Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடையையும் மீறி ஹிஜாப் அணிந்து சென்ற ஆசிரியை விரட்டி அடிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, கிருபன் said:

முஸ்லிம்கள் பல்வேறு இஸ்லாமிய மார்க்கங்களைப் பின்பற்றுகின்றார்கள். ஷியா, சுனி, வஹாபி, சூபி இன்னும் பல. இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அதிகமானோர் சூபியிஸத்தைப் பின்பற்றுவர்கள் என்று படித்திருந்தேன். அவர்கள் வன்முறையை நாடுவதில்லை. வஹாபிகள்தான் இறுக்கமான ஷரியா  சட்டங்களையும், பிற மதங்கள் மீதான குரோதங்களையும் காட்டுகின்றனர். இந்த வன்முறையாளர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டது முஸ்லிம் அரசியல்வாதிகளின் தவறு.

அதைத்தானே சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

கொள்ளிக் கட்டையால் தலை சொறிவது போல, அவர்களிடம் இருந்து வந்த பணத்தில், தமது அரசியல் எதிரிகளை ஒழித்து, தமது அரசியலை வளர்க்க முயன்று, தெரிந்தோ, தெரியாமலோ, தமக்கும், தமது சமூகத்துக்கும் பெரும் அவலத்தினை தந்து விட்டனர்.

தெரியாமலா சொன்னார்கள், காசு கொடுப்பவன், சும்மாவா கொடுப்பான்?

  • Replies 141
  • Views 13.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான்,

நீண்ட நாட்களின் பின் உரையாடுவதில் மகிழ்சி.

இதை அரபியிசம் என்பது சரியில்லை. ஜோர்தான், எகிப்து, மொரொக்கோ, பலஸ்தீனம், இப்படி பல அரபு நாடுகளில் இது இல்லை. அவர்களும் இந்த வஹாபியிசத்தை வெறுக்கிறார்கள். 

அரபியிசம் என இலங்கையில்தான் நான் புதிதாக கேள்விப்படுகிரேன். லாரன்ஸ் ஒவ் அரேபியா, நசார் காலத்து கொள்கையான அரபுத் தேசியவாதம் இருக்கிறது ஆனால் அது மதச்சார்பற்றது.

கிருபன்,

நானறிந்த வகையில் சூபீசம் என்பது சன்னியின் உட்பிரிவு. பஜனை பாடல், ஞானிகளின் போதனையை மனம் செய்வது, இவ்வாறு கிட்டத்தட்ட நமது பக்தி மார்கம் +ஞான மார்க்கத்தின் கலவையான ஒரு mystic sect. புகையின் நடுவில் நின்று மனமுருக பாடியபடி , சுழண்டாடி இறைவனை அடையும் தொழுகை முறை எல்லாம் கிட்டத்தட்ட இந்து மத வழிபாட்டைப் போலிருக்கும்.

இதை வஹாபிகள் அறவே வெறுக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

சீரடி சாய்பாபா ஒரு இஸ்லாமியர் அவரை இன்று எம்மவர் பலர் வழிபடுகிறார்கள்....அவர் இஸ்லாமியர் என்று தெரிந்து தான் வழிபடுகிறார்களா அல்லது இந்தியாவிலிருந்து இறக்குமதியான சாமி  என்ற வகையில் வழிபடுகிறார்களா? 

உருவ வழிபாட்டை இஸ்லாமியர்கள் வெறுக்கின்றனர் .....அதற்காக ஏனைய மதத்தினரின் வழிபாட்டு முறையை உதாசீனம்பண்ணமுடியாது....

  • கருத்துக்கள உறவுகள்

சீரடி பாபா ஒரு இந்து குடும்பத்தில் பிறந்து இஸ்லாமிய குடும்பத்தால் தத்தெடுக்க பட்டு, இஸ்லாமியராக வளர்ந்தவர்.

கோவிலுக்கும் மசூதிக்கும் போய் சிவனும் அல்லாவும் ஒண்ணு இத அறியாதான் வாயில மண்ணு என்று சொல்லி ரெண்டு பக்ககத்தையும் கடுப்பாக்கினவர்😂

எதை குடிச்சா பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கிற எங்கட ஆக்கள் இவரையும் வழிபடுகிறார்கள்.

ஆனால் கோவிலுக்கு போய் கொஞ்ச நாளிலேயே அங்கே இருக்கும் ஊழியக்கார்கள் பாபாவின் வரலாற்றை, மகிமையை எல்லாம் சொல்லிக் கொடுப்பார்கள். 

நமக்கு நன்மை விளையும் எண்டா, சீரடி பாபா என்ன ஹிஸ்புலாவையே கும்பிட எங்கட ஆக்கள் ரெடிதானே.

  • கருத்துக்கள உறவுகள்
 
8 hours ago, Justin said:

ஓம், நாதமுனி! நாங்கள் "பாதுகாப்பு" என்ற போர்வையில் அவர்களை சாறி உடுத்தி வா என்று தமாஸ் விடுவோம்! பிறகு அவங்கள் எங்களுக்குப் படிப்பிச்சும் விடோணும்! லூசுதனமான ஒரு வேலையைச் செய்து போட்டு, இன்னும், அவர்களே பிழை என்று தெனாவெட்டாக நிக்கிறீங்கள் பாருங்கள்? அங்க நிற்கிறான் "நவீன புத்திசாலித் தமிழன்"! 

