Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"அடுத்த இலக்கு கோவில்களாகவோ விகாரைகளாகவோ இருக்கலாம்"

Featured Replies

9 hours ago, goshan_che said:

சரி நீங்களே சொல்லிவிட்டதால் நானும் சொல்கிறேன். நான் ஒத்துப் போகாத விடயம், பிரபாகரன் தலைமை பற்றியதுதான். ஆனால், அந்த தலைமை வலுவானது என்பதில் எனக்கு ஒரு மாற்றுக் கருத்து என்றுமே இருந்ததில்லை. அந்த தலைமை கொண்ட கொள்கைக்கு உண்மையானது என்பதிலும், தன்னலமற்றது, ஊழல்லற்றது, கண்ணியமானது என்பதிலும் நான் 100% எப்போதும் உடன் பட்டே இருக்கிறேன்.

கடந்த 400 வருட வரலாற்றில் இதை விட வலுவான தலைமை தமிழகத்திலும், இலங்கையிலும் தமிழர் மத்தியில் இருந்ததில்லை என்பது மறுக்கவியாலாத உண்மை. இனி இருக்காது என்பதும் உண்மையே.

அந்த வலுவான தலைமையால்தான், அமிர்தலிங்கம் டெல்லி போய் பார்தசாரதியை பார்த்த நிலை மாறி, ஸ்தானிகர்கள் எல்லாம் கிளிநொச்சிக்கு படை எடுக்கும் காலமும் உருவாகியது என்பதும், இப்போ எம்மிடம் அந்த வலு இல்லை என்பதால்தான் நாம் சீந்துவாரற்று கிடக்கிறோம் என்பதும் உண்மையே.

இது நான் இங்கே எழுத தொடங்கிய காலம் தொட்டு எழுதும் விடயம்தான். ஆனால் என்னை ஒரு வித முத்திரையோடு மட்டுமே பார்த்து பழக்கப் பட்டவர்கள் “என்ன கோசான் இப்பதான் அருமை தெரியுதா” என்று, ஏதோ நான் இன்றுதான் இப்படி எழுதியது போல கேட்பார்கள் 😂

ஆனால் அது எப்போதும் “சரியான ” இருந்ததா என்றால், என் பதில் இன்றைக்கும் இல்லை என்பதே. 

ஏன் நான் இப்படி நினைக்கிறேன் என்பதை பற்றி யாழில் போதுமான அளவு எழுதியாகி விட்டதாலும், உண்மையிலேயே இவற்றை பேசுவதால் இனி ஒரு பயனுமில்லை என்பதாலும், இதை பற்றி பேசுவதில் இருந்து தவிர்ந்து கொள்கிறேன்.

தெளிவான சிந்தனை. 👍

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

மத அடையாளத்தை விரும்புவது மட்டுமில்லை. முதலில் முஸ்லீம், பிறகுதான் தமிழ், சிறிலங்கா எல்லாம் என்பதுதான் பல இலங்கை முஸ்லீம்களின் நிலைப்பாடு.

ஆன படியால்தான் கேட்கிறேன், சமாந்தரப் பயணம் தானே சரிவரும்?

சமாந்தரப் பயணம் தானே நடந்து கொண்டிருக்கின்றது.இலங்கை முஸ்லீம்கள் மட்டுமல்ல உலக முஸ்லீம்கள் எல்லோரும் மதத்தை முன்னிலைப்படுத்த விரும்புகின்றனர் ,ஏனைய மதத்தவர்களை மதிக்கின்ற பண்பு இல்லை....

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பிரச்சினையை இலங்கை மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் மிகவும் குறுகிய வட்டத்துக்குள் பார்க்கிறார்கள். இதை இனப் பிரச்சினையாக மட்டுமே பார்க்கிறார்கள். உண்மையில் இது மிகவும் தீவிரமான இராணுவ, பொருளாதார வல்லாதிக்க பிரச்சினை. அமரிக்கா, இந்தியா, சீனாவுக்கு இடையேயான  குரூரமான போட்டி இது. இதில் துளியும் மதிக்கப்படாமல் நினைத்த விதத்தில் தாரளமாக பலியிடப்படுபவர்கள் இலங்கை மக்கள். 

எண்பதுகளில் இந்தியா தமிழ் இளையோருக்கு ஆயுத பயிற்சி அளித்து போராட்டத்தை ஊக்குவித்தது இலங்கையை பொருளாதார ரீதியாக அழிக்கவும் மக்களின் நிம்மதியை குலைத்து நிலைதரம் இல்லாத நாடாக இலங்கையை வைத்து இருக்கவும் தான். இதன் நோக்கம் ஐக்கிய தேசிய கட்சியை அமெரிக்காவின் நலன்களுக்கு உதவ விடாமல் தடுப்பதுவும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சீனாவின் நலன்களுக்கு உதவ விடாமல் தடுப்பதுவுமே. 

