Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர்.-சுமந்திரன்

Featured Replies

37 minutes ago, Rajesh said:

விடுதலைப் புலிகள் தங்கள் குறிக்கோளை தெளிவாக சொல்லி, அதன்படி நடக்க முற்படடார்கள். அவர்கள் தங்களை அரசியல் கட்சி என்று அறிவிக்கவில்லை. அவர்களின் பிரதான குறிக்கோள் விடுதலைப் போராட்டம். பிற்காலத்தில் உருவான அவர்களது அரசியல் துறை அவர்களுக்கு ஆயுத போராட்டத்துக்கு வலு சேர்க்கத் தான். சில்லறை அரசியலுக்கு இல்லை.  எனவே இதற்குள் விடுதலைப்புலிகளை ஒப்பிடுவது சிறுபிள்ளைத் தானம் என்டு நான் நினைக்கிறன்.

இல்லை ராஜேஸ் நிச்சயமாக அவர்கள் அரசியலையும் இராணுவத்துடன் சமமாக நகர்ததி இருக்க வேண்டும் என்பதே என் கருத்து. நடந்த தவறை பாடமாக எடுக்கலாம். 

  • Replies 108
  • Views 12.9k
  • Created
  • Last Reply
21 hours ago, Justin said:

சரி நெல்லையன், இப்போது முகநூல் எனப்படும் நம்பிக்கையான நூலில் எழுதியுள்ள படிக்கு, துரோகி என்று கையில் நகம் கூட இல்லாத ஒருவர் சொன்னால், அதைக் கேட்டு ஒரு ஆயுததாரி துரோகி என்று அழைக்கப்  பட்டவரைக் கொன்று போட்டால், துரோகி என்று கூப்பிட்டவருக்கு கொலையில் பாரிய பங்கு! கொலை செய்தவன் தூண்டப் பட்ட பலியாடு! அப்படியா? சரி , இப்ப சுமந்திரனுக்கு எதிராக எத்தனை சேறடிப்பு நீங்கள் உட்பட இங்கே பலரிடம் இருந்து? பல சேறடிப்புகளுக்கு அடிப்படையான செய்தியே பொய்ச்செய்தி! நாளை சுமைந்திரனுக்கு ஏதும் நடந்தால் நீங்கள் உட்பட இந்தப் பொய்ச் செய்திகாவிகள் பெரும் பொறுப்பை ஏற்பீர்களா? நடை முறை எல்லாருக்கும் ஒன்றல்லவா? ஆமா இல்லையா என்று மட்டும் சொல்லுங்கள்!  

நீரும், என்னைப்போல் நுனிப்புல் மேய்தவுடன் ...! தோழர் பாலன், புலிகளின் தலைவர்,  சுந்தரம், சந்ததியார் ..உட்பட பலருடன் இருந்த ஆரம்பகால உறுப்பினர். கரவெட்டியை சேர்ந்தவர், பின்னாளில் தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை எனும் அமைப்பை, இந்திய/தமிழக நக்ஸலைட்டுகளின் உதவியுடன் நடாத்தி இந்திய சிறையில் பலகாலம் இருந்தவர். தோழர் பாலன் புலியாதரவாளர் அல்லர்! ... இவர்கள் கூறியதை மறுத்து, மாறாக அரசியலில் நேற்று பின் கதவால் உள்ளட்டு விட்டு ... ஓரிரு நாளுக்கு முன்னும், யாழில் சிவஞானத்தார், "வரலாறு தெரியாத அரசியல் கற்றுக்குட்டிகள்" என்று இத்தலைப்பு சம்பந்தமான கேள்விக்கு விடையளித்தார் .. இந்தா/அந்தா என்று படம் காட்டும் ஏமாற்றுவாதியின் கதையை கேட்க சொல்கிறீர்களா?  ... ரணிலின் சும்முக்கு ஏதாவது நடந்தால், அது மகிந்தவால்தான்! மற்றது சும்மை சுற்றி உள்ள அடுக்கு பாதுகாப்பு அரண் புகைப்படங்கள் தாங்கள் பார்வையிடவில்லைப்போல?

14 hours ago, ஜீவன் சிவா said:

அப்பாடா 

தலைவருக்கு சொந்தமா சிந்திக்கவே தெரியாது என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள்.

