Jump to content
  • 0

அடுத்த வருடத்திலிருந்து எதை தவிர்க்கிறோம்?

ஈழப்பிரியன்

Question

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் புதிய வருடத்திலிருந்து புகைக்கமாட்டேன் தண்ணியடிக்க மாட்டேன் அதை விடுகிறேன் இதை விடுகிறேன் என்று மனதில் படுபவைகளை வெளியே சொல்லாவிட்டாலும் எமது மனதுக்குள் எண்ணுவோம்.

அப்படி எண்ணியிருந்தவை மணிக்கணக்கு நாள்கணக்கு கிழமைக்கணக்கில் போனாலும் மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறிய கதையாகவே முடிந்திருக்கிறது.இதில் வெற்றியடைந்தவரென்று இருந்தாலும் நான் இதுவரை காணவில்லை.

சரி ஆண்கள் மறப்பதற்கென்று நிறைய இருக்கும் போது பெண்கள் எதை எதை விடலாமென்று எண்ணவார்கள்.எனக்கு இதில் எதுவுமே எழுதத் தோன்றவில்லை.

இங்கே யாராவது இப்படி எண்ணியிருக்கிறீர்களா?உங்கள் வெற்றி தோல்வி பற்றி எழுதுங்கள்.

நான் பதின்மவயதில் தண்ணி புகை இரண்டும் பழகி புதுவருடம் வரும் வேளை சபதம் எடுத்து நிறைய தடவை தோற்றுப் போனேன்.
கடைசியில் எதுவித நிர்ப்பந்தமும் இல்லாமல் 87 இல் திடீர் என்று ஒருநாள் தண்ணியை விட்டேன்.புகை பிடித்தலை விட முடியாமல் இருந்தேன்.கடைசியில் அதுவே வினையாகிப் போக  97இல் அதையும் விட்டுவிட்டேன்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/29/2018 at 10:55 PM, குமாரசாமி said:

பென்சனோ இல்லாட்டி பிள்ளையளின்ரை தோளிலை பாரத்தை இறக்கி வைச்சாச்சோ? :grin:

 விசுகரை கனகாலத்துக்கு பிறகு கண்டதில் சந்தோசம்....... :)

பாரம் எதையும் சுமப்பதற்கு அவர்களுக்கு விட்டு வைக்கவில்லை அண்ணா அவர்களுக்கும் சிறகை வளர்த்தாச்சு இனி நாம ???? 

வேலையிலிருந்து மட்டுமே யாழுக்கு வந்த நான் இன்றிலிருந்து கைத்தொலைபேசி மூலம் யாழுக்கு வந்திருக்கின்றேன் இனி அடிக்கடி பார்க்கலாம் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/30/2018 at 3:13 PM, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே நல்ல ஜாலியாக இருப்பதாக முகப்புத்தகம் கூறுகிறது.
போதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்.

உண்மை தான் அண்ணா உங்களது பதில் தலையில் ஒரு குட்டு குட்டி இறங்கியது போலிருந்தது நன்றியண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person சம்பந்தன், சுமந்திரன்...  தலைப்பில்,    "தீர்வு"  வரும் போன்ற...   
விசர்  செய்திகளை,   வாசிக்க  மாட்டேன். 
இது... சத்தியம்....   

சிறி இதிலே தோற்றுப் போனவர்கள் தான் அதிகம்.ஆனபடியால் சத்தியமெல்லாம் பண்ணக் கூடாது.

தீர்வு விடயத்தில்
புலி வருது புலி வருது என்று சொல்ல 
உண்மையிலேயே புலி வந்த கதை மாதிரி
ஒரு நாள் தூக்கத்தால் எழும்பும் போது ஏதாவதொரு தீர்வு பொதி( சொதி) வரலாம்.
ஆனபடியால் சத்தியத்தை வாபஸ் பெற்றிடுங்க.பிறகு சாமி குற்றமாகப் போவுது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனி  கொஞ்சம்  யாலியாக  இருக்கலாம் என்றிருக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த வருடத்தில் இருந்து உண்மை பேசுவதை விடப் போறேன்😧 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ரதி said:

இந்த வருடத்தில் இருந்து உண்மை பேசுவதை விடப் போறேன்😧 

உந்த விசயத்திலை வலுகவனம் தங்கச்சி...
கடைசியிலை உண்மை வெளியிலை வந்திடப்போகுது....tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ரதி said:

இந்த வருடத்தில் இருந்து உண்மை பேசுவதை விடப் போறேன்😧 

இது பச்சைப் பொய் போல இருக்கு.

