Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கட்டுநாயக்கவில் மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுநாயக்கவில் மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம்

 

Mc-Donnel-Douglas-11-300x200.jpgகட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம் நேற்று அதிகாலை புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெஸ்ரேன் குளோப் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான McDonnell Douglas 11 வகையைச் சேர்ந்த இந்த விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.

நேற்று அதிகாலை 2.50 மணியளவில் இந்த சரக்கு விமானம், ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள புஜாரா விமான நிலையம் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.

இந்த விமானம், பசுபிக் தீவாக குவாமில் உள்ள அமெரிக்காவின் அன்டர்சன் விமானப்படை தளத்தில் இருந்தே, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தது.

கடந்தவாரமும், வெஸ்ரேன் குளோப் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான McDonnell Douglas விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியிருந்தது.

அந்த விமானம் எரிபொருள் தேவை மற்றும் விநியோக சேவைகளை பெற்றுக் கொள்வதற்காகவே கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், அக்சா உடன்பாட்டுக்கு அமைய, சிறிலங்காவை அமெரிக்கா விநியோக தளமாக பயன்படுத்த ஆரம்பித்திருப்பதாக சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.

http://www.puthinappalakai.net/2019/07/17/news/39034

5 minutes ago, nunavilan said:

எனினும், அக்சா உடன்பாட்டுக்கு அமைய, சிறிலங்காவை அமெரிக்கா விநியோக தளமாக பயன்படுத்த ஆரம்பித்திருப்பதாக சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.

அக்சா உடன்பாட்டுக்கு அமைய ஏற்கனவே அமெரிக்க விமானங்கள், கப்பல்கள் இலங்கைக்கு வந்து தரித்து நின்று சென்றிருக்கிறது. இப்ப தான் முதல் முதலா வாற மாதிரி செய்தி வெளியிடுகிறார்கள். 😊

அதே உடன்பாட்டிற்கமைய இலங்கை இராணுவத்துக்கு அமெரிக்கா பயிற்சிகளும் வழங்கியிருந்தது. இனியும் தொடரும். அமெரிக்க படையினருடன் இலங்கை படையினர் இணைந்த பயிற்சிகளை மேற்கொள்ளவும் முடியும். 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Lara said:

அக்சா உடன்பாட்டுக்கு அமைய ஏற்கனவே அமெரிக்க விமானங்கள், கப்பல்கள் இலங்கைக்கு வந்து தரித்து நின்று சென்றிருக்கிறது. இப்ப தான் முதல் முதலா வாற மாதிரி செய்தி வெளியிடுகிறார்கள். 😊

அதே உடன்பாட்டிற்கமைய இலங்கை இராணுவத்துக்கு அமெரிக்கா பயிற்சிகளும் வழங்கியிருந்தது. இனியும் தொடரும். அமெரிக்க படையினருடன் இலங்கை படையினர் இணைந்த பயிற்சிகளை மேற்கொள்ளவும் முடியும். 😎

உடன்பாட்டுக்கு வந்தால் தான் சோபாவில் கையெழுத்து – ரணில்

ranil-wickremesinghe-prime-minister-of-s

இலங்கையின்  கருத்துக்களுக்கு அமெரிக்கா ஒப்புக் கொண்டால் மட்டுமே, சோபா மற்றும் கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் (அக்சா) உடன்பாடுகளில் கையெழுத்திடப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று அனுரகுமார திசநாயக்க, பந்துல குணவர்த்தன ஆகியோர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

‘சிறிலங்காவின் இறைமையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மீறுகின்ற எதையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது.

ஊடகங்களில் கூறப்படுவதைப் போன்று தற்போது சோபா உடன்பாடு எதுவும் செய்து கொள்ளப்படவில்லை.

1995 ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சுக்கும், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கும் இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்களைத் தவிர,அமெரிக்காவுடன் எந்தவொரு சோபா உடன்பாட்டிலும் அரசாங்கம் கையெழுத்திடவில்லை.