கோசன், "கூழ் முட்டை" என்கிறார், நீங்களோ  "நவீன புத்திசாலித் தமிழன்" என்கிறீர்கள். இது என்ன விதமான கருத்தாடல் என்று புரியவில்லை.

சரி, மெத்தப் படித்த பெருமக்களே, பின்வரும் கேள்விகளுக்கு பதிலை தாருங்கள்.

இந்த திரியின் தலைப்பே, 'தடையையும் மீறி ஹிஜாப் அணிந்து சென்ற ஆசிரியை விரட்டி அடிப்பு'.

1. தடை செய்யப்பட்டதாயின், ஏன் அணிந்து சென்றார்கள் என்று முதலில் விளக்குங்கள். (ஹிஜாப் என்றால், அது, புர்கா என்றால் இது என்று படிப்பிக்க கிளம்பி வர வேண்டாம். 'தடை செய்யப்பட்ட' என்ற தலைப்புக்குள் மட்டும் நில்லுங்கள்)

2. இன்னுமோர் திரியில் வோல்ஸ்ரீட் ஜேர்னல் பத்திரிகையில் வந்த கட்டுரையின் தமிழாக்கம் வந்துள்ளது.

  • 1.1 உயிர்த்தஞாயிறு தாக்குதல்களின் பின்னர்  கிறிஸ்தவர்கள் பௌத்தர்கள் மத்தியில் மேலும் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ள அதேவேளை  குரானை கையில் வைத்திருந்தமைக்காகவும் தேடுதல்களின் போது நாங்கள் கைதுசெய்யப்படுகின்றோம் என முஸ்லீம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
  • 1.2 அரசபேருந்துகள் உட்பட வாகனங்களில் முஸ்லீம்களை ஏற்ற மறுத்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
  • 1.3 கடந்த ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பில் இடம்பெற்ற கார்விபத்து,முஸ்லீம்களிற்கும் மற்றொரு சமூகத்தவர்களிற்கும் இடையில் மோதலை உருவாக்கியது.
  • 1.4 தற்கொலை குண்டுதாரிகளின்  குடும்பத்தினர் கொழும்பில் பல்லின சமூகத்தவர்கள்  அவர்கள் வாழும் பகுதியில் முற்றுகைக்கு உள்ளாகியுள்ளனர்.
  • 1.5  கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை பரீட்சையை முடித்துக்கொண்டு சகோதரர் ஒருவர் வீடு திரும்பியவேளை வீட்டின் முன்னாள் நின்றிருந்தவர்கள் அவருடன் மூர்க்கத்தமான முறையில் நடந்துகொண்டுள்ளனர்.
  • 1.6 முபாரக்கின் நடவடிக்கை எங்கள் மீது தீவிரவாத முத்திரையை குத்தியுள்ளது என தெரிவிக்கின்றார் அவரது உறவினரான முகமட் நவீர். எங்கள் அயலவர்கள் எங்களுடன் கதைக்கின்றார்கள் இல்லை எங்கள் முகத்தை கூட பார்க்க மறுக்கின்றனர் என அவர் குறிப்பிடுகின்றார்.

இவை என்ன சொல்கின்றன. 

அவர்கள் அணிந்திருந்த ஆடைகளினால் பயந்த, அரச பேருந்து, டாக்ஸிகள் பயத்தில் அவர்களை ஏத்தாமல் சென்றார்கள். இந்த ஆசிரியர்களை அவர்கள் அணிந்திருந்த உடையின் காரணமாக பாடசாலையில் எதிர்த்த மக்கள் செய்தது மட்டும் தான் தவறா அல்லது அடுத்தவர்கள் செய்வது தவறு இல்லையா.

இலங்கை ஜனாதிபதி, முஸ்லீம் மக்கள் சில வசதியீனங்களுக்கு முகம் கொடுப்பதை நான் அறிவேன். சிறிது காலம் பொறுமை காத்து, பாதுகாப்பு தரப்புக்கு ஒத்துழைக்கும் படி கேட்க்கின்றார்.

பாடசாலையில் நடந்ததை தூக்கிப் பிடிக்கும் நீங்கள், மேலே பாயிண்ட் 2 ன் கீழ் உள்ளவைகளை என்னவென்று சொல்வீர்கள்?

இலங்கையில் ஆசிரியர் நியமனம் ஒரு முக்கியமான நிபந்தனையுடன் தான் கொடுக்கப் படுகின்றது. 5 வருட காலத்துக்கு, எங்கு நியமனமோ, அங்கு பணி செய்து முடித்த பின்னே, வேறு இடத்துக்கு மாறுதல் கிடைக்கும்.

இங்கு அரசியல் நுழையக்கூடாது என, ஆசிரியர் சங்க கவனிப்பில் தான் இந்த 5 வருட பணி கண்டிப்பாக கடைப்பிடிக்கப் படுகின்றது.

இம்முறை அதே ஆசிரியர் சங்கமே சம்மதம் தெரிவித்திருக்கிறது, அந்தளவுக்கு கவனமாக வீடியோ எடுத்து பெரிதாக்கி உள்ளார்கள்.

இந்த சந்தர்ப்பத்தினை உருவாக்க, தடை செய்யப்பட்ட ஆடையை அணிந்து சென்று, மக்களின் எதிர்ப்பினை திட்டமிட்டு வீடியோ பதிவு செய்து, அதை வைத்தே, 5 வருடம் முன்னதாகே மாறுதலை பெற்றுக் கொண்டு விட்டனர் என்ற செய்திக்கு, உங்கள் பதில் என்ன, நியாயவாதிகளே? 

