா தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் புலனாய்வு பிரிவை செயலிழக்கச்செய்துள்ளதுடன்  தேசிய பாதுகாப்பை புறக்கணித்து பாதுகாப்பு படையினரிற்கு அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளது என கருணா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்குவது ஆச்சரியமளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள கருணா விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு நானும் உதவியுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/45535

  • கருத்துக்கள உறவுகள்

இதே வாய்தான் இறுதி யுத்தத்தில் முழு புலியும் அழிந்துவிட்டது என்று சொன்னது இன்று தன் எஜமானர்களை காப்பாற்ற இப்படி சொல்லுது பாஸ் முதலில் கிழக்கு தமிழ் மக்களை காப்பற்றுங்க பாஸ் .

  • கருத்துக்கள உறவுகள்

தான் செய்த காெலையை திசைதிருப்ப

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொட்டு அம்மான் பற்றி கமல் குணரத்ன வெளியிட்ட தகவல்

_17775_1543730375_0FF6E042-2AA9-434F-B5A5-6DB212596A0C.jpeg

விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லை என மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாகவும், அவர் நோர்வே நாட்டில் வசித்து வருவதாகவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது. இதன்போது புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.

இறுதிக்கட்டப் போரில் நந்திக்கடல் பகுதியில் ஏராளமான சடலங்கள் புதைந்து கிடந்தன. இவற்றில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பலரின் சடலங்களும் உள்ளதாக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

அதேபோன்று நந்திக்கடல் பரந்த பிரதேசமாகும். இறுதிக்கட்டப் போரில் பல உடல் நீருக்குள்ளும், சேற்றுக்குள்ளும் புதைந்து கிடந்தன. அவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உயிரற்ற உடலும் மீட்கப்பட்டது.

இறுதிக் கட்ட நந்திக்கடல் போரில் எந்தவொரு தலைவரும் தப்பிக்க வாய்ப்பில்லை.

விடுதலை புலிகள் இயக்கத்தின் கிழக்கு தளபதியாக செயற்பட்ட கருணா அரசியல் பிரவேசத்துக்கு வந்ததன் பின்னர் போலியான பிரச்சாரங்களை செய்து வருகின்றார். இது அவரது அரசியல் நோக்கத்தினை மையப்படுத்தியதாகவே காணப்படுகின்றது என கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

http://www.battinaatham.net/description.php?art=17775

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இயக்கத்தை அழிக்க தான் உதவினே என்று வெளிப்படையாகக் கூறும் கருணா பற்றி அவரை இன்றுவரை ஆதரிக்கும் தமிழர்கள் என்ன சொல்கிறார்கள்? 

தன்னை வளர்த்து, இயக்கத்தின் இரண்டாம் நிலைவரை கொண்டுவந்த தலைமையையும், சக தளபதிகள் போராளிகளையும், தமிழினத்தின் விடுதலைக்கான ஒரே நம்பிக்கையையும் ஒன்றாகச் சிதைத்துவிட்டதுபற்றி இவர் இறுமாப்பும் மகிழ்ச்சியும் அடையலாம். என்றோ ஒரு நாள் தான் செய்த மாபெரும் துரோகம் இவருக்கு புரியலாம், ஆனால், இவர் தனது சொந்த நலனுக்காகச் செய்த துரோகம் ஒரு இனத்தின் மொத்த இருப்பையுமே கேள்விக்குறியாக்கி, ஆக்கிரமிப்பாளனிடம் அடிமைகளாக வாழும் நிலையை உரூவாக்கியதை இவர் அறிவாரா?

இவர்போன்றவர்கள் கருவிலேயே அழிக்கப்பட்டிருக்கவேண்டும். இவரைப் பெற்ற கருப்பை மொத்தத் தமிழினத்தின் சாபத்தையும் பெற்றுக்கொள்ளட்டும்.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

கமால் குணரட்ன எனப்படும் 53 ஆம் பிரிகேட் தளபதி ஒரு சிங்கள இனவெறியன். மகிந்த மற்றும் கோத்தாவின் ஆதரவாளன்.

27 வருடங்களாக சிங்கள ராணுவத்தில் பணிபுரியும் இவன், தான் எழுதிய "நந்திக்கடலுக்கான பாதை" எனும் புத்தகத்தில் தனது வீரபராக்கிரமங்களை எழுதியிருக்கிறான்.

இவனது அணியே இசைப்பிரியா உற்பட்ட 30 இற்கும் மேற்பட்ட புலிகளின் தலைவர்கள் பலரை சரணடைந்தபின்னர் சுட்டுக் கொண்டிருக்கிறது. இசைப்பிரியாவுக்கு நடந்தவைபற்றிக் கேட்கத் தேவையில்லை.

