Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் நபரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு மானபங்கமும் படுத்திய ஏனையோரை தேடி பொலிஸார் வலை வீச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

thumbnail.jpg

முஸ்லிம் நபர் ஒருவரை  இனவாத குழு ஒன்று நிர்வாணப்படுத்தி தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதுடன்
அதை காணாளி செய்து வட்ஸ்அப் ஊடாக வைரலாக பரவவும் விட்டிருந்தனர்.

இத்தாக்குதல்தாரிகளில் ஓருவரான  காணி உத்தியோகத்தர் மயூரனுக்கு விளக்க மறியல் விதிக்கப்பட்டது.

02/01/2019 மாலை 05.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூரை அண்மித்த கொம்மாத்துரை பிரதேசத்தில்  வைத்து தனது அடியாட்களைக் கொண்டு ஏறாவூரை சேர்ந்த சகோதரர் ஒருவரை நிர்வானப்படுத்தி கொலை செய்ய முயற்சித்ததோடு, அம் முயற்சியை வீடியோ பதிவு செய்து வெளியிட்டதன்  காரணமாக   கிரான் பிரதேச செயலக காணி குடியேற்ற உத்தியோகத்தர் மயூரன் என்பவன் ஏறாவூர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு
14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில்,
கொலை முயற்சியில் ஈடுட்ட ஏனையோரை தேடி பொலிஸார் வலை விரிப்பு.

படத்தில் ஹெல்மேட் அணிந்தவனையும், ஊதா நிற சேட் அணிந்தவனையும் அடையாளம் காட்ட உதவுங்கள்.

065 2240487
வேலையில் இருந்து வீடு வரும் வழியில் ஏறாவூர் 'ஷஹீத்' என்பவர் மீது காடையர்கள் தாக்குதல்
50170547_1979410718802708_4688901318431997952_n.jpg
மட்டக்களப்பு  பெற்றோலிய கோபரேஷனில் பணி புரியும்
ஏறாவூர் ஐயங்கேனியை சேர்ந்த ஷஹீத் " 
என்பவர் வேலை முடிந்து முகத்துவார வீதி வழியாக சவுக்கடியூடாக ஏறாவூர் வரும் வழியில், சவுக்கடியில் வைத்து தன்னை  வழிமறித்த பிரதேச  இளைஞர்கள்  தலையை நோக்கி பொல்லுகளால் தாக்கியதாக தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பு பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் பணிப்பிரியும் சயீத் என்ற நபர் வேலை முடிந்து இலகுவான வழியாக இருக்கின்ற தமிழ் பிரசேத்தினூடாக உள்ள முகத்துவார கடற்கரை வீதியை பயன்படுத்துவது வழக்கம்.


 இந்த வழியோனூடாக வழமை போல் நேற்று இரவும்   வந்திருக்கிறார்.
வரும் வழியில் இனம்தெரியாத  இனவாதிகள் பொல்லால் அடித்து கைகளாலும் தாங்கியுள்ளனர்.

அத்தோடு அவரது மோட்டார் சைக்களுக்கும் தீயிட்டு கொழுத்தியுள்ளனர். அதில் தோல்விகண்டுள்ளனர்.

ஹெல்மேட் அணிந்திருந்த இவர் அடிகளை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளை கைவிட்டு ஓடித் தப்பிய நிலையில் ஏறாவூர் ஆதார வைத்திய்சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 வெளிக்காயங்கள் எதுவுமில்லை. ஆனால்
தலை, நெஞ்சு நோவு இருக்கிறது. வாந்தி எடுத்திருந்தார்.

இனவாத காடையர்களின் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.. அவதானமாக செயற்படுங்கள்.

தகவல் : அபூ பயாஸ் ( நசீர்)
49938668_1979410982136015_8267132795722137600_n.jpg
49725032_1979410882136025_59041154481520640_n.jpg
49527136_1979410822136031_9188626803697123328_n.jpg
49711502_1979411105469336_2285838709406302208_n.jpg
 
 
தாக்குதல்கள் தொடர்பில் ஏறாவூர் பொதுமக்களுக்கு சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்.
49897417_772756986435176_4699151691675598848_n.jpg
நேற்று இரவு சம்மேளனத்தின் நிறைவேற்றுக்குழு கூட்டம் சம்மேளன காரியாலயத்தில் நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் கீழ்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
 
01.சென்ற வாரம் தனது காணிக்குள் சென்ற எமது ஊரைச்சேர்ந்த அப்துல் காதர் என்ற சகோதரரை நிர்வாணப்படுத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட செயலை சம்மேளனம் வன்மையாக கண்டிக்கின்றது. இவ்வாறான ஒரு நிகழ்வு எந்த இனத்தை சேர்ந்தவருக்கும் ஏற்படக்கூடாது.
 