விடுதலை புலிகள் இந்தியாவின் நலன்களுக்கு உதவ மறுத்து உண்மையான விடுதலையை பெற போராடியதால் அவர்களை அழிக்க இந்தியா முடிவு எடுத்தது. ஆனால் இந்தியாவின் ஆரம்ப காரணம் இன்றும் நிறைவேறவில்லை. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மேலும் இறுக்கமாக சீனாவுடன் இணைந்து கொண்டு உள்ளது. ஐக்கிய தேசிய கட்சி அமெரிக்காவின் பாதுகாப்பில் உள்ளது. 

அதனால் இந்தியாவின் இரெண்டாவது முயற்சி ஈஸ்டர் தினம் அன்று ஆரம்பம் ஆகி விட்டது. சில முட்டாள் முஸ்லிம்களை தாம் ஐ. எஸ். தீவிர வாதிகள் என்று நம்பவைத்த ரோ உளவாளிகள் அவர்களுக்கு இந்தியாவில் வைத்து பயிற்சியும் வெடி குண்டுகளும் கொடுத்து, அவர்களை பற்றிய சிறுது குழப்பமான  தகவல்களை இலங்கைக்கும் கொடுத்து, கிறீஸ்தவர்களை கொன்று, உல்லாச பயணிகளையும் கொன்று இரெண்டாவது இந்திய அழிப்பு ஆரம்பமாகி விட்டது. காரணம் பழைய காரணம் தான். 

இலங்கை அரசுக்கு இது புரிகிறது. அதனால் தான் வடக்கிலும் பிரபாகரன் படம் திலீபன் படம் வைத்து இருப்பவர்களையும் கைது செய்கிறார்கள். 

இது மிகவும் சிக்கலான சர்வதேச வல்லரசுகளின் குரூரமான பொருளாதார போட்டி. இலங்கையை பயங்கரவாத நாடாக வைத்து இருந்தால் பொருளாதார நலன்களுக்கு பாதகமானது என்று சீனாவும் அமெரிக்காவும் விலகிவிடும் என்று இந்தியா கணக்கு போட்டு இருக்க வேண்டும். 

இதில் இருந்து விடுபட தமிழர் இனப் பிரச்சினை என்று முஸ்லிம்களுடனும் சிங்களவருடனும் அடிபடும் குறுகிய வட்டத்திற்கு வெளியால் வந்து சிந்திக்க வேண்டும். இனப்பிரச்சினை இருக்கிறது தான். அதை தூண்டி விட்டு பயன்படுத்துவது இந்தியா. ஆகவே இந்த இனப் பிரச்சினைக்கு தீர்வு இந்தியாவின் வல்லாதிக்க பிரச்சினையை தவிர்த்து வாழ கண்டு பிடிக்கும் வழியில் தான் இருக்கிறது.

7 minutes ago, Jude said:

இலங்கையில் தாக்குதல் நடக்கவிருப்பது பற்றி இலங்கை அரசுக்கு முன்னமே தெரியும். ஏன் சர்வதேச நாடுகளுக்கு கூட தெரியும். அதனால் தான் தாக்குதலின் பின் உடனே சொல்லி வைத்த மாதிரி அனைத்து நாடுகளிலும் தாக்குதல் பற்றி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பல நாடுகளின் புலனாய்வுத்துறை காரணமில்லாமல் இலங்கைக்கு வராது. 

தாக்குதல் பற்றி நான் ஏதும் சொல்லப்போனால் conspiracy theory என்று விடுவார்கள் என்பதால் நான் அதிகம் கதைக்கவில்லை.

இத்தாக்குதலின் பின்னணி தனியே இந்தியா என நீங்கள் நினைப்பது தவறு.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

அது சிங்களவர்கள் கவலை. நாம் இப்போது அது குறித்து கவலை கொள்ள தேவையில்லை.

Only one wife? Ha.... haaaa...

