Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலாலி இராணுவமுகாம் மீது தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானப்படையின் தாக்குதல் - குறைந்தது 6 அரசாங்கப்படையினர் மரணம், 13 பேர் காயம்

Featured Replies

நாளை எமக்கு பிறந்த நாள் ஒரு சாதனையும் இது வரை செய்யவில்லையே என்னத்த பிறந்த நாள் கொண்டாட என்று சலிப்புடன் இருந்தேன் தமிழர்களின் இந்த வெற்றியுடன் பிறந்த நாள் கொண்டாடலாம் என்று இப்பொழுது நினைக்கிறேன். இந்த வெற்றியையே எமது பிறந்த நாள் பரிசாக கொள்கிறேன். எடுத்துக் கொள்ளலாமா?

அன்புடன்

சிவராஜா

  • Replies 137
  • Views 30.2k
  • Created
  • Last Reply

நாளை எமக்கு பிறந்த நாள் ஒரு சாதனையும் இது வரை செய்யவில்லையே என்னத்த பிறந்த நாள் கொண்டாட என்று சலிப்புடன் இருந்தேன் தமிழர்களின் இந்த வெற்றியுடன் பிறந்த நாள் கொண்டாடலாம் என்று இப்பொழுது நினைக்கிறேன். இந்த வெற்றியையே எமது பிறந்த நாள் பரிசாக கொள்கிறேன். எடுத்துக் கொள்ளலாமா?

அன்புடன்

சிவராஜா

இந்த வெற்றியை பிறந்த தினத்துடன் கொண்டாட வாழ்த்துக்கள்.

பறப்புகளும் தொடரும் பகைவனுக்கு இழப்புக்களும் தொடரும்......

தமிழீழ வான்படைக்கு சிறப்பு வாழ்த்துக்கள் ........

அப்படி போடு போடு ........ :P :P

வாட பகையே வாட...

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் 24-04-2007 17:26 மணி தமிழீழம் [சிறீதரன்]

பூநகரியிலிருந்து வந்த இரு விமானங்களே குண்டு வீச்சை நடத்தின – குடாநாட்டு மக்கள்

இன்று அதிகாலை 1.25 மணியளவில் பலாலி விமானத் தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு சென்றுள்ளார்கள் பூநகரியில் இருந்து வந்ததாக தெரிவிக்கப்படும் இரண்டு விமானங்களே இந்த தாக்குதலை மேற் கொண்டதாக வலிகாமம் பகுதியில் உள்ள குறிப்பாக வலி வடக்கு, வலி தெற்குப் பகுதியில் உள்ள மக்கள் நேரடியாக உணர்ந்துள்ளார்கள்.

விமானம் மிகவும் தாழ்வாகப் பறந்து வந்து இந்தக் குண்டுத் தாக்குதலை மேற் கொண்டுள்ளது. பலாலி விமானப் படைத்தளத்தில் நான்கு குண்டுகள் வீழ்ந்து வெடித்த சத்தம் கேட்ட ஒரு சில நிமிட நேரத்தில் மாதகல் சேந்தான் குளம், சாங்கேசன்துறை, பலாலி, வடமராட்சி மற்றும் கரையோரப் பகுதிகளில் உள்ள படைத்தரப்பினரின் முகாம்களில் இருந்து பரவலாக ஆகாயத்தை நோக்கி ரேசர் குண்டுகள் உட்பட பாரிய துப்பாக்கிகள் கொண்டு சுடப்பட்டதுடன் பரா வெளிச்சக் குண்டுகளும் ஏவப்பட்டன.

வான் தாக்குதலைத் தொடர்ந்து பாரிய ஆட்டிலெறித் தாக்குதலை வன்னி பூநகரிப் பகுதியை நோக்கி காலை முதல் விடாது மேற்கொள்ளப்பட்டமையால் வலிவடக்கு, வலி தெற்கு உட்பட யாழ் குடா நாட்டின் பல பகுதிகளும் அதிர்வுகளுக்கு உள்ளாகின.

