Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகளின் திருமணத்துக்கு, 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விமான நà¯à®°à®¿à®à®²à¯ à®à®·à®¾ à®à®®à¯à®ªà®¾à®©à®¿ à®à®²à¯à®¯à®¾à®£à®®à¯

இஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வளவு தெரியுமா...?

உலகின் மிக அழகான நகரங்களுள் உதய்பூருக்கு என்றுமே தனி இடம் உண்டு. இங்கு இருக்கும் அரண்மனைகள் ambani, adani போன்ற பணக்காரர்களின் திருமணம், காது குத்து, வரவேற்பு, கம்பெனி விழாக்கள் என அடுத்தடுத்து கொண்டாடியே இன்னும் அந்த அரண்மனைக்கான பிரபல்யத்தை மெருகேற்றிவிட்டார்கள். இன்று முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி - ஆனந்த பிரமலின் வரவேற்பு நிகழ்ச்சி அதே உதய்பூர் அரண்மனையில் தான் நடக்கிறது.

ஹà¯à®à¯à®à®²à¯à®à®³à¯

இதனால், சாதாரண ஹோட்டல்கள் கூட அரண்மனை வடிவில் அத்தனை கலை அழகுடன் கட்டி இருக்கிறார்கள். கட்டியும் வருகிறார்கள். இந்தியாவின் முக்கியமான ராஜபுத்திர வம்சத்தினர் இந்த மேவார் பகுதிகளில் தான் வாழ்ந்து வந்தார்கள். பத்மாவதி படத்தில் வரும் ஷாகித் கபூருமிந்த மேவார் ராஜபுத்ர வம்சத்தை சேர்ந்தவர் தான். மொகலாயர்கள் அதிக பாடுபட்டு பிடித்த கோட்டையும் இந்த மேவார் கோட்டையைத் தான் என வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள்.

அத்தனை பிரசித்தி பெற்ற பகுதியை ஆண்ட மகராணா உதய்சிங் கி.பி. 1559-ம் ஆண்டு இந்த நகரை உருவாக்கினார். ராஜஸ்தானில் குஜராத் எல்லையையொட்டி அமைந்துள்ள உதய்பூரை தார் பாலைவனத்தில் இருந்து ஆரவல்லி மலைக்குன்றுகள் பிரிக்கிறது. இங்கு பேசப்படும் மொழியை மேவாரி மொழி என்று அழைக்கிறார்கள்.

முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும், பிரமல் குழுமத்தின் வாரிசான ஆனந்த் பிரமலுக்கும் வரும் 12-ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்துக்கு முன்னதாக டிசம்பர் 8 மற்றும் 9-ம் தேதிகளில் உதய்பூரில் இரண்டு நாட்கள் சில சடங்குகள் நடைபெறுகின்றன. இதற்காக, உதய்பூரில் பிரமாண்ட செயற்கை மேடைகள் அமைக்கப்பட்டு கண் கவரும் அலங்காரத்துடன் மின்னுகின்றன.

இஷாவின் திருமணத்துக்காக அடிக்கப்பட்ட அழைப்பித மன்னிக்கவும் பெட்டியின் விலையே ரூ.3 லட்சம். இவ்வளவு விலை மதிப்பில் தயாரிக்கப்பட்ட அழைப்பிதழ்களைத் தான் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி மற்றும் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன், திருப்பதி வெங்கடாசலபதியின் பாதங்களைல் வைத்துச் சிறப்பு பூஜை நடத்தினார் முகேஷ் அம்பானி. என்ன இருந்தாலும் தகப்பன் இல்லையா...? என்ன தான் பெரிய பணக்காரராக இருந்தாலும், மகளின் வாழ்கையில் பயம் கலந்த பக்தி இருக்கத் தானே செய்யும்

