Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் தோழர்களுக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முஸ்லிம் தோழருக்கு எழுதியது... 
.
தோழா, சில தமிழ் ஊடகங்களின் தவறு கண்டிக்க வேண்டியது. சில முஸ்லிம் சமூக வலை தழத்திலும் குறிப்பாக பின்னூட்டங்களில் தமிழர் பற்றிய வசைபாடல்கள் வருகின்றன.

அனுதாபம் தெரிவிக்கிற எல்லோரும் கிறிஸ்தவம் ஒரு இனம்போல பேசுகிறார்கள். தாக்கபட்ட தமிழ் பூசைகளில் கொல்லபட்டது கிழக்குமாகாணத்தையும் மலையக தென்னிலங்கையையும் சேர்ந்த தமிழர்கள் என்பதை யாரும் கணக்கெடுக்கவில்லை என்கிற கவலை கிழக்கு நாடாளுமன்ற பிரதேசசபை தலைவர்கள் மத்தியிலும் மனோ கணேசன் போன்ற மலைய தலைவர்கள் மத்தியிலும் பல தமிழ் ஊடகவியலாளர் மத்தியிலும் உள்ளது. தயவு செய்து இதனையும் பொருட்படுத்துங்கள். மட்டகளப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்தரனின் உறவினர்க்ச்ள் கொல்லப் பட்டதாக சொன்னார்கள்.
.
கத்தோலிக்க கருதினால் மல்கம் ரஞ்சித்திடம் அனுதாபம் தெரிவிப்பது முக்கியம். அதே சமயம் இலங்கை மற்றும் மலையக தென்னிலங்கை தமிழ் தலைவர்களுக்கும் அனுதாபம் தெரிவிதிருக்கலாம் அல்லவா? நான் எப்பவும் முஸ்லிம்களோடு நிற்கிறவன் என்பதால் பலரும் இந்த விடயங்களை என்னிடம் சுட்டிக் காட்டுகிறார்கள். இது தொடர்பான ஆதங்கம் பிரமுகர்களின் பேச்சிலும் ஊடகங்களிலும்கூட தொனிக்கிறது. இதனை யாராவது சரி செய்ய வேண்டாமா?

விவாதங்கள்.

Abdul Waji இங்குள்ள முஸ்லிம் பள்ளிவாயல் நிறுவனங்களின் சம்மேளனத்திடம் இது தொடர்பாக பேசினேன். அவர்கள் தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு சியோன் தேவாலய சபையினரை சந்திப்பதற்கு முயற்சிகள் எடுத்த போதும் தமக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றனர் . நானும் தனிப்பட்ட முறையிலும், ஊடகவியலாளர் நண்பர் சீவகன் மூலமும் முயன்றேன் தொடர்பு கொள்ள முடியவில்லை .

2
Jaya Palan தமிழ் மக்களுக்கு அனுதாபம் தெரிவியுங்கள் தோழா. vஇயாழேந்திரன் போல கிழக்கு தமிழ் தலைவர்கள் மனோ கணேசன் போன்ற தென் இலங்கை தமிழ் தலைவர் உள்ளார்கள் தோழா
3
Abdul Waji முகநூலில் அனுதாபம் தெரிவிப்பதையா குறிப்பிடுகின்றீர்கள் ? தமிழ் மக்களுக்குள் இருக்கும் ஓரு சமூகப் பிரிவினர் அவர்களது வழிபாட்டிடங்களில் தாக்கப்பட்டுள்ளனர். அந்த நிறுவனங்களின் தலைவர்களோடு பேசுவதில் தவறேதும் இருப்பதாக நினைக்கவில்லை. எனக்கு அறிமுகமான ஓரு ஆசிரியரின் உறவினர்களும் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து தனிப்பட்ட முறையில் உதவி செய்ய விரும்பினேன் . பாதிக்கப்பட்ட உறவினர்கள் அதை ஏற்கும் மன நிலையில் இல்லை என நண்பர் சொன்னார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலை தற்போதைக்கு இவ்வாறுதான் உள்ளது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. மீண்டு வர சில காலங்கள் எடுக்கலாம்.
4
Jaya Palan Abdul Waji நன்றி தோழா. குறைந்த பட்ச்சம் பத்திரிகை அறிக்கைகளாவது வெளியிடுங்கள். வியாழேந்திரன் மனோ கணேசன் போன்ற பாதிக்கப் பட்டவர்களின் நாடாளுமன்ற பிரதேசசபை பிரதிநிதிகள் உள்ளனர் அவர்களோடு பேசுங்கள் தமிழ் ஊடகங்களில் பேசுங்கள். இது மிகபெரிய ஆறுதலை கொடுக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் அவசியமான மாற்றங்களையும் ஏற்படுத்தும்/.
5
 

