Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான்கு மங்கைகள் அமைத்த குதிரை . .👌

Screenshot-2020-11-04-15-35-43-406-org-m

பஞ்சவர்ணஸ்வரர் -  உறையூர்

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நான்கு மங்கைகள் அமைத்த குதிரை . .👌

Screenshot-2020-11-04-15-35-43-406-org-m

பஞ்சவர்ணஸ்வரர் -  உறையூர்

நான்கு குதிரைகள் இணைந்து ஐந்தாவதைப் பிரசவித்துள்ளன......அபாரம்.....!  🐴

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிற்பத்திற்குள் சிற்பம் .👌

IMG-20201110-114351.jpg

 பெரிய நாயகி அம்மன் கோயில் - தேவிகாபுரம்

டிஸ்கி :

தும்பிக்கை இரண்டும்  பெண்ணின் கால்கள் என்பது மட்டும் தெரிகிறது  . . மிகுதி .?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பல பெண்கள் சேர்ந்தமைத்த யானை மீது வில் +மலரம்புடன் மன்மதன் ..👍

Screenshot-2020-11-17-12-26-12-937-org-m

               திருக்குறுங்குடி

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Gros Plan De Shiva Avatar Maha Sadashiva Murthy Avec Vingt-cinq Têtes.  Façade De South Gopuram Au Temple Meenakshi. Banque D'Images Et Photos  Libres De Droits. Image 64039471.

கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ்க.....பரமன்,பரந்தாமன் & பார்வதி.....!   💐

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பல கிளிகள் சேர்ந்தமைத்த குதிரை.👌

Screenshot-2020-11-22-13-23-27-246-org-mதேவிகாபுரம் - அம்மன் கோயில்.👍

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

No photo description available.

பிரசவ வலியால் துடிக்கிறது ஒரு பெண் யானை. அருகே மூத்த யானைகள் ஆதரவாக நிற்கின்றன. ஒரு யானை தன்னுடைய துதிக்கையால் இடுப்பை அழுத்திப் பிடித்து அரவணைக்கின்றது, மற்றொன்று வாலை தூக்கி பிடித்து குட்டியானை வெளிவர உதவுகிறது. மற்ற யானைகள் பெண் யானைக்கு ஆதரவாக நிற்கின்றன.குட்டியானை உலகை காண ஆவலோடு வெளி வருகின்றது.
 
இது போன்ற காட்சிகளை NATIONAL GEOGRAPHIC சேனலிலும்,DISCOVERY சேனலிலும் பார்த்து பரவசம் அடையும் நாம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கோவில்களில் நம் முன்னோர்கள் செதுக்கி வைத்துள்ளதை எப்பொழுது பார்த்து ரசிக்க போகிறோம்... எப்படி பாதுகாக்கப் போகிறோம்......
( கீழ்வேளுர் கேடிலியப்பர் ஆலயம்..)
 
நன்றி... K Govinda Rajan. 
  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20220206-214557.jpg

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கல் மரத்தில் ஓர் குருவி கூடு கட்டி வாழ்ந்ததாம் ..👌

IMG-20220318-201354.jpg

IMG-20220318-201332.jpg

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புயல் அடித்தால் ஒலிக்கும் (.?)

IMG-20220410-144306.jpg

  • Like 2
  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

No photo description available.

6000 ஆண்டுகளுக்கு முன்பே... கருத்தரித்தல் முறையை, கண்டறிந்த தமிழன்.

தமிழ்நாட்டின்...  வரமூர்த்தீஸ்வரர் கோயிலின் சுவர்களில் உள்ள கல் சிற்பங்கள் 
மனிதனின் கருத்தரித்தல் மற்றும் பிறப்பு செயல்முறையை சித்தரிக்கின்றன.

கர்ப்பத்தின் வெவ்வேறு நிலைகள் யாரையும் ஆச்சரியப்படுத்தவில்லை என்றால், 
கருத்தரித்தல் சித்தரிப்பு வெறுமனே சிந்திக்க முடியாதது. இந்த செல்கள் 
கண்டு பிடிக்கப்படுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, 
அல்ட்ராசவுண்ட் மற்றும் நுண்ணோக்கிக்கு முன், ஒரு பெண்ணின் வயிற்றில் 
செல்கள் எவ்வாறு சந்திக்கின்றன, ஒன்றிணைகின்றன மற்றும் வளர்கின்றன 
என்பது பற்றிய விரிவான செயல்முறை 6000 ஆண்டுகள் பழமையான கோயிலில் செதுக்கப்பட்டுள்ளது.