அட முட்டாப்பயலே. ஒத்தக் காலோட 17..... நீயெல்லாம் என்ன மனிசனப்பா 

இல்லையே, நாம் அவர்களுடன் தமிழ் பேசும் தரப்பு என்ற அளவில் உரிமைகளை பெறும்போது, நாளை இனவிகிதாசாரம் மாறும் போது, தமிழ் பேசும் தரப்பு என்பதின் தலைமை அவர்கள் வசம் போகுமே? இதற்கு நாம் தயாரா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

எம்மை இந்த இக்கட்டுக்குள் தள்ளிய இணைத்தலைமை நாடுகளாகிய சர்வதேசத்திற்கு இதனை விளக்கிச் சொல்ல தமிழர் தரப்பில் ஒரு நிரந்தர வெளிவிவகாரக் குழு தொடர்ச்சியாக செயற்பட அமைக்கப்பட வேண்டும். இதில் பிரதான தமிழ் கட்சிகள்.. அறிவுஜீவிகள் சார்பில் ஒரு பிரதிநிதி.. மாணவர்கள் சார்பில் ஒரு பிரதிநிதி.. பாதிக்கப்படும் மக்கள் சார்பில் அந்த மக்கள் இனங்காட்டும்.. நபரைக் கொண்ட..ஒரு பிரதிநிதி.. வெளிநாட்டுத் தொடர்பாடலுக்கு புலம்பெயர் மக்கள் சார்பில் ஒரு பிரதிநிதி அமைதல் வேண்டும்.

இந்தக் குழு எமது பிரச்சனைகளை ஆதார பூர்வமாக தொடர்ச்சியா வைப்பதோடு எமது கருத்தொற்றுமையை எமது மக்களின் சார்ப்பில் அவர்களுக்கு இனங்காட்ட வேண்டும்.

சர்வதேசம் எம்மை கைவிடுவதற்கு அல்லது மறப்பதற்கு எம்மவர்களே காரணம். விடுதலைப்புலிகள் எம்மவர்களின் நண்டுக்குணம் அறிந்து தான் மக்களின் நலனுக்காக ஏக பிரதிநிதித்துவம் என்பதை கொண்டு வந்தார்கள். இன்று நாம் ஜெனிவாவில் போய் செய்தது என்ன..?!

சம் சும் கும்பல் மக்களைக் கொலை செய்த அரசுக்கு மன்னிப்புக் கொடுக்க.. அது பயங்கரவாத அழிப்பே என்று சான்றிதழ் கொடுக்க..

கஜேந்திரன் இல்லை என்ற அது போர்க்குற்றம் என்ற

ஆனந்தி.. ஐயோ அம்மா என்ற

விக்கி இல்லை இல்லை.. அது இனப்படுகொலை தான் என்ற..

டக்கிளஸ்.. அது எல்லாரும் செய்வது தானே... மறப்போம் மன்னிப்போம் என்ற..

இப்படி தமிழர்களுக்குள் தமிழ் மக்களின் நலனில் அக்கறையை ஒற்றுமையை சர்வதேசம் இனங்காணவும் இல்லை இவர்களில் யாரை எப்படி நம்புவது என்ற குழப்பம் அதற்கு.

ஆனால்.. புலிகள் முன்னெடுத்தது வேறு. ஏக பிரதிநிதித்துவம். எம் மக்கள் சார்பில்.. நாம் வந்து பேசுகிறோம்.. எமக்கு பேச்சில் எட்டப்படும் விடயங்களை எம் மக்களிடம் கொண்டு செல்லவும் அமுல்படுத்தவும் முடியும் என்று காட்டி படியால் தான்.. சும்மா இருந்த சர்வதேசம் இணைத்தலைமை நாடுகளாகி.. ரோக்கியோ வரை கூப்பிட்டுப் பேசினார்கள். அதனால்.. சர்வதேச கவனத்தையும் எம் மக்களின் பிரச்சனை ஈர்த்துக் கொண்டது.

2009 மே பின்.. எம்மவர்கள் யாரை எந்த நாடு பேச்சுக்கு அழைத்தது தமிழ் மக்கள் சார்பில் பேச..?! இத்தனைக்கும் சனநாய் அகம் காக்குகிறோம் என்று வாய் கிழியக் கத்துகிறார்களே..??!

இந்த நிலை களையப்பட வேண்டும் என்றால்.. எமக்குள் அரசில் வேறுபாடுகளுக்கு அப்பால்.. மண் மக்கள் நலன் முதன்மை பெற வேண்டும். அவற்றை இட்டு ஒற்றுமை வந்தாக வேண்டும். ஒரு சிலர் குறுக்கால் இழுக்கலாம்.. அது எதிர்பார்க்கப்பட வேண்டிய ஒன்று தான். ஆனால்.. பலர் ஒன்றாக அமரலாம் இல்லையா. 

மேற்சொன்ன கருத்திலும் முற்றிலும் உடன்படுகிறேன்.

அப்போ இனி அடுத்த கட்டதுக்கு நகர்வோம்.