Mohamed Fahath முஸ்லிம் பள்ளிவாயல்கள் சம்மேலனமும் ஜம்மியத்துல் உலமாவும் இணைந்து தமது அனுதாப அறிக்கைகளை வெளியிட்டு இருந்தார்கள். மேலும் நாவற்குடா வில் இடம் பெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்விற்கும் சென்று கலந்து கொள்வதற்கு சில உலமாக்களும் சமூக நலன் விரும்பிகளும் எண்ணி இருந்தார்கள். ஆனால் பாதிக்கப்ட்டவர்களின் மனோநிலை மற்றும் அங்கு சமூகமளிக்கும் போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மேலும் பிரச்சினையை பெரிதாக்க சில விசமிகள் செயற்படக்கூடும் என்று அங்கிருந்து கிடைத்த சகோதரர்களின் தகவல்களால்தான் அது பிற்போடப்பட்டது

Mohamed Fahath வியாழேந்திரன் அவர்களை கிழக்கு தமிழ் சமூகத்தின் தலைவர் என அடையாளப்படுத்தி தமிழ் சமூகத்தை அசிங்கப்படுத்த வேண்டாம். இரு சமுகங்களிற்கு இடையில் ஏற்படும் சிறுசிறு சலசலப்புகளில்கூட அவர் தன்னை ஒரு இனப்பற்றாளர் என்பதைவிட ஒரு இனவாதியாகத்தான் அடையாளப்படுத்தி செயற்படுகின்றார்

Mohamed Fahath "முஸ்லிம்களும் எமது சகோதரர்கள்தான். நாளை முதல் ஏறாவூர் பகுதி மக்கள் செங்கலடி போன்ற பகுதிகளிற்கு வியாபாரத்திற்கு வரலாம். நாங்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம்" முடியுமானால் வியாலேந்திரனை பகிரங்கமாக அறிக்கைவிட்டு இப்பிரச்சனையை தீர்க் சொல்லுங்கள்.

6

Jaya Palan Mohamed Fahath. Nafees Nmv நண்பர்களே, உங்கள் ஆதங்க, புரிகிறது. ஆனால் முஸ்லிம்களாலும் தமிழர்களாலும் தெரிவுசெய்யபட்டவர்கள் முஸ்லிம்களாலும் தமிழர்களாலும் நிராகரிக்கப்படும்வரைக்கும் முஸ்லிம்களதும் தமிழர்களதும் தலைவர்கள்தான் நண்பா. தவறுகளுக்காக அவர்களை விமர்சிக்கலாம். தமிழர்கள் விரும்புகிறதுபோல முஸ்லிம் தலைவர்களோ முஸ்லிம்கள் விரும்புகிறதுபோல தமிழ் தலைவர்களோ இருந்த பொற்காலமொன்று 1980 பதுகள் வரைக்கும் இருந்தது. முஸ்லிம்கள் மத்தியில் சூபி ஞான மார்க்கமும் இந்து கிறிஸ்தவர் மத்தியில் பக்திமார்க்கமும் ஓங்கியிருந்த அந்த பொற் காலம் இன்று இல்லை நண்பா. எனினும் உங்கள் ஆதங்கத்தை புரிந்து கொள்கிறேன். இரத்த ஆறு ஓடும் என்கிற அளவுக்கு வியாழேந்திரன் பேசியிருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள். அந்த மட்டத்தில் வியாழேந்திரன் எப்பவேனும் பேசிருந்தால் நானே வியாழேந்திரனை மன்னிப்பு கேட்டு ராஜிநாமா செய்யும்படி வற்புறுத்துகிறேன். ஈஸ்ட்டர் படுகொலைகளின்பின்னர் கிழக்கில் தமிழர் மனசில் பகைமை இல்லாவிட்டாலும் அச்சமும் வெறுப்பும் உள்ளதை மறுக்கவில்லை நண்பா. இன்னும் சில வரங்களில் நிலமை சுமூகமாகிவிடும். நிலமை வளமைக்கு திரும்பிய பிறகு வர்த்தகர்கள் பிரச்சினை தொடர்பாக நிச்சயம் வியாழேந்திரன் போன்ற தமிழ் தலைவர்கள் உத்தர வாதம் தரவேண்டுமென வலியுறுத்துவேன்.