ALPHA

Posted
54 minutes ago, தமிழ் சிறி said:

அல்ட்ராசவுண்ட் மற்றும் நுண்ணோக்கிக்கு முன், ஒரு பெண்ணின் வயிற்றில் 
செல்கள் எவ்வாறு சந்திக்கின்றன, ஒன்றிணைகின்றன மற்றும் வளர்கின்றன 
என்பது பற்றிய விரிவான செயல்முறை 6000 ஆண்டுகள் பழமையான கோயிலில் செதுக்கப்பட்டுள்ளது.

ALPHA

முற்றிலும் தவறான தகவல். 

கீழடி மக்கள் வாழ்ந்த இடம் 2700 ஆண்டுகள் பழமையானது. அக் காலத்திலேயே கோயில்கள் இருக்கவில்லை. 6000 ஆண்டுக்கு முன் எப்படி ? 😂

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த "6000 ஆண்டுகள் முன்பு தமிழனுக்குத் தெரிந்த கருக்கட்டல் முறை" பற்றிப் பார்க்கலாம்:

MyIndiaMyGlory என்ற ஒரு இணையத்தளம். மோடி ரீமின் "கோமிய விஞ்ஞானம்" உட்பட பல ஜோக்குகளை சீரியசாக சிரிக்காமலே பிரசுரித்து வரும் ஒரு தளம். "பிரிட்டிஷ் காரன் எங்களைப் பாம்பாட்டி நாடு என்றான், இந்தா பார் எவ்வளவு முன்னேற்றமாக இருந்திருக்கிறோம்?" என்பதே இந்த கோமிய இணையத் தளத்தின் மையக் குமுறல். அதன் ஒரு பகுதி தான் இந்த பாம்பு சந்திரனை விழுங்கும் சிற்பத்தை, " விந்து முட்டை இணையும்" கருக்கட்டல் சிற்பம் என்று 4 ஆண்டுகள் முன்பே எழுதியிருக்கிறார்கள். அது இப்போது தான் முகநூல் வழியாக யாழுக்கு  வந்திருக்கிறது.

இன்னொரு பகிடி: அந்த தளத்தில் "தமிழனின் கண்டு பிடிப்பு" என்று கூட அவர்கள் சிலாகிக்கவில்லை, சோழர்கள் காலத்தில் ஏற்கனவே இருந்த ஆலயம் என்பதோடு நிறுத்திக் கொண்டார்கள். ஆனால், தமிழுணர்வாளர்கள் மிகுதியைச் சேர்த்து, சோழர் காலத்திற்கு இன்னொரு 5000 ஆண்டுகளையும் கூட்டி விட்டார்கள்.

வாசித்துச், சிரித்துக் கடந்து போங்கள்!  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/5/2023 at 12:44, இணையவன் said:

முற்றிலும் தவறான தகவல். 

கீழடி மக்கள் வாழ்ந்த இடம் 2700 ஆண்டுகள் பழமையானது. அக் காலத்திலேயே கோயில்கள் இருக்கவில்லை. 6000 ஆண்டுக்கு முன் எப்படி ? 😂

ALPHA  என்ற வெள்ளைக்காரன், இங்கிலீசிலை எழுதி இருந்ததை பார்த்து... 😁
வெள்ளைகார  ஆட்கள் பொய் சொல்ல மாட்டினம் என்ற நினைப்பிலை, 😂
அவனை நம்பி பதிந்து விட்டேன். 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, தமிழ் சிறி said:

ALPHA  என்ற வெள்ளைக்காரன், இங்கிலீசிலை எழுதி இருந்ததை பார்த்து... 😁
வெள்ளைகார  ஆட்கள் பொய் சொல்ல மாட்டினம் என்ற நினைப்பிலை, 😂
அவனை நம்பி பதிந்து விட்டேன். 🤣

செய்தி பொய்யாக இருக்கட்டும் . அது இரண்டாம் பட்சம்.