இதேநேரம் இராணுவ தகவல் மையம் பாரிய சேதம் ஏற்படவில்லை எனவும் ஆட்லெறித் தாக்குதலே இடம் பெற்றதாகவும் அதனை தாம் முறியடித்துவிட்டதாகவும் உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

விமானக்குண்டு வீச்சினால் பலாலி விமானத்தளம் உட்பட பல கட்டிடங்களும் சேதமாகியுள்ளதாகவும் படைத்தரப்பினர் தெரிவிப்பதாக உயர் பாதுகாப்பு வலயத்தில் கடமைக்குச் சென்று உள்ளிருந்து வருபவர்கள் தெரிவி;க்கின்றார்கள்.

pathivu

கட்டுநாயக்கா தாக்குதல் மர்மங்கள் இன்னும் வெளிவராத நிலையில் பலாலி சேதத்தையும் அரசு மூடி மறைக்க முயல்கிறது.

குடா நாட்டு தமிழர்கள் பொய்யர்கள் ... 2 காகங்கள் மட்டுமே பலாலி மேல் பறந்தன அதற்கே எமது விமான எதிர்ப்பு படை பொங்கி எழுந்து அந்த காகங்களை சுட்டு வீழ்த்தின .புலிகள் தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட உருளைகளை வைத்து செய்த சைக்கிளை வைத்து சும்மா சிறிய கையெறிகுண்டு தாக்குதல் மட்டுமே பலாலி மீதி நடத்தினர்..... ஆனால் அதற்கு பயந்து எமது வீரர்கள் ஓடிய போது ஒருவன் வீசிய பீடியில் இருந்து பற்றிய தீ ஆயுதக்கிடங்கை எரித்து விட்டதில் 6 பேர் பலி கொஞ்ச பேர் காயம் அவ்வளவு தான் ........ இதெல்லாம் எங்களுக்கு புதுசா என்ன..........

கேகலிய ரம்புக்வெல்ல ( நன்றி புருடா.கொம்)

இதை சுட்டது லங்கா அக்கடமியில்;அங்கு பெரிய சுவார்ஸ்யம் என்ன தெரியுமா?தமிழர் சிங்களவர் கருத்துப்பரிமாற்றம்,பல உண்மைகளின் வெளிப்பாடு கூட கிடைக்கும் அங்கு பல ராணுவத்தகவல்கள் கூட கிடைக்கும்

www.TheLankaAccadamic.org

இதை சுட்டது லங்கா அக்கடமியில்;அங்கு பெரிய சுவார்ஸ்யம் என்ன தெரியுமா?தமிழர் சிங்களவர் கருத்துப்பரிமாற்றம்,பல உண்மைகளின் வெளிப்பாடு கூட கிடைக்கும் அங்கு பல ராணுவத்தகவல்கள் கூட கிடைக்கும்

www.TheLankaAccadamic.org

The reason the Tigers do not want to destroy Palaly airport is that they would want to use it when they capture it. That may be the reason that they are attacking selected places at the air base! Unlike Elephant Pass complex, Palaly Air Base is an utmost important site for the Tigers. So they will do everything in their power not to destroy the Airport but the other facilities.

Another silly comment of our Forces Spokesman is that "They chased back the Tiger Aircraft,.....and they bombed the Army Camp causing the death of 6 personnel". What do you call this, success or failure?

  • கருத்துக்கள உறவுகள்

விமானத்தாக்குதலால் தமக்கு எந்தச் சேதமும் இல்லை என்றும் புலிகளின் ஆட்லறித் தாக்குதலில் தான் 6 படையினர் காயமடைந்து பின்னர் இறந்து போயினர் என்றும் அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விமானத்தாக்குதலை அரசு உள்ளபடி ஏற்றுக் கொண்டால் அதன் விளைவு எதிர்கால இராணுவ நடவடிக்கைகளை மட்டுமன்றி அரசின் பொருளாதாரத்தையும் முழு சிறீலங்காவையும் பீதிக்குள் தள்ளும் என்பது சாதாரண உண்மை. அதை புரிஞ்சு கொண்டவர்களாக புகலிடத்தில் உள்ளவங்க இல்லை என்பதையே கேலியும் நளினமும்.. திறனாய்வற்றதுமான கருத்துக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