 
👌
 
 
  • கருத்துக்கள உறவுகள்

பொயட்,  உங்களுக்கு நூறு வயசு..!


'எங்கேடா நம்ம கவிஞரை இன்னமும் காணேல்லையே'ன்னு நெனைச்சேன், தொபுக்கடீர்ன்னு குதிச்சிட்டீங்க..! :)

அண்ணா நீங்கள் jaffna muslim இணையதளத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பல பதிவுகள் போடுகிறீர்கள் ஆனால் அவர்கள் எவ்வளவு கீழ்த்தரமான பதிவுகளை பின்னூட்டல்களிலிடுகிறார்கள், எமது போராட்டத்தைப்பற்றியும் எமது இனத்தைப்பற்றியும் எவ்வளவு மட்டமாக பதிவிடுகிறார்கள்.ஆனால் அதற்கு எதிரான பதில்களை நீங்கள் இட்டதாய் எதுவுமில்லை . நல்லவனாக இருக்கலாம் இவ்வளவு நல்லவனாக இருக்கக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, புலோலியூரான் ரவீ..ன் said:

அண்ணா நீங்கள் jaffna muslim இணையதளத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பல பதிவுகள் போடுகிறீர்கள் ஆனால் அவர்கள் எவ்வளவு கீழ்த்தரமான பதிவுகளை பின்னூட்டல்களிலிடுகிறார்கள், எமது போராட்டத்தைப்பற்றியும் எமது இனத்தைப்பற்றியும் எவ்வளவு மட்டமாக பதிவிடுகிறார்கள்.ஆனால் அதற்கு எதிரான பதில்களை நீங்கள் இட்டதாய் எதுவுமில்லை . நல்லவனாக இருக்கலாம் இவ்வளவு நல்லவனாக இருக்கக்கூடாது.

எங்கடை இனத்தின் சாபகேடுகளில் ஒன்று தலை எழுத்து என்று விட்டு விலகிடவும் முடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ராசவன்னியன், புலோலியூரான் ரவீ..ன்பெருமாள் நான் தமிழரின் நியாயங்களை முஸ்லிம்கள் மத்தியிலும்  முஸ்லிம்களின் நியாயங்களை தமிழர் மத்தியிலும் சொல்லி வந்திருக்கிறேன். என் பதிவுகளை பின்கருத்துகளை மீண்டும் வாசியுங்கள். கிழக்கை முன்வைத்தே நான் எப்பவும் சிந்திக்கிறேன்.  நான் ஒருபோதும் தமிழரின் நியாயங்களை விட்டுக் கொடுத்ததில்லை. தமிழரின் நியாயங்களை முஸ்லிம்களுக்கும்  முஸ்லிம்களின் நியாயங்களை தமிழருக்கு உணர்த்த ஒருபோதும் தவறியதுமில்லை. ஏனெனில் என் மனசு எப்பவும் வடக்கில் மட்டுமன்றிக் கிழக்கிலும் உள்ளது.  