02. மேற்படி  தாக்குதலில் ஈடுபட்ட மயூரன் ( காணி உத்தியோகத்தர் ) உட்பட 8 நபர்களையும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை காணி உத்தியோகத்தர் மயூரனை தவிர வேறு யாரையும் பொலிஸார் கைது செய்யவில்லை. இதற்கான காரணம் என்ன? என்பதை தெரிந்து கொள்வதற்கும் மீதமுள்ள 7 நபர்களையும் கைது செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்துவதற்காக சம்மேளனம் இன்று (09.01.2019) ஏறாவூர் பொலிஸ் அதிகாரியை சநந்தித்து பேசும் அத்துடன் இவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வைப்பதற்காக அரசியல் தலைவர்கள் பொலிஸ் மேலதிகாரிகள்  போன்றோரிடமும் தொடர்பை ஏற்படுத்தி இக்கைதை வலியுறுத்தும் முயற்சியில் சம்மேளனம் தீவிர கவனம் செலுத்தும்.
 
03.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மதத்தலைவர்களை அவசரமாக சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ஹாமதுரு, பூசாரிமார்கள், பாதர், மௌலவிமார்கள் மற்றும் சமய தளங்களின் தலைவர்கள், வர்த்தக சங்கங்களின் தலைவர்கள், நகரசபை பிரதேச சபை தவிசாளர்கள் போன்றோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டம் (10.01.2018) திகதி அதாவது நாளை நடாத்துவதற்கு சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது.இக்கூட்டத்தில் தற்போது மாவட்டத்தில் ஒரு குழுவினரால் ஏற்படுத்தப்பட்டு வரும் இக் குழுப்பத்தை விரைவாக கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட உள்ளது.
 
04.இன்ஷா அல்லாஹ் தற்போது நடைபெற்று வரும் அசாதாரன நிலைமைக்கு காரணம் யாது மற்றும் நடந்த சம்பவத்தை கண்டித்து ஊடக மாநாடு ஒன்றை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11.01.2019) நடாத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
மேலும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய காலம் எனவே பொறுமை தொழுகை துஆ போன்ற நல் அமல்கள் மூலம் அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்து துஆ செய்யுங்கள்.
 
மேலும் முகபபுத்தகத்தில் தயவு செய்து பொறுப்பற்றவிதத்தில் கருத்துக்களை எழுதுவதில் இருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.இனவாதிகள் எப்படியாது ஒரு இனகலவரத்தை ஏற்படுத்த கடும்பிரயத்தனம் மேற்கொள்கிறார்கள் முஸ்லிம்கள் இவ்வாறான சந்தர்ப்பத்தில் மிகவும் நிதானமாகவும் கவனமாகவும் செயலாற்ற வேண்டும். இன்ஷா அல்லாஹ் சம்மேளனம் அவ்வப்போது தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

- முகம்மத் அஸ்மி -
 
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அந்த இந்துமதப் பாடசாலை மாணவியை கடத்தி மதம் மாற்றி காத்தான் குடியில் வைத்திருப்பதுக்கு யாரோடை கதைப்பது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் - முஸ்லிம்களிடையே பகைமையைஇ மூட்டும் கயவர்கள் யார்...?
 

கடந்த வாரம் மட்டக்களப்பில் நடைபெற்ற அந்த கசப்பான சம்பவத்தினை நீங்கள் யாவரும் அறிந்திருக்கக்கூடும். ஒரு மூத்த வயதுடையவரை நிர்வாணப்படுத்தி அடித்து விரட்டும் அந்த கோர சம்பவத்துடன் தொடர்புபட்ட இரு சமூகங்களும் தமிழ் பேசும் சமூகமே.

இந்த விடயத்தில் தமிழர் முஸ்லிமுக்கோஇ அல்லது முஸ்லீம் தமிழருக்கோ இந்தக் கொடூரமான செயலை செய்வது எப்படியும் நியாயப்படுத்த முடியாத ஒன்று என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? அவர் உண்மையிலேயே ஏதேனும் தவறு செய்திருப்பினும்இ  தண்டனை வழங்கும் அதிகாரத்தை நாம் கையிலெடுக்க முடியாது என்பதனையும் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? வயதில் மூத்த ஒருவரை கீழாடையின்றி நிர்வாணப்படுத்தி தண்டிக்கும் காட்சி மனிதாபிமானம் உள்ள யாருக்கும் இதயத்தை உருக்ககூடியது என்பதை உணர்கிறீர்களா?

