Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் தொடர்பாக உங்கள் நிலைப்பாடுதான் என்ன? சுமனிடம் கேட்ட வித்தி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூட்டமைப்புக்கோ அல்லது சுமத்திரனுக்கோ சப்போட் இல்லை...ஆனாலும் எனக்கு விளங்காதது மாவை தொடங்கி ஸ்ரீதரன் வரைக்கும் எத்தனையோ பேர் இருக்கும் போது சுமத்திரனை மட்டும் ஏன் எல்லோரும் போட்டுத் தாக்குகிறார்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதை எழுதுவது, சுமந்திரனை ஆதரிப்பதாலோ அல்லது எதிர்ப்பதாலோ அல்ல. மாறாக, அவர்மீது வைக்கப்பட்டு வரும் விமர்சனங்கள் பற்றிய தெரிவான புரிதலை நான் அடைவதற்கு மட்டுமே.

முதலாவதாக, சுமந்திரன் மட்டும் ஏன் இலக்குவைத்து தொடர்ச்சியாக விமர்சிக்கப்படுகிறார் என்கிற கேள்வி. இதுபற்றிய எனது புரிதல் என்பது இவ்வாறு அமைகிறது. 

இன்று தமிழர்களைப் பெரும்பான்மையாகப் பிரதிநித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், தொடர்ச்சியாக தமிழர்களின் பிரச்சனைகள் பற்றியோ அவற்றிற்கான தீர்வொன்றினைப் பற்றியோ பேசிவருவது யார்? சம்பந்தனால் இதுதொடர்பாக குறிப்பிட்ட அள்விற்கு மேல் பேச முடியாது. வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திப்பதுடன் அவருடைய பேச்சு நின்று விடும். மாவை எதுவுமே பேசுவதில்லை. ஆனால், சுமந்திரன் தொடர்ந்து பேசுகிறார். அரசியலமைப்பு ஆணைக்குழுவில் அங்கத்துவம் வகிக்கிறார். இப்போது வெளியிடப்பட்ட நகலில் பங்குபற்றியதோடு மட்டுமல்லாமல், அதுபற்றி பேசியும் வருகிறார். அவர்மூலமாகவே இந்த முயற்சிகள் பற்றி அறிந்துகொள்கிறோம், ஆகவே அவரை விமர்சிக்கிறோம்.
ஆனால், அவர்மீதான விமர்சனத்திற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அதுதான் அவரது புலிகள் தொடர்பான நிலைப்பாடு. புலிகள் நடவடிக்கைகள் மீது அவர் வைக்கும் விமர்சனம். புலிகள் மீது அபிமானம் வைத்திருக்கும் எல்லோருக்கும் சுமந்திரனது கருத்துக்களும், விமர்சனங்களும் ஆத்திரத்தை உண்டுபண்ணும் என்பது இயல்பானது. ஆனால், புலிகளை அவர் விமர்சிக்கிறார் என்கிற காரணத்தை மட்டுமே முன்வைத்து அவரை நாம் விமர்சிப்பதென்பது, உண்மையாகவே அவர் ஒரு நல்ல விடயத்தைச் செய்கிறார் (ஒரு பேச்சிற்கு) என்று வைத்துக்கொண்டால், அது தவறாகி விடாதோ என்கிற் ஐய்யமும் எனக்கிருக்கிறது.
புலிகள் மீதான அவரது விமர்சனத்தை விலக்கிப் பார்த்தால், அவர் இப்போது செய்துவருவது உண்மையிலேயே தவறானதா என்பது பார்க்கபடல் வேண்டும்.