பலர் ஒன்றாக அமர்வதாயின் அது இலங்கையில் இருப்பவர்களும் ( அரசியல்வாதிகள் அல்ல, சிவில் சமூகம் பொது மக்கள்) தடையின்றி பங்கு பெறும் அமைப்பாக இருத்தல் வேண்டும் என நான் நம்புகிறேன்.

இப்போ ஒரு சர்சைக்குரிய கருத்தை சொல்லப் போகிறேன்.

இந்த அமைப்பானது, ஒரு முற்றிலும் புதிய அமைப்பாக, இதுவரை இருந்த எந்த அமைப்பினதும், கொடி இலச்சினை போன்றவற்றை சுவீகரிக்காத, தனிநாட்டு கோரிக்கையை நிராகரிக்கின்ற ஓர் அமைப்பாக இருப்பின், அது நாட்டில் உள்ள மக்களையும் இணைத்து செல்ல கூடிய, வெளிநாட்டில் ஆயுததாரிகள் என்ற சொல்லாடலை தவிர்க்க கூடிய அமைப்பாக அமையும் அல்லவா?

இப்படி ஒரு அமைப்புக்கு நம் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்தை விரைவு படுத்தும் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

சமாந்தரப் பயணம் தானே நடந்து கொண்டிருக்கின்றது.இலங்கை முஸ்லீம்கள் மட்டுமல்ல உலக முஸ்லீம்கள் எல்லோரும் மதத்தை முன்னிலைப்படுத்த விரும்புகின்றனர் ,ஏனைய மதத்தவர்களை மதிக்கின்ற பண்பு இல்லை....

இல்லையே, 

நாம் இன்றும் இணைந்த வடக்கு கிழக்கு என்கிறோம். அவர்கள் இல்லை வடக்கு தனியே கிழக்கு தனியே என்கிறனர். 

சமாந்தர பயணம் எனில், வடக்கில் ஒரு அலகும் (ஏனென்றால் இப்போதும் அது 90% தமிழ்), கிழக்கில் மூவினங்களுக்கும் தனி தனி நிலத்தொடர்பற்ற அலகுகளும் என்று கேட்டு, அதனடிப்படையில் தமிழர்களும் முஸ்லீம்களும் ஒரு பொது கோரிக்கையை முன் வைப்பதாகும்.

2 hours ago, Jude said:

இலங்கை பிரச்சினையை இலங்கை மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் மிகவும் குறுகிய வட்டத்துக்குள் பார்க்கிறார்கள். இதை இனப் பிரச்சினையாக மட்டுமே பார்க்கிறார்கள். உண்மையில் இது மிகவும் தீவிரமான இராணுவ, பொருளாதார வல்லாதிக்க பிரச்சினை. அமரிக்கா, இந்தியா, சீனாவுக்கு இடையேயான  குரூரமான போட்டி இது. இதில் துளியும் மதிக்கப்படாமல் நினைத்த விதத்தில் தாரளமாக பலியிடப்படுபவர்கள் இலங்கை மக்கள். 

எண்பதுகளில் இந்தியா தமிழ் இளையோருக்கு ஆயுத பயிற்சி அளித்து போராட்டத்தை ஊக்குவித்தது இலங்கையை பொருளாதார ரீதியாக அழிக்கவும் மக்களின் நிம்மதியை குலைத்து நிலைதரம் இல்லாத நாடாக இலங்கையை வைத்து இருக்கவும் தான். இதன் நோக்கம் ஐக்கிய தேசிய கட்சியை அமெரிக்காவின் நலன்களுக்கு உதவ விடாமல் தடுப்பதுவும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சீனாவின் நலன்களுக்கு உதவ விடாமல் தடுப்பதுவுமே. 

விடுதலை புலிகள் இந்தியாவின் நலன்களுக்கு உதவ மறுத்து உண்மையான விடுதலையை பெற போராடியதால் அவர்களை அழிக்க இந்தியா முடிவு எடுத்தது. ஆனால் இந்தியாவின் ஆரம்ப காரணம் இன்றும் நிறைவேறவில்லை. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மேலும் இறுக்கமாக சீனாவுடன் இணைந்து கொண்டு உள்ளது. ஐக்கிய தேசிய கட்சி அமெரிக்காவின் பாதுகாப்பில் உள்ளது. 

அதனால் இந்தியாவின் இரெண்டாவது முயற்சி ஈஸ்டர் தினம் அன்று ஆரம்பம் ஆகி விட்டது. சில முட்டாள் முஸ்லிம்களை தாம் ஐ. எஸ். தீவிர வாதிகள் என்று நம்பவைத்த ரோ உளவாளிகள் அவர்களுக்கு இந்தியாவில் வைத்து பயிற்சியும் வெடி குண்டுகளும் கொடுத்து, அவர்களை பற்றிய சிறுது குழப்பமான  தகவல்களை இலங்கைக்கும் கொடுத்து, கிறீஸ்தவர்களை கொன்று, உல்லாச பயணிகளையும் கொன்று இரெண்டாவது இந்திய அழிப்பு ஆரம்பமாகி விட்டது. காரணம் பழைய காரணம் தான். 