வான் புலிகளைப் பொறுத்தவரை அவர்களால் இன்னும் ஆகாய வழியில் இராணுவ இலக்குகளை எட்ட முடியும் என்பதை அல்லது அணுக முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். அதுவும் கட்டுநாயக்கா தாக்குதலின் பின் பகிரங்கமாகவே தாக்குதல் தொடரும் என்று அறிவித்து.. அரசு தாக்குதலைத் தடுக்க மாற்று ஏற்பாடுகளைச் செய்திருந்தும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதானது வான் புலிகளுக்குக் கிடைத்த பெரு வெற்றி..! தாக்குதலின் விளைவுகளை ஒத்துக் கொள்ளுதல் இராணுவ மனோபலத்துக்கு அரசே சம்மட்டியால அடிச்சது போல ஆகிவிடும் என்பதால்.. அரசு அப்படி ஒரு தாக்குதலே நடக்கல்ல என்று சொல்லி.. இப்ப கொஞ்சம் கொஞ்சமா கதைய அவிழ்த்து விட்டு வரும் நிலையில் புலிகளின் தாக்குதலால் வீழ்ந்த வேலிகள் என்று வெட்டி வீழ்த்திய வேலிகளின் படத்தை அரசு வெளியிட்டு.. சில செய்திகளை இராணுவத்துக்கும் சிறீலங்கா மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் சொல்ல விளைகிறது. அதில் ஒன்று தங்கள் இராணுவ இயந்திரம் புலிகளின் எ-ந்தத் தாக்குதலையும் சமாளிக்கக் கூடிய பலத்துடன் இருக்கிறது என்பதையே. இந்தத் தாக்குதலையும் அரசின் இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்த அரசு உபயோக்கும் என்பதும் ஆயுதக் கொள்வனவை நியாயப்படுத்தப் பாவிக்கும் என்பதும் தமிழர்கள் அறிஞ்சுக்க வேண்டிய சராசரி உண்மையாகும்..! எனவே அரசே தன் வாயால இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்புக்களைச் சொல்லும் என்று எதிர்பார்ப்பது அநாவசியமானது..! அதற்காக அரசை நக்கலடிப்பது அதை விட அறிவீனமானது..! :lol: :P

வான்புலிகள் நடத்திய அந்த தாக்குதல் நிமிடங்கள்....வானுயர தீப்பிழம்பு- வான் நோக்கி தாக்குதல்கள்: நேரில் பார்த்த யாழ். மக்கள்

[செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2007, 16:41 ஈழம்] [சி.கனகரத்தினம்]

யாழ். பலாலி சிறிலங்கா கூட்டுப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களை நேரில் பார்த்த யாழ். பொதுமக்கள் எமது 'புதினம்' இணையத் தளத்துக்கு நேர்காணல் அளித்துள்ளனர்.

சிறிலங்காவின் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அச்சுறுத்தலால் தங்களது பெயரையும் வசிப்பிடத்தையும் வெளியிட வேண்டாம் என்று அம்மக்கள் கேட்டுக் கொண்டதையடுத்து அவர்கள் தெரிவித்த தகவல்களைத் தொகுத்து தருகிறோம்.

இரவு 1.30 அளவில் இருக்கும். நாங்கள் வீட்டில் இருந்து பார்க்கையில் மேல்நோக்கி போக்கஸ் லைட் அடிப்பதுபோல் வெளிச்சம் தெரிந்தது.

வானூர்திகள் வந்து போன சத்தம் கேட்டது. எத்தனை வானூர்திகள் என்பது தெரியவில்லை. ஆனால் வானூர்தி இறங்குகின்ற சத்தம் கேட்டது.

எறிகணை வெடிப்பது போன்ற சத்தம்....பெரிய பெரிய சத்தம் என 15 முதல் 20 நிமிடம் வரை நீண்டது.

நாங்கள் அப்போது படுப்பதற்கு தயாராக இருக்கையில் மின்சாரம், தொலைபேசி யாவும் துண்டிக்கப்பட்டது. ஆயுதக் கிடங்கு வெடித்திருக்கலாம் எனும் கதை இங்கு உள்ளது.

இராணுவத்தினர் இப்போது இங்கே பயந்து போய் சும்மா சும்மா சுட்டுக்கொண்டிருக்கின்றார்

  • கருத்துக்கள உறவுகள்

களமாடிய வேங்கைகளுக்கு வாழ்த்துக்கள்!!!!! :lol::lol:

இதை சுட்டது லங்கா அக்கடமியில்;அங்கு பெரிய சுவார்ஸ்யம் என்ன தெரியுமா?தமிழர் சிங்களவர் கருத்துப்பரிமாற்றம்,பல உண்மைகளின் வெளிப்பாடு கூட கிடைக்கும் அங்கு பல ராணுவத்தகவல்கள் கூட கிடைக்கும்

www.TheLankaAccadamic.org

The reason the Tigers do not want to destroy Palaly airport is that they would want to use it when they capture it. That may be the reason that they are attacking selected places at the air base! Unlike Elephant Pass complex, Palaly Air Base is an utmost important site for the Tigers. So they will do everything in their power not to destroy the Airport but the other facilities.

