Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு

kilinochi-flood-2018-6-300x169.jpgஇரணைமடு குளத்தில் இருந்து வீணாக கடலில் கலக்கும் நீரை, யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்துவதற்கான செயற்திட்டத்துக்கான முன்மொழிவு ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு, வடக்கு மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுனராக அண்மையில் நியமிக்கப்பட்ட சுரேன் ராகவன் நேற்று இரணைமடுவுக்கு கண்காணிப்புப் பயணம் ஒன்றை மேற்கொண்டார்.

ஆளுனராகப் பதவியேற்ற பின்னர் இரணைமடுவுக்கு அவர் மேற்கொண்ட இரண்டாவது பயணம் இதுவாகும்.

முதல் பயணத்தின் போது, கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயவே நேற்று அவர் அங்கு சென்றிருந்தார்.

இதன்போது, இரணைமடுவில் தேக்கப்படும் நீரில், 40 வீதம் மாத்திரமே விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும், ஏனைய 60 வீதமான நீர் வீணாக கடலில் சேர்வதாகவும், வட மாகாண நீர்ப்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர். சுதாகரன் எடுத்துக் கூறினார்.

இதையடுத்தே, வீணாக கடலில் சேரும் நீரை யாழ்ப்பாணத்தின் குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்துவது தொடர்பான திட்ட முன்மொழிவு ஒன்றை சமர்ப்பிக்குமாறும், அதனை சிறிலங்கா அதிபரிடம் சமர்ப்பித்து உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/01/19/news/35904

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் 👏👏👏

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கப்பட வேண்டிய விடயம். கிடப்பில் போய்விடக்கூடாது.

சிங்களத்தின் ஆளுனர் ஆனாலும் ஓடாத மணிக்கூடு ஒரு நாளில் இரண்டுமுறை சரியான நேரம் காட்டும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.😅

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  விடயம்

எமது  பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து  ஒற்றுமையாக

மாகாணசபை செய்திருக்க வேண்டியது

இப்போ  ஆளுநர் செய்து  வரலாற்றில்  இடம்  பிடிக்கப்போகின்றார்

யார்  குற்றியும்  அரிசியானால்  சரி

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழ் பிரதேசங்களுக்கு நன்மை தரக்கூடிய நல்ல திட்டந்தான் ஆனால் அரசியல் இலாபங்களுக்காக ஜனாதிபதி உட்பட தென்னிலங்கை அரசியல்வாதிகளால் சுயலாபநோக்குடன் செயற்படுத்தப்படுவதாக இருத்தல் கூடாது.  இதுபோன்ற பெரிய திட்டங்கள் தொடங்கி நடைமுறைப்படுத்தப்பட்டு அதனால் தமிழ் மக்கள் பயனடைவதற்கு பல வருடங்கள் எடுக்கும். திட்டம் தொடங்கிய சில மாதங்களில் அரசதலைவர் தெரிவு அல்லது நாடாளுமன்ற தேர்தல் வரும். திட்டத்தை முன்னெடுத்தவர்கள் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருந்தால்தான் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தலாம் என்றும் சொல்லப்படும். ஆகவே தமிழ் இனம் திட்டத்தை தொடங்கிய ஜனாதிபதியையே மீண்டும் தெரிவு செய்யவேண்டிய நிலைமை ஏற்படும். 

ஆளுனர் திட்டத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவேண்டும் என்று வேறு சொல்கின்றார். இதுபோன்ற திட்டங்களுக்கும் ஜனாதிபதிக்கும் என்ன தொடர்பு அவர் இதில் நேரடியாக சம்பந்தப்படவேண்டிய தேவை உண்டா என்பதையும் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். ஏன் இதற்கு முன்னர் நீர்வினியோகம் வடிகால் அமைச்சு இதுபற்றி அக்கறை கொள்ளவில்லை?

ஆளுநர்களின் கடமையென்ன அவர்கள் தமது பிரதேசங்களில் செய்யவேண்டிய வேலை என்ன என்பதின் ஒட்டுமொத்த விபரம் அரசால் வரையறுக்கப்பட்டுள்ளதா? அல்லது அவரவர் நினைத்ததை செய்தால் போதுமா? முந்திய ஆளுனர் செய்யதவறிய ஒன்றை பின்வந்த ஆளுநர் இப்போது செய்கின்றாரா? அப்படி அவர் தன் வேலையை  செய்யாமல் சென்றதற்கு என்ன காரணம் அல்லது அதற்கு யார் பொறுப்பு?  இவருக்கு அடுத்து வரும் இன்னுமொரு ஆளுனர் முன்னவர் தொடங்கிய வேலையை இடையில் நிறுத்திவிட மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? முதலில் இதற்கெல்லாம் விடைதேடவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, vanangaamudi said:

இதில்  அதிகாரமுள்ள ஒருவர் தனது  அதிகாரத்தை  பயன்படுத்தினால்  மட்டுமே திட்டம் நகரும்

அல்லது வன்னியா யாழ்ப்பாணமா?  என்று  அடிபடவேண்டியது தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, விசுகு said:

இதில்  அதிகாரமுள்ள ஒருவர் தனது  அதிகாரத்தை  பயன்படுத்தினால்  மட்டுமே திட்டம் நகரும்

அல்லது வன்னியா யாழ்ப்பாணமா?  என்று  அடிபடவேண்டியது தான்

 விசுகர்! நல்லது செய்ய அதிகாரமும் சட்டமும் அவசியம் தேவை. 
அந்த அதிகாரமும் சட்டமும் எங்கடை ஒரு சிலதுகளுக்கு துண்டற பிடிக்காத விசயமெண்டது உங்களுக்கு தெரியாமலிருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

முதலிருந்த ஆளுநருக்கும் இப்போதிருக்கும் ஆளுநருக்கும் இடையே உள்ள ஒரேவித்தியாசம், அவர் சிங்களவர், பின்னையவர் தமிழர். ஒருவருக்கு இருப்பது மற்றாந்தாய் மனப்பன்மை, மற்றையவருக்கு இருப்பது தனது இனம் என்கிற உணர்வு, ஏதாவது செய்யவேண்டும் என்கிற அவா.

நல்ல விடயம், இந்தத் தொடக்கம் நன்றாக முடியவேண்டும்.

நல்ல திட்டம் , கடலுக்கு வீணாகும் நீரை மக்களின் தேவைக்கு பயன்படுத்த வேண்டும் . 
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.