Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆரோக்கிய நன்மைகள் தரும் ஆட்டிறைச்சி! தலை முதல் கால் வரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை காய்கறிகள், இலைதழை உணவுகள் என சைவம் மட்டும் தான் மனிதனுக்கு ஆரோக்கிய நன்மைகள் தரும் என யார் கூறியது. மனிதனின் ஒவ்வொரு உடல் பாகத்திற்கும் ஆரோக்கிய நன்மை தருகிறது ஆட்டிறைச்சி. ஆட்டின் தலை, இதயம், நுரையீரல், மூளை என அனைத்தும் மனிதர்களுக்கு மருத்துவ பயன் தருகிறது

உங்களது, இதயம், மூளை, குடல், எலும்பு என தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களுக்கும் நன்மை விளைவிக்கிறது ஆட்டு இறைச்சி. வெறும் சதை இறைச்சியை மட்டும் உண்பதை தவிர்த்து உறுப்பு இறைச்சியை சாப்பிட பழகுங்கள் இது உங்கள் உடல்நலத்தையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்க உதவும்.
 
சரி இனி, ஆட்டிறைச்சி சாப்பிடுவதனால் உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்....
 
தலை 
இதயம் சார்ந்த வலிகளும் கோளாறுகளும் நீங்கும். குடலை வலிமையாக்க உதவும். தலை பகுதி எலும்பினை வலுப்படுத்தும்.
 
ஆட்டுக்கால்கள் 
 ஆட்டு கால்களை சூப் வைத்து குடித்தால், எலும்புக்களுக்கு பலமும், கால்களுக்கு நல்ல ஆற்றல் தரும்.
 
கண் 
 பார்வை கோளாறுகள் சரியாகும், தெளிவான பார்வை கிடைக்கும். கண்களுக்கு மிகுந்த வலிமையைக் கொடுக்கும்.
 
மூளை 
 கண்ணுக்கு குளிர்ச்சி தருகிறது ஆட்டின் மூளை. தாது விருத்தியை உண்டாக்குகிறது மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கவும் பயன் தருகிறது. உங்கள் மூளை பகுதி நல்ல வலிமை பெற ஆட்டின் மூளை சாப்பிடலாம்.
 
 மார்பு 
 கபத்தை நீக்கும். மார்புக்குப் வலிமையை தரும். மார்புப் பாகத்தில் புண் இருந்தால் குணப்படுத்தும்.
 
இதயம்
 இதயத்திற்குப் நல்ல பலம் தரும் மற்றும் மன ஆற்றல் அதிகரிக்க வெகுவாக பயன் தருகிறது ஆட்டின் இதயம்
 
 நுரையீரல் 
 உடலின் வெப்பத்தை குறைத்துக் குளிர்ச்சியை உண்டாக்கும். நுரையீரலுக்கு நல்ல வலிமையை தரும்.
 
கொழுப்பு 
 ஆட்டின் கொழுப்பு இடுப்புப் பாகத்திற்கு நல்ல பலம் தரும்.
 
சிறுநீரகம் 
 இடுப்புக்கும், சிறுநீரக சுரப்பிக்கும் நல்ல வலிமை தரும். இடுப்பு வலி மற்றும் கோளாறுகளுக்கு நல்ல தீர்வளிக்கும். தாது விருத்தியாகும். ஆண் குறிக்கு வலிமை தரும்.
 
நாக்கு 
 உடல் சூட்டை தணிக்கும். தோலுக்குப் வலிமை தரும் மற்றும் சருமம் பளபளக்க உதவும். உடலின் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வளிக்கிறது ஆட்டிறைச்சி, பின் நூறு வருஷம் எளிது தானே!!! (பி.கு: தண்ணியடிச்சுட்டு சைடுடிஷ்க்கு இத சேத்தி சாப்பிடுவது எல்லாம் உடல் நலத்துக்கு ஒத்துவராது!! )
  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளில், ஆட்டின் உள்ளுறுப்புக்களை விட ஆட்டிறைச்சியே விலை கூடியது, அதுவும் ஒவ்வொரு பாக இறைச்சியின் விலை வேறுபடும்.