தலைவர் பிரபாகரன் அவர்களின் மறைவுபற்றிக் குறிப்பிடும் இவன், ஓரிடத்தில், தலைவர் ராணுவ உடையில் சேற்றுக்குள் கிடந்தார் என்று குறிப்பிடுகிறான். அதே புத்தகத்தில், இன்னொரு இடத்தில், சாதாரண சிவில் உடையில் தன்னிடம் கொண்டுவரப்பட்ட தலைவரின் உடலுக்கு தானே புலிகளின் ராணுவச் சீருடையை அணிவித்ததாகக் கூறுகிறான்.

தனது நாட்டில் வசிக்கும் இன்னொரு இனத்தின்மீதான தனது இனத்தின் வெற்றியை எதிர்காலச் சமூகம் அறிந்து வைத்திருக்கவேண்டும், சரித்திரத்தில் பதித்து வைக்கவேண்டும் என்று கேட்கும் இவன்  80களில் தமிழர் ஊர்களில் ரோந்துசென்றபோது தனது ராணுவ வீரர்கள் தமிழர்களைக் கொல்லும்போதும், அவர்களின் உடைமைகளை அழிக்கும்போதும் ஆத்மார்த்தமான மனநிறைவை அடைந்ததாக இனவாதம் கக்கியுள்ளான்.

இவன்போன்ற போர்க்குற்றவாளிகள் மிகவும் வெளிப்படையாகவே இலங்கையில் வலம் வருகிறார்கள். இவர்கள் செய்த இனவழிப்பிற்கான நியாயம் என்பது ஒருபோதுமே நிலைநாட்டப்படப்போவதில்லை. இவனைப் போன்றவர்களைப் பாவித்து தமிழினத்தைக் கருவறுத்த மகிந்த கோத்தா எனும் பெளத்த அரக்கர்களும், சோனியா எனப்படும் இந்திய விதவையும் உலகின் எல்லா வரப்பிரசாதங்களையும் அனுபவித்துக்கொண்டே ஒருநாளில் கண்மூடுவார்கள். 

இவர்களின் கைகளில் பலியிடப்பட்ட தமிழினம் மட்டும் சரித்திரத்துக்கும் தான் பட்ட அழிவுபற்றிப் பேசிக்கொண்டிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ragunathan said:

புலிகள் இயக்கத்தை அழிக்க தான் உதவினே என்று வெளிப்படையாகக் கூறும் கருணா பற்றி அவரை இன்றுவரை ஆதரிக்கும் தமிழர்கள் என்ன சொல்கிறார்கள்? 

தன்னை வளர்த்து, இயக்கத்தின் இரண்டாம் நிலைவரை கொண்டுவந்த தலைமையையும், சக தளபதிகள் போராளிகளையும், தமிழினத்தின் விடுதலைக்கான ஒரே நம்பிக்கையையும் ஒன்றாகச் சிதைத்துவிட்டதுபற்றி இவர் இறுமாப்பும் மகிழ்ச்சியும் அடையலாம். என்றோ ஒரு நாள் தான் செய்த மாபெரும் துரோகம் இவருக்கு புரியலாம், ஆனால், இவர் தனது சொந்த நலனுக்காகச் செய்த துரோகம் ஒரு இனத்தின் மொத்த இருப்பையுமே கேள்விக்குறியாக்கி, ஆக்கிரமிப்பாளனிடம் அடிமைகளாக வாழும் நிலையை உரூவாக்கியதை இவர் அறிவாரா?

இவர்போன்றவர்கள் கருவிலேயே அழிக்கப்பட்டிருக்கவேண்டும். இவரைப் பெற்ற கருப்பை மொத்தத் தமிழினத்தின் சாபத்தையும் பெற்றுக்கொள்ளட்டும்.

மகிந்தவேயே ஆதரிக்கும் ஆட்கள் இருக்கும் வரைக்கும் கர்ணாவுக்கும் ஆதரவு உண்டு யாழில் மகிந்தவுக்கு ஆதரவாக மக்கள் செஞ்சிட்டாங்களாம் தமிழ் வின் செய்தி போட்டிருக்கு  ( கர்ணா தெரிந்த துரோகி என்றால் அதை விடவும் அதிகமாக இன்னும் துரோகிகள் இருக்கிறார்கள் அவர்களையும் கண்டு பிடிக்க வேண்டும் 