இதுக்கு மேல நான் என்னத்தை சொல்ல / நன்றி வணக்கம் 

அப்போ, தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த பலருக்கு வயது 18 ஓ, 20 தான். அன்று அதில் நீங்கள் இருந்திருந்தால் என்ன, நான் இருந்திருந்தால் என்ன ... உடன் உணர்ச்சிகளுக்கு வசப்பட்டும், பிறரால் இலகுவாக பிழையாக வழிநடாத்தக்கூடிய, நிறைய சிந்திக்கக்கூடிய வயதல்ல!  

இத்தலைப்பில், ஓர் கருத்தொன்று .."பாலா அண்ணா-தமிழ்ச்செல்வன்"  ..தொடர்பாக பதியப்பட்டிருந்தது. நீக்கப்பட்டுவிட்டது என நினைக்கிறேன். எனது கருத்தும் 2008இற்கு முன்னிருந்தே, அதுதான்! எம் அழிவிற்கு மிகப்பெரிய காரணம் "********" தான்"!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nellaiyan said:

நீரும், என்னைப்போல் நுனிப்புல் மேய்தவுடன் ...! தோழர் பாலன், புலிகளின் தலைவர்,  சுந்தரம், சந்ததியார் ..உட்பட பலருடன் இருந்த ஆரம்பகால உறுப்பினர். கரவெட்டியை சேர்ந்தவர், பின்னாளில் தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை எனும் அமைப்பை, இந்திய/தமிழக நக்ஸலைட்டுகளின் உதவியுடன் நடாத்தி இந்திய சிறையில் பலகாலம் இருந்தவர். தோழர் பாலன் புலியாதரவாளர் அல்லர்! ... இவர்கள் கூறியதை மறுத்து, மாறாக அரசியலில் நேற்று பின் கதவால் உள்ளட்டு விட்டு ... ஓரிரு நாளுக்கு முன்னும், யாழில் சிவஞானத்தார், "வரலாறு தெரியாத அரசியல் கற்றுக்குட்டிகள்" என்று இத்தலைப்பு சம்பந்தமான கேள்விக்கு விடையளித்தார் .. இந்தா/அந்தா என்று படம் காட்டும் ஏமாற்றுவாதியின் கதையை கேட்க சொல்கிறீர்களா?  ... ரணிலின் சும்முக்கு ஏதாவது நடந்தால், அது மகிந்தவால்தான்! மற்றது சும்மை சுற்றி உள்ள அடுக்கு பாதுகாப்பு அரண் புகைப்படங்கள் தாங்கள் பார்வையிடவில்லைப்போல?

அப்போ, தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த பலருக்கு வயது 18 ஓ, 20 தான். அன்று அதில் நீங்கள் இருந்திருந்தால் என்ன, நான் இருந்திருந்தால் என்ன ... உடன் உணர்ச்சிகளுக்கு வசப்பட்டும், பிறரால் இலகுவாக பிழையாக வழிநடாத்தக்கூடிய, நிறைய சிந்திக்கக்கூடிய வயதல்ல!  

இத்தலைப்பில், ஓர் கருத்தொன்று .."பாலா அண்ணா-தமிழ்ச்செல்வன்"  ..தொடர்பாக பதியப்பட்டிருந்தது. நீக்கப்பட்டுவிட்டது என நினைக்கிறேன். எனது கருத்தும் 2008இற்கு முன்னிருந்தே, அதுதான்! எம் அழிவிற்கு மிகப்பெரிய காரணம் "********" தான்"!

ஓம் ஐயா! யாராய் இருந்தால் என்ன? இவ்வளவு உறுதியாய் சொல்லக் கூடியவர் ஏன் தான் முகநூலில் எழுதுவான்? ஒரு புத்தகமாய் விடட்டும் அல்லது நேரடியாக அறிக்கையாக விடட்டும்! வழக்குப் போட்டு விடுவார்கள் என்ற பயம் தானே இந்த கேள்விக் குறிகளோடு முகநூலில் "அபிப்பிராயத்தை தரவாக" மாற்றும் அல்கெமி வேலையின் பின்னணி? பாது காப்புப் பார்த்தேன்! நீலனும் இதை விடப் பெரிய பாதுகாப்புடன் சென்ற வேளையில் தான் தற்கொலைக் குண்டு தாரி தாக்கினார்! ஹிஸ்புல்லா இயக்கம் தான் செய்திருக்கும் என நினைக்கிறேன்!