Another silly comment of our Forces Spokesman is that "They chased back the Tiger Aircraft,.....and they bombed the Army Camp causing the death of 6 personnel". What do you call this, success or failure?

ம் .இதுவும் அங்கைதான் இருந்திச்சு

TOSCA wrote:

panangkotte wrote:

IF THE LTTE WANTED TO BOMB PALLAI OR KATUNAYAKE

THE DAY SHOULD HAVE BEEN TO DAY, AS ALL LANKANS BOTH

SINHALA, TAMIL AND MUSLIMS WILL BE GLUED TO THE TV.(WORLD CUP)

SO WHY DID THEY COME LAST NIGHT?????

Because they are stupid.

No because they didn't wanna miss the match themself

வரும் ,வராது ,வந்துவிட்டது....... :rolleyes:

மீண்டும் ஒரு நெற்றியடி...... :lol:

பொறுத்தார் பூமி ஆள்வார்... புரிகிறதா?

5 மணித்தியாலத்திற்கும் மேல் தொடர்ந்து வெடியோசையுடன் வானளவ எரிந்துள்ளதாமே...

இனியும் என்ன மறைப்பு......துண்டு துணி மீண்டும் கவனம்......

புலி பதுங்குவது பறந்து தாக்குவதற்கு என்பது உண்மையே.....

அதிகமாகத்தாக்கினதால் எமக்கு தேவையான கையளிக்க இருந்த ஆயுதங்கள் எல்லாம் கிடங்குடனே அழிந்து போய்விட்டதே என்ற கவலை மகிழ்ச்சியின் மத்தியில்...... :P

முகமாலையில் இனி என்ன செய்வது முன்னோக்கியா? பின்னேக்கியா? :lol:

கெடு குடி........ :P

பலாலிக்குள் புலிகள் வானூர்தி நுழைவதற்கு 5 நிமிடத்துக்கு தகவல் கிடைத்துவிட்டது: அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேயவர்தன

[செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2007, 20:25 ஈழம்] [செ.விசுவநாதன்]

பலாலிப் பிரதேசத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி தென்படுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாகவே அந்த வானூர்தியின் நடமாட்டம் தொடர்பாக கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மூலம் தகவல் கிடைத்துவிட்டது என்று சிறிலங்காவின் தகவல் ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேயவர்தன தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை:

தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் இன்று அதிகாலை மேற்கொண்ட தாக்குதல் காரணமாக பலாலி இராணுவத் தளத்துக்கோ அல்லது வான்படைத் தளத்துக்கோ எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை.

மகிந்தவின் அறிவுறுத்தலுக்கமைய அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் ஜகத் புஷ்பகுமார ஆகிய மூவரும் பலாலி இராணுவத்தளத்தின் நிலைமையை அவதானிப்பதற்காக இன்று செவ்வாய்க்கிழமை மாலை பயணம் மேற்கொண்டனர்.

ஏ.பி, ஏ.எஃப்.பி மற்றும் ரொய்ட்டர் உட்பட 25 உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களின் ஊடகவியலாளர்களையும் தம்முடன் அவர்கள் அழைத்துச் சென்றனர்.

அங்கு என்ன நடந்தது என்பதனை அதிகாரிகளும் படை வீரர்களும் ஊடகவியலாளர்களிடம் விவரித்தனர்.

பலாலிப் பிரதேசத்துக்குள் புலிகளின் வானூர்தி தென்படுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாகவே அந்த வானூர்தியின் நடமாட்டம் தொடர்பாக கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மூலம் தகவல் கிடைத்தது.

உடனடியாக நாம் செயலில் இறங்கினோம். படைத்தளத்தின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. புலிகளின் வானூர்தியை நோக்கி இராணுவத்தினர் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். இத்தாக்குதல் காரணமாக அப்பிரதேசத்திலிருந்து தப்பியோடிய வானூர்தி மயிலிட்டி கரையோரப் பகுதியில் மூன்று குண்டுகளைப் போட்டுவிட்டு சென்றுள்ளது.

