Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி 

ஓர் வெளிநாட்டவர் நடந்து செல்கிறார், வீடியோ பதிவு செய்து கொண்டு.

வீதியின் இரு புறமும், முளைத்திருக்கும், மருத்துவ ஆய்வு கூடங்களும். பார்மசிகளும் குடாநாட்டு, மக்களின் நலத்தினை கட்டியம் கூறுகின்றனவே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை நச்சு  குண்டுகளை தாங்கிய பூமி,
அங்கு வசிப்பவர்கள்... பலவித நோய்க்கும் ஆளாகி இருப்பார்கள்.
தமிழர் பிரதேசம் எங்கும்... இதுதான் நிலைமை என்றாலும்,
பெரியாஸ்திரி இருப்பதால்... மருத்துவ கூடங்களும்  அதன் அருகிலேயே அதிகமாக காணப் படுகின்றன.

மின்சார சபை கட்டிடம் மட்டும்... தாத்தா. காலத்திலிருந்து ஒரு மாற்றமும் இல்லாமல் அப்படியே  இருக்கின்றது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலத்துக்கு பின் பார்க்கையில்  எதோ பறி கொடுத்தது போல் மனது உணருகின்றது  . அங்குள்ள சனத்தை விட கடைகள் கூட போல் உள்ளது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

எத்தனை நச்சு  குண்டுகளை தாங்கிய பூமி,
அங்கு வசிப்பவர்கள்... பலவித நோய்க்கும் ஆளாகி இருப்பார்கள்.
தமிழர் பிரதேசம் எங்கும்... இதுதான் நிலைமை என்றாலும்,
பெரியாஸ்திரி இருப்பதால்... மருத்துவ கூடங்களும்  அதன் அருகிலேயே அதிகமாக காணப் படுகின்றன.

மின்சார சபை கட்டிடம் மட்டும்... தாத்தா. காலத்திலிருந்து ஒரு மாற்றமும் இல்லாமல் அப்படியே  இருக்கின்றது.

இல்லை.

இந்த மாதிரி மருத்துவ ஆய்வு கூடங்கள், தமிழகம், ஆந்திரா எங்குமே நீக்கமற நிறைந்திருக்கின்றன.

அங்கே இருப்பது பெரிய விடயமல்ல.

இலங்கையில், இலவச கல்வி போலவே, மருத்துவம் இலவசம்.

இங்கே, காசு இருந்தால் உயர் மருத்துவம் என்ற நிலை உருவாவது கவலைக்குரியது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

"அரசு ஒசுசல" என ஒரு கட்டிடம் வருகிறது.. என்னவாக இருக்குமென மண்டை குழம்பி இணையத்தை நாடியதில் அது "அரசு மருந்துகள் கழகம்" என சொல்கிறது.

மெய்தானா..?

கார்கில்ஸ் வணிக வளாக திரையரங்குகளில் என்.ஜி.கே, தேவி, கொலைகாரன் படங்கள் ஓடுகிறது..!

இவ்வளவு பெரிய நகரில், சனங்கள் பாதுகாப்பாக சாலையில் நடக்க,  இருபுறமும் நடைமேடை இருந்தால் நல்லது.

வாகனங்கள், சாலையில் நடப்பவர்களை ஒட்டிச் செல்வது பயமாக உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ராசவன்னியன் said:

உங்க ஊர்ல, இந்தி  போலவே, நம்ம ஊரில சிங்களம். ஓசுசல சிங்கள பெயர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோளக காத்து அடிக்குது, யாழ்பாணத்தில ...

6 hours ago, ராசவன்னியன் said:

இவ்வளவு பெரிய நகரில், சனங்கள் பாதுகாப்பாக சாலையில் நடக்க,  இருபுறமும் நடைமேடை இருந்தால் நல்லது.

ஆஸ்பத்திரி வீதில ஒருபக்கம் நல்ல நடைபாதை இருக்கு. மறுபக்கம் ஒடுங்கலான, அப்பப்ப சாக்கடைக்கில விழுந்து எழும்பும் நடைபாதை இருக்கு.

உந்த ஆசுபத்திரிக்க தான் அகிம்சை தோல் போர்த்த இந்திய கொலைகார இராணுவம் உலகத்தில எங்கையுமே ஆருமே செய்யாத படுகொலைகளை செய்திச்சு. வைத்தியர்கள், நர்ஸுகள் என்டு பலரையும் படுகொலை செய்து இந்தியாட போலி அகிம்சையை தோலுரித்த இடமும் இங்க தான்.

