Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் துடுப்பாட்டப்போட்டியில் இலங்கை அணிக்கு ஆதரவு தெரிவிக்கலாமா?. நாங்கள் சிறிலங்கனா?

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மயூரன் கொடிபிடிப்பதை தொலைக்காட்சியில் உலகக்கிண்ணப்போட்டியில் யாராவது பார்த்தீர்களா?. நான் பார்க்கும் அறிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவுஸ்திரெலியா தரிசனம் தொலைக்காட்சியிலும் இவரது பேட்டி ஓளிபரப்புச் செய்யப்பட்டதினை நான் அறிந்தேன்.

  • Replies 123
  • Views 16.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
slcricketers1al9.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

slcricketers1al9.jpg

சிங்கள பரப்புரையா? எங்கு காணப்பட்டது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பரப்புரையா? எங்கு காணப்பட்டது?

slcricketers1sf6.jpg

slcricketnl2gu5.jpg

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol:

சிறிலங்கா அணிக்கு ஆதரவு தெரிவிப்பது ஆளைவைத்து தமிழரை நாமே கொலைசெய்வதற்கு ஒப்பானது

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது எங்களுக்குள் ஒரு பிரச்சினையுமில்லை புலிதான் ஏதோ சொல்லுது என்ற மாதிரி கதை மாறலாம் அல்லவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதாவது எங்களுக்குள் ஒரு பிரச்சினையுமில்லை புலிதான் ஏதோ சொல்லுது என்ற மாதிரி கதை மாறலாம் அல்லவா?

உப்பிடித்தான் முன்பு லண்டனில் இலங்கை எயர்லங்கா விமானத்தின் அனுசரணையுடன் இலங்கை பாடசாலைகளின் பழைய மாணவர்களின் துடுப்பாட்டப் போட்டிகள் நடைபெற்றன. அதில் யாழ்ப்பாணப்பாடசாலைகள், கொழும்புப் பாடசாலைகள் விளையாடும். இதனை கொழும்பு ஊடகங்கள் லண்டனில் தமிழர்கள் சிங்களவர்களோடு ஒற்றுமையாக இருக்கிறார்கள், தமிழர் எல்லோரும் புலிகளுக்கு ஆதரவில்லை என்று பிரச்சாரம் செய்து வந்தது. இதனால் 96 ல் இருந்து யாழ்ப்பாணப்பாடசாலைகள் எயர்லங்கா விமானத்தினர் நடாத்தும் போட்டிகளில் கலந்து கொள்ளாமல், அதே நேரத்தில் வேறு ஒரு மைதானத்தில் தமிழர் விளையாட்டுப் போட்டியினை ஆரம்பித்து அதில் கலந்து, இறுதிப் போட்டியாக தமிழீழ அணிக்கும் , வெளி நாட்டு அணிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டிகள் நடைபெறும். இதில் பெரும்பாலும் பாகிஸ்தான், மேற்கிந்தியா தீவுகள் சேர்ந்தவர்களும் ,மற்றைய நாடுகளில் இருந்து சிலரும் தமிழீழம் அணிக்கு எதிராக விளையாடி வருகிறார்கள்,

மனைவிக்கு வருத்தம் என்றாலும் கட்டில் சுகம் கேக்கும் கூட்டம் இந்த விளையாட்டை விளையாட்டாக பாக்கனும் என்று சொல்லுபவர்கள்............

கனடாவில நடந்த கிரிக்கட் வெற்றி கொண்டாட்டமாம் இது என்ன

[

உது என்ன உவன் ரி.பி.சி தமிழோசை சீவகன் ஏதோ லண்டனில் இருக்கிற முழுத்தமிழரும் சிரிலங்கன் கிறிக்கெட் எல்லாரும் ஒண்டாத்தன் பார்க்கிறோம் எண்ட மாதிரி நேற்று எங்கோயோ ஒரு தவறனையில் நிண்டு நேரடி ஒளிபர்ப்பு செய்கிறார். இங்க சிங்கலவரும் தமிழரும் ஒண்டாத்தானாம் இருந்து பாக்கினம். தமிழரும் சிரிலங்கா கப் எடுப்பதை எதிர்பாக்கினமாம்.