தமது பாதுகாப்பிடங்களில் இருந்து வெளியே வந்து புலிகளின் வானூர்தியைச் சுட்டுவீழ்த்த முயன்ற ஆறு இராணுவத்தினர், புலிகள் வீசிய ஒரு குண்டில் பலியானார்கள்.

மயிலிட்டி பகுதியில் கைவிடப்பட்ட பழைய கட்டடம் ஒன்று குண்டுத் தாக்குதலில் சேதமடைந்துள்ளதனை அங்கு பயணம் செய்த ஊடகவியலாளர்கள் அவதானித்தனர்.

இது தவிர பலாலி இராணுவத்தளத்துக்கோ அல்லது வான்படைத் தளத்துக்கோ எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்று அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சிறிலங்கா வான்படை, இராணுவம் மற்றும் கடற்படையின் முக்கிய தளபதிகளை உள்ளடக்கிய குழு ஒன்று இன்று பலாலிக்கு அவசரமாக விரைந்து சென்றது.

அங்கு யாழ். பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டன

thakaval----puthinam

  • கருத்துக்கள உறவுகள்

களமாடிய வேங்கைகளுக்கு வாழ்த்துக்கள்!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எந்த ஆயுதங்களை கையில் எடுப்புது என்பதை

எமது எதிரியே நிர்ணயிக்கிறான்!

"எமது போராட்ட வடிவங்கள் மறலாம்....

எமது இலட்சியம் மாறாது."

மேதகு. வே.பிரபாகரன்

(ஆகஸ்ட் 1987)

காலத்திற்கேற்ப எனது இன மக்களை பாதுகாக்க

போராட்டங்களை வடிவமைத்த தலைவனுக்கும்.....

அதை அவ்வாறே செயற்படுத்திய போராளிகளுக்கும்......

தமது இன்னுயிரை ஈர்ந்து இவையெல்லாவற்றையும் சாத்தியப்படுத்திய

மாவீர பெருந்தகைகளுக்கும்.

உங்களை வாழ்த்த தமிழில் வார்த்தைகள் இல்லை!

நீங்கள் சாதராண வாழ்துக்களுக்கு அப்பபாற்பட்வர்கள்

உங்கள் அசாதாரண செயல்களை

சாதாரண வாழ்த்தென்ற சொல்லால் சொல்லிவிட இஸ்டமில்லை எனக்கு!

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாளை எமக்கு பிறந்த நாள் ஒரு சாதனையும் இது வரை செய்யவில்லையே என்னத்த பிறந்த நாள் கொண்டாட என்று சலிப்புடன் இருந்தேன் தமிழர்களின் இந்த வெற்றியுடன் பிறந்த நாள் கொண்டாடலாம் என்று இப்பொழுது நினைக்கிறேன். இந்த வெற்றியையே எமது பிறந்த நாள் பரிசாக கொள்கிறேன். எடுத்துக் கொள்ளலாமா?

<<

என்ன கேள்வி இது!! ?..

இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துக்கள் ஐயா!. "வெற்றிமீது வெற்றி வந்து சேரட்டும்! அவை யாவும் எங்கள் ஈழமறவரைப்போய் சேரட்டும்!!..

  • கருத்துக்கள உறவுகள்

பல ஏக்கர் விஸ்தீரணமுள்ள பலாலியில் எந்த மூலையைக் காட்டினீர்கள் யாப்பா..??!

அரச அறிக்கையின் தளம்பல் நிலை..

ஆரம்பம் - அப்படி ஒரு விமானத்தாக்குதலே நடிக்கவில்லை, கைக்குண்டுத் தாக்குதலே நடந்துள்ளது- விமானப்படை அதிகாரி.

இடை நிலை - விமானம் ஒன்று வந்தது அது விரட்டியடிக்கப்பட்டது. புலிகளின் ஆட்லறித்தாக்குதலில் 6 படையினர் காயப்பட்டு பின்னர் பலி.