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

பொயட்,

உங்கள் ஜப்னா முஸ்லீம் பதிவுகளை நானும் வாசித்தேன். தமிழர்களிலும், முஸ்லீம்களிலும் பலர் உங்களை போல் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்.

ஆனால் யதார்த்தம் அப்படியில்லை. நீங்கள் எதிர்பார்க்கும் அளவில் பெரும்பாலான மக்கள் இரு பக்கத்திலும் இல்லை. 

ஒரே நில, நீர், ஆதார, அரசியல் வளங்களுக்காக ஆளை ஆள் தின்னும் அடிபிடி, வரலாற்று வன்மம்,  சமயக் குரோதம் இதுதான் கிழக்கின் இன்றைய யதார்த்தம்.

நீங்கள் ஏற்படுத்த விழையும் மாற்றம் இருபுறமும் ஏற்படாது என்பதே என் கணிப்பு.

இது மிகவிரைவில் ஒரு பெரும் கலவரத்தில் முடியும் என்ற பயமும் எனக்குண்டு.

சுருங்கச் சொல்லின்,

உங்கள் கருத்துக்கள் காலத்துக்கு ஒவ்வாதன.

மன்னிக்கவும் ஆனால் இதுவே யதார்த்தம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, poet said:

நன்றி ராசவன்னியன், புலோலியூரான் ரவீ..ன்பெருமாள் நான் தமிழரின் நியாயங்களை முஸ்லிம்கள் மத்தியிலும்  முஸ்லிம்களின் நியாயங்களை தமிழர் மத்தியிலும் சொல்லி வந்திருக்கிறேன். என் பதிவுகளை பின்கருத்துகளை மீண்டும் வாசியுங்கள். கிழக்கை முன்வைத்தே நான் எப்பவும் சிந்திக்கிறேன்.  நான் ஒருபோதும் தமிழரின் நியாயங்களை விட்டுக் கொடுத்ததில்லை. தமிழரின் நியாயங்களை முஸ்லிம்களுக்கும்  முஸ்லிம்களின் நியாயங்களை தமிழருக்கு உணர்த்த ஒருபோதும் தவறியதுமில்லை. ஏனெனில் என் மனசு எப்பவும் வடக்கில் மட்டுமன்றிக் கிழக்கிலும் உள்ளது.  

உங்களை போல் தமிழருக்கு மாங்கு மாங்கு என்று வக்காலத்து வாங்கும் சொறிலங்கா(தமிழ்நாட்டு கதை வேறு ) முஸ்லீம் ஒருத்தனை காட்டுங்க பார்ப்பம் அப்படி காட்டும் மட்டுமாவது இங்கு வந்து முஸ்லீமுக்கு அழுவதை நிறுத்தி வையுங்க யாழ் கொஞ்சம் ரிலாக்ஸா படிக்கலாம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி goshan_che நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் சர்வதேசிய மானுடனான சே யின் அபிமானியான நீங்கள் எங்களையும் ஆதரிக்க வேணும். பெருமாள் உங்கள் அவிப்பிராயம் தமிழர்கள் பலர்மத்தியில் நிலவும் கருத்துதான். கலவர காலங்க்களில் முஸ்லிம்களால் பாதுகாக்க பட்ட தமிழர் பலரை நீங்களும் சந்திதிருப்பீர்கள் அல்லவா? நான் பலரை சந்திதிருக்கிறேன். நான் தமிழர் மத்தியில் முஸ்லிம்களின் நலனை நியாயங்களை வற்புறுத்துவதுபோலவே முஸ்லிம்கள் மத்தியில் தமிழரின் நியாயங்களுக்காக விவாதித்து வருகிறேன்.  கோபப்படாமல் பெருமாள் தொடர்ந்தும் என் கருத்துகளை வாசித்து விமர்சிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, poet said:

நன்றி goshan_che நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் சர்வதேசிய மானுடனான சே யின் அபிமானியான நீங்கள் எங்களையும் ஆதரிக்க வேணும். பெருமாள் உங்கள் அவிப்பிராயம் தமிழர்கள் பலர்மத்தியில் நிலவும் கருத்துதான். கலவர காலங்க்களில் முஸ்லிம்களால் பாதுகாக்க பட்ட தமிழர் பலரை நீங்களும் சந்திதிருப்பீர்கள் அல்லவா? நான் பலரை சந்திதிருக்கிறேன். நான் தமிழர் மத்தியில் முஸ்லிம்களின் நலனை நியாயங்களை வற்புறுத்துவதுபோலவே முஸ்லிம்கள் மத்தியில் தமிழரின் நியாயங்களுக்காக விவாதித்து வருகிறேன்.  கோபப்படாமல் பெருமாள் தொடர்ந்தும் என் கருத்துகளை வாசித்து விமர்சிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

 

அண்ணேய் உங்களில் கோபப்பட்டு ஒன்றும் ஆகபோவதுமில்லை இங்கு புலி எதிர்ப்பு புலிஆதரவு கருத்தாளர்கள் கூட இந்த இலங்கை முஸ்லீம் விடயத்தில் ஒன்று பட்டு நிப்பது கண்கூடு ஏனென்றால் சிறுபான்மை இனம்கள் ஒற்றுமையாய் போவம் என்று எத்தனை முறை கேட்டிருப்பம் இந்த லூசு கூட்டத்தை அதை விட்டு சிங்களவன் எங்களில்  கை வைத்தால் லங்காவுக்கு பெற்றோல வராது சவூதி வரும் ஆ ஊ என்று ஒரே சவுண்டு இப்ப என்னாச்சு 50 நாடுகள் சேர்ந்த முஸ்லீம் அமைப்பு ஒப்புக்கு சப்பாணியாய் அறிக்கை விட்டதுடன் அடங்கி விட்டனர் இனி என்ன அவன் கருவருப்பாண் பார்த்துகொண்டு இருக்கவேண்டியதுதான் அதுக்காக அவர்கள் போல் மே 18 ல் நாங்கள் அழியும்போது வெடிகொளுத்தி பால்புக்கை சாப்பிடும் அளவுக்கு கேடுகெட்டவர்கள் அல்ல நாங்கள் முஸ்லிம்களால் பாதுகக்கபட்ட தமிழர் ஒருத்தனையும் இன்னும் ஏன் வாழ்வில் சந்திக்கவில்லை .

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அண்ணேய் உங்களில் கோபப்பட்டு ஒன்றும் ஆகபோவதுமில்லை இங்கு புலி எதிர்ப்பு புலிஆதரவு கருத்தாளர்கள் கூட இந்த இலங்கை முஸ்லீம் விடயத்தில் ஒன்று பட்டு நிப்பது கண்கூடு ஏனென்றால் சிறுபான்மை இனம்கள் ஒற்றுமையாய் போவம் என்று எத்தனை முறை கேட்டிருப்பம் இந்த லூசு கூட்டத்தை அதை விட்டு சிங்களவன் எங்களில்  கை வைத்தால் லங்காவுக்கு பெற்றோல வராது சவூதி வரும் ஆ ஊ என்று ஒரே சவுண்டு இப்ப என்னாச்சு 50 நாடுகள் சேர்ந்த முஸ்லீம் அமைப்பு ஒப்புக்கு சப்பாணியாய் அறிக்கை விட்டதுடன் அடங்கி விட்டனர் இனி என்ன அவன் கருவருப்பாண் பார்த்துகொண்டு இருக்கவேண்டியதுதான் அதுக்காக அவர்கள் போல் மே 18 ல் நாங்கள் அழியும்போது வெடிகொளுத்தி பால்புக்கை சாப்பிடும் அளவுக்கு கேடுகெட்டவர்கள் அல்ல நாங்கள் முஸ்லிம்களால் பாதுகக்கபட்ட தமிழர் ஒருத்தனையும் இன்னும் ஏன் வாழ்வில் சந்திக்கவில்லை .