அடுத்தது, அவர் ஒரு துரோகியா என்பது.
ஒருவர் துரோகியாவதற்கோ அல்லது ஒரு இனத்தை ஏமாற்றுவதற்கோ, முதலில் ஒன்றைச் செய்வதாகக் கூறி, பின்னர் வேறொன்றை, அந்த இனத்திற்கெதிராகச் செய்பவராக இருக்க வேண்டும். அப்படிப் பார்த்தால், சுமந்திரன் எதைச் முன்னர் சொன்னார், இப்போது என்ன செய்கிறார் என்பது பார்க்கப்படல் வேண்டும்.
என்னைப்பொறுத்தவரை, சுமந்திரன் தனி ஈழம் பெற்றுத்தருவேன் என்று எந்தவிடத்திலும் சொல்லவில்லை. அதிகமாக ஆசைப்படாதீர்கள், எம்மால் முடிந்ததைத்தான் பெற்றுக்கொள்ள முடியும் என்றுதான் சொல்லி வருகிறார். இதை நோக்கித்தான் அவரது செயற்பாடும் இருக்கிறது. தாம் செய்வதையும், இருக்கும் சந்தர்ப்பங்களையும் யதார்த்தமாகப் பேசுகிறார் என்பதுதான் எனது எண்ணம், இது தவறாக இருக்கலாம்.
எமக்கான தீர்வை பெறுவதற்கு இருக்கும் சாத்தியம் என்பது, எமது கைகளை விட்டுப் போனபின்னர், அவர்களுடன் சமரசத்திற்கு வந்துதான் எமக்கானவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறது. இலங்கைக்கெதிராக எந்தவொரு சர்வதேச நாடும் இறங்கிவந்து எமக்கான உரிமைகளையோ தனிநாட்டையோ பெற்றுத்தரப்போவதில்லை. இது சுமந்திரனுக்கு நன்கே தெரிந்திருக்கிறது, எமக்கும் இது தெரியும். ஆகவே, அதி தீவிர தேசிய தேடும் எம்மால் இப்போதைக்கு காத்திரமாக எதையுமே செய்ய முடியப்போவதில்லை என்பதுதான் உண்மை.

சுமந்திரனுடன் சேர்ந்து முழுத்தமிழினமும் மீண்டுமொருமுறை ஏமாற்றப்படப் போகிறதென்கிற கருத்து.
இது சாத்தியமானதென்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால், இது முன்னரும் நடந்தது. செல்வநாயகம் தொடங்கி, அவ்வப்போது முயற்சித்த அனைத்து தமிழ்த் தலைவர்களுக்கும் இது நடந்தது. இப்போது சுமந்திரனது தடவை, அவரும் முயற்சிக்கிறார்.
2009 இல் இனக்கொலையை நடத்தி வெற்றிக் களிப்போடு வீற்றிருந்த மகிந்த, மேற்கிற்கு எதிராக சீனாவின் பக்கம் சாய்ந்தபோது, அவருக்கு அழுத்தம் கொடுக்கவே போர்க்குற்ற விசாரணை, மனிதவுரிமை மீறலுக்கான விசாரணை என்று மேற்குலகு செயற்பட்டதென்பது பொதுவான கருதுகோள். மகிந்த தொடர்ச்சியாக ஆட்சியில் இருப்பதென்பது, தமது தலைவர்களையும், போரில் வெற்றியை ஈட்டித் தந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களையும் சர்வதேச விசாரணை ஒன்றில் இழக்க நேரிடலாம் என்று கருதிய சிங்களப் புத்திஜீவிகளின் முயற்சியே மகிந்தவை ஆட்சியிலிருந்து அகற்றி மேற்குலகிற்குச் சார்பான ரணில் அரசை ஆட்சிக்குக் கொண்டுவந்தது என்கிற அபிப்பிராயமும் இருக்கிறது. இந்த ரணில் அரசை ஆட்சிக்குக் கொண்டுவருதல் மற்றும் ஆட்சியில் ரணிலை தொடர்ந்தும் வைத்திருத்தலில் சுமந்திரன் தலைமையில் இயங்கும் கூட்டமைப்பின் வகிபாகம் என்பது ஒருவிதத்தில் சிங்களப் பேரினவாதப் புத்திஜீவிகளின் முயற்சிக்கு ஏதுவாக அமைந்ததுடன், அப்போது மேற்குலகு மகிந்த மீது வைத்திருந்த அழுத்தத்தையும் நீர்த்துப் போட்டது என்றும் கருதப்படுகிறது. இக்கருத்தின்படி பார்த்தால், தமிழ்க் கூட்டமைப்பின் ஒரு நடவடிக்கை சிங்களத்தின் மீதான போர்க்குற்ற விசாரணைகளை சில வருடங்களுக்காவது பின் தள்ளியிருக்கிறது அல்லது, தாமதப்படுத்தி ஆறப்போட்டிருக்கிறது என்று சொல்லலாம். ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்கிற நிலைதான் எமது போர்க்குற்ற விசாரணைகளுக்கான நிலை.
தமிழ்க் கூட்டமைப்பின் தொடர்ச்சியான ஆதரவிற்கு மத்தியிலும் கூட, மகிந்த உற்பட்ட, பெளத்த மகா சங்கத்தினர், புத்தி ஜீவிகள், இனவாதிகளின் அழுத்தத்திற்குப் பணிந்து ரணில் ஒருவேளை இந்த தீர்மானங்களைக் கைவிட்டால், மீண்டும் பண்டா - செல்வா காலத்திற்கு வந்து நிற்கப்போகிறோம் என்கிற கருத்தும் இருக்கிறது. 