திருமணத்துக்குப் பிறகு மும்பையின் ஒர்லி பகுதியில், கடலைப் பார்த்த படிக்கு கட்டப்பட்டு வரும் ஒரு பெரிய சொகுசு வீட்டில் வாழ இருக்கிறார். அந்த வீட்டை கட்டுவதற்கான செலவுகள் மட்டும் ரூ.450 கோடியாம். இந்த சொகுசு பங்களாவில் இஷா கணவருடன் வசிக்கப் போகின்றார். வீட்டுக்கு வரும் மருமகளுக்காக ஆனந்த் பிரமாலின் தந்தை அஜய் பிரமால் வீட்டைப் பார்த்து பார்த்துக் கட்டியுள்ளார்.

இந்த சொகுசு வீட்டை முதலில் ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் பயிற்சிப் பட்டறை இருந்தது. 2012-ல் இந்த குலிதா (Gulita) கட்டிடம் ஏலத்துக்கு வந்த போது அதை வென்றவர் அஜய் பிரமல் தான்.

இந்த குலிதா வீடு சுமார் 50,000 சதுர அடி பரப்பு கொண்ட ஐந்து அடுக்கு மாளிகை. நீச்சல் குளம், ஜிம், மல்டி பர்பஸ் ஹால், லைப்ரரி என மினி உலகத்தையே உள்ளே வைத்திருக்கிறார்களாம். இதை கடந்த 2015-ல் இருந்து பார்த்து பார்த்து செதுக்கி வருகிறாராம் மாப்பிள்ளையின் அப்பா அஜய் பிரமல். உலகின் இரண்டாவது பிரமாண்ட வீடான அம்பானியின் அண்டிலா வீட்டில் வாழ்ந்த பெண் நம் வீட்டுக்கு வந்து வசதி குறைபாடோடு இருக்கக் கூடாது என அத்தனை கவனத்துடன் செய்கிறாராம்.

ராஜஸ்தானில் இன்று ஓட்டுப்பதிவு முடிவடைந்து விடுகிறது. இதைத் தொடர்ந்து மும்பையில் இருந்து அம்பானி மற்றும் பிரமல் குடும்பத்தினர் தனி விமானங்களில் உதய்பூர் செல்கின்றனர். இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் உதய்பூர் செல்ல 80 முதல் 100 தனியார் விமானங்கள் மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்திருக்கிறாராம் அம்பானி.

பொதுவாக உதய்பூர் விமான நிலையத்தில் பெரிய அளவில் போக்குவரத்து இருக்காது. ஒரு நாளைக்கு 19 லேண்டிங் மற்றும் 19 டேக் ஆஃப்தானாம். இப்போது அம்பானி குடும்பத்தினர் வருகையால், அடுத்த 5 நாள்களுக்குத் தனியார் விமானங்கள் 200 முறை டேக் ஆஃப் மற்றும் 200 லேண்டிங் செய்யும் வகையில் ஷெட்யூல்கள் தயாரிக்கச் சொல்லி இருக்கிறாராம். அம்பானி.

தன் செல்ல மகளின் திருமணத்துக்கு உலகின் பல நாடுகளில் இருந்து வரும் 1000 சிறப்பு விருந்தினர்கள் வர இருக்கிறார்கள். இதனால், உதய்பூரில் உள்ள அனைத்து நட்சத்திர ஹோட்டல்களையும் அம்பானி ஒற்றை செக்கில் வாடகைக்கு எடுத்திருக்கிறாராம். விருந்தினர்களை நிறைவாக கவனிக்க தனிக்குழு நியமித்து கவனிக்கச் சொல்லி அன்புக் கட்டளை இட்டிருக்கிறார்.

விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு வருவது, ஹோட்டலில் இருந்து இஷாவின் வைபவ நிகழ்சிகளுக்கு வருவது போன்ற சாலை போக்குவரத்து சேவைகளுக்கு மட்டும் சுமார் 1000 கார்களை வாடகைக்கு எடுத்திருக்கிறாராம். அதற்கும் ஒரு செக் தானாம்.