கடந்த முப்பது வருட கொடிய யுத்தம் வடகிழக்கை சின்னாபின்னப்படுத்தி எம் வாழ்வையும் வளர்ச்சியையும் குழிதோண்டிப் புதைத்தது மட்டுமன்றிஇ எம் குழந்தைகள்வரை அதன் தாக்கம் வீழ்ச்சியை ஏற்படுத்தியதை நாம் மறந்துவிட்டோமா? நாம் அடைந்தவற்றைவிட இழந்தவைதான் அதிகம் என்பதை நாம் உணர்ந்தோம் அல்லவா?

உண்மையிலேயே ஓரிரு அற்பர்கள் செய்யும் செயலால் ஈரினங்களும் அல்லல்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இரண்டறக் கலந்து வாழும் தமிழ் முஸ்லிம்களிடையே பகைமையை ஏற்படுத்தி குளிர்காய முனையும் கயவர்கள் யார்? ஏன் கிழக்கிலும் வடக்கிலும் எப்போதுமே இனமுறுகலை எதிர்பார்த்துச் செயற்படுகிறார்கள்? நிம்மதியான சுவாசக்காற்றை சுவாசித்து மனிதாபிமானத்துடன் வாழும் மக்களை ஒருவருக்கொருவர் எதிரியாக்கி இரு இனத்தின் வாழ்விலும் வீழ்ச்சியை ஏற்படுத்தும் கபட செயலுக்கு நீங்கள் ஆதரவளிக்கிறீர்களா?

நமது கருத்துக்களும்இ வார்த்தைப்பிரயோகங்களும்இ செயற்பாடுகளும் இன்னோர் இனத்தை வேண்டுமென்றே சீண்டுவதாக இருந்தால் எப்படி எங்கள் சமுதாயம் நிம்மதியான வாழ்வை வாழ முடியும். வடகிழக்கின் தமிழர்களும் அண்டைவீட்டு முஸ்லீம்களும் வாழும் இந்த ஒற்றுமையான வாழ்வை சீரழித்துவிட்டு எதை நாம் அடையப்போகிறோம்? அரசியல்வாதிகளுக்கு மட்டுமே இவ்வாறான இனசீண்டல்கள் இலாபமளிக்குமே அன்றி ஏழை மக்களுக்கு?

ஒன்றை மட்டும் எண்ணிப்பாருங்கள். நடைபெற்ற அசம்பாவிதங்கள் முஸ்லீம் தரப்பினால் தமிழருக்கு நடந்திருந்தால் இப்போதைய உங்கள் மனநிலை என்னவாக இருக்கும். ஆனாலும் பொறுமையுடன் நிதானத்துடனும் சட்டரீதியாக அதனைக் கையாள்வதுதான் சிறப்பு என்ற தீர்மானத்தில் இருக்கும் கிழக்கு முஸ்லீம்களை இன்னுமின்னும் காடையர் குழுகொண்டு தாக்குவது எவ்வகையான கீழ்த்தரமான செயல்? இது ஓர் பாரிய இனவிரிசலையே நமக்குள் உண்டுபன்னக்கூடும் அல்லவா?

தன் தாயை உண்மையாய் நேசிப்பவன் ஒருநாளும் மற்றவர் தாயின் வயிற்றுக்கு அநீதி செய்யமாட்டான். அதுபோலத்தான் தன் இனத்தை உண்மையாய் நேசிப்பவன் மற்ற இனங்களுக்கு அநீதி நினைக்கமாட்டான். நாங்கள் எங்கள் தாயைப்போல இனத்தையும் சமூகத்தையும் ஏன் உங்களையும் கூட நேசிக்கின்றோம்இ மதிக்கின்றோம்இ மரியாதை செய்கின்றோம். தயவுசெய்து காடையர்களின் கபடத்தனத்தில் சிக்குண்டு நமக்குள் ஓர் இன விரிசலை ஏற்படுத்த எப்போதும் துணைபோகாதீர்கள்.
http://www.jaffnamuslim.com/2019/01/blog-post_579.html

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான், முஸ்லீம்களின் அரசியல் உங்களுக்குப் புரிவதில்லை. அவர்கள் பக்கமிருக்கும் நியாயம் உங்களுக்குப் புரியுமளவிற்கு, தமிழர் பக்கமிருக்கும் நியாயம் புரிவதில்லை.