இது எனது கருத்து அல்ல. கொழும்பு பத்திரிகை நண்பர்கள் கருத்து.

************

தாக்குதல் நடந்த மறுநாள், நான் ஒரு திரியில், இது சிங்களவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த சந்தர்ப்பத்தினை வழங்கி உள்ளது. இஸ்லாமியரின் அரசியல் பலம் சிதைக்கப்படும், அவர்களது பொருளாதார பலம் நசுக்கப்படும் என்று சொன்னேன். 

அதுவே நடக்கின்றது.

நான் மக்களின் மனநிலை குறித்து சொல்ல, நீங்கள் இருவரும், ஏதோ எனது நிலைப்பாடு என்று, பெரிய பாடம் எடுக்க முனைகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உருவ வழிபாட்டை இஸ்லாம் தடை செய்வது மட்டும் இல்லை. இஸ்லாத்தின் 5 தூண்களில் முதலாவது “நம்பிக்கை”. அதாவது லாஹி லாஹி இல்லலா, முகமதுர் ரசூலல்லா எனும் கலிமா. அதாவது அல்லாஹ் மட்டுமே ஏக இறைவன், முகமதுவே அவரின் தூதர். இதை தாண்டி எந்த ஒரு இறையும் இஸ்லாத்தில் இல்லை. அப்படி அல்லாவுக்கு இணை வைப்பது போல குற்றம் ஏதுமில்லை.

இதடனிப்படையில்தான் வஹாபிகள், பிரசாதம் சாபிடாதே, சரஸ்வதி பூசை பேச்சு போட்டியில் பங்கெடுக்காதே (வாணி விழா), மந்திரிப்பது இன்ன பலதை மார்க்கத்துக்கு விரோதமானது என வரையறுக்கிரார்கள். அவர்களால் இதற்கு குரானின் வாசகங்களையும் ஹதீசுகளையும் சார்புக்கு அழைக்கவும் முடிகிறது.

சாராரண முஸ்லீம்கள் இறை மீது அதிகம் பயம் உள்ளவர்கள். எங்களை போல பிள்ளையாருக்கு கேம குடுக்கிறேல்ல. இப்படி ஒரு நிலையில், அவர்கள் எங்களுடன் சாதாரணமாக பழகுவதை, ஒரு மெளவி கண்டு, இதெல்லாம் ஹராம் தெரியுமா உனக்கு நரகம்தான் எண்டு ரெண்டு அரபி வாசககத்தை எடுத்து சொன்னால், எதுக்குடா வம்பு எண்டு பலர் மெளவி வழிக்குப் போய் விடுவார்கள். வழிக்கு வராதவர்களை அவன் ஒரு முனாபிக் என்று மெளவியே சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைத்த கதைகளும் உண்டு.

இவ்வளவு சொல்வதால், முஸ்லீம்களுக்கு அவர்கள் உரிமையை மறுக்க வேண்டும் என்பதில்லை. எம்மை விட 1% மட்டுமே சனத்தொகையில் குறைந்த அவர்களை எங்களின் ஜூனியர் பார்ட்னராக வா என அழைப்பது நியாயமில்லை என்பதுக்கு மேல், நாளைக்கே நாங்கள் ஜூனியர் பார்னர் ஆக வழி கோலும் ஆபத்தும் உளது.

ஆகவே சரிசம பங்காளிகளா அவர்களும் நாங்களும் தனித்தனியே ஆனால் சமாந்தரமாக பயணிப்பதே இரெண்டு சமூகத்தின் எதிர்காலத்துக்கும் நாட்டில் எதிர்காலத்துக்கும் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2019 at 12:27 AM, goshan_che said:

அப்படியாயின் இலங்கையில் இருக்கும் ஒரு தமிழனும் பஸ்சில், ரெயினில், பொது இடத்தில் போக முடியாது, ஏனென்றால் அங்கேயும் ஒரு ஹிஜாபி வரலாம். அல்லது ஒரு தாடி வைத்தவர் (முஸ்லீமாக கூட இருக்க வேண்டியதில்லை). வரலாம்.

வகுப்பில் இருந்து நேரா பதுங்கு குளிக்குள் ஓடிபோயிருந்துட்டு மீண்டும் வகுப்பில் வந்திருந்து படித்த இனம்.

இன்று நிழலை கண்டு மருளும் நிலை. 

#பரிதாபம்

😂 நாந்தான் சொன்னேனே கூமுட்டைகள் எல்லா இனத்திலும் இருக்கும் எண்டு. 

நாதமுனி,

நீங்கள் தப்பாக விளங்கி கொண்டீர்கள். இந்த பதிலில் நான் கூழ்முட்டை என்று கூறியது உங்களை அல்ல, முதல் நாள் குண்டு வெடித்த பின் அடுத்த நாள் கள்ள உறவை பார்க்க புர்கா அணிந்து போன மனிதனைதான் அப்படி கூறினேன். இவர் ஒரு பெரும்பான்மையினர். எனது கருத்துகளை திருப்பி வாசியுங்கள் நான் சொன்னது புரியும். 