ஆனால் ஆட்டிறைச்சி இங்கே கிடைக்கும் அளவிடற்கு சாப்பிட்டால், சிலவேளைகளில் ஆரோக்கியமாக முத்தி எய்துவதற்கும் வழிசமைக்கலாம்.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆட்டிறைச்சியில் கொழுப்பை நீக்கிவிட்டு அல்லது கொழுப்பில்லாத இறைச்சியை சாப்பிட்டால் அதிக தீங்கில்லை என கேள்விப்பட்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையை அவதானித்தீர்களானால், "மூளை சாப்பிட்டால் மூளைக்கு நல்லம், நுரையீரல் சாப்பிட்டால் நுரையீரலுக்கு நல்லது" என்று ..ஆட்டின் ஒவ்வொரு உறுப்பும் எங்கள் உறுப்பை பலப் படுத்துவதாகச் சொல்லப் படுகிறது. இது ஆதாரம் எதுவும் அற்ற மூட நம்பிக்கை கொண்ட ஆலோசனை. ஆட்டிறைச்சி கொழுப்பை நீக்கிச் சாப்பிடலாம், அளவாக. அது நஞ்சு அல்ல! ஆனால், மாடு, பன்றி போலவே இது சிவப்பு இறைச்சி (red meat). அதிகம் சிவப்பு இறைச்சி சாப்பிடுவது இதயத்திற்கு ஆபத்து, புற்று நோய்களுக்கும் காரணம். 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Justin said:

பிரிட்டனில் vegan, vegetarianism மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

கடந்த 3 வருடத்தில் 700% வளர்ந்துள்ளதாக சொல்கின்றனர்.

sausage , burger போன்றவை, இந்த, கொழுப்புகள், சவ்வுகளை, தோல்களை  வெட்டி எறியும் வேலை எதுவும் இல்லாது அப்படியே, உப்பு, வெங்காயம், உள்ளி உடன்  அரைத்து வருவதையும், 

பசுக்களின் ஆண் கன்றுகள், கோழிகளில் சேவல் குஞ்சுகள் கொல்லப்பட்டு அரைக்கப் பட்டு, நாய்கள் உணவாக, பால் தரும் மாடுகளுக்கான உணவாக போவதையும் அறிந்தே இவர்கள் மாறி உள்ளனர்.

ஆட்டின் தலை, நாக்கு, இரத்தம், குடல், கொட்ஸ், ஈரல், எலும்பு, இறைச்சி என்று வகை வகையாக பிரிச்சு மேய்கின்ற நிழலியே டாக்குத்தர் 'உனக்கு கொலஸ்ரோல் போர்டரில் நிற்குது' என்று பயம் காட்டியதால் மாதத்துக்கு ஒரே ஒரு முறை சாப்பிடும் அளவுக்கு குறைத்து விட்டான் என்பதையும் இத் தருணத்தில் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, நிழலி said:

நினைச்சனான்..... மீன் செதில் அடிக்கிற ஆளுக்கு, டாக்குதர் ஆப்படிப்பார்  என்று... 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 1/9/2019 at 12:30 PM, colomban said:

தாது விருத்தியாகும். ஆண் குறிக்கு வலிமை தரும்.

ஆட்டிரைச்சி சாப்பிட்டால் இப்படி நடக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, colomban said:

ஆட்டிரைச்சி சாப்பிட்டால் இப்படி நடக்குமா?

ம்ஹும்..நடக்காது! அது நடக்க வேணுமெண்டால், உடலை  பொதுவாக ஆரோக்கியமாக வைத்திருங்கள். குறைந்த கொழுப்பு, மாச்சத்து உள்ள உணவு, உடற்பயிற்சி, விசேடமாக ஏறோபிக் (aerobic) வகையான உங்கள் சுவாசத்தை அதிகமாக்கும் உடற்பயிற்சிகள், குறைந்த மன அழுத்தம், போதிய தூக்கம், அளவுக்கதிமான மதுவைத் தவிர்த்தல், இப்படியானவை நடக்க உதவும்! 😎