ஆனால் இலங்கையில்  சிங்களவர்கள் இந்த நாடு எமக்கே சொந்தம் என கூறி தமிழர் அடையாளங்களை அழித்தொழித்து,அத்துமீறல் குடியேற்றங்களை நடத்தி,தேவையே இல்லாத இடங்களில் விகாரைகளையும் அமைத்து,போர்க்குற்ற அடையாளங்களையே அழித்துக்கொண்டிருக்கும் போது எவ்வித கருத்துக்களோ விமர்சனங்களோ தெரிவிக்காதவர்கள்...... தமிழர்,தமிழின ஆதாரங்கள் என வரும் போது முதலாம் ஆட்களாக வந்து மறுப்பு தெரிவித்து நக்கல் அடிக்கும் போதுதான் கொஞ்சம் நெருடலாக இருக்கின்றது.:rolling_on_the_floor_laughing:

திருக்குறள் தப்பி பிழைத்தால் சந்தோசம். :face_with_tears_of_joy:

Posted
11 minutes ago, குமாரசாமி said:

தமிழர்,தமிழின ஆதாரங்கள் என வரும் போது முதலாம் ஆட்களாக வந்து மறுப்பு தெரிவித்து நக்கல் அடிக்கும் போதுதான் கொஞ்சம் நெருடலாக இருக்கின்றது.:rolling_on_the_floor_laughing:

திருக்குறள் தப்பி பிழைத்தால் சந்தோசம். :face_with_tears_of_joy:

சின்ன வித்தியாசம்தான். எதிரி புனைவு மகாவம்சத்தைப் பலப்படுத்த தொல்லியல் ஆராதங்களைத் தேடிக்கொண்டிருக்கிறான். நாங்கள் எமது வரலாற்றைப் புனைவுக் கதைகளால் சோடிக்க முயல்கிறோம். 

தனிப்பட்ட முறையில் நான் தெளிவாக இருக்கிறேன். எமது அரசியல்வாதிகள் பயணிக்கும் பாதை வேறு. மக்கள் மௌனமாக இருக்கிறார்கள். இடையில் போட்டிக்குச் சிலை வைத்து விளையாடுவது, கடையடைப்புக்கு அழைப்பது, ஜெனீவா வலம் வருதல், அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி இடையிடையே உணர்ச்சிவசப்படுவது, தீர்வுத் திட்டம், 13, எல்லாமே கண்ணாமூச்சு விளையாட்டுகள். இதற்குள் இந்துத்துவா சிவபூமி என்று தேவையில்லாத உபாதைகள். இவை வெளிநாட்டில் உள்ள சிலருக்கு உற்சாகத்தைக் கொடுக்கலாம். எனக்கு இல்லை. 

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, இணையவன் said:

நீங்கள் எழுதிய விடயங்களில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனால் இவ்வளவு தீர்க்கமாக எழுதும் உங்களுக்கு ஈழத்தமிழினம்/ தமிழ் அரசியல்வாதிகள் இனிவரும் காலங்களில் எப்படியான முன்னெடுப்பை எடுக்க வேணும் என ஆலோசனை கூறுவீர்கள்?

Posted
2 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் எழுதிய விடயங்களில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனால் இவ்வளவு தீர்க்கமாக எழுதும் உங்களுக்கு ஈழத்தமிழினம்/ தமிழ் அரசியல்வாதிகள் இனிவரும் காலங்களில் எப்படியான முன்னெடுப்பை எடுக்க வேணும் என ஆலோசனை கூறுவீர்கள்?

தற்போதைய நிலையில் ஈழத் தமிழருக்குத் தீர்வு ஒன்றை யாரும் (தமிழ் அரசியல் வாதிகள் அல்ல) பெற்றுத் தருவதற்கு அவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை. தீர்வைப் பரிசாகத் தர வேண்டிய நிலை யாருக்கும் தற்போது கிடையாது. இன்றைய நிலையில் நாம் செய்யக் கூடியது ஒன்று மட்டும்தான். பொருளாதார அறிவியல் நீதியாக எம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதன் மூலம் தமிழினத்தை இலங்கையில் தக்கவைப்பது மட்டுமே. இன்னும் சொல்லப்போனால் ஈழத் தமிழரைச் சூழ்ந்துள்ள தடைகளிலிருந்து வெளியேற வேண்டுமானால் மதம் சாராத பகுத்தறிவுள்ள சமத்துவமான பொருளாதார வளர்ச்சியுள்ள சமுதாயத்தையே எதிர்பார்க்கிறேன். இவ்வாறான சமுதாயத்தால் தான் அரசியல்வாதிகளைக் கட்டுப்படுத்த முடியும்.

இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 minutes ago, இணையவன் said:

ஈழத்தமிழருக்கான இன்றைய தேவை, சுஜநலமில்லாத, உறுதி, துணிச்சல் மிக்க தலைமை.

இரண்டாம் யுத்த காலத்தில் பிரிட்டனுக்கு வின்ஸ்டன் சேர்ச்சிலும், விடுதலைப் போராட்டத்தில் இந்தியர்களுக்கு காந்தியும், தென்னாபிரிக்கர்களுக்கு மண்டேலாவும் வழங்கியது தான் சுஜநலமற்ற தலைமைத்துவம். 

இன்றைய தலைவர்களில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதற்கு உதாரணம், தையிட்டியில் மக்கள் இல்லாத போராட்டம்...

Edited by Nathamuni
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, இணையவன் said:

அருமை...வாசிக்க நல்லாய்த்தான் இருக்கு. நீங்கள் சொல்லும் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு தலைமை/கட்டுக்கோப்பு வேண்டுமல்லவா?
அதை யார் செய்வது?

பொருளாதார  பிரச்சனை இனப்பிரச்சனை தீர்வுக்கு தடையல்ல. பொருளாதார பிரச்சனையால் இனப்பிரச்சனை உருவாகவுமில்லை.சரி தமிழர்களின் பொருளாதார பிரச்சனைக்கு எப்படி உதவலாம் என எதிர்பார்க்கின்றீர்கள்? பல விடயங்கள் யாழ்களத்திலையே ஆரம்பித்து தோல்வி நிலையில் உள்ளன.

Posted
5 minutes ago, Nathamuni said:

ஈழத்தமிழருக்கான இன்றைய தேவை, சுஜநலமில்லாத, உறுதி, துணிச்சல் மிக்க தலைமை.

இரண்டாம் யுத்த காலத்தில் பிரிட்டனுக்கு வின்ஸ்டன் சேர்ச்சிலும், விடுதலைப் போராட்டத்தில் இந்தியர்களுக்கு காந்தியும், தென்னாபிரிக்கர்களுக்கு மண்டேலாவும் வழங்கியது தான் சுஜநலமற்ற தலைமைத்துவம். 

இன்றைய தலைவர்களில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதற்கு உதாரணம், தையிட்டியில் மக்கள் இல்லாத போராட்டம்...

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் இது எப்போது சாத்தியமாகும் என்பது நிச்சயமல்ல.

நான் குறிப்பிட்டது ஓரளவேனும் எம்மால் துளித் துளியாகவேனும் செய்யக் கூடியது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, இணையவன் said:

தற்போதைய நிலையில் ஈழத் தமிழருக்குத் தீர்வு ஒன்றை யாரும் (தமிழ் அரசியல் வாதிகள் அல்ல) பெற்றுத் தருவதற்கு அவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை. தீர்வைப் பரிசாகத் தர வேண்டிய நிலை யாருக்கும் தற்போது கிடையாது. இன்றைய நிலையில் நாம் செய்யக் கூடியது ஒன்று மட்டும்தான். பொருளாதார அறிவியல் நீதியாக எம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதன் மூலம் தமிழினத்தை இலங்கையில் தக்கவைப்பது மட்டுமே. இன்னும் சொல்லப்போனால் ஈழத் தமிழரைச் சூழ்ந்துள்ள தடைகளிலிருந்து வெளியேற வேண்டுமானால் மதம் சாராத பகுத்தறிவுள்ள சமத்துவமான பொருளாதார வளர்ச்சியுள்ள சமுதாயத்தையே எதிர்பார்க்கிறேன். இவ்வாறான சமுதாயத்தால் தான் அரசியல்வாதிகளைக் கட்டுப்படுத்த முடியும்.

இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.

எனது கருத்தும் இதுவே, என்னால் முடிந்த சிறிய அளவில் இதை நடைமுறை படுத்திக்கொண்டிருக்கின்றேன், அவர்கள் இன்னும் பலருக்கு செய்வார்கள், செய்து கொண்டுமிருக்கின்றார்கள்

4 minutes ago, இணையவன் said:

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் இது எப்போது சாத்தியமாகும் என்பது நிச்சயமல்ல.

