Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பினர் ஏன் வரவில்லை ? - ஜனா­தி­பதி மைத்­திரி கேள்வி

Featured Replies

கன்­னியா  வெந்நீ­ரூற்றுப் பிள்­ளையார் ஆலய விவ­காரம் தொடர்பில் ஜனா­தி­பதி  செய­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற  விசேட கூட்­டத்தில்  தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின்   பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவரும் கலந்­து­கொள்­ள­வில்லை. இது குறித்து  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன இந்த சந்­திப்­பின்­போது  கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

maithiri.jpg

அமைச்­சரும்  தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வ­ரு­மான மனோ கணே­சனின் ஏற்­பாட்டில் கன்­னியா வென்­னீ­ரூற்று பிள்ளையார்  ஆலய விவ­காரம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இணக்கம் தெரி­வித்­தி­ருந்தார். இதற்­கென  நேற்று 11 மணிக்கு விசேட  கூட்­டத்­தையும் ஜனா­தி­பதி ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஏற்­பாடு செய்­தி­ருந்தார்.  

 இந்­தக்­கூட்­டத்தில் அமைச்­சர்­க­ளான மனோ கணேசன்  பி. திகாம்­பரம், எம்.பிக்­க­ளான எம். தில­கராஜ், வேலுக்­குமார் மட்­டக்­க­ளப்பு மாவட்ட எம்.பி.   வியா­ழேந்­திரன், ஆகிய ஐவ­ருமே  கலந்­து­கொண்­டி­ருந்­தனர். இந்த சந்­திப்பில்  பங்­கேற்­கு­மாறு தமிழ் தேசியக்­கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ. சுமந்­திரன், உட்­பட  கூட்­ட­மைப்பு எம்.பி.க்களிடம் அமைச்சர் மனோ கணேசன் அழைப்பு விடுத்­தி­ருந்தார். 

கூட்­டத்தில் பங்­கேற்­ப­தாக அவர்­களும் அமைச்சர் மனோ கணே­ச­னுக்கு உறுதி வழங்­கி­யி­ருந்­தனர். கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­த­னையும் அழைத்­துக்­கொண்டு  கூட்­டத்தில் பங்­கேற்­ப­தாக  சுமந்­திரன் எம்.பி.   உறுதி அளித்­தி­ருந்தார். ஆனாலும் இறுதி நேரத்தில் இந்­தக்­கூட்­டத்தில் கூட்­ட­மைப்பு எம்.பிக்கள் எவரும் பங்­கேற்­க­வில்லை.  

இந்த நிலையில் கூட்டம் ஆரம்­பித்­த­வுடன் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எம்.பிக்கள் வர­வில்லை என்று  ஜனா­தி­பதி  அமைச்சர் மனோ கணே­ச­னிடம் கேள்வி எழுப்­பி­யுள்ளார். 

ஜனா­தி­ப­தி­யு­ட­னான கூட்­டத்தில் பங்­கேற்­கு­மாறு   இ.தொ.கா. தலைவர் ஆறு­முகன் தொண்­டமான் உட்­பட சகல தமிழ் எம்.பி.க்களுக்கும்  அமைச்சர்  அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

சிலர் வெளிநாடு சென்றிருந்தமையினால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

https://www.virakesari.lk/article/60739

  • தொடங்கியவர்

ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஏன் கலந்து கொள்ளவில்லை?

- சுமந்திரன் விளக்கம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் அழைப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கன்னியா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றுக் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் இந்தச் சந்திப்புக்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார்.

இந்தச் சந்திப்பில் பங்கேற்குமாறு அமைச்சர் மனோ கணேசன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்ததாக தெரிவித்திருந்தார். ஆனால், நேற்று நடைபெற்ற சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருக்கவில்லை.

கூட்டமைப்பினர் பங்கேற்காமை தொடர்பில் அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

“அமைச்சர் மனோ கணேசன் நேற்றுமுன்தினம் இரவு ஜனாதிபதியுடனான சந்திப்பு பற்றிக் கூறினார்.