2 hours ago, Nathamuni said:

பிரிட்டனில் vegan, vegetarianism மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

கடந்த 3 வருடத்தில் 700% வளர்ந்துள்ளதாக சொல்கின்றனர்.

sausage , burger போன்றவை, இந்த, கொழுப்புகள், சவ்வுகளை, தோல்களை  வெட்டி எறியும் வேலை எதுவும் இல்லாது அப்படியே, உப்பு, வெங்காயம், உள்ளி உடன்  அரைத்து வருவதையும், 

பசுக்களின் ஆண் கன்றுகள், கோழிகளில் சேவல் குஞ்சுகள் கொல்லப்பட்டு அரைக்கப் பட்டு, நாய்கள் உணவாக, பால் தரும் மாடுகளுக்கான உணவாக போவதையும் அறிந்தே இவர்கள் மாறி உள்ளனர்.

உண்மை தான்! ஆனால் வாய் ருசி விடுகுதில்லையே? கொழும்பில் முனிசிபல் மாடடிக்கும் இடத்தில் பன்றியை ஹலால் முறையில் கொல்வதைப் பார்த்த பின்னரும் பன்றி சாப்பிடுவதை முற்றாக விட முடியவில்லை! ஆரோக்கியக் காரணத்திற்காக மட்டும் வெகுவாகக் குறைத்தேன்.

1 hour ago, Nathamuni said:

நினைச்சனான்..... மீன் செதில் அடிக்கிற ஆளுக்கு, டாக்குதர் ஆப்படிப்பார்  என்று... 

ஹி ஹி..

இப்ப இறைச்சியை குறைத்துக் கொண்டு அதிகமாக மீன் மற்றும் கருவாடு சாப்பிடுகின்றேன். வேலை நாட்களில் மதியத்துக்கும் காலைச் சாப்பாட்டுக்கும்  சலட்டும் கின்வா (quinoa) வும் தான். காலைச் சாப்பாடாக மீன் துண்டு, முட்டை வெள்ளைக் கரு அல்லது ஓட்ஸ் (Steel cut Oats) . இதனால 7 கிலோ வரைக்கும் உடல் எடையையும் குறைக்க முடிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

ஆட்டின் தலை, நாக்கு, இரத்தம், குடல், கொட்ஸ், ஈரல், எலும்பு, இறைச்சி என்று வகை வகையாக பிரிச்சு மேய்கின்ற நிழலியே டாக்குத்தர் 'உனக்கு கொலஸ்ரோல் போர்டரில் நிற்குது' என்று பயம் காட்டியதால் மாதத்துக்கு ஒரே ஒரு முறை சாப்பிடும் அளவுக்கு குறைத்து விட்டான் என்பதையும் இத் தருணத்தில் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

What is  "கொட்ஸ்"  நிழலி? 🦌

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, Justin said:

கட்டுரையை அவதானித்தீர்களானால், "மூளை சாப்பிட்டால் மூளைக்கு நல்லம், நுரையீரல் சாப்பிட்டால் நுரையீரலுக்கு நல்லது" என்று ..ஆட்டின் ஒவ்வொரு உறுப்பும் எங்கள் உறுப்பை பலப் படுத்துவதாகச் சொல்லப் படுகிறது. இது ஆதாரம் எதுவும் அற்ற மூட நம்பிக்கை கொண்ட ஆலோசனை. ஆட்டிறைச்சி கொழுப்பை நீக்கிச் சாப்பிடலாம், அளவாக. அது நஞ்சு அல்ல! ஆனால், மாடு, பன்றி போலவே இது சிவப்பு இறைச்சி (red meat). அதிகம் சிவப்பு இறைச்சி சாப்பிடுவது இதயத்திற்கு ஆபத்து, புற்று நோய்களுக்கும் காரணம். 

எமது/எனது முன்னோர்கள் எல்லோரும் என்ன முட்டாள்களா? புலால் உண்ணாதீர்கள் என்று அன்றே சொன்னர்கள். அதை புரிய மறுத்த அன்றைய சமூகம் இன்று வேகன் வெங்காயம் என்று புலம்பிக்கொண்டு திரிகின்றார்கள்.
உள்ள இடம் முழுக்க சுத்திப்போட்டு கடைசியிலை சுப்பரை கொல்லையுக்கை வந்து நிக்கினம்......அய்யே...அய்யே......