 

மேலே தோழர்  எழுதிய  கருத்தை  வாசிக்கவில்லை

வாசிக்காமலேயே இசுலாமியர்கள்  சார்ந்து  தோழரின்  கருத்து  எனக்குப்புரியும்

முன்பும்  ஒரு  முறை  தோழருக்கு  எழுதியது  தான்

அவர்களுடன்  ஒட்ட  வேண்டும்  என்பதற்காக  எம்மை  பலி கொடுக்கவும்  நீங்கள் தயங்கமாட்டீர்கள்

அதை  அவர்  தொடர்ந்து  நிரூபித்து  வருகிறார்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுடன் ஒத்துமையாக இருக்க முதல், சூபிகள் என்னும் இலங்கை சோனகர்கள், சவூதி வஹாபிச இஸ்லாமியர்களுடன் ஒத்துமையாகி வரட்டும்.

உந்த வஹாபி செய்த வேலையால், இலங்கை சோனகர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

பணத்தினைக் கொடுத்து, 200 வரையான சவூதி, வஹாபிகள் இலங்கை நிரந்தர வதிவிட விசா எடுத்துள்ளனர் என்று இன்று செய்தி வந்துள்ளது.

Edited by Nathamuni

சிங்களவர்களின் தாக்குதல்களில் இரு முஸ்லிம்கள் (ஊடகங்களில் ஒருவர் என்றே வந்தது) கொல்லப்பட்டுள்ளார்கள் என ஒரு முஸ்லிம் பதிந்த கருத்துக்கு இன்னொரு முஸ்லிமின் பதில் இது. இப்படியானவர்களை கொண்ட சமூகத்துடன் நீங்கள் தமிழ், முஸ்லிம் உறவு பற்றி கதைத்து ஒரு பயனுமில்லை. அவர்கள் எப்பவும் சிங்களவர்கள் பக்கம். அடி வாங்கினாலும் sinhala bro.

C726A60B-D828-432D-93D1-A39B65C4BC2C.jpg

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

சிங்களவர்களின் தாக்குதல்களில் இரு முஸ்லிம்கள் (ஊடகங்களில் ஒருவர் என்றே வந்தது) கொல்லப்பட்டுள்ளார்கள் என ஒரு முஸ்லிம் பதிந்த கருத்துக்கு இன்னொரு முஸ்லிமின் பதில் இது. இப்படியானவர்களை கொண்ட சமூகத்துடன் நீங்கள் தமிழ், முஸ்லிம் உறவு பற்றி கதைத்து ஒரு பயனுமில்லை. அவர்கள் எப்பவும் சிங்களவர்கள் பக்கம். அடி வாங்கினாலும் sinhala bro.

C726A60B-D828-432D-93D1-A39B65C4BC2C.jpg

இவன் ஒரு ஜிகாதி போல தான் தெரிகிறது.

சிங்களவர்களுக்கு தலையே தூக்கமுடியாத பொருளாதார அடியை கொடுத்து விட்டு.... பன்னாடை.... சிங்கள சகோதரர்களை தாக்க வேண்டாமாம்.

நம்பி, பெரும் முதலீடுகளை வாகனங்களில், ஹோட்டல் தொழில் துறையில் இறக்கிய சிங்களவர்கள், செய்வதறியாது தவிக்கிறார்கள்.

அடுத்த மாதம் லீஸ் பணம் கட்டுவது எப்படி என்று பலர் தவிக்கிறார்கள்.

இவன் சொல்ல வந்தது.... தமிழர் மட்டுமல்ல... வெள்ளைகளையும்.... தாக்கலாம் என்று.. தான்.