சில ஊடகங்கள் 2017இல் சோபா உடன்பாடு கையெழுத்திடப்பட்டதாக தவறாக வழிநடத்துகின்றன. அவ்வாறு 2017இல் சோபா உடன்பாடு கையெழுத்திடப்பட்டிருந்தால் அது சட்டவிரோதமானது. போலியானதாகும்.

அத்தகைய ஆவணம் இருந்தால், அதன் பிரதியை என்னிடம் ஒப்படைக்குமாறு ஊடகங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். இது குறித்து பொலிஸாரை விசாரிக்க நான் கோருவேன்.

அமெரிக்க அரசு பல முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளது, ஆனால் அவற்றுக்கு அரசாங்கம் இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை, அந்த முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட உள்ளன.

இலங்கையில் அமெரிக்கா இராணுவ முகாம்களை அமைப்பது குறித்து எந்த கேள்விக்கும் இடமில்லை. அமெரிக்காவிடம் உள்ள இராணுவ தளபாடங்களை கருத்தில் கொள்ளும்போது, இங்கு தளம் அமைப்பது சாத்தியமில்லை.

விமானம் தாங்கி கப்பலான ‘றொனால்ட் றீகன்’ 90 விமானங்களை ஏற்றிச் செல்லக் கூடியது. அவ்வாறு 90 விமானங்களை கையாளக் கூடிய இடம் இலங்கையில் இல்லை.

படைகள் நவீன கெலிக்கொப்டர்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றனர்.

கடந்த காலங்களில் போர்த்துகீசியர்கள் குழுக்களை கொண்டு வந்ததைப் போல அவர்கள் துருப்புக்களைக் கொண்டு வரவில்லை.

ஜப்பான், தென்கொரியா மற்றும் டியேகோ கார்சியா ஆகிய இடங்களில் ஏற்கனவே தளங்களைக் கொண்டிருப்பதால், சிறிலங்காவில் தளம் அமைக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு இல்லை.

புதிதாக முன்மொழியப்பட்ட அக்சா உடன்பாட்டு வரைவில், அமெரிக்கா தொடர்பு புள்ளிகளை அதிகரித்துள்ளது. இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தலைமையகங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன.

இதுபற்றி நாங்கள் எதுவும் செய்ய முடியாது, இலங்கைக்கு முன்மொழியப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சுடன் தான் அமெரிக்கா இதுபற்றி இணங்க வேண்டும்.

அமெரிக்கா பல்வேறு நாடுகளுடன் கையெழுத்திட்டுள்ள சோபா உடன்பாடுகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை.

1995 இல் கையெழுத்திடப்பட்ட உடன்பாடு, பரஸ்பர பாதுகாப்பு உடன்பாடு அல்ல. ஆனால் அது, பொதுவாக அமெரிக்க இராணுவத்தினர், வெளிநாட்டு ஒன்றில் செயற்படும் கட்டமைப்பை நிறுவும் வகையிலானது.

வெளிவிவகார அமைச்சர் அமெரிக்காவிற்குச் சென்றது அமெரிக்க அரசாங்கத்துடன் சோபா உடன்பாடு குறித்து பேசுவதற்காக அல்ல.

இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து உடன்பாடுகள் குறித்தும் விவாதிக்கவே அவர் அங்கு சென்றிருந்தார். இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும், வழக்கமான செயல்முறையாகும்.

மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது, கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவை உடன்பாடு அமெரிக்காவுடன் கையெழுத்திடப்பட்டது.

இந்த உடன்பாட்டின் கீழ், இலங்கையில் பணியாற்றும் அமெரிக்கப் படையினரும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் சிவில் பணியாளர்களும் இராஜதந்திர சலுகைகளை அனுபவிக்கிறார்கள் .