இறுதியாக அறிக்கை - விமானம் வந்தது. விட்டியடிக்கப்பட்டது. ஆனால் போற வழியில் குண்டு போட்டதில் சுட்டு வீழ்த்த முனைந்த வீரர்களைக் கொன்றது. ஆக விமானம் இலக்குத்தவறாமல் குண்டு போட்டுவிட்டு தப்பிச் சென்றதை ஒத்துக் கொள்கிறார்கள்.. என்பதுதானே உண்மை..! :P :lol::lol:

B.B.C தமிழோசையில் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளே மிக ஆக்ரோசத்துடன் பேட்டி கொடுத்துள்ளார். அரசு 100 தடவை தாக்குதல் நடத்தினால் புலிகள் இரு தடவை தாக்குதல் நடத்துவது பெரிய வேலையா? முடிந்தால் அவர்கள் பகலில் தாக்குதல் நடத்திப் பார்க்கட்டுமே. இவ்வாறெல்லாம் தெருச் சண்டியர் போல் உளறியிருக்கிறார். பகலிலும் இராணுவத்தை நிம்மதியில்லாமல் அலையவிடப் போகிறார். தமிழ்ச்செல்வனின் எச்சரிக்கையை இன்னமும் அறியவில்லை போலிருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேச ஊடகவியலாளர்களை கூட்டிக்கொண்டு போனவையாம்.. இதுதான் பலாலி என்று வேறை இடத்தைகொண்டே காட்டியிருப்பினம் போலை..

அவையும் சும்மா சிரிச்சுப்போட்டு வந்திருப்பினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆளின்ரை பெயரிலையே "புள்ளே" என்று வந்தது சரியாத்தான் இருக்கு... குழந்தை புள்ளை என்று வந்திருக்கவேண்டும்..

இங்க பிரச்சனை எத்தினை தடவை தாக்குதல் நடத்துகிறோம் என்றதல்ல.. எங்கே தாக்குதல் நடத்துறோம்..

அதன் விளைவுகள் என்ன என்றதுதான்..

மற்றது இது உங்களை மாதிரி அரசியல் பிரச்சனையில்லை பகலில் தாக்குதல் நடத்திக்காட்டுறோம் என்று சவால் விடுவதற்கு..

எங்களுக்கு இது விடுதலைப்போராட்டம்.. வாழ்விற்கான போராட்டாம்.. உங்களுக்கு கொழுப்பு.. உங்களுக்கு அரசியல் பொழுதுபோக்கு..

உங்கடை சவால் சேட்டைக்கு நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..

B.B.C தமிழோசையில் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளே மிக ஆக்ரோசத்துடன் பேட்டி கொடுத்துள்ளார். அரசு 100 தடவை தாக்குதல் நடத்தினால் புலிகள் இரு தடவை தாக்குதல் நடத்துவது பெரிய வேலையா? முடிந்தால் அவர்கள் பகலில் தாக்குதல் நடத்திப் பார்க்கட்டுமே.

Edited by Kishaan

  • கருத்துக்கள உறவுகள்

டீ.டீ.ஊ தமிழோசையில் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளே மிக ஆக்ரோசத்துடன் பேட்டி கொடுத்துள்ளார். அரசு 100 தடவை தாக்குதல் நடத்தினால் புலிகள் இரு தடவை தாக்குதல் நடத்துவது பெரிய வேலையா? முடிந்தால் அவர்கள் பகலில் தாக்குதல் நடத்திப் பார்க்கட்டுமே. இவ்வாறெல்லாம் தெருச் சண்டியர் போல் உளறியிருக்கிறார். பகலிலும் இராணுவத்தை நிம்மதியில்லாமல் அலையவிடப் போகிறார். தமிழ்ச்செல்வனின் எச்சரிக்கையை இன்னமும் அறியவில்லை போலிருக்கிறது.

இது என்ன ரஐனிகாந்த் படமா?

ஒருக்கா எறிஞ்சா நூறு தரம் எறிஞ்சமாதிரி என்று சொல்வதற்கு.

இவங்களைச்சொல்லி குற்றமில்லை

இவங்களுக்கெல்லாம் அமைச்சர் பதவி கொடுத்திருக்கின்றாரே

அந்த முட்டாளை அடிக்கணும் செருப்பால.....

B.B.C தமிழோசையில் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளே மிக ஆக்ரோசத்துடன் பேட்டி கொடுத்துள்ளார். அரசு 100 தடவை தாக்குதல் நடத்தினால் புலிகள் இரு தடவை தாக்குதல் நடத்துவது பெரிய வேலையா? முடிந்தால் அவர்கள் பகலில் தாக்குதல் நடத்திப் பார்க்கட்டுமே. இவ்வாறெல்லாம் தெருச் சண்டியர் போல் உளறியிருக்கிறார்....