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ உங்கள் கேள்விக்கு பதில் நாமு,

1. இந்த தலைப்பே ஒரு மிஸ்லீடிங் தலைப்பு என்பதுதான் நான் இத்திரியில் முதலாவதாக பதிந்த விடயம். அது திரியை தொடங்கியவரின் விளக்கமின்மையால் வந்த வினை. இலங்கையில் ஹிஜாபுக்கு தடை இல்லை. ஆகவே நீங்கள் சொல்வது போல “தடை செய்யப்பட்ட” என்ற விடயதுள் இங்க முடியாது. ஏனென்றால் ஹிஜாபுக்கு தடையே இல்லை. இங்கே வந்த ஆசிரியர்கள் யாரும் புர்கா, நிகாபில் வந்தாக எந்த பதிவும் இல்லை. ஹிஜாப் அணிவதை தடுக்கும் அதிகாரம் இலங்கையில் யாருக்கும் இல்லை. ஆகவே இந்த ஆசிரியர்கள் தடுக்கப் பட்டது சட்டப்படி செல்லாது. இது ஒரு விஜிலாண்டிசம். தடை செய்யப்படாத ஒரு உடையை, அமைச்சர்கள் பொது வெளியில் தடை இல்லை என்று அறிவித்த ஒன்றை அவர்கள் ஏன் அணியக்கூடாது ?

2. இலங்கையில் ஆட்டோவில் ஏற்றவில்ல, பஸ்சில் ஏற்றவில்லை எண்டால் அதுவும் தப்புத்தான். அதுக்காக இந்த தப்பு, தப்பில்லை என்றாகாது.

3. அவர்களை பொருத்தவரை இது ஒரு சமய அனுஸ்டானம், தடை செய்யப் படாத விடயம். சும்மா சில பெற்றோரின் அற்பத்தனமான பயதுக்காக, அவர்கள் ஏன் தமது மத உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டும்?

ஹிஜாபை கழட்டி விட்டு வாருங்கள் என்கிறோம் நாங்கள். 

முடியாது என்கிறார்கள் அவர்கள்.

முடிவு என்ன? அசாத்சாலியிடம் முறையிட்டர்கள். நான் அசாத் சாலியாக இருந்திருந்தால், கல்வி அமைச்சிடம் சொல்லி, ஆசிரியர்களை ஹிஜாபுடன் செல்ல வழி சமைதிருப்பேன். மீறி தடுக்கும் எவரையும் பொலீஸ் பார்த்து கொள்ளும் படி செய்திருப்பேன்.

அசாத் சாலி முரண்பாட்டை விரும்பவில்லை, அல்லது ஒரு பயந்தாங்கொள்கி, அல்லது இதுதான் வாய்ப்பு என தனது ஆசிரியத்களுக்கு இடமாற்றத்தை பெற்று கொடுத்து விட்டார்.

இவ்வளவுதான் நடந்தது. ஆனால் இதன் இறுதிப் பலாபன்கள் யாது?

1. ஆசிரியர்களுக்கு இடமாற்றம் ( இதை அவர்கள் விரும்பினார்கள் என்பது உங்கள் ஊகம், இப்படிச் சொல்வதற்கு உங்கள் அனுமானம் தவிர எந்த ஆதாரமும் இல்லை, இதில் சிலர் அந்த ஊர் முஸ்லீம்களாயும் இருக்கலாம் அவர்களுக்கு இங்கே தொடர்ந்து கற்பிப்பது வசதியாயும் இருக்கலாம்). ஆனால் அவர்கள் பற்றி எனக்கு கவலை இல்லை.

2. மாணவர் படிப்புப் பாழ் (இதில் மாற்று கருத்து இருக்க முடியாது)

3. தமிழர்கள் இனவாதிகளாக சித்தரிப்பு

இதில் நாம் அடைந்த நன்மை யாது?

1. ஏதுமில்லை 

2. ஏதுமில்லை 

3. ஏதுமில்லை

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, goshan_che said:

நமக்கு நன்மை விளையும் எண்டா, சீரடி பாபா என்ன ஹிஸ்புலாவையே கும்பிட எங்கட ஆக்கள் ரெடிதானே.

இதில் தெரிகின்றது உங்களுக்கு எங்கன்ட ஆட் கள் மீது இருக்கும் கடுப்பு.😄....என்ன இருந்தாலும் செகுவார படத்தை போட்டுக்கொண்டு உப்படி சனத்தை கடுபேத்தக்கூடாது...

எங்கன்ட ஆக்கள் மட்டுமல்ல  ...மனித இனமே அப்படித்தான்.....இஸ்லாமியாரசியல்வாதிகளை பார்த்து எங்கன்ட அரசியல்வாதிகள் பாடம்  எடுக்கவேணும் என்று இந்த யாழ்களத்தில் நான் உட்பட பலர் பாடம் எடுத்தோம் ....இப்ப எங்கன்ட அரசியல்வாதிகள்  உண்மை முகத்தை காட்டினார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, putthan said:

ஒத்துக்கொள்கிறேன் மனித இனமே இப்படித்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, goshan_che said:

உருவ வழிபாட்டை இஸ்லாம் தடை செய்வது மட்டும் இல்லை. இஸ்லாத்தின் 5 தூண்களில் முதலாவது “நம்பிக்கை”. அதாவது லாஹி லாஹி இல்லலா, முகமதுர் ரசூலல்லா எனும் கலிமா. அதாவது அல்லாஹ் மட்டுமே ஏக இறைவன், முகமதுவே அவரின் தூதர். இதை தாண்டி எந்த ஒரு இறையும் இஸ்லாத்தில் இல்லை. அப்படி அல்லாவுக்கு இணை வைப்பது போல குற்றம் ஏதுமில்லை.

ஆகவே சரிசம பங்காளிகளா அவர்களும் நாங்களும் தனித்தனியே ஆனால் சமாந்தரமாக பயணிப்பதே இரெண்டு சமூகத்தின் எதிர்காலத்துக்கும் நாட்டில் எதிர்காலத்துக்கும் நல்லது.