ஜனாதிபதியுடன் யார் சந்திப்பை ஒழுங்குபடுத்தினாலும், சந்திப்புக்கான அழைப்பு ஜனாதிபதி செயலகத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் விடுக்கப்படும். இந்தச் சந்திப்புக்கான அழைப்பு ஜனாதிபதி செயலகத்தாலோ, ஜனாதிபதியிடமிருந்தோ கிடைக்கவில்லை.

கிண்ணியா விவகாரம் தொடர்பில் பேசப்பட இருந்ததால், அந்த மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எமது கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கலந்துகொள்ள வேண்டும்.

அவரைத் தொடர்புகொண்டு, கூட்டத்துக்கான அழைப்பு கிடைத்ததா என்று கேட்டேன். எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் தனக்கு அழைப்புக் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.

மேலும், ஜனாதிபதியை இந்த விவகாரங்கள் தொடர்பில் தனியாகச் சந்தித்துப் பேசுவதற்கு நாங்கள் கோரியிருந்தோம். எனவே, அவரை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்துவோம்.

http://thinakkural.lk/article/31976

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ampanai said:

------இந்த நிலையில் கூட்டம் ஆரம்­பித்­த­வுடன் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எம்.பிக்கள் வர­வில்லை என்று  ஜனா­தி­பதி  அமைச்சர் மனோ கணே­ச­னிடம் கேள்வி எழுப்­பி­யுள்ளார். 

ஜனா­தி­ப­தி­யு­ட­னான கூட்­டத்தில் பங்­கேற்­கு­மாறு   இ.தொ.கா. தலைவர் ஆறு­முகன் தொண்­டமான் உட்­பட சகல தமிழ் எம்.பி.க்களுக்கும்  அமைச்சர்  அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

சிலர் வெளிநாடு சென்றிருந்தமையினால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

7 hours ago, ampanai said:

----கூட்டமைப்பினர் பங்கேற்காமை தொடர்பில் அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

“அமைச்சர் மனோ கணேசன் நேற்றுமுன்தினம் இரவு ஜனாதிபதியுடனான சந்திப்பு பற்றிக் கூறினார்.

ஜனாதிபதியுடன் யார் சந்திப்பை ஒழுங்குபடுத்தினாலும், சந்திப்புக்கான அழைப்பு ஜனாதிபதி செயலகத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் விடுக்கப்படும். இந்தச் சந்திப்புக்கான அழைப்பு ஜனாதிபதி செயலகத்தாலோ, ஜனாதிபதியிடமிருந்தோ கிடைக்கவில்லை.

கிண்ணியா விவகாரம் தொடர்பில் பேசப்பட இருந்ததால், அந்த மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எமது கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கலந்துகொள்ள வேண்டும்.

அவரைத் தொடர்புகொண்டு, கூட்டத்துக்கான அழைப்பு கிடைத்ததா என்று கேட்டேன். எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் தனக்கு அழைப்புக் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.

மேலும், ஜனாதிபதியை இந்த விவகாரங்கள் தொடர்பில் தனியாகச் சந்தித்துப் பேசுவதற்கு நாங்கள் கோரியிருந்தோம். எனவே, அவரை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்துவோம்.

சுமந்திரன்....   ஒரு தவறை மறைக்க, பல பொய்களை... சொல்லி அம்பிட்டு விட்டார்,
என்பதை... மேல் உள்ள இரண்டு மேற்கோள் காட்டலிலும், தெட்டத்  தெளிவாக தெரிகின்றது.

தமிழர் பிரச்சினைக்கு  ஒரு தமிழ் அமைச்சரான மனோ கணேசனின் அழைப்பை ஏற்று...  
இவர்களால்... போக, அவர்களின் தன்மானம் தடுத்துள்ளது என்பதே உண்மை.

இப்படிப் பட்ட... கீழ்த்தரமான சுயநல அரசியல்வாதிகளை,  இனம் காண வேண்டிய நேரம் இது.
இதனை... "வைக்கோல் பட்டறை... ****"  என்று,  தமிழில் ஒரு பழமொழியில்  சொல்வார்கள்.
அதாவது... தானும் செய்ய மாட் டார்கள், மற்றவர்களையும் செய்ய விடாமல்,
ஒன்றுக்கும்  உதவாத,  நொட்டை  காரணம் சொல்லி, தப்பிக்க பார்ப்பார்கள்.

