Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென் ஆப்பிரிக்காவின், சிங்கத்தாய் (Lion Mamma)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆப்பிரிக்காவின், சிங்கத்தாய் (Lion Mamma)

Nokubonga Qampi

 

நேரம் நள்ளிரவை தாண்டி விட்டது. அந்த தாய் வேலை முடித்து வந்த அசதி....

அவரது ஒரே மகள், தனது நண்பிகள் வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கே தங்கி மறுநாள் தான் வருவதாக சொல்லி இருந்தார்.

போன் அலறுகிறது.... திடுக்கிட்டு எழுகிறார். அழைப்பது...மகள் இல்லையே. கிராமத்தில் 500மீட்டர் தூரத்தில் இருக்கும் மகளின்  நண்பி பேசுகிறார்.... பதட்டத்துடன்.

உன் மகளை... சில குடி கார இளைஞர்கள் ... பாலியல் வன்புணர்வு செய்கிறார்கள்..... அவள் போடும் கூச்சல் எனக்கு கேட்கிறது. 

அவரிடம் கேட்டாலும் உதவிக்கு போக மாட்டார்கள்... காரணம்.. பயம்.... கேட்பதில் பயனில்லை. 

பயம்... அதிர்ச்சி.... கோபம்.... நண்பிகள் எங்கே... அவள் மட்டும் என்றால் எப்படி?

இரண்டு அறை வீடு. ஒன்று சமையல் அறை.... அங்கே செல்கிறார். கையில் கிடைத்தது.... காய்கறி வெட்டும் கத்தி....

போலீசாரை அழைக்கிறார். அவர்கள் அந்த கிராமத்துக்கு வந்து சேர முன்னர், மகள் இறந்து விடக் கூடும். அவர்களும் ஓடி விடக்கூடும்.

வெளியே ஓடுகிறார்....  கும் இருட்டு... போனில் உள்ள டார்ச் லைட்டின் வெளிச்சத்தில் ஓடோடி செல்கிறார்.

கிராமத்தின் ஒரு மூலையில்... நான்கு வீடுகள். அதில் ஒரு  (நண்பியின்) வீட்டில் தான் இவரது மகள் தூங்கிக் கொண்டிருந்தார். மணி 1.30. அவளை எழுப்ப விரும்பாத நண்பிகள், வெளியே இயற்கை அழைப்பினால் சென்றிந்தார்கள்.

அவர்கள், கதவை பூட்டாமல் போனதை, அவதானித்த மூன்று, குடிகார இளைஞனர்கள் உள்ளே புகுந்து கொண்டு, அந்த பெண்ண தாக்க ஆரம்பித்திருந்தார்கள்.

நல்ல வேளையாக ஒரு பெண்ணிடம் இருந்த போன் மூலம் அந்த தாய்க்கு தகவல் போனது.

இதோ அந்த (சிங்க) தாய் ஓடி வருகிறார்.

அருகில் செல்லும் போது.... மகளின்  அவலக் குரல் கேட்கிறது. பயம், கோபமாக மாறுகிறது. குரலை தொடர்ந்து செல்கிறார். உள்ளே, கையில் இருந்த வெளிச்சத்தில், மூவர்.... ஒருவர்... அலறிக் கொண்டிருக்கும் மகளை.... வன்புணர்வு செய்து கொண்டிருந்தார்.

அடுத்த இருவர்களது காலாடை, முழுங்காலளவுக்கு இறங்கி இருக்கிறது.... தமது முறைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர் என புரிந்தது.

இருட்டில், வருவது யார் என்று தெரியவில்லை.... வெளியே போன பெண்களோ..... மப்பில்.... தீர்க்கமாக பாய்ந்து வந்தனர், இருவரும்..... 

சில கணங்கள் தான்... அவர்கள் கையில் இருந்த வெளிச்சத்தினை பாச்சிய போனினை தட்டி விடலாம், அவரையும் தாக்கலாம்... 

கையில் இருந்த கத்தி..... எழுந்தது.... ஒருவர் ஐயோ என்று அலறி வீழ்ந்தார்... அடுத்தவர் குத்து வாங்கிய வாறே யன்னலோடு பாய்ந்து, வெளியே விழுந்து காயத்துடன் ஓடினார்....

மகளை தாக்கியவரோ.... என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ளவில்லை எனினும்.... எழுவதற்கு முன்னரே.... முதுகில் கத்தி பாய்ந்தது.

ஒருவர் கொலை.... இருவர் படுகாயம்.

*****
போலீசார் வந்தனர்.... அந்த தாய் கைதானார்... மகள் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டார்.

அன்று பகல் முழுவதும் போலீஸ் நிலையத்தில்..... தவித்துக் கொண்டிருந்தார் மகளை நினைத்து.

ஆனால் வெளியே... தென் அப்பிரிக்காவே ஆர்த்தெழுந்திருந்தது.

உலகின் மிக மோசமான பாலியல் வன்புணர்வுகள் நடக்கும் ஒரு நாடு தென்னாபிரிக்கா.