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து சரியாக பத்து ஆண்டுகளில் இலங்கைத்தீவில் தமிழர்மீதான இன்னுமொரு தாக்குதல் மிகவும் திட்டமிட்ட ரீதியில் நடந்திருக்கிறது இத்தாக்குதலில் நோக்கம் எதுவாக இருந்தாலும் இலக்கு தமிழர்களாகவே இருந்திருக்கிறது. இத்தாக்குதலுக்கான காலம் நேரம் ஆகியவை மிகவும் திட்டமிட்டு எமது எல்லாவகையான எழுர்ச்சியையும் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ நிறுத்திவிடவேண்டும் என மிகவும்நுண்ணிய முறையில் திட்டமிட்டே இவர்கள் இதைச்செய்திருக்கிறார்கள்.

அப்படியான தாக்குதலில் தங்கள் தரப்பிலிருந்து ஒருத்தருக்குக்கூட இழப்பு இருக்கக்கூடாது எனக் கணித்திருக்கிறார்கள்.

இதனால் ஏற்படும் நன்மை எதுவெனில்

சிறீலங்கா அரசினால் தீர்க்கபடாதிருக்கும் தமிழர்மீதான போர்க்குற்றம் மற்றும் அதையொட்டிய உள்ளக விசாரணை இவைகளை அப்படியே உறைநிலையில் வைத்திருப்பது அல்லது தற்காலிகமாகவேனும் தள்ளிப்போடுவது.

போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச நெருக்கடிகளிலிருந்து தப்பிப்பிழைப்பது.

சர்வதேச பயங்கரவாதத்தை முறியடிக்க நாமும் உங்களுடன் ஒத்துழைக்கிறோம் ஆகவே எமக்கான நெருக்கடிகளைலிருந்து எம்மை விலத்திவிடுங்கள் என அவர்களை கேட்டுக்கொள்வது.

அதைவிட இப்படியான தாக்குதல்மூலம் இஸ்லாமிய அடிப்படைவாத களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கும்போது, தங்களுக்கு எப்போதும் எஜமான விஸ்வாசாம் காட்டும் இஸ்லாமியர்கள் எக்காரணம்கொண்டும் தமிழர்பக்கம் சாய்துவிடக்கூடாது என்பதற்காக.........

சிறீலங்காவும் அதனது நட்புநாடுகளும் போலியான இஸ்லாமிய அமைப்பை உருவாக்கி அவர்களை தூரத்திலிருந்து இயக்கி அவ்வமைப்புக்குள் உண்மையான இஸ்லாமிய அடிப்படைவாதிகளையும் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவானவர்களையும் உள்வாங்கி இத்தாகுதல் செய்யப்பட்டு.

ஒரே கல்லில் இரண்டுமாங்காய் அடித்துள்ளார்கள்.

இதன்மூலம் தாங்கள் இலங்கைத்தீவில் இருக்கக்கூடி முஸ்லீம்களை கோபப்படுத்தாது தொடர்ந்து அவர்களைத் தங்கள் கைகளுக்குள் வைத்துக்கொண்டு .....

தமிழர்கான நீதிக்கான போராட்டத்தை மழுங்கடித்து அவர்களை மீண்டும் பயப்பீதிக்குள் வைத்திருந்து கொஞ்சநஞ்சமுள்ள போராட்டகுணத்தையும் இல்லாமற் செய்யும் ஏற்பாடெ இது இதற்கான சிறிய உதாரணமே....

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முறைப்படி முன்னெடுக்க ஆயத்தமாகியவேளை  யாழ் பல்கலைக்கழக மாணவர்களில் கைது. 

நான் வாழும் நாட்டில் இத்தாக்குதலுக்குப் பின்பாக கெல்சிங்கித் தலை நகரில் ஒரு கவனயீர்ப்பு நடந்தது அதில் பங்குகொண்டவர்களும் அதை ஒழுங்குசெய்தவர்களும் சிங்களவர்கள் அதில் கூட்டாக நின்றவர்கள் அனைவரும் இலங்கை முஸ்லீம்கள் இப்போ தெரிகிறதா இந்தக்கூட்டுக்களவாணிகளது வேடத்தை 

கொல்லப்பட்டது அனைவரும் தமிழர்கள் கொன்றது சிங்களமும் முஸ்லீம்களும் எமக்கான அனுதாபத்தை இவர்கள் பதிவிடவில்லை.