Posted
5 hours ago, ரதி said:

இந்த வருடத்தில் இருந்து உண்மை பேசுவதை விடப் போறேன்😧 

இந்த பதிலில் இருந்தே ஆரம்பிச்சாச்சு தானே? 😂😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, ஈழப்பிரியன் said:

மடிக்கணனி வாங்கும் போது இலகுவாக இன்ரநெட் இணைப்பு கொடுக்கிற மாதிரி வாங்குங்கள்.

அதெல்லாம்  ஆறுமாதத்துக்கு முன்பே பரிசாக வாங்கியாச்சு.நான்தான் ஒருவித பயத்தில் இதுவரை பாவிக்காமல் வைத்திருந்தன். இப்ப அவசியத்தின் பொருட்டு ஓரிரு நாட்களில் சுமாரா பழகிட்டன். இப்ப அதில்தான் ஓட்டிக் கொண்டு இருக்கிறன்.  நன்றி ஈழப்பிரியன்......!  😁 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் தொடங்கி எங்கு பார்த்தாலும் 
ஆரோக்கியமான உணவு என்ற பேச்சு 

தெரியாமல் தவறை செய்தால் கூட பரவாயில்லை 
எல்லாம் வாசித்ததும் கேட்டும் தெரிந்துகொண்டும் தவறை 
செய்கிறோமே எனும் ஒரு குற்ற உணர்வு வந்திருப்பதால் 

ஆரோக்கியம் அற்ற உணவுகளை தவிர்த்து  
கொஞ்சம் பசியையும் பழக்கி படுத்தி கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.

எமது முன்னோர்களின் எண்ணம் நேர் எதிராக இருக்கிறது 
அவர்கள் பசியையும் ஒரு நோயாகவே பார்த்து இருக்கிறார்கள் 
பசி வரும் முன்பே குறித்த நேரங்களில் உணவு பழம்களை உண்டு ஆரோக்கியமாக 
வாழ்ந்து இருக்கிறாரக்ள். பசியுடன் உண்ணும்போதுதான் நாம் அதிக அளவான 
உணவுகளை வயிற்றினுள் கொட்டி கொள்கிறோம். மற்றது ருசி மிகவும் கேடானது
என்பது அவர்கள் நிலைப்பாடு.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, விசுகு said:

இனி  கொஞ்சம்  யாலியாக  இருக்கலாம் என்றிருக்கின்றேன்

பென்சனோ இல்லாட்டி பிள்ளையளின்ரை தோளிலை பாரத்தை இறக்கி வைச்சாச்சோ? :grin:

 விசுகரை கனகாலத்துக்கு பிறகு கண்டதில் சந்தோசம்....... :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடுத்த வருடத்தில் தாடி மீசையை முற்றாக மழிப்பத்பை தவிர்க்கலாம் என்று நினைக்கின்றேன். ஆனால் அறிஞர் ஆகும் எண்ணம் எல்லாம் கிடையாது🤓

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேசை கணணியை விட்டு மடிக்கணணியை உபயோகிக்க நினைத்திருக்கிறேன்.ஒரே பிரயாணங்களாய் இருக்கு.ஜெர்மனி நூரன்பேர்க்கில் இருந்து சற்றுமுன்தான்  பரிசுக்கு வந்திருக்கிறேன்.......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உடல் எடை குறைவதற்கு உணவைக் குறைக்க வேண்டும் என்று எண்ணியதுதான். ஆனால் முதல் நாளே அது தோல்வியில் முடிந்துவிட்டது.

மற்றப்படி பெண்கள் எதை நினைக்கப் போகின்றார்கள். ???

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2019 புது வருடத்திலிருந்து "பழக்கத்தை" விட்டுவிடப்போகிறேன்..!

பகலில் தூங்குறதை சொன்னேன்..!   vil2_grimace.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்ட களை தொண்டனுக்கும் உண்டு.
சாப்பிட்டுவிட்டு சிறிது தூங்குவது தப்பில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உடல் எடை குறைவதற்கு உணவைக் குறைக்க வேண்டும் என்று எண்ணியதுதான். ஆனால் முதல் நாளே அது தோல்வியில் முடிந்துவிட்டது.

மற்றப்படி பெண்கள் எதை நினைக்கப் போகின்றார்கள். ???

உங்கள் உடல் உயரத்துக்கு ஏற்ற எடையை வைத்திருக்கப் பாருங்கள்.