உண்மை ஆனால் இருவரும் சமபங்காளிகளாக பயணிப்பது என்பது முடியாத காரியம் ,அவர்களுடன் சமபாங்காளியாக பய்ணிப்பதை விட சிங்களவருடன் சமபங்காளியாக பயணித்தால் தப்பிபிழைக்கலாம்,இன்னோரு சிறுபான்மையுடன்(முஸ்லீம்) சமபங்காளியாக பயணிக்க  வெளிக்கிட்டால் சிறிலங்கா தமிழர்கள் அழிந்து போய்விடுவார்கள்,முஸ்லீம்கள் தப்பிபிழைதுக்கொள்வார்கள்.....முஸ்லீம் தற்கொலைகுண்டு தாக்குதலின் பின் சரித்திரம் எப்படி எழுதப்படப்போகின்றது என்று பொறுத்திருந்து பார்ப்போம்......

  • கருத்துக்கள உறவுகள்
Just now, putthan said:

நல்லா வருவான் சிங்களவன் சம பங்காளியா பயணிக்க 😂 

நாம் விரும்பியோ விரும்பாமலோ மிக விரைவில் முஸ்லீம்கள்தான் இலங்கையில் 2வது இனம். இப்பவே ஆகிவிட்டதாயும், சென்சஸ்சை வேண்டும் என்றே manipulate பண்ணி வைதுள்லதாயும் வேறு பேசிக்கிறார்கள்.

இதற்கான விடை எனக்குத் தெரியும் என்று நான் சொல்லலை. ஆனால் தமிழ் பேசும் தரப்பு என முஸ்லீம்களை எமக்கு கீழ் வகைபடுத்தும் ஒரு தீர்வு இனிமேல் சாத்தியமில்லை. பார்க்கலாம்.

மனோ கணேசன் மட்டும்தான் ஓரளவுக்கு சிந்திக்க தெரிந்த இலங்கை தமிழ் அரசியல்வாதி என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகிறது.

ஆசிரியர்கள் உடற்சோதனைக்கு உட்பட மறுத்தது தவறு (இந்த விடயம் இப்போதுதான் வெளி வருகிறது).

அதேபோல் ஆசிரியர்களை 5 வருட கட்டாய நியதியில் அனுப்பும் அளவுக்கு பின்தங்கி இருக்கும் பாடசாலையில், 12 ஆசிரியர்களை இழக்கும் அளவுக்கு முட்டாள்தனமாக செயற்பட்ட மக்களை என்னவென்பது.

திங்கட் கிழமை மனோ தீர்வு காணுவார் என நம்பலாம்.

அநேகமாக எல்லா ஆசிரியர்களும் பணிக்கு, ஹிஜாப் சகிதம் திரும்புவர்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இதற்கான விடை எனக்குத் தெரியும் என்று நான் சொல்லலை. ஆனால் தமிழ் பேசும் தரப்பு என முஸ்லீம்களை எமக்கு கீழ் வகைபடுத்தும் ஒரு தீர்வு இனிமேல் சாத்தியமில்லை. பார்க்கலாம்.

முஸ்லீம்கள் தமிழ் பேசும் தரப்பு என்று எமக்கு கீழ் வகைப்படுத்த முடியாது....அந்த விடயத்தில் அவர்கள் 1948 ஆம் ஆண்டே தெளிவாக முடிவெடுத்து விட்டார்கள்...தமிழர் பேசும் ஏனைய மதத்துடன்  இணையாமல் இருந்த படியால் தான் அவர்கள் குறுகிய காலத்தில் நாடு பூராவும் பரந்து வளரக்கூடியதாக இருந்தது.....இனிமேல் கொஞ்.சம் கஸ்டம் தான் .........

சிங்களவர்கள் இப்போ விழித்துக்கொண்டார்கள்.....தமிழ்நாட்டுக்கும் தமிழர்க்கும் தொடர்பு இருப்பதால் தஙகளுக்கு ஆபத்து என இதுவரை நினைதிருந்தார்கள்

இப்போ முஸ்லீகள் சர்வேதே இஸ்லாமிய தேசத்துடன் தொடர்பு இருப்பதால்  ,தங்களுக்கு தமிழர்களை விட இஸ்லாமியர்கள் மிகவும் ஆபத்தானவ்ர்கள் என்று

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Justin said:

விசுகர், வர வர நீங்கள் ஒரு ஜோக்கராகவே மாறி வருகிறீர்கள்! தேமேயென்று வழமை போல படிப்பிக்கப் போன ஆசிரியரை பயங்கரவாதிமாதிரி தெருவில் வைத்து அவமதித்தது உங்களுக்கு உறைக்கவேயில்லை! அவர்கள் வெறுத்துப் போய் மாற்றல் வாங்கிப் போனது பெரிய குறையாகப் போய் விட்டது! நானாக இருந்திருந்தால் இந்த பெற்றோர் மீது வழக்குப் போட்டு கோர்ட்டுக்கு அலைய விட்டிருப்பேன்! அவர்கள் தாமாக விலகி விட்டது டீசண்டானவர்கள் என்று காட்டுகிறது! 