இலங்கை அரசுக்கு இது புரிகிறது. அதனால் தான் வடக்கிலும் பிரபாகரன் படம் திலீபன் படம் வைத்து இருப்பவர்களையும் கைது செய்கிறார்கள். 

இது மிகவும் சிக்கலான சர்வதேச வல்லரசுகளின் குரூரமான பொருளாதார போட்டி. இலங்கையை பயங்கரவாத நாடாக வைத்து இருந்தால் பொருளாதார நலன்களுக்கு பாதகமானது என்று சீனாவும் அமெரிக்காவும் விலகிவிடும் என்று இந்தியா கணக்கு போட்டு இருக்க வேண்டும். 

இதில் இருந்து விடுபட தமிழர் இனப் பிரச்சினை என்று முஸ்லிம்களுடனும் சிங்களவருடனும் அடிபடும் குறுகிய வட்டத்திற்கு வெளியால் வந்து சிந்திக்க வேண்டும். இனப்பிரச்சினை இருக்கிறது தான். அதை தூண்டி விட்டு பயன்படுத்துவது இந்தியா. ஆகவே இந்த இனப் பிரச்சினைக்கு தீர்வு இந்தியாவின் வல்லாதிக்க பிரச்சினையை தவிர்த்து வாழ கண்டு பிடிக்கும் வழியில் தான் இருக்கிறது.

இலங்கை அரசால், யூன்பியால், சுகவால், மகிந்தவால், பிரபாகரானல் தவிர்க்க முடியாத இந்தியாவின் வல்லாதிக்க அணுகுமுறையை வேறு யாராலும் தவிர்க்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

.

இப்போ ஒரு சர்சைக்குரிய கருத்தை சொல்லப் போகிறேன்.

இந்த அமைப்பானது, ஒரு முற்றிலும் புதிய அமைப்பாக, இதுவரை இருந்த எந்த அமைப்பினதும், கொடி இலச்சினை போன்றவற்றை சுவீகரிக்காத, தனிநாட்டு கோரிக்கையை நிராகரிக்கின்ற ஓர் அமைப்பாக இருப்பின், அது நாட்டில் உள்ள மக்களையும் இணைத்து செல்ல கூடிய, வெளிநாட்டில் ஆயுததாரிகள் என்ற சொல்லாடலை தவிர்க்க கூடிய அமைப்பாக அமையும் அல்லவா?

இப்படி ஒரு அமைப்புக்கு நம் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்தை விரைவு படுத்தும் அல்லவா?

இவ்வாறான ஒரு  கருத்தை  பல  காலமாக  சொல்லி  எழுதி  வருகின்றேன்

அதில்  முன்நாள் என்றோ

2009க்கு முன் அமைப்புக்களில்  இருந்தவர்களோ  அல்லது  சார்ந்து இருந்தவர்களோ  தேவையில்லை

(என் போன்றவர்கள்  உட்பட)

அதற்கு  முக்கியத்துவம் தரத்தேவையில்லை

இன்று 

தமது செயல்கள்  அல்லது சேவைகள் மூலம்  மக்களால்  அறியப்பட்டவர்கள்

மக்கள் முன்னால் உள்ளவர்கள் வரணும்

ஒன்றாகணும்

விக்கி  ஐயா வந்தபோது  இப்படியான  ஒரு  சந்தர்ப்பமும் ஒருங்கிணைப்பும்  சாத்தியமாகிறது என்ற  எதிர்பார்ப்பும் ஆவலும் எனக்கிருந்தது...

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

விக்கி  ஐயா வந்தபோது  இப்படியான  ஒரு  சந்தர்ப்பமும் ஒருங்கிணைப்பும்  சாத்தியமாகிறது என்ற  எதிர்பார்ப்பும் ஆவலும் எனக்கிருந்தது...

எனக்கும் இருந்ததது அவரை நேரில் பாக்கும் வரைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

இல்லையே, 

நாம் இன்றும் இணைந்த வடக்கு கிழக்கு என்கிறோம். அவர்கள் இல்லை வடக்கு தனியே கிழக்கு தனியே என்கிறனர். 

