Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏர் கனடா செய்த வேலை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Air Canada plane - archive picture

 

எனக்கு ஏர் கனடா பிடிப்பதில்லை.... கிழவிகள் தான் சேவையில் இருப்பார்கள். 

பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் நிறுவனத்துக்கு உரிய, customer service என்னும் ஒரு ஐடியாவே அவர்களுக்கு இல்லை என்று தோன்றும். இது பல வருடங்களுக்கு முன்னர் போன கசப்பான அனுபவத்தால் உண்டானது. இப்போது BA மட்டும் தான் பாவிப்பது.

சரி விசயத்துக்கு வருவோம் மக்களே.

பயணி Tiffani Adams என்பவர் கியூபெக் இல் இருந்து, கடந்த 9ம் திகதி டொரோண்டோ பறக்கிறார். வைன் வாங்கி அடிச்சிருப்பா போல கிடக்குது. மனிசி நித்திரையைப்போட்டுது.

முழிச்சுப் பார்த்தால், ஒரே இருட்டாக்கிடக்குது. குளிர் வேற போட்டு தாக்குது. முதலில் குழம்பி விட்டார். பிளேன் ஏறினோம், இதென்ன இருடாக்கிடக்குது.... எங்கையாவது விழுந்துட்டுதோ...

எழும்புவம் எண்டால்.... முடியல. என்னடா எண்டு இருட்டில் துலாவிப் பார்த்தால்... சீட் பெல்ட்.. 

என்ன, கோதரியாப்பா... பிளேன் சீட்டிலேயே இருக்கிறோமே... ஏன் இருட்டு.... மேலும் குழப்பம்...

பக்கத்தில் இருந்த சாளரத்தின் ஊடாக பார்த்தால், மிக தூரத்தில் விமான நிலையம்... சரி தரையில் தான் இருக்கிறோம்... என்ன நடந்திருக்கும்.

ஆகா... நம்மளை அப்படியே விட்டுட்டு, பயபுள்ளங்க கிளம்பி போய்ட்டாங்க...

இப்ப என்ன செய்வது? டெலிபோனை எடுத்து பார்த்தால்.... ஒரு அழைப்பு எடுக்க கூடிய அளவு கூட இல்லை. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, என்ஜின் ஆப் ஆகி இருந்த விமானத்தில், சார்ஜ் பண்ண எங்க வசதி? குளிருது வேற, பயம் வேற... கதவை திறந்து, நடந்தா போக முடியும்?

யோசித்தார்....  இப்ப, ஏர் கனடாவுக்கோ, போலீசுக்கோ போனை போட்டால், அவர்களுக்கு விபரம் சொல்வத்துக்கு முன்னரே, அங்கே, இங்கே மாத்தி, பாட்டரி காலியாகிவிடும்.

தனது தோழிக்கு போனை போட்டார். தான் ஏர் கனடாவில் பயணமானதையும், விமானத்தினுள்ளே சிக்கி இருப்பதையும், ஆனால் விமானம், எங்கே நிக்கிறது என்று தெரியாது என்று சொல்லி முடிக்கவும், போன் இறந்து விட்டது.

தோழி, டொரோண்டோ பெர்சன் விமான நிலையத்துக்கு அறிவிக்க, அவர்களை, நம்பவைக்கவே நீண்ட நேரம் எடுத்தது. மிகப் பெரிய தேடுதல் நடவடிக்கை ஆரம்பமானது.

ஏர் கனடா அதிகாரிகளை தொடர்புகொள்ள, அவர்களும் இதென்னடா, ஒரு காலமும் இல்லாத விசயம் எண்டு, நம்பினவர்கள், பாதி, நம்பாதவர்கள் பாதி என்று அரக்க, பரக்க ஓடி வந்தனர். 

அதேவேளை, டிபிணி, விமானத்தின், திறந்திருந்த கதவின் ஊடாக, காக்பிட் உள்ளே சென்று ஒரு டார்ச் லைட் ஒன்றினை எடுத்துக் கொண்டார். அந்த லைட்டினை ஓன்  பண்ணி, ஆப் பண்ணி, சமிக்கை காண்பித்தார். 

விமானம், விமான ஓடுபாதை ஊழியர்களினால் தள்ளி அல்லது இழுத்து செல்லப்பட்டு, விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு வெகு தூரத்தில் பார்க் பண்ணப்படும்.

அந்த விபரங்கள், அந்த, அந்த பிரிவு, ஊழியர்கள் வசமே இருக்கும். அவர்கள் வேலை முடிந்து போய் பல மணிநேரம்.

எல்லோரையும் திரத்திப் பிடித்து, ஒரு மாதிரி அந்த பகுதிக்கு வந்து, மின்னுகின்றன டார்ச் லைட் வெளிச்சத்தில், பிளேனை கண்டுபிடித்து, ஏணி வைத்து ஆளை இறக்கி இருக்கிறார்கள்.