என்னை  யோக்கர்   என்றபடி   நீங்க  அதி  தீவிர  சீரியசானவராக  எழுதுகிறீர்கள்  சகோ

எனது  எழுத்துக்கு

அல்லது  கருத்துக்கு

அல்லது நிலைப்பாட்டுக்கு

நான்  காரணமல்ல  சகோ

விதைத்ததை  தானே  அறுக்க  முடியும்???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

முஸ்லீம்கள் தமிழ் பேசும் தரப்பு என்று எமக்கு கீழ் வகைப்படுத்த முடியாது....அந்த விடயத்தில் அவர்கள் 1948 ஆம் ஆண்டே தெளிவாக முடிவெடுத்து விட்டார்கள்...தமிழர் பேசும் ஏனைய மதத்துடன்  இணையாமல் இருந்த படியால் தான் அவர்கள் குறுகிய காலத்தில் நாடு பூராவும் பரந்து வளரக்கூடியதாக இருந்தது.....இனிமேல் கொஞ்.சம் கஸ்டம் தான் .........

சிங்களவர்கள் இப்போ விழித்துக்கொண்டார்கள்.....தமிழ்நாட்டுக்கும் தமிழர்க்கும் தொடர்பு இருப்பதால் தஙகளுக்கு ஆபத்து என இதுவரை நினைதிருந்தார்கள்

இப்போ முஸ்லீகள் சர்வேதே இஸ்லாமிய தேசத்துடன் தொடர்பு இருப்பதால்  ,தங்களுக்கு தமிழர்களை விட இஸ்லாமியர்கள் மிகவும் ஆபத்தானவ்ர்கள் என்று 

சிங்களவர்கள் இப்போ விழித்துக்கொண்டார்கள்.....தமிழ்நாட்டுக்கும் தமிழர்க்கும் தொடர்பு இருப்பதால் தஙகளுக்கு ஆபத்து என இதுவரை நினைதிருந்தார்கள்

இப்போ முஸ்லீகள் சர்வேதே இஸ்லாமிய தேசத்துடன் தொடர்பு இருப்பதால்  ,தங்களுக்கு தமிழர்களை விட இஸ்லாமியர்கள் மிகவும் ஆபத்தானவ்ர்கள் என்று 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Justin said:

ரதி, நீங்கள் போய் தகவல்களை சரிபார்த்து விட்டு வந்து எழுதுங்கள்! முகத்தை மூடாத உடைக்குத் தடை இல்லாத போதும் சண்டித்தனம் விட்டு இப்ப மூக்குடை பட்ட பிறகு, இப்ப முதலில் இருந்து முகத்தை மூடிய உடை என்று ஆரம்பத்தில் இருந்தா..? facts முக்கியம், அதன் பிறகு உணர்ச்சி வசப்படலாம்! 

ஓம், நாதமுனி! நாங்கள் "பாதுகாப்பு" என்ற போர்வையில் அவர்களை சாறி உடுத்தி வா என்று தமாஸ் விடுவோம்! பிறகு அவங்கள் எங்களுக்குப் படிப்பிச்சும் விடோணும்! லூசுதனமான ஒரு வேலையைச் செய்து போட்டு, இன்னும், அவர்களே பிழை என்று தெனாவெட்டாக நிக்கிறீங்கள் பாருங்கள்? அங்க நிற்கிறான் "நவீன புத்திசாலித் தமிழன்"! 

அவர்கள் முஸ்லீம் பெண்களாய் இருந்த படியால் இனி மேல் பாடசாலைக்கு  வர வேண்டாம். எங்கள் பிள்ளைகளுக்கு படிப்பிக்க வேண்டாம் என்று அந்த தமிழ் பெற்றோர்கள் சொல்லி இருந்தால்  அது பெற்றோரது பிழை...எதற்காக அங்கு  தடுக்க பட்டார்கள் என்பது தான் இங்கு முக்கியம்...அப்பவே சொன்னேன் அவர்கள் அரசியல் இலாபத்திற்காக,இட மாற்றத்திற்காக செய்கிறார்கள் என்று...இப்ப ஜஸ்டினுக்கு விளங்கி இருக்கும் இவர்கள் எவ்வாறான தொப்பி பிரட்டிகள் என்று 😶

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில்.. அந்த அப்பாவிப் பெற்றோர்களை காடைகள் என்று திட்டியவர்களுக்கும்.. உந்த முஸ்லீம் ஆசிரியைகளுக்கு பரிந்து பேசியவர்களுக்கும்.. மனோ கணேசன்.. வழங்கி இருக்கும் சாட்டையடி. 

இதுக்குள்ளும் என்னத்தை திரிக்கப் போகிறார்களோ. 

பாவம் அந்தப் பெற்றோருக்கு தமது பிள்ளைகளின் பாதுகாப்பின் மீதான உண்மை அக்கறைக்கு கிடைத்த பலாபலனே.. இப்படி.. இந்த திருவிளையாடல் முஸ்லீம் மத அடிப்படைவாத அடையாளத்துக்குள் பதுங்கி இருந்து ஆதாயம் தேட விளைந்த இந்த முஸ்லீம் பெண்களைக் காட்டிக்கொடுத்துள்ளது.

இப்படி இன்னும் என்னென்ன திருகுதாளங்களைப் போட்டு.. பதவிகளையும்.. பொறுப்புக்களையும் மற்றைய இனத்தவர்களிடம் இருந்து பறித்து வைத்திருக்கிறார்களோ..???! குறிப்பாக தமிழ் மக்களிடம் இருந்து. 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nedukkalapoovan said:

மனோ கனேசன் சொன்னதையே நானும் சொன்னேன்.

இன்றைய இந்த நிலையில் கூட, அந்த பெண்கள் போலீசுக்கு தேவையான ஒத்துழைப்பு கொடுக்காமல், இடமாற்றத்தை நோக்கமாக கொண்டு, ஆளுனர் அசாத் சாலியிடம் போய் வேண்டியதை சாதித்துக் கொண்டுவிட்டனர்.