இந்த சீவகனுக்கு தூதுவர் எவ்வளவு காசு , பெட்டைகளை எல்லாம் செற் பண்ணி கொடுக்கிறாரோ தெரியாது. அவ்வளவு உசாரா இன ஒற்றுமையை பற்றி கிறிக்கெட்டில் விளாசுறார். அதுல பியருக்காக போன நாலு தமிழரும். தமிழ் சமூகத்தால் மதிக்கப்படாத ஒழுக்கம் கெட்ட நாலு தமிழிச்சிகளும் நின்டவையாம். ஒருத்தர் அங்க தான் பிரச்சனை இங்க ஒண்டும் இல்லையாம் எண்டு அறிவுத்தனத்தை கொட்டினார்........

இப்படி சீவகன் கோஸ்டி தூதுவருக்கு மேலால நாலு இந்திய தமிழரையும் சேர்த்துகொண்டு அலைகிறார்.

In The Final Sri Lanka Will Lose

Finally Sri Lanka Will Lose

மேற்சொன்ன எனது கருத்தில் தனிப்பட்ட காழ்ப்புணர்வு எதுவும் கிடையாது. தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தமிழர்களுக்கு எதிரான பிரசாரத்திற்காகவும், போருக்கான நிதி திரட்டவும், இராணுவத்தின் போரிடும் மனவலிமையை அதிகரிக்கவும் தான் ஸ்ரீலங்கா அரசு பயன்படுத்துகிறது. கிரிக்கட் வெற்றியையும் "சிங்கத்தை எவரும் வெல்ல முடியாது" என்று சிறுபிள்ளைத்தனமாக இராணுவ வீரர்கள் மத்தியில் இனவெறியை தூண்டும் பிரசாரத்திற்காக தான் பயன்படுத்தும். விளைவு இன்னும் பல அப்பாவி தமிழர்களின் உயிர்கள் தான் பலியாகும்.

ஸ்ரீலங்காவை பொறுத்தவரை மதமும் கல்வியும் விளையாட்டும் பேரினவாத அரசியலுடன் கலந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. போர் என்றால் போர்! சமாதானம் என்றால் சமாதானம்! என்று தமிழர்களை பார்த்து அறைகூவல் விட்ட ஜே.ஆரின் வார்த்தைகளை தான் நாமும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

யுத்த காலத்தில் அரசியல் என்றும் விளையாட்டு என்றும் தமிழர்கள் பிரித்து பார்த்தால் அது இனவெறி ஸ்ரீலங்கா அரசின் குண்டு வீச்சுக்களால் சிதறி இறந்த ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களுக்கும், வீடிழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு மரங்களின் கீழும் தெருவோரங்களிலும் வாழும் 3 லட்சம் தமிழ் மக்களுக்கும் செய்யும் துரோகமாகும்.

Edited by vettri-vel

இங்கே சீவகனைத் திட்டுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. வெறும் வாயை மெல்லக் காத்திருக்கும் அவர்களுக்கு மெல்லுவதற்கு வெல் கொடுத்துவிட்டு நீங்கள் சொல்லுவதைச் சொல்லுங்கள் நாங்கள் செய்வதத் தான் செய்வோம் என்று பேசித் திரிகின்ற சிங்களத்திற்கு ஆதரவு காட்டுகின்ற தமிழர்கள் இருக்கும் வரை அவர்கள் குரைக்கத் தான் செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இலங்கையின் தோல்வியை யாராலும் மாற்ற முடியாது.தேசப்பற்றுள்ள தமிழ் மக்கள் இனவாத அரக்கர்களின் அணி தோற்க வேண்டும் என்று பிராத்திப்போம்.இவர்கள் கொலைகாரன் மகிந்தவின் முன் தோற்கடிக்கப்படவேண்டும்.இது மர நிழலின் கீழ் உணவின்றி உடையின்றி வாழும் தமிழ் மக்களுக்கு சமர்ப்பணம் ஆகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தமிழர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும்?

[சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2007, 17:54 ஈழம்] [கலாநிதி என்.மாலதி]

சிறிலங்கா துடுப்பாட்ட அணியைத் தமிழர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதனை விவரிக்கிறது இந்த செய்தி ஆய்வு.

அரசியலும் விளையாட்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை என்ற எண்ணத்தில் தமிழ்த் தேசியத்தை நூறு வீதம் ஆதரிக்கும் தமிழர் சிலர் சிறிலங்கா அணிக்கும் ஆதரவு வழங்குகிறார்கள்.

ஆனால் அரசியலும் விளையாட்டும் இன்றைய உலகில் பின்னிப் பிணைந்திருப்பதனை தமிழர் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது ஒன்றாகும்.

இதனை உணர்ந்தால் சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தமிழர் ஆதரிப்பதன் ஆபத்தையும் அவர்கள் உணருவார்கள்.