7 hours ago, tharsan1985 said:

தர்சன் நீங்க என்ன பண்ணப் பேறீங்க?

Posted

கடந்த சில வருடங்களாக கருத்துக்கள பொறுப்பாளராக இருப்பதால் என் அரசியல் கருத்துகளை, விமர்சனங்களை யாழில் எழுதாமல் தவிர்க்க வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கேற்ப அநேகமான நேரங்களில் தவிர்த்து இருந்தேன்.

2019 இல் அந்த முடிவுக்கு விடுதலை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிழலி said:

கடந்த சில வருடங்களாக கருத்துக்கள பொறுப்பாளராக இருப்பதால் என் அரசியல் கருத்துகளை, விமர்சனங்களை யாழில் எழுதாமல் தவிர்க்க வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கேற்ப அநேகமான நேரங்களில் தவிர்த்து இருந்தேன்.

2019 இல் அந்த முடிவுக்கு விடுதலை.

நல்லதொரு முடிவு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உடல் எடை குறைவதற்கு உணவைக் குறைக்க வேண்டும் என்று எண்ணியதுதான். ஆனால் முதல் நாளே அது தோல்வியில் முடிந்துவிட்டது.

மற்றப்படி பெண்கள் எதை நினைக்கப் போகின்றார்கள். ???

ஏலாத விசயத்தை ஒரு நாளும் ட்ரை பண்ணக்கூடாது கண்டியளோ.....பிறகு அதுக்கெண்டே தனியாய் பிரசர் வந்திடும்.....:grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, விசுகு said:

இனி  கொஞ்சம்  யாலியாக  இருக்கலாம் என்றிருக்கின்றேன்

ஏற்கனவே நல்ல ஜாலியாக இருப்பதாக முகப்புத்தகம் கூறுகிறது.
போதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்.

16 hours ago, கிருபன் said:

அடுத்த வருடத்தில் தாடி மீசையை முற்றாக மழிப்பத்பை தவிர்க்கலாம் என்று நினைக்கின்றேன். ஆனால் அறிஞர் ஆகும் எண்ணம் எல்லாம் கிடையாது🤓

மறக்காமல் நல்ல கறுப்பு வர்ணம் வாங்கி வைத்திருக்கவும்.இல்லாவிட்டால் உங்களையே உங்களால் பார்க்க முடியாது.
எதுக்கும் வீட்டிலுள்ளோர்களிடம் உங்கள் விருப்பத்தை முதலே சொல்லிப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, suvy said:

மேசை கணணியை விட்டு மடிக்கணணியை உபயோகிக்க நினைத்திருக்கிறேன்.ஒரே பிரயாணங்களாய் இருக்கு.ஜெர்மனி நூரன்பேர்க்கில் இருந்து சற்றுமுன்தான்  பரிசுக்கு வந்திருக்கிறேன்.......!  😁

மடிக்கணனி வாங்கும் போது இலகுவாக இன்ரநெட் இணைப்பு கொடுக்கிற மாதிரி வாங்குங்கள்.

16 hours ago, குமாரசாமி said:

பென்சனோ இல்லாட்டி பிள்ளையளின்ரை தோளிலை பாரத்தை இறக்கி வைச்சாச்சோ? :grin:

 விசுகரை கனகாலத்துக்கு பிறகு கண்டதில் சந்தோசம்....... :)

ஒரு முதலாளி எப்படி ஓய்வு பெறுவது?

Posted
5 hours ago, ஈழப்பிரியன் said:

தர்சன் நீங்க என்ன பண்ணப் பேறீங்க?

1. எதுக்கு எடுத்தாலும் ஓம் என்று சொல்லாமல் இல்லை என்றும் சொல்ல பழக வேண்டும்.

2. வேலையில் அடுத்த கடடத்திற்கு செல்ல வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

மறக்காமல் நல்ல கறுப்பு வர்ணம் வாங்கி வைத்திருக்கவும்.இல்லாவிட்டால் உங்களையே உங்களால் பார்க்க முடியாது.
எதுக்கும் வீட்டிலுள்ளோர்களிடம் உங்கள் விருப்பத்தை முதலே சொல்லிப் பாருங்கள்.

நாம கவரிமான் பரம்பரை. வர்ணம் எல்லாம் பூசவேண்டியதில்லை😎

டோனி கூட salt & pepper மாதிரி தாடி வைத்திருக்கும்போது நாம அஜித் லெவலில் வைத்திருக்கலாம்தானே🥳

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.