இவர்களது (ஆசிரியர்களும், ஆளுனரும் இஸ்லாமியர்கள்) இந்த செயல்பாடு தொடர்பில் சிங்கள ஊடகங்கள் கழுவி ஊத்திக் கொண்டிருக்கின்றன.

யாரும் எக்கேடு கெட்டும் போகட்டும், நமது, இஸ்லாமிய நலன்கள் மட்டுமே முக்கியமானது என்ற அசாத் சாலியின் நெருப்பில் எண்ணெய் வார்க்கும் செயல்பாடு இன்றைய சூழ்நிலையில் மிக மிக முட்டாள்தனமானது.

அநேகமாக, மனோ கணேசன்மத்திய அமைச்சர் என்ற வகையில் இந்த இடமாறுதலை ரத்து செய்வார். 

ஆளுனர் போலல்லாமல், சகலருக்கும் வெற்றி-வெற்றி என்ற வகையில் ராஜதந்திரமாக முடிப்பார் என நம்புவோம்.

அத்துடன் இந்ததிரியும் நூரட்டும். 👍

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

1. மனோ கணேசன் ஒன்றும் கூ முட்டை அரசியல்வாதி இல்லை. மிகத் தெளிவாக, ஹிஜாப் அணிந்து போனது சட்டவிரோதம் இல்லை என்றும், அப்படித் செல்வோரை தடுப்பதே சட்டவிரோதம் என்றும் கூறியுள்ளார்.

2. மனோ சொல்லும்வரை, ஆசிரியர்கள் உடற்சோதனைக்கு உட்பட மறுத்தது நமக்கு யாருக்குமே தெரியாது. ஆகவே இப்போ அதைப் பிடித்து தொங்கியபடி, நான் அப்பவே சொன்னேன் என்பது அரிவரிப் பிள்ளையள் சொல்லுமாப் போல இருக்கு. ஆசிரியர்கள் உடற் சோதனைக்கு மறுத்தது பிழை, ஆனால் பெற்றார்கள் அதைதான் வலியுறுத்தி கேட்டிருக்க வேண்டும், இல்லாமல் ஹிஜாபோடு வராதே என்று, கத்தி கூப்பாடு போட்டு அவர்கள் செய்தது காடைத்தனமே.

3. இதில் சம்பந்த பட்ட எந்த தரப்புமே ஆசிரியர்கள் முகத்தை, மூடும் நிகாப், புர்கா அணிந்து வந்தாதாக இன்னும் கூட சொல்லவில்லை. ஆகவே “தடை செய்யப்பட்ட” ஆடையில் ஆசிரியர்கள் வந்தார்கள் என்பது, பதிவை இட்டவரின் விளக்கமின்மையால் விழைந்தது என்பதும், அதையே இன்னும் சில கருதாளர்கள் பிடித்து தொங்கிறார்கள் என்பதும் தெளிவாகிறது.

4. இலங்கையில் 48 க்கு பின் அரசியல் செய்த, ஆயுத போரட்டம் நடத்திய எந்த தலைவரையும் விட மேல்வீட்டில் சரக்குக் கூடிய ஆள் மனோ. இந்த விசயத்தை, சுமூகமாக தீர்ப்பார் என்பதில் ஐயமில்லை.

அதாவது, ஆசிரியர்கள் முன்னர் போல ஹிஜாப் அணிந்து பணிக்கு திரும்புவர். பிள்ளைகளின் படிப்பும் பாழாகாது. 

தொடக்கம் முதல் ஜஸ்டினும் நானும் வலியுருத்தியது இதையே.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி இல்லையே தலைவா,

20 minutes ago, goshan_che said:

தொடக்கம் முதல் ஜஸ்டினும் நானும் வலியுருத்தியது இதையே.

நீஙகளும், ஜஸ்டினும் பெரும் பண்டிதர்களும் போலவும், அடுத்தவர்கள் எல்லாம் விடுபேயர்கள் போலவும் என்று நிறுவ அல்லவா முயன்றீர்கள்.

அடுத்தவர்கள் கருத்து தவறாயின் அதை சொல்வதில் ஒரு நாசூக்குத்தனம் (அதாவது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுதல் போன்ற) இருக்கவேண்டும் என்பதை கவனத்தில் எடுங்கள் தல.

அதை கவனத்தில் எடுத்தால், சிறந்த கருத்தாளராக விரும்பப்படுவீர்கள். ஏனெனில் கருத்துகள் சரியாக இருக்கவேண்டும் என சிரத்தை எடுக்கிறீர்கள்.

நீ என்ன எனக்கு சொல்வது என நிணைத்தால், பிறகு உங்கள் இஸ்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக உங்கள் கருத்தை கவனத்தில் கொள்கிறேன்.

யாரையும் விடுபேயர் என்று நிறுவமுயலவில்லை. ஆனால் சிலசமயம் நாம் சொல்லும் விடயத்துக்கு நாம் கொடுக்கும் வியாக்கியானத்துக்கும், பெறுனர் கொள்ளும் வியாக்கியானத்துக்கும் வேறு பாடு அமைவதால் இந்த மயக்கம் தோன்றுகிறது.

உ+ம் -  இந்த திரியில் கூமுட்டை என நான் யாரை விளித்தேன் என்ற குழப்பம்.

முடியுமானவரை இந்த குழப்பத்தை தவிர்க முயல்கிறேன்.