விளையாட்டும் அரசியலும் பிரிந்திருக்க வேண்டும் என்பது பலராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயமானாலும், அது ஒன்றோடு ஒன்று பிணைந்தே இருக்கிறது என்பதனையும் எவரும் மறுப்பதற்கில்லை.

உலக வரலாற்றில் அரசியலும் விளையாட்டும் இணைந்து செயற்பட்ட சந்தர்ப்பங்கள் அநேகம்.

உலகக்கிண்ண சுற்று இறுதிப் போட்டியை காண்பதற்காக மேற்கிந்திய தீவுகளுக்குச் சென்றிருக்கும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவை கேலி செய்து வீரகேசரி வெளியிட்ட கேலிச்சித்திரம்

தென்னாப்பிரிக்க இனவாத அரசியலை ஒழிப்பதற்கு அந்நாட்டின் விளையாட்டுப் புறக்கணிப்பு மிகவும் துணைபோனது அண்மையில் உலகில் மிகவும் பிரபல்யமாக நடந்தேறிய ஒரு விடயம்.

அதுவும் முக்கியமாக மேல்நாடுகளில் இந்த புறக்கணிப்பு பரவலாக விவாதிக்கப்பட்ட விடயம். இங்கு அரசியலும் விளையாட்டும் கலந்து ஒரு நன்மையான முடிவை தந்தமையானது, விளையாட்டும் அரசியலும் பிரிந்திருக்க வேண்டும் என்ற விவாதத்தை வலுவற்றதாகச் செய்துள்ளது.

தென்னாப்பிரிக்க நாட்டின் இனவாத அரசியலுக்கு எதிரான புறக்கணிப்பு பல அரங்குகளில் நடைபெற்றது. மொன்றியோல் நகரில் 1976 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ஒலிம்பிக் போட்டியை 22 ஆப்பிரிக்க நாடுகள் புறக்கணிப்புச் செய்தன.

அங்கு ஒலிம்பிக்கில் தென்னாப்பிரிக்காவோடு விளையாட்டுப் போட்டிகள் நடத்திய நியூசிலாந்து நாடும் பங்கு பற்றியதனையே ஆப்பிரிக்க நாடுகள் எதிர்த்தன. இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவோடு ஏனைய நாடுகள் விளையாட்டுத் தொடர்புகளை வைத்திருப்பதில்லை என்று 1977 இல் கிலெனீகல் என்ற இடத்தில் ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இது போல் வேறு பல அரசியல் காரணங்களுக்காக விளையாட்டுத் தொடர்பை வெவ்வேறு நாடுகளும் துண்டித்துக்கொண்ட சந்தர்ப்பங்கள் பல உள்ளன.

உதாரணமாக 1980 ஆம் ஆண்டில் மொஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை அமெரிக்கா புறக்கணிப்புச் செய்தது. மொஸ்கோ ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததற்கு எதிர்ப்பாகவே இதனை அமெரிக்கா செய்தது.

ஈராக் நாடு 1990 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கு கொள்வதனை ஆசிய ஒலிம்பிக் குழு தடை செய்தது. ஈராக் குவைத்தை ஆக்கிரமித்தனை எதிர்த்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இப்படி பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். தென்னாப்பிரிக்காவின் இனவாதமற்ற விளையாட்டுக் குழுவின் தலைவரான ஜோ இபிரகிம் விளையாட்டுப் புறக்கணிப்புக்கூடாக எப்படி அரசியலை மாற்றலாம் என்பதனை பின்வருமாறு கூறுகிறார்,

"விளையாட்டுப் புறக்கணிப்பு ஒரு நாட்டை அது பாராமுகமா இருக்கும் அதனுடைய அரசியல் விடயங்களில் மாற்றங்கள் செய்ய செய்வதற்கு மிகவும் உதவக்கூடியது ஒன்று. உலகில் பல இடங்களில் இப்படியான புறக்கணிப்பு நியாயமானதாக இருக்கும்".

தென்னாப்பிரிக்க விளையாட்டுப் புறக்கணிப்புப் பற்றி இன்று பல புத்தகங்கள் வெளிவந்திருப்பதும் இதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது.

ஒரு நாட்டின் விளையாட்டு அந்நாட்டின் அரசியலோடு எப்படி சார்ந்திருக்கிறது என்பதனை பல கோணங்களில் இருந்து ஆராயலாம்.