சமாந்தர பயணம் எனில், வடக்கில் ஒரு அலகும் (ஏனென்றால் இப்போதும் அது 90% தமிழ்), கிழக்கில் மூவினங்களுக்கும் தனி தனி நிலத்தொடர்பற்ற அலகுகளும் என்று கேட்டு, அதனடிப்படையில் தமிழர்களும் முஸ்லீம்களும் ஒரு பொது கோரிக்கையை முன் வைப்பதாகும்.

ஐயா கேட்டவுடன் கொடுக்கின்ற நாட்டிலயா ..நம்மவர்கள் வாழ்கின்றனர்.சமஸ்டி கேட்ட பொழுதே ஒரு தீர்வை கொடுத்திருப்பார்கள்....சமஸ்டி கொடுக்காமல் அந்த காலகட்டத்திலயே  மாகாண சபையை கொடுத்து ஈழக்கோரிக்கை வராமல் தடுத்திருக்கலாம் புத்திசாலியாக சிறிலங்கன் அரசியல்வாதிகளும் மக்களும்இருந்திருந்தால்....இந்தியாவில் ஆந்திரபிரதேசத்திலிருந்து தெலுங்கானவை பிரித்து கொடுத்தது போன்று.....

மேலும் முஸ்லீம் மக்கள் தனிஅலகை விரும்பமாற்றார்கள்,அவர்கள் நாடு பூராவும் பரந்து வாழ்பவர்கள்....சிறிலங்கா ஒர் இஸ்லாமிய நாடாக மாறவேண்டும் அல்லது பெரும்பான்மையினராக மாறவேண்டும் என்ற கொள்கையுடனும் வாழ்பவர்கள் அந்த முயற்சியில்  இருக்கின்றனர். 
தமிழ்பேசுபவர்கள் என்பதை அவர்கள் கண்டு கொள்ளப்போவதில்லை...இஸ்லாம் வளர ,பரவ என்ன செய்யலாம் என்று சிந்திப்பவர்கள்.

23 hours ago, goshan_che said:

இலங்கை அரசால், யூன்பியால், சுகவால், மகிந்தவால், பிரபாகரானல் தவிர்க்க முடியாத இந்தியாவின் வல்லாதிக்க அணுகுமுறையை வேறு யாராலும் தவிர்க்க முடியுமா?

இந்தியாவின் கொள்ளைபுறத்தே ஒரு தீவை ( )உருவாக்கிவிட்டான் தானே சீனாக்காரன்.....சீனாக்காரனின் பண பலத்தின் முன் இந்தியாவின் சிறிலங்கா மீதான  காதல் கேள்விக்குறிதான்

  • கருத்துக்கள உறவுகள்
On 5/15/2019 at 8:13 PM, சுவைப்பிரியன் said:

எனக்கும் இருந்ததது அவரை நேரில் பாக்கும் வரைக்கும்.

கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா? ஏனிந்த முடிவுக்கு வந்தீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
On 5/15/2019 at 11:43 AM, விசுகு said:

இவ்வாறான ஒரு  கருத்தை  பல  காலமாக  சொல்லி  எழுதி  வருகின்றேன்

அதில்  முன்நாள் என்றோ

2009க்கு முன் அமைப்புக்களில்  இருந்தவர்களோ  அல்லது  சார்ந்து இருந்தவர்களோ  தேவையில்லை

(என் போன்றவர்கள்  உட்பட)

அதற்கு  முக்கியத்துவம் தரத்தேவையில்லை

இன்று 

தமது செயல்கள்  அல்லது சேவைகள் மூலம்  மக்களால்  அறியப்பட்டவர்கள்

மக்கள் முன்னால் உள்ளவர்கள் வரணும்

ஒன்றாகணும்

விக்கி  ஐயா வந்தபோது  இப்படியான  ஒரு  சந்தர்ப்பமும் ஒருங்கிணைப்பும்  சாத்தியமாகிறது என்ற  எதிர்பார்ப்பும் ஆவலும் எனக்கிருந்தது...

எனக்கும் இருந்தது, ஆனால் இது சாத்தியமானதா என்பதில் அப்போது 50% இருந்த ஐயம் இப்போ பெருகி 80% ஆகி நிற்கிறது.

அவருக்கு நிர்வாகத்திறன் இல்லை என்பது தெளிவாகிறது. ஆனால் ஏனையோர் மிகவும் கள்ளர்களாக அல்லவா இருக்கிறார்கள். 

குறிப்பாக வெளிநாடுகளில் தமிழ்த்தேசியம் கதைக்கும் ஒருவரைக் காட்டி, இவர் விக்கி அளவுக்கு ஊழல் அற்றவர் என்று நம்மால் சொல்ல முடியுமா?

நீங்கள் சொல்லியது போல் ஒருவரைத் தானும் என்னால் லண்டனில் இனம் காட்ட முடியாதுளது.