19 hours ago, nedukkalapoovan said:

இந்த விடயத்தில்.. அந்த அப்பாவிப் பெற்றோர்களை காடைகள் என்று திட்டியவர்களுக்கும்.. உந்த முஸ்லீம் ஆசிரியைகளுக்கு பரிந்து பேசியவர்களுக்கும்.. மனோ கணேசன்.. வழங்கி இருக்கும் சாட்டையடி. 

இதுக்குள்ளும் என்னத்தை திரிக்கப் போகிறார்களோ. 

பாவம் அந்தப் பெற்றோருக்கு தமது பிள்ளைகளின் பாதுகாப்பின் மீதான உண்மை அக்கறைக்கு கிடைத்த பலாபலனே.. இப்படி.. இந்த திருவிளையாடல் முஸ்லீம் மத அடிப்படைவாத அடையாளத்துக்குள் பதுங்கி இருந்து ஆதாயம் தேட விளைந்த இந்த முஸ்லீம் பெண்களைக் காட்டிக்கொடுத்துள்ளது.

இப்படி இன்னும் என்னென்ன திருகுதாளங்களைப் போட்டு.. பதவிகளையும்.. பொறுப்புக்களையும் மற்றைய இனத்தவர்களிடம் இருந்து பறித்து வைத்திருக்கிறார்களோ..???! குறிப்பாக தமிழ் மக்களிடம் இருந்து. 

உண்மையை மறைத்து ஏமாத்தோ ஏமாத்து என்று ஏமாத்திய முசுலீம் ஆசிரியக் குழுவின் கபடத்தனம் வெளிச்சுப்போச்சு. அதோட இந்தக் கபடதாரிகளை விழுந்து விழுந்து பரிந்து பேசியவர்களின் வேஷமும் கலைந்து போச்சே! ஐயோ பாவம்!

On 5/11/2019 at 12:48 AM, ரதி said:

ஒரே மொழியை பேசிக் கொண்டு மதத்தை வளர வைப்பதற்காக இனத்தை அழித்தவர்கள்...கிழக்கில்  குறிப்பாய் மட் டுவில் எத்தனை கோயில்கள்,தமிழர் நிலங்கள் என்பவற்றை ஆக்கிரமித்து உள்ளார்கள்...இதெல்லாம் ஓர்,இருவர் செய்த வேலை இல்லை...இவ்வளவு விசாரணை அது,இது என்று நடந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்திலும் மு.புத்தகத்தில் அவர்கள் தமிழருக்கு  எதிராய்  எழுதும் துவேச கருத்துக்களை பார்த்தால் எந்த மானமுள்ள தமிழனும் இப்படி அவர்களுக்கு வக்காலத்து வாங்க மாட்டான். 

உண்மையான வசனங்கள்! இவர்களைப் போல நயவஞ்சக மக்களை வேறெங்கும் காணமுடியா! இவர்களுக்கு எந்த மானமுள்ள தமிழனும் வக்காலத்து வாங்க மாட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/11/2019 at 6:45 PM, goshan_che said:

நாதமுனி,

நீங்கள் தப்பாக விளங்கி கொண்டீர்கள். இந்த பதிலில் நான் கூழ்முட்டை என்று கூறியது உங்களை அல்ல, முதல் நாள் குண்டு வெடித்த பின் அடுத்த நாள் கள்ள உறவை பார்க்க புர்கா அணிந்து போன மனிதனைதான் அப்படி கூறினேன். இவர் ஒரு பெரும்பான்மையினர். எனது கருத்துகளை திருப்பி வாசியுங்கள் நான் சொன்னது புரியும். 

https://www.bbc.com/tamil/india-48102728

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் (விடுதலை புலிகள்) மட்டுமில்லை ...
தமிழை ஆண்ட அனைத்து மன்னர்கள் வரை தனிப்பட நான் வரலாறை 
வாசிக்கும்போது முடிவுகளை ஏற்கனவே தெரிந்துகொண்டு வாசித்தாலும் 
இறுதி பக்கங்களை நெருங்கும்போது வாசிப்பில் என்றாலும் ஐயோ இப்படி இருக்க கூடாது என்ற 
சின்ன எதிர்பார்ப்பும் நப்பாசையும் வந்துபோகும்.

இத்தனை தொடர் தோல்விகள் என்றாலும் நான் தமிழன் என்பதில் எனக்கு 
எப்போதுமே ஒரு பெருமை உண்டு.
முக்கிய காரணம் எந்த தமிழ் மன்னனும் (சைவ மதம் சார்ந்தோ என்னமோ) அறம் தவறியது இல்லை 
இன்னொரு இனத்தை வேடடையாடியது இல்லை.

முஸ்லிம்கள் விட்ட அதே தவறை நாமும் விடலாகாது 
இன்னொரு சிறுபான்மை இனத்தை எக்காரணம் கொண்டும் பழி  தீர்ப்பதிலும் 
தட்டி கொடுப்பதில் எப்போதும் பெருமை உண்டு.

சாதாரண மனித எண்ணம் சிந்தனைகளோடு கடைபிடித்தல் கடினம் 
நானே முஸ்லிம்தரப்பு பற்றி சாடி பல கருத்துக்களை இங்கே எழுதி இருக்கிறேன் 
விழிப்புஉணர்வு தேவை நாம் சுரண்ட படுகிறோம் என்ற உண்மை புரிய வேண்டும்.
ஆனால் அழிக்க வேண்டும் என்ற வன்மம் கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.