ஒரு நாட்டின் தேசியம் எப்படி விளையாட்டின் ஊடாக வெளிப்படுத்தப்படுகின்றது என்பது அரசியலுக்கும் விளையாட்டுக்கும் உள்ள பிணைப்பை சுட்டிக்காட்டும் ஒரு விடயம். இன்னும் ஆழமாக பார்க்கப் போனால், அரசியலுக்கும் விளையாட்டுக்கும் உள்ள பிணைப்பு பல்கலைக்கழகங்களில் அரசியல் விஞ்ஞானிகள் ஆராயும் விடயமாக மாறி வருவதனை அவதானிக்கலாம்.

இது, உலக அரங்கில் விளையாட்டும் அரசியலும் எவ்வாறு பிணைந்திருக்கின்றது என்பதனையும் அது எவ்வளவு முக்கியதான ஒரு விடயமாக பார்க்கப்படுகின்றது என்பதனையும் காட்டுகிறது.

"போட்டிக்கு அப்பால்: விளையாட்டும் அரசியலும்" (Mஒரெ Tகன் அ Gஅமெ: ஸ்பொர்ட்ச் அன்ட் Pஒலிடிcச் ப்ய் Mஅர்டின் Bஅர்ர்ய் Vஇனொகுர்) என்ற புத்தகத்தில் மாட்டின் வினோகர் பின்வருமாறு கூறுகிறார்,

"நாடுகள் விளையாட்டின் மூலம் தேசியத்தை வளர்த்து எடுக்கின்றது. விளையாட்டு ஒரு நாட்டின் பரப்புரைக்கான முக்கிய கருவியாகப் பயன்படுகின்றது".

மேல் நாடுகளில் விளையாட்டு இன்று மிகவும் முக்கிய ஒரு இடத்தை பிடித்துள்ளது. ஆகையால் இது ஒரு அரசியல் கருவியாக உபயோகிக்கப்படும் சந்தர்ப்பங்களும் மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் விளையாட்டு பிரேயோகிக்கப்படும் விதங்களை மேல்நாட்டவர் அங்கும் அரசியலும் விளையாட்டும் பிணைந்துள்ளது என்ற அதே கண்ணோட்டத்தோடுதான் பார்ப்பார்கள்.

இலங்கைத்தீவில் துடுப்பாட்ட விளையாட்டு இன்று எடுத்துள்ள முக்கியத்துவத்தை இந்தப் பின்னணியில் ஆராந்து பார்க்கலாம். முக்கியமாக சிறிலங்காவின் துடுப்பாட்ட அணியின் அண்மைய வெற்றிகளை தமிழர்கள் எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதனை மேல்நாட்டவர் அவதானிக்கும் போது அவர்கள் தமிழ்த் தேசியத்தை தவறாக மதிப்பிடக்கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளன.

பிரபல எழுத்தாளரான மாமனிதர் சிவராம்; (தராக்கி) ஒரு கட்டுரையில் சிறிலங்கா துடுப்பாட்டம் தமிழ்த் தேசியத்திற்கு எப்படி ஆபத்தானதாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

அண்மையில் பல அனைத்துலக ஊடகவியலாளர்கள் சிறிலங்கா அணியின் வெற்றிகளையும், சில தமிழர்கள் அந்த அணிக்குக் கொடுக்கும் ஆதரவையும் மிகைப்படுத்தி இது தமிழ்-சிங்கள ஒற்றுமைக்கு வழிவகுக்குமா என்ற கேள்விகளை எழுப்பத் தொடங்கி இருக்கின்றனர்.

இதன் மூலம் மேல் நாட்டவர், தமிழர் இந்த அணிக்கு கொடுக்கும் ஆதரவை எப்படி நோக்குவார்கள் என்பதனையும், சிங்களவர் எப்படி கிரிக்கட் மூலம் தமிழ் தேசியத்தை மறைக்கலாம் என்று சிந்திக்கிறார்கள் என்பது பற்றியும் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இவ்வாறே ஆழிப்பேரலையால் ஏற்பட்ட அழிவுக்குப் பின்னரும் தமிழ், சிங்கள சமூகங்கள் ஒன்றிணைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்று அனைத்துலக சமூகம் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்தது என்ன என்பது வரலாறு.

அரசியலும் விளையாட்டும் ஒன்றுடனொன்று தொடர்பற்றவை என்ற எண்ணத்தில் தமிழ்த் தேசியத்தை நூறு வீதம் ஆதரிக்கும் தமிழர் சிலர் சிறிலங்கா அணிக்கும் ஆதரவு வழங்குகிறார்கள். ஆனால் அரசியலும் விளையாட்டும் இன்றைய உலகில் பின்னிப் பிணைந்திருப்பதை தமிழர் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது ஒன்றாகும்.