அப்படி வாடகைக்கு எடுத்த கார்கள் எல்லாமே காஸ்ட்லியான ஆடி, பெண்ட்லி, பி.எம்.டபிள்யூ, ஜாகுவர் ரக சொகுசு கார்கள் தானாம். வரும் விருந்தினர்களுக்கு ஒரு நொடி கூட தங்களை கவனிக்கவில்லை என நினைக்க கூடாது என இத்தனை செலவுகளாம். கார் வாடகைக்கு மட்டும் ச்ய்னார் 250 கோடி வரை செலவு செய்திருப்பதாக மும்பை வட்டாரங்களில் கிசுகிசுக்கிறார்கள்.

அமெரிக்க அதிபருக்குப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் அம்பானி வீட்டு திருமணத்தில் கை நனைக்க இருக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களின் நடனம் என உதய்பூர் வேற லெவலில் களை கட்டப் போகிறது.

உதய்பூரில் திருமணத்துக்கு முந்தைய நிகழ்வுகள் முடிந்த பிறகு மும்பையில் வரும் 12-ம் தேதி அம்பானியின் பிரமாண்ட அண்டிலா வீட்டிலேயே இஷா, ஆனந்த் பிரமல் திருமண நிகழ்வு நடைபெற இருக்கிறதாம். திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். அதற்குத் தான் இந்த பிரமாண்ட ரிசப்ஷன் நிகழ்சிகளாம்.

Read more at: https://tamil.goodreturns.in/news/2018/12/08/on-her-daughters-function-ambani-booked-1000-audi-jaguar-benz-cars/articlecontent-pf67773-013182.html

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பணம் 10 ம் செய்யும்  பணக்காரன் 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கோவிலில் சிம்பிளா ஒரு 50 பேரை வைச்சு கல்யாணத்தைச் செய்திட்டு.. இந்தப் பெருந்தொகை செலவுத் தொகையை.. இந்தியாவில்.. குப்பங்களில் வாழும் மக்களுக்கு ஒரு உருப்படியான இருப்பிடம் கட்டிக் கொடுக்க தந்திருந்தால்... அது நாட்டுப் பற்றாகவும்.. நல்ல திருமண அன்பளிப்பாகவும் இருந்திருக்கும்.

அம்பானிக்கு கூட அதுக்கு மனசு வரேல்ல. ஆனால்.. பில்கேட்ஸ் போன்றவர்கள்.. இந்தியாவில் வறுமை ஒழிக்க சிறுக என்றாவது பங்களிப்பது உண்மையில்.. பாராட்டத்தக்கது. 🙄

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, nedukkalapoovan said:

ஒரு கோவிலில் சிம்பிளா ஒரு 50 பேரை வைச்சு கல்யாணத்தைச் செய்திட்டு.. இந்தப் பெருந்தொகை செலவுத் தொகையை.. இந்தியாவில்.. குப்பங்களில் வாழும் மக்களுக்கு ஒரு உருப்படியான இருப்பிடம் கட்டிக் கொடுக்க தந்திருந்தால்... அது நாட்டுப் பற்றாகவும்.. நல்ல திருமண அன்பளிப்பாகவும் இருந்திருக்கும்.

அம்பானிக்கு கூட அதுக்கு மனசு வரேல்ல. ஆனால்.. பில்கேட்ஸ் போன்றவர்கள்.. இந்தியாவில் வறுமை ஒழிக்க சிறுக என்றாவது பங்களிப்பது உண்மையில்.. பாராட்டத்தக்கது. 🙄

இந்தியாவில் கக்கூஸ் கட்டிக் கொடுக்கும் பில் கேட்ஸ் எங்கே... இந்த பீலா பணக்காரர்கள் எங்கே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பிடியான புளிச்சல் ஏவறை பந்தாக்களை பாக்க .....எங்கடை சனத்தின்ரை கெலிகொப்பர் சாமத்திய விட்டு கொண்டாட்டங்களும் அலையலையாய் வந்து போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

எவரது ஆடம்பரச் செலவுகளையும் விமர்சிக்கவேண்டிய தேவை எமக்கில்லை.

