Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த! – சபாநாயகர் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த! – சபாநாயகர் அறிவிப்பு

Prime-minister-Mahinda-720x450.jpg

எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வுகளின் போதே சபாநாயகர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

எனினும், சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி பொதுஜன பெரமுனவில் இணைந்தவருக்கும் அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுக்கொண்ட தரப்பிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன வாதிட்டு வருகின்றன.

அத்தோடு, நாடாளுமன்ற தெரிவுக் குழுவை அமைத்து இதற்கு தீர்வுகாண வேண்டுமென்றும் அறிவித்துள்ளன.

 

 

http://athavannews.com/எதிர்க்கட்சி-தலைவராக-மஹ-2/

 

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவுநாளும் மகிந்தவை  சாதாரண பாரளுமன்ற உறுப்பினர் என்றே சுமத்திரன் அழைத்து வந்தார்.இப்ப சாதாரண பாராளுமன்ற உறுப்பினராய் இருந்த மகிந்தவை எதிர்க்கட்சித் தலைவாராக்கி விட்டு எதிர்க்கட்சித்தலைவராய் இருந்த சம்பந்தரை சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக்கி விட்டிருக்கினம்.இதுதான் மென்வலு ராஜதந்திரம்.இதைத்தான் சொந்தக் காசில் சூனியம் வைக்கிறது எண்டு னசொல்லிறது.எதிர்கட்சித்தலைவராக இருந்தே ஒண்ணும் கிழிக்கவில்லை .சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக இருந்து என்ன பண்ணப் போகினம்.சிங்களவர்கள் தங்களுக்குள் அடிபட்டால் அதில் எங்கட நலனை முன்னிறுத்தி அரியல் செய்யாமல் சிறிலங்காவின் ஜனநாயகத்ததைக் காப்பாற்ற கூட்டமைப்பின் நிலைமை நகைப்புக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடையளுக்கு தமிலரசுவுக்கு தீர்வோ முக்கியம் காசுதானே முக்கியம்  எப்படியும் அடுத்தமுறையும் தாங்கதான் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கீரைக்கடைக்கு எதிர்கடை பெரிதாய் இல்லை எனும் இறுமாப்பு வேறை .

  • கருத்துக்கள உறவுகள்

தங்களைக் கவுத்துப் போட்டினம் எண்டு, மகிந்தா, மைத்திரி கோஸ்ட்டிக்கு கூட்டமைப்பில கோபம்.

முதலில், கூட்டமைப்பு கோரிக்கையான  சிறைக்கைதிகள் விடுதலையினை மறுத்தார் மைத்திரி.

பின்னர் எதிர்க் கட்சி தலைவர் பதவிக்கு ஆப்பு வைக்கிறார்களாம்.

மகிந்தரும், 45 எம்பிமாரும் தாமரை மொட்டு கட்சி தாவீட்டினமே... சுதந்திரக் கட்சில இல்லையே என்று சொல்லப் பட்டத்தும், போக்கிலித்தனமா, பசில்.... 'ஆ...ஆ .... விண்ணப்பம் கிடைத்தது.... இன்னும் பதிவோ, முடிவோ எடுக்கேல்ல என்று சொல்லிப் போட்டார்.

அநேகமா, மைத்திரி, மகிந்த கூட்டில், அடுத்த 11 மாதத்துக்கு தீர்வு விசயத்தில் ஒன்றும் நடவாது. அதேவேளை மார்ச் மாதம் மனித உரிமை அமைப்பில், இரண்டு வருட தவணை கேட்டவர்கள், மைத்திரியை உச்சத்தில் வைத்துக் கொண்டு என்ன சொல்லுவார்கள் இலங்கை குழுவினர் என்பது சுவாரசியமானது.    
 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

இவ்வளவுநாளும் மகிந்தவை  சாதாரண பாரளுமன்ற உறுப்பினர் என்றே சுமத்திரன் அழைத்து வந்தார்.இப்ப சாதாரண பாராளுமன்ற உறுப்பினராய் இருந்த மகிந்தவை எதிர்க்கட்சித் தலைவாராக்கி விட்டு எதிர்க்கட்சித்தலைவராய் இருந்த சம்பந்தரை சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக்கி விட்டிருக்கினம்.இதுதான் மென்வலு ராஜதந்திரம்.இதைத்தான் சொந்தக் காசில் சூனியம் வைக்கிறது எண்டு னசொல்லிறது.எதிர்கட்சித்தலைவராக இருந்தே ஒண்ணும் கிழிக்கவில்லை .சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக இருந்து என்ன பண்ணப் போகினம்.சிங்களவர்கள் தங்களுக்குள் அடிபட்டால் அதில் எங்கட நலனை முன்னிறுத்தி அரியல் செய்யாமல் சிறிலங்காவின் ஜனநாயகத்ததைக் காப்பாற்ற கூட்டமைப்பின் நிலைமை நகைப்புக்குரியது.