இதனை உணர்ந்தால் சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தமிழர் ஆதரிப்பதன் ஆபத்தையும் அவர்கள் உணருவார்கள்.

http://www.eelampage.com/?cn=31576

"போட்டிக்கு அப்பால்: விளையாட்டும் அரசியலும்" (More Than a Game: Sports and Politics by Martin Barry Vinokur) என்ற புத்தகத்தில் மாட்டின் வினோகர் பின்வருமாறு கூறுகிறார்,

"நாடுகள் விளையாட்டின் மூலம் தேசியத்தை வளர்த்து எடுக்கின்றது. விளையாட்டு ஒரு நாட்டின் பரப்புரைக்கான முக்கிய கருவியாகப் பயன்படுகின்றது".

மேல் நாடுகளில் விளையாட்டு இன்று மிகவும் முக்கிய ஒரு இடத்தை பிடித்துள்ளது. ஆகையால் இது ஒரு அரசியல் கருவியாக உபயோகிக்கப்படும் சந்தர்ப்பங்களும் மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் விளையாட்டு பிரேயோகிக்கப்படும் விதங்களை மேல்நாட்டவர் அங்கும் அரசியலும் விளையாட்டும் பிணைந்துள்ளது என்ற அதே கண்ணோட்டத்தோடுதான் பார்ப்பார்கள்.

இலங்கைத்தீவில் துடுப்பாட்ட விளையாட்டு இன்று எடுத்துள்ள முக்கியத்துவத்தை இந்தப் பின்னணியில் ஆராந்து பார்க்கலாம். முக்கியமாக சிறிலங்காவின் துடுப்பாட்ட அணியின் அண்மைய வெற்றிகளை தமிழர்கள் எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதனை மேல்நாட்டவர் அவதானிக்கும் போது அவர்கள் தமிழ்த் தேசியத்தை தவறாக மதிப்பிடக்கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளன.

பிரபல எழுத்தாளரான மாமனிதர் சிவராம்; (தராக்கி) ஒரு கட்டுரையில் சிறிலங்கா துடுப்பாட்டம் தமிழ்த் தேசியத்திற்கு எப்படி ஆபத்தானதாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

அண்மையில் பல அனைத்துலக ஊடகவியலாளர்கள் சிறிலங்கா அணியின் வெற்றிகளையும், சில தமிழர்கள் அந்த அணிக்குக் கொடுக்கும் ஆதரவையும் மிகைப்படுத்தி இது தமிழ்-சிங்கள ஒற்றுமைக்கு வழிவகுக்குமா என்ற கேள்விகளை எழுப்பத் தொடங்கி இருக்கின்றனர்.

இதன் மூலம் மேல் நாட்டவர், தமிழர் இந்த அணிக்கு கொடுக்கும் ஆதரவை எப்படி நோக்குவார்கள் என்பதனையும், சிங்களவர் எப்படி கிரிக்கட் மூலம் தமிழ் தேசியத்தை மறைக்கலாம் என்று சிந்திக்கிறார்கள் என்பது பற்றியும் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இவ்வாறே ஆழிப்பேரலையால் ஏற்பட்ட அழிவுக்குப் பின்னரும் தமிழ், சிங்கள சமூகங்கள் ஒன்றிணைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்று அனைத்துலக சமூகம் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்தது என்ன என்பது வரலாறு.

அரசியலும் விளையாட்டும் ஒன்றுடனொன்று தொடர்பற்றவை என்ற எண்ணத்தில் தமிழ்த் தேசியத்தை நூறு வீதம் ஆதரிக்கும் தமிழர் சிலர் சிறிலங்கா அணிக்கும் ஆதரவு வழங்குகிறார்கள். ஆனால் அரசியலும் விளையாட்டும் இன்றைய உலகில் பின்னிப் பிணைந்திருப்பதை தமிழர் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது ஒன்றாகும்.

இதனை உணர்ந்தால் சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தமிழர் ஆதரிப்பதன் ஆபத்தையும் அவர்கள் உணருவார்கள்.