நான் கர்ணாவுக்கு ஆதரவாளன் அல்ல

இப்ப ரணிலுக்கு ஆதரவாகவும் ஆட்கள்  இருக்கு ஆக மொத்தத்தில் ஐ தே கட்சியும் தமிழ் மக்களுக்கு ஆப்படிச்ச கட்சிதான் இன்று செம்புகள் அதன் வால் பிடித்து செல்கிறது 

46918450-1875407102514210-10163448860786

இச்செய்தியின் பின்னணி ... இங்கிருந்து சிறிலங்காவிற்கு தமிழ் மக்களின் சுபீட்ச வாழ்வுக்காக அரசியல் சுற்றுலா சென்று வரும் சிங்கள விசுவாசிகளான ரெலோவோ/சிறி ரெலோவையோ சேர்ந்த "குடும்பி **",  அண்மையில் உத்தியோககபூர்வ சுற்றுலா மேற்கொண்டாராம். அவரது அரசியல் பயணத்தில் அம்மானையும் சந்தித்தாராம். அப்போதுதான் அம்மான் ... "... பொட்டார் உயிருடன் ஒரு நாட்டில் உள்ளார் என்றும், அவர் தமது கட்டுப்பாட்டுக்குள் தான் இருப்பாதாகவும்" .... தெரிவித்ததாக, இங்கு வந்து புரளியை புலி ஆதரவாளர்களிடமும் கிளப்பி விட்டிருக்கிறார்.  ... இது எப்படியோ "தன்னை புலித்தளபதியின் மச்சான் என்றும், செத்த வீடுகளால் இணையத்தில் பணம் சம்பாதிக்கும்" கூத்தமைப்பு பிரமுகரின் இணையத்தளம் தலைப்பு செய்தியாக்கியது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மகிந்தவேயே ஆதரிக்கும் ஆட்கள் இருக்கும் வரைக்கும் கர்ணாவுக்கும் ஆதரவு உண்டு யாழில் மகிந்தவுக்கு ஆதரவாக மக்கள் செஞ்சிட்டாங்களாம் தமிழ் வின் செய்தி போட்டிருக்கு  ( கர்ணா தெரிந்த துரோகி என்றால் அதை விடவும் அதிகமாக இன்னும் துரோகிகள் இருக்கிறார்கள் அவர்களையும் கண்டு பிடிக்க வேண்டும் 

நான் கர்ணாவுக்கு ஆதரவாளன் அல்ல

இப்ப ரணிலுக்கு ஆதரவாகவும் ஆட்கள்  இருக்கு ஆக மொத்தத்தில் ஐ தே கட்சியும் தமிழ் மக்களுக்கு ஆப்படிச்ச கட்சிதான் இன்று செம்புகள் அதன் வால் பிடித்து செல்கிறது 

எனது சிறுவயதிலிருந்து  நானறிந்தவரையில் தமிழ்பிரதேச  தமிழர்கள் சிலர் சிங்கள கட்சிகளுக்கு ஆதரவளிப்பதை கண்கூடாக பார்த்துள்ளேன். காரணம் உடனடி பகட்டு வாழ்க்கைக்கு ஆசைப்படுபவர்கள் அவர்கள்!!!!!!  சிங்கள அரசியல்வாதிகளை தங்கள் வீடுகளுக்கு அழைத்து பார்டி பந்தாக்கள் செய்பவர்கள். தமிழின இழப்புகளின் வலி தெரியாதவர்கள். நாளைய சந்ததியின் சுகத்தை விட இன்றைய சுகமே சொர்க்கம் என நினைப்பவர்கள்.

இன்னும் ஏன் !!!!!!!!!

தங்கள் வீட்டுக்கு முன் ஆமி அதிகாரியின் ஜீப்போ அல்லது நேவி அதிகாரியின் ஜீப்போ நின்றால் பெருமையாக நினைக்கும் கூட்டங்கள் அதுகள்.

ஒரு சில சாக்கடைகளை வைத்து  ஒரு இனமே அப்படியிருக்குமென சாடப்படாது.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

ஹாஹா தொப்பிதானே அளவானவர்கள் போட்டுக்கொண்டால் சரி நான் ஒன்றும் குறிப்பிட்டு சொல்லவில்லையே சாமியோவ்:27_sunglasses:

  • கருத்துக்கள உறவுகள்

கும்மானுக்கு பிழைப்பு வழியில்லை. இப்படி எதையாச்சும் பேசி காலத்தைக் கழிக்க வேண்டியான். இலவசமாகக் கிடைக்கிற.. அமைச்சர் பதவியும் கிடைக்கிறாப் போல தெரியல்ல...! அந்த விரக்தி கும்மானுக்கு இருக்கத்தான் செய்யும். ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.