அப்படி  சொல்ல ஏலாது.

ரணில் தோத்திருந்தால், அவர் தான் எதிர்க்கட்சி தலைவர்.... 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

 
மஹிந்த ராஜபக்ஷபடத்தின் காப்புரிமை Buddhika Weerasinghe Image caption மஹிந்த ராஜபக்ஷ

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், சமீபத்திய அரசியல் நிகழ்வுகளில் பிரதமராக நியமிக்கப்பட்டு, பதவி விலக நேர்ந்தவருமான மஹிந்த ராஜபக்ஷ தற்போது நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

இலங்கை அரசியலில் அதிரடித் திருப்பமாக, கடந்த அக்டோபர் 26-ம் தேதி பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க-வை அந்தப் பதவியில் இருந்து அகற்றிவிட்டு தமது எதிர்த் தரப்பில் இருந்துவந்த முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

அதன் பிறகு நடந்த பரபரப்பான அரசியல் நிகழ்வுகளின் முடிவில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ராஜபக்ஷவால் முடியவில்லை. இதையடுத்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார்.

 

இந்நிலையில் இன்று நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்தார் சபாநாயகர் கரு.ஜெயசூர்ய.

இலங்கையில் அக்டோபரில் நடந்த அரசியல் திருப்பத்துக்கு முன்பு இலங்கை சுதந்திரக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்திருந்தன.

இலங்கையின் எதிரெதிரான இரு பெரும் அரசியல் தரப்பும் ஓரணியில் இருந்ததால், 16 எம்.பி.க்களைப் பெற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டணி எதிர்க் கட்சி அந்தஸ்தைப் பெற்றிருந்தது.

அந்தஸ்தைப் பெற்றிருந்தது.

கரு.ஜெயசூர்யபடத்தின் காப்புரிமை Getty Images Image caption சபாநாயகர் கரு.ஜெயசூர்ய

இப்போது ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சியை, பிரதமர் பதவியை கைப்பற்றிவிட்டாலும், அது முன்பு போல ராஜபக்ஷ, மைத்ரிபால ஆகியோர் இடம் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அவர்களுடன் கூட்டணியில் இல்லை. எனவே, அந்தக் கூட்டமைப்பு எதிர்க் கட்சி வரிசையில் உள்ளது.

அரசியல் திருப்பங்களுக்கு முன்பு இந்தக் கூட்டமைப்புக்கு 96 எம்.பி.க்கள் இருந்தனர். அரசியல் குழப்பங்களின்போது இவர்களில் 6 பேர் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டனர்.

எனினும் இந்தத் தரப்புக்கு 90 எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதால் ராஜபக்ஷே-வை எதிர்க் கட்சித் தலைவராக சபாநாயகர் அறிவித்தார். முன்பு எதிர்க்கட்சியாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 16 எம்.பி.க்கள் ஆதரவு இருந்தது.

அவர்களில் வியாழேந்திரன் ராஜபக்ஷ தரப்புக்கு சென்ற நிலையில் 15 எம்.பி.க்கள் மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு

மகிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எதிர்ப்பு வெளியிட்டார்.

''நாடாளுமன்றில் அங்கததுவம் இல்லாத கட்சி ஒன்றின் உறுப்பினர்களை நாடாளுமன்ற அமர்வில் அனுமதிக்கக் கூடாது. ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி நாடாளுமன்ற அங்கத்துவம் கொண்ட கட்சி அல்ல.

எனவே அதன் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட வேண்டும். ஜனாதிபதி, அமைச்சுப் பதவிகளை வகித்தால் அவர் தலைமைத்துவம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பின் ஆளும் கட்சியில் பங்காளி ஆகிறது. எனவே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வழங்க முடியாது.'' என எம்.ஏ.சுமந்திரன் வாதிட்டார்.