லிமோசின் காரும், ஹோட்டல் ரூமும் தருகிறோம் என்று டீல் போட்டிருக்கிறார்கள், ஏர் கனடாகாரர்கள் . இது ஒரு PR disaster என்பதால், இப்படி பேசிப் பார்த்திருக்கிறார்கள். 

ஆளை விடுங்கடா சாமிகளா. வீட்ட போய், குளிச்சு, டீயை குடிச்சாத்தான் மிச்ச கதை எண்டு, மனிசி, டாக்ஸியை பிடித்து போட்டுது.

இப்ப, பெரிய தொகை செக் ஒண்டு வரத்தான் இருக்குது.

எதுக்கும், பிளானிலை ஏறினால், நித்திரை மாதிரி நடிக்கோணும். மேலே இருந்து பையை இறக்கி எப்படா கிளியர் ஆகும், வெளியால ஓடலாம் எண்டு இருகிறதில்லை...

Air Canada: Woman wakes up alone on dark, parked plane

https://www.bbc.co.uk/news/world-us-canada-48739532

கடைசியாக செக்பண்ணவேண்டியவர் தூக்க கலக்கத்தில் இறங்கி போய்விட்டாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Nathamuni said:

எதுக்கும், பிளானிலை ஏறினால், நித்திரை மாதிரி நடிக்கோணும். மேலே இருந்து பையை இறக்கி எப்படா கிளியர் ஆகும், வெளியால ஓடலாம் எண்டு இருகிறதில்லை...

 

அனேகமான விமானங்கள் வந்து இறங்கிய உடனேயே அடுத்த பயணத்திற்கு தயாராகிவிடும்.இது இரவு கடேசி பயணம் என்றபடியால் தனித்துவிடப்பட்டிருக்கிறார்.
பறவாயில்லை வீடு தேடி பணப் பொதி போகப் போகுதே.

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.jpg

விமானத்தில் தூங்கிய பெண் – வெளியேறிய பணியாளர்கள்!

விமானத்தில் தூங்கிய பெண் ஒருவரை தனியே விட்டு விட்டு விமான ஊழியர்கள் விமானத்திலிருந்து வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிஃபானி ஆடம்ஸ் என்ற பெண்மணி கடந்த மாதம் ஏர் கனடா விமானத்தில் கியூபெக் சிட்டியில் இருந்து டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையம் வரை பயணம் செய்துள்ளார்.

வெறும் 90 நிமிடங்கள் கொண்ட இந்த பயணத்தினிடையே, டிஃபானி அயர்ந்து தூங்கியுள்ளார். அதன் பின்னர் அந்த விமானத்தில் நடந்த சம்பவமானது தமக்கு கவலை மற்றும் தூக்கமின்மையை தருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிஃபானியின் இந்த அதிரவைக்கும் அனுபவத்தை அவரது தோழி ஒருவர் ஏர் கனடாவின் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சம்பவத்தன்று அந்த விமானத்தில் பயணிகள் மிகவும் குறைவு என்பதால், பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்துள்ளன.

இதனிடையே டிஃபானி ஆழ்ந்த தூக்கத்தில் விழுந்துள்ளார். திடீரென்று கண்விழித்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

குறித்த விமானத்தில் அப்போது அவர் மட்டுமே தனியாக இருந்துள்ளார். அங்கிருந்து வெளியேறும் நடவடிக்கைகளில் இறங்கிய அவர் விமானிகளின் இருக்கைக்கு சென்று ஒரு பிளாஷ் லைட் ஒன்றை எடுத்துள்ளார்.

அதன் வெளிச்சத்தில் முக்கிய கதவு வழியாக வெளியேற முயற்சித்துள்ளார். ஆனால் அங்கிருந்து தரையில் சென்று சேர படிகள் இல்லை.

சுமார் 40 முதல் 50 அடி உயரத்தில் இருந்து குதிப்பது ஒன்றே வழி என கருதி இருந்த நிலையில், வேறு எவரேனும் உதவிக்கு வருவார்களா என அந்த பிளாஷ் லைட் வைத்து முயற்சித்துள்ளார்.

இவரது முயற்சி வீண்போகவில்லை. நிறுத்தப்பட்டிருந்த விமானத்தினுள் இருந்து வெளிச்சம் ஒன்று நடமாடுவதை தொலைவில் இருந்து பார்த்த ஊழியர் ஒருவர், டிஃபானியின் உதவிக்கு வந்துள்ளார்.

தொடர்ந்து ஏர் கனடா ஊழியர்களால் அவரது குடியிருப்புக்கு வாகனம் ஒன்றில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் டிஃபானி. மட்டுமின்றி, ஏர் கனடா நிர்வாகிகள் டிஃபானிக்கு தொலைபேசியில் அழைத்து மன்னிப்பும் கோரியுள்ளனர்.