ஆகவே, சுமந்திரன் தமிழர்களின் அபிலாஷைகளுக்கான தீர்வொன்றை நியாயமாகவே கொண்டுவர நினைத்தாலும்கூட, அவர் கூட ஏமாற்றப்படலாம் என்கிற நிலைதான் இப்போது. எல்லோரும் ஏறி விழுந்த குதிரையில், சுமந்திரனும் ஏறி விழக்கூடும். பார்க்கலாம்.
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

நான் கூட்டமைப்புக்கோ அல்லது சுமத்திரனுக்கோ சப்போட் இல்லை...ஆனாலும் எனக்கு விளங்காதது மாவை தொடங்கி ஸ்ரீதரன் வரைக்கும் எத்தனையோ பேர் இருக்கும் போது சுமத்திரனை மட்டும் ஏன் எல்லோரும் போட்டுத் தாக்குகிறார்கள் ?

கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் அவர் என்பதால் ஊடகங்களில் இருந்து வெளிநாட்டு தூதுவர்கள், சிங்கள தலைவர்கள், ஊடகவியளாளர்கள் என பலருடனான செவ்விகள் ஊடகங்களில் வருகின்றன. பல ஊடகங்கள் ஊதிப்பெருப்பித்து 
தமது ஊடக விபச்சாரத்தை செய்கின்றன. அத்தோடு மும்மொழியும் சரளமாக பேசுவதால் பலருடன் பேச சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. 
மேற் கூறிய காரணங்களால் அவரை பலரும் போட்டு தாக்குகிறார்கள்.

இணைந்த வடக்கு கிழக்கில் காணி போலீஸ் அதிகாரமற்ற எந்த தீர்வை ஆதரிப்பது என்பது நம் கைகளால் எமது கண்ணை குத்துவது போன்றது. மற்றது போர்க்குற்ற விசாரணை மற்றும் புலிகள் மீதான இவரின் பார்வை .
புலிகளை குற்றம் சொல்ல இவர் என்ன மாவீரரின் தந்தையா? 

சுமந்திரனின் நகர்வு தெளிவாக தெரிகின்றது ... இவர் ஏன் விக்னேஸ்வரன் ஐயா அவர்களை எதிர்த்தார் ? ரணிலுக்கு பிடிக்கவில்லை அதனால் எதிர்த்தார் . இது போதாதா இவரை நாம் நம்பலாமா அல்லது இல்லையா என தீர்மானிப்பதற்கு 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

13 hours ago, பிரபாதாசன் said:

இணைந்த வடக்கு கிழக்கில் காணி போலீஸ் அதிகாரமற்ற எந்த தீர்வை ஆதரிப்பது என்பது நம் கைகளால் எமது கண்ணை குத்துவது போன்றது.