இதனைக் கேட்டுக்கொண்டிருந்த சபாநாயகர், இதனை எழுத்துமூலம் அறிவிக்குமாறும், இதுகுறித்து வரும் வெள்ளிக்கிழமை அறிவிப்பதாகவும் கூறியதாக எம்.ஏ.சுமந்திரன் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மிகப்பெரிய கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சியில் முன்பு இருந்து வந்த மஹிந்த ராஜபக்ஷே, கட்சிக்குள் ஆதரவு குறைந்த காலத்தில் பொதுஜன பெரமுன என்ற தனி அரசியல் அமைப்பைத் தொடங்கினார். இப்போது அவர் அந்த அமைப்பின் உறுப்பினராக இருப்பதாலும், அந்தக் கட்சிக்கு போதிய பலம் இல்லை என்பதாலும் அவரை எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்கக் கூடாது என்று நாடாளுமன்றத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் ஆட்சேபனை தெரிவித்தார்.

ஆனால், எதிர்க் கட்சி உறுப்பினர்களின் தேர்வான ராஜபக்ஷவை எதிர்க் கட்சித் தலைவராக அறிவித்தார் சபாநாயகர் கரு.ஜெயசூர்ய.

https://www.bbc.com/tamil/sri-lanka-46602492

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

வரப்போகும் அமைச்சரவையில் கூட்டமைப்பிற்கு எத்தனை அமைச்சுப்பதவிகள் என்று யாருக்காவது தெரியுமா

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு அமைச்சரவை பதவியை ஏற்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தாமரை மொட்டுக் கட்சியில் பகிரங்கமாக இணைந்து, உறுப்புரிமையும் பெற்றுக் கொண்ட, அந்த கட்சிக்காக உள்ளூராட்சி தேர்தல்ல் பிரச்சாரம் செய்து வெற்றியை பகிரங்கமாக கொண்டாடிய மகிந்தா, எதிர்கட்சி தலைவர் பதவிக்காக, சுதந்திரக் கட்சியில் இருப்பதாக சொல்கிறாரா என்பது குறித்து, அரசியலமைப்பு விதிகளின் 99(13) பிரிவின் கீழ் விசாரித்து வெள்ளியன்று அறிவிப்பதாக, சபாநாயகர் தெரிவித்தார்.

ரவூப் கக்கீம், சுமேந்திரன் ஆட்சேபனையை தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியானது.

http://www.dailymirror.lk/article/Status-of-MPs-joining-SLPP-Speaker-to-rule-on-Select-Committee-159949.html

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் மாவை கும்பல்.. முழுப் போர்க்குற்றவாளிகளும் இனப்படுகொலையாளர்களுமான.. மகிந்த.. மைத்திரி.. ரணில்.. சந்திரிகா எல்லாரையும் காப்பாற்றியதோடு மட்டுமன்றி.. இனப்படுகொலை நாடான.. போர்க்குற்ற நாடான.. சொறீலங்காவை.. நீதியை மதிக்கும்.. ஜனநாயகத்தை மதிக்கும் நாடுன்னு.. ஒரு போலி பிம்பத்தை மீண்டும்.. உலக அரங்கில் நிலைநாட்டி.. உலகத் தமிழினத்துக்கும்.. இனப்படுகொலைக்கு ஆளாகி நிற்கும்.. ஈழத்தமிழ் மக்களுக்கும்.. பெரும் வரலாற்றுத் துரோகத்தையே இழைத்துள்ளனர்.

சிங்களவனின் நாடகத்தில்.. மீண்டும் அவன் தமிழர்களை நல்லாவே ஏமாற்றி விட்டான். 🙄

இந்த போலி ஜனநாயகத்தைக் காப்பாற்றவே சம்சும் கும்பல் நாய்படாத பாடாக அலைந்தார்கள்.

மைத்திரியோ, மகிந்தவோ, ரணிலோ, கருவோ, சஜித்தோ, ... அது யாராக இருந்தாலும் அந்த சிங்கள-பௌத்த இனமத வெறியர்கள் / போர்க்குற்றவாதிகள் / பயங்கரவாதிகள் அனைவரும் போலி ஜனநாயகத்தையும் கண்துடைப்பு அரசியலமைப்பையும் காட்டி தமிழினப் படுகொலைகளை தொடரவே செய்வார்கள். ஜனநாயகம் என்றால் என்னவென்று தெரியாத சுயநலப் பேய்களான சம்மந்தன், டக்ளஸ், சுமந்திரன், ஆனந்தசங்கரி, மாவை, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் போன்ற எடுபிடிகள் / ஒட்டுண்ணிகள் இந்த சிங்கள-பௌத்த இனமத வெறியர்களுக்கு / போர்க்குற்றவாதிகளுக்கு  / பயங்கரவாதிகளுக்கு முண்டு கொடுப்பதை நிறுத்தவே மாட்டார்கள்.  நிறுத்தினால் தங்களுக்கு பின்கதவால் கிடைக்கும் ஆதாயங்கள் கிடைக்குமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.