(மற்ற படி உங்களுக்கென்று வரும் போது விதிகள் வேறென்று அறிவேன்! அதை உங்கள் வாயால் கேட்கவே அந்த கேள்வி: அரசு அல்லது மகிந்த தான் கொல்வர், நீங்கள் அல்ல!)

15 hours ago, tulpen said:

ஆனால் விடுதலைபுலிகள் அரசியலை செய்ய தடையாக இருக்காவிட்டாலும் நமது தமிழ் கனவான் அரசியல்வாதிகள் சிறந்த அரசியலை முன்னெடுத்திருக்க மாட்டார்கள் என்பதற்கு ஆதாரம் விடுதலைபுலிகள் உருவாக முன்பே அவர்கள் கீழ்தரமான சுயநல அரசியலை தான் செய்தார்கள் என்ற வரலாற்று பாடம். அவர்கள்  மக்கள் அரசியலை செய்திருந்தால் ஆயுதப்போராட்டமே உருவாகி இருக்காது. ஆயுதப்போராட்டம் முடிந்து 10 வருடமாகி விட்ட போதிலும்  இப்போது கூட அவர்களால்  சிறந்த ராஜதந்திர அரசியலை செய்ய முடியாமல் இருப்பதை காண்கின்றோம்.  தமிழ் மக்களிடம் நன்கு படித்த சட்ட அறிஞர்களை கொண்ட பல அரசியல் தலைமைகள் நாடு சுதந்திரம் அடைய முன்பே இருந்தார்கள். அரசியலை மேற்கொள்ள போதிய கால அவகாசமும் இருந்த‍து. அதை பயன்படுத்தாமல் இருந்து  காலத்தை விரயம் செய்து ஆயுத போராட்டதில் மக்களை தள்ளி விட்டு இப்போது விடுதலை புலிகள் மீது மட்டும் பழி போடுவது சரியானதல்ல. அதே போல் விடுதலைப்புலிகளின் தோல்விக்கு மற்றயவர்கள் மீது மட்டும் பழியை போடுவதும் சரியானதல்ல. 

புரிந்துகொள்ளவேண்டிய கருத்து. நன்றிகள்.