திருகோணமலை துறைமுகத்தை அல்லது வேறெந்த துறைமுகத்தையும், இந்தியாவுக்கு பாதகமான வகையில், இராணுவ பயன்பாட்டுக்காக எந்தவொரு நாட்டு இராணுவத்துக்கும் வழங்குவதில்லை என்று, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் செய்து கொண்ட உடன்பாட்டில் முன்னாள் அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தன உறுதியளித்துள்ளார்.

எனவே, அமெரிக்காவுக்கோ, சீனாவுக்கோ, பிரித்தானியாவுக்கோ அல்லது வேறெந்த நாட்டுக்கோ, துறைமுகங்கள் கிடையாது, ஆனால், அவர்கள் வந்து போகலாம்.’ என்றும் அவர் தெரிவித்தார்.

www.yaldv.com/உடன்பாட்டுக்கு-வந்தால்...
 

ரணில் சொல்வதை உண்மை என நம்புகிறீர்களா? மக்களை ஏமாற்ற அவர் சொல்லும் கருத்து அது. 😀

ஏற்கனவே நான் இன்னொரு திரியில் இவை பற்றி எழுதியிருந்தேன்.

1995 இல் சந்திரிகா ஆட்சியின் போது சோபா உடன்படிக்கையில் முதலில் கையெழுத்திட்டார்கள். அது பழைய உடன்படிக்கை என்பதால் இப்பொழுது மேலும் பல விடயங்களை உள்ளடக்கி நீட்டித்து புதுப்பித்து கையெழுத்திட நிற்கிறார்கள். அதை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கூட உறுதிப்படுத்தியிருந்தார். பழைய ஒப்பந்தம் இன்னும் கைவசம் உள்ளது என்றும் கூறியிருந்தார்.

2007 ஆம் ஆண்டு மகிந்த ஆட்சியின் போது கோத்தாவும் ரொபேட் ஓ பிளேக்கும் அக்சாவில் கையெழுத்திட்டார்கள். அது 10 வருட காலத்திற்கானது. அது பற்றி அமெரிக்காவே செய்தி வெளியிட்டிருந்தது. 5 March 2017 உடன் அது காலாவதியானதும் அதில் மேலும் பல விடயங்களை உள்ளடக்கி நீட்டித்து புதுப்பித்து 4 August 2017 இல் மைத்திரி-ரணில் அரசு இரகசியமாக கையெழுத்திட்டது. 2017 இல் கையெழுத்திடப்பட்டது சோபா அல்ல அக்சா.

அமெரிக்கா அக்சாவையே சோபாவாக மாற்றியமைக்க கேட்டு இலங்கை அதற்கு சம்மதிக்கவில்லை. அதனால் இப்போதைக்கு இரண்டும் தனித்தனியாக உள்ளது. 

Edited by Lara

எனது முன்னைய கருத்தில் நான் கூறியது அக்சா உடன்படிக்கையின் படி ஏற்கனவே நடைபெற்ற விடயங்கள்.

அத்துடன் 2007 அக்சா உடன்படிக்கை 10 வருட கால வரையறையை கொண்டிருந்தது போலல்லாமல் 2017 அக்சா உடன்படிக்கை கால வரையறையை கொண்டிருக்கவில்லை என்றும் வாசித்திருக்கிறேன். எனவே ஒப்பந்தத்திற்கு முடிவு இல்லை. முடிவுக்கு கொண்டு வருவதானால் இரு பகுதியும் தமக்குள் இணங்க வேண்டும். (அல்லது ஒரு பகுதி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக இருந்தால் 6 மாத கால அவகாசம் கொடுக்க வேண்டும்).

2017 அக்சாவில் மேலும் திருத்தங்களை கொண்டுவர விரும்பினால் அதை மீண்டும் புதுப்பிக்கலாம்.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மகாபாரதகதை போல சூழ்ச்சிக்குள் அகப்பட்டு சின்னாபின்னமாகிறது.