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

What is  "கொட்ஸ்"  நிழலி? 🦌

GUT எண்டால் வயிறு, கொட்ஸ்  எண்டு வந்திட்டுது.... நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை. 😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எமது/எனது முன்னோர்கள் எல்லோரும் என்ன முட்டாள்களா? புலால் உண்ணாதீர்கள் என்று அன்றே சொன்னர்கள். அதை புரிய மறுத்த அன்றைய சமூகம் இன்று வேகன் வெங்காயம் என்று புலம்பிக்கொண்டு திரிகின்றார்கள்.
உள்ள இடம் முழுக்க சுத்திப்போட்டு கடைசியிலை சுப்பரை கொல்லையுக்கை வந்து நிக்கினம்......அய்யே...அய்யே......

எல்லோரும் இல்லை! ஆனால் சில முன்னோர்களும், அந்த முன்னோர்கள் செய்ததெல்லாம் இன்றைய அறிவியலுக்கு வழி வகுத்தது நம்புவோரும் மட்டும் நிச்சயமாக முட்டாள்கள் தான்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, Justin said:

எல்லோரும் இல்லை! ஆனால் சில முன்னோர்களும், அந்த முன்னோர்கள் செய்ததெல்லாம் இன்றைய அறிவியலுக்கு வழி வகுத்தது நம்புவோரும் மட்டும் நிச்சயமாக முட்டாள்கள் தான்!

அதுதான் சுனாமிக்கும் புயலுக்கும் தாக்கு பிடிக்கேலாமல் வல்லரசுகள் தடுமாறுது.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

அதுதான் சுனாமிக்கும் புயலுக்கும் தாக்கு பிடிக்கேலாமல் வல்லரசுகள் தடுமாறுது.

ஓம்! லெமூரியா தப்பித் தான் விட்டது புயலுக்கும் சுனாமிக்கும்! பிளேன் ரிக்கற் எவ்வளவு போகுதாம்? லெமூரியாவுக்கு! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Justin said:

ஓம்! லெமூரியா தப்பித் தான் விட்டது புயலுக்கும் சுனாமிக்கும்! பிளேன் ரிக்கற் எவ்வளவு போகுதாம்? லெமூரியாவுக்கு! 

இதெல்லாம் ஒரு படிச்சவன்  பட்டம் பெற்றவன் நாலுபேருக்கு நல்லது சொல்லுற மனிசன்ரை கருத்து!!!!!!!!!

படிச்ச பண்பாடு எங்கே போய் விட்டது?

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டிறைச்சியில், வகைகள் இருக்கிறது.

மேற்குலகில், ஆட்டிறைச்சி (MUTTON)என்பது செம்மறியாட்டின் 2 வயது மேற்றப்பட்டது.

அனால், உலர் வலய ஆசியாவைப் பொறுத்தவரையில், அது வெள்ளாடு.

ஐரோப்பாவில், காட்டாடு (mouflon) இறைச்சியும் கிடைக்கிறது.

additive free goat என்பது முமையாக புல்லையும், இயற்கயான தாவரங்களையும், மற்றும் மூலிகைகளையும் உணவாக உண்டு வளர்ந்த ஆடுகள்.

இவற்றின் இறைச்சியில் மிகுந்த வேறுபாடு உண்டு. செம்மறியாடு வாயில் தடித்த உணர்வை தரும்.

 mouflon இந்த இறைச்சியில் நிச்சயமாக pleasant wild gamey. கொழுப்பும் தடித்த மஞ்சள்.

additive free goat, முச்சை வாடை இல்லவே இல்லை, கொழுப்பு உணர்வை வாயில் தராது.

மேலே சொன்னது விஞ்ஞான அடிப்படையில் சொல்லப்பட்டதா என்பததற்கு அப்பால், இறைச்சியின் எல்லா பாகங்களும் சேர்க்கப்பட்டு,  வலித்த பாகங்களும் கூட, அளவோடு உண்ணப்பட வேண்டும்.