ஆங்கிலேய ஆட்சியில் கணக்கு பிளளை கண்காணி குமாஸ்தா வேலை பாரக்கவும் படித்த கூட்டமே புத்திஜீவிதக் கூட்டம். இந்த படிப்பும் மேற்தட்டு வர்க்கத்துக்கே சாத்தியமானது. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இந்த கண்காணிகள் சிங்களவர்களை நடத்திய விதமே அடிப்படை தமிழ் சிங்கள விரோதத்திற்கு காரணமாகியது. ஆங்கிலேயர் சென்றபின் சிங்கள அரசின் கீழ் இந்த வரக்கம் வேலை பாரக்கத் தொடங்கியது. ஆட்சியாளர்களை அண்டிப்பிழைப்பதற்கே கல்விபயன்பட்டது.  ஆட்சியாளர்களை அண்டிப்பிழைத்தல் அனுசரித்து நடத்தல் என்றவாறே அறிவுசார் வட்டாரத்தின் சிந்தனை முறை அமைந்தது.  இவற்றுக்குள்ளாகவே தமிழர்களுக்கான அரசியல் தலமைகள் இயங்கியது. இவ் அரசியல் ஒரு வர்க்க அரசியல்.  பேரினவாத ஒடுக்குமுறைக்கு துணைபோகும் அரசியலாக இருந்தது. இதன் எதிர்வினையே ஆயுதப்போராட்டம். இன்றும் இந்த வரக்க அரசியல் தொடர்கின்றது. நேற்றுவரை சிங்கள அரச இயந்திரத்தில் ஒரு அங்கமான விக்கினேஸ்வரன் இன்று வடக்கு முதலமைச்சர். அவரது அறிவுசார் தன்மையே இங்கு நம்பப் படுகின்றது ஆனால் அவர் அறிவை விருத்தி செய்ததது தமிழ்த்தேசீயவாதத்திற்காக அல்ல, மாறாக சிங்கள எந்திரத்தில் நீதிபதியாக இருப்பதற்கு.  தமிழ் அரசியல் வாதிகளிடம்  உள்ள அடிப்படை சிந்தனை முறையே  அண்டிப்பிழைத்தல் அனுசரித்து நடத்தல் என்பதாகவே இருக்கின்றது ஏனெனில் நாம் பாய்ந்து பாய்ந்து கல்வி கற்பது இதற்காகத்தான்.  உதாரணமாக இன்று சுமந்திரன் தமிழ்மக்களிடையே பேசி அவர்களை ஒரணியாக்கி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  ஒரு பேரணி , அடயாள உண்ணாவிரதம் ஆர்பாட்டம் என்பதை செய்வதற்குப் பதிலாக சிங்கள மக்களுக்கு சமஷ்டி பற்றி பாடம் எடுக்கின்றார். இப்படித்தான் இவர்களால் சிந்திக்க முடியும். அதாவது தமிழ் மக்களே நீங்கள் அமைதியாய் இருங்கள் நான் போய் சிங்களவர்களிடம் பேசி சமஸ்டியை வாங்கிக்கொண்டுவாரன் இது எப்படி மக்கள் அரசியலாகமுடியும் ? எமது அரசியல் வாதிகளுக்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் இடையில் இருககும் நெருக்கம் அரசியல் வாதிகளுக்கும் மக்களுக்கும் இடையில் ஒருபோதும் வரலாற்றில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது ஏனெனில் இதுவே எமது கல்வியும் அறிவும் தந்த சிந்தனைமுறை.  இந்த சிந்தனை முறையும் புலிகளின் சிந்தனை முறையும் இருவேறு துருவங்கள். அண்டிப்பிழைத்தல் அனுசரித்துப்போதல் என்பதற்கு நேரேதிரான இயங்கு நிலை. அவர்கள் பிரதேசங்களை மீட்டு தமிழீழம் என்ற அரசையும் அதற்கான கட்டமைப்புகளையும் உருவாக்க முனைந்தார்கள்.  அவர்களை பொறுத்தவரை அதுதான் அவர்களது அரசியல். அழிவுகளுக்கு ஏராளமான அக புற காரணிகள் இருக்கின்றது. எப்பொழுதும் சொலவதுபோல புலிகள் மீது விமர்சனங்களை தாரளமாக முன்வைக்கலாம் ஆனால் அவர்களை நேக்கி ஒரு விரல் சுட்டிக்காட்டும் போது ஏனைய விரல்கள் எம்மையே சுட்டிக்காட்டும். இது எமது சமூகத்தில் தவிர்க்க முடியாத விதி. 

இந்த "கஞ்சா புகழ்" ஐக்கிய தேசிய கட்சியின் செம்புதூக்கி அரசியல்வாதியின் கொடுமை தாங்க முடியவில்லை!  

https://www.tamilwin.com/politics/01/204169?ref=home-imp-parsely

கஞ்சா கடத்தலுக்கு மேல் (... சிறிலங்கா பாராளுமன்றில் கூட கேட்கப்பட்டது. சரியான பதில் இல்லை! .... ). எந்த வடகிழக்கு அரசியல்வாதிகளாலும், கைது செய்தவர்களை விடுவிப்பதை முடியாததை, கஞ்சாக்கடத்தல்காரர்களை கூட விடுவிப்பதற்குரிய செல்வாக்கு, இந்த "பின் வாசல் கதவிற்கு" உள்ளது. உனது 10 வருட கால பின் வாசல் வழி உள்ளிட்ட அரசியலில் செய்தது என்ன???

எத்தனை தமிழ் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என இலட்சக்கணக்காணவர்கள் சிறிலங்கா அரசியல்வாதிகள்/படையினரால் கொல்லப்பட்டனர். இன்று வரை தொடர்ச்சியாக, கடந்த 10 வருட காலமாக "புலி வாந்தி எடுக்கும்" இந்த "கஞ்சா புகழ்" அரசியல்வாதி, இவற்றிற்காக எத்தனை தரம் குரல் கொடுத்திருப்பார்?????????? 