ஆஸ்பத்திரி வீதி

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Rajesh said:

..உந்த ஆசுபத்திரிக்க தான் அகிம்சை தோல் போர்த்த இந்திய கொலைகார இராணுவம் உலகத்தில எங்கையுமே ஆருமே செய்யாத படுகொலைகளை செய்திச்சு. வைத்தியர்கள், நர்ஸுகள் என்டு பலரையும் படுகொலை செய்து இந்தியாட போலி அகிம்சையை தோலுரித்த இடமும் இங்க தான்.

ஆஸ்பத்திரி வீதி

இது உலமறிந்த உண்மைதானே, யாருங்க இதை மறுத்தது..?

மாட்டை பற்றி எழுதினால், அதைக் கட்டுற மரத்தைப் பத்தி எழுதுறீங்க..! 

2 minutes ago, ராசவன்னியன் said:

இது உலமறிந்த உண்மைதானே, யாருங்க இதை மறுத்தது..?

மாட்டை பற்றி எழுதினால், அதைக் கட்டுற மரத்தைப் பத்தி எழுதுறீங்க..! 

உங்களுக்கு வசதியா நான் எழுதின முதல் பந்தியை மறந்திட்டு எருமை மாட்டை மாட்டுக்குள்ள நுழைக்கிறீங்களே!

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Rajesh said:

உங்களுக்கு வசதியா நான் எழுதின முதல் பந்தியை மறந்திட்டு எருமை மாட்டை மாட்டுக்குள்ள நுழைக்கிறீங்களே!

50 minutes ago, ராசவன்னியன் said:

இது உலமறிந்த உண்மைதானே, யாருங்க இதை மறுத்தது..?

மாட்டை பற்றி எழுதினால், அதைக் கட்டுற மரத்தைப் பத்தி எழுதுறீங்க..! 

எனது தாயார் தனது இறுதி மூச்சுக்களை சுவாசித்துக் கொண்டிருந்த நேரம் இந்த வீதியில் அமைந்திருந்த அவர் படுத்திருந்த கட்டிலிற்கு அடுத்ததாக அமைந்திருந்த  ஆஸ்பத்திரியின் பகுதிகள் அரச படையினரால் குண்டு வைத்து தகர்க்கப் பட்டன.     சில  காலங்களுக்கு பின்னர் இவர்கள் இருந்திருந்தால் அந்த ஆஸ்பத்திரி தகர்ந்திருக்காது  என நம்பியிருந்த வேறொரு நாட்டின் அரச படையினரின் கையாலாகாத்  தனம் அந்த ஆஸ்பத்திரியின் மிகச் சிறந்த வைத்திய நிபுணர்களை மிகவும் கேவலமான முறையில் கொன்று போட்டது.
இவையெல்லாம் வன்னியன்  " மாடு , மரம் " எனும் வரையறைகளுக்குள் அடக்கக் கூடிய சமாச்சாரங்கள் அல்ல , மன்னிக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Rajesh said:

உங்களுக்கு வசதியா நான் எழுதின முதல் பந்தியை மறந்திட்டு எருமை மாட்டை மாட்டுக்குள்ள நுழைக்கிறீங்களே!

"... "புள்ளிகளிட்டு, செய்தியின் தொடர்ச்சியை, அதில் குறிக்க வேண்டிய பகுதியை எழுதினேன்.

மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை.

9 hours ago, சாமானியன் said:

...

இவையெல்லாம் வன்னியன்  " மாடு , மரம் " எனும் வரையறைகளுக்குள் அடக்கக் கூடிய சமாச்சாரங்கள் அல்ல , மன்னிக்க வேண்டும். 

நான் சாலைகளில் நடந்து செல்லும் மக்களின் பாதுகாப்பை பற்றி இத்திரியில் எழுதினால் சம்பந்தமே இல்லாமல் எழுதி திரியை திசை திருப்பியதை யார் படித்தாலும் புரியுமென நினைக்கிறேன்.

கோடி நன்றி, தங்களின் புரிதல்களுக்கு..!

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ராசவன்னியன் said:

"... "புள்ளிகளிட்டு, செய்தியின் தொடர்ச்சியை, அதில் குறிக்க வேண்டிய பகுதியை எழுதினேன்.

மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை.

நான் சாலைகளில் நடந்து செல்லும் மக்களின் பாதுகாப்பை பற்றி இத்திரியில் எழுதினால் சம்பந்தமே இல்லாமல் எழுதி திரியை திசை திருப்பியதை யார் படித்தாலும் புரியுமென நினைக்கிறேன்.