100 தடவை மக்கள் குடியிருப்புகளுக்கு மேல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதற்கும்,

இரண்டு தடவை திட்டமிட்டு துல்லியமாக குறிவைத்துத் தாக்குவதற்கும் வித்தியாசம் உண்டென்பது இவருக்குத் தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

B.B.C தமிழோசையில் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளே மிக ஆக்ரோசத்துடன் பேட்டி கொடுத்துள்ளார். அரசு 100 தடவை தாக்குதல் நடத்தினால் புலிகள் இரு தடவை தாக்குதல் நடத்துவது பெரிய வேலையா? முடிந்தால் அவர்கள் பகலில் தாக்குதல் நடத்திப் பார்க்கட்டுமே. இவ்வாறெல்லாம் தெருச் சண்டியர் போல் உளறியிருக்கிறார். பகலிலும் இராணுவத்தை நிம்மதியில்லாமல் அலையவிடப் போகிறார். தமிழ்ச்செல்வனின் எச்சரிக்கையை இன்னமும் அறியவில்லை போலிருக்கிறது.

யாராவது தயவுசெய்து வெபர் மைதானத்தில் மகிந்த சமரசிங்க சாரம் அவிழ அவிழ ஓடிய ஒளிப்பதிவை ஜெயராஜ் புள்ளேக்கு அனுப்பி விடுங்களேன். ஏனென்றால், புள்ளேக்கு அப்படி ஓடிய அனுபவம் இன்னும் கிடைக்கவில்லை. புள்ளேயும் வெள்ளைச்சாரம் தான் கட்டும். :P

B.B.C தமிழோசையில் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளே மிக ஆக்ரோசத்துடன் பேட்டி கொடுத்துள்ளார். அரசு 100 தடவை தாக்குதல் நடத்தினால் புலிகள் இரு தடவை தாக்குதல் நடத்துவது பெரிய வேலையா? முடிந்தால் அவர்கள் பகலில் தாக்குதல் நடத்திப் பார்க்கட்டுமே.

அட தமிழனுக்கு பிறந்த தமிழ் தெரியாத பித்தம் பிடித்த மோட்டு ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளே உனது பெயரே உனக்கு சரியாத்தெரியாது என்று அன்ரன் பால சிங்க அண்ணன் தெளிவாக சொன்ன போது ஆம் என்று தலை ஆட்டி விட்டு பிறகு நீ என்ன இன்னும் சிங்களவன் போல் நடித்து உனக்கும் சிங்களத்தின் புத்தி வந்து விட்டது போல் அல்லவா இருக்கு உமது மூதாதையர் யார் என்று உனக்கு தெரியுமா? அல்லது நீ எங்கு இருந்து வந்தவன் என்றாவது தெரியுமா? அல்லது நீ எந்த இனத்தை சார்ந்தவன் என்றாவது தெரியுமா? அல்லது தமிழ் தெரிந்ததுபோல் சிங்களம் உனது அப்பா அம்மாவிடம் பேசி தொடர்புதான் உன்னால் வைத்து கொள்ள முடியுமா? உனது பிள்ளை என்ற பெயரையே நீ சிங்களவன் என்று காட்டுவதற்காக புள்ளை என்று மாற்றி வைத்தாய் ஆனால் நீ ஆரம்ப பாடசாலையில் கற்ற பொழுது உன்னை உனது பெற்றார் தமிழ் கற்க வேண்டும் என்று ஒரே ஒரு பாடசாலை இன்னும் பெயர் மாற்றாது இருக்கும் அந்த தமிழ் பாடசாலையில் அல்லவா உன்னை அவர்கள் சேர்த்தார்கள் ஆனால் நீ இன்று உனது பதவி ஆசைக்காக பல கட்சிகள் மாறுவது போல் இப்போது உனது இனம் தாய் தந்தை மொழி எல்லாவற்றையும் மாற்றப்பார்க்கின்றாய் உனது திரு முழுக்கு பெற்ற ஆலையத்தில் நீ இன்னும் தமிழன் என்று தான் உள்ளது அதை யாவது சென்று பார் ( புனித செபஸ்த்தியார் ஆலையத்தில்) அதில் எல்லாம் தெரியும் அதன்பிறகும் திருந்தாது போனால் உனது இனம் நீர் கொழும்பில் தனது இருப்பிடத்தை காக்க நினைத்தால் நீ உன்னை காப்பாற்றுவது கடினமாகும் ( டக்கிளஸ் . ஆனந்த சங்கரி, கரிநாகம் கருணா இன்னும் சிலர் போல் )