On 1/7/2019 at 1:10 PM, tulpen said:

இல்லை ராஜேஸ் நிச்சயமாக அவர்கள் அரசியலையும் இராணுவத்துடன் சமமாக நகர்ததி இருக்க வேண்டும் என்பதே என் கருத்து. நடந்த தவறை பாடமாக எடுக்கலாம். 

அரசியல், இராயதந்திரம் இரண்டும் பலத்திலிருந்து பிறப்பன.

பலமில்லாதபோது இவையிரண்டும் வினைத்திறனற்றுப் போகும்.

விடுதலைப்புலிகளின் ஆயுத பலம் அரசியல் மற்றும் இராயதந்திர நகர்வுகளை ஏற்படுத்த உதவின. அதன் காரணமாகவே அவர்களது முழு வளமும் ஆயுதபலத்தை நோக்கி திசைதிருப்பபட்டன. 

எந்தபொரு பலமும் அற்ற இன்றைய நிலையில் கூட்டமைப்பினரையோ அல்லது ஏனையவர்களையோ குற்றம் சாட்டுவதனால் நன்மையேதும் கிடைக்கப்போவதில்லை.

தமிழர் நாம் எவ்வாறு பலமுள்ள ஒரு மக்கள் கூட்டமாக மீண்டும் உருவெடுக்கப் போகின்றோம் என்பதில் எமது எதிர்கால அரசியல் தங்கியுள்ளது, கூட்டமைப்பைச் சேர்ந்த தனிமனிதர்களில் அல்ல. 

முதலில் சுமந்திரனை அரசியலில் இருந்து துரத்த வேண்டும் , இவர் எப்ப வந்தவர் .
புலிகளை பற்றி இவர் கூற இவர் மக்களுக்கு என்னத்த செய்தவர் . கடைசியாக இருந்த எல்லாவற்றையும் பிடுங்கும் அலுவலில் தான் அவரின் சாக்கடை அரசியல் உள்ளது . 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபாதாசன் said:

முதலில் சுமந்திரனை அரசியலில் இருந்து துரத்த வேண்டும் , இவர் எப்ப வந்தவர் .
புலிகளை பற்றி இவர் கூற இவர் மக்களுக்கு என்னத்த செய்தவர் . கடைசியாக இருந்த எல்லாவற்றையும் பிடுங்கும் அலுவலில் தான் அவரின் சாக்கடை அரசியல் உள்ளது . 

சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் முடிவெடுக்கும் தலைவர்! அவரின் தயவில்லாமல் பிற கூட்டணிக் கட்சிகளுக்கு எம்பியாகும் வாய்ப்புக் குறைவு. எனவே அடுத்த தேர்தலில் அவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் போல மக்களால் தெரிவு செய்யப்படாமல் இருக்க ஏதாவது ஏடாகூடமாகச் செய்தால்தான் உண்டு. அப்படி நடந்தாலும் தேசியப்பட்டியலில் வந்து சேருவார்.

2 hours ago, பிரபாதாசன் said:

முதலில் சுமந்திரனை அரசியலில் இருந்து துரத்த வேண்டும் , இவர் எப்ப வந்தவர் .
புலிகளை பற்றி இவர் கூற இவர் மக்களுக்கு என்னத்த செய்தவர் . கடைசியாக இருந்த எல்லாவற்றையும் பிடுங்கும் அலுவலில் தான் அவரின் சாக்கடை அரசியல் உள்ளது . 

சில மாதங்களுக்கு முன், லண்டனில் உள்ள சில கூத்தமைப்பு ஆதரவாளர்கள், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம், "கஞ்சா புகழ்" அரசியல்வாதியின் மீது பல குற்றச்சாட்டுகள் வைத்தனராம். அதற்கு அந்த அரசியல்வாதியோ, .. "... நான் இதில் என்னத்தை சொல்ல? கஜேந்திரகுமாரும் தன்னிச்சையாக, உள் போராடாமல் வெளியேறி விட்டார்!  மாவையோ, எனக்கு ஆங்கிலமும் வராது, சட்டமும் தெரியாது, "கஞ்சா புகழ்" பின் வாசலை .... அறளை பெயர்ந்தவர் மேல் போனால்,... பொறுப்பெடுக்க சொல்லி விட்டதாகவும் ..." சொன்னாராம்! 

அங்கு .. இப்போ ... ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரையோ! அதுதானாம்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.