எல்லாரும் சுத்த சுயநலமிகள், அல்லது புகழ் விரும்பிகளாகவே உள்ளார்கள்.

வேறு யாராலும் ஒருவரை அல்லது பலரை காட்ட முடிந்தால் - இங்கே எழுதலாமே?

****தனி மனிதர் பற்றிய எதிர் மறைக் கருதுகளை தவிர்த்து*****

  • கருத்துக்கள உறவுகள்
On 5/16/2019 at 11:28 AM, putthan said:

ஐயா கேட்டவுடன் கொடுக்கின்ற நாட்டிலயா ..நம்மவர்கள் வாழ்கின்றனர்.சமஸ்டி கேட்ட பொழுதே ஒரு தீர்வை கொடுத்திருப்பார்கள்....சமஸ்டி கொடுக்காமல் அந்த காலகட்டத்திலயே  மாகாண சபையை கொடுத்து ஈழக்கோரிக்கை வராமல் தடுத்திருக்கலாம் புத்திசாலியாக சிறிலங்கன் அரசியல்வாதிகளும் மக்களும்இருந்திருந்தால்....இந்தியாவில் ஆந்திரபிரதேசத்திலிருந்து தெலுங்கானவை பிரித்து கொடுத்தது போன்று.....

மேலும் முஸ்லீம் மக்கள் தனிஅலகை விரும்பமாற்றார்கள்,அவர்கள் நாடு பூராவும் பரந்து வாழ்பவர்கள்....சிறிலங்கா ஒர் இஸ்லாமிய நாடாக மாறவேண்டும் அல்லது பெரும்பான்மையினராக மாறவேண்டும் என்ற கொள்கையுடனும் வாழ்பவர்கள் அந்த முயற்சியில்  இருக்கின்றனர். 
தமிழ்பேசுபவர்கள் என்பதை அவர்கள் கண்டு கொள்ளப்போவதில்லை...இஸ்லாம் வளர ,பரவ என்ன செய்யலாம் என்று சிந்திப்பவர்கள்.

இந்தியாவின் கொள்ளைபுறத்தே ஒரு தீவை ( )உருவாக்கிவிட்டான் தானே சீனாக்காரன்.....சீனாக்காரனின் பண பலத்தின் முன் இந்தியாவின் சிறிலங்கா மீதான  காதல் கேள்விக்குறிதான்

கொடுக்க மாட்டார்கள் என்பதால் கேட்காமல் விட முடியாதே.

முஸ்லீம்களுக்கு ஒரு தனி அலகு என்று கேட்கும் போது அவர்களுக்கும் எம்மோடு சேர்ந்து கேட்க ஒரு vested interest இருக்கும்.

உலகளாவிய ரீதியில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவு கிடைக்கும்.

தென்னிலங்கை முஸ்லீம்கள் இந்த கலவரங்களுடன் தமக்கென ஒரு நிர்வாக அலகு தேவை என்பதை உணரத் தொடங்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நான் நினைக்கவில்லை முஸ்லீம்கள் தனிஅலகு கேட்பார்கள் என்று ....அவர்கள் இன்றும் சொல்லுகிறார்கள் சிறிலங்கன் முஸ்லீகள் என்று தான் .....கேட்டு கேட்டே தோல்வியை கண்ட சமுகம் எங்கள் சமுகம்....முஸ்லீம்கள் தனிஅலகு கேட்பது அதை கொடுப்பதும் இரு வேறு சமுகங்களின் தெரிவு ....இதில் தமிழர்களின் பங்கு ஒன்றுமில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஒரே அடியாகச் சொல்ல முடியாது. முதன் முதலில், நிலத் தொடற்சியற்ற நிர்வாக அலகு எனும் கோரிக்கையை முன்வைத்ததே அஷ்ரப்தான்.

தவிர, இப்படியே “என்னாத்த சமஸ்டி கேட்டு...என்னாத்த முஸ்லீமோடே சேர்ந்து கேட்டு” என்று எல்லாத்தையும் எதிர்மறையாகவே நோக்குவதால் எதுவுமே விழையப் போவதில்லை.

அதற்காக இப்படி செய்தால் உடனே மாங்காய் கிடைத்து விட இது ஒன்றும் மந்திரமில்லை.

எதிர் வரும் காலம் எம்மை விட முஸ்லீம்களுக்கு சவாலான காலமாக அமைய போகிறது. 30 வருடங்களாக அவர்கள் நடந்து கொண்டது போல் அல்லாமல், நாம் “நம்ப  நடந்து ஆனால் நம்பி நடவாமல்” சாதுரியமாக அரசியல் செய்தால், இலங்கையின் இரு தமிழ் பேசும் இனங்களும் மேம்பட்ட உரிமையோடு வாழ ஒரு முயற்சியாவது செய்யலாமே?