தமிழர்கள் புலத்தில் செய்யாத வேலைகளா? 

அம்பானியின் நாட்டுக்கொரு அரசாங்கம் இருக்கிறது. சாதாரண நாளாந்த வாழ்க்கைச் சுமைகளைத்தவிர இந்தியர்களுக்கு வேறு பிரச்சனைகள் இல்லை. அப்படியிருந்தால்க் கூட இந்திய அரசு அடிப்பதை அடித்து, மீதியில் ஏதோ சில உதவிகளையாவது செய்யும்.

ஆனால், தாயகத் தமிழருக்கு? யுத்தம் சப்பித்துப்பிய வாழ்வு, இழக்கப்பட்ட உறவுகள், உதவுவோர் இல்லாத வறுமை, தாயக விடுதலைக்குப் போராடியதற்கு அரசாலும் அதே தமிழர்களாலும் ஒதுக்கப்பட்டு வாழும் அவமானம். ஆனால் இவை எதுவுமே புலத்திலுள்ளவர்களுக்குத் தெரிவதில்லை. கலியாணவீடு, சாமத்தியவீடு, 50 ஆவது பிறந்தநாள், 60 ஆவது பிறந்தநாள் என்று அட்டகாசமாகத்தான் செய்கிறோம். ஹிலரியையும், பியோன்ஸேயையும் கூப்பிடுகிறோமோ இல்லையோ, எமது சக்திக்குற்பட்ட குப்புசாமியையோ அல்லது கந்தசாமியையோ கூப்பிடுகிறோம். பணத்தை கடனட்டை திருடியாவது செலவு செய்கிறோம். இதெல்லாம் செய்யும்போது அட, எமது சொந்தங்களுக்கு அனுப்பியிருக்கலாமே என்று யாருமே சிந்திப்பதில்லை.

அப்படியிருக்க, அம்பானியை ஏன் நோவான்?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ragunathan said:

எவரது ஆடம்பரச் செலவுகளையும் விமர்சிக்கவேண்டிய தேவை எமக்கில்லை.

தமிழர்கள் புலத்தில் செய்யாத வேலைகளா? 

அம்பானியின் நாட்டுக்கொரு அரசாங்கம் இருக்கிறது. சாதாரண நாளாந்த வாழ்க்கைச் சுமைகளைத்தவிர இந்தியர்களுக்கு வேறு பிரச்சனைகள் இல்லை. அப்படியிருந்தால்க் கூட இந்திய அரசு அடிப்பதை அடித்து, மீதியில் ஏதோ சில உதவிகளையாவது செய்யும்.

ஆனால், தாயகத் தமிழருக்கு? யுத்தம் சப்பித்துப்பிய வாழ்வு, இழக்கப்பட்ட உறவுகள், உதவுவோர் இல்லாத வறுமை, தாயக விடுதலைக்குப் போராடியதற்கு அரசாலும் அதே தமிழர்களாலும் ஒதுக்கப்பட்டு வாழும் அவமானம். ஆனால் இவை எதுவுமே புலத்திலுள்ளவர்களுக்குத் தெரிவதில்லை. கலியாணவீடு, சாமத்தியவீடு, 50 ஆவது பிறந்தநாள், 60 ஆவது பிறந்தநாள் என்று அட்டகாசமாகத்தான் செய்கிறோம். ஹிலரியையும், பியோன்ஸேயையும் கூப்பிடுகிறோமோ இல்லையோ, எமது சக்திக்குற்பட்ட குப்புசாமியையோ அல்லது கந்தசாமியையோ கூப்பிடுகிறோம். பணத்தை கடனட்டை திருடியாவது செலவு செய்கிறோம். இதெல்லாம் செய்யும்போது அட, எமது சொந்தங்களுக்கு அனுப்பியிருக்கலாமே என்று யாருமே சிந்திப்பதில்லை.