பத்து வருடத்துக்கு முன்பு இவர்கள் அவர்களுடன் பால் சோறு பகிந்துகொண்டவர்கள் இப்போதும் அவர்கள் எமது இறப்பில் தமது உறவுகளைப் புதுப்பிக்கிறார்கள்.

 

முள்ளிவாய்கால் நினைவைக்கொண்டாட இப்போது தாயகம் பய உணர்வில் உள்ளது அவர்களது எழுர்ச்சியையும் உள்வாங்கி இரட்டிப்பான உணர்வுடன் புலம்பெயர்தேசமெங்கும் நாளை அனைவரும் ஒன்றுபடுங்கள்

Edited by Elugnajiru

On 5/15/2019 at 5:14 AM, poet said:

நான் தமிழரின் நியாயங்களை முஸ்லிம்கள் மத்தியிலும்  முஸ்லிம்களின் நியாயங்களை தமிழர் மத்தியிலும் சொல்லி வந்திருக்கிறேன். என் பதிவுகளை பின்கருத்துகளை மீண்டும் வாசியுங்கள். கிழக்கை முன்வைத்தே நான் எப்பவும் சிந்திக்கிறேன்.  நான் ஒருபோதும் தமிழரின் நியாயங்களை விட்டுக் கொடுத்ததில்லை. தமிழரின் நியாயங்களை முஸ்லிம்களுக்கும்  முஸ்லிம்களின் நியாயங்களை தமிழருக்கு உணர்த்த ஒருபோதும் தவறியதுமில்லை. ஏனெனில் என் மனசு எப்பவும் வடக்கில் மட்டுமன்றிக் கிழக்கிலும் உள்ளது.  

 

நடமுறைக்கு சாத்தியமற்றபோதும் இந்த பிரச்சனையை எவ்வாறு அணுகமுடியுமோ அவ்வாறு அணுக முற்படுகின்றீர்கள். மாற்றம் ஏற்படாத பட்சத்திலும் மனத் திருப்தியாவது கிடைக்கும். 

மதத்தால் பிழவு படுகின்றபோதும் சரி பிரதேசத்தால் பிழவு படுகின்ற போதும் சரி இனத்தின் அழிவு விரைவுபடுத்தப்படுகின்றது. இவ் அழிவுக்குள் இஸ்லாமியத் தமிழர்களும் அடங்குவர் ஏனைய மத தமிழர்களும் அடங்குவர். இருந்தும் மதத்தை கடந்து செல்ல முடியாத அல்லது மத உணர்வை சரியான முறையில் பயன்படுத்த முடியாத மக்கள் கூட்டத்தின் அழிவு தவிர்க்க முடியாதது. சிங்கள பெரும்பான்மை இனத்திற்க முன் சிறுபான்மை இனம் ஐக்கியப்பட்டு நிற்காமல் சிதைகின்ற போது அது ஆபத்து என்பது  சிறுபான்மை இனத்திற்கு தெரிந்தும் மதம் பிரதேசம்  முக்கியம் என்கின்ற போது யாரால் என்ன செய்ய முடியும் !! சிங்கள ளொத்த பேரினவாதத்தின் முன் சிறுபான்மை இனங்கள் தங்களது மதம் பிரதேசவாதம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து சண்டை போடுவது தற்கொலைக்கு ஒப்பானது என்பதை சொல்ல முடியுமே தவிர தடுக்க முடியாது என்பது தூரதிஸ்டவசமானது. 

இது ஒரு முஸ்லிம் தாங்கள் அரசுடன் சேர்ந்து புலிகள் உட்பட தமிழர்களை பயங்கரவாதத்தை அழிக்கிறோம் என்ற பெயரில் கொன்று குவித்ததை பெருமையாக வேறு சொல்லிக்காட்டும் பதிவு.

4A597925-3B3B-49CD-AAA6-2383B8B22BB5.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.