அங்குள்ள சட்டப்படி.... அந்த தாயின் பெயரை நீதிமன்றம் சொல்லும் வரை வெளியே சொல்ல முடியாது.

ஆனால் குட்டியை கவ்வி செல்லும் பெண் சிங்கம் ஒன்றின் படத்தினை போட்டு, சிங்கத்தாய் என்ற அடைமொழியில் அவரது கதையை வெளியே சொன்னன தென் ஆப்பிரிக்க பத்திரிகைகள். 

அந்தப் பெயரே நிலைத்து விட்டது.

போலீசாருக்கும், அரசுக்கும் எதிராக பெரும் எதிர்ப்பு கிளம்பியது. 

விளைவாக, சிங்கத்தாய் பிணையில் விடுவிக்கப் பட்டு, மகளை கவனிக்க வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப் பட்டார்.

18 மாதங்களின் பின்னர் வழக்கு நீதிமன்றம் வந்தது. தென் அப்பிரிக்காவில் பணம் இருந்தால் தான் சிறந்த வழக்குரைஞர்...நீதி. 

ஆனாலும், மக்கள் பெரும் நிதியை சிங்கத்தாய்க்கு அளித்தனர். மிகவும் திறமையான வழக்கறிஞர்கள் இலவச சேவை வழங்க தாமே வந்து நின்றார்கள்.

அவர் செய்தது, தனது, தனது மகளை காப்பத்துக்குமான கைமோசக் கொலை என்று கூறி, நீதிமன்றம் அவரை விடுவித்து விட்டது.

இந்த தாக்குதலினால் பேசும் சக்தியை இழந்து விட்ட, அவரது மகள், நீதிமன்ற தீர்ப்பினைக் கேட்டு புன்முறுவல் செய்தார்.

காயங்களுடன் தப்பி ஓடிய இருவரும், 30 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப் பட்டு உள்ளனர். 
 

https://www.bbc.co.uk/news/stories-47726967

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது... ஒரு பின்னூட்டம் கூட இல்லை.

இந்த தாய்... கறுப்பு பெண் இல்லை என்றால்... 'வீரத்தாய்... பாசத்தாய்'.... என்று போட்டுத் தாக்கி இருப்பார்களோ என்று நினைக்க தோன்றுகிறது.

அவருக்கு என்றால்... தக்காளி சோஸ் அடுத்தவர்களுக்கு என்றால் ரத்தமா?

ம்...ம்  

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

என்னப்பா இது... ஒரு பின்னூட்டம் கூட இல்லை.

ஏதோ அவசரத்தில் விட்டுவிட்டோம் என எண்ணுகிறேன்.

 

17 hours ago, Nathamuni said:

ஆனால் குட்டியை கவ்வி செல்லும் பெண் சிங்கம் ஒன்றின் படத்தினை போட்டு, சிங்கத்தாய் என்ற அடைமொழியில் அவரது கதையை வெளியே சொன்னன தென் ஆப்பிரிக்க பத்திரிகைகள். 

சிங்கத்தாயின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கத்திற்கு நன்றி முனி...இப்ப தான் உது பற்றி கேள்விப்படுகிறேன் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image result for lion carrying a cub

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த திரியை நீங்கள் இணைத்தவுடன் முதல் ஆளாக வாசித்தவன் நானாகத்தான் இருக்குமென நினைக்கின்றேன்.

இதற்கு பதில் எழுத ஏதோ ஒரு படத்தை தேட வெளிக்கிட்டு.....

கூகுளும் படம் காட்ட வெளிக்கிட...

கடைசியில் உள்ள இடமெல்லாம் போக வெளிக்கிட்டு.........

எதுக்காக வந்தமோ அதையெல்லாம் மறந்து வேறு உலகில் நின்றதுதான் மிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

மிருகங்கள் கொல்லப்படுவது தவறே இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

பெண்பிள்ளைகளை துணிச்சலோடும் உடலுறுதியோடும் வளர்க்க வேண்டிய தேவையை சுட்டி நிற்கிறார் சிங்கத்தாயார்.
பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்ள எங்கெங்கு (கண், விதை) தாக்கிவிட்டு தப்பிக்கலாம் என்று கற்றுக்கொடுக்க வேண்டும்.

நன்றாக எழுதியிருக்கிறீங்கள் நாதமுனி. அப்படியே உக்ரேன் தேர்தலில் தொலைகாட்சியில் அதிபராக நகைசுவை வேடம் தாங்கியவர் வென்றதையும் (முதல் கட்ட முடிவில்), சவுதி பத்திரிக்கயாளர் ஜமால் கொலையால் சவுதி Hack செய்து பிரித்த அமேசான் நிறுவனர் ஜெப் குடும்பம் பற்றியும் மொழிபெயர்த்து எழுதுங்கள். வாசிக்க ஆவலாக இருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிஜமாகவே ஒரு வீரத்தாய்தான் அவர்.....!   👍

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரஞ்சித் said:

மிருகங்கள் கொல்லப்படுவது தவறே இல்லை

தவறு மனித மிருகங்கள் என்பது தான் சரி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.