இன்று , கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புள்ளாவை சிங்களப் பேரினவாதம் நியமித்தமைக்கான காரணம் புரிவதில்லை. தமிழ் மக்களுக்கெதிராகத் தொடர்ந்தும் சிங்கள் பேரினவாதத்துடன் செயற்பட்டு, தமிழரின் இருப்பை தொடர்ச்சியாகப் பலவீனப்படுத்திவரும் ஹிஸ்புள்ளா மற்றும் ரிசாத் பற்றி உங்களுக்குப் புரிவதில்லை. தெரிந்ததெல்லாம் முஸ்லீம்களின் கவலைகளும், பிரச்சனைகளும் மட்டும்தான். இது, சிலவேளை நீங்கள் பணிபுரியும் இடத்தில் வேலைபார்க்கும் முஸ்லீம்களின் மூலம் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அல்லது தொடர்ந்தும் வடக்குக் கிழக்கிற்கு வெளியே நீங்கள் வாழ்வதால் இவ்வாறான நிலைப்பாட்டிற்கு நீங்கள் வந்திருக்கலாம். 

தொடர்ந்தும் முஸ்லீம்கள் பற்றி மட்டுமே கவலைப்படும் நீங்கள், அவ்வப்போது தமிழர் பிரச்சனைகள் பற்றியும் கவலைப்படுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது எதற்காக எனக்குப் பச்சைப்புள்ளி இட்டீர்கள்? உங்களை சாடியல்லவா கருத்து எழுதியிருக்கிறேன்? திருப்பிக் கோபப்பட வேண்டாமோ??

நீதித்துறையும் அரசும் பயனற்றதாக இருக்கும் போது முஸ்லீம் மதவெறியர்களும் முஸ்லீம் கள்ளக்காணிக் காடையர்களும் இது போன்ற பின்விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊர் இளஞர்கள் பக்கதூர் சைக்கிளில் சென்ற பெண்ணின் தொப்பியை தட்டி விட்டனர் அதனை அறிந்த அவ்வூர் இளைஞர்கள் சம்பந்தப்பட்டவர்களை தாக்கிவிட்டனர், உண்மயை மறைத்து பக்கத்தூரிடன் ஊர் பகயை மூட்டிவிட்டனர் சம்பந்த பட்ட இளஞர்கள், தமது தனிப்பட்ட பிரச்சனைகளை இனப்பிரச்சனை ஆக்காமலிருப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியாக இருந்தாலும் ...நிர்வாணப்படுத்தியது மாபெரும்தவறு ....
1983 இல் தமிழ் மகன் ஒருவரை நிர்வாணப்படுத்தி சுற்றி நின்று பரிகசித்து புகைப்படமெடுத்து மகிழ்ந்த  சிங்களவர்களுக்கும் எமக்கும் என்ன வித்தியாசம்.  

எனக்கென்னவோ கும்மானின் எசமானுக்கு அவசரமாக நாடாளவேண்டியுள்ளதால் , தமிழ் முஸ்லிம்களிடம் குரோதத்தை கிளறி விட்டு எசமான் பாசத்தை காட்டுகிறாரோ என்று தோன்றுகிறது 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, அக்னியஷ்த்ரா said:

எது எப்படியாக இருந்தாலும் ...நிர்வாணப்படுத்தியது மாபெரும்தவறு ....
1983 இல் தமிழ் மகன் ஒருவரை நிர்வாணப்படுத்தி சுற்றி நின்று பரிகசித்து புகைப்படமெடுத்து மகிழ்ந்த  சிங்களவர்களுக்கும் எமக்கும் என்ன வித்தியாசம்.  

எனக்கென்னவோ கும்மானின் எசமானுக்கு அவசரமாக நாடாளவேண்டியுள்ளதால் , தமிழ் முஸ்லிம்களிடம் குரோதத்தை கிளறி விட்டு எசமான் பாசத்தை காட்டுகிறாரோ என்று தோன்றுகிறது 

கிழக்கில் தமிழர் காணிகளுக்குள் அத்துமீறி நுழைந்தால் என்ன செய்வார்கள் ஆனாலும் ஒருவரை அம்மணமாக அடித்து உதைப்பதென்பதை ஏற்றுக்கொள்ளமுடியாதது 

சில காணிகளுக்கு உரிமை கோருவது  முஸ்லீம்கள்  அவர்களது வாடிக்கை  அண்மையில் எனது நண்பனுக்கும் நடந்தது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெல்ல முடிந்தது அப்படி செய்திருக்க வேண்டும் சட்டத்தை கையில் எடுக்க  முடியாது

 

உள்ளே ஓர் சக்தி இருப்பது போலத்தான் எண்ண முடிகிறது யாரோ குளிர்காய வெளிக்கிடுவது போல் உள்ளது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.