  • தொடங்கியவர்

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இரணில் அரசை காப்பாற்ற கல்முனை விவகாரத்தில் எழுத்தில் தந்த வாக்குறுதி காற்றில் போய் விட்டதாயும் அதனால் தான் கூட்டமைப்பு செல்லவில்லை என்றும் கூட கருதலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ampanai said:

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இரணில் அரசை காப்பாற்ற கல்முனை விவகாரத்தில் எழுத்தில் தந்த வாக்குறுதி காற்றில் போய் விட்டதாயும் அதனால் தான் கூட்டமைப்பு செல்லவில்லை என்றும் கூட கருதலாம். 

Ãhnliches Foto

வெந்து போன தமிழரின்... தலையில் மிளகாய் அரைத்து...
குசியாய்...  இருந்த,  கூத்தமைப்பிற்கு...கடைசி ஆணியை... அடித்து, 
புதை குழிக்குள்,  தள்ளும் நேரம்... வந்து விட்டது.  :grin:

10 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்....   ஒரு தவறை மறைக்க, பல பொய்களை... சொல்லி அம்பிட்டு விட்டார்,
என்பதை... மேல் உள்ள இரண்டு மேற்கோள் காட்டலிலும், தெட்டத்  தெளிவாக தெரிகின்றது.

தமிழர் பிரச்சினைக்கு  ஒரு தமிழ் அமைச்சரான மனோ கணேசனின் அழைப்பை ஏற்று...  
இவர்களால்... போக, அவர்களின் தன்மானம் தடுத்துள்ளது என்பதே உண்மை.

இப்படிப் பட்ட... கீழ்த்தரமான சுயநல அரசியல்வாதிகளை,  இனம் காண வேண்டிய நேரம் இது.
இதனை... "வைக்கோல் பட்டறை... ****"  என்று,  தமிழில் ஒரு பழமொழியில்  சொல்வார்கள்.
அதாவது... தானும் செய்ய மாட் டார்கள், மற்றவர்களையும் செய்ய விடாமல்,
ஒன்றுக்கும்  உதவாத,  நொட்டை  காரணம் சொல்லி, தப்பிக்க பார்ப்பார்கள்.

 உண்மையை பிரதிபலிக்கும் கருத்துக்கள்!

மிக மிக முக்கியமான பிரச்சினை ஒன்றில் இதுவரை தமிழின அழிப்பாளர்களின் கைக்கூலிகள் போல ஒதுங்கியிருப்பதுடன் மட்டுமல்ல, கன்னியாவின் ஆக்கிரமிப்புக்கு முழுத் துணை போபவர்களாகவும் சம்மந்தன்-சுமந்திரன் கோஷ்டி மாறியிருப்பது தெளிவாகப் புலப்படுகிறது.

சுயநலத்திற்காக தமிழினத்தின் உரிமையையே அடகு வைத்துப் பழகிப்போன சம்மந்தன்-சுமந்திரன் மற்றும் தமிழரசுக்கட்சிக் கும்பலுக்கு கன்னியாவை அடகு வைப்பது அவ்வளவு பெரிய விடயமாக  இருக்காது.

வரலாறை அரைகுறையாக தெரிந்த மனோ கணேசன் கன்னியாவின் பின்னணி தெரியாமால் ஏற்கனவே நடந்த சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்புக்கு அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், அந்தப் பிரதேசத்தை பல தசாபங்களாக பிரதிநிதித்துவப்படுத்தி வரும் சம்மந்தன், மனோ கணேஷனின் தவறுகளை திருத்தி முழு ஆக்கிரமிப்புகளையும் அகற்றவேண்டிய பொறுப்பை, கடமையை புறக்கணிப்பது அவரது மிக மிக ஆழமான ஒட்டுண்ணிப் பிழைப்பை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

இதென்ன நான் எழுதிய கருத்தை காணவில்லை. சம்பந்தனே ஒப்புக்கொண்ட விடயம் அது.