கோடி நன்றி, தங்களின் புரிதல்களுக்கு..!

இந்திய விடுதலையை பற்றி கதைக்கும் எந்த ஒரு இந்தியனும் உப்பு சத்தியாக்கிரகம் மற்றும் ஜாலியன் வாலாபாக் பற்றி  குறிப்புகள் வரும் போது உது என்ன திரி என்று தியங்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

அது போல யாழ் ஆஸ்பத்திரி / வீதி என்றால்,  காக்க வந்தவர்கள் என்று நம்பியிருந்தவர்கள் மிகவும் நிலை பிறழ்ந்து இழைத்த கொடூரம் மனதில் வருவது தவிர்க்க   முடியாதது.  இதனை விளங்கிக் கொள்ள பெரும் பட்டறிவும் தேவையில்லை ….

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Colombo to Jaffna

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சாமானியன் said:

இந்திய விடுதலையை பற்றி கதைக்கும் எந்த ஒரு இந்தியனும் உப்பு சத்தியாக்கிரகம் மற்றும் ஜாலியன் வாலாபாக் பற்றி  குறிப்புகள் வரும் போது உது என்ன திரி என்று தியங்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

அது போல யாழ் ஆஸ்பத்திரி / வீதி என்றால்,  காக்க வந்தவர்கள் என்று நம்பியிருந்தவர்கள் மிகவும் நிலை பிறழ்ந்து இழைத்த கொடூரம் மனதில் வருவது தவிர்க்க   முடியாதது.  இதனை விளங்கிக் கொள்ள பெரும் பட்டறிவும் தேவையில்லை ….

அப்படியெல்லாம் விடுதலை என்ற வார்த்தையை வைத்து யாரையும் கண்மூடித்தனமாக சுட்டுவதில்லை.

ஒரு பேச்சுக்கு சொல்கிறேன்(நான் அப்படியல்ல): 

உங்கள் பார்வைப்படி பார்த்தால், கோடம்பாக்கம், சிறீபெரும்புதூர் கடந்து செல்லும்போதெல்லாம் 'இவர்களை ஆதரித்தோமே, ஏன் இப்படி நடந்தார்கள்..?' என இந்தியப் பற்றுள்ள எவருக்கும் 'அந்த துன்பியலை மறக்க முடியாது' என அவர்கள் சொல்வதும் சரிதானா..?

இதே மனநிலை சிலருக்கு இருப்பதால்தான் ஏழு தமிழர்களின் விடுதலையும் தள்ளிச் செல்கிறது.

இப்படி காலம் பூராவும், ஒருத்தர் மாற்றி ஒருத்தர் மனக்குறையுடன் குற்றம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான், விடிவு வராது சாமிகளே, ஆளை விடுங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

எனது நினைவு  சரியானால்...?

ஆஸ்பத்திரி வீதியின்  இரு பக்கவீதிகளுக்கும்  நடுவில்  நின்ற  மரங்கள் எங்கே??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

எனது நினைவு  சரியானால்...?

ஆஸ்பத்திரி வீதியின்  இரு பக்கவீதிகளுக்கும்  நடுவில்  நின்ற  மரங்கள் எங்கே??

எங்கண்ட மாமா வீட்டுக் கூரை தீராந்தியாய் இருக்குது இப்ப... :grin: 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

எங்கண்ட மாமா வீட்டுக் கூரை தீராந்தியாய் இருக்குது இப்ப... :grin: 

பிரான்சில  என்றால் மாமாவை தீராந்தியாக்கிப்போடுவாங்கள் :grin::grin::grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

பிரான்சில  என்றால் மாமாவை தீராந்தியாக்கிப்போடுவாங்கள் :grin::grin::grin:

மாமாவிக்கென்ன விசரே, பிரான்ஸ் வர....:grin::grin::grin:

15 minutes ago, விசுகு said:

பிரான்சில  என்றால் மாமாவை தீராந்தியாக்கிப்போடுவாங்கள் :grin::grin::grin:

ஆனால், மச்சாள்தான், தீராந்தீல நான் இருந்து பாடுற மாதிரி கனவு வருதாம்.

Edited by Nathamuni

9 hours ago, ராசவன்னியன் said:

சிறீபெரும்புதூர் கடந்து செல்லும்போதெல்லாம்

அகிம்சை மேல் உண்மையான நம்பிக்கை உடையவர்கள் ஸ்ரீபெரும்புதூர் தாண்டும் போது எல்லை தாண்டிய ஒரு பயங்கரவாதியை உள்வீட்டு சதி மூலம் யாரோ கொலை செய்துவிட்டார்கள் என்று மகிழ்வது தான் யதார்த்தமானது.