அது மட்டும் இல்லை இப்பொழுதும் தங்களை காப்பாற்ற வழி இல்லாமல் அங்கு வாழும் மீனவத் தமிழ் குடும்பங்கள் தங்களை தமிழன் என்று சொல்லப்் பயந்து வாழ்கின்றனர் காரணம் அவர்களுக்கென்று தலைமை ஒன்று இல்லாதது ஆதலால் எமது விடுதலை போராட்டம் வெற்றி கொள்ளப்படும் பொழுது தலைவர் நீர் கொழும்பில் இருக்கும் தமிழர்களையும் காப்பார் மீற்பார் என்ற உரிமையோடு பொறுமையாக இருக்கின்றனர் ஆதலால் நீ உன்னை திருத்தி வாழ் எம்மோடு சேர்ந்து வாழப்பழகிக் கொள்!

அன்மையில் கொழும்பில் கடல் படையினர் வான்படையினர் தாக்கியபோது அப்பாவி தமிழ் (சிங்கவர் என்று சொல்லப்பட்டது ) மீனவர்கள் இறந்தபோது அவர்கள் (சிங்களவர் என்றும் ) புலிகள் என்றும் சொல்லி மூடி மறைத்த சம்பவம் உனக்கு நினைவிருக்கின்றதா? இதை அங்கு (நீர் கொழும்பில் இருக்கும்) இருக்கும் தமிழர் (சிங்களவர் என்று அழைக்கப்படும் தமிழர்) எமக்கு கதறி உண்மையை எடுத்து இயம்பினர்!!!!!!!!!!!!!!!!!!

இறுதியாக விடையத்துக்கு வருகின்றேன் உமது விடையத்திற்க்கு!!!

அதாவது புலிகளால் பகலில் வந்து தாக்குதல் நடத்திவிட்டு திரும்பட்டும் என்று வாய்சவாடல் விட்டு உள்ளீர்??? முடிந்தால் உமது அரச துருப்புக்களுக்கு நேருக்கு நேர் நிக்கும் எமதுபோராளிகளுடன் போராடி பார்க்கச் சொல்லு அதை விட்டு விட்டு விமானத்தால் வந்து அப்பாவி சனத்தின் மேல் குண்டு போட்டு அழித்து விட்டு மார் தட்டாதேயும் இன்னும் ஒன்று நான் சொல்ல வேண்டும் அதாவது இரவில் வந்து குறிப்பிட்ட இழக்கை அழித்து மீழும் படை யணிகள் பகலில் வந்தால் நீர் கூட கச்சையோடுதான் பங்கருக்குள் போய் மறைந்து கொள்ள வேண்டும் பவ்வியமாக இரும் கண்டபடி வாயைக்கொடுத்து கோத்தபாய வாங்கினமாதிரி நீயும் வாங்காதே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Edited by Inathant

பலாலி விமானத்தாக்குதல் பற்றி IBN Live வெளியாகியுள்ள செய்தி ஒளி வடிவம்

LTTE raids Jaffna military base

CNN-IBN

New Delhi: In the second air strike in a month, Tamil Tigers attacked a large military base at Jaffna peninsula in Sri Lanka, early on Tuesday morning.

They used two light aircraft to attack the Lankan forces said an LTTE spokesman confirming the attack.

Six soldiers were killed and 10 others were wounded in the air raid. According to news agency PTI, Sri Lanka's army chief Lt Gen Sarath Fonseka said the Tigers used light aircraft to attack Palaly military facility, but ground troops opened fire forcing them to change course.

Fonseka, appearing on national television, gave details of how the military beat back the rebel attack.

"Troops on the forward defence lines saw them coming and alerted Palaly. They switched off all lights, took out the heavy guns and opened up," he said adding the Tigers while retreating dropped two bombs on the nearby Milady army camp.

Tiger spokesman Rasiah Ilanthiryan was quoted by PTI as saying that two light aircraft of the Liberation Tigers of Tamil Eelam bombed the Palaly air base in Jaffna and returned to their secret location in the Wanni region, further south.

"We have carried our second air attack at 01:20 local time on the Palaly air field and their military stores," Ilanthiriyan was quoted by PTI as saying from an undisclosed location in the northern part of the Island.

This is the second time rebels conducted an air raid, after a strike near Colombo, last month.

Edited by Shakana

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.