8 hours ago, ampanai said:

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இரணில் அரசை காப்பாற்ற கல்முனை விவகாரத்தில் எழுத்தில் தந்த வாக்குறுதி காற்றில் போய் விட்டதாயும் அதனால் தான் கூட்டமைப்பு செல்லவில்லை என்றும் கூட கருதலாம். 

கூட்டமைப்பு வரவு செலவு திட்டத்தை ஆதரிக்க அபிவிருத்தி என்ற பெயரில் ஆளாளுக்கு 2 கோடி படி ரணில் கொடுத்த மாதிரி நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ரணில் அரசை காப்பாற்றவும் ரணில் காசு கொடுத்திருப்பார் என எழுதியிருந்தேன்.

வரவு செலவு திட்டத்தை ஆதரிக்க கூட்டமைப்பினர் ரணிலிடம் பணம் பெற்றதாக சிவசக்தி ஆனந்தன் கூறிய கருத்துக்கு சம்பந்தன் கூறிய பதில்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சில அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு விசேடமாக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது. ஐ தே க உறுப்பினர்கள், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பெற்றது போன்றே எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களும் சில அபிவிருத்தி முன்மொழிவுகளை வழங்கி அந்த நிதியை பெற்றார்கள்.

http://globaltamilnews.net/2018/63759/

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

கன்னியா பிள்ளையார் ஆலய விவகாரம் பற்றி பேசுவதென்றால் தமிழர் தரப்பையும் எதிரே தேரர்களையும் வைத்து பேசி ஒரு முடிவுக்கு வந்தால்தான் அவர் அனைத்து இனங்களுக்கும் பொதுவான ஜனாதிபதி.

நூற்றாண்டுகள் வரலாறு கொண்ட ஒரு தமிழர்வழிபாட்டுதலம்மீதான ஆக்கிரமிப்பைபற்றி கூட்டம் கூட்டி பேசுவதற்கு என்ன இருக்கிறது?

நாளை தலதா மாளிகை எதிரே  ஒரு சிவன் கோயிலை கட்டியெழுப்பினால் இப்படித்தான் சிங்கள தரப்பை கூப்பிட்டு கூட்டம் நடத்துவாரா மைத்திரி?

தமிழ்தேசிய கூட்டமைப்பினர் வரவில்லையென்று கெளரவ ஜனாதிபதி அவர்கள் எதற்கு கவலைபடுகிறார்?

அப்படி அவர்கள் வந்தாலும் சிங்களவர்களின் மனசு நோகும்படியா தமிழர்கள் பக்கம் நின்று ஏதாவது செய்யவா போகிறார்கள்?

பெயருக்கு தமிழ்தேசியம் என்று கட்சி பெயரும், பிறப்பால் தமிழர்கள் அதில் அங்கம் வகிக்கும் தலைவர்களாயிருக்கிறார்கள் என்பதையும் தவிர

தமிழ்தேசிய கூட்டமைப்பு என்பது சிங்கள தேசத்தின்மீது சர்வதேச தரப்பிலிருந்தும், தன்னிச்சையாக   தமிழர்கள் தரப்பிலிருந்தும் பெரும் அழுத்தங்கள் கொடுக்கபடாமல் குறுக்கேநின்று  தடுக்கப்படுவதற்காக மறைமுகமாக இயங்கும் ஒரு சிங்கள விசுவாச அமைப்பு என்பதனை தமிழர்கள் தெளிவாக புரிந்துகொள்ளாதவரை  காலம் முழுவதும் உணவு வந்து கொண்டிருக்கிறது என்று நம்பி  கொட்டாவிவிட வேண்டியதுதான்.

3 hours ago, valavan said:

நாளை தலதா மாளிகை எதிரே  ஒரு சிவன் கோயிலை கட்டியெழுப்பினால் இப்படித்தான் சிங்கள தரப்பை கூப்பிட்டு கூட்டம் நடத்துவாரா மைத்திரி?

தமிழரில் யாருக்கு அந்த துணிவிருக்கு?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.