Red meat, அளவு கடந்தாலே  பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு அஃனு (AGNEAU) என்னும் ஆட்டின் இறைச்சி ஊர் வெள்ளாட்டு இறைச்சி போல்தான் இருக்கும். மொச்சையோ வெடுக்கு  மணமோ கிடையாது. விலை கொஞ்சம் அதிகம்தான்.....!  🦌

Résultat de recherche d'images pour "agneau"

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

இங்கு அஃனு (AGNEAU)

இது Lamb. செம்மறியாட்டின் 1 வயதாய் எட்டாத குட்டிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

இதெல்லாம் ஒரு படிச்சவன்  பட்டம் பெற்றவன் நாலுபேருக்கு நல்லது சொல்லுற மனிசன்ரை கருத்து!!!!!!!!!

படிச்ச பண்பாடு எங்கே போய் விட்டது?

நல்ல முயற்சி! அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துகள் (தெரியாதென்று நினைத்தீர்களா உங்கள் அப்ப்ரோச் பற்றி?)😎

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kadancha said:

இது Lamb. செம்மறியாட்டின் 1 வயதாய் எட்டாத குட்டிகள்.

தகவலுக்கு நன்றி கடைஞ்சா ...........!   

முன்பு நாங்கள் இரண்டு  மூன்று பேராக இங்கு கிராமத்துக்குள் சென்று கருப்பு ஆடு தேடி வாங்கி அங்கேயே பங்கு போட்டுக் கொண்டு வருவதுண்டு. அதனால் நான் நினைத்தேன் அதுபோன்ற ஆடுகளின் இறைச்சிதான் இது என்று......!  🦌

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, suvy said:

முன்பு நாங்கள் இரண்டு  மூன்று பேராக இங்கு கிராமத்துக்குள் சென்று கருப்பு ஆடு தேடி வாங்கி அங்கேயே பங்கு போட்டுக் கொண்டு வருவதுண்டு. அதனால் நான் நினைத்தேன் அதுபோன்ற ஆடுகளின் இறைச்சிதான் இது என்று......!  

அது வெள்ளாடா?

AGNEAU, பிரஞ்சு மொழி. 

வெள்ளாட்டு (goat)  இறைச்சி French இல் 

viande de chèvre

viande caprine

ஆங்கிலத்தில் Chevron, இது வழக்கொழிந்து விட்டது. ஆனாலும், farming சமூகத்தவரிடம் இன்னமும் வழக்கில் இருக்கிறது. Chevron பிரெஞ்சில் இருந்தே ஆங்கிலத்திட்ற்கு திரிவடைந்தது.

இங்கே UK இல், பாரம்பரிய நிலச்சுவாந்தர், மற்றும் பிரபுக்கள், அரச வம்சங்களில் Chevron இன்னமும் புழக்கத்தில் இருப்பதாக கேள்விப்பட்டேன்.  ஏனெனில், Dining Chevron எனும் வார்த்தை கேட்பதற்கு high class ஆக இருப்பதால்.

Cabrito அல்லது Kid என்றும் UK இல் சில இடங்களில் புழக்கத்தில் உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளாடு போன்றதுதான் வெகு குறைவு. செம்மறி இங்கு நிறைய உண்டு. இது கருப்பு முகம் கழுத்துகளில் வெள்ளையும் இருக்கும். பொதுவாக இவற்றை பாலுக்காக வளர்க்கிறார்கள். அதில் விசேஷமான சீஸ் , வெண்ணைக்கட்டிகள் செய்வார்கள் என்று நினைக்கிறேன்.......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(LAMA) லாமா என்று ஒன்று மகளின் பாடபுத்தகத்தில் காணப்பட்ட்டது, ஆடு போலவே உள்ளது. இது ஆட்ட்டின் வகையை சேர்ந்ததா? இதன் இறைச்சியை உணவுக்கு எடுப்பார்களா? சுவையானதா? இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் இவையுள்ளதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.