ம் தமிழன் சுதந்திரமாக வாழாத இடம் எப்படிப் போனால் இனியென்ன என்று எண்ணத் தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

கூர்ந்து கவனிப்பதா அறிக்கை வரும்..

mqdefault.jpg

யாரென்று சொல்லி வேலை இல்லை..☺️

  • கருத்துக்கள உறவுகள்

சொப்ன சுந்தரியின் காரை இப்ப யார் வைத்து இருக்கிறார்கள் ?

 சைனாவா ? அமெரிக்காவா ?

Edited by பெருமாள்

8 hours ago, nunavilan said:

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம் நேற்று அதிகாலை புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது சிங்களவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்துவதில் வியப்பில்லை!

அமெரிக்க பிரசன்னம் தங்களது சிங்கள-பௌத்த இனமதவெறிச் செயல்களுக்கு தடையாக மாறிவிடுமோ என்ற பயம் தான் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

உடன்பாட்டுக்கு வந்தால் தான் சோபாவில் கையெழுத்து – ரணில்

 

ranil-wickremesinghe-prime-minister-of-s

 

திருகோணமலை துறைமுகத்தை அல்லது வேறெந்த துறைமுகத்தையும், இந்தியாவுக்கு பாதகமான வகையில், இராணுவ பயன்பாட்டுக்காக எந்தவொரு நாட்டு இராணுவத்துக்கும் வழங்குவதில்லை என்று, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் செய்து கொண்ட உடன்பாட்டில் முன்னாள் அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தன உறுதியளித்துள்ளார்.

 

www.yaldv.com/உடன்பாட்டுக்கு-வந்தால்...
 

ஒரு காலத்தில் இந்தியாவுக்கும் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் அனுபவங்களையும் ஆற்றலையும் நாட்டுமக்களும் கட்சிகளும் மரியாதை செய்துகொள்ள பழகிக்கொள்ளவேண்டும்.

ஒரு நாட்டின் பிரதமராக இருப்பதே இந்த காலத்தில் எவ்வளவு கஷ்டம், தெற்காசியாவின் துணைக்கண்டமான இந்தியாவிற்கும்,அதற்கு கீழே அன்னாசி பழம்போல தொங்கிகிட்டிருக்கும் இலங்கைக்கும் சேர்த்து ஒரு மனிதன் பிரதமராயிருப்பது என்பது சாதாரண விஷயமில்லை என்பதை அனைவரும் புரிந்துகொளோளவேண்டும்ம் நன்றி www.yaldv.com தங்கள் பணி மகத்தானது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

சொப்ன சுந்தரியின் காரை இப்ப யார் வைத்து இருக்கிறார்கள் ?

 சைனாவா ? அமெரிக்காவா ??

சொப்பன சுந்தரி உங்களுக்கு சொந்தமில்லை...யார் வைச்சு இருந்தால் என்ன? வித்தால் என்ன ?

1 hour ago, valavan said:

ஒரு காலத்தில் இந்தியாவுக்கும் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் அனுபவங்களையும் ஆற்றலையும் நாட்டுமக்களும் கட்சிகளும் மரியாதை செய்துகொள்ள பழகிக்கொள்ளவேண்டும்.

ஒரு நாட்டின் பிரதமராக இருப்பதே இந்த காலத்தில் எவ்வளவு கஷ்டம், தெற்காசியாவின் துணைக்கண்டமான இந்தியாவிற்கும்,அதற்கு கீழே அன்னாசி பழம்போல தொங்கிகிட்டிருக்கும் இலங்கைக்கும் சேர்த்து ஒரு மனிதன் பிரதமராயிருப்பது என்பது சாதாரண விஷயமில்லை என்பதை அனைவரும் புரிந்துகொளோளவேண்டும்ம் நன்றி www.yaldv.com தங்கள் பணி மகத்தானது.

😂😂😂

ராஜீவ் காந்தி பெயருக்கு பதிலாக ரணில் விக்ரமசிங்கவின் பெயரை போட்டு விட்டார்கள். :grin:

Edited by Lara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.