தொடர்புபட்ட செய்தி: தென்னாப்பிரிக்காவைப் போல் சிறிலங்காவுக்கும் துடுப்பாட்டத் தடை ஏற்படுத்த புலம்பெயர் தமிழர்கள் தீவிரம்

puthinam

இதுவரைக்கும் இன்றும் தமிழ்மக்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கும் கொலைகளுக்கும் எதிராக குரல் சிங்கள மக்களிடமிருந்து வரவில்லை, அப்படி எதாவது வந்திருந்தால் அரசியல் லாபத்திற்குதான்....

இலங்கையை பொறுத்தவரை தமிழ்மக்கள் அவர்களின் காலுக்கு கீழ் எப்போது இருக்கவேண்ட அடிமைகள்.

தலையை தூக்கினால் தலை இல்லை....

ஒரு சிறிய உரிமையைத்தானும் தர எவனுக்கும் விருப்பமில்லை... காலம் கடத்தி தட்டிக்கழித்து

எம் மக்களை ஆண்டியாக்கி மீண்டும் ஆதி கால மனிதவாழ்க்கைக்கு ஆக்கியுள்ளான்...

உலகின் உதவிகளைக்கூட நமது மக்களுக்கு கிடைக்காமல், தானும் உதவி செய்யாமல் தமிழ் மக்களை இதற்கு மேல் கொடுமை இல்லை என்ற அளவிற்கு வருத்தி உலகிற்கு பூசி மொளுகி பொய்கள் சொல்லி

உலகத்திற்கு இளிச்சமுகத்துடன் கிறிக்கட் என்ன என்ன விளையாட்டு விளையாடினாலும்

அவனது இனவாத விளையாட்டை உலகிற்கு வெளியுலகிற்கு கொண்டுவரும் கடமைப்பாடு தமிழ்மக்களின்

கைகளில் உள்ளது... இதற்கு பல ஆயிரக்கணக்கான மயூரன்கள் உருவாக வேண்டும்...

மிகப்பெறுமதியற்ற உயிரைகொடுத்து போராடும் போரட்டவீரனுடன் ஒப்பிடும் போது

வெளி உலகில் இருக்கும் மக்கள் செய்யவேண்டிய கடமைகள் பல உண்டு....

இலங்கை கிறிக்கட் விளையாடினால் என்ன? ... விளையாடாட்டால் என்ன? வென்றால்? தோல்வி என்றால்

என்னா? சொறணை உள்ள தமிழனுக்கு சொல்லாமல் விளங்கும்......சொல்லியும் விளங்காதவனை நீங்கள் தீர்மானியுங்கள்?

Australia v Sri Lanka, World Cup final, Barbados

Sri Lanka lose Tharanga chasing 282

cricinfo.com

  • கருத்துக்கள உறவுகள்

முத்தையா முரளிதரனின் பொன்னான வார்த்தைகள்... :lol:

Muralitharan, who has taken 23 wickets at this tournament compared to his seven in 1996, said: ``It helps all the country rather than anything else. We have all nationalities in our team and peace as well because we get together and play.

``We are going through a bad situation in our country but this could achieve something different.''

http://www.thestar.com/article/207843

இயற்கையை நம்பும் தமிழனும் அதன் வழி தமிழரை வழிநடத்தும் தலைவனும் என்றும் நம்புவது இயற்கையை.

அதன் துணையுடன் கண்ணீர் விட்ட தமிழர்கள் அனைவரினதும் பிராத்தனையுடன் சிங்க இனம் தோற்று தலை குணிந்து சிங்களதேசத்திற்கு செல்கின்றார்கள்.

மழை வராமல் நேரத்திற்கு தொடங்கி இருந்தால் ஒரு வேளை சிங்கத்திற்கு பிறந்தவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கலாம் . இயற்கையே தமிழரோடு நின்று சிங்களத்தை வெற்றி பெறமுடியாமல் செய்து விட்டது...

இயற்கை மட்டுமல்ல..தர்மம் ஜெயிக்கும்..

தெரிவிக்கக் கூடாது இதுதான் இறுதி முடிவு, வானவில்லே சொல்லிட்டேன்ல :lol:

எதிரியைக் கூட நம்பலாம். ஆனால் பச்சோந்திகளை அதுவும் துன்பம் படும் போது கைவிட்டுக் கட்சி மாறும்: பச்சோந்திகளை நம்பவே கூடாது.

எதிரியைக் கூட நம்பலாம். ஆனால் பச்சோந்திகளை அதுவும் துன்பம் படும் போது கைவிட்டுக் கட்சி மாறும்: பச்சோந்திகளை நம்பவே கூடாது.

உங்களை நாங்கள் நம்பவே இல்லை எதுக்கு கவலை படுகிறீர்கள் :lol: :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.