மேலும், விமானத்தில் டிஃபானி மட்டும் தனியாக சிக்கியது எப்படி என்பது தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/விமானத்தில்-தூங்கிய-பெண்/

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்திருப்பார். வந்தவர் எதோ பெட்சீட் குவியல்தான் கிடக்கு அடுத்து டூட்டிக்கு வாரவர் வந்து மடிக்கட்டும் என்று போய் விட்டார் போல.....!  👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Nathamuni said:

எனக்கு ஏர் கனடா பிடிப்பதில்லை.... கிழவிகள் தான் சேவையில் இருப்பார்கள். 

இதை நான் ரொம்ப.....ரொம்ப லைக் பண்ணுறன். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

அனேகமான விமானங்கள் வந்து இறங்கிய உடனேயே அடுத்த பயணத்திற்கு தயாராகிவிடும்.இது இரவு கடேசி பயணம் என்றபடியால் தனித்துவிடப்பட்டிருக்கிறார்.
பறவாயில்லை வீடு தேடி பணப் பொதி போகப் போகுதே.

இரவு நித்திரையின்மை, பயம்.... திடீர் வேர்வை, அது, இது....என்று சொல்வதன் நோக்கம், எத்தனை மில்லியன் செக் எழுதப்போறியள் எண்டது தானே.

  • கருத்துக்கள உறவுகள்

நானாய் இருக்கோணும் பிளைட்டை உடைச்சு இருப்பன் 🥰

நானாக இருந்து இருந்தால், இருட்டிலும் தடவி தடவி  Alcohol / Whiskey / Brandy எங்கே வைச்சு இருக்கினம் என்று கண்டு பிடித்து விடியும் வரைக்கும் கொண்டாட்டமாக இருந்திருப்பன். சாப்பாட்டு பக்கமும் ஒரு நடை பார்த்து இருப்பன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

நானாக இருந்து இருந்தால், இருட்டிலும் தடவி தடவி  Alcohol / Whiskey / Brandy எங்கே வைச்சு இருக்கினம் என்று கண்டு பிடித்து விடியும் வரைக்கும் கொண்டாட்டமாக இருந்திருப்பன். சாப்பாட்டு பக்கமும் ஒரு நடை பார்த்து இருப்பன்.

அங்க ஒண்டுமே இருந்திருக்காது, தல...

எல்லாம், கிளியர் பண்ணியிருப்பினம்..

1 hour ago, ரதி said:

நானாய் இருக்கோணும் பிளைட்டை உடைச்சு இருப்பன் 🥰

ஹாகா.... நீங்க....

பயங்கர இருட்டு....பயத்தில கத்தியே மயங்கி விழுந்து இருப்பியள்...

ஆனால், போன் புல் சார்ஜ் எண்டால், யாழ் திண்ணையில வந்து புலம்பியிருப்பியள்.... நாங்கள், நிழலியையும், வர்ணத்தாரையும், உங்கண்ட மச்சானையும் உதவிக்கு அனுப்பியிருப்போம். 😂

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இதை நான் ரொம்ப.....ரொம்ப லைக் பண்ணுறன். 🤣

 Nathamuni said: நிறைய கிழவிகள் வேலை செய்வார்கள்...
 குமாரசாமி (மப்புறுப்பினர்) : இதை நான் ரொம்ப.....ரொம்ப லைக் பண்ணுறன்.  😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நிழலி said:

நானாக இருந்து இருந்தால், இருட்டிலும் தடவி தடவி  Alcohol / Whiskey / Brandy எங்கே வைச்சு இருக்கினம் என்று கண்டு பிடித்து விடியும் வரைக்கும் கொண்டாட்டமாக இருந்திருப்பன். சாப்பாட்டு பக்கமும் ஒரு நடை பார்த்து இருப்பன்.

நீங்களெல்லாம் கலியாணவீட்டு பங்சன்......பிறந்தநாள் பங்சனுக்கு போனியளெண்டால்?????????
வேண்டாம்
நினைக்கவே தலைய சுத்துது......📸

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Sasi_varnam said:

 Nathamuni said: நிறைய கிழவிகள் வேலை செய்வார்கள்...
 குமாரசாமி (மப்புறுப்பினர்) : இதை நான் ரொம்ப.....ரொம்ப லைக் பண்ணுறன்.  😁

விரலுக்கேற்ற வீக்கம் ராசா....
நானெல்லாஆஆஆஆஆஆஆம் இதுக்கு ஆசைப்படலாமா? 😍

Ãhnliches Foto

  • கருத்துக்கள உறவுகள்

காசுருந்தா ஆசைப்பட்ட அல்லாத்தையும் வாங்கலாம்...
அம்புட்டுக்கும் ஆசைப்படு பாலகுமாரா...

  • கருத்துக்கள உறவுகள்

லூசு மனுஷி வைனை குடிச்சு நித்திரை அடித்துவிட்டு 

பாவம் ஒரு பிளைட் அட்டென்டன்னுக்கு வேலைக்கு ஆப்பு வைச்சு இருக்கு.
இதுக்கு இவாவுக்கு செக் எழுதுவதைவிட ... 
எயர்போர்ட் பாதுகாப்பு துறைக்கு அதிக அளவில் தண்டம் கட்ட வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.