சரி,  அப்ப அரசியல் தீர்வு ஒன்றை அல்லது தமிழ் மக்களுக்கான தீர்வு ஒன்றை எப்படி பெறலாம் என நினைக்கின்றீர்கள்? மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தின் மூலமா?
 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nunavilan said:

கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் அவர் என்பதால் ஊடகங்களில் இருந்து வெளிநாட்டு தூதுவர்கள், சிங்கள தலைவர்கள், ஊடகவியளாளர்கள் என பலருடனான செவ்விகள் ஊடகங்களில் வருகின்றன. பல ஊடகங்கள் ஊதிப்பெருப்பித்து 
தமது ஊடக விபச்சாரத்தை செய்கின்றன. அத்தோடு மும்மொழியும் சரளமாக பேசுவதால் பலருடன் பேச சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. 
மேற் கூறிய காரணங்களால் அவரை பலரும் போட்டு தாக்குகிறார்கள்.

சுமத்திரன் தான் ஓரளவுக்கு பேச்சாற்றல் மிக்க,செயற் திறன் மிக்கவராய் இருக்கிறார். அவரையும் வாயை மூடப் பண்ணி விட்டால் விஷயம் முடிந்தது....இல்லையா 😪
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நிழலி said:

சரி,  அப்ப அரசியல் தீர்வு ஒன்றை அல்லது தமிழ் மக்களுக்கான தீர்வு ஒன்றை எப்படி பெறலாம் என நினைக்கின்றீர்கள்? மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தின் மூலமா?
 

தருவதை தாருங்கள் என்றிருந்தால் 70களிலேயே பிரச்சனை முடிந்திருக்கும். இனக்கலவரங்களை தவிர்த்து போர் கிபீர் எதுவுமே வந்திருக்காது.

இனியொரு ஆயுதம் தேவையில்லை. ஆயுதத்தை விட கூர்மையான அரசியல் வேண்டும்.

அது சம்பந்தனிடமும் அவரின் மெய்ப்பாதுகாவலரிடமும்  இல்லை.

பிரச்சனை சூடாக இருக்கும்போதேஅதை கையாள தவறிவிடுகின்றனர்.

ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்பது ஈழத்தமிழின வரலாற்றில் நடந்தேறி வருகின்றது.
 

ஆயுத போராடடம் தேவையில்லை , இவர்கள் சிங்களத்திக்கு துணை போவதை நிறுத்தி விட்டு , மக்களுக்கு உண்மையாக இருந்தாலே போதும் , ஏன் வடக்கு கிழக்கு இணைந்த தீர்வு என்பது மிகவும் குறைந்த ஒன்று .
இதனை தர முடியாத சிங்களத்துக்கு ஏன் இவர்கள் சார்பாக இருக்க வேண்டும் .

ரணில் மகிந்த என்பது எங்களுக்கு தேவை இல்லை . சர்வதேசத்திக்கு தெளிவாக சொல்ல வேண்டியது தானே .
புலிகளை அழிக்க உதவியவர்கள் எங்களின் குறைந்த பட்ச தேவைக்கு உதவி செய்ய வேண்டும் .

நாம் கேடடாள் தான் அவர்கள் அது பற்றி சிந்திப்பார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
On 1/18/2019 at 11:50 AM, ragunathan said:

ஆகவே, சுமந்திரன் தமிழர்களின் அபிலாஷைகளுக்கான தீர்வொன்றை நியாயமாகவே கொண்டுவர நினைத்தாலும்கூட, அவர் கூட ஏமாற்றப்படலாம் என்கிற நிலைதான் இப்போது. எல்லோரும் ஏறி விழுந்த குதிரையில், சுமந்திரனும் ஏறி விழக்கூடும். பார்க்கலாம்.
 

இது தான் நடக்கப்போகின்றது.......இருந்தும் ஒரு நப்பாசை எங்களுக்கு தீர்வு கிட்டும் என்று.....மகிந்தா மீண்டும் ஜனதிபதியாக வந்தவுடன் தமிழ்மக்களுக்கு நல்ல தீர்வை கொண்டுவர புதிய அரசியல் யாப்பை உருவாக்குவார் அத‌ற்கு இன்னுமோர் தமிழ் அரசியல் தலைவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.