அப்படியிருக்க, அம்பானியை ஏன் நோவான்?

👏👏👏

2009 மே வரை இருந்தவர்கள் கூட.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, MEERA said:

 

2009 மே வரை இருந்தவர்கள் கூட.

ம்ம்  அண்மையில் ஓர் வீடியோ பார்த்தன் பாகுபலி ரேஞ்சில் இருந்தது , இன்னொன்று பணத்தை பிறந்த நாளில் வாரி இறைத்துள்ளார்கள் அத்தனையும் நோட்டுக்கள் அவர்கள் அனைவரும் எம்ம தமிழர்களே :35_thinking: 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎10‎/‎2018 at 8:55 AM, தனிக்காட்டு ராஜா said:

பணம் 10 ம் செய்யும்  பணக்காரன் 

நில உச்சவரம்பை நிறைவேற்றிய இந்தியா. பண உச்சவரம்பையும் நிறைவேற்றி இருந்தால் இத்தகைய அளவுக்குமிஞ்சிய ஆடம்பரங்களை மட்டுப்படுத்தி இருக்கலாம். மறுபுறம்... இந்தப் பணக்காரக் கூட்டத்தில் எவருமே குனிந்து வளையமாட்டார்கள் என்பது வெளிப்படை. அதனால் அன்றாடம் காச்சிகளான ஏழை மக்கள் பலருக்கு, கொஞ்சநாளாவது வயிறுநிறைய கஞ்சி குடிக்க வழிஏற்பட்டிருக்கும் என்பதையும் மறுக்க முடியாது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12/17/2018 at 2:03 AM, Maruthankerny said:

 

கலியாணவீட்டு கொண்டாட்டங்களை பாத்தால்.......
மகளை விட தாய்க்காரியின்ரை அட்டகாசம் அமோகமாய் இருக்கெல்லே!
சரி விடுவம்.......
எப்பவும் மோளை விட மாமிமார் அதிரடியாய் கவர்ச்சி காட்டுறது  வழமைதானே...:grin:

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

எப்பவும் மோளை விட மாமிமார் அதிரடியாய் கவர்ச்சி காட்டுறது  வழமைதானே...:grin:

நோட் பண்ண வேண்டியதுதான் இனி மேல் ஆனாலும் மாமி குலாப் ஜாமுன் மாதிரி தான் இருக்குறா

India-Gulab-Jamun.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்டால் இவை போட்டு இருக்கின்ற நகையையும்,😫உடுப்பையும் பார்க்க சவுத் தோல் புரோட்வேயில் வாங்கின மாதிரி இருக்கு😄....அமிதாப்பில் இருந்து ஷாருக்கான் வரைக்கும் கல்யாண வீட்டில் சாப்பாடு பரிமாறினவையாம்💀
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நோட் பண்ண வேண்டியதுதான் இனி மேல் ஆனாலும் மாமி குலாப் ஜாமுன் மாதிரி தான் இருக்குறா

India-Gulab-Jamun.jpg

 

தம்பி! கண்டது கிண்டது எல்லாத்தையும் நோட் பண்ணி..... கடைசியிலை நாறாமல் இருக்க வேணும் ராசா. எல்லா சூட்சுமங்களும் எல்லாருக்கும் சரிவாறேல்லை தெரியுமோ? :grin:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

தம்பி! கண்டது கிண்டது எல்லாத்தையும் நோட் பண்ணி..... கடைசியிலை நாறாமல் இருக்க வேணும் ராசா. எல்லா சூட்சுமங்களும் எல்லாருக்கும் சரிவாறேல்லை தெரியுமோ? :grin:

ஏதேனும் அனுபவம் ஒன்றைப்பகிர்வது :104_point_left::27_sunglasses:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.