Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி திணைக்களங்கள் பெரும்பான்மையின இளைஞர்களால் நிரப்பப்படுகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி திணைக்களங்கள் பெரும்பான்மையின இளைஞர்களால் நிரப்பப்படுகிறது.

February 24, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சியில் உள்ள பல திணைக்கங்களின் வெற்றிடங்கள் அண்மைக்காலமாக பெரும்பான்மையின இளைஞர் யுவதிகளால் நிரப்பட்டு வருகிறது. இது தொடர்பில் வேலையற்று காணப்படும் மாவட்ட இளைஞர் யுவதிகள் கவலையும் விசனமும் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் வேலையற்று காணப்படுகின்றனர. க.பொ.த சாதாரணம் தொடக்கம் பட்டதாரிகள் வரை இவ்வாறு வேலையற்றுக் காணப்படுகின்றனர். இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல அரச திணைக்களங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்கள் கடந்த மூன்றாண்டுகளில் தென்னிலங்கையைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளால் நிரப்பட்டு வருகிறது.

குறிப்பாக இலங்கை மின்சார சபை, புகையிரத திணைக்களம், வனவள திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், நில அளவை திணைக்களம்.மத்திய சுற்றுசூழல் அதிகார சபை, மற்றும் மாவட்டச் செயலகம் பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட பல திணைக்களங்களில் சாதாரன சிற்றூழியர்கள், சாரதிகள் தொடக்கம் பல பதவி நிலைகளுக்கு இவ்வாறு தென்னிலங்கையைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் பணியிடங்களுக்கு நிரப்பட்டு வருகின்றனர்.

யுத்தப் பாதிப்புகளுக்குள்ளான ஒரு மாவட்டத்தில் தகுதியிருந்தும் வேலையற்று பலர் உள்ள போதும் அரசியல் நியமனங்களால் இவ்வாறு நியமிக்கப்படுவது மாவட்டத்தைச்சேர்ந்தவர்களை கவலைடையச் செய்துள்ளது. முக்கியமாக கடந்த மூன்றாண்டுகளில் இவ்வாறு அதிகளவானர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

http://globaltamilnews.net/2019/114335/

எல்ல்லாறும் லண்டன்,கனடா என்று போனால் அவன் வருவான் தானே!!!!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

எல்ல்லாறும் லண்டன்,கனடா என்று போனால் அவன் வருவான் தானே!!!!!

2 hours ago, கிருபன் said:

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் வேலையற்று காணப்படுகின்றனர. க.பொ.த சாதாரணம் தொடக்கம் பட்டதாரிகள் வரை இவ்வாறு வேலையற்றுக் காணப்படுகின்றனர். இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல அரச திணைக்களங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்கள் கடந்த மூன்றாண்டுகளில் தென்னிலங்கையைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளால் நிரப்பட்டு வருகிறது.

குளக்கரையில் முகத்தை பிடித்து மூக்கின் நுனி தண்ணீரில் படும் வரைக்கும் அழுத்தினாலும் .....

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மையானவர்கள் வேலைநிமித்தம் கிளினொச்சியில் இனி வசிப்பார்கள். மெல்ல மெல்ல புத்தர்சிலைகள் அங்கே வரும்.  புத்தளம் ,அம்பாறை, திருமலை தமிழர் பிர்ரதேசங்களில் இனி தமிழர்கள் சிறுபான்மையாகிவிடுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பகுதியில் உள்ள பணியிடங்களை பெரும்பான்மையினரை கொண்டு நிரப்பிவிட்டு, அவர்கள் சில காலங்களில் மாற்றல் பெற்று செல்ல அப்பணியிடங்களில் பணியாற்ற யாரும் இல்லாத நிலமை காணப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

கிளிநொச்சி திணைக்களங்கள் பெரும்பான்மையின இளைஞர்களால் நிரப்பப்படுகிறது.

February 24, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சியில் உள்ள பல திணைக்கங்களின் வெற்றிடங்கள் அண்மைக்காலமாக பெரும்பான்மையின இளைஞர் யுவதிகளால் நிரப்பட்டு வருகிறது. இது தொடர்பில் வேலையற்று காணப்படும் மாவட்ட இளைஞர் யுவதிகள் கவலையும் விசனமும் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் வேலையற்று காணப்படுகின்றனர. க.பொ.த சாதாரணம் தொடக்கம் பட்டதாரிகள் வரை இவ்வாறு வேலையற்றுக் காணப்படுகின்றனர். இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல அரச திணைக்களங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்கள் கடந்த மூன்றாண்டுகளில் தென்னிலங்கையைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளால் நிரப்பட்டு வருகிறது.

....

யுத்தப் பாதிப்புகளுக்குள்ளான ஒரு மாவட்டத்தில் தகுதியிருந்தும் வேலையற்று பலர் உள்ள போதும் அரசியல் நியமனங்களால் இவ்வாறு நியமிக்கப்படுவது மாவட்டத்தைச்சேர்ந்தவர்களை கவலைடையச் செய்துள்ளது. முக்கியமாக கடந்த மூன்றாண்டுகளில் இவ்வாறு அதிகளவானர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

http://globaltamilnews.net/2019/114335/

யார் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர்? இதை பற்றி அவர் எதுவும் சொன்னதாக செய்திகள் வரவில்லையே?  வேலையற்ற பட்டதாரிகள் அவரது அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தததாக செய்திகள் ஏதாவது வந்ததா?

அங்கே எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் எவரும் இல்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடையளுக்கு டொக்டர் எஞ்சினியர் எண்ட கெப்பர் நினைப்புகளாலைதான்  கனவிசயங்களை இழந்து கொண்டு வாறம். அடுத்த பிரச்சனை எங்கடை அரசியல்வாதிகள். இனப்பிரச்சனை சம்பந்தமாயும் ஒரு கோதாரியும் செய்யேல்லை......சனத்தின்ரை அபிவிருத்தி சம்பந்தமாயும் ஒரு   நாசமறுப்பும் செய்யேல்லை. கொழும்பிலை ஏசி றூமிலை இருந்துகொண்டு திண்டு குடிச்சுப்போட்டு அப்பப்ப அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எங்கடையளுக்கு டொக்டர் எஞ்சினியர் எண்ட கெப்பர் நினைப்புகளாலைதான்  கனவிசயங்களை இழந்து கொண்டு வாறம். அடுத்த பிரச்சனை எங்கடை அரசியல்வாதிகள். இனப்பிரச்சனை சம்பந்தமாயும் ஒரு கோதாரியும் செய்யேல்லை......சனத்தின்ரை அபிவிருத்தி சம்பந்தமாயும் ஒரு   நாசமறுப்பும் செய்யேல்லை. கொழும்பிலை ஏசி றூமிலை இருந்துகொண்டு திண்டு குடிச்சுப்போட்டு அப்பப்ப அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கினம்.

வடக்கிலதான் நல்ல அரசியல் வாதிகள் இருக்கின்றனர் தானே கிழக்கில் கூட இவர்களின் அரசியல் வங்குரோந்தால் தான் கன வேலைப்பாடுகள் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டியது மற்றவர்களிடம் போய் சேர்கிறது இதனால் என்னவோ மத்திய கிழக்கில் கிழக்கு மாகாண இளைஞர் யுவதிகள் வேலை செய்கின்றனர்.

வடக்கில் ஐரோப்பா நாடுகளை நோக்கி பறக்கிறார்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.