அகிம்சை மேல் உண்மையான நம்பிக்கை உடையவர்கள் அத்துடன் ஒரு பயங்கரவாதிக்கு இப்படி ஒரு நினைவுச் சின்னம் தேவையா என்று கவலை கொள்வதும் யதார்த்தமானது.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎6‎/‎25‎/‎2019 at 10:02 PM, ராசவன்னியன் said:

உங்கள் பார்வைப்படி பார்த்தால், கோடம்பாக்கம், சிறீபெரும்புதூர் கடந்து செல்லும்போதெல்லாம் 'இவர்களை ஆதரித்தோமே, ஏன் இப்படி நடந்தார்கள்..?' என இந்தியப் பற்றுள்ள எவருக்கும் 'அந்த துன்பியலை மறக்க முடியாது' என அவர்கள் சொல்வதும் சரிதானா..?

அது போல யாழ் ஆஸ்பத்திரி / வீதி என்றால்,  காக்க வந்தவர்கள் என்று நம்பியிருந்தவர்கள் மிகவும் நிலை பிறழ்ந்து இழைத்த கொடூரம் மனதில் வருவது தவிர்க்க   முடியாதது.  இதனை விளங்கிக் கொள்ள பெரும் பட்டறிவும் தேவையில்லை ….

  • கருத்துக்கள உறவுகள்

அதேபோல் கோடம்பாக்கம், சிறிபெரும்புதூர் நிகழ்வுகளையும் சிலர் நினைவிற்கொள்வதும், அதனால் 'பொந்தியா' தடங்கல்ககளை தொடர்வதை நியாயபடுத்துவதையும் தவிர்க்க முடியாதாகிவிடுகிறது. 

"One man’s freedom fighter is another man’s terrorist" 

இந்த நிலைதான் இப்பொழுது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

அதேபோல் கோடம்பாக்கம், சிறிபெரும்புதூர் நிகழ்வுகளையும் சிலர் நினைவிற்கொள்வதும், அதனால் 'பொந்தியா' தடங்கல்ககளை தொடர்வதை நியாயபடுத்துவதையும் தவிர்க்க முடியாதாகிவிடுகிறது. 

"One man’s freedom fighter is another man’s terrorist" 

இந்த நிலைதான் இப்பொழுது.

எதற்கென்று தெரியாமல்  உலர்கலம்  வாங்கிக் கொடுத்து தசாப்தங்களாக உள்ளே இருப்பவர் யாரின் பயங்கரவாதியோ…

அவர் எதற்கு அவை அவர்களுக்கு தேவைப்பட்டது என தனக்கு தெரியாது   என்று சொன்னதை வேண்டுமென்றே பதிவிடத்  தவிர்த்தவர்  யாரின் பயங்கரவாதியோ …

தான் வேண்டுமென்றே பதிவிடவில்லை என வாழ்வின் கடைசிக் கந்தாயத்தில் அந்த ஆள் கூறிய பின்னரும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது என்ன பயங்கரவாதமோ...

படு ஜாலியான ஒரு வேலை தான்  …

ஒருவர் மறுக்கும் அதே நியாயங்களே வேறொரு நேரத் துளியில் அவர் மீது திரும்பும் இயற்கையின் சுபாவம் ரசிக்கத் தக்கது ..

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது..? ஒவ்வொருவருக்கும்/ஒவ்வொரு நாட்டிற்கும் பயங்கரவாதத்தின் அளவுகோல் மாறுபடுகிறது, அதனின் நீட்சியும் அரசியலாகிறது. 

(ஈழ)தமிழர்களின் விதியும் அத்தோடு தடுமாறுகிறது. அதிலிருந்து மீள வழிபார்க்காமல் இருக்கிறதையும் இழந்தால் ஒன்றும் சொல்ல இயலாது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

(ஈழ/ ****)தமிழர்களின் விதியும் அத்தோடு தடுமாறுகிறது. அதிலிருந்து மீள வழிபார்க்காமல் இருக்கிறதையும் இழந்தால் ஒன்றும் சொல்ல இயலாது. 

ஒருவர் மறுக்கும் அதே நியாயங்களே வேறொரு நேரத் துளியில் அவர் மீது திரும்பும் இயற்கையின் சுபாவம் ரசிக்கத் தக்கது ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.