சுந்ததிரத்துக்கு முன் தமிழர்கள் தூக்கிப் பிடிக்காத “சிலோனீஸ்” அடையாளமா? தொடர்ந்து விழும் அடிகள் அவர்களையும் சமஸ்டி நோக்கி திருப்பும் வாய்ப்புகள் அதிகம்.

ஆனால் தமிழ், முஸ்லிம் இரு இனமும் தனி நாடு நோக்கி நகர வாய்ப்பில்லை. நாங்களும் சிறிலங்கன் தமிழ்ஸ் என்பதை கைப்பற்ற வேண்டியது காலக் கட்டாயம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/17/2019 at 6:58 PM, goshan_che said:

கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா? ஏனிந்த முடிவுக்கு வந்தீர்கள்?

மற்ற தமிழ் தலைவர்கள் கையாலகாவதர்கள் என்பற்க்காக விக்கியர் மாற்று தலைவர் என்று இல்லை.அபிவிருத்துக்கு எதிராவனர் எல்லாம் இப்ப எமக்கு தேவை இல்லை..அதுதான் காரனம்..

  • கருத்துக்கள உறவுகள்
On 5/17/2019 at 7:32 PM, goshan_che said:

எனக்கும் இருந்தது, ஆனால் இது சாத்தியமானதா என்பதில் அப்போது 50% இருந்த ஐயம் இப்போ பெருகி 80% ஆகி நிற்கிறது.

அவருக்கு நிர்வாகத்திறன் இல்லை என்பது தெளிவாகிறது. ஆனால் ஏனையோர் மிகவும் கள்ளர்களாக அல்லவா இருக்கிறார்கள். 

குறிப்பாக வெளிநாடுகளில் தமிழ்த்தேசியம் கதைக்கும் ஒருவரைக் காட்டி, இவர் விக்கி அளவுக்கு ஊழல் அற்றவர் என்று நம்மால் சொல்ல முடியுமா?

நீங்கள் சொல்லியது போல் ஒருவரைத் தானும் என்னால் லண்டனில் இனம் காட்ட முடியாதுளது.

எல்லாரும் சுத்த சுயநலமிகள், அல்லது புகழ் விரும்பிகளாகவே உள்ளார்கள்.

வேறு யாராலும் ஒருவரை அல்லது பலரை காட்ட முடிந்தால் - இங்கே எழுதலாமே?

****தனி மனிதர் பற்றிய எதிர் மறைக் கருதுகளை தவிர்த்து*****

எனக்கு  இதில் மாற்றுக்கருத்து  அல்லது  அனுபவம்  இருக்கிறது

நான்  மேலே எழுதிய  பழையவர்களை  விடுத்து 

புதியவர்கள்  வரணும்  என்பதற்கான காரணம்

அவர்கள்  கெட்டவர்கள்   என்பதல்ல

நாம்  அடியோடு எமது பாதையை 

மாற்றிக்காட்ட  வேண்டிய நிலையிலுள்ளோம் என்பதற்காகத்தான்.

அதற்குத்தான்   நான் உட்பட என  எழுதினேன்

யாழிலேயே  ஒரு விடயத்தில்  நான்  இருக்கின்றேன்  என்றால் 

அது  பற்றி எல்லோர்  பார்வையும்  ஒன்றாகவே  தானே  இருக்கும்?

புலத்திலுள்ளவர்கள்  பற்றிய  உங்களது கருத்துக்கு  எனது  பதில்

உங்களுக்கு  தலைகளை  மட்டுமே  தெரிந்திருக்கிறது  போலும்

எனக்கு  அடிப்படை  தொண்டர்களை  தெரியும் சகோ.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படைத் தொண்டர்கள் இதய சுத்தியானவர்கள்தான் ஒத்துக்கொள்கிறேன்.

ஆனால் அவர்களின் உழைப்பு எல்லாம், தலைகள் சரியில்லாமல் விழலுக்கு இறைத்த நீராகிறதே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, goshan_che said:

அடிப்படைத் தொண்டர்கள் இதய சுத்தியானவர்கள்தான் ஒத்துக்கொள்கிறேன்.

ஆனால் அவர்களின் உழைப்பு எல்லாம், தலைகள் சரியில்லாமல் விழலுக்கு இறைத்த நீராகிறதே.

அதற்காகத்தான் பழைய தலைகள் உருண்டு போக புதிய தலைகள் நிமிர வேண்டும் என்கிறார்கள் போலும்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.