நான் குறிப்பிட்டது ஓரளவேனும் எம்மால் துளித் துளியாகவேனும் செய்யக் கூடியது.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, Nathamuni said:

இன்றைய தலைவர்களில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதற்கு உதாரணம், தையிட்டியில் மக்கள் இல்லாத போராட்டம்...

தையிட்டியில் தான் கூட்டமில்லை. ஆனால் வெசாக் பண்டிகையில் காற்று புக இடைவெளி இல்லையாம்.:rolling_on_the_floor_laughing:

Posted
4 minutes ago, குமாரசாமி said:

அருமை...வாசிக்க நல்லாய்த்தான் இருக்கு. நீங்கள் சொல்லும் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு தலைமை/கட்டுக்கோப்பு வேண்டுமல்லவா?
அதை யார் செய்வது?

பொருளாதார  பிரச்சனை இனப்பிரச்சனை தீர்வுக்கு தடையல்ல. பொருளாதார பிரச்சனையால் இனப்பிரச்சனை உருவாகவுமில்லை.சரி தமிழர்களின் பொருளாதார பிரச்சனைக்கு எப்படி உதவலாம் என எதிர்பார்க்கின்றீர்கள்? பல விடயங்கள் யாழ்களத்திலையே ஆரம்பித்து தோல்வி நிலையில் உள்ளன.

அமைப்பு ஒன்றின் மூலம் அதிக தூரம் போக முடியாது என்பதால்தான் தோல்வி கண்டன.

ஒரு உதாரணம். யாழில் ஒவ்வொரு கிராமத்திலும் மரங்களுக்குக் கீழ் கல்லாக இருந்த கடவுள்கள் புலம்பெயர்ந்த தமிழர்களின் பணத்தால் கோபுரங்களின்கீழ் குடியேற்றப்பட்டுத் தேர் இழத்துத் திருவிழா காண்கின்றன. திருவிழா என்பது மதிப்பிழந்து தேர் இழுக்கவே மக்கள் போதாமல் உள்ள நிலமைக்கு வந்துள்ளது. 

இந்தப் பணத்தை வேறு வகையாகச் செலவழிக்கலாம் அல்லவா ? உதாரணம் :
- வீடுகளில் தனிப்பட்ட மழை நீர் சேகரிப்பு 
- இளைஞர்களுக்குப் பொழது போக்கும் வசதிகளை உருவாக்குதல்
- இயற்கை எரிவாயு உருவாக்குதல் போன்ற சிறு தொழில்நுட்ப அறிவூட்டல்கள்
- காணி வசதி உள்ளவர்கள் தேனீ வளர்த்தல் 

இப்படி ஏராளம் உண்டு.
 
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
31 minutes ago, இணையவன் said:

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் இது எப்போது சாத்தியமாகும் என்பது நிச்சயமல்ல.

நான் குறிப்பிட்டது ஓரளவேனும் எம்மால் துளித் துளியாகவேனும் செய்யக் கூடியது.

பொருளாதாரம் இருந்தாலும், அதிகாரம் நம்மிடம் இல்லை.

எமது மோசமான தலைமைத்துவத்துக்கு உதாரணம்: தையிட்டி விவகாரத்தில், சித்தார்த்தன் கருத்து. வித்தவரில் பிழை பிடிக்கிறார்.

பிரதேச சபையிடம் அனுமதி கேட்கப்படவும் இல்லை, கொடுக்கப்படவும் இல்லை. அதுவே இலங்கை உச்ச நீதிமன்று வரை போகக் கூடிய சட்ட நிலை.

இராணுவம் முதல், நீதித்துறை வரை சட்டமீறலில்....என்று உலகத்துக்கு புரிய வைக்கலாமே.... 

பிரிட்டனில், அரச திணைக்களங்களில், மிகவும் பலமிக்கதாக சொல்லப்படுவது, உள்ளூர், கட்டட அனுமதி துறை. Regional Planning Permission.

கட்டு என்றால் கட்டு, இடி எண்டால் இடி தான். யாரும் மூக்கை நுழைக்க முடியாது.

Edited by Nathamuni
  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.